October 21, 2012

லவ் பேர்ட்ஸ் – பேட்(BAD) பேர்ட்ஸ்


லவ் பேர்ட்ஸ்....


           திருமணத்திற்கு முன் சனி, ஞாயிரோடு கூட ஒருநாள் விடுமுறை கிடைத்தாலும், ஊருக்கு பயணம்தான். ஊர் சென்றால் கிராமத்துச் சூழல், நண்பர்கள் எனற சந்தோசம் கிட்டும். கூடவே அண்ணனின்(பெரியப்பா பையன்) வீடு சென்று புதிதாக விருந்தினர் (எல்லாம் பெட் அனிமல்ஸ் தான்!!! ) யாரும் வந்திருக்கிறார்களா என்று பார்ப்பதுண்டு. அது கிளியோ  அல்லது கீரிப்புள்ளையோ  இரண்டே நாட்களில் கூடப் பழகி நண்பர் ஆக்கும் வித்தையை பெரியப்பாவிடம் இருந்து இவர் கற்றிருந்தார்.


            இந்த தடவை ஐந்து சோடி லவ் பேர்ட்ஸ் புதிதாக. அதுகள் செய்யும் சேஷ்டைகள் ரசிக்கும் படி இருந்தது. சலிப்பே இல்லாமல் அந்த சோடிகள் மூக்கை உரசிக் கொண்டும் ஊஞ்சல் கட்டை, மண்பானை என்று ஒன்றை ஒன்று துரத்தி விளையாடிக் கொண்டும் நாள் முழுவது அதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.

           விடுமுறை முடிந்து சென்னை செல்ல பேக் செய்து விட்டு , போகும் முன்  பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று மீண்டும் அண்ணன் வீடு சென்றேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஒரு சோடி லவ் பேர்ட்ஸ் பறவைகளை ஒரு பிரம்புக் கூடையில் வைத்து கூடவே 1 கிலோ தினையும் கட்டி வைத்திருந்தார்.

            எதற்கு என்று கேட்டபோது நீ ரெண்டுநாளா இதை சுத்தியே திரிஞ்சிட்டிருந்தே… போகும் போது எடுத்துட்டு போக ஆசப்பட்டாலும் படுவே. அதான் ரெடி பண்ணி வச்சிருக்கேனு சொன்னார். அவருக்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு சென்னை பயணம் ஒரு சோடி லவ் பேர்ட்ஸ் பறவைகளுடன்.

சென்னை வந்தவுடன் மேலுல் இரண்டு நாட்கள் அலுவலகம் லீவ் போட்டு விட்டு வடபழனி, கோடம்பக்கம் என்று அலைந்து அது உறங்க, முட்டை இட்டு இனவிருத்தி செய்ய வேண்டி 2 மண்பானைகள், தினை,கம்பு என்று அதற்கான தீனிகள் வாங்கி வந்தேன். இனி அதற்கான வீடு (கூண்டு) வேண்டும் கடைகளில் ஆங்காங்கே சின்னதாகவே கிடைத்தது, அதில் எனக்கு விருப்பம் இல்லை. இங்கே கே.கே. நகரில் டிங்கெரிங் செட் வைத்திருக்கும் நண்பர் ஒருவரிடம் உதவிக்கு சென்றேன், அவர் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் கூட்டிச் சென்று தேவையான கம்பிகள் மற்றும் ஜல்லடை வாங்கி, அதில் அழகான, பெரிதான கூண்டு ஒன்று செய்து குடுத்தார்.

அலுவலகம் முடிந்து நேராக வீடு லவ் பேர்ட்ஸ் வேடிக்கை…… வந்து ஒரே மாதத்தில் 5 முட்டை இட்டு அடைகாத்தது.  ஊருக்கு அடிக்கடி போன் செய்து பறவைகலை நன்றாக பராமரிக்க அண்ணனிடம் ஆலோசனைகள் எல்லாம் நடந்தது. ஒரு அதிகாலையில் “மாமா குஞ்சு பொரிச்சிடுச்சி” என்று என் அக்கா பயன்களின் சத்தம் கேட்டு, ஓடிச் சென்று பார்த்தேன். மனது சந்தோசமாக இருந்தது. அன்று மாலைக்குள் 4 குஞ்சுகள்... ஒரு முட்டை கூமுட்டை போலும்.

     அதற்கென்று ஒரு மருத்துவரை தான் நியமிக்க வில்லை… மற்றபடி என்ன குடுக்க வேண்டும் என்ன செய்யவேண்டும் என்று போன் செய்து தொல்லை குடுத்ததில் ஊரில் இருக்கும் அண்ணன் கூட கொஞ்சம் சலிப்படைந்து விட்டார்.

    குஞ்சுகளுக்கு அது இரை ஊட்டும் அழகு இருக்கிறதே....கொஞ்சுகள் மீது அது காட்டும் அன்பு இருக்கிறதே… மனிதர்கள் கூட அதனிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம். வாவ் வாட் எ கேர்.

      நான் அறிந்த வரையில் குழந்தைகள் கவனிப்பில்/பராமரிப்பில்/குழந்தைதானே என்று ஒதுக்காமல் அவர்களின் உணர்வுகளுக்கு குடுக்கும் முக்கியதுவத்தில் அமெரிக்க பெற்றோர்களுக்கு முதலிடம்.

பேட் பேர்ட்ஸ்………

        குஞ்சுகள் வளர்ந்து தானாக இரை எடுக்க துவங்கியது. அதற்கு என்று கொத்துமல்லித் தண்டுகளை மிகச் சிறிய அளவில் நறுக்கிப் போட்டேன். இறக்கை முளைக்க ஆரம்பித்தது. தாய்ப்பறவையிடம் இருந்து விலகி தனித்து சக குஞ்சுகளுடன் விளையாட்டு.

      இப்போதுதான் நான் சற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் ஆரம்ப்பித்தது.

     கொஞ்சம் வளர்ந்தவுடன் குஞ்சுகளுக்கு ஆண்/ பெண் பாகுபாடுகள் புலப்பட்டது போலும் இதுவும் மூக்கு உரசும் ஆட்டத்தை தொடங்கியது. ஒரு படி மேலே சென்று வளர்ந்த ஆண் குஞ்சுகள் தாயின் மூக்கையும், பெண் குஞ்சுகள் ஆண் பறவையின் மூகையும் உரச எத்தனித்தது அது பாசத்தாலா அல்லது காமத்தாலா என்று எனக்கு புலப்படவில்லை. இந்த சமயத்தில்தான் தாய்ப்பறவைகளுக்கு குஞ்சுகள் விரோதிகள் ஆனதுபோலும்.

ஆண் பறவை பெண் குஞ்சுகளையும், பெண்பறவை ஆண் குஞ்சுகளையும் அதன் உச்சந்த்லையில் ஆக்ரோசமாக கொத்திக் கொன்று விட்டது.

        எனக்கு உண்மையில் கண் கலங்கி விட்டது…. அந்தப் பறவைகளை கொன்றுவிடலாமா என்றுக்கூட தோன்றியது. ஊருக்கு போன் செய்து விபரம் சொன்னேன். அவர் என்னைதான் திட்டினார், குஞ்சுகள் தானாக இறை உண்ணும் பருவம் வந்தவுடன் தனிக் கூண்டில் இட்டிருக்க வேண்டும் அது முழுமையான பறவை ஆனவுடன் வேண்டுமானால் சோடியாக மற்ற பறவைகளுடன் விடலாம். இல்லையென்றால் இப்படித்தான் போட்டி மனப்பான்மயில், எங்கே தன் சோடி மற்றதுடன் சென்று விடுமோ என்ற அச்சத்தில் இப்படி நடக்கும் என்றார்.

           எனக்கு சமாதானம் ஆகவில்லை, காரணம் எதுவாகிலும் பெற்றக் குஞ்சுகளை (சின்ன வயதில் பாம்பு தன் குட்டிகளை விழுங்குவதை தோட்டத்தில் ஒரு முறைப் பார்த்திருக்கிறேன்) கொன்றதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த லவ் பேர்ட்ஸ் மேல் இருந்த ஈர்ப்பு எனக்கு முற்றிலும் போய் விட்டது.

          இரண்டு நாள் கழித்து ப்ளூ கிராஸ் போன் செய்து அதை எடுத்துச் செல்லுமாறு கேட்டேன், சரியான பதில் இல்லை…. ஒரு வாரம் கழித்து வீட்டில் துணி துவைக்கும் வேலை செய்த அம்மா தன் மகன்கள் இதை விரும்புவதாக தெரிவித்தவுடன் எடுத்துச் செல்ல சொல்லிவிட்டேன். இரண்டு மாதம் தினை , கம்புக்கு காசு குடுத்தேன். பின் வேறு வீடு மாற்றலாகி வந்துவிட்டதால் அது பற்றிய செய்திகள் நின்று போனது.

        இப்போதெல்லாம் லவ்பேர்ட்ஸ் எங்காவது பார்த்தால் பழையப் பாசமோ பரவசமோ ஏற்படுவதில்லை. மனதில் லேசான கோவம் எட்டிப் பார்ப்பதாகவே எனக்குப் படுகிறது.

பசுமையை வெகுவாக ஒழித்ததன் மூலம் பூமியின் காலநிலையில் ( மான்சூன் ) மாறம் ஏற்பட்டிருப்பது போல்……


  

இயற்கையின் சமநிலைக் கோட்பாடுகளுக்குள் இது மாதிரியான சிசுக் கொலைகள் அடங்கிவிடுகிறதா???. இல்லை இது போன்ற செயல்களால் (கள்ளிப்பாலும்/நெல்லுமணியும் சேர்த்துதான்) சமநிலை கெடுகிறதா தெரியவில்லை.

டிஸ்கி : கடைசி மூன்று பத்திகள்... எழுதிய எனக்கே சரியாகப் புரியவில்லை…  படிக்கும் உங்களுக்கும் புரியவில்லையென்றால் இந்தப் பதிவை இலக்கிம் என்று வகைப் படுத்திவிடுவேன்


21 comments:

Philosophy Prabhakaran said...

ஒரு எலக்ஸ் உருவாகிறான் :)

Philosophy Prabhakaran said...

யோவ்... லவ் பேர்ட்ஸ் பராமரிப்பு முறைகள் சரியா தெரியாம கொன்னுப்புட்டு அதுக மேல ஏம்யா கோபப்படுற...

அதுகள உங்ககிட்ட கொடுத்தினப்பின அண்ணன் மேல தான் எனக்கு கோபம் வருது... என்னிடம் இருந்து மீன்குஞ்சுகளையோ, லவ் பேர்ட்ஸோ அடம்பிடித்து வாங்கிச்செல்லும் சிறுவர்கள் செத்துடுச்சுன்னு மட்டும் சொன்னாங்கன்னா தூக்கி போட்டு மிதிப்பேன்...

பட்டிகாட்டான் Jey said...

// Philosophy Prabhakaran said...
ஒரு எலக்ஸ் உருவாகிறான் :) //

சுள்ளானுக்கு சூடா பிரியாணி பார்சேல்ல்ல்ல் :-))

பட்டிகாட்டான் Jey said...

// Philosophy Prabhakaran said...
யோவ்... லவ் பேர்ட்ஸ் பராமரிப்பு முறைகள் சரியா தெரியாம கொன்னுப்புட்டு அதுக மேல ஏம்யா கோபப்படுற. //

பிரபா அது குஞ்சுகளை கொத்திக் கொல்லும்னு தெரிஞ்சிருந்தா நான் அதை சென்னைக்கி கொண்டு வந்திருக்கவே மாட்டேன்.

ஐ டோண்ட் லைக் திஸ் க்ரூயல் பேர்ட்ஸ் எனிமோர்...:-(((

TERROR-PANDIYAN(VAS) said...

//யோவ்... லவ் பேர்ட்ஸ் பராமரிப்பு முறைகள் சரியா தெரியாம கொன்னுப்புட்டு அதுக மேல ஏம்யா கோபப்படுற...//

1000 likes. goyyala adha pathi basic therinjikama valathu konnutu ippo ivatu kovam varudham.. :))

பட்டிகாட்டான் Jey said...

எலேய் பாண்டிப் பயலே.... வளர்ப்புல ஒன்னும் குறை வைக்கலை... எல்லாம் சரியாத்தான் போய்ட்டிருந்துச்சி.... ந்க்கொய்யாலே முதநாள் கூட கொஞ்சிட்டிருந்த பக்கி....

சடனா இப்படி பண்ணும்னு எனக்கு என்ன தெரியும். அண்ணனாவது குஞ்சுகளை அடுத்த கூண்டுல விடுனு சொல்லிருக்கனும்.

இங்கே எங்கடா பராமரிப்பு குத்தம் இருக்கு??????

CS. Mohan Kumar said...

ஜெய்: எனக்கு தெரிந்து நான்கைந்து பேர் லவ் பேர்ட்ஸ் வளர்க்கிறார்கள் எல்லாருமே அது சீக்கிரம் செத்துடுது என்று தான் சொல்றாங்க எங்களுக்கும் அதே அனுபவம் தான். இப்போ கிளி வளர்க்கிறோம். செம ஹாப்பியான அனுபவமா இது இருக்கு

பட்டிகாட்டான் Jey said...

@மோகன் அண்ணே, வளர்ந்துட்டா அது ஆரோகியமா நல்லாத்தான் வளருது. எனக்கு குஞ்சை அது கொத்தும்ன்ற விவரம் தெரியாம இருந்துட்டேன்.

கிளி நல்ல ஆப்சன் அண்ணேன். கொஞ்ச நாள் பழக்கிட்டா அதை கூண்டுல வைக்கத் தேவை இல்லை.

ஆனால் அதுக்கு அப்பப்ப அட்டென்சன் குடுக்கனும்...:-)))

Avargal Unmaigal said...

/கடைசி மூன்று பத்திகள்... எழுதிய எனக்கே சரியாகப் புரியவில்லை//

ஜெய் நீங்க கடைசி பத்தியில் சொன்னவிஷயம் ரொம்ப சூப்பர். சமுக நிலையை எடுத்து சொல்லி தனித்து நிக்குறீங்க.. ஹீ..ஹீ

//படிக்கும் உங்களுக்கும் புரியவில்லையென்றால் இந்தப் பதிவை இலக்கிம் என்று வகைப் படுத்திவிடுவேன்//

இதை இலக்கியம் என்று சொன்னால் நீங்களும் சாருநிவேதா மாதிரி இலக்கிய வாதிகள் ஆகிட்டீங்க. அதனால நாம் இலக்கிய விமர்சனக் கூட்டத்தை சீக்கிரம் கூட்டணும் மறக்காம சரக்குக்கு ஏற்பாடு பண்ணிட்டு தகவல் கொடுங்க இலக்கிய கூட்டத்தை மிக சிறப்பாக கொண்டாடிடலாம்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் இரக்க உணர்வுகளுக்கு ஒரு சல்யூட்...

நண்பரே நலமா...?

பட்டிகாட்டான் Jey said...

// Avargal Unmaigal said... //

கடைசி மூனு பத்தி படிச்சி புரிஞ்ச மாதிரி பின்னூட்டம் போட்டு என்னோட எலக்ஸ் கனவை தகர்த்துவிட்டீர்கள் நண்பரே...

இருந்தாலும் சென்னை வந்தாள் விருந்தாளி அதனால் நன்கு கவனித்துவிடலாம் :-)))

பட்டிகாட்டான் Jey said...

// திண்டுக்கல் தனபாலன் said... //

தி.த. அண்ணேன் நான் நலம்ணே. நீங்க எப்படி இருக்கீங்க. சென்னை வந்தா கால் பண்ணுங்க.:-)))

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பறவைகள் விலங்குகள் வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல என்பது தெரிகிறது.இதற்கு முன் இந்த விவரங்கள் தெரிந்து இருந்தால் இந்த வருத்தம் உண்டாக வாய்ப்பில்லை. நீங்கள் எச்சரிக்கையுடன் பிரித்திரிப்பீர்கள்.
பெற்ற குழந்தைகளாக இருந்தாலும் தன துணையுடன் அன்பைப் பகிர்ந்து கொள்வதை அது விரும்புவதில்லை என்று கவிஞர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்து ஒரு கருங்கொரங்கு வாங்கி வளர்க்கவும்.........

பட்டிகாட்டான் Jey said...

எலேய் பன்னிப்பயலே...எப்ப போட்ட போஸ்டுக்கு எப்ப வந்து கமென்ட் போடுறே....கோமால இருந்தியா...???

இப்முட்டு லேட்டா வந்து கமென்ட் போட்டால்லாம் அதுக்கு பதி கமென்ட் போடமுடியாத்து....ஓடிப்போ...

குட்டன்ஜி said...

நீங்கள் செய்த தவறுக்கு அவை என்ன செய்யும்? இன்னொரு முறை முயன்று பாருங்களேன்!

Anonymous said...

pothuva inaikal jodip piriyathu entu ninaikiren.

yean intha thay thanthai paravai ippadi kontatho...paavamaa irukku jey..

பட்டிகாட்டான் Jey said...

// குட்டன் said... 16
நீங்கள் செய்த தவறுக்கு அவை என்ன செய்யும்? இன்னொரு முறை முயன்று பாருங்களேன்! //

நண்பர்கள் பலர் இதே கருத்தை சொல்கிறார்கள். என்னுடைய தவறாக நான் கருதுவது. தாய்/தந்தை பறவை குஞ்சுகள் வளர்ந்ததும், பக்கம் வந்தாம் கொத்தும் என்று அறியாமல் இருந்ததுதான்.

இந்த நிகழ்விற்குப் பின் எந்த உயிகளை வளர்த்தாளும் அது பற்றிய முக்ழுழுமையான புரிதலை தெரிந்து வைக்க ஆரம்பித்துவிட்டேன்.

சுட்டியதற்கு நன்றி குட்டன்.

பட்டிகாட்டான் Jey said...

// Anonymous said...
pothuva inaikal jodip piriyathu entu ninaikiren.

yean intha thay thanthai paravai ippadi kontatho...paavamaa irukku jey.. //

ஆமாம். எனக்கும் அதே வருத்தம் தான் இருந்தது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணேன்.:-)))

பட்டிகாட்டான் Jey said...

// T.N.MURALIDHARAN said... //

முரளி அண்ணேன், உங்க பின்னூட்டம் கவனிக்காம விட்ருக்கேன்.

ஆமாம்ணே, இந்த விசயம் தெரியாம தான் இப்படி ஆயிடுச்சி...:-((

Unknown said...

இன்றுதான் தங்கள் வலையைத் தேடிக் கண்டு பிடித்தேன்! பதிவைப் படித்தபின் உள்ளம் சோகத்தில் மூழ்கியது. உருக்கமான நிகழ்ச்சி!

LinkWithin

Related Posts with Thumbnails