இன்று காலையில் பத்திரிக்கையில் ஒரு செய்தி படித்தேன்...
செய்தித் தலைப்பு : “ வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் சம்பள உயர்வா?.
திட்டத்தின் பெயர் : மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ).
திட்டத்தின் நோக்கம் : “ கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது “.
இத்திட்டத்தின் கீழ் , ஒவ்வொரு நிதியாண்டிலும் , கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு 100 நாட்கல் வேலை அளிக்கப்படும்.. ஆறுகள், குளங்கள்,கால்வாய்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் அவர்களுக்கு அளிக்கப்படும்..
இந்த திட்டம் 2005-ல் கொண்டுவரப்பட்டு , 2006-ல், 200 மாவட்டங்களில் 11-ஆயிரம் நிதி ஒதிகீட்டில் ஆரம்பித்து 2010-11-ல் 40-ஆயிரத்து 100 கோடி ரூபாயாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ( நன்றி தினமலர்).
சரி விசயத்திற்கு வருவோம் :
திட்டத்தின் நோக்கம் சரியாகத்தான் படுகிறது, ஆனால் அது செயல் படுத்தும் விதம் எப்படி உள்ளது?...
நேற்று எங்கள் கிராமத்திலிருந்த உறவினர், சென்னையில் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு வந்தவர், வீட்டுக்கு வந்திருந்தார், அவரிடம் வழக்ம்போல், என்ன மாமா, ஆடி பொறந்திருச்சி, நிலமெல்லாம் உழ ஆரம்பிச்சாச்சா?, ஆவணில வெதை வெதைக்க ஆரம்பிக்கனுமில்லனு கேட்டேன், அதுக்கு அடப்போ மாப்ள என்னத்த வெதைச்சி என்னத்தே (சினிமால ஒருத்தர் சொல்வாரே அதே மாதிரி ஸ்டைலில்) விவசாயம் பண்ண, பேசாம, இந்த வருசம் பூரா நிலத்தையும் தருசா போட்ரலாம்னு இருக்கேன் என்று வெறுப்புடன் சொன்னார்.
அவரின் மொத்த புலம்பலையும் எழுதினால் பத்து நாளைக்கு டைப் அடிக்கனும், எனவே இன்று காலை வந்த மேற்கண்ட செய்தியை படித்திவிட்டு அதனால் எவ்வாறு விவசாயம் பாதிக்கப்படுகிறது என்று அவர் சொன்ன தகவல்களில் ஒரு சிலது மட்டுமே இந்த பதிவில்:
- இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவரும் வறுமைகோட்டிற்கு கீழேயோ அல்லது வேலையில்லதவர்களோ இல்லை.( காரணம் யார் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற தெளிவா வரையறை அரசினால் சரியாக பிரிக்கப்படாமல் ஓட்டு வாங்கும் எண்ணத்தில் அனைவருக்கும் என்றாகிவிட்டது).
- எங்கள் ஊரில் ஒரு அரைமணி நேரம், ரோட்டோர ஓடையில் தூர்வாருகிறேன் என்கிற பேரில் மம்பட்டியால் நாலு இலு இலுத்துவிட்டு, புளிய மரத்தடியில் ஒரு மணி நேரம் தூங்கிவிட்டு வந்தால் 70 ரூபாயிலிருந்து 80 ரூபாய் குடுத்து விடுகிறார்கள். நோகாமல் நுங்கு கிடைப்பதால் , விவசாய வேலைகளுக்கு யாரும் வருவதில்லை
- அப்படியே, யாரும் விவசாய வேலைகளுக்கு வந்தாலும், சும்மா மரத்தடியில் தூங்குவதற்கே 80 ரூபாய் கிடைக்கிறது , விவசாயக் கூலியோடு அந்த 80 ரூபாயும் சேர்த்துக் கொடுத்தால்தான் வருவோம் என்கிறார்கள். ( 80 ரூபாயாக இருந்த தினக் கூலி இந்த திட்டம் வந்த பிறகு 200 -க்கும் மேல்).
ஏற்கனவே குடுக்கும் கூலிக்கே விவசாயம் கட்டுபடியாகவில்லை, இதில் எங்கே கூட்டிக்குடுப்பது....?.( நான் சொல்லும் விவசாயிகள் ஐந்து விரல்களில் மோதிரம் அணிந்து கொண்டிருக்கும் பண்ணையார்கள் அல்ல, மாறாக மண்ணோடு போராடுவதைத்தவிர வேரெதுவும் தெரியாத, வேரெந்த போக்கும் தெரியாத அப்பாவிகள்)
நிலம் வைத்து விவசாயம் செய்துகொண்டிருந்த பலபேர், பயிரிடுவதை விட்டு அவர்களும் புளியமரத்தடியில் தூங்கிவிட்டு 80 ரூபாய் வாங்கி பொளப்பு நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.(எங்க ஊர்ல இருக்குர எல்லாரும் இந்த வறுமை ..!!! கோட்டுக்கு கீழே இருக்குரதாத்தான் இந்த திட்டத்துல சேர்ந்திருக்காங்க..!!!).
சரி கோடையில் விவசாயம் பயிரிடுவது அருந்தலாக இருக்கும் சமயத்தில் மட்டுமாவது இத்திட்டத்தை அமல்படுத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. ( கேட்டால், ஏதோ இதுவரையும், இப்போதும் எந்த விவசாயியும் நிலத்தில் கால்வத்ததே இல்லை, என்பது மாதிரி... அவரவர் நிலத்தில் அவரவர்கள் இறங்கி வேலை செய்யட்டும் என்று நக்கல் வேறு, இப்படி சொல்பவர்கள் அவர்கள் வீட்டு நாய் கக்கா போனாலும் அதை கழுவிவிட , நாலு வேலையாட்களை வைத்திருக்கிறார்கள்)
பருத்தி, மிளகாய், அனைத்து காய்கறிகள், கடலை, கரும்பு என்று பயிரிட்டுவந்தது நின்று போய் கடந்த சில வருடங்களாக மக்காச்சோளம் மட்டுமே பயிரிட்டு வந்தார்கள் ( நாலுதடைவை களையெடுப்பு, மூன்றுதடவை மருந்தடித்து , மழை நாட்கள் போக மீதி நாட்களில் தண்ணீர் பாய்ச்சுவது... என்று வேலையாட்களின் தேவை குறைவு...).
அரசின் இந்த திட்டத்தின் புண்ணியத்தில் இப்போது வேலையாட்கள் சுத்தமாக வருவதில்லை, ஆக பயிரிடும் எண்ணத்தையே கைவிடும் நிலை விவசாயிக்கு. அவர்களும் புளியமரத்தடியில் படுத்து விட்டு 80 ரூபாய் வாங்கி குடித்தனம் நடத்த தயாராகிவிட்டார்கள்...
சரி சும்மா இருக்கும் நிலத்தை என்ன செய்வது?, அதை இப்போது ரியல் எஸ்டேட்டுக்கும், கேரளாவிலிருந்து வரும் பங்காளிகளுக்கு விற்றுக் காசாக்கி கொண்டிருக்கிறார்கள் ( அவர்கள் ஏதோ காத்தாடி வைத்து கரண்ட் எடுக்கப் போகிறார்களாம்)
வாங்கிய நிலத்தில் 300 மீட்டருக்கு ஒரு காத்தாடி என்று நிறுவுகிறார்கள். இதற்கு இடைப்பட்ட நிலத்தில் பயிர்களின் மகசூல், குறைந்து விடுகிறது.. மேலும் காற்றில் உள்ள ஈரப்பததையும் நிலத்தின் ஈரப்பததையும் இது முற்றிலும் காலியாக்கிவிடுகிறது .
ஒருபுறம் அரசின் நடவடிக்கைகள் விவசாயத்தை நசுக்கினால், மறுபுறம் ரியல் எஸ்டேட் மற்றும் இண்டஸ்ட்ரியல் என்ற பேரில் விவசாய நிலங்களையே காலியாக்கும் செயல்பாடுகள் நடக்கிறது.
பத்தாண்டுகளுக்கு முன் இருந்த விவசாய உற்பத்தி வளர்ச்சி படிப்படியாக குறைந்து இப்போது கிட்டதட்ட 2% வளர்ச்சியில் வந்து நின்று மணியடித்த பிறகும் உறிதியான நடவடிக்கை இல்லை, கேட்டால் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 8 % , 9% என்று மார்தட்டுகிறார்கள்.
ஊருக்கு சென்றால் பச்சை பாசேல் என்று பார்த்து பரவசப்பட்டது கடந்தகாலமாகி, இப்போது சென்று பார்த்தால் எல்லாம் பொட்டல் காடுளாக பார்க்க சகிக்கவில்லை.
நாளை என் பிள்ளைகள் வளர்ந்தால் ஊருக்கு கூட்டிக்கொண்டு போய் விவசாயத்தை பற்றி நேரடியாவாவது காட்டலாம் என்றிருந்தேன், அது முடியாமல், டிஸ்கவரி சானலில்தான் காட்டவேண்டும் போல் இருக்கிறது .
நம் நாட்டில் இருக்கும் மக்கள் தொகைக்கு உணவுப்பொருட்கள்,
- இறக்குமதியென்பது சாத்தியப்படுமா?...,
- நம்மால் அதற்கு செலவிடமுடியுமா?...,
- அரசும் மக்களும் எப்போது இதைபற்றி கவலைப்படபோகிறார்கள்....?
- இந்த புளியமரத்தடியில் தூங்கி விட்டு கூலிவாங்கும் கலாச்சாரம் மாறுமா?...
- விவசாயம் அழிவதனால் உருவாகும் பிரச்சினை, அசாதாரனமான ஒன்று இல்லையா?.
ஒருவேளை, நாளய தலைமுறை, இப்போதிருக்கும் உணவுப்பொருட்களுக்கு மற்றாக வேறு ஏதேனும் கண்டுபிடித்து திங்கப்போகிறார்கள் என்று அரசும் , நாமும் நினைக்கிரோமா...
ஒன்றும் புரியவில்லை..
திட்டத்தின் நோக்கத்தை பற்றி சொல்லுபோது நல்லாத்தன் இருந்தது இப்போது அது செயல்படுத்தும் விதம், எதிமறையான விளைவுகளையே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது....
ஏற்கனவே, வாங்கும் விதையிலிருந்து, உரம், மருந்து என்று விவசாயி வாங்கும் பொருட்களின் விலை அதிகமாகிவிட்டது. இயற்கையை அழிக்க நாம் காட்டும் முனைப்பின் காரணமாக, கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழையின் அளவு குறைந்து, அதனால் நிலத்தடி நீரின் அளவு குறைந்து, விதைத்த பயிரை முழுசா அறுவடை செய்றதே பெரும்பாடா இருக்கு. சரி அறுவடை செய்ஞ்சதுக்கு விலையும் கட்டுபடியாகவில்லை. ( நாம் சென்னையில் கடையில் வாங்கும் விலைக்கும், விவசாயி அறுவடை செய்ததை சந்தையில் விற்கும் விலைக்கும் சம்பந்தமே இல்லை...).
டிஸ்கி 1 : சொல்ல வந்த கருத்தை கோர்வையாக சொல்லியிருகிறேனா என்று தெரியவில்லை. இங்கு நான் சொன்ன கருத்தில் மாற்று உள்ளவர்கள் காரணத்தை சொல்லிவிட்டு கும்மலாம். ( ங்கொய்யாலே கும்முரதுக்கெல்லாம் காரணம் தேவையில்லை என்று சொல்வது காதில் விழுகிறது..)
டிஸ்கி 2 : பிழையில்லாமல் எழுத முயற்சித்திருக்கிறேன், பிழைகளை பெருந்தன்மையோடு மன்னித்து விடவும்.
டிஸ்கி 3 : பதிவில் எங்கேனும் தடித்த வார்த்தைகள் இருப்பதாக யாரேனும் கருதினால் சொல்லவும் நீக்கிவிடலாம்.
டிஸ்கி 3 : பதிவில் எங்கேனும் தடித்த வார்த்தைகள் இருப்பதாக யாரேனும் கருதினால் சொல்லவும் நீக்கிவிடலாம்.
பதிவு பிடித்திருந்தால் உங்களின் கருத்தையும் , ஓட்டையும் அளிக்கவும்.