December 31, 2012

ஒரு கருப்பட்டி இந்தாருக்கு, இன்னொன்னு எங்கே

ஒரு கருப்பட்டி இந்தாருக்கு, இன்னொன்னு எங்கே

பள்ளியில் படிக்கும் போது ஆண்டு விழாவுக்கு பட்டிமன்றம் ஏற்பாடு செய்திருந்தாங்க.அப்ப எல்லாம் ஊர் திருவிழாவுக்கு கூட, பட்டிமன்றம், வில்லுப்பாட்டு, கரகாட்டம், தேவராட்டம்...எட்செட்ரா...  இப்படிதான் வேடிக்கை நடக்கும். அதனால ஊர்மக்களும் ரசிக்கட்டுமேனு இந்த பட்டிமன்றம்.

தலைப்பு : தற்கால சூழலில் மக்களுக்கு பெரிதும் துணையிருப்பது -  ராமனின் நேர்மையா? அல்லது கண்ணனின் ராஜதந்திரமா?

சொல்விழங்கும் பெருமாள்னு ஒரு வாத்தியாரும்,. அவரோட வீட்டம்மனி *சக்தி பெருமாள்னு* ம் எதிர் எதிர் அணிக்கி தலைவர்ஸ், நடுவர் பேர் மறந்து போச்சி....

சரி இந்த பதிவோட தலைப்புக்கு வறேன்...

சொல்விழங்கும் பெருமாள் பேசும்போது..... இடையில் ஒரு கதை சொன்னார், அது தோட்டவெளில ரெண்டுபேர் எருமை மாடு மெய்சிட்டிருந்தப்போ (நான் இல்லை) டவுசர் போட்டவன் கோமணங் கட்டினவன் கிட்ட 10 பைசா குடுத்து கடையில போய் ரெண்டு கருப்பட்டி வாங்கிட்டு வாடா அதை வாயில் போட்டு சுவைச்சிகிட்டே மாடு மேய்க்கலம்னு அனுப்பினாப்ல... 

டவுசர்போட்டவர் : வாடா...வாடா... கருப்பட்டியக் குடு...

கோமணம் கட்டியவர் : இந்தாண்ணே....

டவுசர்போட்டவர் : எலேய் ஒன்னுல்ல இருக்குது, இன்னொன்னு எங்கே...

கோமணம் கட்டியவர் : அதான் குடுத்திருக்கேன்லணே.....

டவுசர்போட்டவர் : எலேய் நான் ரெண்டுல்ல வாங்க்யாரச் சொன்னேன் நீ ஒன்னுல்ல குடுக்கே.... இன்னுன்னு எங்கே...

கோமணம் கட்டியவர் : அண்ணே அதாணே இது.....

அப்படியே கரகாட்டக்காரன் படத்துல வந்த!!!  ஜோக் அப்படியே பாடிலாங்க்வேஜோட சொன்னப்ப மொத்த கூடமும் ஆரவாரமா கண்ல தண்ணி வர சிரிச்சது...

இனி மெயின் மேட்டர்...... இது நடந்தது கரகாட்டக்காரன் படம் வருவதற்கு ரெண்டரை வருசம் முன்னே..... 

காலேஜ் படிக்கும் போது நான் இந்த கருப்பட்டி ஜோக்கை பசங்க கிட்ட சொன்னப்ப போடா வெங்காயம், கரகாட்டக்காரன் படத்துல வந்த ஜோக்கை உல்டா பண்ணிச் சொல்லாத பக்கினு சொல்லிட்டானுக..... மீ  ஞே..ஞே..ஙே..ஙே... :-))))))))))

இது மாதிரி நாம நம்ம வாழ்க்கைல நடந்த பல விசயங்களை சினிமால காப்பி பண்ணிட்டு கடேசில நம்மள சினிமா பார்த்து காப்பி பண்ணா மேரி ஹிஸ்ட்ரி ஜ்யாக்ரேஃபிய மாத்திப்புடாங்க நல்லவிய்ங்க.....

உங்களுக்கு தெரிஞ்சி இந்த மேரி சம்பவம் இருக்குதுங்களா!!!அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!.


December 13, 2012

LKG அப்ளிகேசன் - பார்ட் -2முதல் வாரத்தில் முடிந்த இண்டெர்வியூ முடிவு தெரிய, இன்னும் 1 வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால், எதற்கும் இருக்கட்டும்,  சேஃப்டிக்கு அடுத்த பள்ளி ஒன்றிலும் அப்ளை செய்து வைத்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.........


இன்று அதிகாலை 4 மணிக்கி எழுந்து அவசரமாக ரெடியாகி 4:20 க்கெல்லாம் பள்ளி சென்றடைந்த போது, எனது வரிசை நெ.46 ஆக இருந்தது. விசாரித்ததில் 45வதாக நின்றிருந்தவர் 3:45 க்கே வந்து விட்டதகச் சொன்னார். முதல் நபராக நின்றவர் 2:30க்கு வந்தாராம். நான் கூட இங்கே பிளசில் யாருடனாவது ஓரண்டை இழுத்திருந்தால், நேரம் போனதே தெரியாமல் விரைவாக 2 மணி ஆகியிருக்கும், அப்படியே முகம் அலம்பிகிட்டு முதல் ஆளாக க்யூவில் நின்றிருந்திருக்கலாம் போலும்.. இந்தப் பள்ளியில் பிரிகேக்ஜிக்கும் சேர்க்கை உண்டென்பதால் எல்கேஜி-க்கி மிகக் குறைவான இடங்களே இருக்கும், கூடவே மரியாதைக்குரிய மாண்பிமினு ராசா அவர்கள் 2ஜி லைசென்ஸ் வழங்கியதைப் போலவே முதலில் வந்தவர்களுக்கு மட்டும் அப்ளிகேசன். தூங்கி எழுந்து சாகவாசமாக காலை 7:30 மணிக்குமேல் வந்தவர்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை. பாவம் புலம்பிவிட்டு சென்றார்கள்.ப்ரீகேஜி, எல்கேஜி என்று வந்தவர்களை அவர்கள் சேர்க்கை வகுப்பு வாரியாக பிரித்ததில் புதுக்கியூவில் 46வதாக இருந்த எனக்கு எல்கேஜி வரிசையில் 19வது டோக்கன் கிடைத்தது. எல்கேஜிக்கு மொத்தம் 30 டோக்கன் குடுத்தார்களாம். பகவான் க்ருபை !!!
100 ரூபாய் கட்டணம், பெயர் முகவரி குறித்துக்கொண்டு அப்ளிகேசனில் என் பையனின் பெயரைக் குறித்துக் குடுத்தார்கள் (இல்லையெனில் இதை பிளாக்கில் 5 ஆயிரத்துக்கு விற்கும் அபாயமும் உண்டு!! )17 ந்தேதி அப்ளிகேசன் சமர்பிக்க வேண்டும். 20ந்தேதி அட்மிசன் கிடைத்தா என்று போன் செய்து தெரிந்து கொண்டு , ஆம் எனில் நேரில் பள்ளி சென்று கட்டண விபரங்கள் தெரிந்துகொண்டு சொல்லும் தேதியில் கட்ட வேண்டுமாம்.

புதிதாக திருமணமான, அல்லது பள்ளியில் சேர்க்கும் வயதில் குழந்தைகள் இருக்கும் நண்பர்களுக்காக....1. முதலில் குழந்தையை சேர்க்க விரும்பும் பள்ளிகள் பட்டியல், தயார் செய்து கொண்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் நேரடியாக ஒரு தடவை சென்று விசாரித்து அந்த பள்ளிகளின் இடம், சூழல் மற்றும் தரத்தினை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.2. தற்போது எனக்கு தெரிந்து அனைத்துப்பள்ளிகளும் பள்ளிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இருக்கும் குழந்தைகளுக்கு முதல் உரிமை அளிப்பதாக தெரிகிறது. எனவே அந்த பள்ளியின் அருகாமை அல்லது அந்த வட்டாரத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு சமதூரத்தில் ஒரு இடத்தில் ( வாடைகை வீடு என்றால்) வீடு மாற்றி முகவரி ஆதாரத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.3. சில பள்ளிகள் ப்ரீகேஜிக்கே அட்மிசனும் சில பள்ளிகள் எல்கேஜி-யிலிருந்தும் அட்மிசன் நடைபெறுகிறது. அதனால் எந்தெந்த பள்ளிகளில் எந்த நடைமுறை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.4. எந்த பள்ளியில் எப்போது சேர்க்கைக்கான படிவம் கிடைக்கும் என்பதை அக்டோபர் மாதம் தொடங்கியவுடன் தொடர்ச்சியாக விசாரிக்க தொடங்கிவிடுங்கள். குறிப்பிட்ட நாளை தவறவிட்டால், கஷ்டம்.


5. ஃபார்வேர்டு கம்மூனிட்டியை சார்ந்தவர்கள் தவிர ஏனையோர் கண்டிப்பாக “சாதிச்சான்றிதழ் “ வாங்கி வைத்துவிடுங்கள். தற்போது எல்லா பள்ளிகளிலும் கேட்கிறார்கள். படிவம் சமர்பிக்கும்போது தந்தையின் சாதிச்சான்றிதழின் நகல் வாங்கிக்கொண்டாலும், அட்மிசன் கிடைத்தால் குழந்தையின் சான்றிதழ் குடுக்க வேண்டுமாம்.


6. குழந்தையை பள்ளியிக்கி எபப்டி அனுப்பபோகிறீர்கள், பள்ளி வாகனம் , ஆட்டோ, நாமே ட்ராப் செய்வது எது என்பதை கவனமாக தேர்ந்தெடுங்கள்....ரைட் இதற்குமேல் சொன்னால் தகவல்கள் என்பதைதாண்டி அறிவுரைகளாக மாறிவிடும் அபாயம் இருப்பதால் இத்துடன் ஓவர்..ஓவர்...ஓவர்... :-))))))


L K G - சேர்க்கை பரபரப்புகள்.... - பார்ட்-1  

December 11, 2012

முண்டாசுக் கவிஞனின் பிறந்தநாள் இன்று 11-12-2012


நம் அனைவருக்கும் பால்ய வயதில் முதலில் அறிமுகப்படுத்தபடும் கவிஞன் ஒருவன் உண்டென்றால் அது பாரதியாகத்தான் இருக்கும். என் மகளுக்கும் மகனுக்கும் இவனைதான் முதலில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன்.

 


 பாரதி பற்றிய சிறு குறிப்புகள்
பெயர்: சுப்பிரமணிய பாரதி.

இதரப்பெயர்கள்: மகாகவி, பாரதியார், சுப்பையா, சக்தி தாசன்.

பிறப்பு: டிசம்பர் 11, 1882.

இறப்பு: செப்டம்பர் 11 , 1921.

வாழ்ந்த காலம்: 38 ஆண்டுகள், 11 மாதங்கள், 1 நாள்.

பெற்றோர்: சின்னசாமி ஐயர், லக்ஷ்மி அம்மாள்.

மனைவி: செல்லம்மா.

திருமணம் நடந்த ஆண்டு: 1897.

மகள்கள்: சகுந்தலா, தங்கம்மாள்.

வாழ்ந்த இடங்கள்: எட்டையபுரம் (1882 – பிறந்த ஊர்), காசி (1898 முதல் 1902 வரை), மதுரை (1904, சிறிது காலம் – தமிழ் ஆசிரியராக), புதுச்சேரி (1908 முதல் 1918 வரை – முக்கிய மற்றும் பிரபல படைப்புகள் உதிர்த்த இடம்), கடையம் (1918 – முதல் 1920 வரை – மனைவி செல்லம்மாவின் கிராமம்), சென்னை (1921 – மறைந்த இடம்).

பரிணாமங்கள்: கவிஞர், சீர்திருத்தவாதி, பத்திரிகை ஆசிரியர், தமிழ் ஆசிரியர், எழுத்தாளர், விடுதலை வீரர், தேச பத்தர், பெண்ணுரிமைப் போராளி.

அறிந்த மொழிகள்: தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், வங்காளம் மற்றும் ஆங்கிலம்.
---------------------------------------------------------------------------------------------
பள்ளிப்பருவத்தில் மனனம் செய்தவை, பின்னர் அதன் பொருள் அறிந்து வியந்தவை சில.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் 
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம். 
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோ ம் - வெறும் 
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்.
“ 

 “  காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!
 பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
“ 

 என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? 
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? 
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? 
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? 
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே! 
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே! 
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ? 
மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ
? 

” செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் 
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் 
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு 
சக்தி பிறக்குது மூச்சினிலே

” காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா “

’’ சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், 
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் 
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் 
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். ‘’

 படங்கள் உதவி : கூகுள் இமேஜஸ்.


December 09, 2012

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 63-வது பிறந்த நாள் ஸ்பெசல். 12-12-2012

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 63-வது பிறந்த நாள் ஸ்பெசல். 12-12-2012

63 பஞ்ச்கள்

1. ரஜினிக்கும் கையில் விரல்கள்தான் என்றாலும்அவை ஐந்தும் ஐந்து திசைகளைக் காட்டுமாறு அமைந்திருப்பது சிறப்பு. #ரஜினி63

2.சிறுவயதில் ரஜினிக்கு தலை நிறைய முடி இருந்ததுஅது கருப்பாகவும் இருந்தது.      உலக அமைதியைக் காப்பாற்றுவதற்காக வெள்ளை நிறத்தை முடியிலேயே ஏற்றார் ரஜினி. #ரஜினி63

3. இவ்வளோ பேரும்புகழும், செல்வாக்கும் உள்ள ரஜினி தன் இரண்டு கால்களை கொண்டு சாதாரன மனிதன் போலவே நடந்து செல்கிறார். #ரஜினி63

4. ரஜினி ஆரம்ப காலப் படங்களில் நடிக்கும்போது ஷூட்டிங் இடைவேளைகளில் சாதாரண சேரில்தான் உட்காருவார்#ரஜினி63

5. உலக வெப்பமயமாதலை குறைக்கவே ரஜினி சிகரெட் பிடிப்பதை நிறுத்தினார். #ரஜினி63

6. ரஜினி அளவுக்கு புகைப்பிடிப்பதை யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. இத்தனைக்கும் அவர் எந்த புகையிலை நிறுவனத்திலும் எந்த சன்மானமும் பெறாமல் இந்த தொண்டை செய்தார்#ரஜினி63

7. ரஜினி இரண்டு கால்களுடன் நடப்பதற்கு காரணம் தானும் சராசரி மனிதனே என்று உலகத்திற்கு நிரூபிப்பதற்காக. #ரஜினி63

8தொலைக்காட்சியில் ரஜினி படம் ஒளிபரப்பப்படும்பொழுதுஅதிலும் சினிமாவில் நடித்ததைப் போலவே நடித்திருப்பார். #ரஜினி63

9. மீசையில்லாதவர்களும் ஹீரோவாகலாம் என்று உலகத்திற்கு உணர்த்தவே தில்லுமுல்லுவில் மீசையை எடுத்துவிட்டு நடித்தார்.  #ரஜினி63

10. மாடுகளுக்கு சிகப்பு நிறம் பிடிக்காது என்பதை படையப்பாவில் காட்டியவர். #ரஜினி63

11. ஒரு காலில் கயிறு கட்டி ஜீப்பை நிறுத்திய மகான்.. கரிகால் சோழன் போல மரக்கால் மன்னன். #ரஜினி63

12. ரஜினி இரண்டு வேடம் போடும்போதுதான் இரட்டையர்களாய் வாழ முடியுமென்று வரலாறு எழுதப்பட்டது. #ரஜினி63

13. நல்லவன் வாழ்வான் கெட்டவன் சாவான். பெரியவர்களுக்கு ரஜினி சொன்ன சினிமா நீதி. #ரஜினி63

14. ஐசாக் நியூட்டனின் விதிகளை எல்லாப்படத்திலும் கேள்விக்குள்ளாக்கும் பௌதிக விஞ்ஞானி ரஜினி. #ரஜினி63

15. செல்ஃபோன்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரேரிங்டோனை வைத்து யார் தெருவில் நடக்கிறார்கள் என்று ப்ரியா படத்தில் விஞ்ஞான விந்தையை நிகழ்த்தியது ரஜினியே. #ரஜினி63

16. ரஜினி தூக்கிப் போடும் சிகரெட் கீழே வருவதற்குக் காரணம்அவருக்கு நியூட்டனைப் பிடிக்குமென்பதால்தான். #ரஜினி63

17. சிகரெட் மண்ணில் விழாமல் வாயில் விழுவதற்கு காரணம், தூக்கிப் போட்டது ரஜினி என்பதால்தான். #ரஜினி63

18. அதே நேரத்தில் புகையை மேலேவிட்டுநியூட்டனுக்கு எதிரான கருத்துகளும் உண்டு என்பதை நிரூபித்திருப்பார். #ரஜினி63

19. எதிர்வினை கிடைக்காத ஒரே சமநிலைப் பரப்பு என ஆராய்ச்சியாளர்கள் வியப்பது ரஜினியைப் பார்த்துதான்#ரஜினி63

 20. சிங்கப்பூருக்கு ரஜினி வரப்போகிறார் என்ற செய்தி கிடைத்ததும் சுத்தமானது அந்த ஊரு. #ரஜினி63

21. சினிமாத்துறைன்னா இப்படி அப்படிதான் இருக்கும் என்பதை நிரூபிக்கவே பாபாகுசேலன் படங்களை எடுத்தார் ரஜினி. #ரஜினி63

22.பெரிய வெங்காயத்தை ஒரு முறை பார்வையினாலே சின்ன வெங்காயமாக மாற்றினார் ரஜினி. #ரஜினி63

23. நீ உள்ளே போ என்ற ரஜினி வசனத்தை பலரும் தினமும் தங்கள் வீடுகளில் பிரயோகிக்கிறார்கள். ராயல்டி எதுவும் வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் மறுத்துவிட்டாராம்#ரஜினி63

24. பாபா படத்தின் அடுத்த பாகமாக ஃப்ளாக்‌ஷீப் என்ற படத்தை எடுக்கவிருக்கிறார் ரஜினி. #ரஜினி63  

25. ரஜினி வீட்டு யெல்லோபேஜஸில் அவருக்குத் தெரியாத மனிதர்களின் தொலைபேசி எண்களும் இருக்கிறது. #ரஜினி63

26. ரஜினிக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது என்று அவருக்கு ஆட்டோ ஓட்டும் மாணிக்கம் சொன்னார். #ரஜினி63

27. ஆப்பிளா ஆண்ட்ராய்டா பிரச்சினையில் ரஜினி இதுவரை யாருக்கும் சாதகமாக பேசவில்லை. #ரஜினி63

28. கேயாஸ் தியரிப்படி ரஜினி அடிக்கடி தலை முடியைக் கோதுவதற்கும் நமீதா நாளுக்கு நாள் குண்டாகிக் கொண்டே போவதற்கும் தொடர்பிருப்பிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. #ரஜினி63

29. மண்ணிற்கு வந்த முதல் ஏலியன் சூப்பர் ஹீரோவான சூப்பர்மேன்ரஜினியைப் பார்க்கத்தான் பூமிக்கு வந்து இறங்கினாராம். #ரஜினி63

30. ஜப்பானில் 7.3 லிக்டர்  பூமி அதிர்ச்சி வந்தும் சுனாமி வராதற்கு  காரணம் ரஜினியின் சிவாஜி படம் 3D 12.12.12 அன்று வெளிவருகிறதால் தான். #ரஜினி63

31. ரஜினி எவ்வளவு மது அருந்தினாலும் அவருடைய கடிகாரம் ஓடாமல் நின்றதில்லை. #ரஜினி63

32. இன்னமும் ரஜினியின் பஞ்ச் மொழிகள் பஸ்ஸில் ஏறாமல் திருவள்ளுவர் படமும் குறளும் தொங்குவதே அவரது நல்ல மனதிற்கு சான்று. #ரஜினி63

33. தன்னுடைய பேரன் தன்னை தாத்தா என்று கூப்பிட அனுமதி அளித்த உன்னத மனிதன் ரஜினி.  #ரஜினி63

35. அவர் போடுகின்ற சட்டை, பேண்ட் தொலைநோக்கி, நுண்ணோக்கி உபயோகிக்காமலே பார்ப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும். #ரஜினி63

36. இன்னமும் எந்த நோய்க்கும் ரஜினி என்ற பெயரை வைக்கவில்லை, காரணம் மருந்து கண்டுபிடிக்க சிரமப்படுவார்கள் என்பதுதான். #ரஜினி63

37. ரஜினியின் பெயர் தமிழில் 3 எழுத்து, ஆங்கிலத்தில் ஆறெழுத்து. இதையெல்லாம் படிப்பது தமிழனின் தலையெழுத்து. #ரஜினி63

38. மூன்று முகம் படத்தில் மூன்று வேடத்தில் நடித்த ரஜினி, அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் 40 வேடத்தில் ஏனோ நடிக்கவில்லை. #ரஜினி63

39. அவருடைய கண்கள் காந்தம் என்பதால் எப்பொழுதும் இரும்புப் பொருட்களை பார்ப்பதில்லை. இரும்பு மனம் கொண்டோர் அவரை நெருங்குவதும் இல்லை. #ரஜினி63

40. டீவில மேட்ச் ஹைலைட்ஸ் பாக்கும் போதே அந்த மேட்சில் விக்கட் எடுப்பவர் ரஜினி. #ரஜினி63

41. உப்புமா பாத்திரம் ஆனாலும் அதில் உப்புமாவாகவும் நடிக்கக்கூடிய வல்லமை பெற்றவர் ரஜினி. #ரஜினி63

42. ரஜினி அரசியலுக்கு வந்தால் அரசியல்வாதிகள் நடிக்க போய்விடுவார்கள் என்ற நல்லெண்ணத்தில் அவர் அரசியலுக்கே போவதில்லை என முடிவெடுத்துள்ளார். #ரஜினி63

43. பொல்லாதவன் படத்தில் பொல்லாதவனாகவும் நல்லவனுக்கு நல்லவன் படத்தில் நல்லவனாகவும் நடித்தாலும், சந்திரமுகி படத்தில் சந்திரமுகியாக ஏனோ ரஜினி நடிக்கவில்லை. #ரஜினி63

44. நிறைய பால்காரர்கள் அண்ணாமலை என்று பெயர் மாற்றிக்கொண்டு லேடீஸ் ஹாஸ்டல் வாசலில் தவம் கிடந்தார்கள் என்றால் அதான் ரஜினியின் மகிமை. #ரஜினி63

45. அம்பது ஓவர் கிரிக்கெட் டி20யாக ஆனது ரஜினி ஒரே பாட்டில் கோடீஸ்வரனாக மாறுவதை பார்த்த பிறகே. #ரஜினி63

46. ஹவ் இஸ் இட்-டுக்கு இன்னமும் விவேகானந்தா இங்கிலிஷ் டியூசன் செண்டரில் அர்த்தம் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். #ரஜினி63

47. ரஜினி தன்னுடைய டூயட்டில் ஹீரோயின்களையும் ஆட அனுமதிப்ப்பார். #ரஜினி63

48. தமிழகத்தின் மேலெ விழ இருந்த ஸ்கைலாப்பை தன் பார்வையாலேயே கடலில் தள்ளிய மாவீரன் தான் இந்த ரஜினி. #ரஜினி63

49. பல்லி மாதிரி ஒல்லியா இருந்தாலும் டில்லி வரை போய் மண்மோகன் சிங்கோட டீ குடிச்ச பெருமை ரஜினிக்கு மருமவனாய் ஆன பிறகே தனுஷ்க்கு கிடைச்சது. #ரஜினி63

50. மிஷினுக்கு இதயம் உண்டுன்னு சொன்னவர் ரஜினி..நாளடைவில் பெண்கள் மனதை படித்து எழுதி எட்நூறு பக்கத்தில் பெங்குவின் நிறுவனம் மூலம் புக்கு வெளியிடுவார். #ரஜினி63

51.சண்டைக்காட்சிகளின் போது பந்தாவே பார்க்கமாட்டார் ரஜினி. ஒன்றிரண்டு அடிகள் தன்மேலும் விழவைத்துக்கொள்வார். #ரஜினி63

52. நலிந்த மக்கள் நலமாக வாழ தன் சொத்துக்குள் அத்தனையும் தானமாக குடுக்கத்துணிந்தவர்தான் இந்த ரஜினி- முத்து/அருணாச்சலம். #ரஜினி63

53. சினிமாவில் மிமிக்ரி செய்யும் போதுகூட தன்னுடைய சொந்த குரலை மாத்திரமே உபயோகிப்பவர். #ரஜினி63

54. வேலைக்காரன் படத்தில் வேலைக்காரனாக நடித்தவர் முத்து படத்திலும் வேலைக்காரனாக நடித்துள்ளார். #ரஜினி63

55. ரஜினியை இதுவரை யாரும்  எந்த திரைப்படத்திலும்  கற்பழித்ததில்லை. #ரஜினி63

56. தன் வியர்வைத் துளியை தானே ரசாயன மாற்றம் செய்து அணுஎண்/எடைகள் மாற்றி தங்கக்காசாக மாற்றும்  வேதியியல் சமன்பாட்டை உலகுக்கு அளித்த விஞ்சானி#ரஜினி63

57. அவர் கண்பார்வையில் ஒரு தேஜஸ் தெரிவதால் ஆந்திரா பார்டரில் நின்னு தமிழ்நாட்டை உத்து பார்க்க வைக்க முயற்சிப்பதாக கோட்டை வட்டாரத்து தகவல்..இதன்மூலம் அடுத்து நுப்பது வருஷத்துக்கு கரண்ட் கட்டே இருக்காது என தெரிவிக்கிறார்கள் பிபிசி மைக் ஏந்திகள். #ரஜினி63

58. தன் படத்தில் குழந்தையாக நடித்த குழந்தைக்கி ஜோடியாக நடித்தவர், ஜோடியாக நடித்தவருக்கு மகனாக நடித்தவர், குழந்தையாக நடித்தவருக்கும் மகனாக நடிக்கி இருப்பவர், உலகுக்கு ஒரே சூரியன், இந்த திரையுலகுக்கு ஒரே ரஜினி. #ரஜினி63

59. 62 வயதானதிலிருந்து ஒரே வருடத்தில் 63வயதுக்கு முன்னேறியவர் ரஜினி.  #ரஜினி63

60. ரஜினியின் கனவில் ரஜினி ரஜினியாகவே வருவாரென்பது யாருக்கும் தெரியாத ரகசியம். #ரஜினி63

61. கேட்டை நட்சத்திரத்தில் பிறக்காவிட்டாலும், கேட்டைத் திறந்துகொண்டு நுழைவார் அபூர்வ ராகங்களில். (என்ன சம்மந்தம்னு கேட்டீங்க, பிச்சுபிச்சு). #ரஜினி63

62. கூகிள் ரஜினியைத் தேடும் முன்னர் ரஜினி கூகிளைத் தேடிவிடுவார். #ரஜினி63

63. 12.12.12. க்காகதான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருந்தது, முடிந்தது 21-ல் உலகம் அழியப்போகிறது.
12=1+2=3
21=2+1=3
63=6-3=3

கூட்டிக்கழிச்சி பாருங்க கணக்கு சரியாவரும்.
ரஜினி ஒரு வரலாற்று அதிசயம். #ரஜினி63

63-க்கு சொந்தக்காரர்கள் : பெனாத்தல் சுரேஷ், குசும்பன்,சென்ஷி, அஹ்மத் இர்ஷாத், மணிஜி, இலியாஸ் &  பட்டிகாட்டான் JeyLinkWithin

Related Posts with Thumbnails