முஸ்கி : என்னை இந்த தொடரை எழுதச் சொல்லி 18464 போன் கால்ஸ், 76532 sms, 8984 மெயில்,1524 ஃபேக்ஸ்-னு ஒரே தொந்தரவு.... சரி எழுதி தொலைக்கலாம்னு நினச்சிகிட்டு இருக்கும்போது, ”சூரியனின் வலை வாசல்” அருண்பிரசாத் ஊருக்கெல்லாம் தெரியுரா மாதிரி டமாரம் அடிச்சி கூப்டுட்டாரு , வேற வழியில்லாம, இவர் கூப்டுதான் இந்த பதிவுன்னு சொல்லவேண்டியதாப் போச்சி.....
1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
பட்டிகாட்டான் (Jey)
2) அந்த பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்க காரணம் என்ன?
இல்லை, உண்மையான பெயர் ஜெயக்குமார். வலையுலகம் எனக்கு அறிமுகமான புதுசுல, எல்லோருக்கும் பின்னூட்டம் போட்டுட்டு கீழே, இப்படிக்கு ”ஜெயக்குமார்”னு வெள்ளந்தியா போட்டுகிட்டு இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது ’ஜெயக்குமார்’ ’ஜெய்’ என்ற பேர்ல ஏற்கனவே பதிவுலகத்துல இருக்காங்கனு. அதனால இங்லீஷ்ல “Jey" னு வச்சிகிட்டேன் (தமிழ்ல பேர் வைக்கக்கூட முடியாத பரிதாபமான நிலை!!!!, நல்ல வேலை, சூப்பரா சமையல் குறிப்பு எழுதுர ஒரு அம்மணி “Jay"னு ஒரு எழுத்து மாத்தி வச்சிருந்தாங்களோ இந்த பேராவது கிடைச்சுது...). அப்புறம் வலைபக்கம் ஆரம்பிக்கலாம்னு நினைக்குரப்போ, சட்டுனுதோனுன பேர்தான் ” பட்டிகாட்டான்(பட்டணத்தில்)” , பட்டிகாட்லேர்ந்து வந்து சென்னைல செட்டில் ஆனதுனால இந்த பேர்.
3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி
போன மே மாசம் , இணையதலத்துல எதையோ (இந்த மாதிரி கேள்விக்கு பதில் எழுதுவோம்னு தெரிஞ்சிருந்தா, எதை தேடும்போது, தேடின தேதி எல்லாம் நோட் பண்னி வச்சிருந்திருப்பேன்!!!) தேடிட்டிருக்கும்போது பட்டாபட்டி எழுதுன ஒரு லிங் வந்தது, சரி தமிழ் எழுத்துக்கள் இருக்கேனு அந்த லிங்க கிளிக் பண்ணி படிச்சா, யப்பா மனுஷன் நக்கல் நையாண்டியோட சூப்பரா பல விஷயங்கள குமுறி எடுத்திருந்தாரு, அப்புறம், அவருக்கு ஓட்டுபோட கிளிக் பண்ணினா தமிலிஷ் அறிமுகமாகி , அங்க லிஸ்ட்ல இருந்த பதிவுகள பாத்து மலைச்சி போயிட்டேன்.
’அ’ னாலேர்ந்து ’ஃ’ நா வரை எல்லாத்தைபத்தியும் அவங்கவங்க ஸ்டலுல, வெவ்வேரு கண்ணோட்டத்துல எழுதியிருந்தாங்க. குஷியாகி, நெறய பேர் பதிவுகளுக்கு படிச்சி பின்னூட்டம் போட்டுகிட்டு இருந்தப்ப, 14 பேர் எனக்கு ஃபாலோவர் (அதுல ஒருத்தரை மிரட்டியே follower ஆக்கினேன்!!) ஆகி பின்னூட்டம் போடும்போதெல்லாம், எழுதசொல்லி ஒரே தொந்தரவு, நானும் உற்சாகமாகி பதிவு போட்டு...........ம்ஹூம், அப்புறம்தான் தெரிஞ்சது இவங்க பலிகுடுக்க புதுசா ஒரு “ஆடு” தேடிட்டிருந்தபோது , நான் வந்தி சிக்கியிருந்துருக்கேன்னு...
’அ’ னாலேர்ந்து ’ஃ’ நா வரை எல்லாத்தைபத்தியும் அவங்கவங்க ஸ்டலுல, வெவ்வேரு கண்ணோட்டத்துல எழுதியிருந்தாங்க. குஷியாகி, நெறய பேர் பதிவுகளுக்கு படிச்சி பின்னூட்டம் போட்டுகிட்டு இருந்தப்ப, 14 பேர் எனக்கு ஃபாலோவர் (அதுல ஒருத்தரை மிரட்டியே follower ஆக்கினேன்!!) ஆகி பின்னூட்டம் போடும்போதெல்லாம், எழுதசொல்லி ஒரே தொந்தரவு, நானும் உற்சாகமாகி பதிவு போட்டு...........ம்ஹூம், அப்புறம்தான் தெரிஞ்சது இவங்க பலிகுடுக்க புதுசா ஒரு “ஆடு” தேடிட்டிருந்தபோது , நான் வந்தி சிக்கியிருந்துருக்கேன்னு...
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பதிவு எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் நெறய பேருக்கு, நான் போய் பின்னூட்டமும், ஓட்டும் போட்டுட்டு, பதிலுக்கு எனக்கும் போடச்சொல்லி கண்டிஷனாக் கேக்க ஆரம்பிச்சேன், அதுல பாதி தேரிச்சு, மீதி பலபேரு திட்டினாங்க, பலபேர் தொந்தரவு தங்காம, என் வலைபக்கமே வராம எஸ் ஆயிட்டாங்க.
என்னோட முதல் பதிவை ‘வலைச்சரத்துல’ dheva ஆசிரியரா இருக்கும்போது அறிமுகப்படித்தினதுல நெரய பேருக்கு அறிமுகமாச்சி.
தமிலிஷ்,டமில்-10,உலவு, தமிழ்மனம் நு இணைச்சதுல அறிமுகமில்லாத நெறயப்பேர் வந்து படிச்சிட்டு பின்னூட்டமும் ஒட்டும் போட்டங்க.....,
அதுகப்புறமும் நாம பிரபலம் ஆனாமாறித் தெரியலை, அதனால நானே ‘பிரபலப் பதிவர்’னும், சமீபத்தில ”சூப்பர்ஸ்டார் பதிவர்”னும் பரப்பசொல்லி ஆள் செட்டப் பண்ணிருக்கேன்....அவங்களும் காசு வாங்காமலே நட்புக்காக ஒசில நல்லா கூவிட்டிருக்காங்க... இதுவும் சரிவரலைனா வேற ரோசனையும் இருக்கு.....
(ஆகமொத்துல, உருப்படியா எழுதி பிரபலமாகுறதா ஐடியா இல்லையானு யாரும் கேக்கதீக.... அதெல்லாம் நொம்ப கஷ்டம்)
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா?
ஆமங்க, நான் சின்ன வயசுல எருமைமாடு மேய்ச்சதுனால, எப்படி நாலாப்பு பியிலானேனு எழுதிருக்கேன், பத்தாப்பு ஸ்கூல் போட்டொவ போட்ருக்கேன், பூக்குழி மிதிச்சதை எழுதிருக்கேன்...எழுதுனதுல பாதி என் சுய புராணந்தேன்...( ஊர் பேரு, அதுல வர்ற தெரிஞ்சவங்க பேர மட்டும் போடல)
5.1) ஆம் என்றால் ஏன்?.
பெரிய பிளானெல்லம் கிடயாது, எல்லாம் வெள்ளந்தியா எழுதுனதுதான்.
5.2) அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஆமங்க, நான் சின்ன வயசுல எருமைமாடு மேய்ச்சதுனால, எப்படி நாலாப்பு பியிலானேனு எழுதிருக்கேன், பத்தாப்பு ஸ்கூல் போட்டொவ போட்ருக்கேன், பூக்குழி மிதிச்சதை எழுதிருக்கேன்...எழுதுனதுல பாதி என் சுய புராணந்தேன்...( ஊர் பேரு, அதுல வர்ற தெரிஞ்சவங்க பேர மட்டும் போடல)
5.1) ஆம் என்றால் ஏன்?.
பெரிய பிளானெல்லம் கிடயாது, எல்லாம் வெள்ளந்தியா எழுதுனதுதான்.
5.2) அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
விளைவு!!!!..... அத ஏங்க கேட்டுகிட்டு, ஏதாவது ஆடு சிக்காதானு அலைஞ்சுகிட்டு இருந்த பயபுள்ளக வந்து பின்னூட்டம்ன்ற பேர்ல, கும்மு கும்முனு கும்மிட்டாய்ங்க....
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பொழுது போக்கதான் எழுத ஆரம்பிச்சேன், இப்ப என்னடான்னா மொத்த பொழுதும் இங்கயே போயிருமோன்னு பயமாருக்கு..., ஆஃபீஸ்ல ஆணிபிடுங்குறது குறைஞ்சி , பிடுங்க வேண்டிய ஆணி நெறய குமிஞ்சிருச்சி..., வீட்ல வந்து சிஸ்டத்துக்கு முன்னாடி உக்காந்தா வழக்கமா கிடைக்கிற பூரிக்கட்ட அடி கூட இப்ப பூரி தேய்க்கிற முக்காலி அடியும் சேந்து போச்சி.... சரி வுடுங்க வூட்டுக்கு வூடு வாசப்படி... எவ்வளவோ சமாளிச்சிட்டோம், இத சமாளிக்க மாட்டமா.....
ஆங் நோட் பன்ணிக்குங்க, இங்க எழுத ஆரம்பிச்சி நெறய பேர் ஃபிரண்ட்ஸ் ஆயிருக்காங்க, நெறய பேர் எனக்கு ஃபாலொவரா ஆயிருக்காங்க...., இதுதாங்க இங்க வந்து சம்பாத்தியம்
ஆங் நோட் பன்ணிக்குங்க, இங்க எழுத ஆரம்பிச்சி நெறய பேர் ஃபிரண்ட்ஸ் ஆயிருக்காங்க, நெறய பேர் எனக்கு ஃபாலொவரா ஆயிருக்காங்க...., இதுதாங்க இங்க வந்து சம்பாத்தியம்
( அப்பாடி , இந்த ஒருமாசம் பதிவு எழுதி சம்பாறிச்சதுலேர்ந்து, அண்ணா நகர்ல, ஒரு பிளாட் வாங்குனது... அப்புறம், புது காருக்கு அட்வான்ஸ் குடுத்தது... எல்லாத்தையும் சொல்லி இன்கம் டாக்ஸ் காரங்ககிட்ட மாட்டாம தப்பிச்சுட்டோம்..... எப்படியாவது கண்டுபிடிச்சிருவாங்களோ... அலர்ட்டாவே இருப்போம்.)
7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
அது இருக்குங்க நெறய.....சொன்னா நம்பமேட்டீங்க எனக்கு 297 மொழில எழுத படிக்கத் தெரியும், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வலைப்பதிவுன்னு 297 இருக்கு.(ஒரு வேலை நம்பினாலும் நம்பிருவாய்ங்களோ)
தமிழ்ல இந்த வலைபக்கம் மட்டும்தாங்க.
(அறுக்கமாட்டாத அய்யாவுக்கு 62 அருவா எதுக்குன்னேன்.... ஒத்த அருவாவ வச்சி அறுக்குரதுக்கே வெள்ளாமையில்ல பயிரைக்காணோம்......... நல்லா கேக்குராய்ங்கய்யா டீடெய்லு....)
அது இருக்குங்க நெறய.....சொன்னா நம்பமேட்டீங்க எனக்கு 297 மொழில எழுத படிக்கத் தெரியும், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வலைப்பதிவுன்னு 297 இருக்கு.(ஒரு வேலை நம்பினாலும் நம்பிருவாய்ங்களோ)
தமிழ்ல இந்த வலைபக்கம் மட்டும்தாங்க.
(அறுக்கமாட்டாத அய்யாவுக்கு 62 அருவா எதுக்குன்னேன்.... ஒத்த அருவாவ வச்சி அறுக்குரதுக்கே வெள்ளாமையில்ல பயிரைக்காணோம்......... நல்லா கேக்குராய்ங்கய்யா டீடெய்லு....)
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோவம்..... ச்சே நமக்கு கோவமெல்லாம் வர்ரதே இல்லீங்க... ஆங் இருங்க...நான் பதிவு போட்டா, வந்து படிச்சிட்டு புகழ்ந்து நாலுவரி பின்னூட்டம் போடாம, ஓட்டும் போடாம இருக்காங்களே அவங்க மேலதாங்க கொல்லக்கோவம்....
பொறாமை...... அது இருக்குங்க வண்டி வண்டியா...., எல்லாம் என்னைவிட கொல்லப்பேரு நல்லா எழுதுராங்கள்ல அவங்க மேலதான்...இந்த பட்டாபட்டியோட நக்கல் நையாண்டி, மங்குணி அமைச்சரோட குசும்பு, சிரிப்பு போலீஸ் பண்ர ரவுசு, தக்காளி இந்த பிரியமுடன் வசந்த் பண்ற கலாட்டா, ஜெய்லானி ...... யருய்யா அது பதிவு நீளமா போடாதேனு மிரட்டுரது... லிஸ்ட்ல இருக்குரவங்க பேரெல்லாம் சொல்லி தனி பதிவா போட்டுறேன்.( அப்பா ஒரு பதிவு போட மேட்டர் கிடைச்சாச்சு...)
இந்த கவுஜ நமக்கு புரியுரதே இல்லை... இருந்தாலும் நம்மல மட்டமா நினைச்சிரக் கூடாதுன்னு அவங்க பிளாக் பக்கம் போய் , அப்படி இப்படின்னு புரிஞ்சா மாதிரி, பின்னூட்டம் போட்டுட்டு வந்துருவேன், அவங்களும் அதுக்கு பொறுப்பா பதில் சொல்லுவாங்க, எனக்கு சிப்பு சிப்பா வரும்.. (ஐய்ய்யோ உளரிட்டேனே, இனிமே கவுஜ எழுதுரவங்க பிளாக் பக்கம் போய் நல்லாருக்குனு கமெண்ஸ் போட்டாலும் வெரட்டுவாங்களோ!!!!, ச்சே ச்சே நல்லவங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க..).
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...
அந்த கூத்து பெரிய கூத்துங்க... செவனேனு மத்தவங்க எழுதுரத படிச்சிகிட்டு பின்னூட்டம் போட்டிட்டிருந்தவன, இந்த பட்டாபட்டி, முத்து, பன்னிகுட்டி ராமசாமி, மங்குனி அமைச்சர்,ஜெய்லானி, பருப்பு மோகன், சிரிப்பு போலிஸ் ( பேர வச்சிருக்கானுக பாரு....ங்கொய்யாலே) இவய்ங்கெல்லாம் சேந்து கிட்டதட்ட மிரட்டி எழுத வச்சிட்டானுக.... நம்ம மேல இவ்வளவு நம்பிக்கயானு நினைச்சு சந்தோசம்கூட பட்டேங்க. அப்புறம் தான் தெரிஞ்சது இந்த நாதாரிங்க அவங்க வெட்டி விளையாட ஃபிரஸ்ஸா ஆடு, கிடைக்காம என்னை ஏமாத்தி உள்ளே இழுத்துருக்கானுகனு....
முதன் முதலா பதிவை எப்படி பதிவேத்துரதுன்னு தெரிஞ்சிக்க ’அ’னா ஆ-வன்னா எழுதி டெஸ்ட் பதிவு போட்டேன், அதுக்கே ஆஹா ஓகோனு பாராட்டி கமென்ஸ் போட்டு உசுப்பேதினாங்க...
முதல் பின்னூட்டம் நம்ம சிரிப்பு போலிஷ் போட்டது.. இப்ப நமக்கு கொல்லப்பேரு ஃபிரண்ட்ஸ் கிடைச்சிட்டாங்க, அம்மனிககூட நெறய பின்னூட்டம் போடுராங்கன்னா பாத்துக்குங்க...
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
இதுவரை என் அனுபவங்கள எழுதுனதை வச்சே கும்மிகிட்டு இருக்காங்க, இதுல இன்னும் சொல்லனுமா...., இதுவரை எழுதுனதுல பாதி பதிவு என்னை பத்திதான்... அட நான் சின்ன வயசுல எருமை மாடி மேய்ச்சதுனால எப்படி நாலாப்பு பெயில் ஆனேன்னுகூட எழுதியிருக்கேங்க..., இன்னும் எதுனா என்னை பத்தி தோனுச்சின்னா பதிவா போடுரேன்.....
டிஸ்கி 2 : அப்புறம் தலைப்புல பாதிதான் எழுதிருக்கேன் மீதிய ”சூப்பர் ஸ்டார் பதிவர்” அப்படின்னு “ஃபில் அப்” பண்ணிக்குங்க, வேர ஏதும் வில்ல்ங்கமா யோசிச்சி எழுதிராதீக......