Showing posts with label ஆசிரியர்தினம். Show all posts
Showing posts with label ஆசிரியர்தினம். Show all posts

September 05, 2012

என் இனிய வாத்தியார்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்

















எனக்கு ஒன்னாப்புல அ...ஆ... சொல்லிக்குடுத்த வாத்தியாருக்கு ஃபோன் பண்ணி பேசினேன்..., மனுசனுக்கு கொல்லசந்தோஷம்.

வாயசானதல காதுகேக்குறது குரைஞ்சிருக்கு கத்தி கத்தி பேசவேண்டியதாப்போச்சி.

அடுத்து ஊருக்குபோகும்போது டாக்டர்கிட்ட கூட்டிபோய், காதுக்கு மிசின் வாங்கிகுடுக்கனும்.

ஸ்கூல் வாத்தியார் ரெண்டு பேர் போன்ல சிக்குனாங்க, காலேஜ் வாத்தியார் மூனு பேர் மாட்னாங்க...

மீதி பேர் இன்னும் லைன்ல சிக்கலை... விட மாட்டேன் எப்படியும் இன்னிக்கி நைட் 12 மணிக்குள்ள , கால் பண்ணி வாழ்த்து சொல்லாம தூங்கப்போறதில்லைனு, முடிவு பண்ணிட்டான் இந்த பட்டிகாட்டான்.

இவர்களை போன்ற உலகத்தில் பாடம் சொல்லித்தர்ர  வாத்தியார்களுக்கும் மற்றும் நடைமுறை வாழ்க்கையில் அனுபவப்பாடம் பகிரும்  அனுபவ வாத்தியார்களுக்கும்  எனது இனிய வாத்தியார்கள் தின வாழ்த்துக்களும் வணக்கங்களும்.


நோ முஸ்கி,இஸ்கி,டிஸ்கி ஃபார் திஸ் போஸ்ட்.


September 05, 2010

என் ஆசான்கள். ஆசிரியர் தினப் பகிர்வு..














முஸ்கி : பதிவுலகம் அறிமுகமான பின் நான் கொண்டாடும் ஆசிரியர் தினம் இன்று. கலாநேசன் அவர்களின் பதிவிற்கு மதிப்பளித்து,  நான் போற்றும் என் குருநாதர்களை பற்றிய பதிவு இது...

பார்த்த சாரதி : என்னோட ஒன்னாப்பு வாத்தியார்..., ஆசிரிய வர்க்கத்துக்கு இன்றும் நான் முன்னோடியாய் நினைக்கும் ஒரு உன்னதமான மனிதர்...., என் கிராமத்தில், 5 வயது குழந்தைகளை... கணக்கெடுத்து... பெற்றோரிடம்.. சண்டை போட்டாவது... பள்ளிக்கு அழைத்துச் சென்று.... அடிப்படைக் கல்வியை... ஊட்டிய பகலவன்...., என் கல்யாணத்தின் போது என் தந்தையின் இழப்பை, சரி செய்ய முயன்ற உன்னதமான மனிதர்...நான் என் மனைவியுடன்...தாலிகட்டிய மறுகணம்..இவர் காலில் விழுந்துதான் ஆசீர்வாதம் வாங்கினேன்..., கண்களில் நீர் பொங்க என்னை வாழ்த்தியவர்...

சீத்தாராம் வாத்தியார் : நாலாப்பு மறுபயும்..படிக்கச் சென்ற போது ஆரத்தழுவி...உற்சாகப் படுத்திய மனிதர்...ஆங்கிலத்தின் ஆரம்பத்தை என்னுள் விதைத்தவர்...., பின்னாளில் நல்லாசிரியர் விருதை அப்துல் கலாமிடம் பெற்ற போது.. என்னிடம் உற்சாகத்துடன் சொல்லி மாய்ந்த மனிதர்...

பேச்சியம்மா டீச்சர் :  ஆறாப்பு படிக்கும்போது..., அறிவுப் பூர்வமாக பாடம் நடத்தவில்லை என்று, என் நினைப்பில் இருந்தாலும்..இவரின் தாயுள்ளம் பெரியது..., எங்களிடம் காட்டும் இவரின் அன்பும் பாசமும்...தாயின் அன்பு பாசத்திற்கு சற்றும் குறைவில்லாதது...

சீனிவாசன் : ஏழாப்பு வாத்தியார்..., சம்பளம் வாங்கும் தொழிலாக கருதாமல்... எங்களுக்கு அறிவூட்டுவதில் பெரும் சிரமப் பட்டவர்..., விபத்தில் ஒரு கால் இழந்து வீட்டோடு இருக்கும் இவரை பார்க்கச் சென்ற போது.. வலி மறந்து..., உற்சாகமுடன் அலவலாவிய உன்னத மனிதர்....

ராஜேந்திரன், ராதாகிருஷ்னன், சுந்தர்: பள்ளிக் கல்வியை விளையட்டாக..அதன் நோக்கம் புரியாமல், விளயாட ஒரு இடம் என்று மனதில் இருந்ததை மாற்றி, கல்வியின் அருமையை..., பாடத்தின் கடுமையை.., எளிமயாக சொல்லிக் கொடுத்து, இவ்வளவுதானா..என்று என்னையும் படிப்பின் பால் அக்கறை கொள்ளச் செய்த மும்மூர்த்திகள். 
  
      ராஜேந்திரன் : ஆங்கிலம்+வரலாறு&புவியியல் அசிரியர், இன்றும் இவர் அளவுக்கு உலக வரலாறை என்னுள் , வேரெவரின் தாக்கமும் பாதித்ததில்லை.
     ராதாகிருஷ்னன் : அறிவியல் வாத்தியார். என் அறிவியல் தாக்கம் இவரிடம் இருந்துதான் தொடங்கியது..., எதையும்..., செயல் முறை விளக்கம் கொடுத்து..நாங்கள் புரிந்து கொண்டோமா என்பதில் அதிக அக்கறை செலுத்தியவர்...
    சுந்தர் : கணக்குப் பாடத்தை..சூ...இவ்வளவுதானா என்று எண்ண வைத்தவர்..., கணக்கில் நூத்துக்கு நூறு எடுப்பது எருமைமாடு மேய்ப்பதை விட சுலபமானது என்ற எண்ணத்தை தோற்றுவித்த மகான்.

அரங்கசாமி : பத்தாவது தமிழ் வாத்தியார். தமிழை முறையாகக் கற்றுக் கொடுத்தவர் (நான் சரியாகக் கற்றுக் கொண்டேனா என்பது வேறு விசயம்...). பள்ளி வயதில் இவரைக் கிண்டலடித்ததை பின்னாளில்.. இவரிடம் மன்னிப்புக் கேட்டதுண்டு. அதை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் என்னை அரவனைத்த அவரின் பாசம் மறக்க முடியாதது...

பூங்கோதை : +1&+2  வேதியல் பாடத்தை ரொம்ப சிரமேற்கொண்டு எனக்கு புரிய வைக்க முயன்றவர்...,  வகுப்பில் மொத்த மதிபெண்ணில் முதல் மாணவனாக வந்தாலும்..அவர் பாடத்தில் என் மதிப்பெண் குறைவு என்ற ஆதங்கம் இவருக்கு உண்டு...,  போன வருடம் பள்ளியில் சென்று சந்தித்த போது... அவர் கொண்டு வந்த மதிய உணவை, என்னை வற்புறுத்திச் சாப்பிடவைத்து மகிழ்ந்த மற்றொரு தாய்க்குச் சமமானவர்.

ஆமருவியப்பன் :  +1&+2 கணக்கு வாத்தியார், கணக்குப் பாடத்தில் நான் அதிக மார்க் வாங்குவதால், என்னிடம் தனிப் பிரியம் வைத்தவர்..., எளிமையாகப் பாடத்தை புரிய வைப்பதில் வல்லவர். கல்லூரிப் படிப்பு முடிந்து, இப்போது சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று, வீடு தேடிப் போய் சொன்ன போது அளவிலா ஆனந்தம் அடைந்தவர்...

தனபால் : +1&+2 இயற்பியல் வாத்தியார், இந்தப் பாடத்தை என் விருப்பப் பாடமாக கல்லூரியில் தேர்ந்தெடுக்க காரணமானவர்..., பட்டிக்காட்டிலிருந்து சென்னை வந்து படிக்க வந்ததால் என்னிடம் தனி பிரியம் உண்டு..., ஆசிரியத்தொழிலை நிரம்ப நேசிப்பவர்.

போத்திராஜ் : இயற்பியல் துறைத் தலைவர். என் கல்லூரி வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர். கல்லூரிப் பாடத் திட்டங்கலை தாண்டி நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய பல விசயங்களை, அக்கறையுடன் சொல்ல முயன்றவர். என் கல்லூரி வாழ்க்கையில் ஒட்டு மொத்த ஆசிரியர்களில் மாணவர்களின் மேல் அதிக அக்கறை கொண்ட மாமனிதர் இவர்.

சுவாமிநாத ஐயர் : நான் ஐஐடி- மேல் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் தோற்றவுடன், என்னுடைய அடுத்த இலக்கான சிஏ படிப்பிற்காக, இவரிடம் தான் பயிற்சிக்காக சேர்ந்தேன். என்னுடைய நண்பனாய், குருவாய், எனக்கு உலகத்தை பற்றிக் கற்றுக் கொடுத்தவர். இவரிடம் தான், நான் ஆங்கிலத்தை அதிகமாகக் கற்றேன். கம்பனி..ஆடிட்டிங்..தொழில்..வர்த்தகம்...பங்கு மார்கெட் என்ற அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தவர்... பார்ப்பனர்பால் என்னுள் இருந்த கோபதாபங்களை, தவிடு பொடியாக்கியவர், சாதி மத பேதம் எனக்கில்லை என்று என்னையும் மதித்து நிரூபிக்க முயன்றவர்...

நான் இங்கே குறிப்பிடாத பல ஆசிரியர்கள் உண்டு , என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுல், மேலே சொன்ன இவர்கள் முக்கியமானவர்கள்.

விவசாயத்திற்கு அடுத்ததாக, மற்ற எல்லா தொழிலைக் காட்டிலும் ஆசிரியர்த் தொழில் உன்னதமானது என்பது என் தாழ்மையானக் கருத்து.

இன்று, சிலபல இடங்களில் இது பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிப் போன அவலம் நடந்து கொடிருந்தாலும்...,  ஆசிரியத் தொழிலை உன்னதமானதாக பாவிக்கும் மனித மகான்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... அவர்களை... ஆசிரியர் தினமான... இன்று கொண்டாடுவோம்..




LinkWithin

Related Posts with Thumbnails