முஸ்கி : Grand parents day என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை தெரியாததினால் பதிவுக்கு இந்த தலைப்பு.
என் பெண் LKG படிக்குற பள்ளியில் இன்று Grandparents Day என்றும் தத்தமது பாட்டி தாத்தாக்களுடன் வருமாறு கூப்பிட்டிருந்தாங்க. சரின்னு எங்கம்மாவயும் கூட்டிகிட்டு பள்ளி போயிருந்தோம், போன பிறகு, அங்கு வந்த பாட்டி தாத்தக்களோட என்ணிக்கைய பார்த்த ஒரே ஷாக். மொத்தம் 150 குழைந்தங்க LKG படிக்கிறாங்க, அதுல 30க்கும் குறைவான குழைந்தைங்க தான் தாத்தா பாட்டியோடவோ, இல்லை அவங்கள்ல ஒருவரோடவோ வந்திருந்தாங்க. காரணம் தெரிஞ்சிக்க, பல குழைந்தகளோட அப்பாககிட்ட விசாரிச்ச போது வந்த பதில்கள்.
- தனிக்குடித்தனம் . தனக்குன்னு சொத்து சேக்குற , அதிக செலவுகளை குறைக்கிறதுக்காக கூட வச்சிக்களயாம், மாசா மாசம் குறிப்பிட்ட தொகையை அனுப்பிடுறாங்களாம்.( உண்மையில பணமாவது அனுப்புறாங்களான்னு தெரியலை.), அதுல ஒருத்தர் வீட்டம்மாவுக்கு பெற்றோர்களை கூட வச்சிக்கிறதுல சம்மதம் இல்லாதால கூட வச்சிக்கலைனு சொன்னாரு.
- சிலபேர்களோட பெற்றோர்கள் கிராமத்துல இருக்கிறதனால, அழைச்சிட்டு வர முடியல.
- பெற்றோர்களுடன் சுமுக உறவு இல்லாம, அவங்கள கூப்பிட முடியாத நிலை
- பெற்றோர்கள் இப்ப உயிரோட இலாததனால அழைச்சிகிட்டு வரமுடியாத நிலை
- காதல் கல்யாணம், பெர்றோர்களுடன் உறவே இலாத்தினால அழைச்சிகிட்டு வரமுடியாத நிலை..
இப்படி பல காரணங்களால இந்த தலைமுறை குழந்தைங்க, தாத்தா பட்டிகளோட பாசம் + வழிகாட்டுதல், கிடைக்காமலேயே வளர்றாங்க. 20 % குழைந்தைங்க தான் தாத்தாபாட்டிகளோட வந்திருந்தாங்க.
என்னோட அனுபவத்துல நாங்க எங்க குழைந்தங்க கிட்ட காட்டுற பாசத்துக்கும், எங்கம்மா காட்டுர பாசத்துக்கும் நெறய வித்தியாசம் இருக்கு. எங்கம்மாவுக்கு இருக்கிற பொறுமையும் குழைந்தங்ககிட்ட அவங்க அனுகுகிற முறையும் அலாதியானது. இன்னிக்கு இருக்கிற ஆங்கில வழிக் கல்விய சொல்லிகுடுக்கிறதுல, எங்கம்மா, எங்களோட போட்டி போட முடியலைன்னாலும், குழைந்தய புரிஞ்சிக்கிறதுல அடிப்படை நல்ல பழக்கவழக்கங்கள அவங்கதான் பொறுமையா அழகா சொல்லிதராங்க.
பள்ளியில பல குழந்தைங்க, அவங்க தத்தா பாட்டிய பாத்ததே இல்லையாம், எனக்கு தெரிந்த நண்பரின் மகன், என் அம்மாவைக் கட்டிபிடித்துக் கொண்டு பாட்டி பாட்டியென்று என் அம்மாகூடவே இருந்தான். இது மாதிரி பல குழைந்தகளுக்கு அவர்களின் தாத்தா பாட்டிகளின்( இருந்தும்) பாசம் கிடக்காமல் இருப்பது வேதைனையகவே இருக்கு.
பெரும்பாலான குழைதகளை இனிமே முதியோர் இல்லங்களுக்கு அழைத்துபோய் தாத்தா பாட்டிகள் இப்படிதான் இருப்பார்கள் என்று காட்டும் நிலை சீக்கிரமே வந்துரும் போல.
டிஸ்கி : இந்த வாட்டி பதிவ சின்னதா போட்டுட்டேன். பாராட்ரவங்க வஞ்சனையில்லாம பாராட்டிட்டு போகலா, அப்படியே ஒட்டும் போட்ரலாம்.