எருமை மாடு மேய்க்கப் போய், ஸ்கூலுக்கு போகாம நாலாப்பு பெயிலாகி, மறுக்கா நாலாப்பு போக ஆரம்பிச்சதுலேர்ந்து, அங்கயும் ஒரு செட் சேந்து, ஸ்கூல் போறது வழக்கமாயிருச்சி. வாத்தியார்களும் படிக்கச் சொல்லி ரொம்ப தொந்தரவு தர மட்டாங்க, என்ன பதிலுக்கு ரொம்ப கூச்சல் போட்டு அவங்கள தொந்தரவு பண்ணகூடாது, ஆனாலும் அந்த டீல் எங்களுக்கு ரொம்ப பிடிச்சது.
நல்லா படிச்சா, இவங்க மாதிரி வாத்தியாகலாம்ன்ற அளவுக்குதான் அன்னிக்கு தெரியும், மத்தபடி படிக்க போறது அங்க போயி கூட்டாளிகளோட கும்மாளம் போடுறதுக்குதான். ( வீடலயும் இருக்க விட மாட்டாங்க , அப்படி விட்டாலும், அந்த ஒன்னாப்பு வாத்தி, நாலு பெரிய பசங்கள கூட கூட்டிகிட்டு வந்து அலேக்கா ஸ்கூல் தூக்கிட்டு போயிரும்...)
ஒருவழியா அஞ்சாப்பும் படிச்சி பாசாகி!!!, பெரிய பள்ளிகூடம் சேக்குரதுக்கு அப்பாகூட போனேன், 50 அடி தள்ளி கல்லு கட்டிடம் (ஜெயா டீவில காலச்சுவடுகள்ல இந்த கட்டடத்தை பத்தி சொன்னாங்க, அப்புறம் தெக்கத்தி பொண்ணுனு எங்கூரு பாரதிராசா எடுத்த சீரியலுல, இத ஜெயிலா யூஸ் பண்ணிருக்காங்க...), ஆனாலும் சின்ன ஸ்கூல்லேர்ந்து டிசி வாங்கிட்டு போய் புதுசா சேக்கனும்.
ஆறாப்பு ஃபீஸ் 5 ரூவா 55 காசு (இப்ப 75 ரூவாக்கு மேலயாம், சொன்னாங்க), இது அதிகமாருக்குன்னு எங்கப்பா சண்டை போட , அதுவரையிலும் சும்மாருந்த மத்தவங்களும் ஃபீஸ் குறைக்கச் சொல்லி ஆரம்பிக்க, ஒரு வாத்தி எங்கப்பாவ தனியா கூப்பிட்டு, பையனை விட்டுட்டு போய் தோட்ட வேலைய கவனி சாமி, ஃபீஸ நான் கட்டிக்கிறேன்னு அனுப்பிட்டாரு.( அத பத்து நா கழிச்சி, தோட்டத்துல எடுத்த பருத்திய யாவாரிக்கு போட்டு என் கிட்ட 5 ரூவா 60 பைசாவா குடுத்தனுப்புனாரு, அதுல எனக்கு 5 பைசா லாபம் )
பெரிய பள்ளிகூடம் வந்ததுக்கப்புறம் என்னை ஒழுங்க படிக்கச் சொல்லி வாத்திங்க தொந்தறவு அதிகமாயிருச்சி, ஏன்னா எங்கண்ணே நல்லா படிச்சி ஸ்கூலுக்கு பேர் வாங்கித் தந்துருக்காராமாம், நான் வந்து அத கெடுத்துரகூடாதாமாம்..., எப்படா ஒன்னுக்கு விடுவாங்க, எப்ப மதியம் வரும், எப்ப சாயந்திரம் ஸ்கூல் விடுவாங்கண்ணு ஏக்கமாருக்கும்... இப்படியே ஆறாப்பு டூ எட்டாப்பு, வாழ்க்கயோட இருண்ட காலமா போச்சி.
ஒன்பதாப்பு போனா அங்க ஒரு இருபது தடிமாடுங்க பெயிலாகி கூட்டமா உக்காந்திருக்குதுக..., எட்டாப்பு வரைலும் பாஸ் போட்ருவாங்க, பத்தாவது பப்ளிக் தேர்வுல கெட்டபேர் வதுரக் கூடாதுன்னு ஒன்பதாப்பு ஒழுங்க படிக்கலைனா பெயிலுதான். என்னோட பத்தாப்பு போட்டோல , மேல் வரிசைல இருக்கிற முக்காவாசி பரதேசிக இந்த குருப்புதான்.
ஒன்பதாப்பிலேர்ந்து வாத்தியெல்லாம் காலேஜ் படிச்சிட்டு வந்தவங்க, இவங்க சொல்லி குடுத்ததுக்கு அப்புறம்தான் படிப்பு புரிய ஆரம்பிச்சி அது அவ்வளவு கஷ்டம் இல்லைனு தெரிஞ்சி, யார் அதிகமா மார்க் வாங்குறதுன்னு போட்டி ஆரம்பிச்சது, பரிசெல்லாம் அவங்க சொந்த செலவுல குடுப்பாங்க...(இன்னிக்கும் 9,10 படம் சொல்லிதந்த வாத்திக தொடர்பு இருக்கு, போய் பாத்தா அம்புட்டு சந்தோசப் படுவாங்க.. இப்ப அவங்க வேலை பாக்குர ஸ்கூலுக்கு வரச் சொல்லி அங்கிருக்குரவங்களுக்கு அறிமுகம் செஞ்சி சந்தோசப்படுவாங்க).
இப்ப எல்லா அம்மனிகளும் தாவணி போட ஆரம்பிச்சாச்சி..., எஙகளுக்கும் அவங்கள பாக்குரதுல சின்னதா ஒரு இது ஆரம்பிச்சிருச்சி..., பாக்குரதுக்கு புதுசா தெரிய ஆரம்பிச்சாக, படிப்பு மூலமா, இல்லைனா, வேறெதாவது பண்ணி அவங்கள நம்ம பக்கம் திரும்பி பாக்க வைக்கனும்ண்ற எண்ணம் புதுசா வந்து சேந்தாச்சி பெரியபசங்கெல்லாம், பேண்ட் போட ஆரம்பிச்சானுக, நானும் வீட்ல கேட்டேன், முடியாது பத்தாவது முடிச்சதுக்கபுரம் தச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க, அப்பதான் வேஷ்டி கட்ட பழக ஆரம்பிசது (இன்னிவரைக்கும் வேஷ்டிதான் என்னுடைய ஃபேவரைட்..)
ஒரு வழியா ப்ப்ளிக் பரிட்சை முடிஞ்சி ரிஸல்ட் வந்துச்சி ஸ்கூல்ல நா 3வது, என்ன விட ரெண்டு நாதாரிக மார்க் கூட வாங்கிட்டாக.. அவமானமாப் போச்சி... ஆனாலும் நல்ல படிச்சி சென்னைல இருந்த அண்ணனுக்கு, நான் இவ்வளவு மார்க் எடுத்தது பெரிசா பட்ருக்கு. லீவ் போட்டுட்டு வந்து, சென்னைல எங்கூட இருந்து படிக்கட்டு, இங்கிறுந்தா தோட்டம் தொறவுண்ணு சரியாப் படிக்க மாட்டான்னு வீட்ல சொல்லிட்டு போய்ட்டாரு.
போய் அயனாவரத்துல ஒரு ஸ்கூல்ல அட்மிஸனுக்கு சொல்லி வச்சிட்டு, பக்கத்துலே ஒரு வீடு பாத்துட்டு, ஊருக்கு வந்தாரு. நானும் இருக்குர நாலு டவுசர்,சட்டை , கூட நாலு வேஷ்டினு மோட்டை கட்டி கிளம்பிட்டேன். சென்னை போற பிரவேட் பஸ்ல கலர் டீவில ப்டம்போடுவாங்கன்னு சொல்லிருந்ததால...ஒரே குஷியா இருந்துச்சி... ஒருவழியா குடும்பத்தோட வந்து என்னயும், அண்ணனையும் பஸ் ஏத்திவிட்டாங்க..., பஸ்ல ஏறி உக்காந்ததுலேர்ந்து எப்ப படம் போடுவாங்கண்னு எங்கண்ணாகிட்டே கேட்டுகிடே இருந்தே...’டேய் பேசாம உக்காருடா..இன்னும் பஸ் ஸ்டார்ட் பண்ண்வே இல்லை.. சும்மா தொன தொனன்னுகிட்டு”னு அதடிட்டாரு...
பஸ் கிளம்பி பெரியகுளம் தாண்டினவுடனே படம் போட்டாங்க, முதல் படம் ”உலகம் சுற்றும் வாலிபன்”, 2-வதா ”நேற்று இன்று நாளை”, ரொம்ப சந்தோசமா இருந்தது...
வந்தாச்சி, பட்டிகாட்டுலேர்ந்து சிங்கார சென்னை பட்டணத்துக்கு..., வடைகை வீடு (1 ரூம், 1 சமயலறை) ரூ 500 சின்னதா இருந்தது, எங்கூருல ரூ 50-க்கு பெரிய வீடே பெரிய வீடே வாடகைக்கு கிடைக்கும். “நாளைக்கு ஸ்கூல் போகனும் அட்மிஸன்..இருக்குறதுல நல்ல சட்டையும் டவுசரும் எடுத்து வச்சிக்கட” நு அண்ண சொன்னாரு..நான் வளந்துட்டேன், டவுசர் கூச்சமா இருக்கு வேஷ்டி கட்டிக்கிரேன்னு சொன்னேன், சரின்னுட்டாரு...
காலையில எந்திரிச்சி, உப்புமா கிண்டி சாப்டிட்டு...ஸ்கூல் கிளம்பினோம்..., அங்க பெரிய கூட்டம்... அங்க பசங்கள்ளாம், வித விதமா பேண்ட் சட்டை போட்டு கலக்கலா வந்திருந்தாங்க...பொம்பள பசங்கள பத்தி சொல்லவே வேணா...நான் ஒவ்வொருத்தரையும் வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்... அவங்க ஒட்டு மொத்தமா என்னயே பாத்திர்டிருந்தாங்க..., இதுல அம்மனிக ரொம்பவே என்னை பாக்குரதும்...அதோ அவங்களுக்குள்ள பேசிக்கிரதுமா இருந்தாங்க...எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சி...நம்ம அழகுல மயங்கிட்டாங்க போல... இனி வர்ற நாள்ல இவங்கள எப்படி சமளிக்கிரதுன்னு ஒரே ரோசனையா இருந்துச்சி...,
எங்கண்ணங்கிட்ட சொல்லி பாத்தியாண்னா எல்லோரும் என் பெர்சனாலிட்டிய பாத்து என்னையே பாக்குராங்கன்னு சொன்னேன். அதுக்கு அவரு “மண்ணாங்கட்டி நீ ஒருத்தந்தான் வேஷ்டி கட்டிகிட்டு வந்துருக்கே, ஏதோ பட்டிகாட்லேர்ந்து நேரா இங்க வந்துருக்கானு பாத்திட்டிருப்பாங்க”, வெளில மாட்டு வண்டி பார்க் பண்ணிருக்காங்களான்னு பேசிட்டிருப்பாங்க... ரொம்ப பெருமை பட்டுக்காதேன்னு, என் நினைபுல ஒரு வண்டி மண்ணள்ளி போட்டாரு...
எங்கல கூப்டவுடனே ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போனோம்... அவரும் என்னை ஒருமாறிப் பாத்தாரு... இங்லிஷ்ல ஏதோ கேட்டாரு...நன் ..ஒன்னும் புரியாம எங்கண்னனை பாக்க..பேர் என்னானு கேக்குரார்டா, காலையில சொல்லித்தந்தது மறந்து போச்சானு முறைச்சாரு (ஹெட்மாஸ்டர் இங்லீஷ் வாத்தியாரு..அவரு ”வாட் இஸ் யுவர் நேம்”னு கேப்பாரு , அதுக்கு நீ ”மை நேம் இஸ் jey” னு பதில்சொல்லுனு, நாலு வாட்டி சொல்லி மனப்பாடம் பண்ணச் சொல்லிருந்தாரு).. கடைசில அவரே என் பேரச் சொன்னாரு..ஹெட் மாஸ்டருக்கு புரிஞ்சி போச்சி..., தமிழ்ல கேக்க ஆரம்பிச்சாரு..., போகும்போது சரி இன்னிக்கி வேஷ்டி கட்டிட்டு வந்தே சரி , அடுத்து வரும் போது பேண்ட் சட்டை போட்டுட்டுதான் வரனும்...இங்க வேஷ்டி அலோவ்டு கிடையாது, ஆனா ஒன்னு போடுர ட்ரஸ்ல மட்டும் சென்னைப் பையனா மாறினாப் போதும்...மத்தபடி பழக்க வழக்கத்துல நீ பட்டிகாஅடாவே இரு, இங்கிருக்கிர பசங்க கூட சேந்து அவங்க மாதிரி மாறிடாதேன்னாரு.(அண்ணெ பெரிய ஸ்கூலா இருக்கு, எப்படி என்னச் சேத்தாங்கன்னு கேட்டேன், பாவம்... இதுக்குன்னு ஒருமாசம் அலஞ்சி ஸ்ட்ராங் ரெகமெண்டேசன் பிடிச்சிருக்காரு..)
பாவம் அவருக்குத் தெரியாது...இதுவரை எனக்கு பேண்ட் தைச்சதே இல்ல...போட்டு பழக்கமே இல்லைனு..., ஃபீஸ் 240 ரூவா, எங்கூர்ல சேந்திருந்தா 19 ரூவா 50 காசு..., வீட்ல இங்க எவ்வளவு ஃபீஸ் கட்டினீங்கன்னு கேட்டா 25 ரூவான்னு சொல்லிருடான்னு என்கிட்ட சொல்லிட்டாரு...
அன்னிக்கி சாயந்தரமே வெள்ளை சட்டை, காக்கி பேண்ட்(யூனிபார்ம்), புரசைவாக்கம் மதர்ஷால( அப்ப அது சென்னைல பேமஸாம்) எடுத்துகிட்டு, தண்டையார்பேட்டைல இருக்குற பாங்காங்க் டெய்லர் கடைக்கு போனோம் (ஏண்ணே பக்கத்துல அயனாவரத்துலேயே ஒரு கடையில துனி வாங்கி அங்கயே தைச்சிருக்கலாமேனு அண்ணங்கிட்ட கேட்டா, உனக்கு முதன்முதல்ல பேண்ட் தைக்கப் போரோம், அதான், பேமஸான, கடையில் வாங்கி, பேமஸான டெய்லர்ட்ட குடுக்குறேனு சொன்னாரு...
அங்க போனா அண்ணனும், டெய்லரும் ஏதோ பேசிட்டிருந்தாங்க...அரைமணி கழிச்சி வந்தாரு..எண்ணன்னே இவ்வளவு நேரமாச்சி, அளவெடுக்கவே இன்னும் வரலே, நம்மூர்ல இன்னேரம் தச்சே முடிச்சிருப்பாங்கன்னு சொன்னேன். அதுக்கு அவரு...அது இல்லைடா...அளவெடுக்க பேண்ட் போட்டிருக்கனுமாம்... அதான் உன் சைசுல தச்சி வச்ச பேண்ட் தேடிட்டிருக்காங்க... வந்ததும் உன்னை அத மாட்டச் சொல்லி அளவெடுப்பாங்கன்னாரு.....ஒரே ஷேமா போச்சி...ஒரு பேண்ட் தக்கிறதுல இவ்வளவு அக்கப்போரானு.
அந்த நாதாரிங்க ரெண்டு பேண்ட் ரெண்டு சட்டை தக்கிறதுக்கு நாலு நாள் எடுத்துகிட்டு அப்புறம் குடுத்தாங்க...எனக்குனா... முதன்முதலா பேண்ட் போடுர ஆர்வத்துல...டெய்லி எங்கண்ணா கிட்ட இன்னும் தக்கலையாமா, கேட்டியான்னு.. உயிரெடுத்துட்டேன்...
இபடித்தான்...சென்னை வந்து ஸ்கூல் சேந்து முதநாள் போனேன்...வேஷ்டில பாத்த கோஷ்டியெல்லாம் அசந்துருக்கும் போல...இப்பயும் என்ன பாத்து ஏதோ பேசிட்டிருந்தங்க...
சென்னை ஸ்கூல் அனுபவத்தை இன்னொருநாள் எழுதுறேன்...( நீங்க ஆவலோட எதிர் பாக்கலைனாலும்....)
டிஸ்கி : படிச்சிட்டு உங்க கருத்தயும் , ஒட்டையும் போட்ருங்க...