Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

August 01, 2013

மாபெரும் பதிவர் திருவிழா 2013- முக்கிய அறிவிப்பு

பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர்  சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியமான சந்திப்பாக அது அமைந்தது.அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பல பதிவர்கள் மீளவில்லை.அதற்குள் இந்த வருட பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.

சென்ற ஆண்டு இந்த மாபெரும் சந்திப்பை முன் நின்று நடத்திய அதே குழுதான் இந்த சந்திப்பையும் நடத்த முன் வந்துள்ளது.சென்ற ஆண்டைப் போலவே முகவும் சிறப்பாகவும், பதிவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இந்த சந்திப்பு அமைய குழு நண்பர்கள் வார வாரம் சந்தித்து ஆலோசனை செய்து திட்டங்களை வகுத்து அதன் பேரில் செயல்படுத்தி வருகிறோம்.இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பெற்று வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த சந்திப்பிற்கு ஏற்படுத்தப் பட்ட குழு விபரங்களை
இங்கே காணலாம்.

சென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த வருடம்  பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி
ஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.

இதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
நூல் வெளியீடு:

கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். அவ்வாறு நூல்
வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 05.08.2013 க்குள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.
(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது)



வருகைப் பதிவு:

கடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே  வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.
கீழ்க்காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
  -          ஆரூர் மூனா செந்தில்  
·         அஞ்சாசிங்கம் செல்வின்
·         சிவக்குமார் மெட்ராஸ்பவன்
·         பிரபாகரன் பிலாஸபி(சென்னை)
·         தமிழ்வாசி பிரகாஷ் மதுரை
·         சதீஷ் சங்கவி கோவை
·         வீடு சுரேஷ்குமார் திருப்பூர்
·         கோகுல் மகாலிங்கம் பாண்டிச்சேரி
·         தனபாலன் - திண்டுக்கல்

நன்கொடை:



இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள்  மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்..பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து  தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

இதுவரை சென்னை பதிவர் சந்திப்பிற்கு வர சம்மதம் தெரிவித்துள்ள பதிவர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.  எண்ணிக்கை கூடும்போது இப்பட்டியல் புதிதாக பகிரப்படும்:

                                                                 



ஜோதிஜி திருப்பூர்
கவிதைவீதி செளந்தர்
சரவணன்(ஸ்கூல் பையன்)
ரூபக்ராம்
வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
சசிகலா (தென்றலின் கவிதைகள்)
ரஹீம் கஸாலி
சிராஜுதீன்
காணாமல் போன கனவுகள் ராஜீ
கேபிள் சங்கர்
தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
தனபாலன் - திண்டுக்கல்
வீடு சுரேஷ்
சசிமோகன்
இரவுவானம் சுரேஷ்
நாய் நக்ஸ் நக்கீரன்
சின்ன சின்ன சிதறல்கள் அகிலா,
நிகழ்காலம் எழில்
கலாகுமரன்
கோவை ஆவி
உலகசினிமா பாஸ்கரன்
சுட்டிமலர்
கோவை கமல்
கோவை சதிஸ்
வெண்பா சுஜாதா
கோவை நேரம் ஜீவா
கோவை சக்தி
இப்படிக்கு இளங்கோ
ஒட்டக்கூத்தன்
வா.மு.முரளி
ஒட்டக்கூத்தன்
கோவை கோவி
சாமக்கோடங்கி பிரகாஷ்
கோவை ராமநாதன்
சதீஸ் சங்கவி
சிபி செந்தில்குமார்
வீரகுமார்
குருவை மாதேஸ்
குணா
சேலம் தேவா
கோகுலத்தில் சூரியன் வெங்கட்
கிராமத்துக் காக்கை
விஜயன் துரைராஜ் கடற்கரை
கருத்து கந்தசாமி
செல்லப்பா (‘இமயத்தலைவன்’) (‘செல்லப்பா தமிழ் டயரி’)
முகமது சபி சக்கரக்கட்டி
அ.சிவசங்கர்
தங்கம் பழனி
முனைவர் இரா.குணசீலன்
சைதை அஜீஸ்
குடந்தையூர் ஆர். வி. சரவணன்
முரளிக்கண்ணன் மதுரை
பெருங்குளம் ராமகிருஷ்ணன்
சசிகலா திருவண்ணாமலை
ஜீவன் சுப்பு,
சிவகாசிகாரன் ராம் குமார்,
சதீஸ் செல்லதுரை
கடல் பயணங்கள் சுரேஷ் குமார்
சுப்புரத்தினம்
ராகவாச்சாரி
ரேகா ராகவன்
ஆதிமனிதன்
சமீரா 
நம்பி
வழிப்போக்கன் ராஜேஷ்
பழனி கந்தசாமி(மன அலைகள்)
புலவர் இராமானுஜம்
சென்னை பித்தன்
கவிஞர் மதுமதி
பாலகணேஷ் (மின்னல்வரிகள்)
மோகன்குமார்(வீடு திரும்பல்)
கவியாழி கண்ணதாசன்
பட்டிகாட்டான் ஜெய்
டி.என்.முரளிதரன்
கே.ஆர்.பி.செந்தில்
ஆரூர் மூனா செந்தில்
அஞ்சாசிங்கம் செல்வின்
அரசன் ( கரைசேரா அலை)
சீனு (திடங்கொண்டுபோராடு)
பிலாசபி பிரபாகரன்
சிவகுமார்(மெட்ராஸ்பவன்)
 
 
மேலதிக தகவல்கள் அடுத்த பதிவில் வெளியாகும்..பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து  தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.(இதே பதிவை அப்படியே நகலெடுத்து பதியவும் செய்யலாம்)

August 25, 2012

பதிவர்கள் திருவிழா - இறுதி அழைப்பு + நேரடி ஒலிபரப்பு


26-08-2012 ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை சென்னையில் நடக்கும் "தமிழ் வலைப்பதிவர்கள் வலைக்குழுமம் " சந்திப்பு திருவிழா நேரடி ஒளிபரப்பைக்  காண கீழே உள்ள பிளே பட்டன அழுத்தவும்.( எச்சூஸ்மீ இப்ப இல்ல ஞாயிறு காலை 9 மணி..)







வணக்கம் நண்பர்களே... 



         இன்றைய இரவு விடிந்தால் போதும் காலை சென்னையில் தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கிவிடும்.இந்த விழாவிற்கு அயல்நாடுகளில் இருக்கும் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு கலந்து கொள்ள இயலாத பதிவர்களின் வாழ்த்துகள் வந்த வண்ணமே இருக்கிறது. இந்த விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் என்கிற வேட்கையை அது அதிகரிக்கிறது.

        இந்த மாபெரும் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத அயல்நாட்டு பதிவர்கள் கூட பதிவர் சந்திப்பை குறித்து நல்லவிதமாகவும் ஆதரவாகவும் எழுதி வருவது கண்டு மகிழ்ச்சியடைகிறோம்.நன்றி.

        பதிவர்களுக்கு உணவு உட்பட சில ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பதிவர்கள் எம்மை தொடர்பு   கொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்துமாறு கேட்டுக்கொண்டோம்.அதன்படி பதிவர்கள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.



மண்டபத்திற்கு வரும் வழி



சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் தோழர்கள்  அருகிலிருக்கும் பூங்கா நகர்(பார்க் டவுன்) சென்று எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம்.5 வது ரயில் நிறுத்தம் மேற்கு மாம்பலம்.

இதேபோல் செங்கல்பட்டு,தாம்பரத்திலிருந்து வரும் தோழர்கள் எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம். ஒரு ஆட்டோவைப் பிடித்து ஐந்து விளக்கு என்று சொல்லி அமர்ந்தால் 10 நிமிடங்களில் மண்டபத்தை அடையலாம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள்    17 என்று குறியிட்டு வடபழனி,சாலிகிராமாம்,பூந்தமல்லி,ஐயப்பன் தாங்கல் போன்ற ஊர்களின் பெயர்களைத் தாங்கி வரும் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.

இந்த நிறுத்தத்தில் இறங்கி  லிபர்டி தியேட்டர் செல்லும் வழியில் வந்தால் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபம் வரும். அதைத்தாண்டி வந்தால் ஐந்து விளக்குகளைக் கொண்ட மின்கம்பம் வரும். அதன் அருகிலேயே மணடபம் உள்ளது. 1 மணி நேரத்தில் மண்டபத்தை அடையலாம்.

தாம்பரத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் கோயம்பேடு மற்றும் அதன் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறி வடபழனி (சிக்னல்)காவல் நிலையம் நிறுத்ததில் இறங்கி சாலையைக் கடந்து வடபழனி ஆண்டவர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வருகின்ற பேருந்துகளில் ஏறி லிபர்டி அல்லது மீனாட்சி கல்லூரி நிறுத்தத்தில் இறங்கலாம்.(நீங்கள் எலெக்ட்ரிக் ரயிலில் வருவதே சாலச் சிறந்தது)1 மணி நேரம் ஆகலாம்.

பூந்தமல்லியிலிருந்து வருகை தரும் தோழர்கள் 25G,17E,17M என்று குறியிட்டு சென்ட்ரல் மற்றும் பிராட்வே செல்லும்  பேருந்துகளில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.(கோடம்பாக்கம் மூன்று பேருந்து நிறுத்தங்கள் கொண்டது)இந்த நிறுத்தத்திற்கு மீனாட்சி காலேஜ் என்ற பெயரும் உண்டு.1 மணி நேரம் ஆகலாம்.

கோயம்பேட்டிலிருந்து வரும் தோழர்கள் 27சி என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கலாம்.சாலிகிராமம் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதியில் இருந்து 12 சி என்ற பேருந்தில் ஏறினால் 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம்.15 நிமிடங்கள் ஆகும்.

தி. நகரிலிருந்து பேருந்தில் வருபவர்கள் போத்தீஸ் துணிக்கடையின் எதிர்புறம் இருக்கும் நிறுத்தத்தில் 12சி என்ற பேருந்து ஏறி 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம். 10 நிமிடங்கள் ஆகும்.

திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து வருபவர்கள்  25G என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.


  


பதிவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

1.அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும்.
2.மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்.
3.பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும்.
4.ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.



       இந்த சந்திப்பில் முக்கிய நிகழ்வாக கவியரங்கம் மற்றும் மூத்த பதிவர்களுக்கான பாராட்டு விழாவும் இருக்கிறது.இந்த இரண்டுக்குமான பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலை கீழே காணலாம்.





இந்த சந்திப்பில் கலந்து கொள்ள இயலாத பதிவர்களுக்காக நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.தங்கள் வலைப்பக்கத்தில் இருந்த படியே நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.அதற்கான நிரலை எப்படி இணைப்பது என்பதை இங்கேசென்று பார்த்துக்கொள்ளவும்.

வாருங்கள் நண்பர்களே... சென்னையில் சங்கமிப்போம்..



August 22, 2012

பதிவர்கள் பெயர் பட்டியல் -சென்னை சந்திப்பு


பதிவுலக நண்பர்களே, வணக்கம்.                                                               

வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்த பதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..

பதிவர் பெயர் விபரங்கள் :

17. கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
18. ரேகா ராகவன்,சென்னை
19. கேபிள் சங்கர்,சென்னை
20. உண்மைத்தமிழன் ,சென்னை
38. ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
39. தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
40. அகரன்(பெரியார் தளம்) சென்னை
49. ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
51. மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
52. குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
53. கார்க்கி(சாளரம்) சென்னை
54. விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
55. மென்பொருள்பிரபு,சென்னை
56. அமைதி அப்பா,சென்னை
57. ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
58. சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
59. கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
60. பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
61. ராமு,சென்னை
72. ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
73. தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
85. சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
86. கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
87. லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
88. தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
89. சைத அஜீஸ்,துபாய்
90. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
91. சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்

92.  மாலதி
93. பிரேம லதா
94. கௌதம்
95. சத்தியன்
97. அகிலா (கோயம்புத்தூர்) 
98. இரா.தெ.முத்து(திசைச்சொல்)
99. வடிவேலன். ஆர்
100. ஃபாருக் முகம்மது (எண்ணங்களுக்குள் நான் )
101. ஞ்சை குமணன் (புன்னகை மன்னன்) - தஞ்சாவூர்
102. மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு
103. சினேகன்அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்
104. கேணக்கிருக்கன் லெனின்( கீரமங்கலம்)
105.  Puratchi Mani
106. பாண்டியன்ஜி(வேர்கள்)
107.   கிராமத்து காக்கை
108. ராஜா (அடங்காத அக்கப்போரு
109. உங்களுள் ஒருவன் (இந்த உலகம் எங்கே செல்கிறது??????????)
110. சாம் மார்த்தாண்டன்(பக்கி லீக்ஸ்)
111. குருபிரசாத் - சென்னை
112. உளவாளி 
113. ஷர்புதீன்(வெள்ளிநிலா)
114. பாலராஜன்கீதா
115. பொன். வாசுதேவன்(அகநாழிகை )
116. சங்கர்(தமிழ்டேலி)


கவியரங்கில் பங்குபெறுவோர்

1.  சசிகலா(தென்றல்)சென்னை
3.  கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
4.  சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
9.  மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
10.சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
11.தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்


நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பெயர் குடுக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

மதுமதி - 9894124021
பாலகனேஷ் - 7305836166
சிவக்குமார் - 9841611301


மின்னஞ்சல் முகவரி

kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails