26-08-2012 ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை சென்னையில் நடக்கும் "தமிழ் வலைப்பதிவர்கள் வலைக்குழுமம் " சந்திப்பு திருவிழா நேரடி ஒளிபரப்பைக் காண கீழே உள்ள பிளே பட்டன அழுத்தவும்.( எச்சூஸ்மீ இப்ப இல்ல ஞாயிறு காலை 9 மணி..)
வணக்கம் நண்பர்களே...
இன்றைய இரவு விடிந்தால் போதும் காலை சென்னையில் தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கிவிடும்.இந்த விழாவிற்கு அயல்நாடுகளில் இருக்கும் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு கலந்து கொள்ள இயலாத பதிவர்களின் வாழ்த்துகள் வந்த வண்ணமே இருக்கிறது. இந்த விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் என்கிற வேட்கையை அது அதிகரிக்கிறது.
இந்த மாபெரும் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத அயல்நாட்டு பதிவர்கள் கூட பதிவர் சந்திப்பை குறித்து நல்லவிதமாகவும் ஆதரவாகவும் எழுதி வருவது கண்டு மகிழ்ச்சியடைகிறோம்.நன்றி.
பதிவர்களுக்கு உணவு உட்பட சில ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பதிவர்கள் எம்மை தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்துமாறு கேட்டுக்கொண்டோம்.அதன்படி பதிவர்கள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.
மண்டபத்திற்கு வரும் வழி
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் தோழர்கள் அருகிலிருக்கும் பூங்கா நகர்(பார்க் டவுன்) சென்று எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம்.5 வது ரயில் நிறுத்தம் மேற்கு மாம்பலம்.
இதேபோல் செங்கல்பட்டு,தாம்பரத்திலிருந் து வரும் தோழர்கள் எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம். ஒரு ஆட்டோவைப் பிடித்து ஐந்து விளக்கு என்று சொல்லி அமர்ந்தால் 10 நிமிடங்களில் மண்டபத்தை அடையலாம்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் 17 என்று குறியிட்டு வடபழனி,சாலிகிராமாம்,பூந்தமல்லி ,ஐயப்பன் தாங்கல் போன்ற ஊர்களின் பெயர்களைத் தாங்கி வரும் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.
இந்த நிறுத்தத்தில் இறங்கி லிபர்டி தியேட்டர் செல்லும் வழியில் வந்தால் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபம் வரும். அதைத்தாண்டி வந்தால் ஐந்து விளக்குகளைக் கொண்ட மின்கம்பம் வரும். அதன் அருகிலேயே மணடபம் உள்ளது. 1 மணி நேரத்தில் மண்டபத்தை அடையலாம்.
தாம்பரத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் கோயம்பேடு மற்றும் அதன் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறி வடபழனி (சிக்னல்)காவல் நிலையம் நிறுத்ததில் இறங்கி சாலையைக் கடந்து வடபழனி ஆண்டவர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வருகின்ற பேருந்துகளில் ஏறி லிபர்டி அல்லது மீனாட்சி கல்லூரி நிறுத்தத்தில் இறங்கலாம்.(நீங்கள் எலெக்ட்ரிக் ரயிலில் வருவதே சாலச் சிறந்தது)1 மணி நேரம் ஆகலாம்.
பூந்தமல்லியிலிருந்து வருகை தரும் தோழர்கள் 25G,17E,17M என்று குறியிட்டு சென்ட்ரல் மற்றும் பிராட்வே செல்லும் பேருந்துகளில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.(கோடம்பாக்கம் மூன்று பேருந்து நிறுத்தங்கள் கொண்டது)இந்த நிறுத்தத்திற்கு மீனாட்சி காலேஜ் என்ற பெயரும் உண்டு.1 மணி நேரம் ஆகலாம்.
கோயம்பேட்டிலிருந்து வரும் தோழர்கள் 27சி என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கலாம்.சாலிகிராமம் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதியில் இருந்து 12 சி என்ற பேருந்தில் ஏறினால் 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம்.15 நிமிடங்கள் ஆகும்.
தி. நகரிலிருந்து பேருந்தில் வருபவர்கள் போத்தீஸ் துணிக்கடையின் எதிர்புறம் இருக்கும் நிறுத்தத்தில் 12சி என்ற பேருந்து ஏறி 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம். 10 நிமிடங்கள் ஆகும்.
திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து வருபவர்கள் 25G என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.
பதிவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?
1.அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும்.
2.மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்.
3.பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும்.
4.ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.
இந்த சந்திப்பில் முக்கிய நிகழ்வாக கவியரங்கம் மற்றும் மூத்த பதிவர்களுக்கான பாராட்டு விழாவும் இருக்கிறது.இந்த இரண்டுக்குமான பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலை கீழே காணலாம்.
இந்த சந்திப்பில் கலந்து கொள்ள இயலாத பதிவர்களுக்காக நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.தங்கள் வலைப்பக்கத்தில் இருந்த படியே நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.அதற்கான நிரலை எப்படி இணைப்பது என்பதை இங்கேசென்று பார்த்துக்கொள்ளவும்.
வாருங்கள் நண்பர்களே... சென்னையில் சங்கமிப்போம்..
21 comments:
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் நண்பரே!
நாளை சந்திப்போம் நண்பரே..
சென்னையில் சங்கமிப்போம் வாருங்கள் பதிவர்களே..
விழா சிறப்புற வாழ்த்துகள், டோஹாவிலிருந்து கும்மாச்சி.
நாளை சந்திப்போம்
நாளை நமதே
அழைப்பு நன்றாக உள்ளது,சிறப்புற வாழ்த்துக்கள்,
இறுதி அழைப்பு என்பதை தீர்வான அழைப்பு, நிச்சயக்கப்பட்ட அழைப்பு என்பது போல மாற்றலாம், ஹி..ஹி சிலர் நேர்மறையாக இருக்க வேண்டும் என விரும்பலாம் இல்லையா?
அருமையான நிகழ்வு சிறப்புடன் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.
ஒரு ஆட்டோவைப் பிடித்து ஐந்து விளக்கு என்று சொல்லி அமர்ந்தால் 10 நிமிடங்களில் மண்டபத்தை அடையலாம்.//
ஆட்டோவுக்கு யார் காசு கொடுப்பாங்க ஆபீசர்?
1 மணி நேரத்தில் மண்டபத்தை அடையலாம்.//
பயங்கர ட்ராபிக் இருந்தாலுமா ஆபீசர்?
என்னையா இது கொடுமையா இருக்கு செம்பாக்கத்தில் இருந்து எப்படி வரணும்ன்னு சொல்லவே இல்லை. செம்பாகக்த்தில் இருந்து வர்றவங்க எல்லாம் மனுசங்க இல்லியா?
நேரடி ஒலிபரப்பு//
ஒளிபரப்பு இல்லியா?
வர முடியா ஜீவன் ஒன்று சில கோரிக்கைகளை வைக்கிறது...உங்களால் நிறைவேற்ற முடியுமா?http://tamilmottu.blogspot.in/2012/08/blog-post.html
// வரலாற்று சுவடுகள் said...
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் நண்பரே! //
நன்றி...
// வேடந்தாங்கல் - கருண் said...
நாளை சந்திப்போம் நண்பரே.. //
வாருங்கள்..
//மதுமதி said. //
ஹிஹி
// r.v.saravanan said...
நாளை சந்திப்போம்
நாளை நமதே //
இன்றே சந்தித்தாகிவிட்டது... சந்தித்ததில் மகிழ்ச்சி...
// Ayesha Farook said...
அருமையான நிகழ்வு சிறப்புடன் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.//
நன்றி சகோ..
// ஆட்டோவுக்கு யார் காசு கொடுப்பாங்க ஆபீசர்? //
போலீசுக்கூ பிரீ கிடையாதா???...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... //
டேய் விடுடா... ஏண்டா.. ஏன்...
// கும்மாச்சி said...
விழா சிறப்புற வாழ்த்துகள், டோஹாவிலிருந்து கும்மாச்சி. //
அண்ணாச்சி நன்றி... அடுத்த வருசம் நீங்கதா முன்னே நிக்கனும்....
பதிவர்களின் கூட்டத்தில் ஒரு புதிய ஆடு
http://rajaavinpaarvayil.blogspot.com
Post a Comment