சில நேர்படியான விஷயங்கள் நம் தலைமுறை பற்றி...(70 லிருந்து 80 குல் பிறந்தவர்கள்)
முதலும் கடைசியும் ..சில விஷயங்களில் இந்த தலைமுறை தான்
நாம் தான் தெருவில் இருந்து விளையாடிய கடைசி தலைமுறை..அதே சமயம் நாம் தான் விடியோ விளையாட்டு, கார்ட்டூன் , ஆகிய பார்த்த முதல் தலைமுறை..
வானொளியில் கேட்ட பாடலை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்ததும், அதே போல் வாக்மென்,சாட் ரூம் சந்தித்ததும் நாம்தான்
ஒரு வி சி ஆரை இயக்க தெரிந்த தலைமுறை
நாம் மால் குடி டேஸ், டாம் அண்ட் ஜெர்ரி, ஹீ மேன், டார்ஜான், பார்த்த தலைமுறை
ஒரிஜினலாக தூர்தர்ஷனில் வந்த இராமாயணம் மஹாபாரதம் கண்ட தலைமுறை
காரில் சீட் பெல்ட் இல்லாது ப்யணித்த தலைமுறை
கை பேசி இல்லாமலும் வாழ்ந்த தலைமுறை
நமக்கு ப்ளே ஸ்டேஷ்ன், 99 சானல்கள், ப்ளாட் ஸ்கீரின்,எம் பி 3 ஐ பாட்,கம்யூட்டர்,இண்டர் நெட் இல்லாமல் போனாலும், நாம் தான் கடைசியாக ஒம் வொர்க், டைரியில் பெற்றோர் கையெழுத்து, நூலகத்தில் நேரம் செலவிட்டது, பள்ளீக்கு கட் அடித்து கிரிக்கெட் ஆடியது..