பதிவெழுதி நீண்ட நெடிய நாட்கள் ஆகிவிட்டது...கிட்டத்தட்ட எனக்கு எனது வலைப்பூவின் வழித்தடம் மறந்துபோன நிலையில், யோவ் அண்ணே , எத்தன நாள்தான் ஒன்னோட பிளாக்குக்கு பொம்மை துப்பாக்கிய கைல ஏந்திகிட்டு காக்காவுக்கு காவ காக்கிறது இனிமேல் முடியாது வந்து தூசி தட்டி குடி வந்துடு என்று நம்ம சிரிப்பு போலீஸ் கால்ல விழுந்த கதறியதாலும், ( பாவம் அடுத்து டாக்குடர் படம் வேற வருதாம், எங்க இவன் துப்பாக்கி ஏந்தி நிக்கிற ஸ்டைலான போஸ்-ஸ யாரவது கிளிக்கு பண்ணி ஊரெல்லாம் விளம்பர போஸ்டர் ஒட்டிருவாய்ங்களோனு இவன் கவலை....டேய் டேமேஜரு உனக்கு தெரியாம ஸ்டில் எடுத்து வச்சிருக்கேண்டியோவ்....)
மற்றும் பதிஉலகின் அண்ணன்கள்,தம்பிகள்,மாமஸ்கள், மச்சிகள், நண்பர்கள், மதிப்பிற்குறிய பெரியவர்கள் ( இதில் சென்னை பித்தன் அய்யாவும், புலவர் ராமாநுஜம் அய்யா அவர்களும் சேர்த்தி...) மற்றும் அம்மனிகள்(இது சும்மா பில்டப்புக்கு) சிலபேரும் கேட்டுக்கொண்டதற்கு மதிப்பளித்து, மரியாதை கொடுத்து....த்த்தட்....சரி சாமிகளா நிறுத்திக்கிறேன் அதுக்காக கல்லெறியாதீக...
இடைப்பட்ட காலத்தில் வேலைபளு மற்றும் நண்பனை இழந்தது போன்ற காரணங்களால் உள்ளத்தில் ”ஜாலி” மூட் காணாமல் போய்விட்டது அதனால் பதிவுலகத்திற்கு சிறிது!!!! இடைவெளி....
இருந்தாலும் பதிவுலகத்தில் கிடைத்த நண்பர்களின் தொடர்பு... மின்னஞ்சல், அலைபேசி அழைப்பு என்று தொடர்ந்து கொண்டிருந்ததில் ஆனந்தம்.....
எனது வருகையின்(மறு) முதல் பதிவாக சென்னையில் நாம் நடத்தவிருக்கும் “தமிழ் வலைபதிவர்கள் திருவிழாவிழா” விற்கான அழைப்பிதல் இணைத்து , பட்டிகாட்டில் பிறந்து அதன் புழுதியில் புரண்டு, எருமை மாட்டில் சவாரி செய்து........... வளர்ந்திருந்தாலும் தற்போது சென்னைப் பட்டணத்தில் குப்பைக் கொண்டிருப்பதால், தற்போதைய சென்னை வாசி(தமிழ்வாசி என்னை மதுரை கிளையிலும் கூட்டு சேர்த்துக்கப்பா) என்ற முறையில் உலகத் தமிழ் பதிவர்கள் அனைவரையும் சென்னை வந்து உங்களின் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு, எங்களுக்கும் உங்களை விருந்தோம்ப ஒரு வாய்ப்பு அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
இந்தப் பதிவில் இன்னும் தொடர்ந்து நீட்டிக் கொண்டிருந்தால் , எலேய் நீ “உண்மைத்தமிழன் அண்ணன்” அவர்களோட தம்பியா என்று கேட்பவர்க்கு பதில் சொல்லி முடியாது என்பதால், எனது வியாக்கியானத்தை இத்தோடு நிறுத்திக் கொண்டு மீண்டும் ஒரு முறை தமிழ் பதிவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 26 ஞாயித்துக் கிழமை சென்னைக்கு படையெடுத்து (அன்பெனும் ஆயுதம் தாங்கி) வருமாறு வேண்டுகிறேன்.
வருகை தரும் நண்பர்கள் வருகையை கீழ்கண்ட மின்னஞ்களில் தொடர்புகொண்டு தெரிவிப்பீர்களேயானால், உணவு ஏற்பாட்டை கவனிக்கும் குழு நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும், மேலும் வெளியூர் நண்பர்கள் சனிக்கிழமை இரவு தங்குவதற்கோ அல்லது ஞாயிறு காலை சென்னை வந்தவுடன் ரெஃபெரெஸ் ( மக்களே இதற்கு தமிழ் வார்த்தை சட்டென்று என் மனதில் உண்மையிலேயே உதிக்கவில்ல ..... நண்பர்கள் யாராவது பின்னூட்டத்தில் தெரிவித்தால் நலம், எனக்குத் தெரிந்து சில நண்பர்கள் ஆங்கிலத்தில் இருந்தால் வசதியாக புரிந்துகொள்வதில்லை) செய்து கொள்ள விரும்பினால் முன் கூட்டியே மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்கள்:
1. திரு. மதுமதி - kavimathumathi@gmail.com
2. திரு பாலகனேஷ் - bganesh55@gmail.com (இதில் இருக்கும் “55” நொம்ப முக்கியம் அமைச்சர்களே)
3. திரு சிவக்குமார் - madrasninnal@gmail.com (இவர் பெறந்தது , உருண்டது,வளந்தது,எல்லாம் சென்னைதாங்க)
லாஸ்ட் பட் நாட் லீஸ்டு (இங்கிலீஸுங்கோவ்வ்வ்வ்...)
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உயர்திரு மற்றும் மாண்புமிகு
பட்டிகாட்டான் - pattikaattaan@gmail.com
இந்த பதிவில் நோ முஸ்கி, இஸ்கி மற்றும் டிஸ்கி........

விழா அழைப்பிதழ்

நன்றி!!!