Showing posts with label பிரபலபதிவர். Show all posts
Showing posts with label பிரபலபதிவர். Show all posts

September 03, 2012

பிரபலப்பதிவர் என்பவர் யார் ??????????????

முஸ்கி :  இங்க ஒரு வாரமா யார் பிரபல பதிவர்னு கேள்வி கேட்டுகிட்டு பலபேர் பல பதிவுகள் போட்டு ஒரு ரவுண்ட் வந்தாச்சு, நீ எதுக்கு அதப்பத்தி பதிவு போடலைனு 342 போன் கால்ஸ், 482 மின்னாஞல்ஸ், 34 எஸ்எம்எஸ்(கவெர்ன்மெண்ட் ஒரு சதி அதனாலதான் கம்மியா வந்திருக்கு) மூலம்(அந்த மூலம் இல்லைப்பா) தொல்லை குடுத்ததால வேறு வழியில்லாம இந்த பதிவு.......


 எனக்கு முதல் பதிவு போடுரதுக்கு  முன்னாடியே 30 பேர் ஃபாலோயர்ஸ், அதுல 12 பேர அவங்க கமெண்ட்பாக்ஸ்ல வந்து கண்டபடி கமெண்ட்ஸ் எழுதுவேனு மிரட்டியே ஃபாலோயர் ஆக்கினேன், முதல் பதிவுல அ - ஃ + க் - ன்  ஆக 31 எழுத்தை மட்டும் எழுதுனதுக்கு 13 கமெண்ட்ஸ். 2வதுக்கு 93 கமெண்ட்ஸ் ...

இதுவரை 31 பதிவு, 3 ஆயிரத்து 200க்கும் மேல கமெண்ட்ஸ், ஆவரேஜா  ஒவ்வொரு பதிவுக்கும் 100 கமெண்ட்ஸுக்கும் மேலே....., இத்தனை சாதனை பண்ணுன நான் பிரபல பதிவர் இல்லியா????

இதுல எலக்கிய பதிவுகள் இருக்கான்ற கேள்வி சில மேன்மக்களுக்கு இருக்கும், அந்த மேன்மக்கள் அந்த கேள்விய கீழே இருக்கிற கருத்துப் பெட்டில கேட்டு விளக்கமான பதில்கள் பெற்று இன்புறுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சரி விடுங்க சில டொக்கர்ஸ்(நன்றி: ஜி+ டைனோஜி அண்ணன் அவர்கள்) தான் என்னை திட்டமிட்டு புறக்கணிக்குறாங்கன்னா கூடவே இருக்கிற நண்பர்களும் என்னை பிரபல பதிவர்னு சொல்லாதது எனக்கு மிகுந்த மன உளச்சலை தந்திருக்குனு இங்க சுட்டிக்காட்ட விரும்புகிறேன்... டேய் நண்பர்களா நல்லாருங்கடா..


கூட இருக்கிற நண்பர்கள்கூட என்னை பிரபல பதிவர்னு சொல்லாததை கண்டிச்சுதான் 2 வருசம் பதிவுலகத்துலேர்ந்து வெளிநடப்பு செஞ்சேன்” 

இனியும் என்னை பிரபல பதிவர்னு எல்லாரும் ஏத்துக்கலைனா.... இந்த வாட்டி வெளிநடப்பு போராட்டம் இல்லை உள்ளிருப்பு மற்றும் கம்பு சுத்தும் போராட்டம்தான் “
ஆகவே பதிவுலக நண்பர்களே.... நீங்கள் யாரும் என்னை பிரபல பதிவர் என்று சொல்லி புகழாததால் இப்போதைக்கு எனக்கு நானே “பிரபல பதிவர்” என்ற பட்டத்தை வழங்கிக் கொள்கிறேன்.

எச்சரிக்கை டிஸ்கி : என்னை தொடர்ந்து பிரபல பதிவர் என்று சொல்லாமல் புறக்கணித்தால், அடுத்து  “டொக்கர்ஸ்” என்ற பட்டத்தையும், எனக்கு நானே கொடுத்துக் கொண்டு என் புரட்சியை ஜி+-ல் தொடர்வேன் என்பதையும் இங்கே இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்பெசல் டிஸ்கி : இந்த பதிவிலிருந்து நண்பர்கள் கமெண்ட் பாக்ஸில் கும்மி அடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

முக்கியமான டிஸ்கி :    அருமை நண்பர்களே,  கும்மி அடிக்கும்போது முகம் சுளிக்கும் வார்த்தைகளை தவிர்க்குமாறு வேண்டி விரும்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு சகோதரி செல்லமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கையில் சூலத்தை ஏந்துமுன் நாம் மாறிக்கொள்வோம்.
        மற்றபடி இது ஓபன் கிரவுண்ட் நோ அதர் ரெஸ்ட்ரிக்ஷன் யுவர் ஆனர்.........., ஆங் சொல்ல மறந்துட்டேன்.... தனிமனிதனின் தனிப்பட்ட வாழ்க்கயை விமர்சித்தல், ஜாதி மத கருத்துக்கள் இவற்றையும் தவிர்க்க வேண்டுகோள்.

உங்கள் புரிதலுக்கு அட்வான்ஸ் நன்றி.


LinkWithin

Related Posts with Thumbnails