ஸ்காட் கெல்பி(SCOT KELBY) சார்பாக உலகம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற போட்டோ வாக்(Photo walk) மீட்டிங் கடந்த 13-10-2012, சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது.
சென்னை நிகழ்ச்சியை திரு நந்தகுமார் என்ற சென்னை நண்பர் ஒருங்கினைத்திருந்தார். உலகம் முழுக்க 1300 க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 32,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்வாகும். ஒரு குழுமத்திற்கு 50 நபர்கள்தான் கலந்து கொள்ள முடியும். அதை தாண்டினால் அடுத்த குழுவாகதான் செயல்படமுடியும்.
சென்னை போட்டோவாக் எங்கு நடத்தலாம் என்று பதிவு செய்த உறுப்பினர்களிடம் ஆலோசனைகள் கேட்டு முடிவில் பெசண்ட்நகர் பீச்சில், அன்று நடைபெற்ற ஃப்ரிஸ்பீ டோர்னமெண்ட் மற்றும் கடற்கரை வட்டாரத்தில், புகைப்படங்கள் எடுப்பது பின் சற்று தூரத்தில் இருக்கும் உடைந்த பாலம்(broken bridge) சென்று அதன் சுற்றுபுரங்களில் படங்கள் எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
பதிவு செய்த பலரும் எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் எனவே , கரைசேரா அலைகள் அரசனிடம் கேட்டு, அவருக்கும் இதில் ஆர்வம் இருப்பதால்அவரையும் இதற்கான வலைதலத்தில் பதியச் சொல்லி கூடவே அழைத்துச் சென்றேன்.
இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. முதன் முதலில் அன்றைய தினத்தின் காலை நிகழ்வுகள் எல்லாவற்றையும், ரசனையுடன் படம் பிடித்தேன். கீழே நான் எடுத்த புகைப்படங்க சில உங்கள் பார்வைக்காக பகிர்ந்துள்ளேன்.
போட்டோக்-கில் கலந்து கொண்ட அனைவரும் சேர்ந்து குழுவாக எடுத்த போட்டோ. மூன்றுபேர் அவசரமாகெ சென்று விட்டதால் அவர்கள் இதில் இல்லை.
சூர்யோதயம். கொஞ்ச தாமதித்து சென்றதாலும். மேகமுட்டம் இருந்ததாலும் சரியான சாட் கிடைக்கவில்லை.
ஸ்டண்ட் கிலாஸ் நடந்துகொண்டிருந்த இடத்திற்கு சென்று சம்மர்-சால்ட் பண்ணும் போது நான் எடுத்த போட்டோ. ம்ருபடி பண்னும்போது இன்னும் நல்ல ஸ்டில் எடுக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் கிளாஸ்முடிந்து விட்டது என சொல்லி போய் விட்டார்கள். நான் தான் தாமதமாக சென்றிருக்கிறேன்.
ஒரு அம்மனி நாயை இல்லை சரியாகச் சொன்னால் அந்த அம்ம்னியைதான் இந்த நாய் இழுத்துகொண்டு சென்றது. கடல் அலையில் அடித்து வந்த தேங்காய் ஒன்றை ஓடிச் சென்று கவ்விக் கொண்டு வந்தது..... நான் அதை கவனித்து ஓடிச் சென்று படம் எடுப்பதற்கும் கரைஏ\றி வந்துவிட்டது.
அங்க ஒரு இளவட்டம் பல்டி அடித்து விலயாடியபோது எடுத்த படம்.
இந்த நாய் தகரத்திற்கு அறுகில் செல்லும்போதே எனது உள்ளுணர்வு அது சுச்சா தான் போகப்போகிரது என்று உணர்த்தியதால் வேக வேகமக இந்த சாட் எடுத்தேன். 10 செகண்ட் தாமதித்திருந்தால் சாதாரணமாக நடக்கும் ஸ்டில்தான் கிடைத்திருக்கும்.
இது அங்கே கிரிக்கெட் விளையடிக் கொண்டிருந்தவர்களை எடுத்தது. கிட்டத்தட்ட 5 சாட்களுக்குப் பிரகுதான் அந்த பேட்டில் பட்ட பாலுடன் ஸ்டில் கிடத்தது.
பக்கத்தில் ப்ணக்கார குழந்தகள் ஸ்கேட்டிங் செண்ரு கொண்டிருந்தார்கள். அவர்களை மாஸ்டர் மற்றும் பெற்றோர்கள் ஏன்..ஒழுங்கப் போ, பேலன்ஸ் பண்ணிபோ என்று அரட்டிக் கொண்டு இருக்கையில் பத்தடி தூரத்தில் ஜாலியாக கட்டிப்புரளும் பசங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு வெட்டவெளியில் வாழ்க்கைநடத்தும் இவர்கள். படம் எடுத்ததை காட்டினேன் ரொம்ப சந்தோசம் அவர்களுக்கு. அதில் அந்த பையன்கள் எப்படி கேமராவில் படம் தெரிகிரது என்று துளைத்து விட்டார்கள். என்னால் சரியாக விளக்க முடியாமல். அது அப்படித்தான் என்ற ரீதியில் பதில் சொல்லி வந்தேன்.
இது உடந்த பாலம் அருகே மறுகரையில் உள்ள கட்டிடம்.
இந்தகட்டிடமும் உடந்த பாலம் அருகே உள்ளது
