October 15, 2012

சென்னை போட்டோ-வாக் (Worldwide Photo walk - Chennai)
            ஸ்காட் கெல்பி(SCOT KELBY) சார்பாக உலகம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற போட்டோ வாக்(Photo walk) மீட்டிங் கடந்த 13-10-2012, சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது.


Worldwide Photo Walk
  சென்னை நிகழ்ச்சியை திரு நந்தகுமார் என்ற சென்னை நண்பர் ஒருங்கினைத்திருந்தார்.  உலகம் முழுக்க 1300 க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 32,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்வாகும். ஒரு குழுமத்திற்கு 50 நபர்கள்தான் கலந்து கொள்ள முடியும். அதை தாண்டினால் அடுத்த குழுவாகதான் செயல்படமுடியும். 

     சென்னை போட்டோவாக் எங்கு நடத்தலாம் என்று பதிவு செய்த உறுப்பினர்களிடம் ஆலோசனைகள் கேட்டு முடிவில் பெசண்ட்நகர் பீச்சில், அன்று நடைபெற்ற ஃப்ரிஸ்பீ டோர்னமெண்ட் மற்றும் கடற்கரை வட்டாரத்தில்,  புகைப்படங்கள் எடுப்பது பின் சற்று தூரத்தில் இருக்கும் உடைந்த பாலம்(broken bridge) சென்று அதன் சுற்றுபுரங்களில் படங்கள் எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

    பதிவு செய்த பலரும் எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் எனவே , கரைசேரா அலைகள் அரசனிடம் கேட்டு, அவருக்கும் இதில் ஆர்வம் இருப்பதால்அவரையும் இதற்கான வலைதலத்தில் பதியச் சொல்லி கூடவே அழைத்துச் சென்றேன்.

   இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. முதன் முதலில் அன்றைய தினத்தின் காலை நிகழ்வுகள் எல்லாவற்றையும், ரசனையுடன் படம் பிடித்தேன். கீழே நான் எடுத்த புகைப்படங்க சில உங்கள் பார்வைக்காக பகிர்ந்துள்ளேன்.


              போட்டோக்-கில் கலந்து கொண்ட அனைவரும் சேர்ந்து குழுவாக எடுத்த     போட்டோ. மூன்றுபேர் அவசரமாகெ சென்று விட்டதால் அவர்கள் இதில் இல்லை. 
சூர்யோதயம். கொஞ்ச தாமதித்து சென்றதாலும். மேகமுட்டம் இருந்ததாலும் சரியான சாட் கிடைக்கவில்லை. 


    ஸ்டண்ட் கிலாஸ் நடந்துகொண்டிருந்த இடத்திற்கு சென்று சம்மர்-சால்ட் பண்ணும் போது நான் எடுத்த போட்டோ. ம்ருபடி பண்னும்போது இன்னும் நல்ல ஸ்டில் எடுக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் கிளாஸ்முடிந்து விட்டது என சொல்லி போய் விட்டார்கள். நான் தான் தாமதமாக சென்றிருக்கிறேன்.


ஒரு அம்மனி நாயை  இல்லை சரியாகச் சொன்னால் அந்த அம்ம்னியைதான் இந்த நாய் இழுத்துகொண்டு சென்றது. கடல் அலையில் அடித்து வந்த தேங்காய் ஒன்றை ஓடிச் சென்று கவ்விக் கொண்டு வந்தது..... நான் அதை கவனித்து ஓடிச் சென்று படம் எடுப்பதற்கும் கரைஏ\றி வந்துவிட்டது. 


அங்க ஒரு இளவட்டம் பல்டி அடித்து விலயாடியபோது எடுத்த படம்.


 இந்த நாய் தகரத்திற்கு அறுகில் செல்லும்போதே எனது உள்ளுணர்வு அது சுச்சா தான் போகப்போகிரது என்று உணர்த்தியதால் வேக வேகமக இந்த சாட் எடுத்தேன். 10 செகண்ட் தாமதித்திருந்தால் சாதாரணமாக நடக்கும் ஸ்டில்தான் கிடைத்திருக்கும்.


இது அங்கே கிரிக்கெட் விளையடிக் கொண்டிருந்தவர்களை எடுத்தது. கிட்டத்தட்ட 5 சாட்களுக்குப் பிரகுதான் அந்த பேட்டில் பட்ட பாலுடன் ஸ்டில் கிடத்தது.


 பக்கத்தில் ப்ணக்கார குழந்தகள் ஸ்கேட்டிங் செண்ரு கொண்டிருந்தார்கள். அவர்களை மாஸ்டர் மற்றும் பெற்றோர்கள் ஏன்..ஒழுங்கப் போ, பேலன்ஸ் பண்ணிபோ என்று அரட்டிக் கொண்டு இருக்கையில் பத்தடி தூரத்தில் ஜாலியாக கட்டிப்புரளும் பசங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு வெட்டவெளியில் வாழ்க்கைநடத்தும் இவர்கள். படம் எடுத்ததை காட்டினேன் ரொம்ப சந்தோசம் அவர்களுக்கு. அதில் அந்த பையன்கள் எப்படி கேமராவில் படம் தெரிகிரது என்று துளைத்து விட்டார்கள். என்னால் சரியாக விளக்க முடியாமல். அது அப்படித்தான் என்ற ரீதியில் பதில் சொல்லி வந்தேன்.

 இது உடந்த பாலம் அருகே மறுகரையில் உள்ள கட்டிடம்.


இந்தகட்டிடமும் உடந்த பாலம் அருகே உள்ளது

மொத்தம் சுமார் 120 படங்கள். அதிகமான படங்கள் இங்கே போட்டால் வலை தளம் ஓபன் ஆவதில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம் என்பதால் இங்கே சில பங்கள் மட்டும் பகிர்ந்துள்ளேன்.


39 comments:

Avargal Unmaigal said...

கடைசி இரண்டு படமும் மிக அருமை. அப்ப நான் சென்னைக்கு வந்தால் என்னை வைச்சு அழகாக என்னை படம் எடுப்பிங்கதானே

முத்தரசு said...

நன்றி பங்காளி

பசங்க கட்டி புரளுவது என்னவோ என்னை ஈர்த்தது

பட்டிகாட்டான் Jey said...

// Avargal Unmaigal said... //

கண்டிப்பாக போட்டோ எடுக்கிறேன். அதை ப்ரேம் போட்டும் குடுக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)))

பட்டிகாட்டான் Jey said...

@ முத்தரசு

வருகைக்கு நன்றி. சம்மர் சால்ட் சாட், அந்த க்ரிக்கெட் பால் சாட்தான் கஷ்டப்பட்டேன். மீதி அந்தந்த செகண்ட் கிளிக் பண்ணிட்டே போனது :-)))
கருத்துக்கு நன்றி. :-)))

patmanathan.v said...

supperb.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொத்தம் சுமார் 120 படங்கள். அதிகமான படங்கள் இங்கே போட்டால் வலை தளம் ஓபன் ஆவதில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம் என்பதால் இங்கே சில பங்கள் மட்டும் பகிர்ந்துள்ளேன்./////

நல்ல வேள.......!

பட்டிகாட்டான் Jey said...

// patmanathan.v said... //

முதல் வருகைக்கு நன்றி

நீங்க பிளாக் எழுதுறது தெரியாம போச்சே... பேஸ்புக் மட்டும்தான் பார்த்துட்டிருந்தேன்.... இனிமே பிலாக் பக்கமும் வறேன் :-))))

வெளங்காதவன்™ said...

ஆமா, அந்த ஓரமா சரக்கைப் போட்டுட்டு இருந்தனே! அந்த போட்டோ போடலியா?

:-)

பட்டிகாட்டான் Jey said...

// நல்ல வேள.......! //

வந்து படம் நல்லா எடுத்திருக்கே...சூப்பர் இப்படி ஏதும் சொல்ரானா பாறேன்....வெங்காயம்...

அரசன் சே said...

அண்ணே வணக்கம் ..
நல்ல நிகழ்வு அண்ணே ..

அரசன் சே said...

அந்த புறாக்கள் இரண்டையும் போடுவிர்கள் என்று நம்பி ஏமாந்து போயிட்டேன்

பட்டிகாட்டான் Jey said...

// வெளங்காதவன்™ said...
ஆமா, அந்த ஓரமா சரக்கைப் போட்டுட்டு இருந்தனே! அந்த போட்டோ போடலியா? //

எடுத்திருக்கேன். சரக்கடிச்சிட்டு...அந்த யுனிநார் விளம்பரம் எழுதுன குப்பை தொட்டி பக்கத்துல படுத்திருந்தத தானே... கூகுள் பிளஸ்ல அந்த படமும் போட்ருக்கேன் வெளங்காதவனே....போ பாரு...

மப்புல வேற ரூட்ல போயிடாத செல்லம்...கீழே சுட்டி குடுத்திருக்கேன் அங்க போய் பாரு....

https://plus.google.com/u/0/113461825271092445855/posts/Mxz4qVEXEtT

:-))))))))))))))))))))))

வெளங்காதவன்™ said...

//
மப்புல வேற ரூட்ல போயிடாத செல்லம்...கீழே சுட்டி குடுத்திருக்கேன் அங்க போய் பாரு....

https://plus.google.com/u/0/113461825271092445855/posts/Mxz4qVEXEtT///

பாரு ஒரே ஒரு போட்டோவுக்கு லிங்கு கேட்டா, எல்லா போட்டோவுக்கும் லிங்கு கொடுத்திருக்கு....

நல்ல மார்கெட்டிங் பாஸ்!

பட்டிகாட்டான் Jey said...

/ அரசன் சே said... 11
அந்த புறாக்கள் இரண்டையும் போடுவிர்கள் என்று நம்பி ஏமாந்து போயிட்டேன் //

hahahaa அது லாங் சாட்தான் இருக்கு, எல்லாம் முடிச்சிட்டு கிளம்புறப்ப கவனிச்சி போட்டோ எடுக்கிரதுக்குள்ள என்னை கடந்து போயிசுச்சிங்க..

நீ க்ளோசப் எடுத்திருந்தா எனக்கு அனுப்பி வை :-))))

பட்டிகாட்டான் Jey said...

// பாரு ஒரே ஒரு போட்டோவுக்கு லிங்கு கேட்டா, எல்லா போட்டோவுக்கும் லிங்கு கொடுத்திருக்கு....

நல்ல மார்கெட்டிங் பாஸ்! //

ஒவ்வொன்னா பாரு மக்கா... அந்த ஸ்டில் பளிச்ணு தெரியும். காலை 8 மணிக்கும் பளிச்னு வெஇல் அடிக்கும்போது கூட தெளியாம நீ படுத்திட்டிருந்த போட்டோ அது.... :-))))

! சிவகுமார் ! said...

//இந்த நாய் தகரத்திற்கு அறுகில் செல்லும்போதே எனது உள்ளுணர்வு அது சுச்சா தான் போகப்போகிரது என்று உணர்த்தியதால் வேக வேகமக இந்த சாட் எடுத்தேன்.//

இதெல்லாம் போட்டோ இலக்கியத்தனத்தின் உச்சம். இதைக்கேட்பார் யாருமே இல்லையா?

பட்டிகாட்டான் Jey said...

/ இதெல்லாம் போட்டோ இலக்கியத்தனத்தின் உச்சம். இதைக்கேட்பார் யாருமே இல்லையா? //

எலேய் மெட்ராஸூ, எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம். ”எலக்கியம்”னு ஏதும் சொல்லி என்னை எக்குதப்பா எங்கேயும் கோர்த்து விட்ராத....

இப்பதான் ப்ளஸ்ல எலக்கியம் கத்துகிட்ருக்கேன்.... இன்னும் ஜீப்ல ஏறலை...அத கெடுத்துடாத ராசா.... :-))))

குட்டன் said...

படங்கள் அருமை ஜெயகுமார்

பட்டிகாட்டான் Jey said...

// குட்டன் said...
படங்கள் அருமை ஜெயகுமார் //

பாராட்டுக்கு நன்றி நண்பா :-)

அஞ்சா சிங்கம் said...

அரசன் சே said... 11

அந்த புறாக்கள் இரண்டையும் போடுவிர்கள் என்று நம்பி ஏமாந்து போயிட்டேன்................///////////////////

எது அந்த ரெண்டு புறா அதான் ஜோயங்................ன்னு போச்சே அதை தான சொல்றீங்க டேஸ்டே இல்லாத பசங்கப்போ .

முதல்ல அந்த ரெண்டு புறாவைதான் போட்டிருக்கணும் ..............

சதீஷ் செல்லதுரை said...

அட வில்லேஜ் போட்டோக்ராபர் ....கடைசி ரெண்டு போட்டோ சூப்பர் தலிவா....நீங்க PIT நடத்துற போட்டில கலந்துக்கிரீங்களா?இல்லைனா கலந்துக்கோங்க....நமக்கும் ஒரு டப் ஆன போட்டி வேண்டாமா?:):)

ASK Sen.. said...

Super.. I missed it :(

புலவர் சா இராமாநுசம் said...


படங்கள் அனைத்தும் அருமை

நாய் நக்ஸ் said...

ஒத்துக்குறேன்.
உங்ககிட்ட காமரா இருக்குன்னு....

ஆனா நான் எடுத்த போடோஸ் எப்படி நீங்க போடலாம்....

பய புள்ள வந்து பதில் சொல்லுரத்துக்குள்ள
ஓடிடனும்.இல்லாட்டி கரண்ட் போய்டணும்.

T.N.MURALIDHARAN said...

படங்கள்ல புரொஃபனால் டச் தெரியுது.!

நாய் நக்ஸ் said...

என் போடோஸ் அனைத்தையும் பாராட்டிய அனைவருக்கும்
நன்றி.....!!!!!!!!!!!!

பட்டிகாட்டான் Jey said...

// ன்னு போச்சே அதை தான சொல்றீங்க டேஸ்டே இல்லாத பசங்கப்போ . //

ரைட்டூ...( நல்ல வேளை எந்தப் புறானு வில்லங்க ஏதும் கேக்கலையே!!!)

பட்டிகாட்டான் Jey said...

// அட வில்லேஜ் போட்டோக்ராபர் ....கடைசி ரெண்டு போட்டோ சூப்பர் தலிவா....நீங்க PIT நடத்துற போட்டில கலந்துக்கிரீங்களா? //

தங்களின் வருகைக்கு நன்றி புரட்சிப் பதிவரே நன்றி....:-)))

ஆமா அது என்ன PIT ??? எனக்கு தெரியலை சொல்லிட்டு போப்பா... அதுலையும் கலந்துக்கலாம் :-)))

பட்டிகாட்டான் Jey said...

// ASK Sen.. said...
Super.. I missed it :( //

ASK Sen ji , It was wonderfull experience. all of us had good chat after photo shoot.

next time join with us ji. :-)))

பட்டிகாட்டான் Jey said...

// புலவர் சா இராமாநுசம் said...

படங்கள் அனைத்தும் அருமை //


வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி ஐயா. உடல் நிலைய கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா...:-)))

பட்டிகாட்டான் Jey said...

// T.N.MURALIDHARAN said...
படங்கள்ல புரொஃபனால் டச் தெரியுது.! //

முரளி அண்ணே நன்றி. பிளஸ் பக்கம் கொஞ்சம் டேரா போட்டதுல....உங்கள் பதிவுகள் மிஸ் பண்ணிட்டேன். இனி பதுவுகள் பக்கமும் தினம் வருகிறேன் :-))))

பட்டிகாட்டான் Jey said...

// நாய் நக்ஸ் said...
என் போடோஸ் அனைத்தையும் பாராட்டிய அனைவருக்கும்
நன்றி.....!!!!!!!!!!!! //

அடிங்க் கொய்யாலே.... கைல சிக்கினா கைமாதாண்டியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)))

Riyas said...

புகைப்படங்கள் நல்லாருக்கு ஜெய்!

பட்டிகாட்டான் Jey said...

// Riyas said...
புகைப்படங்கள் நல்லாருக்கு ஜெய்!//

ரியாஸ் நல்லா இருக்கீங்களா?.

நான் தான் இடைல பிளாக் பக்கமே வரலை....

வருகைக்கு நன்றி :-)))

ஆர்.வி. ராஜி said...

போட்டோக்ராபி நல்லாருக்கு ஜெய். சூப்பர்.கலக்குறீங்க.

இரவின் புன்னகை said...

படங்கள் அனைத்தும் அருமையா இருக்கு..

Amirthalingam Babu said...

Hi Jey,
I am one of the participant of that photo shop.
Thanks for your sharring.
I hope you have included your photo in Scott Kelby's website alos. we have only 2 days left.

பட்டிகாட்டான் Jey said...

@ ஆர் வி ராஜி - அம்மனி நன்றி :-))

@இரவின் புன்னகை - வருகைக்கு நன்றி :-)))

பட்டிகாட்டான் Jey said...

Amirthalingam Babu Sir,

It was pleasure meeting you and all.

I have uploaded edited photo y'day itself. :-)))

how about you sir?

LinkWithin

Related Posts with Thumbnails