October 13, 2012

அவர்கள் உண்மைகள் @ மதுரைத் தமிழனுக்கான பாராட்டுப் பதிவு . :-)))

முஸ்கி :  பதிவின் முடிவில் இருக்கும் டிஸ்கி படித்து விடவும் :-)))


 ஜோதிஜி திருப்பூர்  அவர்கள் கூகுல் ப்ளஸில் பகிர்ந்து கொண்டது இது


மந்திராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோயில் உள்ளதுஇக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி செல்வது வழக்கம்மேலும் இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பலமுறை நன்கொடை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளான மாதவ செட்டிசுயமிந்தரா சாரி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நன்கொடை மூலம் சர்வஜ்ஜ மண்டபம் பின்புற முள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும்மேலும்100 அறைகளும் கட்டப்பட உள்ளதுஇதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.இதற்கு Pattikaattaan Jey  என்பவர் இட்ட கருத்து

இவரு இந்த கோவிலுக்கே டொனேசன் குடுத்துக்கட்டும்சிவகாசி விபத்து மாதிரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மம்மூட்டி கொடுத்துப்பார்வாழ்க ரஜினி சார்...ஓங்குக அவரது புகழ்.


இந்த கமெண்டோட சாரம்சத்தை நாராசமாக புரிந்து கொண்டு அதற்கு விளக்கம் கொடுத்து http://avargal-unmaigal.blogspot.in/2012/10/blog-post_12.html என்ற வலைப்பதிவு வைதிருக்கிற தமிழ்ப் பெருந்தகை, நவீன தமிழ்தென்றல், ஒலக அறிவாளி தனது பதிவில் கூறியது....


நாம் தமிழனாக பிறந்ததால் இந்த பட்டிக்காட்டனோடு சேர்ந்து கூட்டத்தோடு கூட்டமாக  வாழ்க ரஜினி சார்...ஓங்குக அவரது புகழ்.
என்று கூறி  அவரின் அடுத்த படத்திற்கான டிக்கெட்டுக்காக பொண்டாட்டிகளின் தாலியை விற்க ரெடியாகுவோம்


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்


இனி என் பதிவு........

பேரை மதுரைத் தமிழன் அப்படினு வச்சிகிட்டு  சங்கம்  வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு மகாக் கேவலத்தைச் சேர்த்திருக்காரு.

ரஜினி நல்லவரா கெட்டவரா, அவர் தமிழனுக்கு நல்லது பண்ணாரா இல்லை அல்வா குடுத்தாரா....அதெல்லாம் தனியா விவாதிக்க வேண்டியவை.

அந்த விவாதம் தேவையா ... தேவையில்லையானு கூட ஒரு விவாதம் நடத்தலாம் அது அவரவர்கள் மனநிலையைப் பொறுத்தது...அது கருத்துச் சுதந்திரமும் கூட....

அந்த கமெண்ட்டில் நான் ரஜினி அவர்கள் சிவகாசி சமீபத்தில் நடந்தது போன்ற துயரங்களுக்கு உதவி செய்யாமல் மந்தாரலயாவுக்கு 10 கோடி குடுத்திருக்கிறாரே என்ற ஆதங்கத்தில....அவரை கிண்டலடிச்சி..... சிவகாசி சம்பவத்துக்கு மம்மூட்டி உதவியதை உயர்த்திச் சொன்ன கமெண்ட். 
அந்த கமெண்டுக்காக ரஜினிக்கி ஆதரவா வாதம் செய்தவர்களோடு நானும் எதிர் வாதம் செய்த பிளஸ் அது....

      இது சாதாரண தமிழ் அறிவு உள்ளவங்களுக்குப் புரியும்... அந்தளவுக்கு அறிவு கிடையாதுன்னாலும். அந்தப் பிளஸில் தொடர்ந்து நடந்த விவாதங்கள் பார்த்தாலும் புரிஞ்சிருக்கும்.

அந்த பிளஸ் சுட்டி கீழே

https://plus.google.com/u/0/108861639970432914204/posts/R4bwrMztHB4

ஆனா அந்த அடிப்படை அறிவு கூட இல்லாம  இவரும் சமுதாயத்துக்கு விழிப்பு உணர்வு ஊட்டுறதுக்கி கிளம்பிருக்கிரதப் பாத்தா....... #$%#$%$#லதான் சிரிப்பு வருது.....

சரி இப்ப ரஜினி அவர்களை வாழ்த்தினா மாதிரி இவருக்கும் ஒரு வாழ்த்துப்பா...

பிரபலப் பருப்பு பதிவரும், மதுரையிலிருந்து சமுதாயத்தை தனது விழிப்பு உணர்வுப் பதிவுகள் மூலமாக பல உணர்வுகள் ஊட்டி நாட்டை நட்டுக்க நிப்பாட்டக் கிளம்பி இருப்பவரும். உண்மையின் உறைகல்லாக தனது “அவர்கள் உண்மைகள்” என்ற வலைதளத்தை சீரும் சிறப்புமாக நடத்தி வருபவருமான திருவாளர் “மதுரைத் தமிழன்” அவர்கள் நூறாண்டுகள் வாழ்ந்து இதே மாதிரி பலரின் கமெண்ட்டுகள் படித்தி பல புரிதல்களுடன் தமிழ்ச் சேவை செய்ய, வெறுமனே வாழ்த்த வயதில்லாததால் ... வணங்கி வாழ்த்துகிறேன்.

உங்கள் தளத்திற்கு என்னாலான ஓசி விளம்பரம்... எஞ்சாய்......:-)))))

இப்படிக்கு

அவர்கள் உண்மைகள் @ மதுரைத் தமிழன்
அவர்களின்  பாசமிகு

பட்டிகாட்டான் Jey

டிஸ்கி :  அடுத்தவர் தவறுகள் பார்த்துப் பொங்கியெழும் மதுரைத் தமிழன் அவர்கள் கமெண்ட் மாடுரேசன் வைத்து கருத்துச் சுதந்திரத்தை கெட்டியாகக் கட்டிக்காப்பதால். நான் அங்கி இட்ட பின்னூட்டம் தெரியவில்லை. அது அவர் வெளியிடலாம் அல்லது பாராட்டி மட்டும் வரும் பொஇன்னூட்டங்கலை வெளியிடலாம். அது அவருக்கு மட்டுமே வெளிச்சம். என் கமெண்ட் அங்கு போட்டவுடன் வந்திருந்தால் இந்தப் பதுவி எழுதி என் வெட்டியான நேரத்தை வீனடிட்திருக்க மாட்டேன்.

      கமெண்ட் மாடரேசன் வைத்து கருத்துச் சுதந்திரத்தை வளர்க்கும் மதுரைத் தமிழன் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வழ்த்துகள். (அடுத்தவர்கள் கருத்தை விமர்சிப்பவர்கள் கமெண்ட் மாடுரேசன் வைத்துக் கொள்வது மகா மட்டமான செயல் என்பது என் கருத்து )

29 comments:

ஆரூர் மூனா செந்தில் said...

எங்க சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா

ஆரூர் மூனா செந்தில் said...

கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல போல.

ஆரூர் மூனா செந்தில் said...

சனிக்கிழமையும் அதுவுமா இரவு 10 மணிக்கு மேல பதிவு போட்டு என்னை உசுப்பிய தோழர் ஜெய்க்கு நன்றி.

ஆரூர் மூனா செந்தில் said...

ஏற்கனவே மாற்றான் படம் பாத்துட்டு கிறுக்கு புடிச்சி திரியிறேன். இதுல இந்த பஞ்சாயத்தையும் பைசல் பண்ணனுமா. பண்ணிருவோம்.

பட்டிகாட்டான் Jey said...

செந்தில் இது பஞ்சாயத்து பதிவு இல்லைப்பா.... மதுரைத் த்யமிழனின் தமிழ் அறிவுக்கான பாராட்டுப் பதிவு :-)))

பட்டிகாட்டான் Jey said...

அவர் வந்து இங்க கமெண்ட் போட்டா இன்னும் நல்லா பாராட்டலாம்னுதான் பதிவு. அங்கே கமெண்ட் போட்டா காக்கா தூக்கிட்டு போயிடுது. ஆனா இங்கே அவர் போடுர கமெண்ட் பளிச்சினு தெரியும். அதுவும் கெட்ட வார்த்தைல திட்டிப் போட்டா புத்திப் பொத்திப் பாதுகாக்கப்படும் அவரின் நினைவாக :-)))))

பட்டிகாட்டான் Jey said...

ங்கொய்யா நான் இப்ப வரைப் பாராட்டி பதிவு போட்டுட்டு அவருக்கு முரையான அழப்பை/தகவலை அவர் கமெண்ட் பாக்ஸ்ல போட்டுட்டு வந்திருக்கேன். அதுமாதிரி எனக்கு பாராட்டு தெரிவிச்சி தல எழுதிட்டு, ஒரு தகவல் குடுத்திருக்க வேணாமா.... என்ன பண்பாடோ....:-)))

Philosophy Prabhakaran said...

பட்டிக்ஸ்... அந்தாளு தினமும் பதிவெழுதுறதுக்கு சரக்கு எதுவும் கிடைக்காததால் சும்மா ப்ளஸ்ஸில் நடந்ததை காப்பி பண்ணி பதிவாக போட்டிருக்கிறார்.... இதுக்காக அவரை கொரில்லா செல்லில் அடைத்து ரவுடி ஆக்கிவிடாதீர்கள்...

பட்டிகாட்டான் Jey said...

// இதுக்காக அவரை கொரில்லா செல்லில் அடைத்து ரவுடி ஆக்கிவிடாதீர்கள்... //

அதுவும் சரிதான். இந்தக்கோணம் தோணாமப் போச்சே....

அப்ப ஜீப்ல ஏத்த வேணாமா???
வடிவேலு மாதிரி ஜீப்ல ஏத்துங்க ஏத்துங்க்னு மனுசன் கதறராப்ல... சரி எங்கூராச்சேனு கொஞ்சம் சலுகை காட்டி ஜீப்ல ஏத்திடலாம்னு பார்த்தேன்...சரி விடு வேலைக்காகாத கழுதை அப்படியே போய் தொலையட்டும் :-)))

வீடு சுரேஸ்குமார் said...

பங்காளி! உன்னைக் கையப்புடிச்சு இழுத்தா எதிர்பதிவு போடுவியா..?அம்புட்டு பெர்ர்ர்ர்ரிய அப்பாடக்கரா நீ....!

பட்டிகாட்டான் Jey said...

ஆமாம் பங்காளி... இப்படியே ஊருக்குள்ள பரப்பிவிடு.... அவனவன் க்யூவில நின்னு கைப்பிடிச்சி இழுக்கட்டும், நானும் அவனுகளுக்கு எதிர் பதிவு எழுதுரேன்ற பேர்ல ஓசில விளம்பறம் பண்ணி... ஜீப்ல ஏத்திவிசுறேன்....

ங்கொன்னியா .... நீயெல்லாம் நல்லா வருவே பங்காளி....

முத்தரசு said...

பங்காளி வுடுய்யா......கூலா ரெண்டு பீர் சொல்லு

அஞ்சா சிங்கம் said...

இருவரின் வாத பிரதிவாதங்களை வைத்து பார்க்கும் பொது . வாதியின் பக்கம் நியாயம் இருப்பதாக படுகிறது .
அதே சமயம் பிரதிவாதி சற்றே அவசர பட்டுவிட்டார் .மற்றபடி அவருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை . அவர் மனதில் வாதியை மட்டம் தட்ட வேண்டும் என்ற அவசரத்தில் பேதி புடிங்கியதால் அந்த அவசர பதிவை போட்டுவிட்டார் .
பதிலுக்கு தன பங்கிற்கு வாதியும் ஒரு பதிவு போட்டு பேதி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இந்த சபை தீர்மானிக்கிறது . சரி என்ன செய்வது போட்டாச்சி .
தானிக்கி தீனி சரியா போச்சி மூடிட்டு போங்கடா நோன்னைகளா என்று இந்த சபை இருவரையும் கண்டிக்கிறது ...

பட்டிகாட்டான் Jey said...

// தானிக்கி தீனி சரியா போச்சி மூடிட்டு போங்கடா நோன்னைகளா என்று இந்த சபை இருவரையும் கண்டிக்கிறது ...//

செல்வின் கைல வச்சிருக்கிர சொம்பு புதுசா.... பளபளான்னு மின்னுதே அதான் கேட்டேன் :-))))

பட்டிகாட்டான் Jey said...

// பங்காளி வுடுய்யா......கூலா ரெண்டு பீர் சொல்லு //

பக்கத்துலேயே பங்காளி சுரேஷ் இருக்கான் விடாதேயும். அவண்ட்ட உமக்கும் சேர்த்து காசு குடுத்திருக்கேன் :-)))))

அஞ்சா சிங்கம் said...

சண்டே அன்னைக்கு பஞ்சாயத்து வைத்தால் இப்படிதான் .

நாய் நக்ஸ் said...

தல எனக்கும் ஒரு பதிவு போடுறது...

ஓ..ஓ...நாம பஞ்சாயத்தார் இல்ல...

Avargal Unmaigal said...

அன்புள்ள நண்பரே எனது பதிவிற்கான கமெண்ட்டையும் அதற்கான நீங்கள் இட்ட பதிவையும் இப்பதான் பார்த்தேன்.
அதற்கு சில விளக்கங்களை தருகிறேன்.

/// இதற்கு Pattikaattaan Jey என்பவர் இட்ட கருத்து

இவரு இந்த கோவிலுக்கே டொனேசன் குடுத்துக்கட்டும். சிவகாசி விபத்து மாதிரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மம்மூட்டி கொடுத்துப்பார். வாழ்க ரஜினி சார்...ஓங்குக அவரது புகழ்///

இந்த கருத்து எனக்கு பிடித்ததால்தான் எனது பதிவில் அதை சேர்த்து உங்களையும் கூகுல் ப்ளஸில் ப்ளோ செய்ய ஆரம்பித்தேன்.

இதை நீங்கள் நம்புவீர்க்ளோ இல்லையோ அதுதான் உண்மை

அடுத்தாக

// நாம் தமிழனாக பிறந்ததால் இந்த பட்டிக்காட்டனோடு சேர்ந்து கூட்டத்தோடு கூட்டமாக வாழ்க ரஜினி சார்...ஓங்குக அவரது புகழ். என்று கூறி அவரின் அடுத்த படத்திற்கான டிக்கெட்டுக்காக பொண்டாட்டிகளின் தாலியை விற்க ரெடியாகுவோம்//

இங்கு நான் சொல்ல வந்தது ரஜினி ரசிகர்களுக்கா வாழ்க ரஜினி சார்...ஓங்குக அவரது புகழ். என்று கூறி அவரின் அடுத்த படத்திற்கான டிக்கெட்டுக்காக பொண்டாட்டிகளின் தாலியை விற்க ரெடியாகுவோம்// என்றுதான்


இதை நீங்கள் தவறுதலாக, நான் உங்களுக்கு சொன்னதாக நீங்கள் எடுத்து கொண்டதாக நான் நினைக்கிறேன், நீங்கள் அப்படி எடுத்து கொண்டால் அந்த எண்னைத்தை மாற்றிக் கொள்ளுங்கள். மேலும் நான் தமிழில் புலமை பெற்றவன் இல்லை என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன். அதனால் நான் சொல்லவந்ததை சரியாக சொல்லமுடியாமல் போய்யிருக்கலாம். அதை முடிந்த வரை திருத்த முயற்சிக்கிறேன் ஒகே வா???நான் கமெண்ட் மாடுரேசன் வைத்து இருப்பதன் காரணம் சில மத பதிவாளர்கள் பதிவுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை எனது தளத்தில் இட்டு செல்வதை தவிர்க்கவும் மேலும் சிலர் நான் இடும் அரசியல் தலிவர்களுக்கான பதிவுகளை இடும் போது பதிவையும் பதிவு எழுதிய என்னை தாக்காமல் அந்த அரசசியல் தலைவர்களை பற்றி அநாகரிகமான கமெண்டுகளை இடுகிறார்கள் அதை தவிர்க்கவும் தான் கமெண்ட் மாடுரேசன் வைத்து உள்ளேன்நான் பதிவுகளை இடும் நேரம் அமெரிக்காவின் ஈஸ்டர்ன் டைமான இரவு 8 லிருந்து 10 மணியளவில்தான். அதன் பிறகு சிறிது நேரம் நெட்டில் சில பதிவுகளை படித்துவிட்டு நேரம் இருந்தால் அதற்கு சில கமெண்ட்ஸ்களை இட்டுவிட்டு தூங்க செல்வது வழக்கம் அப்ப்டி தூங்க செல்லும் போது திரும்பி எனது தளத்திற்கு வந்து பார்த்து யாரவது கமெண்ட் இட்டு இருந்தால் அதை பப்ளீஷ் செய்து விட்டு படுக்க போவது வழக்கம். அதுவும் இந்த பதிவு எனது அமெரிக்க நேரம் வெள்ளி கிழமை இரவு நேரத்தில் இட்டதாலும் சனிக்கிழமை அனேக நாள் நான் வேலைக்கு மிகஸ் சிக்கிரமாக போவதாலும் காலை வேலையில் கம்பிய்யுட்டரை லாக் செய்து பார்க எனக்கு நேரம் கிடைக்காது. மேலும் சனிக்கிழமை இரவு எப்போதும் எங்கள் வீட்டில் நண்பர்களை அழைத்து விருந்து தருவதால் அநேக நேரம் சனிக்கிழமை இரவும் நெட்டிற்கு வருவதில்லை. அதனால்தான் உங்கள் கமெண்டுகளை பப்ளிஷ் பண்ண நேரம் ஆகிவிட்டது.

இதை எழுது நேரம் ஞாயிறு காலை 8 மணி என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் தவறுதலாக எடுத்து கொண்டதால்தான் இந்த விளக்கம் நண்பரே


நான் பதிவுகளை போட்டுவிட்டு யாருடா கமெண்ட்ஸ் போட்டு இருக்கிறான் என்று திரும்பி திரும்பி வந்துபார்க்கும் பழக்கம் இல்லை. அது போல எனக்கி நேரம் கிடைக்கும் போதுதான் கமென்ட்ஸ்க்கு பதில் எழுதுவது வழக்கம்

இறுதியாக் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் நான் ஒன்றும் புரட்சி பண்ண அல்லது தமிழ் சமுகத்தை சீர்திருத்த இங்கு பதிவுகள் எழுதுவரவில்லை நான் படித்ததை ரசித்ததையும் அதற்கான எனது கருத்தையும் எனக்கு தெரிந்த தமிழில்தான் தரவிரும்புகிறேன்...அவ்வளவுதாங்க நான் ஒன்றும் அறிவி ஜீவி அல்ல நண்பரே மிக சாதரணமானவந்தான். நீங்கள் மிக உணர்ச்சி வசப்பட்டு எனக்கு அநேக பட்டங்களை வழங்கியுள்ளிர்கள். அதற்கு எனது நன்றி

எனது மனதில் உள்ளதை இங்கு உங்களிடம் தெரிவித்துவிட்டேன் இப்போது புரிந்து இருப்பிர்கள் என நினைக்கிறேன்.


நண்பரே நல்ல வேளை நான் உங்கள் ஊரில் இருந்து இருந்தால் விஜயகாந்த மாதிரி பொங்கி எழுந்து எனது தலையில் கொட்டு கொட்டு என கொட்டி இருப்பீர்கள் நல்ல வேளை தப்பித்தேன் ஹீ.ஹீ


வாழ்க வளமுடன்

Avargal Unmaigal said...

//முத்தரசு
பங்காளி வுடுய்யா......கூலா ரெண்டு பீர் சொல்லு///

இரண்டுல ஒன்று எனக்குதானே???

பட்டிகாட்டான் Jey said...

// Avargal Unmaigal said... //

அடப்பாவி நீர் ஒரிஜினலாப் எழுதுன பதிவே இங்க போட்ட பின்னூட்டத்துல கால்வாசிகூட இருக்காது போலயே.

விளக்கத்திற்கு நன்றி.

எலேய் முததரசூஊஊஊஊஊஊ. அனுப்புன பீர்ல ஒன்னை மருதைக்கி குடுத்துடுலே.

இத்துடன் பஞ்சாயத்து கலைக்கப் படுகிறது.

Avargal Unmaigal said...

விளக்கதிற்கு நன்றி என்று சொல்லி பஞ்சாயத்தை கலைத்துவிட்டு ஒடுவது நல்லதல்ல இனிமேதான் பஞ்சாயத்தை கூட்ட வேண்டும் பீர்பாட்டில் ஒன்று இரண்டு பத்தாதுங்க நிறைய வேண்டுமுங்க ஏற்பாடு பண்ணுங்க

Avargal Unmaigal said...

///அடப்பாவி நீர் ஒரிஜினலாப் எழுதுன பதிவே இங்க போட்ட பின்னூட்டத்துல கால்வாசிகூட இருக்காது போலயே///

ஜெய் நீங்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்குதான் இந்த பெரியவிளக்கம் .அரசியல்வாதிகள் நடிகர்கள் தவிர வேறு யாரையும் சிறிதளவுகூட காயப்படுத்தி விடக் கூடாது என்பதை நான் எப்போதும் கடைபிடித்து விடுகிறேன் நான் சொன்னதை நீங்கள் உண்மையிலே புரிந்து கொண்டால் உங்களுக்கு ஒரு சல்யூட்

பட்டிகாட்டான் Jey said...

// இனிமேதான் பஞ்சாயத்தை கூட்ட வேண்டும் பீர்பாட்டில் ஒன்று இரண்டு பத்தாதுங்க நிறைய வேண்டுமுங்க ஏற்பாடு பண்ணுங்க //

பீருக்கு தனி பஞ்சாயத்தா????
அப்ப அதுல கொஞ்சம் பாலிடாயில் கலந்து குடுத்தா பர்வாயில்லையா...:-)))))

// யாரையும் சிறிதளவுகூட காயப்படுத்தி விடக் கூடாது என்பதை நான் எப்போதும் கடைபிடித்து விடுகிறேன் //

கூல் கூல். இட்ஸ் க்ரேட் பாலிஸி. ஹேட்ஸ் ஆஃப் டு யு.

உங்கள் விளக்கம் புரிந்து கொள்ளப்பட்டது நண்பரே...:-)))

Philosophy Prabhakaran said...

@ Avargal Unmaigal
// அரசியல்வாதிகள் நடிகர்கள் தவிர வேறு யாரையும் சிறிதளவுகூட காயப்படுத்தி விடக் கூடாது என்பதை நான் எப்போதும் கடைபிடித்து விடுகிறேன் நான் சொன்னதை நீங்கள் உண்மையிலே புரிந்து கொண்டால் உங்களுக்கு ஒரு சல்யூட் //

அய்யா... அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்களே... உங்களைப் பற்றிய தவறான புரிதலுக்கு மன்னிக்கவும்...

Avargal Unmaigal said...

@Philosophy Prabhakaran
இப்படி நல்லவர் நல்லவர் என்று சொல்லி என்னை உசுப்பேத்திவிட ஆரம்பிச்சிடீங்களா....அதற்காக நான் தலைவராக எல்லாம் ஆக முடியாது. நான் தொண்டாகவே இருக்க ஆசைப்படுகிறேன். அதனால மறக்காம நமக்கு சரக்கு வாங்கி அனுப்பிச்சுவிடுங்க.....பிலாசபி

பட்டிகாட்டான் Jey said...

// நான் தொண்டாகவே இருக்க ஆசைப்படுகிறேன். அதனால மறக்காம நமக்கு சரக்கு வாங்கி அனுப்பிச்சுவிடுங்க.....பிலாசபி //

பிலாசபி மூடிய திறந்தாலே அவுட்....
ப்ப்ட்டுத்தள்ளுரதிலதா ஸ்பெசலிஸ்ட்.

இருங்க...உங்களுக்கு வேணும்னா....

அல்ல்ல்லோவ்வ்வ்..அல்லோவ்...யாரு செந்திலா... ஆமா நாந்தேன் பேசுறேன்...ஒன்னுமில்லை...நம்ம மருதைக்கி சரக்கு வேணுமாம்...இல்லையில்லை சென்னைக்கி அவர் வரும்போதுதான்... ஆமாம் வாங்கிக் குடுத்து... ஆமாம் அதேதான்...

மிஸ்டர் மதுரைத் தமிழன் உங்களுக்கு செந்தில் வாங்கித்தருவார்...எஞ்சாய் :-)))))

அஞ்சா சிங்கம் said...

அட பாவிகளா பஞ்சாயத்திற்கு மட்டும் கூப்பிட்டீங்க . இப்போ ஒன்னு சேர்ந்து சரக்கடிக்கும்போது என்னை கலட்டி விடுறீங்களே . ஹ்ம்ம். நன்றிகெட்ட உலகமடா................

பட்டிகாட்டான் Jey said...

// அட பாவிகளா பஞ்சாயத்திற்கு மட்டும் கூப்பிட்டீங்க . //

அஞ்சாசிக்கத்துக்கு ஒரு ரெமிமார்ட்டின் பார்ச்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல் :-)))))

baabaa kalyani said...

ஏன்யா மூச்சுக்கு மூணு தடவை தமிழ் தமிழ்ன்னு கத்துரிங்க ஆனா அடிக்கிறது எல்லாம் வெள்ளைக்காரன் பேருல இருக்கிற சரக்கு , என்ன அநியாயாம் பன்னுரிங்க.
நாங்க ஆட்சிக்கு வந்தா தூய தமிழ் பேருல இருக்கிற சரக்குதான் தமிழ் நாட்லே எல்லாரும் குடிக்கணும் என்று சட்டம் கொண்டு வருவோம் என்று உறுதியளிக்கிறேன்.
ஆகையால் எல்லாரும் மதுக்கின்னம் சின்னத்தில் வாக்களித்து வேற்றி பெற வைக்குமாறு மப்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails