நான் இப்போது வசிக்கும் ஃபிளாட்டின் முன் உள்ள பாதையின் முடிவில்(முட்டுச் சந்து) ஒரு அரச மரம் உள்ளது. கோடை வெயிலின் போது அதன் நிழல் சுகமாக இருந்தது, மேலும் குழந்தைகள் நிழலில் விளையாடும்போது (பாதை முடிவதால் வாகனங்கள் நடமாட்டம் இல்லை) சந்தோசமாகவும் இருக்கிறது. சுவாசிக்கிற காத்தயும் சுத்தம் பண்ணி தருது.
சில நாட்களாக எங்கள் குடியிருப்பின் வில்லனாக மாரிக்கொண்டிருக்கிறது, காரணம் இதுதான்:
50 அடி தள்ளி இருக்கும் அந்த அரசமரத்தின் வேர்கள், எங்கள் குடிநீர் தேக்கி வைக்கும் தொட்டியின்( sump) சுவரை பெயர்த்துக்கொண்டு உள்ளே வந்து , எங்கள் பயன்பாட்டுக்கு தேக்கி வைத்த நீரை குடித்துகொண்டிருக்கிரது, அதன் தேவைக்கு மட்டும் குடிக்க்கிறதா என்றால், சுவர் உடைபட்டதால் அந்த பிளவின் வழியே மொத்த நீரும் பூமிக்குள் செண்ரு விடுகிறது, இதனால் மெட்ரோவட்டர் பயன்படுத்த முடியாமல், கிணற்று நீர் பயன்படுத்தும் நிலை.
இத்தனைக்கும் ஒரு வருடத்திற்கு முன் இதே பிரச்சினையில், சிறிது வேரை வெட்டி( அதி ஆசிட் உற்றி மீண்டும் வளராமல் இருக்க) புதிதாக கட்டிடப் பொறியாளரை வைத்து கட்டிய தொட்டி அது.
இப்போது மீண்டும் தொட்டியை கட்ட வேண்டிய நிலை. இந்த அரசமரத்தின் வேர்கள் 10 அடி தூரத்தில் உள்ள மற்ற வீடுகளின் தொட்டிகளுக்கு செல்லாமல், தொடர்ந்து எங்க வீட்டின் தொட்டியை உடைத்து நீர் பருகுவதிலேயே குறியாய் இருக்கிறது. இந்த அரசமரம் ஏன் அழிச்சாட்டியம் செய்துகொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு நாளைக்கு இவ்வளவு லிட்டர் நீர் வேண்டும் என்று பேச்சுவார்த்தைக்கு வந்தாலாவது அதன்படி நீர் ஊற்றி விடலாம், எங்களுக்கு அதன் மொழி தெரியாததால் பேச்சுவார்த்தைக்கும் வழியில்லை.
இப்போது கட்டிடப்பொறியாளரிடம் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது, எவ்வளவுதான் வேரைவெட்டி அதில் ஆசிட் ஊற்றினாலும், அதன் அடுத்த வேர் வந்து உங்கள் தொட்டியை உடைக்கும் என்ற கருத்துகளும் சொல்லப்படுகின்றன.
மரத்தை வெட்டுவதுதான் இதுக்கு ஒரே தீர்வு என்ற எண்ணம் இப்போது நான் குடியிருக்கும் ஃபிளாட்டின் மற்றவர்களின் கருத்தாக இருக்கிறது. பொறுங்கள் டெக்னாலஜி வளர்ந்துவிட்டது, மரத்தை வெட்டாமல், வேறு நல்ல தீர்வு கிடைக்கிறதா பார்ப்போம் என்று தற்காலிகமாக மற்றவர்களை சமாதானம் செய்திருக்கிறேன்.
இதிற்கிடையில், அரச மரம் சாமி(கடவுள்) மரம் அதுல கையை வச்சா அவ்வளவுதான் எனக்கு கெட்ட கோவம் வரும், வேணும்னா புதுசா தொட்டிகட்டிய பிறகு தினமும், 5 குடம் நீர் ஊத்துரோம், வேர் தொட்டி பக்கத்துக்கு வரக்கூடாதுன்னு வேண்டிகிட்டு வருகிற சித்திரையில் பூக்குழி இறங்கிருங்க சரியாப் போயிரும்னு!!! சொல்ற வீட்டு அம்மணீயின் லாஜிக்கிலாத ஆலோசனை வேறு.
வீட்டு அம்மணியின் ஆலோசனையை புரம்தள்ளினாலும், உலகில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும்( 1 அறிவு இருக்குனு சொல்ற அமீபா-விலிருந்து 6 அறிவு இருக்கிறதா மார்தட்டிட்டிருக்கிற மனுசங்க வரைக்கும்) அதற்கு தேவயான உணவை தேடிக்கொள்வதற்கு அதுகளுக்கு உரிமையில்லையானு என் மண்டைல ஓரத்துல ஒரு மணியடிக்குது.
”தனியொருவனுக்கு உணவில்லையெனில் இச்சகத்தினை அழித்திடுவோம் -னு சொன்ன பாரதி, மனுசனுக்கு மட்டும் இல்லாம தனியொரு உயிருக்கு-னு, சொல்லிருக்கனும்னு நினைக்குற சாதி நம்ம சாதி. இப்போ உயிர்வாழ நீர் தேடி வந்த இந்த மரத்தை என்ன பன்றது?.
மரத்தோட வேர தொட்டிபக்கம் வராம தடுக்குரதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா?. அந்த சைடுல வர்ற வேருக்கு மட்டும் ஏதாவது கெமிக்கல் ஊத்தி, மத்த வேர்களும் அந்த சிடுக்கு வராம செய்ரதுக்கு யாய்கிட்டயாவது ஐடியா இருக்கா?.
என்ன ஸ்ட்ராங்க தொட்டிய கட்டினாலும், வேர் வந்து தொட்டிய நோண்டத்தான் செய்யும்னு சொலறத கேட்டு அரச( சாமி !!!) மரத்தை வெட்டிடலாமா?
இல்லை பேசாம வீட்டு அம்மணி சொல்றத கேட்டு, 3 நாள் லீவுதானேனு ஊருக்கு போய் பூக்குழி இறங்கி சாமிய அரச மரத்துகிட்ட தூதனுப்பி நீர் தொட்டிய ஒன்னும் செய்யாதேனு மிரட்ட சொல்லலாமா?.
இல்லை வேற ஏதாவது தீர்வு இருக்கா?
மக்களே, இந்த பதிவுலகத்துல கெட்டிகார/ மூளைக்கார பதிவர்கள் நெறய பேர் இருக்குறத நம்பி, ஆலோசனை கேட்டு வந்திருக்கேன். என்னோட எதிர்பார்ப்பை ஏமாத்தாம ஏதாவது நல்ல தீர்வை சொல்லிட்டிபோங்க.
டிஸ்கி 1 : ஒரு நல்ல தீர்வை பின்னூட்டத்துல சொல்லுங்க, மெயிலுக்கு அனுப்புனாலும் சர்தான். , உங்களுக்கு டவுட்டா இருந்தா உங்க நண்பர்கள் கிட்டயும் கேட்டு சொல்லுங்க கோச்சுக்க மாட்டேன் ..)
அரசமரத்தை பற்றி வலையுலகத்தில் படித்தது கீழே :
நம்ம ஊரு சித்தார்த்தர் இந்த மரத்துக்கு கீழே உக்கார்ந்திருந்த போதுதான் , ஞானம் கிடச்சி புத்தர் -ஆ மாறி உலகமுழுக்க கடவுளா மாறினாராம். ( இந்த மரத்துக்கு boo bodhi-னு பேர் இருக்காம், அதிலிருந்துதான் புத்தர்-னு பேர்வந்துச்சாம்)
பஞ்சபாண்டவர்கள் ஒரு வருசம் விராட நாட்ல அன்யாதவாசம் இருக்கும்போது இந்த மரப்பொந்துலதான் தங்களோட ஆயுதங்கள மறைத்து வைத்தார்களாம்..
கி.மு. 228-ல இலங்கை-ல நட்ட அரச மரம் இன்னும் இருக்காம்(படம் கீழே) ,மனிசன் நட்டமரங்களிலேயே இதுதான் உலகத்துலேயே வயசான மரமாம்.(நான் கணக்குல வீக் அதனால நட்ட வருஷத்த வச்சி நீங்களே வயச கண்டுபிடுச்சிக்குங்க).
கடுமையான வரட்சியானாலும், பனிபொழிஞ்சி ஐஸ்கட்டியானலும் தாங்குமாம்..
இந்தியாவுல முதன்முதலா இந்த மரத்தைதான் சித்திரமா வரஞ்சாங்களாம். கி.மு.3000 – கி.மு.1700க்கு இடைப்பட்ட சிந்து சமவெளி நாகரீகத்துக்கு அடையாளமான, மொஹஞ்சதாரோவில், இந்த மரத்தோட சித்திரம் இருக்குதாம், அந்த கலகட்டத்திலேயே , இந்த மரத்துக்கு தெய்வ வழிபாடு நடத்தி இருக்காங்களாம்.
இந்து மதத்துல அரசமரம் ஆண் மரமாகவும், வேப்பமரம் பெண்ணாகவும் சொல்லப்பட்டிருக்காம் (ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்-ல மட்டும் மாத்தி சொல்லப்பட்டிருக்காம்).
அரசமரத்தை சுத்திவந்து கும்பிட்டா கன்னிப்பெண்களூக்கு கல்யாணம் நடக்குமாம், குழந்தை இல்லாதவங்க கும்பிட்டா குழந்த வரம் கிடைக்குமாம்.( எங்க கிராமத்தில கூட இப்போதும் சுத்திவந்து கும்பிட்டுகிட்டுதான் இருக்காங்க).
இந்துமதத்தோட மும்மூர்த்திகள்( பிரம்மா, விஸ்னு,சிவன்) குடியிருக்கிற ஒரே இடம் இந்த மரம்தானாம் (வேர்ல பிரம்மாவும், நடுவுல விஸ்ணுவும் , மேல்பாகத்துல சிவனும் பாகப்பிரிவினை செஞ்சிகிட்டு குடித்தனம் செய்றாங்களாம்)
அரசமரத்தை நட்டவங்களுக்கு நேரா சொர்க்கம்னு வராக புராணத்துல சொல்லப்பட்டிருக்காம்.( எல்லா மொள்ளமாரித்தனங்களையும் செஞ்சிட்டு காலம்போன கடைசில ஒரு அரசமரத்த நட்டுட்டு நேரா சொர்க்கதுக்கு டிக்கெட் வாங்கிறலாம்னு கிளம்பிராதீக மக்களே.)
மத்த மொழிகள்ல அரசமரத்தோட பேரு கீழே:
ஹிந்தி : பிபல்( PIPAL)
கன்னடம் : அரளி( ARALI)
சான்ஸ்கிரீட் : அச்யுடவாஸ், அஸ்வதா ( ACHYUTAVAS, ASHVATHA)
மலையாளம் : அரச்சு, அரயல் ( ARACHU, ARAYAL)
தெலுங்கு : அஸ்வத்தாமு , போதி( ASHVATTHAMU, BODHI)
உருது : பீபல்(PEEPAL)
ஆங்கிலம் : பீபுள் ட்ரீ(PEEPUL TREE)
பொட்டானிகல் பெயர் : ஃபிகஸ் ரிலிஜியோசா( FICUS RELIGIOSA)
குடும்ப பெயர் : மொரசியே ( MORACEAE)
கி.மு. 228-ல இலங்கை, அனுராதபுரத்துல நட்ட அரசமரம். புத்தர் தவம் செஞ்ச மரத்தோட மரக்கன்று எடுத்து போய் அங்க நட்ட வளர்ந்த மரமாம்.
டிஸ்கி 2 : மேலே சொன்ன தவல்களிலிருந்து ஏதும் கேள்விகள் இருந்தா என் கிட்ட வ்ளக்கம் கேட்ராதீங்க சாமிகளா, நம்ம எழுதுன பதிவுல அரசமரம் வந்துட்டதால அதப்பத்தி நெட்ல தேடும்போது என் கண்ணுல பட்ட விசங்கள ஒரு இதுக்காக எழுதியிருக்கேன், , ஹி... ஹி...