Showing posts with label உமாசங்கர் IAS. Show all posts
Showing posts with label உமாசங்கர் IAS. Show all posts

August 18, 2010

உமாசங்கர் -விண்ணப்பம் + கண்டனம்





      பதிவர் திரு. தருமி அய்யா அவர்கள்,  திரு உமாசங்கர் இ.ஆ.ப அவர்களின் மேல் பழிவாங்கும் நோக்கில்,  அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பதிவுலக நண்பர்களின் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அந்த பதிவின் பின்னூட்டத்திலேயே புதன்கிழமை(18-08-2010) அனைத்துப்பதிவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து பதிவிடலாம் என்றும் கருத்து கூறப்பட்டிருந்தது.

      இதில் எனக்கும் உடன்பாடு உண்டென்பதால் இந்த பதிவின் மூலம் திரு. உமாசங்கர் இ.ஆ.ப., அவர்களுக்கு என் ஆதரவையும் , அவர் மீது பழிவாங்கும் நோக்கில் இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு கண்டனங்களையும், சக பதிவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

     திரு. உமாசங்கர் இ.ஆ.ப. அவர்கள் 100 சதவீதம் யோக்கியமானவரா என்பதையோ, அவர் என்ன ஜாதி, மதம் என்பதையோ இந்த நேரத்தில் விவாத்ததிற்கு உள்ளாக்காமல்,  அவர் மீது அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை அப்பாட்டமாக பழிவாங்கும் நடவடிக்கை என்பதால் ஒட்டு மொத்த பதிவுலகமும் கண்டனங்களை பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

( வரும் நாட்களில் இதுபோல் எந்த ஒரு தனி மனிதரும் அவர்களின் நேர்மைக்காக, பழிவாங்கப் படுவோராயின் இதே உணர்வுடன் ஜாதி, மத , பால் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நமது எதிர்ப்பை தெரிவிப்போமாக)

இது பற்றிய சில இடுகைகள்:





டிஸ்கி 1 : இங்கு வலயுலகத்தில் நாம் எழுதுவதால் என்ன பயன் எத்தனை பேர் படிக்கப்போகிறார்கள் என்று எண்ணாமல், எதிர்ப்பை காட்டுவோம்.

டிஸ்கி 2 : மொக்கை பதிவுகளுக்கு கொடுக்கும் ஆதரவை இந்த பதிவிற்கும் அளித்து பின்னூட்டமும் ஓட்டும் போட்டு இண்ட்லியிலும், தமிழ்மனத்திலும் முதல் பக்கத்தில் இந்த பதிவை நட்டுக்க நிப்பாட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். (வீட்டுக்கு ஆட்டோ அனுப்புற சமாச்சாரம்னவுடனே ஓட்டு அதிகமா போட்ருவானுகளோ?????)  

LinkWithin

Related Posts with Thumbnails