ஞாயிற்றுக்கிழமை.....
”இன்னிக்கி
ஹிண்டுல விளம்பரம் வந்தாச்சு, 21ந்தேதி Online-ல Applyபண்ணிடுங்க”, மலையாளி அசோசியேசன் ஆண்டுவிழாவிற்கு போனபோது மிஸ் சொல்ல பரபரப்பு தொற்றிக்கொண்டது...... வீட்டில் வாங்குவது
டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 வருடங்கள் முன் ஹிண்டுவின் மேல் இருந்த ஏதோ வெறுப்பில் அதை நிறுத்தி விட்டு TOI மாறியது தவறோ...
மறுநாள் காலையில் பேப்பர் கடையில் போய் கேட்டால், விற்காத பேப்பர்ஸ் எல்லாம் அதிகாலையிலேயே ரிட்டர்ன் போய் விட்டதென்ற பதில். தெரிந்த நண்பர் வீட்டிலிருந்து இரவலாக ஹிண்டு வாங்கி வந்து பக்கம் பக்கமாக பொறுமையாக தேட ஆரம்பித்து, என் கண்களில் படவே இல்லை....
தங்கஸ் வாங்கி பொறுமையுடன் பக்கம் பக்கமாக பார்த்து ம்ஹூம்...., பேப்பர் கைமாறி மச்சானிடம், அவனும் மேய்ந்துவிட்டு மாம்ஸ் விளம்பரத்தைக் காணோம் என்றான். இரண்டாவது தடவையாக classified மட்டும் ஒவ்வொரு காலமாக படித்து, அதிலும் எஜுகேசன் பகுதி விளம்பரங்களை வரி வரியாக படித்ததில் கண்ணில் சிக்கியது அந்த துக்குனூண்டு விளம்பரம். யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாதே என்று சிரத்தை எடுத்திருக்கிறார்களோ என்ற எண்ணம் வந்து போனது.
சரி 21ந்தேதி
00:00 மணியிலிருந்து 24:00 மணிவரையான காலகட்டம் மட்டுமே Online-ல விண்ணப்பம் செய்ய அனுமதி என்று தெளிவான எச்சரிக்கை/தகவல்.
நேற்று (20ந்தேதி) இரவு 11:30 தங்க்ஸ் மொபைலில் அலார்ம் அடிக்க, இன்னேரத்துக்கு ஏன் அலாரம் உங்க குடும்பமே லூசுக்குடும்பமா என்று கொஞ்சம் அதிகப்படியாக நான் கிண்டலடிக்க... பதிலுக்கு அர்ச்சுனன் காண்டீபத்திலிருந்து புறப்பட்ட பானங்கள் போல திட்டுமழை பொழியப்பட்டது என்மேல். அந்த அலாரம் ஆன்லைன் விண்ணப்பம் செய்ய இன்னும் அரைமணி நேரம் இருப்பதை எனக்கு ஞாபகப் படுத்தவாம். 11:40 க்கு மச்சான் மொபைல் அலாரம்...
11:00 மணியிலிருந்த அந்த சைட்டை ஓப்பன் பண்ணி தேவுடு காத்துகிட்டிருந்த நான் பொறுப்பில்லாதவன் ஆகிப்போனேன் வாழ்க தங்கஸ் & தெய்வ மச்சான் :-)))
11:45 வரை இன்னும் சற்று நேரத்தில் என்று ஓடிக்கொண்டிருந்த பள்ளியின் வலைதளப் பக்கம் கானாமல் போய்... 303,404,505 error போன்ற பிழைகள் வர ஆரம்பித்து, சைட் ஒப்பன் ஆகாமல் டென்சன் ஆரம்பித்தது.....
இப்போது சைடில் ஒரு லேப்டாப்புடன் தங்க்ஸும், எதிர் வீட்டு நண்பரின் லேப்டாப் வாங்கி வந்து மச்சானும் என்கூட சேர்ந்து போராட்டத்தில் இறங்க...உனக்கு ஓப்பன் ஆச்சா...உனக்கு... ரீதியில்..... ஸ்ப்பா மணி இப்போது 1:30. படாரென்று ஒரு சத்தம் திரும்பி பார்த்தால் மச்சான் தூங்கி வழிந்து பக்கத்தில் இருக்கும் கட்டில் சட்டத்தில்...... தலையைத் தடவுவதில் தெரிந்தது.... சரி நீ தூங்குடா நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன்.
அடுத்து தங்க்ஸ்டமிருந்து மாம்ஸ், என்று அழைப்பு, புரிந்து கொண்டு சரி நீயும் தூங்குடாச் செல்லம், மாமா எப்படியும் விடிவதற்குள் அப்ளை செய்துவிடுகிறேன்.....
பாவம் F5 பட்டன் வாயிருந்தால் அழுதிருக்கும்........ சைட் ஓப்பன் ஆகும் வழியைக் காணோம், மணி 5 மணி தங்கஸ் எழுந்து சிஸ்டத்தில் உட்கார, நான் வ்டை கிடைக்காத அலுப்புடன் கட்டிலில் சாய்ந்தேன். திடீரென்று கூச்சல் சத்தம் கேட்டு எழுந்தேன் கண்கள் திரக்கமுடியாமல் ஒருவித எரிச்சல்....
வலைதளம் ஓப்பன் ஆகிவிட்டது....என்ரவுடன் தூக்கம் முற்றிலும் கலைந்து உற்சாகத்துடன் தங்ஸை ஓரம் தள்ளிவிட்டு மணிமும் ஆஜரானேன். அப்பாடா... அட்மிசம் ஃபார்ம் பக்கமும் திறந்துவிட்டது...... வேகவேகமாக பெயர்,பிறந்ததேதி, வருமானம் வகையராவை நிரப்பி, பெர்த் சர்டிஃபிகேட் & கம்யுனிட்டி சர்டிஃபிகேட் அட்டாச் செய்து சப்மிட் பட்டனை அழுத்தினால்.....
செர்வர் நாட் ஃபவுண்ட்..... என்று திரையில் மின்னல்...... மறுபடியும் ஆரம்ப நிலை.... அதன் பின் தீவிரமாக துடர்ந்து F5 படையெடுப்பு அரை மணிக்கொருதரம் ஃபார்ம் திரப்பு...ஃபில் அப்பு.... செர்வர் நாட் ஃபவுண்ட்டு.......
காலை எட்டரை ஆனது நான் கீர்த்தியை பள்ளியில் விட கிளம்ப மச்சான் கணினி முன் ஆஜரானான்......
கீர்த்தியை உள்ளே அணுப்பிவிட்டு திரும்பினால் அங்கு ஏக கூட்டம் என் வயதுதொத்த (+/-) பலர் தலைவிரிகோலமாக, கண்கள் சிவந்து, முகத்தில் அதிகப்படியான சோர்வுடன்... விசாரித்ததில்..... பாவம் என்னை மாதிரியே இரவு முழுதும் கணினியுடன் மல்லுகட்டிவிட்டு தேறாமல் பள்ளியில் வந்து விசாரிக்க வந்திருக்கிறார்கள்.
வாட்ச் மேன் அறிமுகத்தால் என்னை உள்லே விட மேனேஜரிடம் ஆன்லைன் ஒர்க் ஆகததை சொல்லி விபரம் கேட்டால், இது மும்பையிலிருந்து வலைதலம் பராமறிப்பு செய்கிறார்கள். செர்வரிம் பிரச்சினை ஆகிவிட்டதாம் 9 மணிக்கி சரியாகிவிடுமாம்... என்ரு தகவல் சொன்னார். நான் வெளியில் வர கூட்டம் மோய்த்தது எல்லாருக்கும் விபரம் சொல்லி விட்டு...வீடு வந்து 9 மணி ஆனவுடன் போராடியதில்....... விடியற்காலையில் வாங்கிய அதே அல்வா.... வலதலம் திரக்கிறது...ஃபார்ம் ஃபில் அப்பு.... அதை சம்பிட் செய்தால் செர்வரிடமிருந்து அல்வா.....
அடச்சே.... என்ற அலுப்பு வந்தாலும் பையனின் படிப்பு!!! விசயமல்லவா..... இரண்டு மடக்கு டீ குடித்துவிட்டு.... கணினியில் கடமை ஆரம்பம்..... 10,11,12 மணி என்ற இடைவெளியில் மச்சானிடம் கடமையை ஒப்படைத்து விட்டு, பள்ளிக்கி சென்று தகவல் அப்டேட்.... இன்னும் ஒரு மணிநேரத்தில் சரி செய்துவிடுவார்களென்று தகவல்....(நம்ம நாராயணசாமி பேட்டியை அடிக்கடி பார்த்திருப்பார்கல் போல) ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் அதே ஒரு மணிநேரம் ஆகும் என்ர பதில்......
12 to 2 மின்தடை ... ஜாகை பக்கத்து ஏரியா பிரவுஸிங் செண்டருக்கு..... அதே அக்கபோர் 2 மணிக்கி வீடு திருன்பி வீட்டுக் கணிணியில் அதே அக்கபோர் ஆரம்பம்.... திரையைப் பார்த்துக் கொண்டே சாப்படு.... அப்பொழுதுதான் காலையில் டிஃபன் சாப்பிடாத, மாத்திரை விழுங்காதது மண்டைக்கு உறைத்து மாத்திரை விழுங்கிவிட்டு..... ஸ்ஸ்ஸ்ப்பா முடியலை...... இடையிடையே ஒரு நிமிடம் வலைதளம் ஓப்பன் ஆவதும்... 1 மணிநேரம் போங்கு காட்டுவதுமாய்.....
தங்க்ஸ் யாருக்கோ ரன்னிங்க் கமெண்ட்ரிஸ்... இடையிடையே மாம்ஸ் அவங்க அப்லை பண்ணியாச்சாம்..... இவங்க அப்ளை பண்ணியாச்சா.... என்று திகில் கிளப்பல்.....
மாலை 5 மணிக்கி சப்மிட் பண்ணி இங்கள் தகவல் சரியாக பதியப்பட்டது. 4 மணி நேரத்திற்குள் நீங்கள் சப்மிட் செய்த அப்ளிகேசன் உங்கள் மின்ஞ்சலுக்கு வரும் அதை பிரிண்ட் செய்து கையெழுத்திட்டு, கூடவே பிறப்புச் சான்றிதழ், சாதிச் சன்றிதழ் இனைத்து பள்ளியில் சேர்க்கவும் என்று தகவல்.
அடுத்த வாரம் அழைப்பு வந்தவுடன் பையனுடன் செல்லவேண்டும் இரண்டு மிஸ்’கள் பையனிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்க பேரலல்லாக எங்களிடம் படித்த படிப்பு, மாத,வருட வரும்படிகளை கேட்டு விட்டு, தகவல் வரும் என்று சொல்லியனுப்புவார்கள்.
வாரம் கழித்து நோட்டீஸ் போர்டு பார்த்து அங்கே சிலர் உர்சாகமாக துள்ளிக் கொண்டிருக்க, சீட் கிடைக்க்காத சிலர் கண்களி கண்ணீர் முட்ட (பெரும்பாலும் அம்மாக்கள்) பரிதாப நடையில் வேறு பள்ளிக்கு இதே அக்கபோர் ஆரம்பிக்கவேண்டும்.....
ஆ...ங்... சொல்ல மறந்துவிட்டேன்..... இந்த எல்லா பாடும் முடிந்து , ரிசல்ட் வரும் நாள் கையில் சுளையாக பணக்கட்டு ரெடியாக வைத்திருக்க வேண்டும்......
ஏற்கனவே என் மகள் இதே பள்ளியில்( I Std) படிப்பதால் sibling என்கிற முறையிலும், வீடு பள்ளியின் அருகில் (50மீட்டர்) இருப்பதாலும், மகள் LKG & UKGயில் Best outgoing Student award வாங்கியிருப்பதால் கொஞ்சம் அதிகப் படியான முன்னுறிமையும் குடுக்க வாய்ப்புள்ளதாத எனக்கு நானே ஒரு கணக்கு போட்டு வைத்துள்ளேன். பார்ப்போம்...இல்லையெனில் அடுத்த இறண்டு பள்ளிகள் என் ஃபாலோஅப்பில் இருக்கிறது என்ன மீண்டும் ஒரு போராட்டம் நிகழ்த்த வேண்டும் :-))))
மூன்று வருடங்கள் முன் கீத்திகா அட்மிசன் போது நடந்த நிகழ்வுகள் சுருக்கமாக...
1. அக்டோபர் மாதம் பிறந்ததும், ஒரு நாள் விட்டு ஒருநாள் பள்ளி சென்று எப்போது சேர்க்கப் படிவம் தருவீகள் என்று விசாரித்தது...
2. விண்ணப்பம் குடுக்கும் நாள் அதிகாலை மூனரை மணிக்கி பள்ளி சென்று 109வது ஆளாக க்யூவில் நின்றது... காலை எட்டேகாலுக்கு கையில் விண்ணப்பம் வாங்கி அவசரமாகவீடுவந்து குளித்து சாப்பிட்டு ஃபாரம் பிள்லப் செய்து.... 10 மணிக்கி மறுபடியும் க்யூவில் நின்று பனிரெண்டரைக்கி சேர்த்துவிட்டு வீடு திரும்பியது...
3.வாரம் கழித்து இண்டர்வியூ, பாப்பாவுக்கு தனியா, எங்களுக்கு தனியா..... (இப்ப இந்த இண்டர் வியூ இல்லைனு சொல்ராங்க...ஜஸ்ட் நாட் இஸ் யுவர் நேம், ஃபாதர்/மதர் நேம் இந்த மாதிரி மட்டும்தான் இருக்கும்போல )
4. அடுத்த வாரம் ரிசல்ட் போர்டுல பேர் பார்த்துட்டு சதோசமா வீடு....
5, அடுத்த ரெண்டாவது நாள் பணம் கட்டணும்..... 10 லிருந்து 1 மணிக்குள்ள கட்டாதவங்களுக்கு சீட் கிடைக்காது வெயிட்டிங்க் லிஸ்ட்ல இருக்கிரவங்களுக்கு ஓயிடும்..... இதுக்குனே சில பேர் குலதெய்வத்துக்கு வேண்டிகிட்டு இருப்பாங்க யாராவது பணம் கட்ட மிஸ் பண்னனும்னு....
6. ஒன் டைம் டொனேசன் + ஃபீஸ் + யூனிபார்ம் + புக்ஸ் + பஸ்கட்டனம்-தேவையெனில்.......
பள்ளி திறக்கிற நாளிலிருந்து தினமும் காலையில் தங்க்ஸ்க்கும், பாப்பாவுக்கும் பஞ்சாயத்து ஆரம்பிக்கும்... நம்ம(தந்தை’ஸ்)தலை இடையில் உருளும்......

கிராமத்தில் இருக்கும் உறவுகள் இந்த கூத்துகள பற்றி கேள்விப் பட்டால் ஒன்று ஆ... பள்லியில் சேர்க இந்த அக்கபோரா என்று வாய் பிளப்பார்கள்... அல்லது இவனுக அலம்பல்ஸ் தாங்கலைபா என்று காறி துப்புவார்கள்.........
ஏனென்றால் என்காலம் (நான் உட்பட...) முதல் இன்று வரை அங்கே பள்ளியில் சேர்ப்பது தானாக அதுபாட்டுக்கு நடக்கும் ஒரு செயல் . 5 வயதானவுடன் ஊர் பள்ளியில் போய் விட்டுவிட வேண்டியது..... அன்றைய நாலே முக்கால் ரூபாய் கட்டணத்திற்கு பதிலாக இன்றைய நூற்றி எழுபத்திஐந்து ரூபாய் கட்ட வேண்டியது... ரொம்ப எளிமை.............
