December 13, 2012

LKG அப்ளிகேசன் - பார்ட் -2முதல் வாரத்தில் முடிந்த இண்டெர்வியூ முடிவு தெரிய, இன்னும் 1 வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால், எதற்கும் இருக்கட்டும்,  சேஃப்டிக்கு அடுத்த பள்ளி ஒன்றிலும் அப்ளை செய்து வைத்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.........


இன்று அதிகாலை 4 மணிக்கி எழுந்து அவசரமாக ரெடியாகி 4:20 க்கெல்லாம் பள்ளி சென்றடைந்த போது, எனது வரிசை நெ.46 ஆக இருந்தது. விசாரித்ததில் 45வதாக நின்றிருந்தவர் 3:45 க்கே வந்து விட்டதகச் சொன்னார். முதல் நபராக நின்றவர் 2:30க்கு வந்தாராம். நான் கூட இங்கே பிளசில் யாருடனாவது ஓரண்டை இழுத்திருந்தால், நேரம் போனதே தெரியாமல் விரைவாக 2 மணி ஆகியிருக்கும், அப்படியே முகம் அலம்பிகிட்டு முதல் ஆளாக க்யூவில் நின்றிருந்திருக்கலாம் போலும்.. இந்தப் பள்ளியில் பிரிகேக்ஜிக்கும் சேர்க்கை உண்டென்பதால் எல்கேஜி-க்கி மிகக் குறைவான இடங்களே இருக்கும், கூடவே மரியாதைக்குரிய மாண்பிமினு ராசா அவர்கள் 2ஜி லைசென்ஸ் வழங்கியதைப் போலவே முதலில் வந்தவர்களுக்கு மட்டும் அப்ளிகேசன். தூங்கி எழுந்து சாகவாசமாக காலை 7:30 மணிக்குமேல் வந்தவர்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை. பாவம் புலம்பிவிட்டு சென்றார்கள்.ப்ரீகேஜி, எல்கேஜி என்று வந்தவர்களை அவர்கள் சேர்க்கை வகுப்பு வாரியாக பிரித்ததில் புதுக்கியூவில் 46வதாக இருந்த எனக்கு எல்கேஜி வரிசையில் 19வது டோக்கன் கிடைத்தது. எல்கேஜிக்கு மொத்தம் 30 டோக்கன் குடுத்தார்களாம். பகவான் க்ருபை !!!
100 ரூபாய் கட்டணம், பெயர் முகவரி குறித்துக்கொண்டு அப்ளிகேசனில் என் பையனின் பெயரைக் குறித்துக் குடுத்தார்கள் (இல்லையெனில் இதை பிளாக்கில் 5 ஆயிரத்துக்கு விற்கும் அபாயமும் உண்டு!! )17 ந்தேதி அப்ளிகேசன் சமர்பிக்க வேண்டும். 20ந்தேதி அட்மிசன் கிடைத்தா என்று போன் செய்து தெரிந்து கொண்டு , ஆம் எனில் நேரில் பள்ளி சென்று கட்டண விபரங்கள் தெரிந்துகொண்டு சொல்லும் தேதியில் கட்ட வேண்டுமாம்.

புதிதாக திருமணமான, அல்லது பள்ளியில் சேர்க்கும் வயதில் குழந்தைகள் இருக்கும் நண்பர்களுக்காக....1. முதலில் குழந்தையை சேர்க்க விரும்பும் பள்ளிகள் பட்டியல், தயார் செய்து கொண்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் நேரடியாக ஒரு தடவை சென்று விசாரித்து அந்த பள்ளிகளின் இடம், சூழல் மற்றும் தரத்தினை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.2. தற்போது எனக்கு தெரிந்து அனைத்துப்பள்ளிகளும் பள்ளிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இருக்கும் குழந்தைகளுக்கு முதல் உரிமை அளிப்பதாக தெரிகிறது. எனவே அந்த பள்ளியின் அருகாமை அல்லது அந்த வட்டாரத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு சமதூரத்தில் ஒரு இடத்தில் ( வாடைகை வீடு என்றால்) வீடு மாற்றி முகவரி ஆதாரத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.3. சில பள்ளிகள் ப்ரீகேஜிக்கே அட்மிசனும் சில பள்ளிகள் எல்கேஜி-யிலிருந்தும் அட்மிசன் நடைபெறுகிறது. அதனால் எந்தெந்த பள்ளிகளில் எந்த நடைமுறை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.4. எந்த பள்ளியில் எப்போது சேர்க்கைக்கான படிவம் கிடைக்கும் என்பதை அக்டோபர் மாதம் தொடங்கியவுடன் தொடர்ச்சியாக விசாரிக்க தொடங்கிவிடுங்கள். குறிப்பிட்ட நாளை தவறவிட்டால், கஷ்டம்.


5. ஃபார்வேர்டு கம்மூனிட்டியை சார்ந்தவர்கள் தவிர ஏனையோர் கண்டிப்பாக “சாதிச்சான்றிதழ் “ வாங்கி வைத்துவிடுங்கள். தற்போது எல்லா பள்ளிகளிலும் கேட்கிறார்கள். படிவம் சமர்பிக்கும்போது தந்தையின் சாதிச்சான்றிதழின் நகல் வாங்கிக்கொண்டாலும், அட்மிசன் கிடைத்தால் குழந்தையின் சான்றிதழ் குடுக்க வேண்டுமாம்.


6. குழந்தையை பள்ளியிக்கி எபப்டி அனுப்பபோகிறீர்கள், பள்ளி வாகனம் , ஆட்டோ, நாமே ட்ராப் செய்வது எது என்பதை கவனமாக தேர்ந்தெடுங்கள்....ரைட் இதற்குமேல் சொன்னால் தகவல்கள் என்பதைதாண்டி அறிவுரைகளாக மாறிவிடும் அபாயம் இருப்பதால் இத்துடன் ஓவர்..ஓவர்...ஓவர்... :-))))))


L K G - சேர்க்கை பரபரப்புகள்.... - பார்ட்-1  

20 comments:

வரலாற்று சுவடுகள் said...

முதல்ல துண்டை போட்டு எடத்த பிடிச்சு வைப்போம்.. அப்புறம் வந்து படிச்சிட்டு கருத்து சொல்லுவோம்!

#என்னவோ இவனுக எல்லா பதிவையும் படிச்சிட்டுத்தான் கருத்து சொல்லுற மாதிரி...கர்ர்ர்ர் த்து பரதேசி (தல மைன்டு வாய்ஸ்)

சதீஷ் செல்லதுரை said...

என்னத்த சொல்ல? நாமளே கொடுக்குற டிமாண்ட் இன்னும் இன்னும் டோக்கன் போட்டு வசூலிக்க வைக்குது.....கஷ்ட காலம்....ஒரு பக்கம் இலவச கல்வி...மறுபக்கம் கல்வி கொள்ளை

Robert said...

எழுதியிருக்கிற பாயிண்ட்ட படிக்கவே கண்ணைக்கட்டுதே... எப்புடி சீட்டு வாங்கி புள்ளைங்களை படிக்க வைக்கிறது.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா... நமது சிறுவயதில் சொல்வார்கள் "படிக்கிற புள்ள எந்த பள்ளிக்கூடமா இருந்தாலும் படிக்கும்னு". ஆனா இப்போ அதெல்லாம் வேலைக்காகுமான்னு தெரியல.. உலகத்தரம் வாய்ந்த கல்வி அப்படி, இப்படின்னு அவங்க விளம்பர படுத்துற மாதிரி நினைச்சு மனச தேத்திக்க வேண்டியது தான் போல...

நாய் நக்ஸ் said...

ஜெய்....உங்க பசங்கள படிக்க வைக்குற கஷ்டத்தை சொன்னா போதுமா....???????

உங்களை படிக்க வைக்க,,மனிதனாக்க....உங்கவீட்டு அம்மணி பட்ட கஷ்டத்தையும் சொல்லுறது....

(நக்ஸ்...கிட்டவாயேன்...கர்ர்ர்ர்ர்...தூ...!!!)

Madhu Mathi said...

இது ஒரு தொடராவே ஓடிக்கிட்டு இருக்கா.. சிறப்பு.. அந்தளவுக்கு எல்.கே.ஜி அட்மிஷன் இருக்கு.. ஹாஹாஹா.. நமக்கொண்ணும் பிரச்சனையில்லப்பா..

பட்டிகாட்டான் Jey said...

// வரலாற்று சுவடுகள் said...
முதல்ல துண்டை போட்டு எடத்த பிடிச்சு வைப்போம்.. அப்புறம் வந்து படிச்சிட்டு கருத்து சொல்லுவோம்! //

துண்டைப் போட்டுட்டு எங்கே செவ்வாய் கிரகத்துக்கே போய்டிட்டியாப்பா ஆளக்காணலை :-)))

பட்டிகாட்டான் Jey said...

// சதீஷ் செல்லதுரை said...
என்னத்த சொல்ல? நாமளே கொடுக்குற டிமாண்ட் இன்னும் இன்னும் டோக்கன் போட்டு வசூலிக்க வைக்குது.....கஷ்ட காலம்....ஒரு பக்கம் இலவச கல்வி...மறுபக்கம் கல்வி கொள்ளை //

ஒரு பக்கம் திட்டிகிட்டு மல்லுகட்டிகிட்டும் அதே சமயத்துல ஊர் போற போக்குலையும் போக வேண்டியதாருக்குது...:-))

பட்டிகாட்டான் Jey said...

/// Robert said...
எழுதியிருக்கிற பாயிண்ட்ட படிக்கவே கண்ணைக்கட்டுதே... எப்புடி சீட்டு வாங்கி புள்ளைங்களை படிக்க வைக்கிறது.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா... நமது சிறுவயதில் சொல்வார்கள் "படிக்கிற புள்ள எந்த பள்ளிக்கூடமா இருந்தாலும் படிக்கும்னு". ஆனா இப்போ அதெல்லாம் வேலைக்காகுமான்னு தெரியல.. உலகத்தரம் வாய்ந்த கல்வி அப்படி, இப்படின்னு அவங்க விளம்பர படுத்துற மாதிரி நினைச்சு மனச தேத்திக்க வேண்டியது தான் போல ////

என்னை ஸ்கூல் வாத்தியாரே வீட்ல வந்து அட்மிசன் போட்டு தூக்கிட்டு போனாரு. எம்புள்ளைக்கி இந்த பாடு :-)))

பட்டிகாட்டான் Jey said...

// (நக்ஸ்...கிட்டவாயேன்...கர்ர்ர்ர்ர்...தூ...!!!) //

எனக்கு ஒரு கமெண்ட் மிச்சம் :-)))

பட்டிகாட்டான் Jey said...

// Madhu Mathi said...
இது ஒரு தொடராவே ஓடிக்கிட்டு இருக்கா.. சிறப்பு.. அந்தளவுக்கு எல்.கே.ஜி அட்மிஷன் இருக்கு.. ஹாஹாஹா.. நமக்கொண்ணும் பிரச்சனையில்லப்பா.. //

ம்ம்ம் ஒன்னோட நிப்பாட்டிட்டீக :-)))

பிரியமுடன் பிரபு said...

:)

T.N.MURALIDHARAN said...

கல்வி உரிமை சட்டம் 2010 ன் படி குழந்தைகளுக்கோ பெற்றோர்களுக்கோ
தேர்வு எதுவும் நடத்தக் கூடாது.மேலும் மே மாதத்திற்கு முன்னதாக சேர்க்கை நடைபெறக்கூடாது என்ற விதியும் உள்ளது.ஆனால் பெரிய பள்ளிகள் இதை பின்பற்றப் படுவதில்லை. பெற்றோர்களும் புகார் அளிப்பதில்லை.

தொழிற்களம் குழு said...

எல் கே.ஜிக்கே இவுவளவு பிரச்சினையா!உங்கள் கருத்துக்கு நன்றி...

பட்டிகாட்டான் Jey said...

// T.N.MURALIDHARAN said...
கல்வி உரிமை சட்டம் 2010 ன் படி குழந்தைகளுக்கோ பெற்றோர்களுக்கோ
தேர்வு எதுவும் நடத்தக் கூடாது.மேலும் மே மாதத்திற்கு முன்னதாக சேர்க்கை நடைபெறக்கூடாது என்ற விதியும் உள்ளது.ஆனால் பெரிய பள்ளிகள் இதை பின்பற்றப் படுவதில்லை. பெற்றோர்களும் புகார் அளிப்பதில்லை. //

முரளி அண்ணே, இது எல்லாமே ஓப்பனாதேனேண்ணே நடக்குது. பள்ளிகள் தங்கள் பள்ளியின் இணைய தளத்துலேயே அறிவிப்பு செய்துதானே அட்மிசன் நடத்துறாங்க. அரசு தானாவே நடவடிக்கை எடுக்கலாம் அல்லது சரியான, கண்டிப்பாண கைடுலைன்ஸ் அறிவிச்சி கண்டிப்புடன் கண்காணிக்கலாம்.

இங்கே க்யூவில நிக்கிற பெற்றோர்களும் பொலம்பிகிட்டேதான் நிக்கிறாங்கண்ணே.

எல்லை மீறும்போது மொத்தமா ஆப்பொஉ வச்சாலும் வைப்பாங்களாட்ருக்கும்.

s suresh said...

நல்ல அறிவுரைகள்! நன்றி!

ஸ்கூல் பையன் said...

என்னதான் அதிகாலையில் வரிசையில் கால்கடுக்க நின்று அப்ளிகேசன் வாங்கி பணத்தைக் கட்டி படிக்கவைத்தாலும் நம் குழந்தைகளின் ஒழுக்கத்தையும் நன்னடத்தையும் நாம் தான் கண்காணிக்க வேண்டும்....

பட்டிகாட்டான் Jey said...

// தொழிற்களம் குழு said...
எல் கே.ஜிக்கே இவுவளவு பிரச்சினையா!உங்கள் கருத்துக்கு நன்றி... //


நல்ல பள்ளி ஒன்னு தொடங்குங்க :-)))

பட்ஜெட் எஸ்டிமேசன் ஒன்னு ரெடி பண்ணி அனுப்பி வைக்கிறேன் உங்களுக்கு :-))))

பட்டிகாட்டான் Jey said...

// பிரியமுடன் பிரபு said...
:) //

பிளஸ்லதான் இந்த ரவுசுனா இங்கேயுமா .. அவ்வ்வ்வ்வ் :-)))

பட்டிகாட்டான் Jey said...

// s suresh said...
நல்ல அறிவுரைகள்! நன்றி!

December 13, 2012 7:05 PM //

வருகைக்கு நன்றி சகோ :-)))

பட்டிகாட்டான் Jey said...

// ஸ்கூல் பையன் said...
என்னதான் அதிகாலையில் வரிசையில் கால்கடுக்க நின்று அப்ளிகேசன் வாங்கி பணத்தைக் கட்டி படிக்கவைத்தாலும் நம் குழந்தைகளின் ஒழுக்கத்தையும் நன்னடத்தையும் நாம் தான் கண்காணிக்க வேண்டும்.... //

ஆமாம். யூ ஆர் கரெக்ட் :-)))

LinkWithin

Related Posts with Thumbnails