December 09, 2012

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 63-வது பிறந்த நாள் ஸ்பெசல். 12-12-2012

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 63-வது பிறந்த நாள் ஸ்பெசல். 12-12-2012

63 பஞ்ச்கள்

1. ரஜினிக்கும் கையில் விரல்கள்தான் என்றாலும்அவை ஐந்தும் ஐந்து திசைகளைக் காட்டுமாறு அமைந்திருப்பது சிறப்பு. #ரஜினி63

2.சிறுவயதில் ரஜினிக்கு தலை நிறைய முடி இருந்ததுஅது கருப்பாகவும் இருந்தது.      உலக அமைதியைக் காப்பாற்றுவதற்காக வெள்ளை நிறத்தை முடியிலேயே ஏற்றார் ரஜினி. #ரஜினி63

3. இவ்வளோ பேரும்புகழும், செல்வாக்கும் உள்ள ரஜினி தன் இரண்டு கால்களை கொண்டு சாதாரன மனிதன் போலவே நடந்து செல்கிறார். #ரஜினி63

4. ரஜினி ஆரம்ப காலப் படங்களில் நடிக்கும்போது ஷூட்டிங் இடைவேளைகளில் சாதாரண சேரில்தான் உட்காருவார்#ரஜினி63

5. உலக வெப்பமயமாதலை குறைக்கவே ரஜினி சிகரெட் பிடிப்பதை நிறுத்தினார். #ரஜினி63

6. ரஜினி அளவுக்கு புகைப்பிடிப்பதை யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. இத்தனைக்கும் அவர் எந்த புகையிலை நிறுவனத்திலும் எந்த சன்மானமும் பெறாமல் இந்த தொண்டை செய்தார்#ரஜினி63

7. ரஜினி இரண்டு கால்களுடன் நடப்பதற்கு காரணம் தானும் சராசரி மனிதனே என்று உலகத்திற்கு நிரூபிப்பதற்காக. #ரஜினி63

8தொலைக்காட்சியில் ரஜினி படம் ஒளிபரப்பப்படும்பொழுதுஅதிலும் சினிமாவில் நடித்ததைப் போலவே நடித்திருப்பார். #ரஜினி63

9. மீசையில்லாதவர்களும் ஹீரோவாகலாம் என்று உலகத்திற்கு உணர்த்தவே தில்லுமுல்லுவில் மீசையை எடுத்துவிட்டு நடித்தார்.  #ரஜினி63

10. மாடுகளுக்கு சிகப்பு நிறம் பிடிக்காது என்பதை படையப்பாவில் காட்டியவர். #ரஜினி63

11. ஒரு காலில் கயிறு கட்டி ஜீப்பை நிறுத்திய மகான்.. கரிகால் சோழன் போல மரக்கால் மன்னன். #ரஜினி63

12. ரஜினி இரண்டு வேடம் போடும்போதுதான் இரட்டையர்களாய் வாழ முடியுமென்று வரலாறு எழுதப்பட்டது. #ரஜினி63

13. நல்லவன் வாழ்வான் கெட்டவன் சாவான். பெரியவர்களுக்கு ரஜினி சொன்ன சினிமா நீதி. #ரஜினி63

14. ஐசாக் நியூட்டனின் விதிகளை எல்லாப்படத்திலும் கேள்விக்குள்ளாக்கும் பௌதிக விஞ்ஞானி ரஜினி. #ரஜினி63

15. செல்ஃபோன்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரேரிங்டோனை வைத்து யார் தெருவில் நடக்கிறார்கள் என்று ப்ரியா படத்தில் விஞ்ஞான விந்தையை நிகழ்த்தியது ரஜினியே. #ரஜினி63

16. ரஜினி தூக்கிப் போடும் சிகரெட் கீழே வருவதற்குக் காரணம்அவருக்கு நியூட்டனைப் பிடிக்குமென்பதால்தான். #ரஜினி63

17. சிகரெட் மண்ணில் விழாமல் வாயில் விழுவதற்கு காரணம், தூக்கிப் போட்டது ரஜினி என்பதால்தான். #ரஜினி63

18. அதே நேரத்தில் புகையை மேலேவிட்டுநியூட்டனுக்கு எதிரான கருத்துகளும் உண்டு என்பதை நிரூபித்திருப்பார். #ரஜினி63

19. எதிர்வினை கிடைக்காத ஒரே சமநிலைப் பரப்பு என ஆராய்ச்சியாளர்கள் வியப்பது ரஜினியைப் பார்த்துதான்#ரஜினி63

 20. சிங்கப்பூருக்கு ரஜினி வரப்போகிறார் என்ற செய்தி கிடைத்ததும் சுத்தமானது அந்த ஊரு. #ரஜினி63

21. சினிமாத்துறைன்னா இப்படி அப்படிதான் இருக்கும் என்பதை நிரூபிக்கவே பாபாகுசேலன் படங்களை எடுத்தார் ரஜினி. #ரஜினி63

22.பெரிய வெங்காயத்தை ஒரு முறை பார்வையினாலே சின்ன வெங்காயமாக மாற்றினார் ரஜினி. #ரஜினி63

23. நீ உள்ளே போ என்ற ரஜினி வசனத்தை பலரும் தினமும் தங்கள் வீடுகளில் பிரயோகிக்கிறார்கள். ராயல்டி எதுவும் வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் மறுத்துவிட்டாராம்#ரஜினி63

24. பாபா படத்தின் அடுத்த பாகமாக ஃப்ளாக்‌ஷீப் என்ற படத்தை எடுக்கவிருக்கிறார் ரஜினி. #ரஜினி63  

25. ரஜினி வீட்டு யெல்லோபேஜஸில் அவருக்குத் தெரியாத மனிதர்களின் தொலைபேசி எண்களும் இருக்கிறது. #ரஜினி63

26. ரஜினிக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது என்று அவருக்கு ஆட்டோ ஓட்டும் மாணிக்கம் சொன்னார். #ரஜினி63

27. ஆப்பிளா ஆண்ட்ராய்டா பிரச்சினையில் ரஜினி இதுவரை யாருக்கும் சாதகமாக பேசவில்லை. #ரஜினி63

28. கேயாஸ் தியரிப்படி ரஜினி அடிக்கடி தலை முடியைக் கோதுவதற்கும் நமீதா நாளுக்கு நாள் குண்டாகிக் கொண்டே போவதற்கும் தொடர்பிருப்பிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. #ரஜினி63

29. மண்ணிற்கு வந்த முதல் ஏலியன் சூப்பர் ஹீரோவான சூப்பர்மேன்ரஜினியைப் பார்க்கத்தான் பூமிக்கு வந்து இறங்கினாராம். #ரஜினி63

30. ஜப்பானில் 7.3 லிக்டர்  பூமி அதிர்ச்சி வந்தும் சுனாமி வராதற்கு  காரணம் ரஜினியின் சிவாஜி படம் 3D 12.12.12 அன்று வெளிவருகிறதால் தான். #ரஜினி63

31. ரஜினி எவ்வளவு மது அருந்தினாலும் அவருடைய கடிகாரம் ஓடாமல் நின்றதில்லை. #ரஜினி63

32. இன்னமும் ரஜினியின் பஞ்ச் மொழிகள் பஸ்ஸில் ஏறாமல் திருவள்ளுவர் படமும் குறளும் தொங்குவதே அவரது நல்ல மனதிற்கு சான்று. #ரஜினி63

33. தன்னுடைய பேரன் தன்னை தாத்தா என்று கூப்பிட அனுமதி அளித்த உன்னத மனிதன் ரஜினி.  #ரஜினி63

35. அவர் போடுகின்ற சட்டை, பேண்ட் தொலைநோக்கி, நுண்ணோக்கி உபயோகிக்காமலே பார்ப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும். #ரஜினி63

36. இன்னமும் எந்த நோய்க்கும் ரஜினி என்ற பெயரை வைக்கவில்லை, காரணம் மருந்து கண்டுபிடிக்க சிரமப்படுவார்கள் என்பதுதான். #ரஜினி63

37. ரஜினியின் பெயர் தமிழில் 3 எழுத்து, ஆங்கிலத்தில் ஆறெழுத்து. இதையெல்லாம் படிப்பது தமிழனின் தலையெழுத்து. #ரஜினி63

38. மூன்று முகம் படத்தில் மூன்று வேடத்தில் நடித்த ரஜினி, அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் 40 வேடத்தில் ஏனோ நடிக்கவில்லை. #ரஜினி63

39. அவருடைய கண்கள் காந்தம் என்பதால் எப்பொழுதும் இரும்புப் பொருட்களை பார்ப்பதில்லை. இரும்பு மனம் கொண்டோர் அவரை நெருங்குவதும் இல்லை. #ரஜினி63

40. டீவில மேட்ச் ஹைலைட்ஸ் பாக்கும் போதே அந்த மேட்சில் விக்கட் எடுப்பவர் ரஜினி. #ரஜினி63

41. உப்புமா பாத்திரம் ஆனாலும் அதில் உப்புமாவாகவும் நடிக்கக்கூடிய வல்லமை பெற்றவர் ரஜினி. #ரஜினி63

42. ரஜினி அரசியலுக்கு வந்தால் அரசியல்வாதிகள் நடிக்க போய்விடுவார்கள் என்ற நல்லெண்ணத்தில் அவர் அரசியலுக்கே போவதில்லை என முடிவெடுத்துள்ளார். #ரஜினி63

43. பொல்லாதவன் படத்தில் பொல்லாதவனாகவும் நல்லவனுக்கு நல்லவன் படத்தில் நல்லவனாகவும் நடித்தாலும், சந்திரமுகி படத்தில் சந்திரமுகியாக ஏனோ ரஜினி நடிக்கவில்லை. #ரஜினி63

44. நிறைய பால்காரர்கள் அண்ணாமலை என்று பெயர் மாற்றிக்கொண்டு லேடீஸ் ஹாஸ்டல் வாசலில் தவம் கிடந்தார்கள் என்றால் அதான் ரஜினியின் மகிமை. #ரஜினி63

45. அம்பது ஓவர் கிரிக்கெட் டி20யாக ஆனது ரஜினி ஒரே பாட்டில் கோடீஸ்வரனாக மாறுவதை பார்த்த பிறகே. #ரஜினி63

46. ஹவ் இஸ் இட்-டுக்கு இன்னமும் விவேகானந்தா இங்கிலிஷ் டியூசன் செண்டரில் அர்த்தம் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். #ரஜினி63

47. ரஜினி தன்னுடைய டூயட்டில் ஹீரோயின்களையும் ஆட அனுமதிப்ப்பார். #ரஜினி63

48. தமிழகத்தின் மேலெ விழ இருந்த ஸ்கைலாப்பை தன் பார்வையாலேயே கடலில் தள்ளிய மாவீரன் தான் இந்த ரஜினி. #ரஜினி63

49. பல்லி மாதிரி ஒல்லியா இருந்தாலும் டில்லி வரை போய் மண்மோகன் சிங்கோட டீ குடிச்ச பெருமை ரஜினிக்கு மருமவனாய் ஆன பிறகே தனுஷ்க்கு கிடைச்சது. #ரஜினி63

50. மிஷினுக்கு இதயம் உண்டுன்னு சொன்னவர் ரஜினி..நாளடைவில் பெண்கள் மனதை படித்து எழுதி எட்நூறு பக்கத்தில் பெங்குவின் நிறுவனம் மூலம் புக்கு வெளியிடுவார். #ரஜினி63

51.சண்டைக்காட்சிகளின் போது பந்தாவே பார்க்கமாட்டார் ரஜினி. ஒன்றிரண்டு அடிகள் தன்மேலும் விழவைத்துக்கொள்வார். #ரஜினி63

52. நலிந்த மக்கள் நலமாக வாழ தன் சொத்துக்குள் அத்தனையும் தானமாக குடுக்கத்துணிந்தவர்தான் இந்த ரஜினி- முத்து/அருணாச்சலம். #ரஜினி63

53. சினிமாவில் மிமிக்ரி செய்யும் போதுகூட தன்னுடைய சொந்த குரலை மாத்திரமே உபயோகிப்பவர். #ரஜினி63

54. வேலைக்காரன் படத்தில் வேலைக்காரனாக நடித்தவர் முத்து படத்திலும் வேலைக்காரனாக நடித்துள்ளார். #ரஜினி63

55. ரஜினியை இதுவரை யாரும்  எந்த திரைப்படத்திலும்  கற்பழித்ததில்லை. #ரஜினி63

56. தன் வியர்வைத் துளியை தானே ரசாயன மாற்றம் செய்து அணுஎண்/எடைகள் மாற்றி தங்கக்காசாக மாற்றும்  வேதியியல் சமன்பாட்டை உலகுக்கு அளித்த விஞ்சானி#ரஜினி63

57. அவர் கண்பார்வையில் ஒரு தேஜஸ் தெரிவதால் ஆந்திரா பார்டரில் நின்னு தமிழ்நாட்டை உத்து பார்க்க வைக்க முயற்சிப்பதாக கோட்டை வட்டாரத்து தகவல்..இதன்மூலம் அடுத்து நுப்பது வருஷத்துக்கு கரண்ட் கட்டே இருக்காது என தெரிவிக்கிறார்கள் பிபிசி மைக் ஏந்திகள். #ரஜினி63

58. தன் படத்தில் குழந்தையாக நடித்த குழந்தைக்கி ஜோடியாக நடித்தவர், ஜோடியாக நடித்தவருக்கு மகனாக நடித்தவர், குழந்தையாக நடித்தவருக்கும் மகனாக நடிக்கி இருப்பவர், உலகுக்கு ஒரே சூரியன், இந்த திரையுலகுக்கு ஒரே ரஜினி. #ரஜினி63

59. 62 வயதானதிலிருந்து ஒரே வருடத்தில் 63வயதுக்கு முன்னேறியவர் ரஜினி.  #ரஜினி63

60. ரஜினியின் கனவில் ரஜினி ரஜினியாகவே வருவாரென்பது யாருக்கும் தெரியாத ரகசியம். #ரஜினி63

61. கேட்டை நட்சத்திரத்தில் பிறக்காவிட்டாலும், கேட்டைத் திறந்துகொண்டு நுழைவார் அபூர்வ ராகங்களில். (என்ன சம்மந்தம்னு கேட்டீங்க, பிச்சுபிச்சு). #ரஜினி63

62. கூகிள் ரஜினியைத் தேடும் முன்னர் ரஜினி கூகிளைத் தேடிவிடுவார். #ரஜினி63

63. 12.12.12. க்காகதான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருந்தது, முடிந்தது 21-ல் உலகம் அழியப்போகிறது.
12=1+2=3
21=2+1=3
63=6-3=3

கூட்டிக்கழிச்சி பாருங்க கணக்கு சரியாவரும்.
ரஜினி ஒரு வரலாற்று அதிசயம். #ரஜினி63

63-க்கு சொந்தக்காரர்கள் : பெனாத்தல் சுரேஷ், குசும்பன்,சென்ஷி, அஹ்மத் இர்ஷாத், மணிஜி, இலியாஸ் &  பட்டிகாட்டான் Jey



19 comments:

முத்தரசு said...

ஷ் . யபா .


வாழ்த்துக்கள்

ஸ்கூல் பையன் said...

63‍ம் அருமை... வாழ்த்துக்கள்... தொடருங்கள்.... நன்றி...

நாய் நக்ஸ் said...

எங்க தலைவனையே கைய பிடிச்சி இழுத்தாச்சா....
உலகம் அழிவது உறுதி....

அங்கயும் எங்க தலைவர் வந்துதான் உலகத்தை காப்பார்.........

:)))

T.N.MURALIDHARAN said...

63 ம் கலக்கல்.

Sri Lanka Tamil News said...

நல்ல ஒரு கலைஞன்
சிறந்த மனிதாபிமானி
வாழ்க பல்லாண்டு.

வரலாற்று சுவடுகள் said...

நாளைக்கு எத்தன பேறு diarrhea வந்து ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆவ போரானுவளோ தெரியலையே.?

வரலாற்று சுவடுகள் said...

//மாடுகளுக்கு சிகப்பு நிறம் பிடிக்காது என்பதை படையப்பாவில் காட்டியவர்//

அட்லீஸ்ட் இதுக்காகவாவது...இவருக்கு ஒரு கோபால் பர்ஸ் கொடுத்துருக்கலாம்..

வரலாற்று சுவடுகள் said...

//ரஜினியை இதுவரை யாரும் எந்த திரைப்படத்திலும் கற்பழித்ததில்லை//

கர்ர்ர்ர்ர்ர்ர் த்த்து

தமிழ்வாசி பிரகாஷ் said...

சூப்பர் ஜெய்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

தன் வியர்வைத் துளியை தானே ரசாயன மாற்றம் செய்து அணுஎண்/எடைகள் மாற்றி தங்கக்காசாக மாற்றும் வேதியியல் சமன்பாட்டை உலகுக்கு அளித்த விஞ்சானி. #ரஜினி63////

எப்படி இப்படியெல்லாம் ஜெய்??

பட்டிகாட்டான் Jey said...

@ முத்தரசு நன்னி... 
@ஸ்கூல் பையன் - நன்றி 


@ நாய் நக்ஸ் - பக்கத்துல வாயேன்... கர்ர்ர் த்தூ...

@T.N.MURALIDHARAN - நன்றிணே :-)))


@ Sri Lanka Tamil News - ம்ம்ம் நீங்க ரஜினி ரசிகரா :-)))

@ வரலாற்று சுவடுகள் - அம்பூட்டு நாரசமாவா இருக்குது வனா.சுனா :-))

// அட்லீஸ்ட் இதுக்காகவாவது...இவருக்கு ஒரு கோபால் பர்ஸ் கொடுத்துருக்கலாம்..//

அதென்னதுடா கோபால் பர்ஸ் ???!!!

[[[ //ரஜினியை இதுவரை யாரும் எந்த திரைப்படத்திலும் கற்பழித்ததில்லை//

கர்ர்ர்ர்ர்ர்ர் த்த்து ]]]
ஹிஹி நெம்.1 அந்த குறிப்பிட்ட பஞ்ச் என்னோடதில்லை.. நெம்.2. நீ துப்புனது எம்மேல படலை ஹி ஹி ஹி 
@ தமிழ்வாசி பிரகாஷ் - நன்றி பிரகாஷ்

[[[ தன் வியர்வைத் துளியை தானே ரசாயன மாற்றம் செய்து அணுஎண்/எடைகள் மாற்றி தங்கக்காசாக மாற்றும் வேதியியல் சமன்பாட்டை உலகுக்கு அளித்த விஞ்சானி. #ரஜினி63////

எப்படி இப்படியெல்லாம் ஜெய்?? ]]

அதெல்லாம் தானா வருது பிரகாஷ் :-))

Madhu Mathi said...

சிறப்பு..சிறப்பு..சிறப்பு...

யோசிப்பீங்களோ..

சீனு said...

என் தலைவனைப் பற்றி நீங்கள் ஆற்றிய அருமையான அற்புதமான உன்னதமான சிறப்பான மகிழ்ச்சியான புதுமையான பழமையான அதிசியமான கவிதைகளை எண்ணி கூட்டி கழித்து பெருக்கி வகுத்து .....

மிடியல.....

அஞ்சா சிங்கம் said...

நானும் ஒரு சராசரி மனிதன் தான் என்று இந்த உலகத்திற்கு உணர்த்தவே மனிதன் என்ற படத்தில் நடித்தார் ரஜினி .

வரலாற்று சுவடுகள் said...

//
சீனு said...

என் தலைவனைப் பற்றி நீங்கள் ஆற்றிய அருமையான அற்புதமான உன்னதமான சிறப்பான மகிழ்ச்சியான புதுமையான பழமையான அதிசியமான கவிதைகளை எண்ணி கூட்டி கழித்து பெருக்கி வகுத்து
//

தம்பி நீ அந்த முக்குல குத்த வச்சு ஒக்காரு...அநேகமா நீ செலக்டாகிருவன்னு நினைக்கிறேன்! :-)))

வரலாற்று சுவடுகள் said...

பட்டிகாட்டான் Jey said...

// அட்லீஸ்ட் இதுக்காகவாவது...இவருக்கு ஒரு கோபால் பர்ஸ் கொடுத்துருக்கலாம்..//

அதென்னதுடா கோபால் பர்ஸ் ???!!!
--

அதான் தல வெளிநாட்டுல கோபால்ன்னு ஒரு விஞ்சானி இருந்தாரே..தாடி கூட வச்சிருப்பாரே...இந்த வெடிக்குமே கரிமருந்து..அதுக்கு பேறு என்னவோ சொல்லுவானுகளே...ஆங்.. டைனமைட்டை அத கண்டுபிடிச்சவர் அவரு தானமே...புட்டுகிட்டரே...அவரு நெனவா...வருசம்தொரும் கொடுப்பானுவலே.....அந்த பருசு தான் கோபால் பர்ஸ்

அரசன் சே said...

இந்த பிரிச்சி மேயுறது என்பது இதுதானா? வ. சு அண்ணா .. இதை வெளக்கவும் .

வரலாற்று சுவடுகள் said...

///
அரசன் சே said...

இந்த பிரிச்சி மேயுறது என்பது இதுதானா? வ. சு அண்ணா .. இதை வெளக்கவும் .
//

யோவ் என்னாய்யா இது..... ஆளாளுக்கு என்னை அண்ணன்னு கூப்பிட்டுகிட்டு......நான் ஊரு கீருக்கு வந்து கல்யாணம் கில்யானம் பண்ணுறதா இல்லையா..

#வயசை காட்டி கொடுத்து ஊர்ல ஒரு பய பொண்ணு கொடுக்காம பன்னிருவாணுக போலிருக்கே.... ராஸ்கல்ஸ்ஸ்ஸ்ஸ்

பட்டிகாட்டான் Jey said...

[[[ Madhu Mathi said...
சிறப்பு..சிறப்பு..சிறப்பு...

யோசிப்பீங்களோ. /]]]

எல்லாம் ஒரு ஃபுலோவில கொட்டினது கவிஞ்சரே, பெனாத்தல் சுரேஷ் அண்ணேன் ஒரு பிளஸ் விட்டார் அதுல நாங்க எல்லாம் கமெண்ட்களா கொட்டினதுதான் இந்த 63-ம்.

[[[சீனு said... ]]

பயபுள்ளை கன்பீஸ் ஆகிட்டாம்போல பொலம்பிட்டு போயிருக்கான்

[[[அஞ்சா சிங்கம் said...
நானும் ஒரு சராசரி மனிதன் தான் என்று இந்த உலகத்திற்கு உணர்த்தவே மனிதன் என்ற படத்தில் நடித்தார் ரஜினி . ]]

ரைட்டூ

[[[வரலாற்று சுவடுகள் said...
தம்பி நீ அந்த முக்குல குத்த வச்சு ஒக்காரு...அநேகமா நீ செலக்டாகிருவன்னு நினைக்கிறேன்! :-))) ]]]

ஏண்டா பாவன் சீனுவே கன்பீஸ் ஆகிருக்கான் அவனைப் போய் நோண்டுறே பாவம் பயபுள்ளை.

[[[அந்த பருசு தான் கோபால் பர்ஸ் ]]

வனா. சுனா. வெளங்கிருச்சி.... பரதேசி தெளிவாக் கன்பீஸ் பன்றான்.

[[[அரசன் சே said...
இந்த பிரிச்சி மேயுறது என்பது இதுதானா? வ. சு அண்ணா .. இதை வெளக்கவும் . ]]]

வனா.சுனாவை ஏம்லே மறுபடியும் இழுத்து விட்டே அவன் சாயம்போற வரை வெளுப்பானே

[[[வயசை காட்டி கொடுத்து ஊர்ல ஒரு பய பொண்ணு கொடுக்காம பன்னிருவாணுக போலிருக்கே.... ராஸ்கல்ஸ்ஸ்ஸ்ஸ் ]]]

அரசா அப்படினா வன.சுனா.வை கைபிடிச்சி இழுத்தது உள்குத்துக்கா... அவ்வ்வ்

LinkWithin

Related Posts with Thumbnails