July 18, 2013

பதிவர் திருவிழா தேதி அறிவிப்பு

பதிவுலக நட்புகளே,

கடந்த வருடம் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா(மாநாடு) சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது தாங்கள் அறிந்ததே. சுமார் 200க்கும் அதிகமான பதிவர்கள் (பெண்களும் கனிசமான எண்ணிக்கையில்) கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் பதிவர் சந்திப்பு திருவிழா சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பதிவர் திருவிழாவிற்கான பணிகள் மெற்கொள்வதற்காக கடந்த ஆண்டை போலவே பல்வேறு பதிவர் குழுக்கள் அமைக்கபட்டு அடுத்தடுத்த ஏற்பாடுகள் செய்ய முனைந்திருக்கிறார்கள். இந்த பதிவர் சந்திப்பு திருவிழா பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் விருப்பமுள்ள பதிவர்கள் இணைந்து கொள்ளலாம்.

இந்த மாநாட்டிற்காக ஆகும் செலவுகளை சமாளிக்க விருப்பமுள்ள பதிவர்களிடம் அன்பளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் அன்பளிப்பு குடுக்க இயலாமல் இருக்கும் பதிவர்கள், தங்களின் வருகையையே அன்பளிப்பாக தருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

கடந்த வருடம் வருகைதந்த பதிவர்கள் அனைவருக்கும் பண உதவி கேட்டு மின்னஞ்சலாகவும் ஏனைய பதிவர்களுக்கு இந்த மாதிரி வெளிப்படையான பதிவுகளின் மூலமும் அன்பளிப்பு கோர உத்தேசிக்கபட்டுள்ளது. அன்பளிப்பு அளிப்பது என்பது கட்டாயம் அல்ல, என்பதனை இங்கே தெரியபடுத்தப்படுகிறது.

விழாவினை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடத்த பதிவர்கள் தங்களது ஆலோசனைகளை ஞாயிற்றுக் கிழமை தோரும் கே,கே.நகரில் உள்ள DISCOVERY BOOK PALACE-ல் மாலை 4 மணிக்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களின் போது தெரியப்படுத்தலாம், விழக்குழுவினர் அனைவரது கருத்துக்களையும் திறந்த மனதோடு கேட்டு, ஒரு நாளில் நடக்கும் நிகழ்ழ்சி நிரலில் சாத்தியப்படும் அனைத்தையும் சேர்க்க முனைவார்கள். யாரேனும் விழாக்குழுவினருடன் இணைந்து பொறுப்புகளை ஏற்று நடத்த முன்வந்தால் அவர்களையும் இனைத்துக்கொண்டு பதிவர் சந்திப்பு விழாவினை நடத்த விழாக்குழுவினர் முன் வந்திருக்கிறார்கள்.

இந்த விழாவிற்காக கதை, கட்டுரை, நகைச்சுவை, கவிதை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் மூன்று இடங்களை பெறும் பதிவர்களுக்கு விழாவின் போது பரிசுகள் வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் இன்னும் ஒரு வாரத்தில் பதிவர்களின் பதிவுகள் மூலம் வெளியிடப்படும்.

இந்த சந்திப்பிற்கு வருகைதர விரும்பும் பதிவர்கள் மற்றும் அன்பளிப்பு அளிக்க விரும்பும் பதிவர்கள் கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு தங்கள் பெயர், வலைதளமுகவரி, எந்த ஊரிலிருந்து/நாட்டிலிருந்து வருகிறீர்கள் போன்ற தகவல்களை குடுக்கவும். இந்த தகவல்கள், உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

செப்டம்பர் 1ம் தேதி (01-09-2013) ஞாயிற்றுக் கிழமை மாநாட்டு தேதியாக முந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் முடிவ் செய்யப் பட்டு, சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்த மான கட்டடம் மாநாட்டுக்காக புக் செய்யபட்டுள்ளது.
மாநாடு நடை பெறப்போகும் கட்டிடத்தின் முகப்புத்தோற்றம். (படத்தில் இருக்கும் அழகான வாலிப பையன் அடியேன் தான்)

கட்டிடத்தின் முன் பகுதியில் போதுமான இடவசதி உள்ளது.

வாயில்பகுதியிலிருந்து எடுத்த படம்.

வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் உள்ளது.


முதலில் கடந்த வருடத்தைப் போல் ஆகஸ்டு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான ஆகஸ்ட் 25 ல் நடத்தலாமா என்று ஆலோசித்து அன்று பல பதிவர்கள் TNPSC தேர்வு எழுத இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அந்த தேதி நிராகரிக்கபட்டது. செப். மாத ஞாயிற்றுக்கிழமைகளில், செப்.8 முகூர்த்த தினமென்பதால் பல பதிவர்கள் அந்த தேதிக்கு ஆட்சேபம் தெரிவிக்க அந்த தேதியும் வேண்டாம் என்று, முடிவில் செப். 1 ல் நடத்தலாம் என்று முடிவெடுக்க பட்டுள்ளது.

பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :

  1. மதுமதி kavimadhumathi@gmail.com
  2. பட்டிகாட்டான் ஜெய் pattikattaan@gmail.com
  3. சிவக்குமார் – madrasminnal@gmail.com
  4. ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com
  5. அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
  6. பாலகணேஷ் bganesh55@gmail.com
  7. சசிகலா - sasikala2010eni@gmail.com

உங்களது பெயர், உங்கள் வலைதளமுகவரி, ஊர்/நாடு, தொலைபேசி எண்(optinal) தெரிவித்தால், உணவு தயார் செய்ய, வெளியூர் எனில் தங்கும் இட வசதி செய்து குடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.

 பின்குறிப்பு : வலையுலக நட்புகள் இந்த தகவலை தங்கள் வலைதளத்தில் பதிவிடுமரு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

July 04, 2013

எப்போது தீரும் இந்த சாதிப் பிரச்சனை?

காதலை ஊக்குவிப்பதற்கு முன் காதலை ஏற்பதற்கு ஏற்ற மனநிலையை, ஒரு சமூகச் சூழலை, இந்த சாதிய கட்டமைப்புகளுக்குள் சிக்குண்டு கிடக்கும் இந்த சமூகத்திற்கு சொல்லித்தர வேண்டியது அல்லது அதனை தயார் செய்வதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும் போல தெரிகிறது.

சாதி ஒழிப்பென்பது பார்ப்பனீயத்தை ஒழித்தால் மட்டுமே சரியாகிவிடும் என்பது போன்ற ஒரு மாயதோற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமே தமிழகத்தின் திராவிட இயக்கங்கள்்்துதான் முதல் வேலையாக இருக்க வேண்டும் போல. செய்த சாதனையாக தெரிகிறது.
 
இத்துனை வருடங்களாக, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்த பட்ட, தாழ்த்தபட்ட என்ற வரையறைக்குள் சாதிகளை அடக்கி வெளிப்பேச்சில் மேடைகளில் சாதிக்கி எதிராக பேசிக்கொண்டும், செயல் பாடுகளில் சாதிகளின் வீரியம் குறைந்துவிடாமல் கவனமாக பார்த்துக் கொண்டும், எந்த சாதி மக்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த சாதி பார்த்து தேர்தல் சீட்டு வழங்கியும், அல்லது பெரும்பான்மை எண்ணிக்கை மக்கள் இருக்கும் சாதிச் சங்க தலைவர்களுக்கு உரிய மரியாதை அளித்து அவர்களுடன் அரசியல் உடன்பாடுகள் செய்துகொண்டும், உண்மையில் சாதியை அரசியல் அதிகாரம் என்ற போதைக்காக வளர்த்துக் கொண்டிருந்ததுதான் திராவிட அரசியலின் சாதனையாக தோன்றுகிறது.

பார்ப்பனீய எதிர்ப்பு என்ற ஒற்றைச் சொல்லால் மற்ற சமுதாய சாதி ஏற்றதாழ்வுகள் மறக்கடிக்கபட்டது என்பதே கண்கூடு.

சாதிய துவேஷத்தை வேண்டுமானால் நான்கு தற்குறிகளால் ஒரிரவில் பற்ற வைத்துவிடமுடியும், ஆனால் சாதிய ஒழிப்பிற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூகத் தலைவர்களிடமிருந்து நேர்மையான தன்னலமற்ற அனுகுமுறைகள் தேவை தொடர்ச்சியாக ஒரு தலைமுறைக்கேனும் தேவை, அதை இன்றைய ஓட்டு வங்கி அரசியலில் சாத்தியமாகப் படவில்லை.

இன்றைய சம்பவம் போன்ற நிகழ்வுகள், அதன் எதிரொலியாக உணர்ச்சிபூர்வமாக எழுப்பப்படும் கண்டணங்களால் ஏதும் பலன் இருக்குமா தெரியவில்லை.

பமக,விசிகே,கொமுக,புத இன்னபிற சாதீய கட்சிகள் அனைத்தும் முற்றிலும் புறக்கணிக்கப் படவேண்டும். மாறாக இது போன்ற சம்பவங்கள் அவரவர் சாதி மக்களை ஒன்றினைத்து, அவர்களது சாதி சார்ந்த அமைப்புகளுக்கு அதிக பலத்தை தந்துவிடுகிறது.

ஒரு பார்ப்பண வீட்டுக்குள் செல்ல அல்லது அவர்களுடன் திருமண சம்பந்தம் வைத்துக்கொள்ள ஏனைய சாதிகள் எப்படி மறுக்கப்படுகிறதோ அதே போல் பிற்படுத்தப்பட்ட சாதிகள் தாழ்த்தப்பட்ட சாதிகளை தள்ளிவத்திருப்பதும், ஏன் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயே ஒரு தேவேந்திரகுல வெள்ளால சமூக அதே தாழ்த்தப்பட்ட பிரிவுக்குள் இருக்கும் ஒரு சக்கிலிய சமுதாயத்தை தன்னிலிருந்து ஒதுக்கியே வைத்திருக்கிறது. இதுதான் இன்றைய சமூகத்தில் நடைமுரை யதார்தத்தில் இருக்கும் நிதர்சனமான உண்மை.

ஆனால் பார்ப்பனீயத்தை எதிப்பதோடு நின்றுவிடுகிறது பகுத்தறிவு,. அல்லது பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தபட்ட சமூகத்திற்கிடையே இருக்கும் வேறுபாடுகளை குறைகூறுவதோடு நின்றுவிடுகிறது சமூகப்புரட்சி, தழ்ழ்த்தப்பட்ட பிரிவுகளுக்குள் உள்ள சாதீயம் பற்றி பெரிதாக எங்கும் பேசப்பட்டதாக தெரியவில்லை. சாதீய தீண்டாமை அல்லது ஒரு பிரிவு மற்ற பிரிவு மக்களை இழிவாக நடத்தப்படும் கொடுமை சங்கிலிதொடர்போல் ஐயர் அயங்காரிலிருந்து கடைநிலையாக கருதப்படும் தாழ்த்தபட்ட சீர்மரபினர் வரை சாதீயம் வேரூன்றி இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

கல்வி பொருளாதாரம் போன்றவற்றில் சமத்துவம் ஏற்பட்டால் பாதி அளவுக்கான பிரச்சினை தீரும் என்று தோன்றுகிறது. இன்றைய சீழ் பிடித்த சமுதாயச் சூழலை சரியாக்காமல், அவங்க சாதியைச் சார்ந்த பொண்ணுகளை இழுத்துவச்சி தாலியை கட்டுங்கடா என்றும், அவங்க சாதிபசங்க நம்ம சாதி பெண்ணை காதலிச்சா கழுத்தை வெட்டுங்கடா என்றும் கூறிக் கொண்டிருக்கும் சமுதாய தலைவர்களை கொண்டிருக்கும் வரை சாதி பார்க்காமல் மனதால் ஈர்க்கபட்டு செய்யப்படும் தூய காதல் கூட வெற்றிபெறப்போவதில்லை.LinkWithin

Related Posts with Thumbnails