June 28, 2010

டெண்ட்கொட்டாயில் படம் பார்த்த அனுபவம்மூன்று நாள் விடுமுறயில் சொந்த கிரமத்திற்கு சென்றிருந்தேன். ஊருக்கு செல்லும்போதெல்லாம், பால்ய நண்பர்களுடன் எங்க ஊர் டெண்ட்கொட்டாயில் படம் பார்ர்க்க செலவது வாடிக்கை ( ரிலீசாகி ப்ரிண்ட் எல்லாம் தேய்ந்து போன நிலையில் அதரப்பலசான படங்கள் தான்). இந்த தடைவை ஊருக்கு சென்ற போது மழை ஆரம்பித்திருந்ததால், பெரும்பாலான நண்பர்கள் விதை விதைக்க, களையெடுக்க, தண்ணீர் கட்ட என்று மும்முரமாக இருந்தார்கள், இவர்களை தேடிப் பிடிக்க தோட்டவெளிகளில் திரிய வேண்டியாகிவிட்டது. ஒருவழியாக சிலரை பார்த்துவிட்டு, மதியம் அவர்கள் கொண்டு வந்திருந்த கஞ்சியை(எளிமையான சாப்பாடுதான் ஆனா அந்த ருசிக்கு ஈடு கிடையாது) பகிர்ந்து சாப்ட்டிட்டு வீடு வர இரவாகிவிட்டது. சரி தூங்கலாம் என்றால், எனது அக்கா பையன் , சினிமாவுக்கு போலாம் மாமா என்று அடம்பிடிக்க ஆரம்பித்தான்.

நண்பர்கள் தோட்ட வேலைகளில் பிஸியாகி விட்டதால்( அவர்கள் பெரும்பாலும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் தோட்டத்திற்கு கிளம்பி விடுவார்கள்) இன்று மாறுதலுக்கு அக்கா பையனுடன் செல்ல தீர்மானித்தேன்.

ஒருவழியாக கிளம்பி கொட்டாயிக்கு முன் ரோட்டிலுள்ள கடையில் ( எல்லாம் நம்ம மாமன்,மச்சான், பங்களிகதுதான், ரெண்டு டீக்கடை, ஒரு புரோட்டா ஸ்டால் மட்டும்தான், இப்பத்தான் கவருமெண்டு புண்ணியத்துல டாஸ்மாக் ஒன்னு புதுசா வந்திருக்கு) டீ சொல்லிவிட்டு ( சென்னையில் இருப்பதால் டீ ஒசி, பதிலுக்கு சென்னை வந்தால் 4 நாலாவது வீட்டில் டேரா போடுவார்கள்) உட்கார்ந்தேன். திடீரென்று மாமா முதல் சோ விட்டுட்டாய்ங்க நான் போய் டிக்கெட் எடுக்க கியூவில் நிக்கிறேன் என்று சொல்லி அக்கா பையன் போனான். சிறிது நேரத்தில் ஓடி வந்து மாமா எனக்கு டிக்கெட் கொடுக்க மாட்டேனுட்டு டிக்கெட் கவுண்டரை மூடிட்டாங்க வந்து என்னானு கேளுங்க என்று வந்தான், எனக்கு ஒரே கொழப்பம், தக்காளி நம்மூர் கொட்டாயில நமக்கே டிக்கெட் இல்லையா, வாடா இன்னிக்கு கொடாய பிருச்சுருவோம் என்று சொல்லி ஒரே கலேபரம், ஒருவழியாக, கொட்டாய் ஓனரு பேச்சிவார்த்தக்கு வந்தார், அதெப்படி நீங்க டிக்கெட் கொடுக்க மாட்டேனு சொல்லாம்னு எகிற ஆரம்பித்தேன், அப்பதான் தெரிஞ்சது 2 வது சோ பாக்க நானும், என் அக்கா பயனும் மட்டும் தான் வந்திருக்கிறோம் ( தூரல் விழுந்து கொண்டிருந்தது காரணமா, வெவசாய வேலைகள் அதிகமாகிவிட்டது காரணமா தெரியவில்லை ). உங்க ரெண்டு பேருக்காக எப்படி படத்த ஓட்டுரது என்ற கொட்டாய் ஓனரின் வாதம் ஒரு புரம், படம் பார்க்காமல் வீட்டுக்கு வரமாட்டேன் என்று எனது அக்கா பையனின் மன்றாடல் ஒருபுரம். அதற்குள் ரோட்டுகடை மக்கள் வாடிக்கையாளர்கள் என்று சிறு கூட்டம் சேர்ந்துவிட்டது. பங்காளி சென்னையிலிந்து நம்ம கொட்டயில் படம்பார்க்குறதுக்காகவே வந்துருக்கான்யா ஏமத்திராதயா என்று நமக்கு ரெகமெண்டேசன் வேறு. கொட்டாய் ஓனர் குறந்தது 12 பேர் ( அது என்ன 12 பேர் கணக்கு என்பது இன்ற்வரை எனக்கு தெரியாது) வந்தால்தான் படம் போடுவோம்னு ஒரே பிடிவாதம்.
கடைசியில்  நான் 12 டிக்கெட்டுக்கான காசை கொடுப்பது எனவும், கொட்டயில் படத்தை ஓட்டுவது எனவும் ஒரு இன்ஸ்டண்ட் பஞ்சாயத்து தீர்ப்பு கூறப்பட்டது. ( 12 டிக்கிட்டுக்கும் சேர்த்து கொடுத்த பணம், நம்ம சென்னையில் தியேட்டரில் விற்கும் ஒரு டிக்கெட் விலையை விட ரொம்பவும் கம்மி என்பது கூடுதல் தகவல்). சரியென்று ஒருவழியாக படம் ஆரம்பித்தது, உலக அழகிகளில் நம்ம ஐஸூக்கு அடுத்த படியான அழகு இந்த படத்தின் நாயகி என்ற எண்ணம் இருந்ததால் சரி பார்ப்போமே என்று என்னை நானெ சமாதானம் செய்துகொண்டேன். படம் போட்டு 20 நிமிஷம் ஆகியிருக்கும் மெதுவாக தூக்கம் வருது வீட்டுக்கு போலாம் மாமா என்றான் அனது அக்கா பையன். எனக்கு பஞ்சாயத்தெல்லாம் கூட்டி படம் போட சொல்லிவிட்டு இப்படி தூக்கம் வருதுனு சொல்றானே, சின்னப் பய புத்திய காட்டிடானே என்று கோபமாக இருந்தாலும், கொட்டாய் ஓனர், ஆபரேட்டர், வேலை செய்யும் 2 பேர் என்று எல்லொருக்கும் விடுதலை கொடுக்கலாம் என்ற நல்லெண்ணத்தில், படத்தை நிறுத்த சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். இப்பொதும் ஊருக்கு சென்றால் என்ன மாப்ள இன்னிக்கு 2 வது சோ போவோமா என்று என்னை கிண்டலடிக்க காரணமாக இருந்துவிட்டது இந்த நிகழ்வு.

(உங்களுக்கு ஏதும் இந்த மாதிரி அனுபவம் இருக்குங்களா?)


டிஸ்கி : பதிவு ப்டிச்சிருந்தா பின்னூட்டமும் அப்படியே ஓசில ஒரு ஓட்டும் போட்ருங்க நண்பர்களே

June 26, 2010

பதிவுலக சாப்ளின்களின் அதிரடி காமெடிகள்எச்சரிக்கை
இங்கே குறிப்பிட பட்டுள்ள பெயர்கள் யாவும் எனது சொந்த கற்பனையே, யாரையும் குறிப்பிடுபவை அல்ல (ங்கொய்யாலே என்னமா கற்பணை  பன்னிருக்கே, உன்னை அடிச்சுக்க ஆள் கிடையாதுடா Jey) எனபதையும் ,  மற்றபடி இந்த பதிவு எனக்கு மெயிலில் வந்ததை தமிழில் மொழி பெயர்த்து எனது கற்பணை கலந்து எழுதியது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

முஸ்கி : படிச்சிட்டு என்னோட டவுசரை கிழிக்கனும்னா, நாடாவ கழுத்துல கட்டி தொங்க விடனும்னா, இல்ல சூஸ் பிழியனும்னா,  தனி ரூம்ல வச்சி நாலு பேருக்கு தெரியாம செய்ங்க, பப்ளிக்கா வேணாம் சொல்லிட்டேன்.
***********************************************************
1.

நம்ம பன்னிகுட்டி ராமசாமி தாய்லாந்துக்கு ஒரு குஜால் ட்ரிப் போயிட்டு வந்தவுடனே முத்துகிட்ட கேக்குறாரு,
முத்து என்னை பார்த்தா வெளிநாட்டுகாரன் மாதிரியா தெரியுது?.

முத்து : இல்லையே, ஏன் கேக்குறே?

ன்னிகுட்டி ராமசாமி :  தாய்லாந்துல ஒரு ஃபிகரு என்ன பாத்து நீ வெளிநாடானு கேட்டிச்சி அதான்.

***********************************************************
2.

சுற்றுலா பயணி : உங்க ஊர்ல பெரிய மனுசங்க யாராவது பிறந்திருக்காங்களா? ( நம்ம ஊர் பிரபலங்களை பற்றி தெரிந்துகொள்ளும் ஆசையில்)

மங்குனி : இல்லை சார், குழந்தைங்க மட்டும்தான் பிறக்குறாங்க.

***********************************************************
3.

ஆசிரியர் : காந்தி ஜெயந்தியை பற்றி சிறு குறிப்பு எழுதுங்க.

மங்குனி எழுதுறார் : காந்தி இந்தியா சுதந்திரம் வாங்க பாடுபட்டவர், ஆனா இந்த ஜெயந்தியை பற்றி எனக்கெதுவும் தெரியாது ( மனசுக்குள், இந்த ஃபிகரு யாருன்னு தெரிஞ்சா தேத்திருக்கலாமே?. வட போச்சே)
***********************************************************
4.

இண்டெர்வியூவில்

டேமேஜர் ரமேஷ்:  3 வது மாடியில நீ இருக்கும் போது தீப்பிடிச்சிருச்சினு கற்பணை பன்னிக்கோ, எப்படி அங்கிருந்து தப்பிப்பே?

பட்டாபட்டி : ங்கொய்யாலே கற்பனை பன்றத நிறுத்திருவேன் ( நமக்கு இருக்கிர அறிவுக்கும் தெறமைக்கும் இவன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியிருக்குதே?.)
***********************************************************
5.

பன்னிகுட்டி ராமசாமி : என்னோட மொபைல் பில் எவ்வளவு?.
கஸ்டமர் கேர் லேடி : 123 டயல் பன்னினா கரண்ட்(current) பில் எவ்வளவுனு தெரியும் சார்.

பன்னிகுட்டி ராமசாமி : ஸ்டுபிட்,  நான் கேட்டது மொபைல் பில், கரண்ட்(Electricity) பில் இல்லை.

**************************************************************
6.

முத்து :  அந்த பொண்ணுக்கு காது கேக்காதுனு நினைக்கிறேன்

மங்குனி  : உனக்கு எப்படி தெரியும்?

முத்து : நான் அவகிட்ட ஐ லவ் யூ னு சொன்னேன்,    ஆனா சம்பந்தமில்லாம, நான் போட்டிருக்கிற செப்பல்ஸ் புதுசுனு சொல்லிட்டுபோறா.
மங்குனி : சரி சரி பிய்ஞ்ச செருப்பு போட்டிருக்கிர பொண்ணா பார்த்து சொல்லு தேரினாலும் தேரும். (அப்பதான் செருப்பு பிய்ஞ்சாலும் பரவா இல்லைனு அடிப்பாய்ங்க, பரதேசி சாவட்டும்)

***********************************************************
7.

பருப்பு மோகன்  : விலங்குகளிலேயே எது பழமையான விலங்கு?

பன்னிகுட்டி ராமசாமி : வரிக்குதிரை தான்.

பருப்பு மோகன்  : எப்படி?

பன்னிகுட்டி ராமசாமி : அதுதா ப்ளாக் & ஒய்ட்ல இருக்கு

( ஓவரா மொக்கய போடுராய்ங்கலே இவங்க ரெண்டு பேரையும் செம்மொழி மாநாட்டுக்கு அனுப்பி பழி தீர்த்துகிடா என்ன?.)
***********************************************************
8.

ஃபிரபல பதிவர் Jey சாஃப்ட்வேர் கம்பனி இண்டெர்வியூவில்
டேமேஜர் ரமேஷ் :  உனக்கு M S Office தெரியுமா?

ஃபிரபல பதிவர் Jey : நீங்க அட்ரஸ் கொடுத்தா கரெக்டா அங்க போயிருவேன் சார். (ங்கொய்யாலே, வேலைகேட்டு வந்தா அந்த ஆபீஸ் தெரியுமா , இந்த ஆபீஸ் தெரிமானு டார்ச்சர் பன்றானே இந்த டேமெஜர்)

***********************************************************
9.

பருப்பு மோகன் : யேசு, புத்தர், கிருஷ்ணா, ராம், காந்தி அப்புறம், மஹாவீரர் இவங்களுக்கு இடையில உள்ள ஒற்றுமை என்னனு தெரியுமா? ( இவய்ங்க எல்லாம் யாருன்னு நம்மளயே கேட்ருவானோ)
மங்குனி அமைச்சர் : ஹா ஹா ஹா இது கூட தெரியாமலா அமைச்சரா இருக்கேன், இவங்க எல்லோரும் அரசு விடுமுறை நாள்ல பிறந்தவங்க.(தக்காளி கைல சிக்குனா விலா எலும்பை உருவி சூப் வச்சி குடிக்கலாம்னா, எட்ட நின்னு கேள்வி கேட்டுட்டு ஓடிபோய்ட்டானே, நாம அவ்வ்வளவு டெர்ரராவா தெரியுரோம்)
**************************************************************
10.

பட்டாபட்டி : ஆரஞ்சு பழத்துக்கும் ஆப்பிள் பழத்துக்கும் என்ன வித்தியாம்? ( குத்துமதிப்பா கேப்போம், பன்னாட சாகட்டும்)

ஃபிரபல பதிவர் Jey  ஆரஞ்சு பழத்தோட கலர் ஆரஞ்சு, ஆப்பிள் பழத்தோட கலர் ஆப்பிள் கிடையாது.( தக்காளி நம்ம புத்திசாலினு கொல்லபேருக்கு தெரியலையே?...)
***********************************************************

டிஸ்கி :  என்னோட முதல் பதிவுக்கு தந்த ஆதரவை தயவுசெய்து தரவும், கள்ள ஓட்டு போட்டாவது ஓட்டு எண்ணிக்கய அதிகமாக்கிருங்க , என்று என் இதயத்தில் குடியிருக்கும் (அங்க மட்டும் தான்யா இடம் இருக்கு) பதிவுலக நண்பர்கள் மற்றும் வாசகர்களை கேட்டுக்கிறேன்), வருகைதரும் அம்மனிகளுக்கு இலவசமாக 3 புஸ்தகங்கள் (  சமையல் சக்ரவர்த்தி மங்குனி அமைச்சரின் சமையல் புக் + செம்மொழிக்கவிஞன் பட்டாபட்டி எழுதிய கவுஜ புக்  + சந்தேக சாம்ராட் ஜெய்லானி அவர்கள் எழுதிய தீர்க்கபடாத 10001 சந்தேகங்கள் எனற் புக்)  வழங்கப்படும். 

June 25, 2010

கொஞ்சம் திரும்பி பாருங்கள்

     அது ஒரு பொருளாதர ரீதியாக பின்தங்கிய ஊர். அங்கு மனித நேயமிக்க தச்சு வேலை தொழிலாளி, அதிகாலை அடுத்த ஊருக்கு வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பும் சராசரி வழ்க்கை. அந்த ஊரில் இறந்தவர்களை மரத்தாலான சவப்பெட்டியில் வைத்து புதைக்கும் பழக்கம். ஒவ்வொரு இறப்பின் போதும் இறந்தவரை சார்ந்த குடும்பம், உள்ளூரில் சவப்பெட்டி கிடைக்காமல் அடுத்த ஊர் சென்று அதிக விலை கொடுத்து வாங்கி வரவேண்டிய நிலை, இதனால் பொருளாதார பற்றாக்குறை மற்றும் அலைச்சல் சேர்ந்து, உயிர் இழப்பின் துக்கத்தை மேலும் அதிகரிக்கிறது. 

       அந்த தச்சு தொழிலாளிக்கு, அந்த மக்களின் துயரத்தை போக்க, இறப்பு ஏற்படுகிற நாள் மட்டும் வேலைக்கு விடுப்பு கொடுத்து விட்டு, அடக்க விலையில் சவபெட்டிசெய்து உதவி செய்யும் எண்ணம் எழுகிறது. அதை செயல் படுத்தும் போது சக மனிதர்களுக்கு உதவியதில் உள்ளூர ஆனந்தம். நாட்கள் நகர்கின்றன, இடையில் சில காலம் இறப்பின் எண்ணிக்கை கூட , ஏற்கனவே செய்து வந்த வேலையை விட்டு விட்டு சவப்பெட்டி செய்வதை முழு நேர தொழிலாக தொடர்கிறார். தன் வாழ்க்கை தேவைக்காக அடக்கவிலையுடன் சிறிதளவு லாபம் கூட்டி விற்கும் நிலை. ஊரில் உள்ள மக்களுக்கு தச்சரின் மேல் அன்பும் பாசமும் அதிகரிக்கிறது, தச்சனுக்கும் தான் மக்களுக்கு உதவியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

   சிறிது காலம் செல்கிறது ஊரில் இறப்புகள் குறைகிறது. தச்சனுக்கு வருமானம் குறைகிறது. ஒரு காலை நேரம் தச்சன், வீட்டு திண்ணையில் உட்கர்ந்து கொண்டு யாராவது சவபெட்டி வாங்க வருகிறார்களா என்று எதிர்பார்த்து உட்கார்ந்துகொண்டிருக்கிறான்.

   திடீரென்று தான் எதை எதிபார்த்து கத்திருக்கிரோம் என்ற நினைப்பு அவனை துனுக்குற வைக்கிறது, கண்ணில் தாரைதாரையாக நீர்.


  தச்சன், தான் சக மனிதனின்  துயரததை போக்க மேற்கொண்ட ஒரு செயல், தன்னையும் அறியாமல் யாருக்காவது மரணம் ஏற்பட்டு, சவப்பெட்டி வாங்க வரமாட்டார்களா? என்ற நிலையில் இருப்பதை எண்ணி வருந்துகிறான்.

   மீண்டும் அடுத்த ஊர் வேலை, விடுமுறை நட்களில் சேவை, சேர்த்த பொருளின் மீதியில் அடுத்தவருக்கு உதவி, இது தச்சனின் புதிய வாழ்க்கை.

   பின் குறிப்பு : சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன், மெரினா கடற்கரையில் சுண்டல் சாப்பிட்டு (உபயம் - சுண்டல் விற்கும் சிறுவன் ) அந்த பேப்பரில் படித்த கதை, எழுதியவர் பெயர்/ எந்த பத்திரிக்கை எனக்கு நினைவில்லை.

   அந்த எழுத்து நடையின் வீச்சு மற்றும் ஆழம் அதிகம். என் நினைவில் நின்ற கருவை வைத்து இங்கு பதிவிடுகிறேன்.

இந்த கதை சொல்லும் நீதி :

இன்று பல்வேறு துறைகள்  (தனியார், அரசுத் துறைகள், தன்னார்வ அமைப்புகள் etc…)  எந்த நோக்கத்த்ற்காக அது தோற்றுவிக்க பட்டதோ , அந்த அடிப்படை அடிப்படை நோக்கத்தில்/கொள்கையில்/செயல்பாடுகளிலிருந்து வெகுதூரத்தில் வந்து நிற்கின்றன, ஏன் இன்னும் சொல்லப்போனால் அதன் நோக்கத்திற்கு எதிர்மறையாக கூட செயல்பட்டுகொண்டிருக்கின்றன.

என் கன்னோட்டத்தில் சில அமைப்புகள், தனியார்  மற்றும் அரசு துறைகள் பற்றி சுருக்கமாக ;

  1. அரசியல்வாதிகள் : தன்னலம் இல்லாமல் மக்களை கல்வி, பொருளாதரம் ,சுகதாரம், வழிகாட்டுதல் என்று சமூக மேம்பாட்டுக்காக செயல்பட வேண்டியவர்கள்,  அதற்கு நேரெதிராக சுயநலமாகவும், சமூக அக்கறை இன்றியும் செயல்பட்டுகொண்ட் இருக்கிறார்கள்.(இவர்கள் தெரிந்தே தவறு செய்து கொண்டிருக்கிறார்கள் )
  2. காவல்துறை : சுருக்கமாக சொன்னால் மக்களுக்கு உற்ற நண்பனா இருந்து, சமூகத்தில்  நிலவும், பல்வேறுதரப்பட்ட குற்றங்களை குறைத்து அமைதியை ஏற்படுத்துவது அதன் அடிப்படை நோக்கம். ஆனால், இன்று பெரும்பாலும் அதிகாரத்தை பயன்படடுத்தி எந்தெந்த வழிகளில் பணம் பன்னுவது என்ற ரீதியில் தான் செயல்படுகிறது.

3.  வங்கிகள் : இவைகளின் செயல்பாடும் பல சமயங்களில் அதன் நோக்கத்திலிருந்து மாறுபட்டே செயல்படுகிறது. சமீபத்தில் சக பதிவர் திரு. திரவிய நடராஜன் சார் அவர்கள் கூட, ஒருகுறிப்பிட்ட சேவை குறைபடு பற்றி கோபத்தோடு பதிவிட்டிருந்தார்கள்

இதுமாதிரி, வருமானவரித்துறை, கல்வி, சுகாதாரத்துறை, சட்டம், நீதிதுறை (சமீப காலங்களில் பல சர்ச்சைகள்) etc…  என்று தனிதனியாக பதிவிடலாம்.

என் மனதுக்குள் தோன்றுவதை முழுமையாக எழுத்துக்களில் வெளிப்படுத்தும் திறமை என்னிடம் இல்லை என்பதை  எழுத ஆரம்பித்தவுடனே தெரிந்துகொண்டேன்.

இது எனது முதல் பதிவு, எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகள் இருப்பின் பொறுத்துக்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறேன்

ஹலோ மைக் டெஸ்டிங் 1 2 3
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள ஃ


க் ங் ச் ஞ் ட் ந் த் ண் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்


LinkWithin

Related Posts with Thumbnails