சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 63-வது பிறந்த நாள் ஸ்பெசல். 12-12-2012
63 பஞ்ச்கள்
63 பஞ்ச்கள்
1. ரஜினிக்கும் கையில் 5 விரல்கள்தான் என்றாலும், அவை ஐந்தும் ஐந்து திசைகளைக் காட்டுமாறு அமைந்திருப்பது சிறப்பு. #ரஜினி63
2.சிறுவயதில் ரஜினிக்கு தலை நிறைய முடி இருந்தது, அது கருப்பாகவும் இருந்தது. உலக அமைதியைக் காப்பாற்றுவதற்காக வெள்ளை நிறத்தை முடியிலேயே ஏற்றார் ரஜினி. #ரஜினி63
3. இவ்வளோ பேரும்புகழும், செல்வாக்கும் உள்ள ரஜினி தன் இரண்டு
கால்களை கொண்டு சாதாரன மனிதன் போலவே நடந்து செல்கிறார். #ரஜினி63
4. ரஜினி ஆரம்ப காலப் படங்களில்
நடிக்கும்போது ஷூட்டிங் இடைவேளைகளில் சாதாரண சேரில்தான் உட்காருவார். #ரஜினி63
5. உலக வெப்பமயமாதலை குறைக்கவே ரஜினி
சிகரெட் பிடிப்பதை நிறுத்தினார். #ரஜினி63
6. ரஜினி அளவுக்கு புகைப்பிடிப்பதை யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. இத்தனைக்கும் அவர் எந்த புகையிலை நிறுவனத்திலும் எந்த சன்மானமும் பெறாமல் இந்த தொண்டை செய்தார். #ரஜினி63
7. ரஜினி இரண்டு கால்களுடன் நடப்பதற்கு
காரணம் தானும் சராசரி மனிதனே என்று உலகத்திற்கு நிரூபிப்பதற்காக. #ரஜினி63
8. தொலைக்காட்சியில் ரஜினி படம் ஒளிபரப்பப்படும்பொழுது, அதிலும் சினிமாவில் நடித்ததைப் போலவே நடித்திருப்பார். #ரஜினி63
9. மீசையில்லாதவர்களும் ஹீரோவாகலாம் என்று உலகத்திற்கு உணர்த்தவே தில்லுமுல்லுவில் மீசையை எடுத்துவிட்டு நடித்தார். #ரஜினி63
10. மாடுகளுக்கு சிகப்பு நிறம் பிடிக்காது என்பதை படையப்பாவில் காட்டியவர். #ரஜினி63
11. ஒரு காலில் கயிறு கட்டி ஜீப்பை நிறுத்திய மகான்.. கரிகால் சோழன் போல மரக்கால் மன்னன். #ரஜினி63
12. ரஜினி இரண்டு வேடம் போடும்போதுதான் இரட்டையர்களாய் வாழ முடியுமென்று வரலாறு எழுதப்பட்டது. #ரஜினி63
13. நல்லவன் வாழ்வான் கெட்டவன் சாவான்.
பெரியவர்களுக்கு ரஜினி சொன்ன சினிமா நீதி. #ரஜினி63
14. ஐசாக் நியூட்டனின் விதிகளை எல்லாப்படத்திலும் கேள்விக்குள்ளாக்கும் பௌதிக விஞ்ஞானி ரஜினி. #ரஜினி63
15. செல்ஃபோன்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, ரிங்டோனை வைத்து யார் தெருவில் நடக்கிறார்கள் என்று ப்ரியா படத்தில் விஞ்ஞான விந்தையை நிகழ்த்தியது ரஜினியே. #ரஜினி63
16. ரஜினி தூக்கிப் போடும் சிகரெட் கீழே வருவதற்குக் காரணம், அவருக்கு நியூட்டனைப் பிடிக்குமென்பதால்தான். #ரஜினி63
17. சிகரெட் மண்ணில் விழாமல் வாயில்
விழுவதற்கு காரணம், தூக்கிப் போட்டது ரஜினி என்பதால்தான். #ரஜினி63
19. எதிர்வினை கிடைக்காத ஒரே சமநிலைப் பரப்பு என ஆராய்ச்சியாளர்கள் வியப்பது ரஜினியைப் பார்த்துதான். #ரஜினி63
21. சினிமாத்துறைன்னா இப்படி அப்படிதான் இருக்கும் என்பதை நிரூபிக்கவே பாபா, குசேலன் படங்களை எடுத்தார் ரஜினி. #ரஜினி63
22.பெரிய வெங்காயத்தை ஒரு முறை
பார்வையினாலே சின்ன வெங்காயமாக மாற்றினார் ரஜினி. #ரஜினி63
24. பாபா படத்தின் அடுத்த பாகமாக ஃப்ளாக்ஷீப்
என்ற படத்தை எடுக்கவிருக்கிறார் ரஜினி. #ரஜினி63
25. ரஜினி வீட்டு யெல்லோபேஜஸில்
அவருக்குத் தெரியாத மனிதர்களின் தொலைபேசி எண்களும் இருக்கிறது. #ரஜினி63
27. ஆப்பிளா ஆண்ட்ராய்டா பிரச்சினையில்
ரஜினி இதுவரை யாருக்கும் சாதகமாக பேசவில்லை. #ரஜினி63
29. மண்ணிற்கு வந்த முதல் ஏலியன் சூப்பர் ஹீரோவான சூப்பர்மேன், ரஜினியைப் பார்க்கத்தான் பூமிக்கு வந்து இறங்கினாராம். #ரஜினி63
30. ஜப்பானில் 7.3 லிக்டர் பூமி அதிர்ச்சி வந்தும் சுனாமி வராதற்கு காரணம் ரஜினியின் சிவாஜி படம் 3D 12.12.12 அன்று வெளிவருகிறதால் தான். #ரஜினி63
31. ரஜினி எவ்வளவு மது அருந்தினாலும் அவருடைய கடிகாரம் ஓடாமல் நின்றதில்லை. #ரஜினி63
32. இன்னமும் ரஜினியின் பஞ்ச் மொழிகள்
பஸ்ஸில் ஏறாமல் திருவள்ளுவர் படமும் குறளும் தொங்குவதே அவரது நல்ல மனதிற்கு சான்று. #ரஜினி63
35. அவர் போடுகின்ற சட்டை, பேண்ட்
தொலைநோக்கி, நுண்ணோக்கி உபயோகிக்காமலே பார்ப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும். #ரஜினி63
36. இன்னமும் எந்த நோய்க்கும் ரஜினி என்ற
பெயரை வைக்கவில்லை, காரணம் மருந்து கண்டுபிடிக்க
சிரமப்படுவார்கள் என்பதுதான். #ரஜினி63
37. ரஜினியின் பெயர் தமிழில் 3 எழுத்து, ஆங்கிலத்தில்
ஆறெழுத்து. இதையெல்லாம் படிப்பது தமிழனின் தலையெழுத்து. #ரஜினி63
38. மூன்று முகம் படத்தில் மூன்று
வேடத்தில் நடித்த ரஜினி, அலிபாபாவும் 40
திருடர்களும் படத்தில் 40 வேடத்தில் ஏனோ நடிக்கவில்லை. #ரஜினி63
39. அவருடைய கண்கள் காந்தம் என்பதால்
எப்பொழுதும் இரும்புப் பொருட்களை பார்ப்பதில்லை. இரும்பு மனம் கொண்டோர் அவரை
நெருங்குவதும் இல்லை. #ரஜினி63
40. டீவில மேட்ச் ஹைலைட்ஸ் பாக்கும் போதே அந்த மேட்சில் விக்கட் எடுப்பவர் ரஜினி. #ரஜினி63
41. உப்புமா பாத்திரம் ஆனாலும் அதில்
உப்புமாவாகவும் நடிக்கக்கூடிய வல்லமை பெற்றவர் ரஜினி. #ரஜினி63
42. ரஜினி அரசியலுக்கு வந்தால் அரசியல்வாதிகள்
நடிக்க போய்விடுவார்கள் என்ற நல்லெண்ணத்தில் அவர் அரசியலுக்கே போவதில்லை என
முடிவெடுத்துள்ளார். #ரஜினி63
43. பொல்லாதவன் படத்தில் பொல்லாதவனாகவும்
நல்லவனுக்கு நல்லவன் படத்தில் நல்லவனாகவும் நடித்தாலும், சந்திரமுகி
படத்தில் சந்திரமுகியாக ஏனோ ரஜினி நடிக்கவில்லை. #ரஜினி63
44. நிறைய பால்காரர்கள் அண்ணாமலை என்று
பெயர் மாற்றிக்கொண்டு லேடீஸ் ஹாஸ்டல் வாசலில் தவம் கிடந்தார்கள் என்றால் அதான்
ரஜினியின் மகிமை. #ரஜினி63
45. அம்பது ஓவர் கிரிக்கெட் டி20யாக ஆனது
ரஜினி ஒரே பாட்டில் கோடீஸ்வரனாக மாறுவதை பார்த்த பிறகே. #ரஜினி63
46. ஹவ் இஸ் இட்-டுக்கு இன்னமும்
விவேகானந்தா இங்கிலிஷ் டியூசன் செண்டரில் அர்த்தம் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். #ரஜினி63
47. ரஜினி தன்னுடைய டூயட்டில்
ஹீரோயின்களையும் ஆட அனுமதிப்ப்பார். #ரஜினி63
48. தமிழகத்தின் மேலெ விழ இருந்த ஸ்கைலாப்பை தன் பார்வையாலேயே கடலில் தள்ளிய மாவீரன் தான் இந்த ரஜினி. #ரஜினி63
49. பல்லி மாதிரி ஒல்லியா இருந்தாலும்
டில்லி வரை போய் மண்மோகன் சிங்கோட டீ குடிச்ச பெருமை ரஜினிக்கு மருமவனாய் ஆன பிறகே
தனுஷ்க்கு கிடைச்சது. #ரஜினி63
50. மிஷினுக்கு இதயம் உண்டுன்னு சொன்னவர்
ரஜினி..நாளடைவில் பெண்கள் மனதை படித்து எழுதி எட்நூறு பக்கத்தில் பெங்குவின் நிறுவனம்
மூலம் புக்கு வெளியிடுவார். #ரஜினி63
51.சண்டைக்காட்சிகளின் போது பந்தாவே
பார்க்கமாட்டார் ரஜினி. ஒன்றிரண்டு அடிகள் தன்மேலும் விழவைத்துக்கொள்வார். #ரஜினி63
52. நலிந்த மக்கள் நலமாக வாழ தன்
சொத்துக்குள் அத்தனையும் தானமாக குடுக்கத்துணிந்தவர்தான் இந்த ரஜினி-
முத்து/அருணாச்சலம். #ரஜினி63
53. சினிமாவில் மிமிக்ரி செய்யும் போதுகூட
தன்னுடைய சொந்த குரலை மாத்திரமே உபயோகிப்பவர். #ரஜினி63
54. வேலைக்காரன் படத்தில் வேலைக்காரனாக
நடித்தவர் முத்து படத்திலும் வேலைக்காரனாக நடித்துள்ளார். #ரஜினி63
55. ரஜினியை இதுவரை யாரும் எந்த
திரைப்படத்திலும் கற்பழித்ததில்லை. #ரஜினி63
56. தன் வியர்வைத் துளியை தானே ரசாயன
மாற்றம் செய்து அணுஎண்/எடைகள் மாற்றி தங்கக்காசாக மாற்றும் வேதியியல் சமன்பாட்டை உலகுக்கு அளித்த
விஞ்சானி. #ரஜினி63
57. அவர் கண்பார்வையில் ஒரு தேஜஸ்
தெரிவதால் ஆந்திரா பார்டரில் நின்னு தமிழ்நாட்டை உத்து பார்க்க வைக்க
முயற்சிப்பதாக கோட்டை வட்டாரத்து தகவல்..இதன்மூலம் அடுத்து நுப்பது வருஷத்துக்கு
கரண்ட் கட்டே இருக்காது என தெரிவிக்கிறார்கள் பிபிசி மைக் ஏந்திகள். #ரஜினி63
58. தன் படத்தில் குழந்தையாக நடித்த
குழந்தைக்கி ஜோடியாக நடித்தவர், ஜோடியாக நடித்தவருக்கு மகனாக
நடித்தவர், குழந்தையாக நடித்தவருக்கும் மகனாக நடிக்கி இருப்பவர், உலகுக்கு
ஒரே சூரியன், இந்த திரையுலகுக்கு ஒரே ரஜினி. #ரஜினி63
59. 62 வயதானதிலிருந்து ஒரே வருடத்தில் 63வயதுக்கு
முன்னேறியவர் ரஜினி. #ரஜினி63
60. ரஜினியின் கனவில் ரஜினி ரஜினியாகவே
வருவாரென்பது யாருக்கும் தெரியாத ரகசியம். #ரஜினி63
61. கேட்டை நட்சத்திரத்தில்
பிறக்காவிட்டாலும், கேட்டைத் திறந்துகொண்டு நுழைவார்
அபூர்வ ராகங்களில். (என்ன சம்மந்தம்னு கேட்டீங்க,
பிச்சுபிச்சு). #ரஜினி63
62. கூகிள் ரஜினியைத் தேடும் முன்னர்
ரஜினி கூகிளைத் தேடிவிடுவார். #ரஜினி63
63.
12.12.12. க்காகதான்
இந்த உலகம் இயங்கிக் கொண்டிருந்தது, முடிந்தது 21-ல்
உலகம் அழியப்போகிறது.
12=1+2=3
21=2+1=3
63=6-3=3
கூட்டிக்கழிச்சி பாருங்க கணக்கு சரியாவரும்.
ரஜினி ஒரு வரலாற்று அதிசயம். #ரஜினி63
12=1+2=3
21=2+1=3
63=6-3=3
கூட்டிக்கழிச்சி பாருங்க கணக்கு சரியாவரும்.
ரஜினி ஒரு வரலாற்று அதிசயம். #ரஜினி63
63-க்கு சொந்தக்காரர்கள் : பெனாத்தல் சுரேஷ், குசும்பன்,சென்ஷி, அஹ்மத் இர்ஷாத், மணிஜி, இலியாஸ் & பட்டிகாட்டான் Jey