Showing posts with label லவ்பேர்ட்ஸ். Show all posts
Showing posts with label லவ்பேர்ட்ஸ். Show all posts

October 21, 2012

லவ் பேர்ட்ஸ் – பேட்(BAD) பேர்ட்ஸ்


லவ் பேர்ட்ஸ்....


           திருமணத்திற்கு முன் சனி, ஞாயிரோடு கூட ஒருநாள் விடுமுறை கிடைத்தாலும், ஊருக்கு பயணம்தான். ஊர் சென்றால் கிராமத்துச் சூழல், நண்பர்கள் எனற சந்தோசம் கிட்டும். கூடவே அண்ணனின்(பெரியப்பா பையன்) வீடு சென்று புதிதாக விருந்தினர் (எல்லாம் பெட் அனிமல்ஸ் தான்!!! ) யாரும் வந்திருக்கிறார்களா என்று பார்ப்பதுண்டு. அது கிளியோ  அல்லது கீரிப்புள்ளையோ  இரண்டே நாட்களில் கூடப் பழகி நண்பர் ஆக்கும் வித்தையை பெரியப்பாவிடம் இருந்து இவர் கற்றிருந்தார்.


            இந்த தடவை ஐந்து சோடி லவ் பேர்ட்ஸ் புதிதாக. அதுகள் செய்யும் சேஷ்டைகள் ரசிக்கும் படி இருந்தது. சலிப்பே இல்லாமல் அந்த சோடிகள் மூக்கை உரசிக் கொண்டும் ஊஞ்சல் கட்டை, மண்பானை என்று ஒன்றை ஒன்று துரத்தி விளையாடிக் கொண்டும் நாள் முழுவது அதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.

           விடுமுறை முடிந்து சென்னை செல்ல பேக் செய்து விட்டு , போகும் முன்  பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று மீண்டும் அண்ணன் வீடு சென்றேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஒரு சோடி லவ் பேர்ட்ஸ் பறவைகளை ஒரு பிரம்புக் கூடையில் வைத்து கூடவே 1 கிலோ தினையும் கட்டி வைத்திருந்தார்.

            எதற்கு என்று கேட்டபோது நீ ரெண்டுநாளா இதை சுத்தியே திரிஞ்சிட்டிருந்தே… போகும் போது எடுத்துட்டு போக ஆசப்பட்டாலும் படுவே. அதான் ரெடி பண்ணி வச்சிருக்கேனு சொன்னார். அவருக்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு சென்னை பயணம் ஒரு சோடி லவ் பேர்ட்ஸ் பறவைகளுடன்.

சென்னை வந்தவுடன் மேலுல் இரண்டு நாட்கள் அலுவலகம் லீவ் போட்டு விட்டு வடபழனி, கோடம்பக்கம் என்று அலைந்து அது உறங்க, முட்டை இட்டு இனவிருத்தி செய்ய வேண்டி 2 மண்பானைகள், தினை,கம்பு என்று அதற்கான தீனிகள் வாங்கி வந்தேன். இனி அதற்கான வீடு (கூண்டு) வேண்டும் கடைகளில் ஆங்காங்கே சின்னதாகவே கிடைத்தது, அதில் எனக்கு விருப்பம் இல்லை. இங்கே கே.கே. நகரில் டிங்கெரிங் செட் வைத்திருக்கும் நண்பர் ஒருவரிடம் உதவிக்கு சென்றேன், அவர் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் கூட்டிச் சென்று தேவையான கம்பிகள் மற்றும் ஜல்லடை வாங்கி, அதில் அழகான, பெரிதான கூண்டு ஒன்று செய்து குடுத்தார்.

அலுவலகம் முடிந்து நேராக வீடு லவ் பேர்ட்ஸ் வேடிக்கை…… வந்து ஒரே மாதத்தில் 5 முட்டை இட்டு அடைகாத்தது.  ஊருக்கு அடிக்கடி போன் செய்து பறவைகலை நன்றாக பராமரிக்க அண்ணனிடம் ஆலோசனைகள் எல்லாம் நடந்தது. ஒரு அதிகாலையில் “மாமா குஞ்சு பொரிச்சிடுச்சி” என்று என் அக்கா பயன்களின் சத்தம் கேட்டு, ஓடிச் சென்று பார்த்தேன். மனது சந்தோசமாக இருந்தது. அன்று மாலைக்குள் 4 குஞ்சுகள்... ஒரு முட்டை கூமுட்டை போலும்.

     அதற்கென்று ஒரு மருத்துவரை தான் நியமிக்க வில்லை… மற்றபடி என்ன குடுக்க வேண்டும் என்ன செய்யவேண்டும் என்று போன் செய்து தொல்லை குடுத்ததில் ஊரில் இருக்கும் அண்ணன் கூட கொஞ்சம் சலிப்படைந்து விட்டார்.

    குஞ்சுகளுக்கு அது இரை ஊட்டும் அழகு இருக்கிறதே....கொஞ்சுகள் மீது அது காட்டும் அன்பு இருக்கிறதே… மனிதர்கள் கூட அதனிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம். வாவ் வாட் எ கேர்.

      நான் அறிந்த வரையில் குழந்தைகள் கவனிப்பில்/பராமரிப்பில்/குழந்தைதானே என்று ஒதுக்காமல் அவர்களின் உணர்வுகளுக்கு குடுக்கும் முக்கியதுவத்தில் அமெரிக்க பெற்றோர்களுக்கு முதலிடம்.

பேட் பேர்ட்ஸ்………

        குஞ்சுகள் வளர்ந்து தானாக இரை எடுக்க துவங்கியது. அதற்கு என்று கொத்துமல்லித் தண்டுகளை மிகச் சிறிய அளவில் நறுக்கிப் போட்டேன். இறக்கை முளைக்க ஆரம்பித்தது. தாய்ப்பறவையிடம் இருந்து விலகி தனித்து சக குஞ்சுகளுடன் விளையாட்டு.

      இப்போதுதான் நான் சற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் ஆரம்ப்பித்தது.

     கொஞ்சம் வளர்ந்தவுடன் குஞ்சுகளுக்கு ஆண்/ பெண் பாகுபாடுகள் புலப்பட்டது போலும் இதுவும் மூக்கு உரசும் ஆட்டத்தை தொடங்கியது. ஒரு படி மேலே சென்று வளர்ந்த ஆண் குஞ்சுகள் தாயின் மூக்கையும், பெண் குஞ்சுகள் ஆண் பறவையின் மூகையும் உரச எத்தனித்தது அது பாசத்தாலா அல்லது காமத்தாலா என்று எனக்கு புலப்படவில்லை. இந்த சமயத்தில்தான் தாய்ப்பறவைகளுக்கு குஞ்சுகள் விரோதிகள் ஆனதுபோலும்.

ஆண் பறவை பெண் குஞ்சுகளையும், பெண்பறவை ஆண் குஞ்சுகளையும் அதன் உச்சந்த்லையில் ஆக்ரோசமாக கொத்திக் கொன்று விட்டது.

        எனக்கு உண்மையில் கண் கலங்கி விட்டது…. அந்தப் பறவைகளை கொன்றுவிடலாமா என்றுக்கூட தோன்றியது. ஊருக்கு போன் செய்து விபரம் சொன்னேன். அவர் என்னைதான் திட்டினார், குஞ்சுகள் தானாக இறை உண்ணும் பருவம் வந்தவுடன் தனிக் கூண்டில் இட்டிருக்க வேண்டும் அது முழுமையான பறவை ஆனவுடன் வேண்டுமானால் சோடியாக மற்ற பறவைகளுடன் விடலாம். இல்லையென்றால் இப்படித்தான் போட்டி மனப்பான்மயில், எங்கே தன் சோடி மற்றதுடன் சென்று விடுமோ என்ற அச்சத்தில் இப்படி நடக்கும் என்றார்.

           எனக்கு சமாதானம் ஆகவில்லை, காரணம் எதுவாகிலும் பெற்றக் குஞ்சுகளை (சின்ன வயதில் பாம்பு தன் குட்டிகளை விழுங்குவதை தோட்டத்தில் ஒரு முறைப் பார்த்திருக்கிறேன்) கொன்றதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த லவ் பேர்ட்ஸ் மேல் இருந்த ஈர்ப்பு எனக்கு முற்றிலும் போய் விட்டது.

          இரண்டு நாள் கழித்து ப்ளூ கிராஸ் போன் செய்து அதை எடுத்துச் செல்லுமாறு கேட்டேன், சரியான பதில் இல்லை…. ஒரு வாரம் கழித்து வீட்டில் துணி துவைக்கும் வேலை செய்த அம்மா தன் மகன்கள் இதை விரும்புவதாக தெரிவித்தவுடன் எடுத்துச் செல்ல சொல்லிவிட்டேன். இரண்டு மாதம் தினை , கம்புக்கு காசு குடுத்தேன். பின் வேறு வீடு மாற்றலாகி வந்துவிட்டதால் அது பற்றிய செய்திகள் நின்று போனது.

        இப்போதெல்லாம் லவ்பேர்ட்ஸ் எங்காவது பார்த்தால் பழையப் பாசமோ பரவசமோ ஏற்படுவதில்லை. மனதில் லேசான கோவம் எட்டிப் பார்ப்பதாகவே எனக்குப் படுகிறது.

பசுமையை வெகுவாக ஒழித்ததன் மூலம் பூமியின் காலநிலையில் ( மான்சூன் ) மாறம் ஏற்பட்டிருப்பது போல்……


  

இயற்கையின் சமநிலைக் கோட்பாடுகளுக்குள் இது மாதிரியான சிசுக் கொலைகள் அடங்கிவிடுகிறதா???. இல்லை இது போன்ற செயல்களால் (கள்ளிப்பாலும்/நெல்லுமணியும் சேர்த்துதான்) சமநிலை கெடுகிறதா தெரியவில்லை.

டிஸ்கி : கடைசி மூன்று பத்திகள்... எழுதிய எனக்கே சரியாகப் புரியவில்லை…  படிக்கும் உங்களுக்கும் புரியவில்லையென்றால் இந்தப் பதிவை இலக்கிம் என்று வகைப் படுத்திவிடுவேன்


LinkWithin

Related Posts with Thumbnails