October 30, 2012

பீட்சா : விமர்சனம்இவங்கதான் இந்த படத்தோட ஈரோ & ஈரோயின்

சனிக்கிழமை பீட்சா படம் பார்த்தேன். வீட்டு உயரதிகாரி ஆசையா கேட்டதால  தட்டமுடியலை. கல்யாணம் ஆனதிலிருந்து நாங்க ரெண்டுபேரும் தியேட்டர்ல பாக்கிற 5 வது படம் இது.

1. இம்சை அரசன் 23-ம் புலிகேசி...
2.கஜினி
3.சகுனி
4.நண்பன்
5.பீட்சா

இதுல படம் ரிலீஸானவுடனே உடனடியா!!! பார்த்தது இந்த பீட்சா படம்தான்.

திகில் கம் சஸ்பன்ஸ் கம் பேய்!!! படம்.

மசலா மண்ணாங்கட்டினு சொதப்பாம படம் கடைசி வரை பார்க்க நல்லா இருந்தது. 

கதைனு ஏதும் இங்கே சொல்லிட்டா பாவம் உலகத் தொலைகாட்சியில் முதன்முறையாகனு எப்பவாது போடும்போது கூட பாக்குறதுக்கு  இண்ட்ரஸ்ட் இல்லாம போகும் அபாயம் இருக்கிறதால, படம் நல்லாருக்கு போய் பாருங்க....  அதோட விமர்சனம் ஓவர்.

படத்தில் ஹீரோ நடிப்பு சூப்பர். ரம்யா நம்பீசன் கொஞ்ச பூசுனாப்ல அழகா இருந்தாப்ல (டி.வில போட்ட குள்ளநரினு ஒரு படத்துல இத விட ஒல்லியா இருந்ததா ஞாபகம்), பருவோட பார்க்க அழகுதான். ரொம்ப மெனக்கெடுற பாத்திரம் இல்லை. 

பஞ்ச் டயலாக், ஹீரோவோட அலம்பல் ஆரம்ப சீன், குத்துப்பாட்டு, சோகப்பாட்டு, பிட்டுப் பாட்டுனு சாவடிக்காம , குறிப்பா பறந்து பறந்தொ, சொவத்துல ஒரு காலை வச்சி நெட்டி சுழட்றதோ, 50 பேர் ஏகே 47 துப்பாக்கில நேருக்கு நேர் சுட்டாலும் அந்தரத்துல பறந்து தப்பிச்சி வில்லன்ஸை தொவம்சம் பன்ற சீன் ஏதும் இல்லாம படம் எடுத்திருக்கும் இயக்குனருக்கு நன்றி.

 தியேட்டரை விட்டு வரும் போது கட்டைல போக, கடன்கார நாதாரி பணத்தையும், நேரத்தையும் வீணச்சுட்டானே பரதேசி.... இப்படி ஏதும் திட்ட வழியில்லாம நல்லா ஒரு படத்தை இயக்கிய டைரக்டருக்கு ஒரு சொட்டு.

படம் முடிஞ்சி படியில எறங்கி வரும்போது இரண்டு பெர் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது...


நபர் 1 : மச்சி படம் சூப்பர்ல ஆலிவுட் படம் ரேஞ்சுக்கு எடுத்துருக்காண்டா...

நபர் 2 : மண்ணாங்கட்டி, ஒரு பாட்டில்ல, பைட்டில்ல ஹீரோயினை வேஸ்ட் பண்ணிட்டாண்டா....
நபர் 1 : டேய் அதுக்கு நீ தாண்டவம், மாற்ற்றன் இப்படி போயிருக்கனும்டா இந்தப் படத்துக்கு ஏண்டா வந்தே....

நபர் 2 : எனக்கென்னடா தெரியும் பீட்சா-னு பெயர் பாத்துட்டு சரி மாடர்னா பீட்சா சாப்பிடுர ஜெனரேசன் பத்தின கதைபோல நல்ல யூத் ஃபீலிங்குல பொங்கிருப்பானுங்கனு நினைச்சி வந்தேன் ....

நபர் 2 : ஆமா கல்யாணம் ஆகாம சேர்ந்து வாழ்ற வெஸ்டர் கலாச்சாரத்துல முழ்கிப் போன ஹீரோ-ஹீரோயினுக்கு ஒரு மவுத் கிஸ் கூட வைக்காம பிற்போக்குத்தனமா இல்ல படம் எடுத்திருக்கான் இந்த இயக்குனர் பக்கி...

நபர் 1 : அது வந்து ஆடியன்ஸ் எதிர் பாக்கிற சீன் வராம அடுத்தடுத்து ட்விஸ்ட் வச்சாம்பாரு அதான் படத்தூட சக்சஸ் மச்சி... உனக்கெல்லம் ரசனை நல்ல படத்தை ரசிக்கத் தெரியலை...

(நடந்து தரைத்தளம் வந்துவிட்டாலும் அங்கே நின்று அவர்கள் பேசிக்கொள்ள, அவர்களின் பேச்சில் ஆர்வம் பொங்க கவனிக்காத மாதிரி பக்கத்துலேயே நின்று தொடர்ந்து ஒட்டு கேட்டதில்...)

நபர் 2 : ஆமாண்டா வெண்னைகளா ஒன்னு கதையே இல்லாம பாட்டு ஃபைட்டு, ரொமான்ஸுனு சாவடிங்க... இல்லைனா இந்த மாதிரி இருட்டுக்குள்ளேயே படம் எடுத்துட்டு ஹாலிவுட் படம்னு பீத்திக்கோங்க...

நபர் 1 : உனக்கெல்லாம் ரசனையே கிடையாதுடா... ஆரம்ப சீன்லேயெ ஒரு பேய் வீடு காட்டி ஆடியன்சை சீட்டு நுனிக்கி கொண்டு வந்துடான் கவனிச்சே இல்ல...

நபர் 2 : எது தியேட்டர்ல பிடிச்ச திருட்டு டிவிடி படம் ரேஞ்சுக்கு, கேவலமான விசூவலோட, என்ன எழவு பேசுறாங்கண்னே தெரியாம ஆடியோ சண்ட் இருந்துச்சே அந்த இண்ட்ரோ சீனாடா... போடாங்....

நபர் 1 : உன் கூட எல்லாம் இனிமே படம் பாக்க வரக்கூடாதுடா ரசனை கெட்ட ஜென்மம்....கர்ர்ர் தூ...
நபர் 2 :........

இப்ப எதுக்கு இங்கே வெட்டியா நின்னுட்டிருக்கீங்க.... போய் வண்டி எடுத்துட்டுவாங்க....போங்க.....(வீட்டு உயரதிகாரி....)

இந்த போய்ட்டே இருக்கேம்மா......  அவ்வ்வ்வ்வ்வ்


டிஸ்கி 1  : மக்களே நல்லாப் பாத்துக்கிடுங்க நானும் சினிமா விமர்சனம் எழுதிட்டேன்....எழுதிட்டேன்....எழுதிட்டேன்!!!!


டிஸ்கி 2 : படத்தோட ஹீரோ,ஹீரோயின் , டைரக்டர்னு பெயர்கள் தெரியனும்னாலோ, எடிட்டிங், போட்டோகிராஃபி, திரைக்கதைனு டெக்னிகல் சமாச்சாரம் பத்தி தெரிஜ்சுக்கனும்னாலோ..... உண்மைதமிழன், ஜாக்கி சேகர், கேபிள்சங்கர் மாதிரியானப்பட்டவங்க பிளாக் படிங்கோ....  இவங்கதான் ஏகப்பட்ட புரியாத சமாசாரங்களப் பத்தி பொய் பொய்யாப் பேசி எல்லாப் படத்தையும்  பாக்க வச்சிருவாங்கோ....:-))))


46 comments:

மோகன் குமார் said...

உங்கள் விமர்சனத்தில் பிழை இருக்கிறது :))

பட்டிகாட்டான் Jey said...

// உங்கள் விமர்சனத்தில் பிழை இருக்கிறது :)) //


என்னாது என் விமர்சனத்தில் பிழையா..... யாரங்கே இவரை சங்கிலியால் கட்டி சபக்கி இழுத்து வாருங்கள்...:-)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1. இம்சை அரசன் 23-ம் புலிகேசி...
2.கஜினி
3.சகுனி
4.நண்பன்
5.பீட்சா//


கர். தூ. நண்பன் படத்துக்கு பிறகுதான் சகுனி வந்தது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டி.வில போட்ட குள்ளநரினு ஒரு//

கர் தூ. அது குள்ளநரி கூட்டம்

மோகன் குமார் said...

அலோ பிழையா எழுதியது நீர். உம்மை தான் கட்டி இழுத்து வரணும். உண்மை தமிழன் அண்ணே, கேபிள் மற்றும் ஜாக்கி தான் நாட்டாமைகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரொம்ப மெனக்கெடுற பாத்திரம் இல்லை//

ஏன் அண்டாவா அது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டைரக்டருக்கு ஒரு சொட்டு.//

ஒரு சொட்டு பாலிடாலா ?

மோகன் குமார் said...

நான் குன்ஸா பிழைன்னு போட்டு விட்டா தம்பி ஏகப்பட்ட பிழை கண்டு பிடிக்குதே. Ramesh சீரியஸ் போலீசா வேலை செஞ்சிருக்காருப்பா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மோகன் குமார் said... 1

உங்கள் விமர்சனத்தில் பிழை இருக்கிறது :))//

இவரே பிழை தானுங்கோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மோகன் குமார் said...

நான் குன்ஸா பிழைன்னு போட்டு விட்டா தம்பி ஏகப்பட்ட பிழை கண்டு பிடிக்குதே. Ramesh சீரியஸ் போலீசா வேலை செஞ்சிருக்காருப்பா //

:)))

பட்டிகாட்டான் Jey said...

// கர். தூ. நண்பன் படத்துக்கு பிறகுதான் சகுனி வந்தது //

விட்ரா...விட்ரா.... ஒன்னு ரெண்டு படம் பார்த்தா சரியா ஞாபகம் வச்சி வர்ரிச சரியா எழுதலாம்....

5 படம் பார்த்தா கொழப்பம் வரத்தானே செய்யும்....


போடா...போ...போய்ட்டே இரு....

வேலையத்த பரதேசி குத்தம் கண்டுபிடிச்சே பேர்வாங்க நினைக்கிற இந்த ஈனப் பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம்டா ரமேஷூ....

கர்ர்ர்ர் த்தூ....

ராஜ் said...

பாஸ்,
நானும் படம் பார்த்தேன்...நல்லா பயம் காமிச்சு இருந்தாங்க..
ரெண்டு குறைகள் என்னை பொறுத்த வரைக்கும்:
படத்துக்கு repeated ஆடியன்செஸ் வர மாட்டாங்க...
அப்புறம் கடைசி சீன் கொஞ்சம் மொக்கை...

பட்டிகாட்டான் Jey said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரொம்ப மெனக்கெடுற பாத்திரம் இல்லை//

ஏன் அண்டாவா அது? //

டேய் ரமேஷூ பாத்திரம்னா கேரக்டர்டா.... இதுகூட தெரியாத பக்கி.... கர்ர் த்தூ... :-)))

பட்டிகாட்டான் Jey said...

// ராஜ் said...
பாஸ்,
நானும் படம் பார்த்தேன்...நல்லா பயம் காமிச்சு இருந்தாங்க..
ரெண்டு குறைகள் என்னை பொறுத்த வரைக்கும்:
படத்துக்கு repeated ஆடியன்செஸ் வர மாட்டாங்க...
அப்புறம் கடைசி சீன் கொஞ்சம் மொக்கை.. //

எனக்கும் படம் ஓகேதான்.

ரெண்டு பேர் பேசுனதா எழுதிருக்கேனே அது கற்படனி இல்லை அவனுக பேசுனதோட சாராம்சத்தை அப்படியே எழுதிருக்கேன்.

விமர்சனம் ஏதும் பார்க்காம படத்தோட பேர் மட்டும் பாத்திட்டு வந்தவங்ககிட்ட பாதிபெர் ஏமாந்துட்டு போறதா எனக்குப் படுது ராஜ்.

பட்டிகாட்டான் Jey said...

// மோகன் குமார் said...
அலோ பிழையா எழுதியது நீர். உம்மை தான் கட்டி இழுத்து வரணும். உண்மை தமிழன் அண்ணே, கேபிள் மற்றும் ஜாக்கி தான் நாட்டாமைகள் //

மோகன் அண்ணேன் கடேசி வரைக்கும் என்ன பிழைனு சொல்லவே இல்லையேணே.....அவ்வ்வ்வ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விமர்சனம் எங்க அண்ணே ?

மோகன் குமார் said...

இவ்ளோ நாள் கழிச்சு விமர்சனம் எழுதுறது முதல் பிழை. சனிக்கிழமை படம் பார்த்துட்டு 4 நாள் கழிச்சு விமர்சனம் எழுதுவது மிக பெரிய பிழை. நீங்க சினிமா விமரசனத்தை சீரியஸா எடுத்துக்கலை என்பதையே இது காட்டுது. நோட்டிஸ் வரும். விளக்கம் தரவும் :))

பட்டிகாட்டான் Jey said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டி.வில போட்ட குள்ளநரினு ஒரு//

கர் தூ. அது குள்ளநரி கூட்டம் //

படத்துல முதல் பாதி எழுதிருக்கேன்ல...மீதிய நீங்களே படிச்சிக்க வேண்டியதுதான...அம்புட்டு சோம்பேரிகளா நீங்க....

#ம்க்கும் நான் யோக்கியமா என் மனசுல இருந்தத அப்படியே வெள்ளந்தியா எழுதிருக்கேன். இவங்க கூகுள் சர்ச்பண்ணி எழுதிட்டு ஏதோ இவங்களே எழுதினா மாதிரி பீத்திக்கிறது... கர்ர்ர் த்தூ.... :-)))

முதல் முதல்ல விமர்சனம் எழுதிருக்கேன். நல்லா இருக்கு, சூப்பர், அசத்தல், கலக்கல்,அட்டகாசம்னு ஆதும் சொல்ரானா பாரேன்....:-)))

பட்டிகாட்டான் Jey said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விமர்சனம் எங்க அண்ணே ? //

டேய் அடி வேணாங்கலே... வலிக்கிறா மாதிரி அடிக்காதே...மீ பாவம்....அவ்வ்வ்வ்வ்வ்...:-)))

கேபிள் விமர்சனம் பாரு அதுல அவரு யாரும் இந்தப் படத்தோட கதை சொல்லிராதீகனு கெஞ்சிக் கெதறிக் கேட்டிருக்கார் அதான் அதப் பத்தி எழுதல.

என்ன இருந்தாலும் கேபிள் குண்டா,பெரிய சைஸா இருக்கிர மனுசன் அவர் சொல்றதுக்கு மரியாதை குடுக்க வேணாமாப்பா....:-)

பட்டிகாட்டான் Jey said...

// மோகன் குமார் said...
இவ்ளோ நாள் கழிச்சு விமர்சனம் எழுதுறது முதல் பிழை. சனிக்கிழமை படம் பார்த்துட்டு 4 நாள் கழிச்சு விமர்சனம் எழுதுவது மிக பெரிய பிழை. நீங்க சினிமா விமரசனத்தை சீரியஸா எடுத்துக்கலை என்பதையே இது காட்டுது. நோட்டிஸ் வரும். விளக்கம் தரவும் :)) //

என்னன்னே சொல்றீங்க இது புது படம்னே. வந்து ரெண்டுமூனு வாரம்தானே ஆச்சி....:-)))

சீனு said...

அந்த நபர் டூ நீங்க தானோ கொஞ்சம் டவுட்டாவே இருக்கு.. வீட்டு உயரதிகாரிய படத்துக்கு கூட்டிட்டுப் போறதுல்ல அப்படி என்ன கஞ்சத்தனம்... உங்க பசங்களையும் கூட்டிட்டுப் போங்க உயர்திரு பட்டிகாட்டான் அவர்களே

அமுதா கிருஷ்ணா said...

நான் இந்த படத்தை பார்க்க என் தம்பி மகன் விஷால்(6வயது) கூட போனேன். அந்த பங்களா காட்சியில் வரும் ஃபோன் ரிங் டோனை கேட்கும் போதெல்லாம் பையபுள்ள விழுந்து விழுந்து சிரித்து சீரியஸ் இல்லாமல் செய்துட்டான்.பயத்தை மறைக்க சிரித்தான் போல.அவன் சிரிப்பதை பார்த்து நானும் சிரித்து பயமே இல்லை.

அரசன் சே said...

அண்ணே எப்படியோ உங்களை படம் பார்க்க வைச்சாச்சு ,...
சரி வரும் வாரம் தயாரா இருக்கவும் ,,.,
நம்ம நாமக்கல்லாரின் படத்திற்கு செல்ல உங்களுக்கு மட்டும் டிக்கட் எடுத்து வைச்சிருக்கேன்

பட்டிகாட்டான் Jey said...

// அமுதா கிருஷ்ணா said...
நான் இந்த படத்தை பார்க்க என் தம்பி மகன் விஷால்(6வயது) கூட போனேன். அந்த பங்களா காட்சியில் வரும் ஃபோன் ரிங் டோனை கேட்கும் போதெல்லாம் பையபுள்ள விழுந்து விழுந்து சிரித்து சீரியஸ் இல்லாமல் செய்துட்டான்.பயத்தை மறைக்க சிரித்தான் போல.அவன் சிரிப்பதை பார்த்து நானும் சிரித்து பயமே இல்லை. ///

ஹஹஹஹா.....

நான் அந்தப்பேய் ரெண்டு பெரிய பேய்+குழந்தைப் பேய் கத்துனப்ப நானும் சேர்ந்து கத்திட்டேன்...

வீட்டம்மா பயமில்லாம அசராமப் பார்க்குது.... வர வர அம்மனீஸ் தகிரியமாவும்... நாங்க பயந்தாங்கொல்லியாவும் ஆயிட்டுவரோம்.

பசங்க சுத்தமா பயமில்லாம இருக்காங்க...:-))))

பட்டிகாட்டான் Jey said...

// சீனு said...
அந்த நபர் டூ நீங்க தானோ கொஞ்சம் டவுட்டாவே இருக்கு.. வீட்டு உயரதிகாரிய படத்துக்கு கூட்டிட்டுப் போறதுல்ல அப்படி என்ன கஞ்சத்தனம்... உங்க பசங்களையும் கூட்டிட்டுப் போங்க உயர்திரு பட்டிகாட்டான் அவர்களே //

சீனு பசங்க அரைப்பரிட்சை லீவுக்கு போய்ட்டு ஞாயித்துக்கிழமை தான் வந்தாங்க. அதான் அவசரமா படம் பாத்தோம்.

அவங்களை கூட்டிட்டுப் போனா பாட்டு போடும்போது மட்டும் நல்லா பாக்குறாய்ங்க. மத்த நேரத்துல அப்பா, வெளில போலாம்பானு காரிடார்ல விளையாடுறாங்க.

ம்ம்ம். ஒரு காலத்துல பாட்டு போட்டவுடனே தம் அடிக்க வெளில வருவேன்.... இப்ப தலைகீழாப் போச்சி....

#விதி வலியது.....

பட்டிகாட்டான் Jey said...

// அரசன் சே said...
அண்ணே எப்படியோ உங்களை படம் பார்க்க வைச்சாச்சு ,...
சரி வரும் வாரம் தயாரா இருக்கவும் ,,.,
நம்ம நாமக்கல்லாரின் படத்திற்கு செல்ல உங்களுக்கு மட்டும் டிக்கட் எடுத்து வைச்சிருக்கேன் //

இனி சிக்க மாட்டேன்டியோவ்வ்வ்வ்வ்....:-))))

அது யாருப்பா நாமக்கல்லார்... எனக்கு இந்த மாதிரி கிசுகிசு பாணி பேரை கண்டுபிடிக்கிரது நொம்பக் கஷ்டம் ஏன்னா எனக்கு சினிமா ஏரியால அம்புட்டு நாலேட்ஜூ...:-)))

Madhavan Srinivasagopalan said...

Ǽ Ö Ǿ Ş ũ Ž

பட்டிகாட்டான் Jey said...

// Madhavan Srinivasagopalan said...
Ǽ Ö Ǿ Ş ũ Ž //

கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் யூஸ் பண்ணினதுல

Ǽ Ö Ǿ Ş ũ Ž = எஸ் நன்றி Z Ö Ǽ Ǿ
அப்படினு காமிக்குது.

நான் எழுதுன விமர்சனத்தை படிச்சிப் புரிஞ்சி, அந்நியக் கிரகவாசிககூட அவங்க மொழியிலேயே நன்றி சொல்லிருக்கிறத பார்த்து, சந்தோசத்துல கண்ல தண்ணீர் வருதுப்பா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// அதோட விமர்சனம் ஓவர்./////

விமர்சனம் ஓவரா இருக்குன்னு நீயே சொல்லிட்ட அப்புறம் நான் என்னத்த சொல்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மசலா மண்ணாங்கட்டினு சொதப்பாம படம் கடைசி வரை பார்க்க நல்லா இருந்தது. ////

அது என்ன மசலா... கொழம்பு மசாலாவா கறி மசாலாவான்னு கடைசிவரை சொல்லவே இல்ல....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரம்யா நம்பீசன் கொஞ்ச பூசுனாப்ல அழகா இருந்தாப்ல /////

எல்லா நடிகையும் பூசிட்டுதான் வருவாங்க... மேக்கப்ப.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பஞ்ச் டயலாக், ஹீரோவோட அலம்பல் ஆரம்ப சீன், குத்துப்பாட்டு, சோகப்பாட்டு, பிட்டுப் பாட்டுனு சாவடிக்காம , குறிப்பா பறந்து பறந்தொ, சொவத்துல ஒரு காலை வச்சி நெட்டி சுழட்றதோ, 50 பேர் ஏகே 47 துப்பாக்கில நேருக்கு நேர் சுட்டாலும் அந்தரத்துல பறந்து தப்பிச்சி வில்லன்ஸை தொவம்சம் பன்ற சீன் ஏதும் இல்லாம படம் எடுத்திருக்கும் இயக்குனருக்கு நன்றி.//////

யோவ் டாகுடர் படம் மாதிரி இல்லாமன்னு சிம்பிளா சொல்லிட்டு போவியா..... அதவிட்டுப்புட்டு நீட்டி முழக்கி...... படிக்க வர்ரவிங்களையும் பயப்படுத்திட்டு இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////படம் முடிஞ்சி படியில எறங்கி வரும்போது இரண்டு பெர் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது...//////

பேசுனா காதுல விழுகாம அப்புறம் மூக்குலயா விழுகும்........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இப்படி ஏதும் திட்ட வழியில்லாம நல்லா ஒரு படத்தை இயக்கிய டைரக்டருக்கு ஒரு சொட்டு.//////

சொல்லிட்டாருய்யா பெரிய கெவர்னரு..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// இவங்கதான் ஏகப்பட்ட புரியாத சமாசாரங்களப் பத்தி பொய் பொய்யாப் பேசி எல்லாப் படத்தையும் பாக்க வச்சிருவாங்கோ....:-))))/////

அப்போ அவங்க எழுதுறதுலாம் பொய்யா.....? யாருப்பா அது யாராவது நல்ல சொம்பா எடுத்துட்டு வந்து இந்த பஞ்சாயத்த என்னான்னு கேளுங்கப்பா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இத்தன கமெண்ட்டு போட்டும் கடை ஓனர காணோமே? அடுத்த படம் பாக்க போய்ட்டாரா?

பட்டிகாட்டான் Jey said...

எலேய் பன்னி, இப்படி ஏக் தம்ல கும்மிட்டு போயிருக்கே..... எல்லா கமெண்டும் படிக்கிரதுக்குள்ள கண்ணு கட்டிடும்போல....அவ்வ்வ்வ்வ்

பட்டிகாட்டான் Jey said...

// இத்தன கமெண்ட்டு போட்டும் கடை ஓனர காணோமே? அடுத்த படம் பாக்க போய்ட்டாரா? //

அசந்த நேரத்துல அடிச்சிட்டு போயிருக்கே பரதேசி.... இன்னிக்கி நான் பிஸி இல்லைனா பதிலுக்கு கும்மிருப்பேன்.. தப்பிச்சிட்டே....பொழைச்சிப்போ....

#எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.

பட்டிகாட்டான் Jey said...

// அப்போ அவங்க எழுதுறதுலாம் பொய்யா.....? யாருப்பா அது யாராவது நல்ல சொம்பா எடுத்துட்டு வந்து இந்த பஞ்சாயத்த என்னான்னு கேளுங்கப்பா....... //

அது அவங்களுக்கே தெரியும்....:-)))

Robert said...

பதிவை விட கமெண்ட் எல்லாம் ரொம்ப சுவாரஸ்யம்....

Robert said...

ம்ம்ம். ஒரு காலத்துல பாட்டு போட்டவுடனே தம் அடிக்க வெளில வருவேன்.... இப்ப தலைகீழாப் போச்சி....

#விதி வலியது.....// இப்போ என்னடான்னா விளையடுற பசங்களுக்கு வாட்ச்மேன் வேலை பார்க்க வேண்டி இருக்கு...... சொன்னது சரிதான் நண்பா, விதி வலியது!!!!!

பட்டிகாட்டான் Jey said...

// பதிவை விட கமெண்ட் எல்லாம் ரொம்ப சுவாரஸ்யம்.... //

ஹஹஹா... வருகைக்குநன்றி.

பட்டிகாட்டான் Jey said...

// இப்போ என்னடான்னா விளையடுற பசங்களுக்கு வாட்ச்மேன் வேலை பார்க்க வேண்டி இருக்கு...... சொன்னது சரிதான் நண்பா, விதி வலியது!!!!! //

க க க போ. :-))))

Madhavan Srinivasagopalan said...

// கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் யூஸ் பண்ணினதுல

Ǽ Ö Ǿ Ş ũ Ž = எஸ் நன்றி Z Ö Ǽ Ǿ
அப்படினு காமிக்குது//

அடி ஆத்தி. அப்படியா காமிக்குது கூகிளு ?
அதுக்கு என்னவோ ஆயிட்டுது போல!
தப்புத் தப்பா காமிக்குது..

அரசன் சே said...

நாமக்கல்லாரை பற்றி இதுவரை நீங்கள் அறிந்து வைக்கவில்லையா அண்ணே ..
(அவர் பேரு என்ன , புகழ் என்ன )

அவர் தான் அண்ணன் தமிழ் சினிமாவை உலக ரேஞ்சுக்கு உயர்த்திய ஒப்பற்ற நடிகன் நாமக்கல் எம்ஜியார் படம் சக்ரவர்த்தி திருமகன் மற்ற விபரங்களுக்கு அகில உலக நாமக்கல்லாரின் ரசிக கழக தலைவர் மெட்ராஸ் பவன் பாருங்கள்

மாற்றுப்பார்வை said...

நல்லதோர் பதிவு

LinkWithin

Related Posts with Thumbnails