October 06, 2012கண்ணீர் அஞ்சலி....
பதிவர் நண்பர் ”ஆயிரத்தில் ஒருவன்” திரு மணி அண்ணன் இன்று காலை காலமானார்.
அண்ணாரது இறுதிச் சடங்கு நளை 07-10-2012 ஞாயிறு காலை 9 மணிக்கு நடைபெறும் என்பதை வலைப்பதிவர்கள் நண்பர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று காலை பூந்தமல்லியில் பணி செய்யும் இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை சென்று அங்கு மருத்துவர்களால், வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததுவிட்டதாக அறிவித்திருக்கிரார்கள்.

ஏதேச்சையாக டிஸ்கவரி வேடியப்பன் அவருக்கு கால் பண்ணியதில் அவர் இறந்துவிட்டதாக வரின் மகன் சொல்ல. நண்பர் வேடியப்பன் என்னை அழைத்து, எதற்கும் நீங்கள் அவர் வீட்டுக்கு போன் செய்து உறிதிபடிதுங்கள் என்றார். நான் அழைத்தபோது அவரின் மூத்தமகன் எடுத்து மணி அண்ணன் இறந்த தகவலை உறுதிப்படுத்த, நான் என் மொபைலில் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்தேன்.

வீடு சென்றபோது வீடே துயரத்தில் இருந்தது. வாரம் ஒரு முறையாவது அலைபேசியில் தொடர்பு கொள்வார். 
சமீபத்தில் சென்னை பதிவர் சந்திப்பு மாநாடு நடந்தபோது அவர்தான் மதிய உணவு மற்றும் டீ, டிஃபன் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

கடைசியாக கடந்த வியாழன் மாலைதான் போன் செய்திருந்தார். எனது குழந்தையின் பிறந்த நாள் இந்த மாதம் வருவதை நினைவூட்டி அவரே கேட்டரிங் செய்து தருவதாகவும் மெனு அவர் சாய்ஸ் என்று கூட என் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

இவரது இறப்பு அதிர்ர்சி அளிப்பதாக உள்ளது. 57 வயது!!!

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்.

மூத்த பையனுக்கும், மகளுக்கும் சமீபத்தில்தான் திருமணம் முடிந்தது. இளையமகனுக்குதான் இனி பொண்ணு பாக்கனும் ஜெய் என்று சொல்லிக் கொண்டிருந்தார். 
ஒரு தடவைப் பார்த்து பேசினாலே ஒட்டிக்கொள்ளும் சுபாவம் அவருடையது.... இவரின் நட்பு மூன்று வருட நட்பு. நெருங்கி பழகிய நட்பு.

எனக்கு இவரின் இழப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் கூட பழகிய அனைத்து நண்பர்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கிரது, அது இவரின் இறப்பு செய்தி கேட்டு, மாலையிலிருந்து எனக்கு போன் செய்து துக்கம் விசாரித்த நண்பர்களின் எண்ணிக்கையை பார்த்தாலே தெரிகிறது.

மணி அண்ணனின் இழப்பால் வாடும் அவர் குடும்பத்திற்கு எனது ஆழந்த இறங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


இறுதி சடங்கு நடைபெறும் இடம் - 


11 கே.ஆர். ராமசாமி தெரு,(விஸ்வா பேக்கரி எதிர் தெரு)
கே.கே.சாலை,எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் அருகில்,
எம்.ஜி.ஆர் நகர்,சென்னை - 78


(அசோக் பில்லரில் இருந்து 1 கி.மீ. தொலவு இருக்கும்.)

இறுதி சடங்கு நடைபெறும் நேரம் - 

நாளை(07-10-2012) ஞாயிரு காலை 9 மணிக்குத் துவங்கும் குடும்பத்தாரால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

6 comments:

காட்டான் said...

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.!

அஜீம்பாஷா said...

அன்னாரின் இழப்பு அவரின் குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னாரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மோகன் குமார் said...

எமது அஞ்சலிகள் அவரது குடும்பத்திற்கு இந்த இழப்பை தாங்கி வெளிவரும் தைரியம் இறைவன் அளிக்கட்டும்

T.N.MURALIDHARAN said...

அனுபுள்ளம் கொண்டவரின் இழப்பு வேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...

ஆர்.வி. ராஜி said...

அவரது இழப்பிற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

LinkWithin

Related Posts with Thumbnails