முஸ்கி : பதிவுலகம் அறிமுகமான பின் நான் கொண்டாடும் ஆசிரியர் தினம் இன்று. கலாநேசன் அவர்களின் பதிவிற்கு மதிப்பளித்து, நான் போற்றும் என் குருநாதர்களை பற்றிய பதிவு இது...
பார்த்த சாரதி : என்னோட ஒன்னாப்பு வாத்தியார்..., ஆசிரிய வர்க்கத்துக்கு இன்றும் நான் முன்னோடியாய் நினைக்கும் ஒரு உன்னதமான மனிதர்...., என் கிராமத்தில், 5 வயது குழந்தைகளை... கணக்கெடுத்து... பெற்றோரிடம்.. சண்டை போட்டாவது... பள்ளிக்கு அழைத்துச் சென்று.... அடிப்படைக் கல்வியை... ஊட்டிய பகலவன்...., என் கல்யாணத்தின் போது என் தந்தையின் இழப்பை, சரி செய்ய முயன்ற உன்னதமான மனிதர்...நான் என் மனைவியுடன்...தாலிகட்டிய மறுகணம்..இவர் காலில் விழுந்துதான் ஆசீர்வாதம் வாங்கினேன்..., கண்களில் நீர் பொங்க என்னை வாழ்த்தியவர்...
சீத்தாராம் வாத்தியார் : நாலாப்பு மறுபயும்..படிக்கச் சென்ற போது ஆரத்தழுவி...உற்சாகப் படுத்திய மனிதர்...ஆங்கிலத்தின் ஆரம்பத்தை என்னுள் விதைத்தவர்...., பின்னாளில் நல்லாசிரியர் விருதை அப்துல் கலாமிடம் பெற்ற போது.. என்னிடம் உற்சாகத்துடன் சொல்லி மாய்ந்த மனிதர்...
பேச்சியம்மா டீச்சர் : ஆறாப்பு படிக்கும்போது..., அறிவுப் பூர்வமாக பாடம் நடத்தவில்லை என்று, என் நினைப்பில் இருந்தாலும்..இவரின் தாயுள்ளம் பெரியது..., எங்களிடம் காட்டும் இவரின் அன்பும் பாசமும்...தாயின் அன்பு பாசத்திற்கு சற்றும் குறைவில்லாதது...
சீனிவாசன் : ஏழாப்பு வாத்தியார்..., சம்பளம் வாங்கும் தொழிலாக கருதாமல்... எங்களுக்கு அறிவூட்டுவதில் பெரும் சிரமப் பட்டவர்..., விபத்தில் ஒரு கால் இழந்து வீட்டோடு இருக்கும் இவரை பார்க்கச் சென்ற போது.. வலி மறந்து..., உற்சாகமுடன் அலவலாவிய உன்னத மனிதர்....
ராஜேந்திரன், ராதாகிருஷ்னன், சுந்தர்: பள்ளிக் கல்வியை விளையட்டாக..அதன் நோக்கம் புரியாமல், விளயாட ஒரு இடம் என்று மனதில் இருந்ததை மாற்றி, கல்வியின் அருமையை..., பாடத்தின் கடுமையை.., எளிமயாக சொல்லிக் கொடுத்து, இவ்வளவுதானா..என்று என்னையும் படிப்பின் பால் அக்கறை கொள்ளச் செய்த மும்மூர்த்திகள்.
ராஜேந்திரன் : ஆங்கிலம்+வரலாறு&புவியியல் அசிரியர், இன்றும் இவர் அளவுக்கு உலக வரலாறை என்னுள் , வேரெவரின் தாக்கமும் பாதித்ததில்லை.
ராதாகிருஷ்னன் : அறிவியல் வாத்தியார். என் அறிவியல் தாக்கம் இவரிடம் இருந்துதான் தொடங்கியது..., எதையும்..., செயல் முறை விளக்கம் கொடுத்து..நாங்கள் புரிந்து கொண்டோமா என்பதில் அதிக அக்கறை செலுத்தியவர்...
சுந்தர் : கணக்குப் பாடத்தை..சூ...இவ்வளவுதானா என்று எண்ண வைத்தவர்..., கணக்கில் நூத்துக்கு நூறு எடுப்பது எருமைமாடு மேய்ப்பதை விட சுலபமானது என்ற எண்ணத்தை தோற்றுவித்த மகான்.
அரங்கசாமி : பத்தாவது தமிழ் வாத்தியார். தமிழை முறையாகக் கற்றுக் கொடுத்தவர் (நான் சரியாகக் கற்றுக் கொண்டேனா என்பது வேறு விசயம்...). பள்ளி வயதில் இவரைக் கிண்டலடித்ததை பின்னாளில்.. இவரிடம் மன்னிப்புக் கேட்டதுண்டு. அதை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் என்னை அரவனைத்த அவரின் பாசம் மறக்க முடியாதது...
பூங்கோதை : +1&+2 வேதியல் பாடத்தை ரொம்ப சிரமேற்கொண்டு எனக்கு புரிய வைக்க முயன்றவர்..., வகுப்பில் மொத்த மதிபெண்ணில் முதல் மாணவனாக வந்தாலும்..அவர் பாடத்தில் என் மதிப்பெண் குறைவு என்ற ஆதங்கம் இவருக்கு உண்டு..., போன வருடம் பள்ளியில் சென்று சந்தித்த போது... அவர் கொண்டு வந்த மதிய உணவை, என்னை வற்புறுத்திச் சாப்பிடவைத்து மகிழ்ந்த மற்றொரு தாய்க்குச் சமமானவர்.
ஆமருவியப்பன் : +1&+2 கணக்கு வாத்தியார், கணக்குப் பாடத்தில் நான் அதிக மார்க் வாங்குவதால், என்னிடம் தனிப் பிரியம் வைத்தவர்..., எளிமையாகப் பாடத்தை புரிய வைப்பதில் வல்லவர். கல்லூரிப் படிப்பு முடிந்து, இப்போது சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று, வீடு தேடிப் போய் சொன்ன போது அளவிலா ஆனந்தம் அடைந்தவர்...
தனபால் : +1&+2 இயற்பியல் வாத்தியார், இந்தப் பாடத்தை என் விருப்பப் பாடமாக கல்லூரியில் தேர்ந்தெடுக்க காரணமானவர்..., பட்டிக்காட்டிலிருந்து சென்னை வந்து படிக்க வந்ததால் என்னிடம் தனி பிரியம் உண்டு..., ஆசிரியத்தொழிலை நிரம்ப நேசிப்பவர்.
போத்திராஜ் : இயற்பியல் துறைத் தலைவர். என் கல்லூரி வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர். கல்லூரிப் பாடத் திட்டங்கலை தாண்டி நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய பல விசயங்களை, அக்கறையுடன் சொல்ல முயன்றவர். என் கல்லூரி வாழ்க்கையில் ஒட்டு மொத்த ஆசிரியர்களில் மாணவர்களின் மேல் அதிக அக்கறை கொண்ட மாமனிதர் இவர்.
சுவாமிநாத ஐயர் : நான் ஐஐடி- மேல் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் தோற்றவுடன், என்னுடைய அடுத்த இலக்கான சிஏ படிப்பிற்காக, இவரிடம் தான் பயிற்சிக்காக சேர்ந்தேன். என்னுடைய நண்பனாய், குருவாய், எனக்கு உலகத்தை பற்றிக் கற்றுக் கொடுத்தவர். இவரிடம் தான், நான் ஆங்கிலத்தை அதிகமாகக் கற்றேன். கம்பனி..ஆடிட்டிங்..தொழில்..வர்த்தகம்...பங்கு மார்கெட் என்ற அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தவர்... பார்ப்பனர்பால் என்னுள் இருந்த கோபதாபங்களை, தவிடு பொடியாக்கியவர், சாதி மத பேதம் எனக்கில்லை என்று என்னையும் மதித்து நிரூபிக்க முயன்றவர்...
நான் இங்கே குறிப்பிடாத பல ஆசிரியர்கள் உண்டு , என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுல், மேலே சொன்ன இவர்கள் முக்கியமானவர்கள்.
விவசாயத்திற்கு அடுத்ததாக, மற்ற எல்லா தொழிலைக் காட்டிலும் ஆசிரியர்த் தொழில் உன்னதமானது என்பது என் தாழ்மையானக் கருத்து.
இன்று, சிலபல இடங்களில் இது பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிப் போன அவலம் நடந்து கொடிருந்தாலும்..., ஆசிரியத் தொழிலை உன்னதமானதாக பாவிக்கும் மனித மகான்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... அவர்களை... ஆசிரியர் தினமான... இன்று கொண்டாடுவோம்..
84 comments:
பங்காளி....ஆசிரியர்கள் தினத்தில் அவர்களை நினைவுகூர்ந்து பதிவிட்டு இருப்பது ரொம்ப நெகிழ்ச்சியாயிருக்கிறது....ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...!
சரியான நேரத்தில் சரியான பதிவு ஜெ அண்ணன்
ஆசிரியர் தினத்தில் அனைவரயும் நினைவு கூர்ந்து எழுதியதை மனமார பாராட்டுகிறேன்
//கணக்குப் பாடத்தை..சூ...இவ்வளவுதானா என்று எண்ண வைத்தவர்..., கணக்கில் நூத்துக்கு நூறு எடுப்பது எருமைமாடு மேய்ப்பதை விட சுலபமானது என்ற
எண்ணத்தை தோர்றுவித்த மகான்//
மக்கா எருமைமாடு மேய்ப்பது கஷ்டமா
// என் மேல் நம்பிக்கை கொண்டு, உன்னுடைய அனுபவத்தப் பகிர்ந்து கொள் என்று தற்போது படிக்கும் மாணவர்களை என்னிடம் நான்கு மணி
நேரம் ஒப்படைத்தவர்.//
மக்கா எருமைமாடு எப்படி மேய்ப்பது என்று தானே வகுப்பு நடத்தினீர்கள்
dheva said...
பங்காளி....ஆசிரியர்கள் தினத்தில் அவர்களை நினைவுகூர்ந்து பதிவிட்டு இருப்பது ரொம்ப நெகிழ்ச்சியாயிருக்கிறது....ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...!//
பகிர்வுக்கு நன்றி பங்காளி
இம்சைஅரசன் பாபு.. said...
//கணக்குப் பாடத்தை..சூ...இவ்வளவுதானா என்று எண்ண வைத்தவர்..., கணக்கில் நூத்துக்கு நூறு எடுப்பது எருமைமாடு மேய்ப்பதை விட சுலபமானது என்ற
எண்ணத்தை தோர்றுவித்த மகான்//
மக்கா எருமைமாடு மேய்ப்பது கஷ்டமா//
எருமை மாடு மேய்ப்பது சுலபம்.. அதை விடக் கணக்குப் பாடத்தை இவர் சுலபமாக்கிட்டார்...:)
//நாலாப்பு மறுபயும்..படிக்கச் சென்ற போது //
மக்கா நீங்க அப்ப நாலாப்பு fail ஆ
ரொம்ப அழகா எழுதிருக்கிங்க ஜெய்!
மனம் கனத்துப் போனது!
//தமிழை முறையாகக் கற்றுக்
கொடுத்தவர் //
இது பொய், செல்லாது .............. செல்லாது ..................
இது போன்ற ஆசிரியர்களால்தான் பலபேர் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்...
ஆனால் அவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்...
பகிர்வுக்கு நன்றி...
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
அது சரி உங்க தொல்லை தாங்காம வேலைய விட்டு ஓடிப்போன ஆசிரியர்கள் லிஸ்ட் எங்க?
வந்துட்டேன்
இம்சைஅரசன் பாபு.. said...
மக்கா எருமைமாடு எப்படி மேய்ப்பது என்று தானே வகுப்பு நடத்தினீர்கள்//////
பூ குழி இறங்குவதை விட்டுடீங்களே
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
அது சரி உங்க தொல்லை தாங்காம வேலைய விட்டு ஓடிப்போன ஆசிரியர்கள் லிஸ்ட் எங்க?////////
சிப்பு உன் தொல்ல தாங்க முடியல,இதையே அடுத்த பதிவா போட்டு இவன் கழுத்து அறுப்பானே
ஆசிரியர்கள் தினத்தில் அவர்களை நினைவுகூர்ந்து பதிவிட்டு இருப்பது ரொம்ப நெகிழ்ச்சியாயிருக்கிறது....ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...
என் அழைப்பை ஏற்றதற்கு நன்றி.
மிக இயல்பானான நினைவுகள் ரத்தினச் சுருக்கமாய்.............
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
உங்களுக்கு நல்ல நல்ல ஆசிரியர்கள் வாய்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது எனக்கு அவ்வாறு வாய்க்கவில்லையே என்று வருத்தமும், கோபமும், பொறாமையும் தான் எழுகிறது.
உங்களின் பகிர்வு மனநெகிழ்ச்சியை கொள்ள செய்கிறது! நன்றி ஜெய்!
மிக நல்ல நினைவுப்பதிவு .
வாழ்த்துக்கள் .
GREAT !!!!
அழகான பகிர்வு...வாழ்த்துக்கள்
இருக்குறதுலயே பெஸ்ட் வாத்தியார்களா இருப்பாங்க போல பங்காளி! பின்ன நாலாப்பு பெயிலான ஆளையெல்லாம் சிஏ வரைக்கும் படிக்க வச்சுருக்காங்கன்னா சும்மாவா!
என்னுடைய வாழ்த்துகளும்!
gud post
ஆசிரியரை மறக்காமல் நினைகூர்ந்தது நல்ல பதிவு.எனக்கும் அந்த மலரும் ஆசிரியர்கள் நினைவு
வாழ்த்துக்கள்
அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
மிகவும் நல்ல பதிவு தல!! படிக்கும்போதே மனசு தானா அவர் அவர் ஆசிரிய தெய்வங்களை நினைவுகூர்வது நிச்சையம்!! ஒரு நிமிடம் என் ஆசிரிய தெய்வங்களை நினைக்க வைத்த உங்கலுக்கு நன்றி!!
//அறிவுப் பூர்வமாக பாடம் நடத்தவில்லை யெண்ரு என் நினைப்பில் இருந்தாலும்//
இதை இங்கு கூறாமல் தவிர்த்து இருக்கலாம் என்பது என் கருத்து.
//பள்ளி வயதில் இவரைக் கிண்டலடித்ததை பின்னாளில்.. இவரிடம் மன்னிப்புக் கேட்டதுண்டு. அதை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் என்னை அரவனைத்த அவரின் பாசம் மறக்க முடியாதது...//
இதுபோல் பல ஆசிரியர் இடம் மன்னிப்பு கேட்க மனம் ஏங்கி கொண்டு இருக்கிறது. அவர்களை வாழ்வில் மீண்டும் சந்திக்க இறைவன் அருள்வானாக.....
//ஆசிரியத் தொழிலை உன்னதமானதாக பாவிக்கும் மனித மகான்கல் இருந்து கொண்டுதா இருக்கிறார்கள்... அவர்களை... ஆசிரியர் தினமான... இன்று கொண்டாடுவோம்..//
உங்களை விமர்சிக்கும் அளவு நான் இன்னும் வளரவில்லை என்றாலும் உங்கள் எழுத்தில் மெருகு கூடி இருக்கிறது என்பது என் கருத்து.... நெகிழ்வான பதிவு..... :))
(விட்றா விட்றா டெரர்... கண்ண தொடச்சிட்டு கலத்துல இறங்குடா)
எலேய் மக்கா! நளைக்கு வந்து பார்ப்பேன் எல்லாறும் ஓட்டு போட்டு இருக்கனும்..இல்லை வீட்டுக்கு வந்து வெட்டுவேன்...
// என் மேல் நம்பிக்கை கொண்டு, உன்னுடைய அனுபவத்தப் பகிர்ந்து கொள் என்று தற்போது படிக்கும் மாணவர்களை என்னிடம் நான்கு மணி நேரம் ஒப்படைத்தவர்.//
நீங்க போனதும் சொல்லி இருக்காரு... இனி சொல் பேச்சி கேக்கல ஜெய் கூப்ட்டு மறுபடி பேச சொல்லுவேன்... அன்னைக்கு வாய்முடின பசங்க இன்னும் வாய் திறக்க மாட்டரங்களாம்.
நண்பர்களே, எனக்கு உடம்பு சரியில்லை(fever)..., சரியானவுடன் வந்து அனைவருக்கும்..மறுமொழி இடுகிறேன்...
உருப்படியாண ஒரு பதிவு போட்டு இருக்கீங்க. அதான் கண்ணுபட்டு ஜீரம் (fever) வந்துடுத்து.
Get well Soon
@Jey
//நண்பர்களே, எனக்கு உடம்பு சரியில்லை(fever)..., சரியானவுடன் வந்து அனைவருக்கும்..மறுமொழி இடுகிறேன்...//
இதை ”பதிவுலகின் சுதந்திர தினம்” என்று அறிவிக்கிறேன்...
அது என்ன எல்லோரும் தமிழ் வாத்தியாரை தான் கிண்டல் பண்றீங்க?
நானும் அப்படிதான் அதான் கேட்டேன்.
ரொம்ப நல்லா எழுதினிங்க ..
அனைத்து அசிரியர்கள்கும் வாழுத்துக்கள் ..எல்லோரேயும் நினைவில் வைத்து எழுதின உங்களக்கும் வாழ்த்துக்கள் நன்றி
உங்களுடைய ஆசிரியர்களை ஞாபகம் வைச்சு ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க..
உண்மையான வாழ்த்துக்கள்..
ரொம்ப நல்லாயிருக்கு பதிவு..
அணைவரையும் நினைவில் வைத்து கொண்டாடிய உங்களின் குணம் போற்றத்தகுந்தது.
வித்தியாசமான நல்ல தரமான பகிர்வு Jey. வாழ்த்துக்கள்.
உண்மைலேயே எனக்கும் எனது பள்ளிக்காலங்கள் நியாபகத்துக்கு வரவசுட்டீங்க அண்ணா .. ஆசிரியர்களால்தான் பலர் பல நிலைகளில் சந்தோசமாக இருக்கிறார்கள். பெருபாலும் எல்லோருடைய பள்ளிக்காலத்திலும் எதோ ஒரு ஆசிரியர் நம் மனதை கவர்வார். ஆனால் சில சமயம் ஆசிரியர்களுக்கு பயந்து பள்ளிக்கு செல்லாமல் விட்டவர்களும் இருக்கிறார்கள்..
@@dheva...நன்றி
@@ இம்சைஅரசன் பாபு - ஆமாம் மக்கா பெயிலு. அதுக்கு தனி பதிவா போட்ருக்கே. படிங்க.
@@Balaji saravana -நன்றி
//தேசாந்திரி-பழமை விரும்பி said...
இது போன்ற ஆசிரியர்களால்தான் பலபேர் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்...
ஆனால் அவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்...
பகிர்வுக்கு நன்றி...//
ஆமாம் சார் பலர் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள். நாம் சென்றுபார்த்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். வருகக்கு நன்றி சார்.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
அது சரி உங்க தொல்லை தாங்காம வேலைய விட்டு ஓடிப்போன ஆசிரியர்கள் லிஸ்ட் எங்க? //
அவங்க லிஸ்ட் ரொம்ப பெருசு மக்கா... அப்புறம் பதிவு நீளம்னு சொல்லி...வருத்தப்படுவீங்க...:)
//முத்து said...//
வந்து கமென்ஸ் போட்டியே நன்றி
//senthil velayuthan said...
ஆசிரியர்கள் தினத்தில் அவர்களை நினைவுகூர்ந்து பதிவிட்டு இருப்பது ரொம்ப நெகிழ்ச்சியாயிருக்கிறது....ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...//
நன்றி செந்தில்
//கலாநேசன் said...
என் அழைப்பை ஏற்றதற்கு நன்றி.
மிக இயல்பானான நினைவுகள் ரத்தினச் சுருக்கமாய்.............
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.//
நீங்க கவிதையா கலக்கிட்டீங்க. எனக்கு கவித எழுத வரமட்டீங்கிது.
எப்படியாவது ஒரு நாள் எழுதுறேன்...):
@@என்னது நானு யாரா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல.
//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
மிக நல்ல நினைவுப்பதிவு .
வாழ்த்துக்கள் .//
நன்றி சார்.
பனங்காட்டு நரி said...
GREAT !!!!//
நன்றி நரி.
// Gayathri said...
அழகான பகிர்வு...வாழ்த்துக்கள்/
வாங்க அம்மனி. நன்றி.
//ப்ரியமுடன் வசந்த் said...
இருக்குறதுலயே பெஸ்ட் வாத்தியார்களா இருப்பாங்க போல பங்காளி! பின்ன நாலாப்பு பெயிலான ஆளையெல்லாம் சிஏ வரைக்கும் படிக்க வச்சுருக்காங்கன்னா சும்மாவா!//
ஆமா பங்காளி, என்னை பொறுத்த வரையிலும்...எல்லா வாத்திகளும் நல்லவங்களா அமைஞ்சுட்டாக...):
//புரட்சித்தலைவன் said...
gud post//
நன்றி சார்.
//Chef.Palani Murugan, LiBa's Restaurant said...
ஆசிரியரை மறக்காமல் நினைகூர்ந்தது நல்ல பதிவு.எனக்கும் அந்த மலரும் ஆசிரியர்கள் நினைவு
வாழ்த்துக்கள்//
எல்லாருக்கும் இவர்களோட நினைவுகள் கண்டிப்பா இருக்கும் சார். நான் வாய்ப்பை பயன்படுத்தி எழுதிட்டேன்.
அலைகள் பாலா said...
அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு நன்றி பாலா..:)
//அன்பரசன் said...
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் //
நன்றி அன்பரசன்.
//TERROR-PANDIYAN(VAS) said...
//அறிவுப் பூர்வமாக பாடம் நடத்தவில்லை யெண்ரு என் நினைப்பில் இருந்தாலும்//
இதை இங்கு கூறாமல் தவிர்த்து இருக்கலாம் என்பது என் கருத்து.//
தவிர்த்து இருக்கலாம்.
//TERROR-PANDIYAN(VAS) said...
// என் மேல் நம்பிக்கை கொண்டு, உன்னுடைய அனுபவத்தப் பகிர்ந்து கொள் என்று தற்போது படிக்கும் மாணவர்களை என்னிடம் நான்கு மணி நேரம் ஒப்படைத்தவர்.//
நீங்க போனதும் சொல்லி இருக்காரு... இனி சொல் பேச்சி கேக்கல ஜெய் கூப்ட்டு மறுபடி பேச சொல்லுவேன்... அன்னைக்கு வாய்முடின பசங்க இன்னும் வாய் திறக்க மாட்டரங்களாம்//
கும்மிக்கி கம்பனி குடுக்க முடியாம போச்சி பாண்டி. மழையில நனஞ்சது படுத்தி எடுத்துடுச்சி...
//TERROR-PANDIYAN(VAS) said...
@Jey
//நண்பர்களே, எனக்கு உடம்பு சரியில்லை(fever)..., சரியானவுடன் வந்து அனைவருக்கும்..மறுமொழி இடுகிறேன்...//
இதை ”பதிவுலகின் சுதந்திர தினம்” என்று அறிவிக்கிறேன்...//
ஊசி போட்டாச்சி, தெம்பா வந்து நாளைக்கி சேத்து வச்சி கும்மிடலாம்.
//அருண் பிரசாத் said...
உருப்படியாண ஒரு பதிவு போட்டு இருக்கீங்க. அதான் கண்ணுபட்டு ஜீரம் (fever) வந்துடுத்து.
Get well Soon //
ஃபீவரோட எழுதுன பதிவு மக்கா.
உன் அன்புக்கு நன்றி அருண்.
சசிகுமார் said...
அது என்ன எல்லோரும் தமிழ் வாத்தியாரை தான் கிண்டல் பண்றீங்க?
நானும் அப்படிதான் அதான் கேட்டேன்///
ஹஹஹா நீங்களுமா?!!..:)
//sandhya said...
ரொம்ப நல்லா எழுதினிங்க ..
அனைத்து அசிரியர்கள்கும் வாழுத்துக்கள் ..எல்லோரேயும் நினைவில் வைத்து எழுதின உங்களக்கும் வாழ்த்துக்கள் நன்றி//
ந்ன்றி சகோதரி.
//பதிவுலகில் பாபு said...
உங்களுடைய ஆசிரியர்களை ஞாபகம் வைச்சு ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க..
உண்மையான வாழ்த்துக்கள்..
ரொம்ப நல்லாயிருக்கு பதிவு..//
நன்றி பாபு.
கக்கு - மாணிக்கம் said...
அணைவரையும் நினைவில் வைத்து கொண்டாடிய உங்களின் குணம் போற்றத்தகுந்தது.
வித்தியாசமான நல்ல தரமான பகிர்வு Jey. வாழ்த்துக்கள்//
நன்றி அண்ணே
// ப.செல்வக்குமார் said...//
உன்னை பாத்து , மொக்கைக்கு பயந்து ஆசிரியர்கள், ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு ஓடினதா கேள்விபட்டேன் செல்வா. உண்மையா?
நல்ல பதிவு நாம் அனைவரும் எங்கு ஆசிரியரை நினைத்து பார்க்கிறோம்
பதிவு அருமையா இருக்கு Jey. வாழ்த்துகள். ஜெய்லானி வந்து படிச்சிட்டு கமண்ட்ஸ் போடலியா jey. என்னாது அவரு படிக்காத மேதையா?? கூப்பிடுங்க அவர !! அனுப்புங்க ஓலைய !!
என்ன ஓய்..!! நீ வாத்தியாருகிட்ட மட்டும்தான் படிச்சே ..அட ...ச்செ..என்னா பில்டப்பு
நா எல் கேஜியே டீச்சர் கிட்டதான் படிச்சேன் தெரியுமா ??? அதுக்கு மேல
நான் ஒரே அட்டம்ட்டுல எல் கே ஜி பாஸ் ..
//ஊசி போட்டாச்சி, தெம்பா வந்து நாளைக்கி சேத்து வச்சி கும்மிடலாம்.//
பாத்தியாலே நா அப்பவே சொன்னேன் ..சின்ன பதிவா போடு சின்ன பதிவா போடுன்னு கேட்டாதானே...!!
யாரோ உனக்கு சூனியம் வச்சிட்டான் ..இனியாவது திருந்து... இல்லாட்டி பின் பக்கம் 4 ஊசி போட வேண்டி வரும்
மக்கா, பாத்து ரெண்டு நாள் லீவு எடுத்துகிட்டு பொருமையா வா..!!... சுவர்தான் முக்கியம் சித்திரம் எங்கும் போயிடாது
மீ 70
டேக் கேர்
ஜெய் ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு, உடம்ப பாத்துக்கப்பா!
sorry sir vara vazila bus pacer aayudichu athaan classukku late aha vara veandiyathaayudichuuu
sorry sir
"bus pacer aayudichu"
sorry spelling mistake athu vanthu
" bus panchr aayudichu "
வாவ்... எல்லா ஆசிரியர்களின் பெயரையும் நினைவு கொண்டு எழுதியது கிரேட்... எங்கள் வாழ்த்துக்களும் உங்கள் ஆசிரியர்க்கு
நீங்கள் உங்களது ஆசிரியர்கள் மீது கொண்ட மரியாதையை நான் பார்த்து வியக்கிறேன்.
ஆசிரியர்களை உண்மையிலேயே மதிப்பவர்கள், என்றும் மாண்புடன் இருப்பார்கள் என்பதை தங்களின் பதிவு மூலம் மெய்ப்பிக்கின்றீர்கள், வளம் தரும் வாழ்த்துகள்,
என்னிடம் (?!!!) படித்த மாணவன் ஒருவன், நான் நடத்திய(??!!!) பாடங்களையும், கற்கும் வழிகளையும், சமீபத்தில் நினைவுகூர்ந்தான்,
அதே போன்ற உணர்வை உங்கள் ஆசிரியர்களுக்கு தவறாமல் அளிப்பதற்கு, மிக்க நன்றி,
என் ஆசிரியர்களை நினைவு கூறும் தகுதி வளர்த்துக்கொண்டவுடன் தங்கள் வழியில் நினைவு கூற, உங்கள் பதிவு எனக்கு ஒரு வழிகாட்டி,
நன்றி ஜெய், தொடருங்கள்,
விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க
http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html
எப்படி இருக்க? உடம்பு சரி ஆயிடுச்சா
GET WELL SOON Mr,JEY
குணமாகி விட்டீரா?
அன்பன்
வேதாந்தி
குணமாகி விட்டீரா?
அன்பன்
வேதாந்தி
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி
வெட்டிப்பேச்சு said...
குணமாகி விட்டீரா?
அன்பன்
வேதாந்தி//
குணமாகிவிட்டது. அன்புக்கு நன்றி.
::))
ஆசிரியர்களை நினைவுக் கூறும் நெகிழ்வான பதிவு.. நன்றி மறவாதவர் நீங்கள்...
Post a Comment