இரண்டு வாரமாக வலைப்பக்கம் வரமுடியாத நிலை. கடந்த 5 ந்தேதி மெதுவாக எட்டிப் பார்த்த ஜூரம் அடுத்து வந்த நாட்களில், டைய்பாய்டில் கொண்டு விட்டது. எதை சாப்பிட்டாலும் கசப்பு, எருமைமாடுகளுக்கு கொடுப்பது போல் எவ்வளவு பெரிய மாத்திரைகள். பதிவுலககமே நாம் எங்கே என்று தேடி??? மாய்ந்துபோனது???!!!! (ஜூரம் அதனால 1 வாரம் கழித்து வரேனு மெயில் அனுப்புனா, அங்கயும் கும்மியடிச்சி, கொலையா கொல்றானுக...நாதாரிக, மொள்ளமாரிங்க, முடுச்சவிக்கிக...).
சரி ஜுரம் சரியாகிடுச்சி ஒரு பதிவு போடலாம்னா, 2 வாரமா ஆஃபீஸ் போகாததால, தோட்டத்துல களை முளைச்சிருக்குறா மாதிரி அஃபீஸ்ல ஆணி பெருகி நிக்குது. இந்தமாசம், இன்கம்டாக்ஸ் + ROC க்கு, கம்பனி அக்கவுண்ட்ஸ் ஃபைல் பண்ணனும் அதுவேற. அதனால அடுத்த ரெண்டுவாரத்துக்கு பதிவு ஏதும் எழுதமுடியுமானு தெரியலை (ங்கொய்யாலே எப்ப நீ பதிவெழுதுவேனு, நாலு பேர் காத்திட்டு இருக்குறாமாறியே பில்டப்பு).
கடந்த வாரங்களில் என் மனதுக்கு சந்தோசமான + மிகவும் துக்ககரமான நிகழ்வுகள் என் வாழ்வில்.
சந்தோசமான நிகழ்வுகள் :
1. என் பொண்ணு பள்ளியில் (L K G), கதை சொல்லுவதிலும்( story telling with action), ஃபேன்ஸி ட்ரெஸ் போட்டியிலும் ( character from Ramayana. we have chosen, sita for her) முதலாவதாக வந்தது. 3 வாரப் பரபரப்பான preparation ஒரு வழியாக முடிந்தது. எந்த கேரக்டர் தேர்ந்தெடுப்பது, அதற்கான வசனங்கள், பொறுத்தமான உடைகள் மற்றும் மேக்கப், சார்ட் பேப்பர், மற்றும் பெயிண்ட்+பிரஸ் வாங்கி வந்து தீ மாதிரியான வரைபடம் வரைதல் என்று அதற்காக ஒருவாரம், வீட்டம்மா என்னையும் பெண்டு நிமிர்த்தியாகிவிட்டது. இருந்தாலும் குழந்தக்காக கஷ்டப்படுவதில்??? ஒரு சுகம். அதுவும் முடிவில் போட்டியில் முதலாவதாக வந்தால் ரெட்டிப்பு சந்தோசம்.
2. எனது ”சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு” பதிவு செப்டெம்பர் மாத, மல்லிகை மாத இதழில் வெளிவந்துள்ளது, எனக்கு ஒரு பிரதியை அனுப்பி இருந்தார்கள். முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட ஒரு தமிழ்மாத இதலில் என்னுடையப் பெயர், மனதிற்குள் சின்ன சந்தோசம்.
சோகமான நிகழ்வு :-
என் வாழ்வின் மிக நெருங்கிய தோழனின் மறைவு. நினைவு தெரிந்து கிராமத்தில் ஒன்றாகவே சுற்றித்திருந்திரிந்திருக்கிறோம், பத்தாவது வரையிலும் ஒன்றாகவே படித்தோம், மீண்டும் கல்லூரி செல்லும் போது அதே கல்லூரியில் எனக்கு ஜுனியராக சேர்ந்தாலும் ஒன்றாகவே இருந்தோம். கல்லூரி படிப்பு முடிந்து அவன் விவசாயம் பார்க்க கிராமத்திலேயே இருந்துவிட்டான். நான் ஊர் செல்லும் போது கூடிப் பேசுவது என்றாகிவிட்ட காலங்கள். ஊரிலிருந்து போன், ஜெயராமன் இறந்துவிட்டான் என்று, மனதே ஸ்தம்பித்துபோய்விட்டது. என் தந்தையின் இழப்பின் போது மனதினுள் உணர்ந்த ஒரு வெற்றிடத்தை, மீண்டும் உணர்ந்தேன்.
காலையில் போன் மாலையில் எடுத்துவிடுவோம் என்று, உடனே கிளம்பினாலும் ஊர் போய் சேர இரவாகிவிடும், வீட்டிலும், இப்போதுதான், டைபாய்ட் ஜூரம் சரியாகிருக்கு, எப்படி இருந்தாலும் நேரத்திற்கு போய் சேரமுடியாது, 2 நாள் கழித்து செல்லுங்கள் , இல்லையென்றால் காரியத்திற்கு செல்லுங்கள் என்று (போனில் பதிவர் மங்குனியும் இதையே சொன்னான்). முடிவில் அவனது முகத்தை பார்க்கமுடியாமல் போய்விட்டது. பணம் தேடி கிராமத்தை விட்டு செல்பவர்களின் ஈடுகட்ட முடியாத துரங்களில் இதுமாதிரியானதும் ஒன்று.
பட்டணத்தில் இருந்திருந்தால், அவனின் உடல் நலத்தினை ( ஜூரம் ஆரம்பித்து அது நிமோனியா காய்ச்சல் என்று கண்டரியப்பட்டு, மதுரை அப்போலாவில் 10 நாள் சிகிச்சை பலனின்றி இறப்பு) சரி செய்திருக்கலாமோ என்ற எண்ணம். இன்னும் மருத்துவ ஆராய்ச்சிகள் கடக்கவேண்டிய தூரம் அதிகம் போலும். எனது மொத்த வாழ்நாளில் மறக்க முடியாத இழப்புகளில், இவனது மறைவும் ஒன்று.(இதை இங்கு எழுதலாமா வேண்டாம என்று மனதிற்குள் சிறு போராட்டம், முடிவில் உற்றவர்களிடம் பேசி பாரத்தை கொஞ்சம் இறக்கிவப்பதுபோன்ற உணர்வில் எழுதிவிட்டேன்.)
டிஸ்கி 1 : அடுத்த 2 வாரத்திற்கு ஏதும் பதிவு எழுத முடியும் என்று தோன்றவில்லை, முடிந்தால் எழுதுகிறேன். அவ்வப்போது வந்து உங்கள் பதிவுகள் படித்து பின்னூட்டம் இடுகிறேன். ஆனால் கும்மியடிக்க முடியுமா தெரியவில்லை. பொறுத்துக் கொள்ளவும்.
டிஸ்கி 2 : எனது உடல் நலத்தை அக்கறையோடு விசாரித்த பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றிகள்.
56 comments:
vanthutten.
நான்தான் முதல்ல. வீட்டுக்கு வந்த ஹார்லிக்ஸ் , ஆப்பிள், ஆரஞ்சு எல்லாம் எனக்குதான். ஹிஹி
இரு படிச்சிட்டு வர்றேன்
எல்லா மைனசயும் மறக்கலாம் பங்காளி.... உங்க கட்டுரை மாத இதழ்ல வெளிவந்ததுக்கு பாராட்டுகள்...!
உனது நண்பனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் . (எனக்கு இந்த பதிவுல இதுக்கு மேல கும்மியடிக்க மனசு வரலை )
கட்டுரைக்கு வாழ்த்துக்கள்.
நண்பனின் இழப்பு தாங்க முடியாதது. அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
at last devil returns!
nice to see your daughter on stage!a bold show!
sorry for jeyaraman!
சந்தோசத்தை கூறிவிட்டு (உங்கள் மகள் பரிசு வாங்கியது) அதை கொண்டாட முடியாமல் துக்கதினையும் கூறி இருக்கீர்களே?
unga veetu kutti ponnukku paarattukkal..
ungal article pathirikkaila vandhathu miga sandhosham paarattukkal,,
ungal nanbharin maraivukku enathu aazhndhanaudhaabhangal..
வாழ்த்துக்களையும், வருத்தங்களையும் ஒரே பதில்லில் போட மனசு வரவில்லை.
அடுத்த பதிவில் கும்மறேன்.
Come back soon jey
மங்குனி அமைசர் said... 5
உனது நண்பனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் . (எனக்கு இந்த பதிவுல இதுக்கு மேல கும்மியடிக்க மனசு வரலை )
//
வழிமொழிகிறேன்...
வருத்தமும் வாழ்த்துகளும் ஒரே பதிவில் அந்த அளவுக்கு ஆணியா
இப்போ தான் கொஞ்ச நாளா எங்க பார்த்தாலும் “நண்பேண்டா” ந்னு சொல்லிட்டு இருக்கும் போதே ஒரு நண்பனின் துக்க செய்தி.
மனச தேத்திக்கோ நண்பா...
//பட்டாபட்டி.. said...
மங்குனி அமைசர் said... 5
உனது நண்பனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் . (எனக்கு இந்த பதிவுல இதுக்கு மேல கும்மியடிக்க மனசு வரலை )
//
வழிமொழிகிறேன்...//
நானும்!
மனச தேத்திக்க ஜெய்யி, பல்லக் கடிச்சிக்கிட்டு கொஞ்சநாளு ஆணி புடுங்கினா எல்லாம் சரியாயிடும்! எல்லா சோகத்தையும் காலம் கரைச்சிடும்!
அப்புறம் உடம்பப் பாத்துக்க மொதல்ல!
மகளின் முதலாம் பரிசு, பத்திரிகையில் உங்களது இடுகை எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள் சொல்ல வந்தால், உங்கள் நண்பரின் இழப்பின் துயரத்தை கேட்டு வேதனையாய் இருக்கிறதே..... ம்ம்ம்ம்.....
Get well soon and come back soon.
உங்க பொண்ணு பர்ஸ்ட் பிரைஸ் வாங்குனதுக்கு வாழ்த்துக்கள் சொல்லவா? இல்ல ஒரு நண்பனை இழந்து நிற்கும் உங்களுக்கு ஆறுதல் சொல்லவா?
:(
இந்த இடத்தில சொல்லக் கூடாது, ஆனால் சின்ன குழந்தைகளை உடனுக்குடன் பாரட்டுவது அவர்களுக்கு ஒரு உற்சாகம், மகிழ்ச்சியைக் கொடுக்கும்..
கீர்த்திக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்லவும்.
Keerthi,
You are looking so cute, pretty & beautiful. Congratulations on winning the first prize.
Wishing you all the very best for your future.
Best Regards,
Mohan
உனது நண்பனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் . jai
உங்கள் நண்பரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்........... பத்திரிக்கையில் வந்த முதல் செய்திக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து வர வாழ்த்துக்கள். உங்கள் குழந்தைக்கும் வாழ்த்துக்கள்.
நன்மையும் தீமையும் கலந்தது தான் வாழ்க்கைன்னு எல்லா விஷயத்தையும் கலந்து தந்து புரிகிற மாதிரி சொல்லிட்டீங்க.
எல்லா காய்ச்சலுக்கும் நீர் உபவாசம் இருந்து சரி செய்துக் கொள்ளலாம். ஏனோ இன்னமும் உயிரைப் பறிக்கும் ஆங்கில மருத்துவத்தையே நம்புகின்றார்களோ, தெரியவில்லை இந்த மக்கள்?
காய்ச்சல் எந்த வகையாக இருந்தாலும் மரணம் என்பது அதற்கு அநியாய விலை.
மக்களுக்கு ஆரோக்கியத்தை பற்றிய சரியானபடி தகவல்கள் கிடைக்கவில்லையே என்று வருத்தமாக உள்ளது. உங்களுக்கு வந்த டைப்பாயிடு ஜுரத்திற்கும் உபவாசமே சிகிச்சை முறை.
ம்ம்ம்ம்...இன்னமும் எத்தனை பேர்களை பலிக்கொள்ளப் போகிறதோ இந்த நோய் என்கின்ற அரக்கன்.
//எனது ”சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு” பதிவு செப்டெம்பர் மாத, மல்லிகை மாத இதழில் வெளிவந்துள்ளது, எனக்கு ஒரு பிரதியை அனுப்பி இருந்தார்கள்.//
வாழ்த்துக்கள்.
நண்பரின் இழப்புக்கு வருந்துகிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.
உங்க குட்டி பொண்ணுக்கு வாழ்த்துக்கள்..
நட்பின் பிரிவுக்கு வருந்துகிறேன்.
Get well and come back soon
உங்கள் மகள் போட்டியில் வென்றதற்கும் , உங்கள் கட்டுரை அச்சு இதழில் வெளி வந்ததற்கும் பாராட்டுக்கள் அண்ணா .,
உங்கள் நண்பரின் இறப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .!
உங்கள் குழந்தைக்கும், கட்டுரை மல்லிகையில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துக்கள்...
நண்பனுக்கு என் அஞ்சலியும் ....
HEALTH IS WEALTH ஜெ அண்ணா.TAKE CARE OF YOUR HEALTH
ஜெ அண்ணன் பதிவு போட்டுட்டாரு இன்னைக்கு ஒரே கும்மி தன என்று நினைத்தேன் .அனல் நண்பனின் இழப்பு பற்றி அறிந்தவுடன் ஒன்றும் சொல்வதற்கில்லை.ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் துக்கத்தில் நான் பங்கு எடுத்து கொள்கிறேன் .
மகிழ்ச்சியான இரு விசயத்துக்கும் என் பாராடுக்கள் ஜெ அண்ணன்
பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. சந்தோச நிகழ்வுகளை எழுதுவதற்காக ஆரம்பித்தேன், அப்படியே என் மனதில் அழுத்திக்கொண்டிருந்த சோகமும் வந்துவிட்டது. உங்களின் புரிதல்களுக்கும், ஆறுதல்களுக்கும் நன்றி நண்பர்களே.
குழந்தையை பாராட்டியதற்கும் நன்றி.
வேதனைகளுக்கும், துயரங்களுக்கும் மருந்திடும் சக்தி காலத்திற்கு உண்டென்றே நம்புகிறேன். எல்லாம் கடந்து போகும்.
வாழ்த்துக்கள் சகோரா... இன்பமும் துன்பமும் இணைந்தது தானே வாழ்க்கை.. சிலதை தாங்கமுடியாது தான் என்ன செய்வது..
தங்களுடைய மின்னஞ்சல் முகவரி தரமுடியுமா..?
சில வலிகள் நிலைத்துப் போவதென்னவோ உண்மை அன்பரே.
நட்பு மிகப் பெரியது. அது நமக்கு வாழக் கற்றுக் கொடுக்கிறது.
உங்களுடன் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
அன்பன்
வேதாந்தி.
பின்னூட்டம் எப்படி இட என்று தெரியவில்லை. இறுதியில் சோகமே எஞ்சுவதால் நண்பருக்கு அஞ்சலி. உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.
தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html
அருமை பின்னி பெடல் எடுதிடிங்க
sorry boss - congratulations - take care..!!
come back soon,, waiting 4 u!!
Mr.jey ...,are you there?
எங்கைய்யா ஆளை காணோம் நான் வரும் போது ஒரு பய புள்ளையும் இருக்க மாட்டுதே
இந்த பிளாக் விற்பனைக்கு கிடைக்குமா..? இல்ல ரொம்ப நாளா ஆள் நடமாட்டம் இல்லாம இருக்குதே அதான் கேட்டேன்..!!
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_30.html
நன்றி
பிளாக் விற்பனைக்கு கவுண்ட்டவுன் ஸ்டார்டிங் ...ஏலம் கேட்பவர் கேட்கலாம் ..!!
( 1) முடிஞ்சா என் பிளாகில் வந்து அட்டனன்ஸ் போட்டு செல்லவும் :-)
(2) ஏலத்தை நீங்களே ஃபிக்ஸ் செய்யலாம்
(3) மினிமம் டிஸ்கவுண்ட் இருக்கு
(4 ) முதலில் வருபவருக்கு முண்ணுரிமை வழங்கப்படும்
(5 )இலவச பாஸ்வேர்ட் வழங்கபப்டும்
(6) குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் , முடிந்தால் பனங்கற்கட்டும் , சீனி மிட்டாயும் பார்ஸல் தரப்படும் ((நீங்க சாப்பிடாட்டி உங்க குடும்ப குட்டீஸுக்கு அன்பளிப்பா கொண்டுபோங்க ))
இரண்டு வாரமாக வலைப்பக்கம் வரமுடியாத நிலை
//
ஹி..ஹி.. வாரத்துக்கு எவ்வளவு நாள் அப்பு?...
உன்னையும் ப்லோ பண்ற அவங்களை சொல்லனும்...( ஹி..ஹி.. என்னையும் சேர்த்துத்தான்..)
இங்க பாரு.. 1 வாரத்தில பதிவு வரலேனே.. உண்மை(த்)தமிழன் அய்யாவுக்கு, இந்த ப்ளாக்கை தாரவார்த்துக்கொடுத்திடுவேன்..
நான் சொல்லீட்டேன்.. மீதி உன் கையில...
அருண் பிரசாத் said...
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_30.html
நன்றி
//
இதெல்லாம் டூ மச் பிரதர்..
ப்ளாக் ஓனரு, ஷட்டரை போட்டுக்கிட்டு.. தின்னவேலி சைட் போயிட்டதா சொன்னாங்க...
(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
//
அக்கோவ்.. மனிதக்கழிவ விட்டுட்டீங்க..>!!!
hahahaa, pattaa@jailaani.
wait for one more week i'll join you guys.:)
தல எந்திரிச்சி எழுத வாங்க... Please
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நான்தான் முதல்ல. வீட்டுக்கு வந்த ஹார்லிக்ஸ் , ஆப்பிள், ஆரஞ்சு எல்லாம் எனக்குதான். ஹிஹி
////////////////////
sappaattulaye irukkanga
இன்று மலர்ந்த கோடானுக் கோடி மலர்களை கொண்டு வாழ்த்துகிறேன் சகோதரரே .
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரா.
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html
கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு
நண்பரே உங்களது பதிவைத் திருடி தனது பிளாக்கில் பதிந்திருக்கிறார் ஒரு ஞான சூன்யம்.
http://www.livingextra.com/2010/12/blog-post_23.html
மல்லிகை மகள் படைப்புக்கு வாழ்த்துக்கள் சார்
உனது நண்பனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்....
Hellooooo
Long time no posts.
we are waiting for your postings.
Cheers!!
mallikai மகள் பார்த்த்டேன்வாழ்த்துக்கள்
காட்டானும் இஞ்ச குழ போட்டுட்டான்...
வணக்கம் பாஸ், புதுப் பதிவு ஏதும் கிடைக்காதா.
உங்களுடைய பதிவுகள் வித்தியாசமா இருக்கு..!!
சில பதிவுகளைப் படித்தேன்...அருமையாக இருக்கு சார்.
நேரம் கிடைக்கும் போது மீதம் உள்ள பதிவுகளைப் படித்து விட்டு
பின்னூட்டம் இடுகிறேன்... :)
Post a Comment