August 13, 2012

தமிழ் வலைப் பதிவர்களுக்கான அழைப்பிதழ்

பதிவெழுதி நீண்ட நெடிய நாட்கள் ஆகிவிட்டது...கிட்டத்தட்ட எனக்கு எனது வலைப்பூவின் வழித்தடம் மறந்துபோன நிலையில், யோவ் அண்ணே , எத்தன நாள்தான் ஒன்னோட பிளாக்குக்கு பொம்மை துப்பாக்கிய கைல ஏந்திகிட்டு காக்காவுக்கு காவ காக்கிறது  இனிமேல் முடியாது வந்து தூசி தட்டி குடி வந்துடு என்று நம்ம சிரிப்பு போலீஸ் கால்ல விழுந்த கதறியதாலும், ( பாவம் அடுத்து டாக்குடர் படம் வேற வருதாம், எங்க இவன் துப்பாக்கி ஏந்தி நிக்கிற ஸ்டைலான போஸ்-ஸ யாரவது கிளிக்கு பண்ணி ஊரெல்லாம் விளம்பர போஸ்டர் ஒட்டிருவாய்ங்களோனு இவன் கவலை....டேய் டேமேஜரு உனக்கு தெரியாம ஸ்டில் எடுத்து வச்சிருக்கேண்டியோவ்....)

மற்றும் பதிஉலகின் அண்ணன்கள்,தம்பிகள்,மாமஸ்கள், மச்சிகள், நண்பர்கள், மதிப்பிற்குறிய பெரியவர்கள் ( இதில் சென்னை பித்தன் அய்யாவும், புலவர் ராமாநுஜம் அய்யா அவர்களும் சேர்த்தி...) மற்றும் அம்மனிகள்(இது சும்மா பில்டப்புக்கு) சிலபேரும் கேட்டுக்கொண்டதற்கு மதிப்பளித்து, மரியாதை கொடுத்து....த்த்தட்....சரி சாமிகளா நிறுத்திக்கிறேன் அதுக்காக கல்லெறியாதீக...

             இடைப்பட்ட காலத்தில் வேலைபளு மற்றும் நண்பனை இழந்தது போன்ற காரணங்களால் உள்ளத்தில் ”ஜாலி” மூட் காணாமல் போய்விட்டது அதனால் பதிவுலகத்திற்கு சிறிது!!!!  இடைவெளி....

       இருந்தாலும் பதிவுலகத்தில் கிடைத்த நண்பர்களின் தொடர்பு... மின்னஞ்சல், அலைபேசி அழைப்பு என்று தொடர்ந்து கொண்டிருந்ததில் ஆனந்தம்.....

எனது வருகையின்(மறு) முதல் பதிவாக சென்னையில் நாம் நடத்தவிருக்கும் “தமிழ் வலைபதிவர்கள் திருவிழாவிழா” விற்கான அழைப்பிதல் இணைத்து , பட்டிகாட்டில் பிறந்து அதன் புழுதியில் புரண்டு, எருமை மாட்டில் சவாரி செய்து........... வளர்ந்திருந்தாலும் தற்போது சென்னைப் பட்டணத்தில் குப்பைக் கொண்டிருப்பதால், தற்போதைய சென்னை வாசி(தமிழ்வாசி என்னை மதுரை கிளையிலும் கூட்டு சேர்த்துக்கப்பா) என்ற முறையில் உலகத் தமிழ் பதிவர்கள் அனைவரையும் சென்னை வந்து உங்களின் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு, எங்களுக்கும் உங்களை விருந்தோம்ப ஒரு வாய்ப்பு அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தப் பதிவில் இன்னும் தொடர்ந்து நீட்டிக் கொண்டிருந்தால் , எலேய் நீ “உண்மைத்தமிழன் அண்ணன்” அவர்களோட தம்பியா என்று கேட்பவர்க்கு பதில் சொல்லி முடியாது என்பதால், எனது வியாக்கியானத்தை இத்தோடு நிறுத்திக் கொண்டு மீண்டும் ஒரு முறை தமிழ் பதிவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 26 ஞாயித்துக் கிழமை சென்னைக்கு படையெடுத்து (அன்பெனும் ஆயுதம் தாங்கி) வருமாறு வேண்டுகிறேன்.

விழா அழைப்பிதழ்





வருகை தரும் நண்பர்கள் வருகையை கீழ்கண்ட மின்னஞ்களில் தொடர்புகொண்டு தெரிவிப்பீர்களேயானால், உணவு ஏற்பாட்டை கவனிக்கும் குழு நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும், மேலும் வெளியூர் நண்பர்கள் சனிக்கிழமை இரவு தங்குவதற்கோ அல்லது ஞாயிறு காலை சென்னை வந்தவுடன் ரெஃபெரெஸ் ( மக்களே இதற்கு தமிழ் வார்த்தை சட்டென்று என் மனதில் உண்மையிலேயே உதிக்கவில்ல ..... நண்பர்கள் யாராவது பின்னூட்டத்தில் தெரிவித்தால் நலம், எனக்குத் தெரிந்து சில நண்பர்கள் ஆங்கிலத்தில் இருந்தால் வசதியாக புரிந்துகொள்வதில்லை) செய்து கொள்ள விரும்பினால் முன் கூட்டியே மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்கள்:
1.  திரு. மதுமதி  -  kavimathumathi@gmail.com

2.  திரு பாலகனேஷ் - bganesh55@gmail.com (இதில் இருக்கும் “55” நொம்ப  முக்கியம் அமைச்சர்களே)

3.  திரு சிவக்குமார்  - madrasninnal@gmail.com (இவர் பெறந்தது , உருண்டது,வளந்தது,எல்லாம் சென்னைதாங்க)

லாஸ்ட் பட் நாட் லீஸ்டு (இங்கிலீஸுங்கோவ்வ்வ்வ்...)

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உயர்திரு மற்றும் மாண்புமிகு

 பட்டிகாட்டான் - pattikaattaan@gmail.com

இந்த பதிவில் நோ முஸ்கி,  இஸ்கி மற்றும் டிஸ்கி........


நன்றி!!!





52 comments:

Admin said...

படிக்காட்டான் அழைக்கிறார் பட்டிணத்திற்கு வாரீர்!வாரீர்!..

55 ங்கிற எண்ணை மறக்க மாட்டீங்க போலிருக்கே..

தங்கள் தளத்தில் எனது முதல் கருத்துரை இதுவே..மகிழ்ச்சி..

விழா சிறப்புற நடைபெற தங்களின் மிகுந்த ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி தோழரே..

பட்டிகாட்டான் Jey said...

வாங்க வாங்க கவிதை எழுதுரவக இங்க வந்து முதல் கமெண்ட் போடுரது இதுதான் முதல்முறை....

நண்பர்களுக்கு நம்ம அன்பை அள்ளிக் கொடுத்துடலாம்...நோ கவலை...பீ மகிழ்ச்சி.....

பட்டிகாட்டான் Jey said...

வேலைப்பளுவின் மத்தியில் நேற்றயக் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகைதந்து, சென்னைவாசி என்ற முறயில் அவரது பங்களிப்பாக பண உதவி அளித்துவிட்டு, எந்த உதவியென்றாலும் தயங்காமல் கேளுங்கள் என்னால் ஆன உதவியையும் ஒத்துழப்பையும் தர தயாராக இருக்கிறேன், என்று சொல்லிச் சென்ற “உண்மைத்தமிழன் அண்ணனுக்கு பதிவில் நன்றி சொல்ல மறந்து விட்டேன். அவருக்கும் குழுவின் சார்பாக எனது நன்றி.

arasan said...

மீண்டும் ஒரு ரவுண்டு? வர என் வணக்கங்கள் அண்ணே ...
எப்படியோ ஒரு வழியா மீண்டும் எழுத ஆரம்பித்து விட்டிர்கள் ...
பதிவர் திருவிழாவில் ராட்டினம் ஆடலாம் என்று சொல்றிங்க ..

arasan said...

முஸ்கி இஸ்கி டிஸ்கி இல்லாம ஒரு பதிவா ? நான் ஏமாந்து விட்டேன் .. அடுத்த முறை நான் எதிர்பார்கிறேன்

ரஹீம் கஸ்ஸாலி said...

பட்டிக்காட்டானை மீண்டும் எழுத வைத்ததும் இந்த பதவர் திருவிழாவின் சாதனையாக பதியப்படுகிறது

சசிகலா said...

பட்டிக்காட்டிற்கு முதல் முறை வருகை தருகிறேன் நானும் சிறப்பான அழைப்பு காத்திருக்கிறோம்.

பட்டிகாட்டான் Jey said...

அரசன், ரவுண்டு தான வந்துடலாம் ( ஆனா என்ன ரவுண்டு க்ளாக்வைஸ்-ல ஆரம்பிக்கிரதா இல்லை ஆண்டிகிளாக் வைஸ் ஆரம்பிக்கலாமா...ம்..ம்ம்..ம்ம்க்ஹூம்!!!!!)

இம்சைஅரசன் பாபு.. said...

ஜெய் அண்ணன வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் ..(இதுக்கு நிச்சயமா வாயிலேயே மிதிப்பார் ..)

பட்டிகாட்டான் Jey said...

//ரஹீம் கஸாலி said...
பட்டிக்காட்டானை மீண்டும் எழுத வைத்ததும் இந்த பதவர் திருவிழாவின் சாதனையாக பதியப்படுகிறது//

கஸாலி அப்படியே உங்க சாமிகிட்ட “பட்டிகாட்டான் யாரையும் ஏழரை இழுக்காம, பட்டிகாட்டானையும் யாரும் ஏழரை இழுக்காம பதிவுலகம் அமைதியா இருக்கனும்னு” எனக்காக வேண்டிக்குங்க...:)

CS. Mohan Kumar said...

பட்டிக்காட்டான் அண்ணன் கிளம்பிட்டார். இன்னிக்க எத்தனை தலை உருள போகுதோ ?

பட்டிகாட்டான் Jey said...

// Sasi Kala said...
பட்டிக்காட்டிற்கு முதல் முறை வருகை தருகிறேன் நானும் சிறப்பான அழைப்பு காத்திருக்கிறோம்.//

வருகைக்கு நன்றி சகோதரி. வெளியிடுற உங்க கவிதைதொகுப்பு பொஸ்தகத்த , ஓசில வேணாம் தள்ளுபடி வெலைலயாவது குடுங்க...

( ஆடிதான் முடிஞ்சி போச்சேனு தள்ளுபடி நீக்கிடாதீங்க..வேணுனா ஆவனி தள்ளுபடியாக் கொடுத்துடுங்க..)

TERROR-PANDIYAN(VAS) said...

விழா வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகள்.

பட்டிகாட்டான் Jey said...

// இம்சைஅரசன் பாபு.. said...
ஜெய் அண்ணன வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் ..(இதுக்கு நிச்சயமா வாயிலேயே மிதிப்பார் ..)//

தம்பி நலமா, நண்பர்கள் நலமா....நலமாக வாழ இந்த ஆருயிர் அண்ணனின் ஆசிகள்.....

பட்டிகாட்டான் Jey said...

/// மோகன் குமார் said...
பட்டிக்காட்டான் அண்ணன் கிளம்பிட்டார். இன்னிக்க எத்தனை தலை உருள போகுதோ ?///

நீங்க இப்படியே உசுப்பேத்துங்க அண்ணே.....

பட்டிகாட்டான் Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
விழா வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகள்.///

கனவா . நனவா.....எங்கயோ போய்ட்ட ராசா...., என்னோட பதிவுலக அனுபவத்துல இந்த மாதிரி நீ எனக்கு கமண்ட் போட்டது இப்பதான் ராசா...

ஆருயிர் தம்பி டெர்ரர் பாண்டி அவர்களுக்கு எனது வனக்கங்கள் ....( டேய் முடியலைடா....)

மாணவன் said...

பதிவர்கள் திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்...!

பதிவர் சந்திப்பு விழா சீரும் சிறப்புமுமாய் நடைபெற வேண்டி அயராது களப்பணி ஆற்றிக்கொண்டிருக்கும் தல பட்டிக்காட்டானுக்கு சிறப்பு வணக்கங்கள்! :-)

பட்டிகாட்டான் Jey said...

// மாணவன் said...//

வாழ்த்துகளுக்கு நன்றி!!!! மாணவா...

சீனு said...

// இதில் இருக்கும் “55” நொம்ப முக்கியம் அமைச்சர்களே// இதன் காரணத்தை நேற்று நீங்கள் கூறிய விதம் ஹா ஹா ஹா

அருண் பிரசாத் said...

திருவிழாவை முன்னிட்டு அண்ணன் சிறப்பு தீமிதியில் கலந்து கொண்டு.... திங்கு திங்குனு தீயை மிதிப்பார்....

அண்ணே... கீரிப்பிள்ளை சவுக்கியமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சீக்கிரம் பூக்குழி இறங்கி ஆட்டத்தை ஆரமிக்கவும். துணைக்கு பாபுவையும் கூப்பிடவும்

சென்னை பித்தன் said...

உங்கள் மறு வரவு நல்வரவாகுக.தொடர்ந்து கலக்குங்கள்.
(யார் அவர் தமிழ்ப் பித்தன்?)

பட்டிகாட்டான் Jey said...

//சென்னை பித்தன் said...
உங்கள் மறு வரவு நல்வரவாகுக.தொடர்ந்து கலக்குங்கள்.
(யார் அவர் தமிழ்ப் பித்தன்?)//

உங்கள் பெயரை பிழையாக எழுதிவிட்டேன், சாரி ஐயா...சென்னை பித்தன் என்று திருத்தி விட்டேன். தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

நாய் நக்ஸ் said...

தல...நாம பேசிக்கிட்ட அந்த ஒப்பந்தத்த மறந்துடாதீங்க..
நானும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்....

ஒரு அரை கிரவுண்ட் வாங்கிடலாமா?....ஷ்.ஷ்.ஷ்...ரகசியம்..

பட்டிகாட்டான் Jey said...

/// அருண் பிரசாத் said...
திருவிழாவை முன்னிட்டு அண்ணன் சிறப்பு தீமிதியில் கலந்து கொண்டு.... திங்கு திங்குனு தீயை மிதிப்பார்....

அண்ணே... கீரிப்பிள்ளை சவுக்கியமா?//

மவனே இங்க வந்தா கீரிப்பிளைய கடிக்கவிட்டு, அப்படியே பூக்குழில தள்ளிவிடலாம்னு நெனைச்சேன்....மொரிசியஸ் போய் தப்பிச்சிட்டா....சென்னை வராமையா போயிடுவே....

நாய் நக்ஸ் said...

ஏதோ வாங்குரதுதான் வாங்குறோம்...பீச் பக்கத்துல வாங்குவோம்...
நல்லா இருக்கும் தல அந்த இடம்.

பட்டிகாட்டான் Jey said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சீக்கிரம் பூக்குழி இறங்கி ஆட்டத்தை ஆரமிக்கவும். துணைக்கு பாபுவையும் கூப்பிடவும்//

கைக்கெட்டுர தூரத்தில தாண்டி நீ இருக்கே....உன்னையும் இழுத்துகிட்டு இறங்கிடுவேன்....

பட்டிகாட்டான் Jey said...

/// NAAI-NAKKS said...
தல...நாம பேசிக்கிட்ட அந்த ஒப்பந்தத்த மறந்துடாதீங்க..
நானும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்....

ஒரு அரை கிரவுண்ட் வாங்கிடலாமா?....ஷ்.ஷ்.ஷ்...ரகசியம்.///

ஆபீஸ் ரூம் ரெடி...கவனிக்க ஸ்பெசலா ஆளுங்களும் ரெடி ...டோன்’ட் ஒர்ரி மச்சி.... ஃபுல்லாவே கவனிச்சுடலாம்.....:)

பட்டிகாட்டான் Jey said...

///சீனு said...
// இதில் இருக்கும் “55” நொம்ப முக்கியம் அமைச்சர்களே// இதன் காரணத்தை நேற்று நீங்கள் கூறிய விதம் ஹா ஹா ஹா///

அது கனேஷ் அண்ணனை சும்மா செல்லமாக கிண்டலடிக்க எழுதினது வேற ஒன்னும் இல்ல.....:)

ADMIN said...

சென்னை பதிவர் திருவிழா சிறப்புற என்னுடைய வாழ்த்துகள்..!

பதிவர் திருவிழா நிகழ்ச்சிக்கு பாடுபட்டு வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என்னுடைய நன்றி! வாழ்த்துகள்..!!

அஞ்சா சிங்கம் said...

ரைட்டு நானும் ஆஜர் ....(இதுக்கு தமிழ் வார்த்தை தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும் )

Unknown said...



வணக்கம்!
பொருளாளர் ஐயாவுக்கு! ஏதோ, என்னையும் கொஞ்சம் கவனிங்க!
நானும் உங்களைப் போன்றே பட்டிக்காட்டான்தான்!

சா இராமாநுசம்

சிராஜ் said...

நானும் ஆஜர்....

பட்டிகாட்டான் Jey said...

/// தங்கம் பழனி said...
சென்னை பதிவர் திருவிழா சிறப்புற என்னுடைய வாழ்த்துகள்..!///

உங்களின் வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி நண்பரே.

பட்டிகாட்டான் Jey said...

//அஞ்சா சிங்கம் said...
ரைட்டு நானும் ஆஜர் ....(இதுக்கு தமிழ் வார்த்தை தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும் )//

ஆஜர்???.... நீங்கள் மேஜர் என்று எழுதியதில் முதலெழுத்து பிழையாகிவிட்டது என்று நினைக்கிறேன்..

பட்டிகாட்டான் Jey said...

// புலவர் சா இராமாநுசம் said...


வணக்கம்!
பொருளாளர் ஐயாவுக்கு! ஏதோ, என்னையும் கொஞ்சம் கவனிங்க!
நானும் உங்களைப் போன்றே பட்டிக்காட்டான்தான்! //

திருவிழாவே உங்களுக்காகதானே ஐய்யா...

பட்டிகாட்டான் Jey said...

//சிராஜ் said...
நானும் ஆஜர்...//

மறுபடியும் ”ஆஜர்” என்ற சொல்... ஒரு வேளை அஞ்சாசிங்கம் சரியாகத்தான் எழிதி, நாந்தான் பிழையென்று நினைத்திவிட்டேனோ..னோ..னோ..???

அஞ்சா நாம விக்கிப்பீடியாவ தூக்குறோம், நாலஞ்சு தமிழ் வாத்டியார்கள கடத்துறோம், என்ன ஆனாலும் சரி ”ஆஜர்”-க்கு தமிழ் அர்த்தம் கண்டுபிடிக்காம விடக்கூடாது....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் நண்பர்களே .

பட்டிகாட்டான் Jey said...

/// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
கண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் நண்பர்களே .///

அட்வகேட் அண்ணே உங்களோட உறவாட ஆவலா இருக்கோம்ணே...

முத்தரசு said...

வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

குருவே சரணம்

ஜெய் அண்ணே வணக்கம்.. என்னையெல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்களா.. என்ன ஆச்சு ரொம்ப நாளா ஆளையே காணோம்..

அந்த கீரிப்பிள்ளை வளர்ந்து பெருசாகி பள்ளிக்கு அனுப்பி வச்சுட்டீங்களா..

உங்க பதிவிலையே நூறுக்கும் கம்மியா கமெண்ட் வந்திருக்கிற பதிவு இதுவா தான் இருக்கும்.. அதானால் ஒரு ரவுண்டு அடிச்சு ஆடுவோமா..

பட்டிகாட்டான் Jey said...

//மனசாட்சி™ said...
வாழ்த்துக்கள்//

நன்றி. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்.

பட்டிகாட்டான் Jey said...

///அந்த கீரிப்பிள்ளை வளர்ந்து பெருசாகி பள்ளிக்கு அனுப்பி வச்சுட்டீங்களா..

உங்க பதிவிலையே நூறுக்கும் கம்மியா கமெண்ட் வந்திருக்கிற பதிவு இதுவா தான் இருக்கும்.. அதானால் ஒரு ரவுண்டு அடிச்சு ஆடுவோமா..//

கீரி வயசுக்கு வந்தது ஓடிப்போயிருச்சி மச்சி....

பயபுள்ளக ஏதோ ஹண்டு ஃபார் ஹிண்டு-பார்ட் 2- வுக்கு தயாராய்ட்டிருக்காங்க அந்த கேம் சோ முடிஞ்சதும் கும்மி ஸ்டார்ட்......:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி வணக்கம்...!

பட்டிகாட்டான் Jey said...

இது நல்ல பன்னாடைக்கு ச்ச்சே ”பன்னி”க்கு அழகு....

( டாக்குடர் படம் ஏதோ ரிலீஸ்னாங்க பதிவு ஒன்னும் கானோமேடா...??????)

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமை! இப்படி ஒரு குழு இருப்பது அறிந்து மகிழ்கிறேன்! அழைப்புக்கு நன்றி, வர இயலாமைக்கு வருந்துகிறேன்! வாழ்த்துக்கள்!

மதுரை வலைப்பதிவர்கள் said...

தற்போது சென்னைப் பட்டணத்தில் குப்பைக் கொண்டிருப்பதால், தற்போதைய சென்னை வாசி(தமிழ்வாசி என்னை மதுரை கிளையிலும் கூட்டு சேர்த்துக்கப்பா) என்ற முறையில் உலகத் தமிழ் பதிவர்கள் அனைவரையும் சென்னை வந்து உங்களின் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு, எங்களுக்கும் உங்களை விருந்தோம்ப ஒரு வாய்ப்பு அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.////

கூட்டு சேர்த்தாச்சுப்பா... பாசக்கார பயபுள்ளைக...
////தமிழ்வாசி---///

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Jey said...
இது நல்ல பன்னாடைக்கு ச்ச்சே ”பன்னி”க்கு அழகு....

( டாக்குடர் படம் ஏதோ ரிலீஸ்னாங்க பதிவு ஒன்னும் கானோமேடா...??????)//////

இப்பல்லாம் டாகுடர் படத்துக்கு பூஜை போட்ட உடனேயே அதுக்கு விமர்சனம் எழுதிடுறேன்..... ஹி...ஹி.....!

பட்டிகாட்டான் Jey said...

//கிரேஸ் said...
அருமை! இப்படி ஒரு குழு இருப்பது அறிந்து மகிழ்கிறேன்! அழைப்புக்கு நன்றி, வர இயலாமைக்கு வருந்துகிறேன்! வாழ்த்துக்கள்!//

அண்ணே விழாவ லைவா( உலகம் முழுவது அவங்க பிளாக்லேயே) ஒளிபரப்ப முயற்சி எடுத்திட்டிருக்கோம்.... இன்னும் முடிவாகவில்ல.


உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

///கூட்டு சேர்த்தாச்சுப்பா... பாசக்கார பயபுள்ளைக...
////தமிழ்வாசி---////

ஓகே...ஓகே...

திண்டுக்கல் தனபாலன் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி… (TM 10)

பட்டிகாட்டான் Jey said...

நன்றி. வந்ததுக்கும், வாழ்த்துனதுக்கும்

அண்ணே அப்படியே “ (TM 10)" அப்படினா என்னானு சொல்லிட்டு போயிருங்க....மண்டை காயிது....

LinkWithin

Related Posts with Thumbnails