August 29, 2010

சுலபம் Vs கடினம் ( மரண மொக்கை..)

முஸ்கி : படிங்க.... படிங்க....

1.

சுலபம் : அடுத்தவர் குறைகளை கண்டறிவது/சுட்டிக்காட்டுவது

கடினம் : தம் குறைகளை கண்டறிவது / ஒப்புக்கொள்வது

=====================================================================
2.

சுலபம் :  வார்த்தகளை சிதற விடுவது / யோசிக்காமல் பேசிவிடுவது

கடினம் : நாவடக்கம் 

====================================================================
3.

சுலபம் : தன்மீது நேசம் கொண்டவரை புண்படுத்திவிடுவது/ காயப்படுத்துவது

கடினம் : அந்த காயத்தை ஆற்றுவது 

====================================================================
4.

சுலபம் : தவறுக்கு மன்னிப்பு கேட்பது

கடினம் : மன்னிப்பை ஏற்றுக் கொள்வது

====================================================================
5.

சுலபம் : சட்ட திட்டங்களை வகுப்பது

கடினம் : சட்டதிட்டங்களை கடை பிடிப்பது

====================================================================
6.

சுலபம் : தினம் தினம் கனவு காண்பது

கடினம் : கனவை நனவாக்கப் போராடுவது

====================================================================
7.

சுலபம் : வெற்றியை கொண்டாடுவது

கடினம் : தோல்வியை பக்குவத்துடன் எதிர்கொள்வது

====================================================================

8.

சுலபம் : அடுத்தவர்க்கு வாக்குறுதி குடுப்பது

கடினம் : குடுத்த வாக்குறிதியை நிறைவேற்றுவது

====================================================================
9.

சுலபம் :  தவறுகள் செய்வது

கடினம் : செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது

====================================================================
10.

சுலபம் : முன்னேற்றத்துக்கு எது தேவை என்று பட்டியலிடுவது

கடினம் : அதை செயல்படுத்துவது

====================================================================
11.

சுலபம் :  அடுத்தவர் உதவியை ஏற்றுக் கொள்வது

கடினம் : எதிர்பார்ப்பின்றி அடுத்தவர்க்கு உதவுவது 

====================================================================
12.

சுலபம் : காதலியிடம் பலமணி நேரம் கடலை போடுவது

கடினம் : அதில் அர்த்தம் கண்டுபிடிப்பது

====================================================================
13.

சுலபம் : தங்கமணியிடம்(வீட்டம்மாவிடம்) அடிவாங்குவது

கடினம் : வலிக்காத மாதிரி காட்டிக் கொள்வது

====================================================================
14.

சுலபம் : நண்பர்களை பெருவது

கடினம் : நட்பை பேனி காப்பது

====================================================================

15. 

சுலபம் : இந்த மாதிரி மொக்கை பதிவு எழுதுவது

கடினம் : இதைப் படித்து கோவம் கொள்ளாமல் இருப்பது.

====================================================================

டிஸ்கி : நண்பர்களே பதிவு படிச்சி ரொம்ப விசயம்!!! புதுசா!!! தெரிஞ்சிருக்குமே...., கண்கலங்குறது தெரியுது..., எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.., அதனால ஓவரா புகழ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

219 comments:

«Oldest   ‹Older   201 – 219 of 219
முத்து said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// பின்ன என்ன இனிமேல் இந்த பயபுள்ள இது மாதிரி மொக்கை போடுவான் ///

அச்சசோ உங்களுக்கு ஆட்ட வெட்ட தெரியாதா :)

இத்தனை பின்னூட்டம் போட்டு வேஸ்டு பண்றீங்களே ஹீ ஹீ//////

வேஸ்ட்டு தான் ஆனால் நாளைக்கு jey கமெண்ட்ஸ் பார்க்கும் போது தெரியும்

முத்து said...

என்ன ஜெ continue பண்ணவா

முத்து said...

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

முத்து said...

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

முத்து said...

சரி இன்னைக்கு போயிட்டு நாளைக்கு வந்து continue பண்ணுறேன்

அலைகள் பாலா said...

ஷ்ஷ்ஷ்ஷ்............. அப்ப்பாஆஆ எவ்ளோ தூரம்? ஒரு பின்னூட்டத்துக்கு ஒன்னறை கிலோ மீட்டர் நடக்க வச்சுட்டாங்களே.

கருடன் said...

@ஜில்லு
//அச்சசோ உங்களுக்கு ஆட்ட வெட்ட தெரியாதா :)

இத்தனை பின்னூட்டம் போட்டு வேஸ்டு பண்றீங்களே ஹீ ஹீ//

எலேய் சில்லு... இதாம்லே ஒரிஜினல் ஆடு அறுப்பு... ஒரே வெட்டுல வெட்டினா பொட்டுனு உயிர் போயிடும்... காலைல ஆடு எப்படி துடிக்கா போகுது பாரு...

கருடன் said...

@முத்து

கலக்கிட்டா முத்து... கமெண்ட்ல 2 பேஜ்.... ஹி ஹி ஹி... கூடியா சீக்கிரம் ஜய் ப்ளாக் இழுத்து மூடபோறாரு.

vasu balaji said...

:)). kummiya

Jey said...

அண்ணே, முத்து அண்ணே, நல்லாருக்கீகளா?. ஏன்னே இப்படி..., யார் யாரோ மொக்கை போடுறாங்க நான் அப்பப்ப ஒரு மொக்கை பதிவு போடக் கூடாதா..., நீங்களே கோச்சிகிட்டா எப்படிண்ணே..., சரினே சமாதம் பேசிக்களாம், உங்களுக்கு ரெட் ஒயினும்,ஃபுல் பிளேட் பிரியாணியும் ஆர்டர் பண்ணிருக்கேன் சாப்டுட்டு சாந்தமா போங்க...நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு...என்ன நான் சொல்றது..

( ங்கொய்யாலே..., ஞாயித்து கிழமையான இவன் கொலை வெறியோட சுத்திட்டிருக்கானே..., இவன் வீட்டம்மனி கிட்ட சொல்லி லாடம் கட்டச் சொன்னாதான் அடங்குவாம் போல...)

Jey said...

//அலைகள் பாலா said...
ஷ்ஷ்ஷ்ஷ்............. அப்ப்பாஆஆ எவ்ளோ தூரம்? ஒரு பின்னூட்டத்துக்கு ஒன்னறை கிலோ மீட்டர் நடக்க வச்சுட்டாங்களே.//

சண்டே யார் வீடும் கிடக்கலை போல இங்க வந்து டெஸ்ட் மேட்ச் விளையாடிட்டு போயிருக்காங்கண்ணே..

Jey said...

//வானம்பாடிகள் said...
:)). kummiya ///

ஒரு மொக்கை பதிவு போட்டேண்ணே, , வந்து பின்னூடத்துல பதிலுக்கு மொக்கை போட்டுட்டானுக...

சசிகுமார் said...

பொருத்தமான தலைப்பு சார்

செல்வா said...

ச்சு ச்சு .. இந்த மொக்கையெல்லாம் என்னை ஒண்ணும் பண்ணிடாதுங்க..
அப்புறம் இது மொக்கை மாதிரி தெரியலையே ..?!?

செல்வா said...

முத்து நீங்க என்ன பண்ணுறீங்க ...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேன்மை தாங்கிய ஜெய் அவர்களுக்கு,
தங்களுடைய சீரிய பதிவினைப் படித்து அளவில்லா பேரானந்தம் அடைந்தேன். துரதிர்ஷ்டவசமாக தங்கள் பதிவை படிக்கத் துவங்கும்போது தொடங்கிய வயிற்றுப்போக்கு, பல்வேறு மருத்துவங்கள் செய்தும் நிற்காமல் தொடர்வதால், தாங்கள் தயைகூர்ந்து உடனே இன்னொரு பதிவிட்டு எனது வயிற்றுப்போக்கை நிறுத்திட உதவிடுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
பன்னிக்குட்டி ராம்சாமி

Gayathri said...

சுப்பர்

Chennai boy said...

சில பதிவு யோசிக்க வைக்கிறது, சில பதிவுகள் சிரிக்க வைக்கிறது.

சுலபம்- இந்தப் பதிவை கிண்டலடிப்பது.

கடினம்- இதைப்போல திங்க் பண்ணி பதிவது.

உங்களுக்கு என் வாழ்த்துகள்.

வால்பையன் said...

சூப்பர் மேட்டர் தல!

«Oldest ‹Older   201 – 219 of 219   Newer› Newest»

LinkWithin

Related Posts with Thumbnails