August 09, 2010

பட்டிகாட்டானும் கீரிப்பிள்ளையும் ....முஸ்கி : விண்டோஸ் மூவி மேக்கர் வழியாக வீடியோ துனுக்குகள் மாற்றும் போது சிறிது துல்லியம் குறைந்துவிட்டது.. பொறுத்துக்கொள்ளவும்.

எங்க பெரியப்பாவுக்கு வீட்ல பிராணிகளை வளக்குறது ரொம்ப பிடிக்கும், வீட்ல வழக்கமா இருக்குர ஆடு, மாடு, நாய், கோழிகளோட, வான்கோழி, கிளி, முயல், லவ் பேர்ட்ஸ் ( தமிழ்ல எப்படி சொல்றது.. காதல் பறவைனா?) மாடில கூண்டு வச்சி 100க்கும் மேல புறானு வளப்பாரு, ஒரு தடைவை எங்கிருந்தோ ஆமை குட்டிய கொண்டுவந்து வீட்ல வச்சாரு, வீட்ல எல்லாரும் ஆமை புகுந்த வீடு நல்லாருக்காதுன்னு சொல்லி( தொட்டு கைல தூக்கக்கூட விடல...,  இங்க குழந்தகள் பூங்காலையும், வண்டலூர் ஜூலயும் எங்குழந்தைகளுக்கு ஒரு வாட்டி காமிச்சேன்.) தோட்டத்து கிணத்துல போய் விட்டுட்டாங்க... 


           ஒருவாட்டி மயில் முட்டைய கொண்டுவந்து கோழி முட்டைகளோட அடைகாக்க வச்சி,  அதுவும் மயில் குஞ்சு பொரிச்சி ஊரே வேடிக்கை பாக்க வந்துச்சு.. எங்களுக்கு அதுங்கள வேடிக்கை பாக்குறதும், கூட விளையாடுறதும் ரொம்ப பிடிக்கும், அவருக்கப்புறம் பெரியப்பாவோட மூத்த பையன்( எனக்கு அண்ணன்) இப்ப அத தொடர்றாரு...
இப்பவும் ஊருக்கு போனா எனக்கு அதுக்கள வேடிக்கை பாக்குறது , அதுக கூட விளையாடுரதும் பிடிக்கும், என்ன இப்ப எங்கூட என் குழைந்தகளும் விளையாடுதுங்க.( இப்ப கிளி,மயில், முயல், புறாக்கள் இல்லை...)


  அஞ்சு வருசத்துக்கு முந்தி தோட்டத்துல அனாதையா கிடந்த கீரிபிள்ளை(mongoose) குட்டிய வீட்டுக்கு கொண்டு வந்து அதுக்கு பாலூட்டி அப்புறம் உண்வு கொடுத்து வளக்க ஆரம்பிச்சாரு அண்ணன், முதல்ல அது பக்கத்துக்கு யாரும் போறதுக்கு பயப்படுவோம்,  பல்லுக சின்ன சின்னதா கூரா இருக்கும் கடிச்சிருமோனு பயம்மாருக்கும். அது வந்து 3 மாசத்துக்கப்புறம் ஊர்ருக்கு போயிருந்தப்ப எல்லார்கிட்டயும் அது அன்பா விளையாடிட்டிருந்தது, வழக்கம் போல எனக்கும் அத தொட்டு விளையாட ஆசை,  வீட்ல ஹால்ல உக்காந்து அதுகூட கொஞ்ச நெரம் விளையாடிட்டு சந்தோசமா இருந்த, அதுகூட வீட்ல இருந்த பூணையும் சரிக்கு சமா விளையாடிச்சி, அப்ப எடுத்த வீடியோ படம் கீழே இருக்கு இதுக்கு பாருங்க...  

******************************************************************************

             எனக்கு சின்ன வயுலேர்ந்து இந்த கம்பு சுத்துரது ரொம்ப பிடிக்கும்,  கிராமத்துல இருக்கும் போது உறவுக்காரக பங்காளி ஒருத்தர் எனக்கு நாலஞ்சு ஸ்டெப், கம்பு சுத்துரதுக்கு சொல்லி தந்தாரு,  நாலு வருசத்துக்கு முன்னாடி ஊருக்கு போயிருக்கும் போது அவர் கம்பு சுத்துரத வீடியோ எடுக்கனும்னு ஆசை, அதெல்லாம் ஒரு காலம்பா, இப்பல்லாம் கம்ப கைல தொட்டு நாலாச்சுன்னு சொன்னாலும், நான் வீடியோ படம் எடுக்குறேன்னு சொன்னவுடனே வேஷ்டிய தார்பாச்சி கட்டிட்டு, மொட்டை மாடிக்கு போய், கைல கம்பெடுத்து சுத்த ஆரம்பிச்சாரு... அந்த வீடியோ கிளிப் கீழே.... பாருங்க நல்லா சுத்துராரா...
*************************************************************************


டிஸ்கி : முடிஞ்ச வரைக்கும் வீடியோ கிளிப் சின்னதா குடுக்க முயற்சி செஞ்சிருக்கேன் பாத்து எஞ்சாய் பண்ணிட்டு, எப்படி இருக்குனு பின்னூட்டமும் , ஓட்டும் மறக்காம போட்ருங்க மக்காஸ், இல்லைனா அந்த கீரிப்புள்ளைய விட்டு கடிக்க விட்ருவேன்.... ஜாக்கிரதை.....


135 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
This comment has been removed by the author.
!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா தல வியப்பாக உள்ளது எங்கிருந்து இந்த விடியோவை பிடிச்சிங்க !?

dheva said...

கீரிப்பிள்ளையோட பூனையும் வளர்க்கிறாங்களா...கிரேட் ஜெய்....! சக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துறது எப்படின்னு கிளிப்பிங் பார்தாலே தெரியுது....

பூனையும் கீரியும் ரொம்பவே க்யூட்...பாஸ்!

Jey said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ஆஹா தல வியப்பாக உள்ளது எங்கிருந்து இந்த விடியோவை பிடிச்சிங்க !?//

இது என்னோட கிரமத்து வீட்ல 5 வருசத்துக்கு முன்னாடி பண்ணது...

மொத தடைவை எங்கடைக்கு வந்து வடை வாங்கிருக்கீங்க....

Jey said...

dheva said...
கீரிப்பிள்ளையோட பூனையும் வளர்க்கிறாங்களா...கிரேட் ஜெய்....! சக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துறது எப்படின்னு கிளிப்பிங் பார்தாலே தெரியுது....

பூனையும் கீரியும் ரொம்பவே க்யூட்...பாஸ்!///

நன்றி தேவா :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

appaalikkaa varen

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
appaalikkaa varen///

ரைட்டு... வந்து ஓட்டு போட்ரு..

கே.ஆர்.பி.செந்தில் said...

அடடா பிரமாதமான பதிவு, மனிதநேயம் இல்லை என்று வருத்தபட்டுகொண்டிருக்கையில் , விலங்குகள் மேல் அளப்பரிய கொண்ட மனிதர், அவருக்கு என் சல்யூட்...

TERROR-PANDIYAN(VAS) said...

தல அந்த கீரிபுள்ள கூட விளையாடற பட்டிகட்டன் யாரு தல...?

Jey said...

அது எந்திரன்( ரோபோ), கிராபிக்ஸ் பண்ணது, அசல் மனுசப்பய மாதிரியே இருக்குள்ள பாண்டி....

TERROR-PANDIYAN(VAS) said...

தல அந்த கீரிபுள்ள கூட விளையாடற பட்டிகாட்டான் யாரு தல...?

மங்குனி அமைசர் said...

உங்க அண்ணன் சிங்கமோ ,புலியோ இல்ல அனகொண்டாவோ வழக்கச்சொல்லு , நீ அங்க போறப்ப அத படம் புடுக்கணும் , இங்க வந்து பதிவு போடணும் , நானும் சிங்கமோ , புலியோ இல்லை அனகொண்டாவோ மனுசன வேட்டையாடி பாத்ததில்ல

சௌந்தர் said...

இந்த பூனை வீடியோ மறு படி மறு படி பாக்குறேன் சூப்பரா கம்பு சுத்துறாரு jay உங்களுக்கு தெலுங்கு தெரியுமா.....

அருண் பிரசாத் said...

கீரிபுள்ள உங்களை கடிச்சா எத்தனை ஊசி போடனும், கீரிபுள்ளைக்கு!

அருண் பிரசாத் said...

@ செளந்தர்

கம்பு சுத்துறதுக்கும் தெலுங்கு பேசுறதுக்கும் என்னய்யா சம்மந்தம்?

Jey said...

மங்குனி அமைசர் said...
உங்க அண்ணன் சிங்கமோ ,புலியோ இல்ல அனகொண்டாவோ வழக்கச்சொல்லு , நீ அங்க போறப்ப அத படம் புடுக்கணும் , இங்க வந்து பதிவு போடணும் , நானும் சிங்கமோ , புலியோ இல்லை அனகொண்டாவோ மனுசன வேட்டையாடி பாத்ததில்ல///

அடப்பாவி.. எத்தனை நாளா இந்த பிளான்..., அப்படீயே வளத்தாலும் அதுவும் சொல்பேச்சு கேக்குரா மாதிரி பலக்கிருவாரு...., மனுசப் பயபுள்ளகதா சொல் பேச்சு கேக்காதுக...

மங்குனி அமைசர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

தல அந்த கீரிபுள்ள கூட விளையாடற பட்டிகாட்டான் யாரு தல...?////

அது வேற யாரும் இல்லை அந்த ஊரு கொசு மருந்து அடிக்கிறவன்

TERROR-PANDIYAN(VAS) said...

//அது எந்திரன்( ரோபோ), கிராபிக்ஸ் பண்ணது, அசல் மனுசப்பய மாதிரியே இருக்குள்ள பாண்டி.... //

இந்த டகால்டி வேலை எல்லாம் இங்க வேண்டாம்... நாங்க எல்லாம் இமயமலை போய் ஐஸ் விக்கறவங்க.... உங்க profile போட்டோ வச்சி கண்டுபிடிச்சிட்டேன்... மஹா ஜனங்களே... படிக்காம இப்படி கீரிபுள்ள கூட விளையாடிட்டு இருந்த நாலாம் வகுப்பு பெயில் ஆகம வேற என்ன நடக்கும்...

அருண் பிரசாத் said...

@ ஜெய்
//அது எந்திரன்( ரோபோ), கிராபிக்ஸ் பண்ணது, அசல் மனுசப்பய மாதிரியே இருக்குள்ள பாண்டி....//

அதான பார்த்தேன், என்னடா இது அந்த மனுசன் ஜெய்யா இருந்தா, கீரிபுள்ள பயந்து ஓடி இருக்குமேனு பார்த்தேன்

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

@ செளந்தர்

கம்பு சுத்துறதுக்கும் தெலுங்கு பேசுறதுக்கும் என்னய்யா சம்மந்தம்?////


ஒரு வேல அந்த கம்புக்கு தெலுங்கு மட்டும் தான் தெரியும் போல

Jey said...

சௌந்தர் said...
இந்த பூனை வீடியோ மறு படி மறு படி பாக்குறேன் சூப்பரா கம்பு சுத்துறாரு jay உங்களுக்கு தெலுங்கு தெரியுமா.....//

நல்லா இருக்கா?.. அரைமணி நேர வீடியோ சின்னதா கட் பண்னி போட்டுட்டேன்..

மங்குனி அமைசர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

//அது எந்திரன்( ரோபோ), கிராபிக்ஸ் பண்ணது, அசல் மனுசப்பய மாதிரியே இருக்குள்ள பாண்டி.... //

இந்த டகால்டி வேலை எல்லாம் இங்க வேண்டாம்... நாங்க எல்லாம் இமயமலை போய் ஐஸ் விக்கறவங்க.... உங்க profile போட்டோ வச்சி கண்டுபிடிச்சிட்டேன்... மஹா ஜனங்களே... படிக்காம இப்படி கீரிபுள்ள கூட விளையாடிட்டு இருந்த நாலாம் வகுப்பு பெயில் ஆகம வேற என்ன நடக்கும்...////

டெர்ரர் , விடுங்க இங்க ஜெய் யா , வித்தகாட்ட சொல்லி சம்பாரிக்கலாம்

Jey said...

//அருண் பிரசாத் said...
கீரிபுள்ள உங்களை கடிச்சா எத்தனை ஊசி போடனும், கீரிபுள்ளைக்கு!//

அடப்பாவிகளா இப்படியெல்லாம் கேள்வி கேப்பீகண்ணு தெரிஞ்சா, இத போட்ருக்க மாட்டேனே... அவ்வ்வ்வ்வ்வ்

மங்குனி அமைசர் said...

கொஞ்சம் எல்லாரும் நம்ம வீட்டுப்பக்கம் வந்திட்டு போங்க

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//கீரிபுள்ள உங்களை கடிச்சா எத்தனை ஊசி போடனும், கீரிபுள்ளைக்கு!//

கீரிபுள்ள ஆடு சாப்புடும என்ன? (காலைலே ஒரு ஆடு சிக்கி இருக்கு)

Jey said...

அருண் பிரசாத் said...
@ செளந்தர்

கம்பு சுத்துறதுக்கும் தெலுங்கு பேசுறதுக்கும் என்னய்யா சம்மந்தம்?///

அவர் ஆடியோ கேட்டுட்டு இந்த கேள்விய கேட்ருக்காரு...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி
//டெர்ரர் , விடுங்க இங்க ஜெய் யா , வித்தகாட்ட சொல்லி சம்பாரிக்கலாம்//

அப்போ சத்தியம் தியேட்டர் வாசப்படில துண்டு விறிச்சிட வேண்டியதுதான்.

வேலன். said...

கீரிப்பிள்ளை அது இதுன்னு பயமுறுத்த கூடாது...ஓட்டு வேனா போட்டுடறேன். வரட்டுமா...!
வாழ்க வளமுடன்,
வேலன்

அருண் பிரசாத் said...

//டெர்ரர் , விடுங்க இங்க ஜெய் யா , வித்தகாட்ட சொல்லி சம்பாரிக்கலாம்//

ஆமாய்யா, கீரி புள்ள கம்பு சுத்துறது - எங்க ஊரு பஸ் ஸ்டாண்ட்ல இப்படிதான் மேளம் அடிச்சி வித்தைகாட்டுவாங்க

Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
//அது எந்திரன்( ரோபோ), கிராபிக்ஸ் பண்ணது, அசல் மனுசப்பய மாதிரியே இருக்குள்ள பாண்டி.... //

இந்த டகால்டி வேலை எல்லாம் இங்க வேண்டாம்... நாங்க எல்லாம் இமயமலை போய் ஐஸ் விக்கறவங்க.... உங்க profile போட்டோ வச்சி கண்டுபிடிச்சிட்டேன்... மஹா ஜனங்களே... படிக்காம இப்படி கீரிபுள்ள கூட விளையாடிட்டு இருந்த நாலாம் வகுப்பு பெயில் ஆகம வேற என்ன நடக்கும்...///

ந்கொய்யாலே, நாலாப்பு பெயிலானதுக்கு காரணம் எருமை மாடு மேய்க்கப்போனதுனாலேனு தெளிவாச் சொல்லிருக்கேன்... நீ சொல்ர ஊர் நம்பாது..

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்
//இந்த பூனை வீடியோ மறு படி மறு படி பாக்குறேன் //

என்? பூனை, கீரி தெரியுது.... அதுங்க கூட விளையாடற மூணாவது விலங்கு என்னனு தெரியலைய?

அருண் பிரசாத் said...

//கொஞ்சம் எல்லாரும் நம்ம வீட்டுப்பக்கம் வந்திட்டு போங்க//

அங்கதான இருக்கேன்

Jey said...

மங்குனி அமைசர் said...
TERROR-PANDIYAN(VAS) said...

தல அந்த கீரிபுள்ள கூட விளையாடற பட்டிகாட்டான் யாரு தல...?////

அது வேற யாரும் இல்லை அந்த ஊரு கொசு மருந்து அடிக்கிறவன்///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆமாய்யா, கீரி புள்ள கம்பு சுத்துறது - எங்க ஊரு பஸ் ஸ்டாண்ட்ல இப்படிதான் மேளம் அடிச்சி வித்தைகாட்டுவாங்க//

அப்போ ஜெய் மோளம் அடிப்பார? கம்பு சுத்துவார? இல்ல கீரிபிள்ள கூட விள்ளாடுவார?

Jey said...

மங்குனி அமைசர் said...
TERROR-PANDIYAN(VAS) said...

//அது எந்திரன்( ரோபோ), கிராபிக்ஸ் பண்ணது, அசல் மனுசப்பய மாதிரியே இருக்குள்ள பாண்டி.... //

இந்த டகால்டி வேலை எல்லாம் இங்க வேண்டாம்... நாங்க எல்லாம் இமயமலை போய் ஐஸ் விக்கறவங்க.... உங்க profile போட்டோ வச்சி கண்டுபிடிச்சிட்டேன்... மஹா ஜனங்களே... படிக்காம இப்படி கீரிபுள்ள கூட விளையாடிட்டு இருந்த நாலாம் வகுப்பு பெயில் ஆகம வேற என்ன நடக்கும்...////

டெர்ரர் , விடுங்க இங்க ஜெய் யா , வித்தகாட்ட சொல்லி சம்பாரிக்கலாம் |||||||

ஏம்ப்பா யாரும் பிச்ச போடுரதில்லயா( சின்கபூர்ல போய் எல்லாம் பிச்சை எடுதேன்னு சொன்ன..), கல்லா கட்டலையா....:)

Jey said...

அருண் பிரசாத் said...
@ ஜெய்
//அது எந்திரன்( ரோபோ), கிராபிக்ஸ் பண்ணது, அசல் மனுசப்பய மாதிரியே இருக்குள்ள பாண்டி....//

அதான பார்த்தேன், என்னடா இது அந்த மனுசன் ஜெய்யா இருந்தா, கீரிபுள்ள பயந்து ஓடி இருக்குமேனு பார்த்தேன் ///

ஹெஹெஹெஹெ

மங்குனி அமைசர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்
//இந்த பூனை வீடியோ மறு படி மறு படி பாக்குறேன் //

என்? பூனை, கீரி தெரியுது.... அதுங்க கூட விளையாடற மூணாவது விலங்கு என்னனு தெரியலைய?////

டிஸ்கவரி சேனலுக்கு தகவல் கொடுப்பமா ? அவனுக வந்து என்ன முடுகமுன்னு கண்டுபுடுச்சிடுவாணுக

சௌந்தர் said...

கம்பு சுத்துறதுக்கும் தெலுங்கு பேசுறதுக்கும் என்னய்யா சம்மந்தம்?//

அந்த வீடியோ தெலுங்கு பேசும் சப்தம் கேக்குது அதான் நாங்க ஒரே ஏரியா ஆளுங்க....

Jey said...

கே.ஆர்.பி.செந்தில் said...
அடடா பிரமாதமான பதிவு, மனிதநேயம் இல்லை என்று வருத்தபட்டுகொண்டிருக்கையில் , விலங்குகள் மேல் அளப்பரிய கொண்ட மனிதர், அவருக்கு என் சல்யூட்..//

செந்தில், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

மங்குனி அமைசர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆமாய்யா, கீரி புள்ள கம்பு சுத்துறது - எங்க ஊரு பஸ் ஸ்டாண்ட்ல இப்படிதான் மேளம் அடிச்சி வித்தைகாட்டுவாங்க//

அப்போ ஜெய் மோளம் அடிப்பார? கம்பு சுத்துவார? இல்ல கீரிபிள்ள கூட விள்ளாடுவார?////

சீ சீ , அதெல்லாம் ஜெயுக்கு தெரியாது , அலுமினிய தட்டேடுத்துக்கிட்டு எல்லாருகிட்டயும் போய் காசு வாங்குவான்

TERROR-PANDIYAN(VAS) said...

//டிஸ்கவரி சேனலுக்கு தகவல் கொடுப்பமா ? அவனுக வந்து என்ன முடுகமுன்னு கண்டுபுடுச்சிடுவாணுக//

ஆமா ஆமா..... ஒரு புது வகை அறிய விலங்கு பத்தி தகவல் கொடுத்தோம் சொல்லி நமக்கு பரிசு கொடுப்பாங்க..

புவனேஸ்வரி ராமநாதன் said...

வீடியோஸ் நல்லாயிருக்கு.

Jey said...

மங்குனி அமைசர் said...
TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்
//இந்த பூனை வீடியோ மறு படி மறு படி பாக்குறேன் //

என்? பூனை, கீரி தெரியுது.... அதுங்க கூட விளையாடற மூணாவது விலங்கு என்னனு தெரியலைய?////

டிஸ்கவரி சேனலுக்கு தகவல் கொடுப்பமா ? அவனுக வந்து என்ன முடுகமுன்னு கண்டுபுடுச்சிடுவாணுக ///

அடப்பாவிகளா முடிவே பண்ணிட்டீங்களா?..

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//செந்தில், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.//

இங்க total இமேஜ் damage ஆகிட்டு இருக்கு... ஒண்ணுமே நடக்காத மாதிரி வணக்கம் சொல்லி வரவேற்கிறாரு....

Jey said...

புவனேஸ்வரி ராமநாதன் said...
வீடியோஸ் நல்லாயிருக்கு.//

நன்றி மேடம் :)

பனங்காட்டு நரி said...

யோவ்,
உலவு,தமிளிஷ் ,தமிழ்மணம் எல்லாத்துலயும் வோட்டு போட்டாச்சு ....,

Jey said...

வேலன். said...
கீரிப்பிள்ளை அது இதுன்னு பயமுறுத்த கூடாது...ஓட்டு வேனா போட்டுடறேன். வரட்டுமா...!
வாழ்க வளமுடன்,
வேலன் //

பூக்குழில இறக்கிருவேன்னு மிரட்டும் போதுகூட பயப்படல, கீரிப்பிள்ளை கடிக்கி பயந்து கடைக்கு வந்து பின்னூட்டம் + ஓட்டு போட்ருக்கீக..(இந்த ஐடியா நல்லாருக்கே.... சரியாத்தான் மிரட்டியிருக்கோம்)

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//உலவு,தமிளிஷ் ,தமிழ்மணம் எல்லாத்துலயும் வோட்டு போட்டாச்சு ...., //

நீ ஓட்டு போட்டது முக்கியம் இல்ல... நல்லதா எங்கள மாதிரி நாலு வார்த்தை பாராட்டி பேசு...

TERROR-PANDIYAN(VAS) said...

50

TERROR-PANDIYAN(VAS) said...

50

Jey said...

///மங்குனி அமைசர் said...
TERROR-PANDIYAN(VAS) said...

//ஆமாய்யா, கீரி புள்ள கம்பு சுத்துறது - எங்க ஊரு பஸ் ஸ்டாண்ட்ல இப்படிதான் மேளம் அடிச்சி வித்தைகாட்டுவாங்க//

அப்போ ஜெய் மோளம் அடிப்பார? கம்பு சுத்துவார? இல்ல கீரிபிள்ள கூட விள்ளாடுவார?////

சீ சீ , அதெல்லாம் ஜெயுக்கு தெரியாது , அலுமினிய தட்டேடுத்துக்கிட்டு எல்லாருகிட்டயும் போய் காசு வாங்குவான்///

மங்குனி உனக்கு போட்டியா பிச்சையெடுத்து கல்லாகட்டச் சொல்லி உசுப்பேத்துராங்க.. அப்புறம் உமக்கு வரும்படி கம்மியாயிருச்சுன்னா என்னை குத்தம் சொல்லக்கூடாது...

Jey said...

// பனங்காட்டு நரி said...
யோவ்,
உலவு,தமிளிஷ் ,தமிழ்மணம் எல்லாத்துலயும் வோட்டு போட்டாச்சு ....///

நா ராசா, உன்னை மாறி நல்லவங்க ஊருக்குள்ள இருக்கிறதலதான் சென்னைல கொஞ்சமாவது மழை பெய்யுது.. எங்க மனச எப்பவும் எங்கிட்ட காட்டுங்க ராசா.. புண்ணியமா போகும்.

மங்குனி அமைசர் said...

பனங்காட்டு நரி said...

யோவ்,
உலவு,தமிளிஷ் ,தமிழ்மணம் எல்லாத்துலயும் வோட்டு போட்டாச்சு ....,////

அது சரி , உடனே எஸ்கேப் ஆயிடு , இல்ல நான் வளர்த்த நரின்னு உன்னைய வச்சு ஒரு பத்தி போட்ருவான் ,

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
@நரி
//உலவு,தமிளிஷ் ,தமிழ்மணம் எல்லாத்துலயும் வோட்டு போட்டாச்சு ...., //

நீ ஓட்டு போட்டது முக்கியம் இல்ல... நல்லதா எங்கள மாதிரி நாலு வார்த்தை பாராட்டி பேசு...//

ஆமா வன்க்கனையா பெசு பாண்ணி, கல்ல ஒட்டு எப்படி போடுரதுண்ணு கண்டுபிடிச்சி கூட நாலு ஓட்டு மட்டும் போட்ராத...நாதாரி...

வானம்பாடிகள் said...

விடியோ நல்லாருக்கு:).

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
50///

அதெப்படி ரெண்டு 50 போட முடியும், கல்லாடா எல்லாம் இங்க வந்து ஆடக்கூடாது, அப்புரம் கடைபக்கம் விடமாட்டோம்.

Jey said...

வானம்பாடிகள் said...
விடியோ நல்லாருக்கு:).//

நன்றி அண்ணே.

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//கல்ல ஒட்டு எப்படி போடுரதுண்ணு கண்டுபிடிச்சி கூட நாலு ஓட்டு மட்டும் போட்ராத...நாதாரி...//

என்ன தல இப்படி சொல்லிடிங்க.. நான் மட்டும் இந்தியால இருந்தேன் கள்ள ஓட்டு போட்டே உங்கள முதல் அமைச்சர் ஆக்கி இருப்பேன்...

Jey said...

//
TERROR-PANDIYAN(VAS) said...
@ஜெய்
//கல்ல ஒட்டு எப்படி போடுரதுண்ணு கண்டுபிடிச்சி கூட நாலு ஓட்டு மட்டும் போட்ராத...நாதாரி...//

என்ன தல இப்படி சொல்லிடிங்க.. நான் மட்டும் இந்தியால இருந்தேன் கள்ள ஓட்டு போட்டே உங்கள முதல் அமைச்சர் ஆக்கி இருப்பேன்...//

அப்படியா, அப்படின்னா திட்டுனது வாபஸ்.....

TERROR-PANDIYAN(VAS) said...

60

சசிகுமார் said...

அருமை நண்பா, கீறி வீடியோ சூப்பர் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Jey said...

சசிகுமார் said...
அருமை நண்பா, கீறி வீடியோ சூப்பர் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

அடிக்கடி கடை பக்கம் வாங்க சசி :)

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
60 //

இதுவும் கமெண்ஸ் கணக்கா????.

Thomas Ruban said...

எல்லாமே நல்லாயிருக்கு (பின்னுட்டம்கூட) ஜெய் சார் வாழ்த்துக்கள்...

Jey said...

Thomas Ruban said...
எல்லாமே நல்லாயிருக்கு (பின்னுட்டம்கூட) ஜெய் சார் வாழ்த்துக்கள்...///

வருகைக்கு நன்றி சார். அடிக்கடி வாங்க. இங்க இப்பிடிதான் சார், எல்லாரும் ஜாலியானவங்க..

ILLUMINATI said...

ஜெய்,ரொம்ப improve ஆயிட்டீர்.குரங்கு வித்தைல இருந்து இப்ப கீறிப் பிள்ளை வித்தையா??வெரி குட்...

ஜியார் said...

நல்லாருக்கு தல. ஆனா சின்ன குழந்தைகள் விலங்குகளோடு விளையாடுவதை தவிர்க்க சொல்லுங்க. பல நோய்கள் அதன் மூலம் பரவ வாய்ப்பு உண்டு.

Jey said...

//ILLUMINATI said...
ஜெய்,ரொம்ப improve ஆயிட்டீர்.குரங்கு வித்தைல இருந்து இப்ப கீறிப் பிள்ளை வித்தையா??வெரி குட்...//

வழக்கமா, பதிவ போட்டு பத்து நாள் கழிச்சிதான வந்து பின்னூட்டம் போடுவீரு,, இன்னிக்கு கும்முர மாதிரி பதிவ போட்டவுடனே, ஓடியாந்துட்டே...

Jey said...

//ஜியார் said...
நல்லாருக்கு தல. ஆனா சின்ன குழந்தைகள் விலங்குகளோடு விளையாடுவதை தவிர்க்க சொல்லுங்க. பல நோய்கள் அதன் மூலம் பரவ வாய்ப்பு உண்டு.//

ஆமாண்ணே , கவனத்துல எடுத்துக்குறேன்.(அதுக்ள நல்லா பராமரிச்சா நோய் பரவுரது கொஞ்ச கட்டுபடித்திரலாம்ணே)

TERROR-PANDIYAN(VAS) said...

//சின்ன குழந்தைகள் விலங்குகளோடு விளையாடுவதை தவிர்க்க சொல்லுங்க. பல நோய்கள் அதன் மூலம் பரவ வாய்ப்பு உண்டு. //

ஆனா ஜெய் கூட விளையாடின அந்த விலங்குக்குதன் ஜாக்கரதைய இருக்கணும்...

TERROR-PANDIYAN(VAS) said...

அட 50, 60 & 70 எல்லாம் நாமதான்... (ஹலோ கமெண்ட்ஸ் கணக்கு...)

அருண் பிரசாத் said...

@ Terror

ஜெய்க்கு கள்ள ஓட்டும் போட்டு, கமெண்டும் போட்டு இப்படி வளக்கிறயே எதுக்கு ராசா?

எஸ்.கே said...

வீடியோக்கள் நன்றாக உள்ளன சார்!

Phantom Mohan said...

In office with our great (thooooo) manager, will check the videos later.

I know little bit about kambu varisai (silambam)..! :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஊர்ல ஜந்தோட ஜந்தா வளந்திருக்கீங்கன்னு சொல்லுங்க..

Anonymous said...

ஜெ ரெண்டு வீடியோசும் சூப்பர் .எனக்கு கீரியும் பூனையும் விளையாடற அந்த விடியோ ரொம்ப பிடிச்சுருக்கு ..கையில் எடுத்து கொஞ்ச தோணறது ..பகிர்வுக்கு நன்றி

Gayathri said...

இரண்டு விடியோக்களுமே மிக அருமை....கீறி பூனை சம கியூட்...வாழ்த்துக்கள்

Jey said...

///அருண் பிரசாத் said...
@ Terror

ஜெய்க்கு கள்ள ஓட்டும் போட்டு, கமெண்டும் போட்டு இப்படி வளக்கிறயே எதுக்கு ராசா?///

அடப்போயா..., அவனும் ஒரு ஓட்டாவது கள்ள ஓட்டு போட்டு ஆதாரத்தோட நிரூபிக்கிறேனு சொல்லிட்டிருக்கான், இதுவரைலும் முடியல... ஏதோ ஒரு ஐபி விலாசத்துக்கு ஒரு ஓட்டுன்னு ரூல்ஸ் வச்சிரிக்காங்களாம்..., பன்னாடை... பம்ன்னாடை... கம்பூட்டர்லாம் படிச்சிருக்கானாம்... இதக்கூட மீரத்தெரியல....

Jey said...

///எஸ்.கே said...
வீடியோக்கள் நன்றாக உள்ளன சார்!
///


நன்றி திரு எஸ்கே, அடிக்கடி இந்த பக்கம் வாங்க...

Jey said...

///Phantom Mohan said...
In office with our great (thooooo) manager, will check the videos later.

I know little bit about kambu varisai (silambam)..! :)///

பருப்பு உனக்கு கம்பு பத்தியெல்லாம் தெரியுமா...., இந்த சோளம் பாதிரி விளையுமே... அதக்கூட கூல் காய்ச்சி குடிப்பாங்களே அதத்தானே சொல்றே.... ரைட் மக்கா...., என்ன இருந்தாலும் பருப்பு பருப்புதான்...

Jey said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஊர்ல ஜந்தோட ஜந்தா வளந்திருக்கீங்கன்னு சொல்லுங்க..///

ங்கொய்யாலே, அப்பப்ப வந்து ரெண்டு வார்த்தைல கமெண்ட்ஸ் போட்டுட்டு போ, கேட்டா ரொம்ப ஆணின்னு சொல்லு, ஏதோ நாங்கெல்லாம்... தண்ணி தெளிச்சி விட்ட ஆடு மாறி ஊருக்குள்ளே வெட்டியா திரியுரா மாறி...., நிரு பதிவப் போடும் அப்ப இருக்குடி சங்கு...

(பதிவ போட்டு ஒரு நாள் கழிச்சி வந்தா ஓட்டு போடுறே...)

Jey said...

///sandhya said...
ஜெ ரெண்டு வீடியோசும் சூப்பர் .எனக்கு கீரியும் பூனையும் விளையாடற அந்த விடியோ ரொம்ப பிடிச்சுருக்கு ..கையில் எடுத்து கொஞ்ச தோணறது ..பகிர்வுக்கு நன்றி ///

ஆமா அதுல இருக்குர என்னை பத்தி ஒன்னும் சொல்லாம போய்ட்டீங்களே மேடம்..., ஒரு ரெண்டு வார்த்தை நல்லாருகேடா அம்பினு சொல்லிட்டு போயிருந்தா ஒரு வருசத்துக்கு , பல பேர கலாய்ச்சிருப்பேனே.... கவுத்திட்டீங்களே மேடம்.....

Jey said...

// Gayathri said...
இரண்டு விடியோக்களுமே மிக அருமை....கீறி பூனை சம கியூட்...வாழ்த்துக்கள்//


ஹி ஹி நானும் ரெண்டு மூனு நாள் பால் விட்டு அதுகள வளத்திருக்கேன், அதான் அவ்வளவு கியூட்...:)

Jey said...

@@@ sandhya said...

@@@ Gayathri said... ///

வந்து பின்னூட்டம் போட்டுட்டு ஓட்டு போடாமயா போரீங்க... போங்க போங்க... எங்க போவீங்க..., நீங்க ப்திவ எழுதுவீங்கள்ல அப்ப பதில் குடுக்குறேன்....

Phantom Mohan said...

Jey said...
///Phantom Mohan said...
In office with our great (thooooo) manager, will check the videos later.

I know little bit about kambu varisai (silambam)..! :)///

பருப்பு உனக்கு கம்பு பத்தியெல்லாம் தெரியுமா...., இந்த சோளம் பாதிரி விளையுமே... அதக்கூட கூல் காய்ச்சி குடிப்பாங்களே அதத்தானே சொல்றே.... ரைட் மக்கா...., என்ன இருந்தாலும் பருப்பு பருப்புதான்...
////////////////////////

இல்ல இந்த கக்கூஸ் அடச்சிக்கிட்டா குத்தி விடுவாங்களே, அந்த கம்பு.

யோவ் ஒரு மறத்தமிழனை கேவலப்படுத்திட்டல்ல, மவனே மறத்தமிழர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து உனக்கு ஆப்பு அடிக்கப் போறாங்க.

Phantom Mohan said...

Jey said...
@@@ sandhya said...

@@@ Gayathri said... ///

வந்து பின்னூட்டம் போட்டுட்டு ஓட்டு போடாமயா போரீங்க... போங்க போங்க... எங்க போவீங்க..., நீங்க ப்திவ எழுதுவீங்கள்ல அப்ப பதில் குடுக்குறேன்....
/////////////////////////////////

பெண்களை மிரட்டும் ஆணாதிக்கவாதி ஜெய் வாழ்க! சாரி ஒழிக!

Phantom Mohan said...

பத்து வாட்டி refresh பண்ணி பார்த்தும், இன்னும் பதில் போடாத பயந்தாங்கொள்ளி ஜெ வாழ்க!

Phantom Mohan said...

யோவ் ஜெ, இங்க ரம்ஜான் ஆரம்பிக்கப்போகுது, ஆறு மணி வரைக்கும் சோறு கிடைக்காது, தண்ணி கிடைக்காது :(

ஒரே சந்தோசம், இனி ஒரு மாசம் அரைப்பள்ளிக்கூடம் தான்... ஒரே ஜாலி தான்! ஜாலியோ ஜிம்க்கானா :)

Phantom Mohan said...

ஓகே தனியா டீ ஆத்துனது போதும், போய் கஞ்சி குடிச்சிட்டு தெம்பா வர்றேன்.

Jey said...

//Phantom Mohan said...
பத்து வாட்டி refresh பண்ணி பார்த்தும், இன்னும் பதில் போடாத பயந்தாங்கொள்ளி ஜெ வாழ்க!///

யோவ் வெண்ண, உன் கடையில நான் பின்னூட்டம் போட்டு, ஒரு நாள் கழிச்சிதானய்யா பதில் போட்டீரு...

Jey said...

///Phantom Mohan said...

யோவ் ஒரு மறத்தமிழனை கேவலப்படுத்திட்டல்ல, மவனே மறத்தமிழர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து உனக்கு ஆப்பு அடிக்கப் போறாங்க.///


ப்ருப்பு உன்னோட பின்னூட்டத்துல சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டீக்கு ஆயிபோச்சி.... அது “ மறத்தமிழனை” இல்லை... நல்லா நோட் பண்ணிக்கோ “ மடத்தமிழனை” எங்கே திருப்பி சொல்லு... 1...2...3... ஆங்... இப்ப கரெக்டா சொல்றே...

Jey said...

///Phantom Mohan said...

பெண்களை மிரட்டும் ஆணாதிக்கவாதி ஜெய் வாழ்க! சாரி ஒழிக!///


ஒய் மோதனும்னா ஒத்தைக்கு ஒத்தை வாய்யா பருப்பு, ஏன் அம்மனிகள( யப்பா விட்ருப்பா சாமீ...) உசுப்பி வுடுறே....

Jey said...

/// Phantom Mohan said...
யோவ் ஜெ, இங்க ரம்ஜான் ஆரம்பிக்கப்போகுது, ஆறு மணி வரைக்கும் சோறு கிடைக்காது, தண்ணி கிடைக்காது :(

ஒரே சந்தோசம், இனி ஒரு மாசம் அரைப்பள்ளிக்கூடம் தான்... ஒரே ஜாலி தான்! ஜாலியோ ஜிம்க்கானா :)////


இப்பவே உமக்கு இந்த லொல்லு, அழிசாட்டியம் இருக்கே, இந்த ரம்ஜான் முடிஞ்சி மூனு வேளை கொட்டிக்கும் போது எவ்வளவு இருக்கும்.....,

(எனக்கு இதன் அருமை தெரியும்... மாலத்தீவில் ரெண்ண்டு வருஷம் இருந்தேன்..., மவனே சாவுடா...:))

Jey said...

/// Phantom Mohan said...
ஓகே தனியா டீ ஆத்துனது போதும், போய் கஞ்சி குடிச்சிட்டு தெம்பா வர்றேன்.///

வாடி மாப்ளேய்... நல்ல மூடுலதான் இருக்கேன் வா... தக்காளி இன்னிக்கு எனக்கு லெக் பீஸ் கிடைக்குறது நிச்சயம் ஆயிருச்சிடோய்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ங்கொய்யாலே, அப்பப்ப வந்து ரெண்டு வார்த்தைல கமெண்ட்ஸ் போட்டுட்டு போ, கேட்டா ரொம்ப ஆணின்னு சொல்லு, ஏதோ நாங்கெல்லாம்... தண்ணி தெளிச்சி விட்ட ஆடு மாறி ஊருக்குள்ளே வெட்டியா திரியுரா மாறி...., நிரு பதிவப் போடும் அப்ப இருக்குடி சங்கு...

(பதிவ போட்டு ஒரு நாள் கழிச்சி வந்தா ஓட்டு போடுறே...)//

லேட்டா வந்தாலும் மொக்கையோட வருவோம்ல...

ப.செல்வக்குமார் said...

//பல்லுக சின்ன சின்னதா கூரா இருக்கும் கடிச்சிருமோனு பயம்மாருக்கும்.//
செம கூரா இருக்கும் ..!!

Phantom Mohan said...

மதிப்பிற்குரிய கும்மியடிப்போர் சமுகத்திற்கு,


தற்பொழுது போனஸ் மற்றும் increment போடும் காலம் என்பதால், எங்கு நோக்கினும் மேனஜரைப் பார்த்து பம்முவதும், ஆஸ்கார் மிஞ்சும் ஆக்டிங்கும் அளவுக்கு அதிகமாக உள்ளது. நானும் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளதால் (ஒன்னும் தெரியா விட்டாலும்)
லேப்டாப்பில் தலையை விட்டு ஓவர் சீன் போட வேண்டியுள்ளது என வெக்கத்தை விட்டு கூறிக் கொள்கிறேன்.

இதன் காரணமாகவே என்னால் அதிகமாக கும்மி அடிக்க முடியவில்லை.

இப்படிக்கு சுயநினைவுடன்,

பருப்பு (a ) Phantom Mohan

Phantom Mohan said...

இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக 100 போடத் துடிக்கும் உங்கள் மோகனை வாழ்த்துங்கள்!

Phantom Mohan said...

99
100

Phantom Mohan said...

வென்றுட்டன் நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு சதம்.

இச்சாதனைக்கு எனக்கு இவ்வருட போனசில் கூட எதாவது போட்டு குடுக்குமா, எனது நிர்வாகம்!

வெறும்பய said...

இவ்வளவு தூரம் வந்திட்டு சுமா போனா நல்லாவா இருக்கும்....

நான் தான் 101 ..வது ...

Riyas said...

நான் தான் 102 ..வது

நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவம்லல்ல்ல்ல்

மங்குனி அமைசர் said...

103,104,105

........

மங்குனி அமைசர் said...

103,104,105

........

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

லேட்டா வந்தாலும் மொக்கையோட வருவோம்ல.///

எப்பவும் உண்மைய மட்டும் பேசாதே ரமேஷு......

Jey said...

/// ப.செல்வக்குமார் said...

நன்றி. கோமாளி:)

Phantom Mohan said...

யோவ் உங்காளு சிலம்பம் பயங்கரமா சுத்துறாரே!!!!! இதே மூடுல வில்லாவுக்குப் போறேன், இன்னைக்கு எத்தன பேரு மண்ட வுடையப் போகுதோ???????????

என்னோட ரொம்ப நாள் கண்ணு பக்கத்து வில்லா ஆண்டி மேல (ஓவர் சீன் போடும்) இன்னைக்கு சிலம்பம் சுத்தறேன்னு சொல்லி அது மண்டைய உடைக்க பிளான் போட்டிருக்கோம், ஆண்டவன வேண்டிக்கோ...என் மேல கேஸ் போட்டா, குற்றம் செய்ய தூண்டியவர்ன்னு உன்னத்தான் போட்டுக்குடுப்பேன்....இங்கிருந்தே உன்ன அங்க தூக்க வச்சிருவேன்... NRI யா கொக்கா? ஹா ஹா ஹா

Gayathri said...

ஐயோ வோட்...போட்டுட்டேன்...கவனிக்கல நண்பா...சாரி...

இப்படியே நல்லா பிராணிகளை பாத்துக்குங்க

Jey said...

Phantom Mohan said...
பத்து வாட்டி refresh பண்ணி பார்த்தும், இன்னும் பதில் போடாத பயந்தாங்கொள்ளி ஜெ வாழ்க!///

பல்பு வாங்கினய்யா... ரொம்ப சந்தோசம்..., கொலை வெறி மூடுல இருக்குரவங்கள இப்படி பல்பு குடுத்துதான் டீல் பண்ணுவோம்...

///ஓகே தனியா டீ ஆத்துனது போதும், போய் கஞ்சி குடிச்சிட்டு தெம்பா வர்றேன்.///


தனியா டீ ஆத்துரதும், ஆளில்லாத கடையில போய் சலம்புரதும் நமக்கு புதுசா... பருப்பு, ஊரே துங்கிட்டிருக்கும் போதுகூட நாம தனியா அலம்பியிருக்கோமே ஞாபகம் இருக்கா...

///இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக 100 போடத் துடிக்கும் உங்கள் மோகனை வாழ்த்துங்கள்!///

முத்து இல்லாத குறைய நீரும், டெர்ரர் பாண்டியும் தீர்த்து வச்சிட்டீரு மக்காஸ்

///Phantom Mohan said...
99
100///

ஒகெ. கெட் ரெடி ஃபார் ட்ரைனிங்...

/// Phantom Mohan said...
வென்றுட்டன் நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு சதம்.

இச்சாதனைக்கு எனக்கு இவ்வருட போனசில் கூட எதாவது போட்டு குடுக்குமா, எனது நிர்வாகம்!///

கலாக்கா செண்டெர்ல அட்மிஸன் முடிஜ்ச்சிருச்சாம்... நம்ம நமிதா புதுசா ட்ரைனிங் ஆரம்பிச்சிருக்காங்க அங்க போரதுக்கு விருப்பம் இருக்கா...உம்னு ஒரு வார்த்த சொல்லு பருப்பு ...

Jey said...

வெறும்பய said...
இவ்வளவு தூரம் வந்திட்டு சுமா போனா நல்லாவா இருக்கும்....

நான் தான் 101 ..வது ...///

உமக்கு நான் எழுதுன மொய்ய வேற விதத்துல வந்து எழுதிட்டு போய்டீரு.... ரைட்டூ..:)
( ஒரு குழந்தையின் கதறல்.... னெகிழ்ச்சியா இருதுச்சி மக்கா...)

முத்து said...

பரவா இல்லை கைவசம் தொழில் இருக்கு வித்த காட்டியாவது பொழசிக்குவ

Jey said...

முத்து said...
பரவா இல்லை கைவசம் தொழில் இருக்கு வித்த காட்டியாவது பொழசிக்குவ ///

எனக்கும் அந்த ஐடியா இருக்கு முத்து..., அப்புறம்ம் இன்னும் ஆப்பு நெறய இருக்கா....

Jey said...

///Gayathri said...
ஐயோ வோட்...போட்டுட்டேன்...கவனிக்கல நண்பா...சாரி...

இப்படியே நல்லா பிராணிகளை பாத்துக்குங்க///

நம்ம மிரட்டுனா பயந்து வந்து ஓட்டு போடுறதுக்கும் ஆள் இருக்கும் போலயே.....( நாம டம்மி பீசுனு தெரியாம பயந்திருக்காங்க பாவம்... இப்படியே கெத்தாவே இருப்போம்..)

Jey said...

Phantom Mohan said...
யோவ் உங்காளு சிலம்பம் பயங்கரமா சுத்துறாரே!!!!! இதே மூடுல வில்லாவுக்குப் போறேன், இன்னைக்கு எத்தன பேரு மண்ட வுடையப் போகுதோ???????????

என்னோட ரொம்ப நாள் கண்ணு பக்கத்து வில்லா ஆண்டி மேல (ஓவர் சீன் போடும்) இன்னைக்கு சிலம்பம் சுத்தறேன்னு சொல்லி அது மண்டைய உடைக்க பிளான் போட்டிருக்கோம், ஆண்டவன வேண்டிக்கோ...என் மேல கேஸ் போட்டா, குற்றம் செய்ய தூண்டியவர்ன்னு உன்னத்தான் போட்டுக்குடுப்பேன்....இங்கிருந்தே உன்ன அங்க தூக்க வச்சிருவேன்... NRI யா கொக்கா? ஹா ஹா ஹா///

யோவ் பருப்பு, ஏதா இருந்தா நமகுள்ள வெட்டு குத்துனு தீத்துக்கலாம், வேற எங்கயாவது போற வழில (ஹி ஹி ஒரு பிரபல பதிவர் எழுதுன பதிவிலிருந்து இந்த வார்த்தய சுட்டுட்டேன்..) கோத்துவிட்டு போயிராதையா...

Jey said...

அப்ப சாமிகளா, உங்களுக்கு பதி போடுரதுக்குள்ள கை விரலெல்லாம் வலிக்குய்யா...

ஜெய்லானி said...

அது கீரிப்பிள்ளையா எங்கூரு எலி மாதிரியில்ல தெரியுது...

ஜெய்லானி said...

உன்னைய எத்தனை மாசம் கூண்டுக்குள்ள வச்சிருந்தாங்கன்னு சொல்லையே மக்கா..!!

ஜெய்லானி said...

உன்னைய எத்தனை மாசம் கூண்டுக்குள்ள வச்சிருந்தாங்கன்னு சொல்லையே மக்கா..!!

ப்ரியமுடன் வசந்த் said...

ங்கொய்யால குட் நைட்டா சொல்லிட்டு போற இருடி இந்த போஸ்ட்ட பிரிச்சு மேயுறேன்...

//துனுக்குகள் //

துணுக்கு மூட்டையே நீ படிச்சது இல்லியா பங்கு?

//இருக்குர// ற

//வளப்பாரு// பேச்சுத்தமிழா இருக்குறதால பொழச்சுப்போ

//குழந்தகள் பூங்காலையும்//

குழந்தைகள் பூங்காவிலும்

//அதுக்கள வேடிக்கை //

எதுக்குல வேடிக்கை பார்க்கப்போன?

//விளையாடுரதும் பிடிக்கும், // ற

//என் குழைந்தகளும் விளையாடுதுங்க// குழந்தைகள்

//ஊர்ருக்கு// ஊருக்கு

//கொஞ்ச நெரம்// நேரம்

//பூணையும் // பூனை

//எனக்கு சின்ன வயுலேர்ந்து// வயசுல இருந்து

//கம்பு சுத்துரது // சுத்துறது

இவரு நம்ம மேல கீரிப்புள்ளய விடறாராம் ஒழுக்கமா போஸ்ட் எழுதி ஒருதடவைக்கு ரெண்டுதடவ படிச்சு பார்த்துட்டு ரிலீஸ் பண்ணனும் இன்னொரு முறை ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்துச்சு பங்காளி ஊருப்பக்கம் வந்துகிட மாட்டடி நாறிடும் ஆமா சொல்ட்டேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

பெத்த நைனா கம்பு சுத்தேதீல கலக்கேச...!

ப்ரியமுடன் வசந்த் said...

//Phantom Mohan said...

யோவ் உங்காளு சிலம்பம் பயங்கரமா சுத்துறாரே!!!!! இதே மூடுல வில்லாவுக்குப் போறேன், இன்னைக்கு எத்தன பேரு மண்ட வுடையப் போகுதோ???????????

என்னோட ரொம்ப நாள் கண்ணு பக்கத்து வில்லா ஆண்டி மேல (ஓவர் சீன் போடும்) இன்னைக்கு சிலம்பம் சுத்தறேன்னு சொல்லி அது மண்டைய உடைக்க பிளான் போட்டிருக்கோம், ஆண்டவன வேண்டிக்கோ...என் மேல கேஸ் போட்டா, குற்றம் செய்ய தூண்டியவர்ன்னு உன்னத்தான் போட்டுக்குடுப்பேன்....இங்கிருந்தே உன்ன அங்க தூக்க வச்சிருவேன்... NRI யா கொக்கா? ஹா ஹா ஹா
//

கத்தார்ல எந்த ஏரியா தல ?

108 ஒகேவா?

பட்டாபட்டி.. said...

எனக்கு சின்ன வயுலேர்ந்து இந்த கம்பு சுத்துரது ரொம்ப பிடிக்கும்,
//


ஹி..ஹி.. எனக்கும்தான்..

கும்மாச்சி said...

ஜே கருத்தும் விடியோவும் நன்றாக உள்ளது. இனி தொடர்ந்து உங்கள் பக்கம் வருகிறேன்.

Jey said...

ஜெய்லானி said...
அது கீரிப்பிள்ளையா எங்கூரு எலி மாதிரியில்ல தெரியுது...//

பெருசா இருக்குற எலி , பெருச்சாலியா இர்க்கப்போகுதுய்யா...

//உன்னைய எத்தனை மாசம் கூண்டுக்குள்ள வச்சிருந்தாங்கன்னு சொல்லையே மக்கா..!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்

Jey said...

//பட்டாபட்டி.. said...
எனக்கு சின்ன வயுலேர்ந்து இந்த கம்பு சுத்துரது ரொம்ப பிடிக்கும்,
//

ஹி..ஹி.. எனக்கும்தான்..//

நெசமாலுமா!!! ஒரே நெத்தம்ய்யா நமக்கு...:)

Jey said...

//கும்மாச்சி said...
ஜே கருத்தும் விடியோவும் நன்றாக உள்ளது. இனி தொடர்ந்து உங்கள் பக்கம் வருகிறேன்.//

அண்ணாச்சி வங்க... வாங்க... நன்றி.

Jey said...

ப்ரியமுடன் வசந்த் said...
ங்கொய்யால குட் நைட்டா சொல்லிட்டு போற இருடி இந்த போஸ்ட்ட பிரிச்சு மேயுறேன்...//

நாட்ல குட் நைட் சொல்ரது ஒரு தப்பாய்யா....

அப்புறம் நானெண்ண எழுத்து பிழையோடதான் எழுதுவேன்னு நேத்திகடன் நேந்திருக்கேனா?.. சரக்கே அவ்வளவுதான் என்ன பண்ணச்சொல்றே....,

//பெத்த நைனா கம்பு சுத்தேதீல கலக்கேச...!//

அப்படியா பங்காளி, அவரு இப்ப உங்கூருலதான் குடியிருக்காரு...

Gayathri said...

நம்ம மிரட்டுனா பயந்து வந்து ஓட்டு போடுறதுக்கும் ஆள் இ??ருக்கும் போலயே.....( நாம டம்மி பீசுனு தெரியாம பயந்திருக்காங்க பாவம்...இப்படியே கெத்தாவே இருப்போம்..) ///
அடக்கடவுளே இதுதேரியாமா நான் ஆடிபோய்ட்டேன்...ஆல் மை டைம் ! ஹீ ஹீ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா சூப்பர்! கீரிப்புள்ளை கூட இந்த மாதிரி வெளையாடுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்க பங்காளி நல்லாவே கம்பு சுத்துராரு, ஆமா இந்த மாதிரி விளையாட்டுக்கள்லாம் பெரிய கேம்ஸ்ல (ஏசியன் கேம்ஸ், ஒலிம்பிக்ஸ், நேசனல் கேம்ஸ்) சேர்த்தா என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ஜெய், கீரிப்புள்ளை கடிக்குமா? (அப்படியே கடிச்சாலும் நல்லதுதானே, அப்புறம் பாம்பு விசம் உடம்புல ஏறாதுல? எப்பூடி?)

Jey said...

Gayathri said...
நம்ம மிரட்டுனா பயந்து வந்து ஓட்டு போடுறதுக்கும் ஆள் இ??ருக்கும் போலயே.....( நாம டம்மி பீசுனு தெரியாம பயந்திருக்காங்க பாவம்...இப்படியே கெத்தாவே இருப்போம்..) ///
அடக்கடவுளே இதுதேரியாமா நான் ஆடிபோய்ட்டேன்...ஆல் மை டைம் ! ஹீ ஹீ//


ஹி ஹி

Jey said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆஹா சூப்பர்! கீரிப்புள்ளை கூட இந்த மாதிரி வெளையாடுமா?//

வா ராசா, மப்பு தெளிய ஒரு வாரம் ஆச்சா...., நேத்து பட்டா கடையில ஒரு குருப்பு, உன்னை தேடிட்டிருந்தாங்க, மாடாம தப்பிச்சே போ...:)

//உங்க பங்காளி நல்லாவே கம்பு சுத்துராரு, ஆமா இந்த மாதிரி விளையாட்டுக்கள்லாம் பெரிய கேம்ஸ்ல (ஏசியன் கேம்ஸ், ஒலிம்பிக்ஸ், நேசனல் கேம்ஸ்) சேர்த்தா என்ன?//
அதானே பன்னி, நானும் பட்டாவும் கலந்துகிட்டு எங்க கப்பு!!! வாங்கிட்டு வந்துரொவோம்னு பொறாமை...


//என்ன ஜெய், கீரிப்புள்ளை கடிக்குமா? (அப்படியே கடிச்சாலும் நல்லதுதானே, அப்புறம் பாம்பு விசம் உடம்புல ஏறாதுல? எப்பூடி?)//

ஆஹா இந்த மாதிரி ஐடியல்லாம் எப்படி ராசா உமக்கு மட்டும் தோனுது...

பனங்காட்டு நரி said...

யோவ் புதுசா ஒரு இடுகையை போடிருகேன் வந்து பாருமையா

Maduraimohan said...

எந்த ஊர் jey நீங்க ?
videos நல்லா இருக்கு :)

LinkWithin

Related Posts with Thumbnails