முஸ்கி : Grand parents day என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை தெரியாததினால் பதிவுக்கு இந்த தலைப்பு.
என் பெண் LKG படிக்குற பள்ளியில் இன்று Grandparents Day என்றும் தத்தமது பாட்டி தாத்தாக்களுடன் வருமாறு கூப்பிட்டிருந்தாங்க. சரின்னு எங்கம்மாவயும் கூட்டிகிட்டு பள்ளி போயிருந்தோம், போன பிறகு, அங்கு வந்த பாட்டி தாத்தக்களோட என்ணிக்கைய பார்த்த ஒரே ஷாக். மொத்தம் 150 குழைந்தங்க LKG படிக்கிறாங்க, அதுல 30க்கும் குறைவான குழைந்தைங்க தான் தாத்தா பாட்டியோடவோ, இல்லை அவங்கள்ல ஒருவரோடவோ வந்திருந்தாங்க. காரணம் தெரிஞ்சிக்க, பல குழைந்தகளோட அப்பாககிட்ட விசாரிச்ச போது வந்த பதில்கள்.
- தனிக்குடித்தனம் . தனக்குன்னு சொத்து சேக்குற , அதிக செலவுகளை குறைக்கிறதுக்காக கூட வச்சிக்களயாம், மாசா மாசம் குறிப்பிட்ட தொகையை அனுப்பிடுறாங்களாம்.( உண்மையில பணமாவது அனுப்புறாங்களான்னு தெரியலை.), அதுல ஒருத்தர் வீட்டம்மாவுக்கு பெற்றோர்களை கூட வச்சிக்கிறதுல சம்மதம் இல்லாதால கூட வச்சிக்கலைனு சொன்னாரு.
- சிலபேர்களோட பெற்றோர்கள் கிராமத்துல இருக்கிறதனால, அழைச்சிட்டு வர முடியல.
- பெற்றோர்களுடன் சுமுக உறவு இல்லாம, அவங்கள கூப்பிட முடியாத நிலை
- பெற்றோர்கள் இப்ப உயிரோட இலாததனால அழைச்சிகிட்டு வரமுடியாத நிலை
- காதல் கல்யாணம், பெர்றோர்களுடன் உறவே இலாத்தினால அழைச்சிகிட்டு வரமுடியாத நிலை..
இப்படி பல காரணங்களால இந்த தலைமுறை குழந்தைங்க, தாத்தா பட்டிகளோட பாசம் + வழிகாட்டுதல், கிடைக்காமலேயே வளர்றாங்க. 20 % குழைந்தைங்க தான் தாத்தாபாட்டிகளோட வந்திருந்தாங்க.
என்னோட அனுபவத்துல நாங்க எங்க குழைந்தங்க கிட்ட காட்டுற பாசத்துக்கும், எங்கம்மா காட்டுர பாசத்துக்கும் நெறய வித்தியாசம் இருக்கு. எங்கம்மாவுக்கு இருக்கிற பொறுமையும் குழைந்தங்ககிட்ட அவங்க அனுகுகிற முறையும் அலாதியானது. இன்னிக்கு இருக்கிற ஆங்கில வழிக் கல்விய சொல்லிகுடுக்கிறதுல, எங்கம்மா, எங்களோட போட்டி போட முடியலைன்னாலும், குழைந்தய புரிஞ்சிக்கிறதுல அடிப்படை நல்ல பழக்கவழக்கங்கள அவங்கதான் பொறுமையா அழகா சொல்லிதராங்க.
பள்ளியில பல குழந்தைங்க, அவங்க தத்தா பாட்டிய பாத்ததே இல்லையாம், எனக்கு தெரிந்த நண்பரின் மகன், என் அம்மாவைக் கட்டிபிடித்துக் கொண்டு பாட்டி பாட்டியென்று என் அம்மாகூடவே இருந்தான். இது மாதிரி பல குழைந்தகளுக்கு அவர்களின் தாத்தா பாட்டிகளின்( இருந்தும்) பாசம் கிடக்காமல் இருப்பது வேதைனையகவே இருக்கு.
பெரும்பாலான குழைதகளை இனிமே முதியோர் இல்லங்களுக்கு அழைத்துபோய் தாத்தா பாட்டிகள் இப்படிதான் இருப்பார்கள் என்று காட்டும் நிலை சீக்கிரமே வந்துரும் போல.
டிஸ்கி : இந்த வாட்டி பதிவ சின்னதா போட்டுட்டேன். பாராட்ரவங்க வஞ்சனையில்லாம பாராட்டிட்டு போகலா, அப்படியே ஒட்டும் போட்ரலாம்.
75 comments:
முதல் வடை என்னக்கு
காக்கா கிட்டயே திருடி திண்ண நரியாச்சே...:)
தாத்தா பாட்டி என்றால் யார் என்றே தெரியவில்லை.....சில குழந்தைகளுக்கு
in this fast world no one has time to speak itself even in same house.before world is slow they get more time to share with family even though they adopt joint family. today world is fast and family is seprated even not having time to speak with wife and children in same house.
//பள்ளியில பல குழந்தைங்க, அவங்க தத்தா பாட்டிய பாத்ததே இல்லையாம், ///
:-(
//
அதுல ஒருத்தர் வீட்டம்மாவுக்கு பெற்றோர்களை கூட வச்சிக்கிறதுல சம்மதம் இல்லாதால கூட வச்சிக்கலைனு சொன்னாரு//
பின்னாடி இவங்களுக்கும் இந்த நிலைமை வரும்னு தெரிஞ்சா ஒருவேளை திருந்துவாங்களோ..? இருந்தாலும் ஒரு சிலரை குறை சொல்ல முடியாத நிலையும் இருக்கு .. தன்னோட மருமகளும் ஒரு பொண்ணுதான் அப்படின்னு நினைக்காதவங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க.!
//
பெரும்பாலான குழைதகளை இனிமே முதியோர் இல்லங்களுக்கு அழைத்துபோய் தாத்தா பாட்டிகள் இப்படிதான் இருப்பார்கள் என்று காட்டும் நிலை சீக்கிரமே வந்துரும் போல.///
அப்படி ஒரு நிலைமை வராத வரைக்கு சந்தோசம்..!!
இப்பதான்யா அழகா ஒரு பதிவு போட்டிருக்கே...!!
சின்னதா அழகா கருத்தோட..
இது இப்பவே இப்பிடின்னா இன்னும் கொஞ்ச நாளில் அந்த 30ம் குறையும் போல தெரியுதே..!!
" பெரும்பாலான குழைதகளை இனிமே முதியோர் இல்லங்களுக்கு அழைத்துபோய் தாத்தா பாட்டிகள் இப்படிதான் இருப்பார்கள் என்று காட்டும் நிலை சீக்கிரமே வந்துரும் போல."
ஜெ இப்பிடி தான் நடக்குமோன்னு கவைலையா இருக்கு ..நல்ல பதிவு ..நன்றி
நல்லா சொல்லியிருக்கீங்க.
நல்ல தொலை நோக்கு பார்வையில் எழுதப்பட்ட இடுகை கங்ராட்ஸ் பங்காளி
//பட்டி தாத்தாக்களுடன்//
எழுத்துபிழைக்கு பாவம் நீர் என்ன செய்வீர் சேர்க்கை அப்படி
என்ன ஜெய் சிந்திக்க வைக்கிற மாதிரியெல்லாம் பதிவு போடுறீங்க.
உண்மையிலேயே ஒரு உருப்படியான பதிவு.
வாழ்த்துக்கள்.
தாத்தா பாட்டியின் பாசமே வேறு, என்ன செய்தாலும் அந்த அள்விற்கு ஈடாகாது
VETKAPADA VENDIYA VETHANAIYANA UNMAI....
யோ எதுக்குய இப்படி நல்ல பதிவ போட்டு சாவ அடிக்கற? மனுஷன நிம்மதியா கலாய்க்க விடுங்கய... நான் எல்லாம் எங்க பாட்டி மேல எவ்வளோ பாசம் தெரியுமா? அவங்க வெத்தல பாக்கு வாங்க சொல்லி காசு கொடுத்த அதுல கமர்கட் வாங்கி தின்னு இருக்கேன். அவங்க தெர்ம மீட்டர் எடுத்து விலக்குல காட்டி வெடிக்க வச்சி வேடிக்க பாத்து இருக்கேன்...
//20 % குழைந்தைங்க தான் தாத்தாபாட்டிகளோட வந்திருந்தாங்க. //
இந்த அவசர உலகத்தில் நமக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மீட்க முடியாத இழப்பை உண்டாக்குகிறோம்.
தாத்தா பாட்டிகளின் அன்பு பாசம் பரிவு அனுபவம் என்பவை குழந்தைகளின் மனவளர்ச்சிக்கும்,ஒழுக்கத்திற்க்கும் அடிப்படை என்பது நவின மனோதத்துவத்தின் சாரம்.நல்ல பதிவு
பதிவு நல்லாயிருக்கு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையென்றால் எப்படி?
காதலிச்சி கண்ணாலம் பண்ணும்,புருஷன் பொண்டாட்டி வேலைக்கும் போகணும்,
ரெண்டுபேரும் நெறைய சம்பாதிக்கணும், வீடு ,கார் வாங்கணும்,வெளியூர் பயணம் போகணும்.
பணம் மட்டுமே வாழ்க்கை என்ற தத்துவத்தை உலகமயமாக்கல் மிக நன்றாகவே
இளையவர்களுக்கு உணர்த்திவிட்டதால் இதையெல்லாம் பார்த்தால் ...............??
அம்மா அப்பாவே தேவையில்லை என்றான பிறகு
தாத்தா...பாட்டி .......எங்கேயிருந்து வருவார்கள். ........யாருக்கையாவேண்டும்?
//தாத்தா பாட்டி என்றால் யார் என்றே தெரியவில்லை.....சில குழந்தைகளுக்கு//
என் குழந்தைகளும் அப்படிதான் வளர்கிறார்கள்... வருத்தமாக இருக்கிறது...
சௌந்தர் said...
தாத்தா பாட்டி என்றால் யார் என்றே தெரியவில்லை.....சில குழந்தைகளுக்கு//
உண்மை செளந்தர்.
senthil1426 said...
in this fast world no one has time to speak itself even in same house.before world is slow they get more time to share with family even though they adopt joint family. today world is fast and family is seprated even not having time to speak with wife and children in same house.///
yes your view seen to be true in present time, but consequences not in favor of next generation. humanity will vanishes in coming days.
ப.செல்வக்குமார் said...//
நல்லா சொல்லிருகீங்க செல்வா.
ஜெய்லானி said...
இப்பதான்யா அழகா ஒரு பதிவு போட்டிருக்கே...!!
சின்னதா அழகா கருத்தோட..///
அடப்பாவி, இதுக்கு முன்னாடி ஏதும் நல்ல கருத்தோட பதிவே போடலைனு மறைமுகமா சொல்லிட்டியே பரட்டை, இரு வசிக்கிறேன்...
///இது இப்பவே இப்பிடின்னா இன்னும் கொஞ்ச நாளில் அந்த 30ம் குறையும் போல தெரியுதே..!!///
அடுத்த வருசத்துலேயெ இதுல பாதிதான் தேரும் போல இருக்கு:(
ப்ரியமுடன் வசந்த் said...
நல்ல தொலை நோக்கு பார்வையில் எழுதப்பட்ட இடுகை கங்ராட்ஸ் பங்காளி///
நன்றி பங்ஸ். இங்க எனக்கு ஏற்கனவே ஜலதோஷம்...:)
//பட்டி தாத்தாக்களுடன்//
எழுத்துபிழைக்கு பாவம் நீர் என்ன செய்வீர் சேர்க்கை அப்படி///
திருத்திட்டேன்... திருத்திட்டேன்...
பப்ளிக்கா இப்படி கும்முறியே, தனியா காதுல சொல்லிருக்கக்கூடாது....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
sandhya said...
" பெரும்பாலான குழைதகளை இனிமே முதியோர் இல்லங்களுக்கு அழைத்துபோய் தாத்தா பாட்டிகள் இப்படிதான் இருப்பார்கள் என்று காட்டும் நிலை சீக்கிரமே வந்துரும் போல."
ஜெ இப்பிடி தான் நடக்குமோன்னு கவைலையா இருக்கு ..நல்ல பதிவு ..நன்றி///
ஆமாங்க எனக்கும் அதுதான் கவலையா இருக்கு..., அங்கிருந்த சில குழந்தைகள பாக்க சங்கடமா இருந்தது.
புவனேஸ்வரி ராமநாதன் said...
நல்லா சொல்லியிருக்கீங்க.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
அருண் பிரசாத் said...
என்ன ஜெய் சிந்திக்க வைக்கிற மாதிரியெல்லாம் பதிவு போடுறீங்க.
உண்மையிலேயே ஒரு உருப்படியான பதிவு.
வாழ்த்துக்கள்.
தாத்தா பாட்டியின் பாசமே வேறு, என்ன செய்தாலும் அந்த அள்விற்கு ஈடாகாது///
ஆமா அருண், வெளிநாட்ல இருக்கிற நீரு ரொம்ப மிஸ் பண்றீங்கண்ணு நினைக்கிறேன், இங்கிருக்குரவங்க இதை தவிர்த்திருக்கலாம், இல்லையா?...
அப்புறம் கழுகுல, கலக்கல் பதிவு போட்ரிக்கீரு நல்லா இருக்கு.
தமிழரசி said...
VETKAPADA VENDIYA VETHANAIYANA UNMAI....///
ஆமாங்க. வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி மேடம்:)
TERROR-PANDIYAN(VAS) said...
யோ எதுக்குய இப்படி நல்ல பதிவ போட்டு சாவ அடிக்கற? மனுஷன நிம்மதியா கலாய்க்க விடுங்கய... நான் எல்லாம் எங்க பாட்டி மேல எவ்வளோ பாசம் தெரியுமா? அவங்க வெத்தல பாக்கு வாங்க சொல்லி காசு கொடுத்த அதுல கமர்கட் வாங்கி தின்னு இருக்கேன். அவங்க தெர்ம மீட்டர் எடுத்து விலக்குல காட்டி வெடிக்க வச்சி வேடிக்க பாத்து இருக்கேன்...////
வக்கனையா பின்னூட்டம் போடு, ஓட்டு போட்டியா வெலக்கெண்ணை...,
பாசத்துக்கு ஏங்குர புள்ளகலுக்கு பாட்டியில்லை..., உன்னை மாறி ஆளுக்கு பாருய்யா..., உன் பாட்டி பாவம்ய்யா.
ரசிகன் said...
//20 % குழைந்தைங்க தான் தாத்தாபாட்டிகளோட வந்திருந்தாங்க. //
இந்த அவசர உலகத்தில் நமக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மீட்க முடியாத இழப்பை உண்டாக்குகிறோம்.
தாத்தா பாட்டிகளின் அன்பு பாசம் பரிவு அனுபவம் என்பவை குழந்தைகளின் மனவளர்ச்சிக்கும்,ஒழுக்கத்திற்க்கும் அடிப்படை என்பது நவின மனோதத்துவத்தின் சாரம்.நல்ல பதிவு///
ஆமங்க, 60 வயச தாண்டினா அவங்கலும் குழந்தை மாதிரி ஆயிடுராங்க. அவங்களுகுள்ள புரிதல் அதிகமாயிருக்கு. அவங்க சொன்னா, குழந்தைங்க நல்லா கேக்குராங்க.
சசிகுமார் said...
பதிவு நல்லாயிருக்கு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்///
நன்றி சசி. புதுபதிவர்கள், இடுகை சம்பந்தமா என் கிட்ட கேக்கும் போது உங்க வலைபக்கத்துக்குதான் அனுப்பிகிட்டு இருக்கேன். சேவையை தொடருங்கள். நன்றி.
கக்கு - மாணிக்கம் said...
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையென்றால் எப்படி?
காதலிச்சி கண்ணாலம் பண்ணும்,புருஷன் பொண்டாட்டி வேலைக்கும் போகணும்,
ரெண்டுபேரும் நெறைய சம்பாதிக்கணும், வீடு ,கார் வாங்கணும்,வெளியூர் பயணம் போகணும்.
பணம் மட்டுமே வாழ்க்கை என்ற தத்துவத்தை உலகமயமாக்கல் மிக நன்றாகவே
இளையவர்களுக்கு உணர்த்திவிட்டதால் இதையெல்லாம் பார்த்தால் ...............??
அம்மா அப்பாவே தேவையில்லை என்றான பிறகு
தாத்தா...பாட்டி .......எங்கேயிருந்து வருவார்கள். ........யாருக்கையாவேண்டும்?///
உலகம் என்ன மயமானாலும், அடிப்படை உறவுகள் இல்லாம நாம என்னத்தை சாதிக்கப்போறோமோ.
கே.ஆர்.பி.செந்தில் said...
//தாத்தா பாட்டி என்றால் யார் என்றே தெரியவில்லை.....சில குழந்தைகளுக்கு//
என் குழந்தைகளும் அப்படிதான் வளர்கிறார்கள்... வருத்தமாக இருக்கிறது...///
உங்கள் வருத்தத்தின் ஆழம் எனக்கு புரிகிறது செந்தில்.
@ஜெய்
//வக்கனையா பின்னூட்டம் போடு, ஓட்டு போட்டியா வெலக்கெண்ணை..., //
ஹி ஹி கண்டுபிடிச்சிடிங்கள....... நீங்க புத்திசாலி தல.... இப்போ போட்டேன்.
@வசந்த்
//எழுத்துபிழைக்கு பாவம் நீர் என்ன செய்வீர் சேர்க்கை அப்படி //
சார் நான் ஜெய் கூட சேர்வதே இல்லை... நீங்க என்ன சொல்லல இல்லை?
@ஜெய்
//yes your view seen to be true in present time, but consequences not in favor of next generation. humanity will vanishes in coming days.//
பார்ரா நாலாம் வகுப்பு பெயில்...... என்னமா இங்கிலீஷ் பேசுது.... நீங்களும் சேருங்கள் விவேகானந்தா கோச்சிங் சென்டர்...
TERROR-PANDIYAN(VAS) said...
@வசந்த்
//எழுத்துபிழைக்கு பாவம் நீர் என்ன செய்வீர் சேர்க்கை அப்படி //
சார் நான் ஜெய் கூட சேர்வதே இல்லை... நீங்க என்ன சொல்லல இல்லை?///
உன்னை மாறி சின்னபசங்ககூட சாவகாசம் வச்சிகிட்ட பிறகுதான் மிஸ்டேக் நிறைய வருது..
அப்புறம் தமிழ்மனத்துல இன்னும் ஓட்டு போடலை பாண்டி...
நல்ல அருமையான கருத்துக்கள்.. இன்றைய காலத்துக்கு பொருத்தமாகவும் கூட..
Riyas said...
நல்ல அருமையான கருத்துக்கள்.. இன்றைய காலத்துக்கு பொருத்தமாகவும் கூட..///
வருகைக்கு நன்றி ரியாஸ். அட்ரஸ் தொலைஞ்சிருச்சா:)
மிகவும் நல்ல பதிவு. சில பாட்டிகள், சில தாத்தாக்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்வதை விரும்புவது இல்லை.
V.Radhakrishnan said...
மிகவும் நல்ல பதிவு. சில பாட்டிகள், சில தாத்தாக்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்வதை விரும்புவது இல்லை.//
அதுக்கான முக்கியமான, காரணங்கள் என்னனு சேத்து சொல்லிருங்க சார், எங்களுக்கு உதவியா இருக்கும்.
வருகைக்கி நன்றி சார்.:)
கவலைப்படக்கூடிய ஆனால் நிதர்சனமான (அட என்ன ஒரு தமிழ் வார்த்த ) உண்மை . (இப்படி அழகா சின்னதா எழுது , அப்பத்தான் படிக்கவும் நல்லா இருக்கு )
மங்குனி அமைசர் said...
கவலைப்படக்கூடிய ஆனால் நிதர்சனமான (அட என்ன ஒரு தமிழ் வார்த்த ) உண்மை . (இப்படி அழகா சின்னதா எழுது , அப்பத்தான் படிக்கவும் நல்லா இருக்கு )///
டேங்ஸு ம்,மங்குனி...
கண்டிப்பாக் உணரப்படவேண்டிய ஒரு விடயம். பதிவுக்கு நன்றி.
Grand Parents Day
"பாட்டன் பாட்டியர் தினம்"
நன்றி
அருண்
நிலாமதி said...
கண்டிப்பாக் உணரப்படவேண்டிய ஒரு விடயம். பதிவுக்கு நன்றி.///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.
Anonymous said...
Grand Parents Day
"பாட்டன் பாட்டியர் தினம்"
நன்றி
அருண்//
தகவலுக்கு நன்றி அருண்:)
இப்படி பல காரணங்களால இந்த தலைமுறை குழந்தைங்க, தாத்தா பட்டிகளோட பாசம் + வழிகாட்டுதல், கிடைக்காமலேயே வளர்றாங்க. 20 % குழைந்தைங்க தான் தாத்தாபாட்டிகளோட வந்திருந்தாங்க.
///
சரியாகச் சொன்னீர்கள்!
@@தேவன் மாயம் said...///
வருகைகும் கருத்துக்கும் நன்றி.
@@@வெறும்பய said...///
வருகைகும் கருத்துக்கும் நன்றி.
அருமையான பகிர்வு...அனைவரும் ஒன்று சேர்ந்து வாழும் கூட்டு குடும்பம் பல வகைகளில் இன்பம் தான் நன்றி
பாட்டி தாத்தாக்களுக்கு பேரப்பிள்ளைகளால் மகிழ்ச்சி . அவர்களுக்கு இவர்களால் . குட்டீஸ் நம்மை வைத்து காரியம் சாதிக்கிற சாமர்த்தியத்தை பார்க்கணுமே. இது தெரியாமல் என்ன ஓட்டமோ .பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
வெளி நாட்டுக்காரனும் பாராட்டுனது நம்ம குடும்ப அமைப்புதான்...அவன் குடுக்குற காசுல இப்ப அதுவும் அழிஞ்சுக்கிட்டுருக்கு..முதியோர்களை சட்டம் போட்டு காப்பாற்ற வேண்டிய நிலைமை.
அவசியமான பகிர்வு.
அருமையான..அழகான...அபூர்வமான..அதிசயமான..அன்பான.. ஆடம்பரமான..( ஹி..ஹி..சும்மா..”அ” தொடங்கும் வேற வார்த்தைகள் தெரியவில்லை..ஹி..ஹி)
பதிவு...
//Gayathri said...
அருமையான பகிர்வு...அனைவரும் ஒன்று சேர்ந்து வாழும் கூட்டு குடும்பம் பல வகைகளில் இன்பம் தான் நன்றி///
ஆமாம் சகோ..நன்றி.
Mahi_Granny said...
பாட்டி தாத்தாக்களுக்கு பேரப்பிள்ளைகளால் மகிழ்ச்சி . அவர்களுக்கு இவர்களால் . குட்டீஸ் நம்மை வைத்து காரியம் சாதிக்கிற சாமர்த்தியத்தை பார்க்கணுமே. இது தெரியாமல் என்ன ஓட்டமோ .பகிர்வுக்கு வாழ்த்துக்கள//
வாங்க மேடம், கருத்துக்கு நன்றி.:)
velji said...
வெளி நாட்டுக்காரனும் பாராட்டுனது நம்ம குடும்ப அமைப்புதான்...அவன் குடுக்குற காசுல இப்ப அதுவும் அழிஞ்சுக்கிட்டுருக்கு..முதியோர்களை சட்டம் போட்டு காப்பாற்ற வேண்டிய நிலைமை.
அவசியமான பகிர்வு.//
வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி வேல்ஸ்.:)
பட்டாபட்டி.. said...
அருமையான..அழகான...அபூர்வமான..அதிசயமான..அன்பான.. ஆடம்பரமான..( ஹி..ஹி..சும்மா..”அ” தொடங்கும் வேற வார்த்தைகள் தெரியவில்லை..ஹி..ஹி)
பதிவு...////
அட்டகாசமான, அதகலமான, அகிலம்வியக்கும்...எனக்கும் இதுக்கு மேல ‘அ’ தொடங்குற வார்த்தைக தெரியல பட்டா....ஹி ஹி ஹி,, சரி கடைசில என்னப்பா சொல்ல வந்தே அது சொல்லாம போய்டியேயேயே......
\\பெரும்பாலான குழந்தைகளை இனிமே முதியோர் இல்லங்களுக்கு அழைத்துபோய் தாத்தா பாட்டிகள் இப்படிதான் இருப்பார்கள் என்று காட்டும் நிலை சீக்கிரமே வந்துரும் போல.\\
வேதனையான விஷயம். நல்ல பகிர்வு.
அம்பிகா said...//
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி மேடம்.
அண்ணே இந்த விசயத்துல நான் ரொம்ப கொடுத்து வச்சவன். எங்க பாட்டியும் தாத்தாவும் கடைசி வரைக்கும் எங்கக்கூடத்தான் இருந்தாங்க,இருக்காங்க.
கண்டிப்பா தாத்தா பாட்டி அரவணைப்பு வேணும். அனுபவமும் அன்பும் ஒரு சேர கிடைக்குமிடம் இது.
ஜீவன்பென்னி said...//
உண்மையிலேயே குடுத்து வச்ச ஆளுதான்:)
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//
rompa bussyyaa?.. aalakkaanoom):
நல்ல பதிவு ஜெய்.
ஆனா நம்ம ஆளுகளுக்கு உரைக்காது.அவனுக வெஸ்டர்ன் culture அ காபி அடிக்குறதுல பிஸி.சீக்கிரமே எல்லோரையும் முதியோர் இல்லத்துக்கு பத்தி விட்டுடுவாணுக.ஏற்கனவே கூட்டுக் குடும்பம் இல்லாம தடுமாறிகிட்டு இருக்கோம்.
ஆனா நம்மள பார்த்து அவனுக மாறிக்கிட்டு வர்றதால,திரும்ப நம்ம ஆளுக டிட்டோ அடிப்பாணுக.அப்படி எதுனா நடந்தா தான் பழைய மாதிரி ஆகும்.இவனுகளா உணர வாய்ப்பு இல்ல.
ஜெய் நான் அதிகம் வருத்தம்கொள்ளும் விஷயமிது பெற்றவர்களை முதியோர் இல்லத்திலும் தனிமையிலும் தவிக்க விட்டுவிட்டு பிள்ளைகளையும் ஒழுங்காக வளர்க்கதெரியாது தவிக்கும் இன்றைய இளம்தலைமுறையினருக்கு ஏற்ற பதிவிது
வாழ்த்துக்களுடன்
சக்தி
முதலில் அந்த விழா நடத்திய பள்ளியை பாராட்டுகிறேன். நான் என் பாட்டியிடம் இருந்து படித்தது எதற்கும் பதட்டப்படாத குணம். எங்கள் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இரும்பு பெண்மணி அவர். அந்த இனிமையான அனுபவம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.
"இது யாரு தைச்ச சட்டை எங்க தாத்தா தைச்ச சட்டை"
இனி இதுக்காவது தாத்தா யூஸ் ஆவாறான்னு தெரியலை!
மிக நல்ல பதிவு, மெல்ல நீங்கள் பிரபல பதிவர்கள் கட்சியில் சேருகிறீர்கள். வாழ்த்துக்கள்.
பதிவப் போட்டு பத்து நாள் கழிச்சு கம்மென்ட் போடும் பதிவு பாசிஸ பருப்பு வாழ்க!
ILLUMINATI said...
நல்ல பதிவு ஜெய்.
ஆனா நம்ம ஆளுகளுக்கு உரைக்காது.அவனுக வெஸ்டர்ன் culture அ காபி அடிக்குறதுல பிஸி.சீக்கிரமே எல்லோரையும் முதியோர் இல்லத்துக்கு பத்தி விட்டுடுவாணுக.ஏற்கனவே கூட்டுக் குடும்பம் இல்லாம தடுமாறிகிட்டு இருக்கோம்.
ஆனா நம்மள பார்த்து அவனுக மாறிக்கிட்டு வர்றதால,திரும்ப நம்ம ஆளுக டிட்டோ அடிப்பாணுக.அப்படி எதுனா நடந்தா தான் பழைய மாதிரி ஆகும்.இவனுகளா உணர வாய்ப்பு இல்ல.//
இலுமி, நீரு சொல்றது மாதிரித்தான் நடக்கும்போல..
sakthi said...
ஜெய் நான் அதிகம் வருத்தம்கொள்ளும் விஷயமிது பெற்றவர்களை முதியோர் இல்லத்திலும் தனிமையிலும் தவிக்க விட்டுவிட்டு பிள்ளைகளையும் ஒழுங்காக வளர்க்கதெரியாது தவிக்கும் இன்றைய இளம்தலைமுறையினருக்கு ஏற்ற பதிவிது
வாழ்த்துக்களுடன்
சக்தி///
ஆமா மேடம். வந்து கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி.
ஜியார் said...
முதலில் அந்த விழா நடத்திய பள்ளியை பாராட்டுகிறேன். நான் என் பாட்டியிடம் இருந்து படித்தது எதற்கும் பதட்டப்படாத குணம். எங்கள் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இரும்பு பெண்மணி அவர். அந்த இனிமையான அனுபவம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.///
சார் நீங்க எழுத ஆரம்பிங்க சார்..., நெறய எழுதுரதுக்கு உங்ககிட்ட இருக்குனு தோனுது..:)
Phantom Mohan said...
"இது யாரு தைச்ச சட்டை எங்க தாத்தா தைச்ச சட்டை"
இனி இதுக்காவது தாத்தா யூஸ் ஆவாறான்னு தெரியலை!
மிக நல்ல பதிவு, மெல்ல நீங்கள் பிரபல பதிவர்கள் கட்சியில் சேருகிறீர்கள். வாழ்த்துக்கள்.///
பருப்பு நீரு ஊருக்கு போன கேப்ல நான் “சூப்பர்ஸ்டார் பதிவர்” ஆயிட்டேன் ..:)
///பதிவப் போட்டு பத்து நாள் கழிச்சு கம்மென்ட் போடும் பதிவு பாசிஸ பருப்பு வாழ்க!///
நல்லா இரு மக்கா...
ஜெய்....
நிஜமாவே பயன் தரக்கூடிய ஒரு உணர்வு பூர்வமான பதிவு...எனக்கு இன்னும் கொஞ்சம் நீங்க எழுதியிருக்கலாம்னு ஆசை தோன்றிய பதிவு.....ஆனால் நச்னு சொல்லியிருக்கீங்க....
பெற்றோர்களை கூட வச்சுக்கிற சுகம் யாருக்கும் தெரியல.....! வாழ்த்துக்கள் பாஸ்!
ஜெய்....
நிஜமாவே பயன் தரக்கூடிய ஒரு உணர்வு பூர்வமான பதிவு...எனக்கு இன்னும் கொஞ்சம் நீங்க எழுதியிருக்கலாம்னு ஆசை தோன்றிய பதிவு.....ஆனால் நச்னு சொல்லியிருக்கீங்க....
பெற்றோர்களை கூட வச்சுக்கிற சுகம் யாருக்கும் தெரியல.....! வாழ்த்துக்கள் பாஸ்!
ஜெய்....
நிஜமாவே பயன் தரக்கூடிய ஒரு உணர்வு பூர்வமான பதிவு...எனக்கு இன்னும் கொஞ்சம் நீங்க எழுதியிருக்கலாம்னு ஆசை தோன்றிய பதிவு.....ஆனால் நச்னு சொல்லியிருக்கீங்க....
பெற்றோர்களை கூட வச்சுக்கிற சுகம் யாருக்கும் தெரியல.....! வாழ்த்துக்கள் பாஸ்!
ஜெய்....
நிஜமாவே பயன் தரக்கூடிய ஒரு உணர்வு பூர்வமான பதிவு...எனக்கு இன்னும் கொஞ்சம் நீங்க எழுதியிருக்கலாம்னு ஆசை தோன்றிய பதிவு.....ஆனால் நச்னு சொல்லியிருக்கீங்க....
பெற்றோர்களை கூட வச்சுக்கிற சுகம் யாருக்கும் தெரியல.....! வாழ்த்துக்கள் பாஸ்!
Post a Comment