July 16, 2010

நான் நாலாப்பு பெயிலு...!!!







      நம் எல்லோருக்கும் , நம்மோட ஆரம்பகாலத்தை நினைவு கூறும்போது பலவிசயங்கள் பளிச்சென்று நினைவில் இருக்கும், அதுமாதிரி பல விசயங்கள் ஒரு மாதிரி அலுங்களான நினைவுகளாக இருக்கும், நம்மை பற்றி நாமே எழுதும்போது எங்கிருந்து எதை ஆரம்பிப்பது என்ற குழப்பமும் வந்துவிடும், எனக்கும் அதே நிலைதான், இருந்தாலும், நான் முதன்முதலில் பள்ளியில் ஒன்னாப்பு சேர்ந்தவிதம் நினைவில் நன்றாக இருப்பதால் அதில் ஆரம்பித்து, சுருக்கமாக சொல்லிவிட்டு, நேராக நான் நாலாப்பு பெயிலானதின் காரணத்தை எழுதலாம் என்ற முடிவுடன் இந்த பதிவு .

ஒன்னாப்பு to மூனாப்பு : 
     என்னோட சின்ன வயசு காலத்தில், எங்க ஊருல பெரும்பாலும் ஒன்னாப்பு வாத்தியார்தான், வீடு வீடா வந்து 5 வயசுல பசங்க இருக்காங்களானு செக் பண்ணிட்டு, இருந்தா, வீட்ல சொல்லிட்டு ஸ்கூலுக்கு தூக்கிட்டு போயி அவங்களே அட்மிஸன் போட்ருவாங்க.. வீட்லயும், சரி ஸ்கூலுக்கு போய்ட்டா, இவனுகள தனியா மேய்க்கிரதுக்கு, நாம வேர ஏதாவது உருப்படியா வீட்டு வேலை இல்லைனா தோட்டவேலை செய்யலாம்னு விட்ருவாங்க ( இப்பவும் அப்படித்த்தான் இருக்கானு கேட்ராதீக, இப்பல்லாம் 3 வயசுலேயே பக்கத்து டவுன்ல இருக்கிற இங்லீஸ் மீடியம் ஸ்கூல்ல யாரையாவது பிடிச்சி, நெறய பணம் கட்டி LKG-ல சேத்து விட்றாங்க, பொருளாதாரத்துல ரொம்பவும் கஷ்டப்படுரவங்ளோட குழந்தகதான் எங்கூரு கவர்மெண்ட் ஸ்கூலுல படிக்கிராங்க..., ஒரேவயசுல இருக்குரவங்க வேர வேர ஸ்கூலுல படிக்கிறதனால , அவங்களுகுள்ள , ஒரு அன்யோன்யம் இல்லாம போச்சு...,டவுன்ல இருக்கிர பசங்க மாதிரி) , எங்களுக்கும் ஒரே வயசுல, ஊர்ல இருக்குர அத்தனை பசங்களையும் தூக்கிட்டு வந்து ஒரு இடத்துல போட்டதுல சந்தோசமா இருப்போம், அதுல ரெண்டு முனுதா , அம்மா அம்மானு அழுது சீன் போட்டுட்டிருக்கும்.

       டெய்லி ஸ்கூலுக்கு ஒத்த கைல சிலேட்டும், இன்னொரு கையால, டவுசர பிடிச்சிகிட்டு (இல்லைன அவுந்து கீழே விழுந்துடும்.), மதியம் போடுர சாப்பாட்டை  (அப்ப சத்துணவு திட்டம் வரல, ஒரு நாள் அரிசி கஞ்சி, மறுநாள் கோதும உப்புமானு மாத்தி மாத்தி போடுவாங்க, ஒன்னாபு சேந்து 5 வருசம் கழிச்சிதான் எம்ஜிஆர் சத்துணவு வந்தது) சாப்டுட்டு ஜாலியாத்தான் போய்கிட்டு இருந்தது வாழ்க்கை, பேருதான் ஸ்கூலு, அ ஆ-னு 12 எழுத்த வாத்தியார் சொல்ல சொல்ல ஒருவாட்டி சொல்லிட்டா போதும் அதுகப்புரம் நம்மள தொந்தரவு பண்ண மாட்டாங்க, நம்ம இஷ்டத்துக்கு கூட்டாளிகளோட விளையாடலாம், திரும்பி வீடு போகும்போது, ”ஸ்கூலுக்கு போனியா, சாக்கடைல பொறண்டுட்டு வந்தியானு” கேக்குற லெவலுக்கு அழுக்கோடதான் போய் சேருவோம். இதுவே டெய்லி மேட்டரா ஒரு வித்தியாசமும் இல்லாம ஒன்னாபுலேர்ந்து மூனாப்பு போய் அது முடுஞ்சி முழுப்பரிச்சை லீவு விட்டுட்டாங்க. என்ன, அ ஆ-னா 12 எழுத்தோட, இப்ப க் ங்-னு 18 எழுத்தயும் சேத்து மனப்பாடம் பண்ணியாச்சு, அத சொல்ல ஆரம்பிச்சா கடைசி எழுத்துவரை சொல்லிருவோம், இடையில நிறுத்தினாதான், கண்டினியூட்டி போயி திரும்ப மொதல்லேர்ந்துதான் சொல்ல வேண்டி வரும்.

       மூனாப்பு லீவு விட்டுட்டாங்களா, இங்கிருந்துதான் என் வாழ்க்கையோட பொற்காலம் ஆரம்பிச்சது,, ஏன்னா, அப்பதான் என் வீட்ல் இருந்த ரெண்டு எருமை மாட்டோட எக்ஸ்ட்ராவா ஒரு ஏழெட்டு எருமை மாட்ட கொண்டுவந்து எங்கப்பா கட்டினாரு, எனக்குனா ஒரே சந்தோசம், புதுசா வந்த மாடெல்லாம் சுமா துருதுருனு இருந்திச்சி, ஏற்கனவே வீட்ல இருந்த மாடுக சண்டி மாடுக, ஒரு சுறுசுறுப்பே இருக்காது, என் கூட்டாளிககிட்டயெல்லாம், பாத்தில்ல இப்ப என் வீட்ல 10 எருமைமாடு இருக்கு , உங்க வீட்ல கம்மியாத்தானே இருக்குனு, ஒரே பெருமையா இருந்துச்சி. அதுல 2 மாடு சினை மாடு, கன்னுபோட்டா அதுகூட ஓடிபிடிச்சி வெளையாடலாம், மொத 4 நாள் குடுக்கிற திரட்டுப்பாலுவேற சூப்பரா இருக்கும்.




     லீவு முழுக்க எல்லாப்பசங்களும் அவங்கவங்க மாடுகளை பத்திகிட்டு தோட்ட வெளிகள்ல மேய்க்கபோனோம். இருக்கருதுலேயே சுறுசுறுப்பா இருக்கிர இளவயசு மாட்டுமேலே ஏறி உக்காந்துகிட்டு, சும்மா குதிரைல போர எஃபெக்ட்லதான் போவோம். மேய்க்கிற எடத்துக்கு போனவுடனே மாடுக அதுபாட்டுக்கு மேய ஆரம்பிக்கும், இப்போ மொத்த மாடுகளையும், சூப்பர்வைஸ் பன்றதுக்கு 2 பேரை அனுப்பிட்டு மத்தவங்களுக்குள்ள விளயாட்டு ஆரம்பமாயிரும், (என்னென்ன விளையாட்டு, அதனோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் சொல்றதுன்னா ஒவ்வொரு விளையாட்டபத்தியும் தனித்தனி பதிவாத்தான் போடனும்..) , ஒரு ஆட்டம் முடிஞ்சதுன்னா, அடுத்த 2 பேர் மாடுகள சூப்பர்வைஸ் பன்ன போய்ட்டு, ஏற்கனவே போனவங்கள அனுப்பிருவாங்க. இங்க ஒன்னாப்புலேர்ந்தே ஸ்கூலுக்கு போகாம மாடு மேய்ச்சிட்டு இருக்குற ஒரு கூட்டம் இருக்கும், அவங்கதான், விளயாட்டுளையும், மாடு மேய்க்கிற நெளிவு சுழிவுலயும், எங்கள விட கெட்டிகாரங்களா இருப்பாங்க.

       இப்படியே வாழ்க்கை நல்லா ஜாலியா போய்ட்டிருந்தது, பொசுக்குனு ஒரு நாள் எங்கப்பா , நாளைக்கு ஸ்கூல் தொறக்குறாங்கலாம், நம்ம ஒன்னாப்பு வாத்தியார் மந்தையில பாக்கும்போது சொன்னாருன்னு குண்டைத்தூக்கி போட்டாரு, ஏன்னா இப்போ மாடு மேய்க்கிற இடத்துல நல்ல ஃபிரண்ட்ஸிப்பு செட்டாயிருச்சி, இப்ப நான் ஸ்கூலுக்கு போனா, படிக்காம மாடு மேய்ச்சிட்டிருக்குற 3 ஃபிரண்ட்ஸ் கூட வெளையாட முடியாது, மாட்டுமேல சவாரி செய்யமுடியாது, இங்க கிடைக்கிற ஜாலியோட கம்பேர்பன்னுனா, ஸ்கூல்ல கிடைக்கிற ஜாலி சும்மா.

அவனுகளும், வாரம் பத்துநாள் ஸ்கூலுக்குபோகாம அடம்புடிச்சி எப்படியாவது எங்ககூட மாடு மேய்க்க வந்துருடானு கெஞ்சுனாங்க. நானும், எங்கப்பகிட்ட மெதுவா, “அப்பா நான் ஸ்கூலுக்கு போகலை , நம்ம மாடுகளை மேய்க்கிறேன்பானு சொன்னேன், அதுக்கு அவரு, “ அதெல்லாம தேவை இல்லை, ஏற்கனவே தட்டை படப்பு இருக்கு, அதோட ரெண்டு லோடு வைக்கபோர் வாங்கி படப்பு போட்டாச்சு, நீ காலையிலயும் , சயந்திரமும் வந்து அத மாடுகளுக்கு சரியா போட்டா போதும்னு சொல்லிட்டாரு. ஒரே அழுவாச்சியா வந்துருச்சி.


    அப்புறம் மாடுமேய்க்கிற நண்பர்களோட டிஸ்கஸ் பண்ணி ஒரு முடிவெடுத்து, தினமும், வீட்ல எல்லோரும் அசந்த நேரமா, தொழுவத்துல கட்டி வச்சிருந்த மாடுகள, அருவமில்லாம மேய்க்கிறதுக்கு ஒட்டிட்டு போயிருவேன். ஒருவாரம், தலைகீழ நின்னு பாத்தாங்க, இப்பயும் அந்த ஒன்னாப்பு வத்தியார் வீட்டுக்கு வந்து கெஞ்சி பாத்தாரு.., மிரட்டி பாத்தாரு.., நான் ஒன்னும் அசருர மாதிரி தெரியல, கடைசில, எங்கப்பா, சரி விடு வாத்தி, கல்லு முள்ளு, வெயிலுனு கொஞ்ச நாள் சுத்துனா தானா ஸ்கூல் வந்து சேருவானு, அவர சமாதனப்படுத்தி அனுபிட்டாரு.

     அப்புறம் என்ன, வாழ்க்கையே ரொம்ப சந்தோசமா போச்சி, காலலையில , கம்மங்கூழ் தூக்குசட்டியோட (அரிசி சாப்பாடெல்லம் செட் ஆகாது) மாட்டுமேல ஏறி உக்காந்தா, நேரா மேய்க்கிர எடத்துல மாடுகள பத்திவிட்டுட்டு, ஒரே விளையாட்டு, கும்மாளந்தான். இடையில, தோட்டங்கள்ல போட்டிருக்கிற காய்கரிகள களவாண்டு தின்னு வயித்துக்கும் அப்பப்ப ஈஞ்சிக்குவோம். வெயில் ஏறிடுச்சின்னா மாடுக தானா, மரத்து நிழலுக்கு வந்து படுத்துகிட்டு அசை போட ஆரம்பிச்சுரும். நாங்களும் கொண்டுவந்த ஒரு தூக்கு கம்மங்கூழ குடிச்சிட்டு ( சென்னைவந்து, உடல் உழைப்பு இல்லாம போயி, அப்ப சாப்பிடுற அளவுள ¼ த் கன்சம்ப்ஸன் தான் இப்போ, ஆரோக்யமும் பாடாயிருச்சி, 3½ வயசான எம்பொண்ணு, அப்பா, பிச்சா(pizza) வங்கிதாப்பா, சாக்லேட்டும் ஐஸ்க்ரீமு வங்கித்தாப்பானு மெரட்டுது..., இவங்க படிக்கிறதுக்காகவாவது நம்ம பழைய வாழ்க்கய, நெறய இங்க எழுதிவச்சிரனும்..) மரத்தடியில படுத்தா, உசுரு இருக்கும்போதே சொர்க்கத்துல படுத்தா மாறி ஒரு ஃபீலிங் இருக்கும்.

      வெயில் தாழ மறுபடியும் மேய்ச்சல், வெளையாட்டு, தோட்டங்கள்ல களவானி திங்கிறது (புடிச்சாலும் எல்லாம், தெரிஞ்சவங்க தோட்டம்தான், கொறச்சி திருடுங்ககடானு ஒரு கோரிக்கையோட விட்டுருவாங்க... மொறச்சிகிட்டா அவங்க இல்லாத நேரமா பாத்து வெள்ளாமையில மேயவிட்டுருவோம்ல.. அந்த பயம்தான்) சாயந்திரம் ஆனா மருபடியும் மாடு மேல உக்காந்து ஒரே வெரட்டு வீடு வந்துருவோம், இதுல ஸ்கூல் விட்டதும் ஒரு கும்பல் எங்கல தேடி மாடு மேய்க்கிற இடத்துக்கு வந்துரும், அவங்கள ஆட்டையில சேக்கனும்னா, வரும்போது எங்களுக்கு பெட்டிகடைல ஆரஞ்சு மிட்டாய் வாங்கிட்டு வரணும். எங்க எருமை மாடுக மேல சவாரி செய்யனும்னா எக்ஸ்ட்ரா, ஒரு ஆரஞ்சு மிட்டாயி கொடுக்கனும்.


       இப்படியே ஒருவருசம், ஒரு வாரம் மாதிரி விருட்டுனு போயிருச்சி. இந்த வருசத்துலதான் நான் நீச்சல் கத்துகிட்டேன், அது கூட எங்க வீட்டு எருமைமாடுதான் கத்துக் கொடுத்திச்சி, ஆமாங்க, நீச்சல் தெரியாத போதெ அது மேல உங்காந்துகிட்டு, கம்மா குளத்துக்குள்ள எறக்கிடுவோம். அது பாட்டுக்கு எங்கள சுமந்துகிட்டே தலைய மட்டும் வெளியில தெரியுற மாதிரி நீட்டிகிட்டு நீந்தும், நாங்கலும் அதோட முதுகுல படுத்துக்கிட்டே கைய துடுப்பு மாதிரி தண்ணிய தள்ளிகிட்டே பலகுவோம், நீச்சல் தெரிஞ்சவங்க, நாம கீழே விருந்துட்டா இழுத்துட்டு வந்து கரையில போட்டுருவாங்க, இப்போ நெனைசசாத்தான் , எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கோம்னு தோனுது, ஆனா அன்னிக்கு பயமே இல்லாமதான் திரிஞ்சோம்.

இப்படி சொல்லிகிட்டே போனா பதிவு மொக்கயாயிரும் ( ங்கொய்யாலே இப்பமட்டும் என்னவானு சொல்றது கேக்குது..)


      அந்த வருசம் முழுப்பரிச்சை லீவுவிட்டு பழையபடி மாடு மேய்க்கிற இடத்துல நாள் முழுக்க கூட்டம்தான், ஒரே கும்மாளம்தான். அந்த ஒன்னறை மாசம் லீவும் ஒருநாள் மாதி போய்டுச்சி. மருபடியும் ஸ்கூல் தொறந்துட்டாங்க, இந்த சயத்துலதான் மாடுமேய்க்கிற நாலு கூட்டாளிகள்ல ரெண்டு பேரோட குடும்பம் வேர ஊருக்கு தோட்டம் வாங்கி வெவசாயம் பண்ண போறென்னு அவனுகளையும்ம் எங்கிட்ட இருந்து பிரிச்சி தூக்கிட்டு போயிட்டாங்க, இன்னொருத்தன, அவங்க தோட்டத்துல நெறய வேலையிருக்குனு அவனையும் அவங்க வீட்ல கூட்டிட்டு போய்ட்டாங்க, மாடு மேய்க்கிற இடத்துல வெளையாட்டுத்துணையில்லாம, மாடு மேய்க்கிறதுல இருந்த இண்ட்ரஸ்ட்டு போயி வெறுப்பாயிருச்சி. சரினு எங்கப்பாகிட்ட நானும் நம்ம தோட்டத்துக்கு கூட வந்து வேலை செய்ரேன்னு சொன்னா, அவரு கன்னாபின்னானு திட்டிட்டு, தோட்டத்து ஆனியெல்லாம் , நாங்க பிடிங்குறோம், முடியலைனா ஆள் வச்சி பிடுங்கிறோம், நீ போயி ஸ்கூலுல இருக்கிற ஆணிய பிடுங்கினா போதுனு சொல்லிட்டாரு. (பாவம் , ஒன்னாப்பு வாத்தியார், நான் ஸ்கூல் போகாத ஒருவருசமும் எங்கப்பாவ, பாக்கும்போதெல்லாம் என்ன, நீரு பய மாடு மேய்க்கிரேனு சொன்னா, நாலு தட்டு தட்டி ஸ்கூலுக்கு அனுப்பாம, விட்டுட்டீரேனு அட்வைஸ் பன்னி கொலையா கொண்டடுருக்காரு.. அந்த கோவத்த தல நம்ம மேல காட்டிருச்சி...).

நாலாப்பு பெயிலு :

  சரி ஸ்கூலுல இருக்கிர பயபுள்ளக கூடவாவது இனிமே வெளையாடுவோம்னு போனா, எங்கூட படிச்ச பரதேசிக எல்லாம் உக்காத்திருந்த, அஞ்சாப்புல போயி உக்காந்தா, இங்கெல்லாம் உக்காரகூடாது, நீ நாலாப்பு பெயிலு அதனால, நாலாப்ப மறுக்கா படிக்கனும்னு குண்டத்தூக்கி போட்டாங்க, நானும் வீட்டுக்கு வந்து, அப்பாவ காணாம, தோடத்துக்கு ஓடிபோயி அப்பாவ கூட்டியாந்து பெரிய வாத்திய்யாருட்ட (அதாம்பா ஹெட்டு மாஸ்டரு..) பேசுன்னரு, கஷ்டப்பட்டு ஸ்கூலுக்கு அனுப்பிருகேன், பேசாம பயல அஞ்சாப்புல உக்கார வைய்ங்கனு சொன்னாரு, ஒன்னாப்பு வாத்தியாரும் ரெக்கமெண்டேஷன், ஆனா நாலாப்பு வாத்தி ஒத்தக்காலுல நின்னுருச்சி, பய அப்பப்ப ஸ்கூல் பக்கம் எட்டிப்பாத்திருந்தாலும் பாஸாக்கலாம், அத விடுங்க மொத்த வருசத்துல ஒரே ஒரு நாள் ஸ்கூலுக்கு வந்திருந்தாலாவது பாஸாக்கலாம், இப்ப நான் பெயிலாக்குனது பெயிலாகுனதுதான்னு சொல்லிட்டாரு (அந்த வாத்திக்கு அவங்க தோட்டத்து வெள்ளாமைல நாங்க கை வச்ச கடுப்பு, நேரம் பாத்து வில்லத்தனத்தை காமிச்சிருச்சி...).

      நாலாப்புவரை கூட உக்காந்திருந்த பயபுள்ளகலெல்லாம் அஞ்சாப்புல இருக்க, நான் என்னோட ஜூனியர் கூட்டாளிகளோட நாலாப்ப மறுக்கா (ங்கொய்யாலே அதென்ன மறுக்கா, இப்போதான மொததடவ நாலாப்பு பாடத்த படிக்கிப்போறே..) படிக்க ஆரம்பிச்சேன், ஆனா ஒன்னு நான் ரோசக்காரான், என்ன பெயிலாக்குன வாத்தி கிளாஸ்ல உக்காரமட்டேனு அடம்புடிச்சி, பி செக்சன் வாத்தியாரு கிளாஸ்லதான் உக்காந்து படிச்சேன்.

                                   பதிவின் நீளம் கருதி முற்றும்.

(அப்ப எங்கூருல எருமை மாடு 300 சொச்சம், பசு மாடு 50து சொச்சம், வெள்ளாடு செம்மறி ஆடுனு 1000 த்து சொச்சம், வண்டி இழுக்க, உழவுக்குனு 150 ஜோடி காளைமாடுகனு இருந்துச்சி, வெவசாயத்துக்கு எல்லாம், எருதான் போடுவாங்க. சப்பிடுர காய்கறியிலேர்ந்து எல்லாமும் ஆரோக்யமா இருந்துச்சி,

       ஆனா இன்னிக்கு எருமை மாடுக 3 இருக்கு, பசுமாடுக ஊர்ல இருக்கிர பால் பண்ணை புண்ணிியத்துல அதே 50 சொச்சம் இருக்கு, ஆடுக மேய்ச்சல் நெலமெல்லாம், நம்ம கவருமெண்டு பட்டா போட்டு அமுக்கிட்டதனால, மேய்க்க இடமில்லாம 30க்கும் கீழேதான் இருக்கு, இந்த காளை மாடுகளே கண்ணுல பாக்க முடியல, எல்லம் நம்ம சயண்டிஸ்டுக கண்டுபிடிச்ச ட்ராக்டருங்கதான்.  வெவசாயத்துக்கு எருவே கிடைக்காம, அடியுரம், இடையுரம், மேலுரம்னு போட்டு, பத்தாததுக்கு மாசத்துல நாலு தடவை மருந்தடிச்சி, வெளையுர காய்கறியிலேர்ந்து, எல்லா பயிரும் வெஷமாகி, அத சாப்டிட்டு நம்ம இம்யூன் பவரெல்லம் காலியாகி, வைத்தியதுக்கே பெருஞ்செலவு செஞ்சிகிட்டு திரியுரோம். 25 வருசத்துல இவ்வளவு மாற்றம், இப்படியே நம்ம வாழ்க்கை முறை ஃபாஸ்டா மாறிகிட்டுபோனா, டார்வின் சொன்ன பரிணாமம், நாலாயிரம் வருசத்துல ஆகவேண்டியது நானூறு வருசத்துல நடந்தாலும் ஆச்சிரியப்படுறதுக்கில்ல.

டிஸ்கி 1: நானும் நெறய விசயங்கள சொல்லாம விட்டுட்டு சுருக்கமா தான் எழுதுரேன், ஆனாலும் பதிவு நீளமாத்தான் வந்துருது. உங்க தலையெழுத்து படிச்சி தொலைங்க






டிஸ்கி 2 :  பதிவுலக நண்பர்களுக்கு மற்றும் வலையுலக வாசகர்களுக்குவந்து படிச்சி கருத்து சொல்லிட்டுநாலு நல்ல வார்த்ததான் வேறென்ன) அப்படியேஇந்த ஓட்டுனு சொல்றாங்களே அத போட்டுட்டு போயிருங்க.

144 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

motha vettu

Jey said...

me the 1st.

Jey said...

அடப்பாவி மக்க, என் வடையக்குட வந்து பிடுங்கிட்டு பொய்ட்டியே....அவ்வ்வ்வ்

அருண் பிரசாத் said...

யப்பா! Dashboard ல பதிவு போட்டது அப்டேட் ஆகலை. செக் பண்ணுங்க

Jey said...

// அருண் பிரசாத் said...
யப்பா! Dashboard ல பதிவு போட்டது அப்டேட் ஆகலை. செக் பண்ணுங்க//

எப்பவும் போலத்தான் போட்டிருக்கேன், எதுக்கு வரலைனு தெரியலையே????!! யப்பா யாராவது செய்வினை, சூனியம்னு வச்சிருந்தா , தயவுசெஞ்சி எடுத்திருங்கப்பா, ஒரு பிரியாணி வாங்கித்தரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஏன்னா, அப்பதான் என் வீட்ல் இருந்த ரெண்டு எருமை மாட்டோட எக்ஸ்ட்ராவா ஒரு ஏழெட்டு எருமை மாட்ட கொண்டுவந்து எங்கப்பா கட்டினாரு,//

அப்ப jey-யோட சேத்து எட்டு அப்டின்னு யாராவது கமென்ட் போட்டீங்க பிச்சுபுடுவேன்...

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ஏன்னா, அப்பதான் என் வீட்ல் இருந்த ரெண்டு எருமை மாட்டோட எக்ஸ்ட்ராவா ஒரு ஏழெட்டு எருமை மாட்ட கொண்டுவந்து எங்கப்பா கட்டினாரு,//

அப்ப jey-யோட சேத்து எட்டு அப்டின்னு யாராவது கமென்ட் போட்டீங்க பிச்சுபுடுவேன்...////

ஆமா நம்ம பயபுள்ளகளுக்கு ஒன்னும் தெரியாது, நீ எடுத்துகுடுக்குரையாக்கும், எம்பா இந்த கொலைவெறி.

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பதிவு.........வாழ்த்துகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//புடிச்சாலும் எல்லாம், தெரிஞ்சவங்க தோட்டம்தான், கொறச்சி திருடுங்ககடானு ஒரு கோரிக்கையோட விட்டுருவாங்க... மொறச்சிகிட்டா அவங்க இல்லாத நேரமா பாத்து வெள்ளாமையில மேயவிட்டுருவோம்ல.. அந்த பயம்தான்//

போலீஸ் ஏரியா-வுக்குள்ளையே திருடுனத தைரியமா ஒத்துக்கிற உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

Jey said...

rk guru said...
நல்ல பதிவு.........வாழ்த்துகள்////

வருகைக்கும், கருத்துக்கும், நன்றி தலைவா.:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆரோக்யமும் பாடாயிருச்சி, 3½ வயசான எம்பொண்ணு, அப்பா, பிச்சா(pizza) வங்கிதாப்பா, சாக்லேட்டும் ஐஸ்க்ரீமு வங்கித்தாப்பானு மெரட்டுது..., இவங்க படிக்கிறதுக்காகவாவது நம்ம பழைய வாழ்க்கய, நெறய இங்க எழுதிவச்சிரனும்..//

கண்டிப்பா தல. நீங்க எவ்ளோ அசிங்கபட்டு இருக்கேங்கனு உங்க சந்ததிகள் தெரிஞ்சிகிடட்டும்.

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கண்டிப்பா தல. நீங்க எவ்ளோ அசிங்கபட்டு இருக்கேங்கனு உங்க சந்ததிகள் தெரிஞ்சிகிடட்டும்.///

எங்க வாழ்க்கைதான்யா சூப்பர். இப்போ வசதி இருக்கு அப்ப இருந்த எஞாய்மெண்ட் எஙயா இருக்கு.:)

கும்மாச்சி said...

அருமையான பதிவு, நடையின் விருவிருப்பில் பதிவின் நீளம் குறையில்லை.

soundr said...

அட, இது இடுகையில்லைங்க; ஆவணம்.
ஏதேதோ நியாபகத்த எல்லாம் கிளறி விட்டுட்டீங்க....‌



http://vaarththai.wordpress.com

Jey said...

கும்மாச்சி said...
அருமையான பதிவு, நடையின் விருவிருப்பில் பதிவின் நீளம் குறையில்லை//

நன்றி

Jey said...

soundr said...
அட, இது இடுகையில்லைங்க; ஆவணம்.
ஏதேதோ நியாபகத்த எல்லாம் கிளறி விட்டுட்டீங்க....‌//

கட்சியெல்லாஒம் ஆரம்பிச்சி கலக்குரீங்க போல:)
வருகைக்கு நன்றி.

மங்குனி அமைச்சர் said...

ஏம்பா உனக்கு மனசாட்ச்சியே இல்லையா ? பழகிட்டோம் அப்படிங்கிறதுக்காக இப்படியா கொடும படுத்துவ? சும்மா பாக்கவே பயம்மா இருக்கே? இனி இத படிக்க வேற செய்யனும் ., எப்படியும் ஒரு வாரம் ஆகு , இரு படிச்சிட்டு வர்றேன் , அதுக்குள்ளே வேற பதிவு போட்றாத

ப்ரியமுடன் வசந்த் said...

யோவ் எருமைமாடு உனக்கு நீச்சல் கத்து குடுத்ததுக்கு ஃபீஸ் குடுத்தியா அதுக்கு ?ஏமாத்திருப்பியே நீ?

ப்ரியமுடன் வசந்த் said...

பாக ராசியுண்டாவு கண்ணா..

கீப் இட் அப்...

மங்குனி அமைச்சர் said...

படிச்சாச்சு ,படிச்சாச்சு , அமா உங்களுக்கு எந்த ஊர் ???

மங்குனி அமைச்சர் said...

ப்ரியமுடன் வசந்த் said...

யோவ் எருமைமாடு உனக்கு நீச்சல் கத்து குடுத்ததுக்கு ஃபீஸ் குடுத்தியா அதுக்கு ?ஏமாத்திருப்பியே நீ///


அப்படி கேளுன்ங்க சார் , பீஸ் குடுத்தியா ???

Jey said...

ப்ரியமுடன் வசந்த் said...
யோவ் எருமைமாடு உனக்கு நீச்சல் கத்து குடுத்ததுக்கு ஃபீஸ் குடுத்தியா அதுக்கு ?ஏமாத்திருப்பியே நீ?//

அறை கிலோ புண்ணாக்கு அதிகமா கொடுத்தாச்சு. நான் எதுவும் ஓசியில வங்கமாட்டேன்...( ஆமா என்னை எருமை மாடுனு திட்டுரமாதிரியும் இருக்கே!!!)

Jey said...

மங்குனி அமைசர் said...
ப்ரியமுடன் வசந்த் said...

யோவ் எருமைமாடு உனக்கு நீச்சல் கத்து குடுத்ததுக்கு ஃபீஸ் குடுத்தியா அதுக்கு ?ஏமாத்திருப்பியே நீ///


அப்படி கேளுன்ங்க சார் , பீஸ் குடுத்தியா ???//

மங்கு, துணைக்கு ஆள் கிடைச்சா, சவுண்டு சாஸ்தியாகுது பாத்தியா, இன்னேரதுக்கு, நம்ம குமபலும் வந்திருந்தா , ஒரு வழி பன்ணிருவே போல...

Jey said...

மங்குனி அமைசர் said...
ஏம்பா உனக்கு மனசாட்ச்சியே இல்லையா ? பழகிட்டோம் அப்படிங்கிறதுக்காக இப்படியா கொடும படுத்துவ? சும்மா பாக்கவே பயம்மா இருக்கே? இனி இத படிக்க வேற செய்யனும் ., எப்படியும் ஒரு வாரம் ஆகு , இரு படிச்சிட்டு வர்றேன் , அதுக்குள்ளே வேற பதிவு போட்றாத//

நானு உங்கள மாதிரி நச்சுனு ரெண்டு பாரவுல ஒரு பதிவ போடனும்னு பாக்குறேன், முடியலையே மங்குனி..
எனக்கு டியூசன் எடுக்குரயாப்பா?.

மங்குனி அமைச்சர் said...

ஆமா , எங்கப்பா ஒரு பயபுள்ளையையும் காணோம்

மங்குனி அமைச்சர் said...

Jey said...


நானு உங்கள மாதிரி நச்சுனு ரெண்டு பாரவுல ஒரு பதிவ போடனும்னு பாக்குறேன், முடியலையே மங்குனி..
எனக்கு டியூசன் எடுக்குரயாப்பா?.///


நீச்சல் கத்துக்க ஒரு எருமை , பதிவு கத்துக்க ஒரு எருமையா ??
பாத்தியா , சான்ஸ் கிடைச்சுடன் நக்கல் பன்ற

Jey said...

மங்குனி அமைசர் said...
நீச்சல் கத்துக்க ஒரு எருமை , பதிவு கத்துக்க ஒரு எருமையா ??
பாத்தியா , சான்ஸ் கிடைச்சுடன் நக்கல் பன்ற//

யதார்த்தமா சொன்னதுல, இவ்வளவு உள்குத்து இருக்கா மங்குனி, தெரியாம போச்சே!!!

Jey said...
This comment has been removed by the author.
Jey said...

மங்குனி அமைசர் said...
ஆமா , எங்கப்பா ஒரு பயபுள்ளையையும் காணோம்///

week end, மட்டயாயிட்டாங்களா, தெரியல.:)

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி அமைசர் said...
நீச்சல் கத்துக்க ஒரு எருமை , பதிவு கத்துக்க ஒரு எருமையா ??
பாத்தியா , சான்ஸ் கிடைச்சுடன் நக்கல் பன்ற//

யதார்த்தமா சொன்னதுல, இவ்வளவு உள்குத்து இருக்கா மங்குனி, தெரியாம போச்சே!!! ///


சரி , சரி அந்த எருமை மாதிரி புண்ணாக்கு எல்லாம் இந்த எருமைக்கு குடுத்திடாத

மங்குனி அமைச்சர் said...

Jey said...

பட்டய்யரிப்பாங்க:) ///

யோவ் இப்படின்னா எனையா ???
மட்டையாகி இருப்பாங்கவா?

Jey said...

மங்குனி அமைசர் said...
Jey said...

பட்டய்யரிப்பாங்க:) ///

யோவ் இப்படின்னா எனையா ???
மட்டையாகி இருப்பாங்கவா//

ஆமா, டைபிங் மிஸ்டேக் ஆயிருச்சி, நீ சரியாதான், புரிஞ்சிருகே, மங்குனியா கொக்கா....!

Anonymous said...

ஜெய் ...ரொம்ப அருமையானா நினைவுகள் ...எனக்கு உங்க கிட்டே ரொம்ப ரொம்ப பொறாமையா இருக்கு ..இதுவரைக்கும் இந்த மாதிரி வாழக்கையே பத்தி சினிமாவில் தான் பார்த்திரிக்கேன் ..இன்னு அது நீங்க என் கண் முன்னாடி கொண்டுவந்து காமிசிங்க ரொம்ப நன்றி ...இன்னும் இது போல் நிறையை நினைவுகள் எழுத அன்புடன் வேண்டுகிறேன்...



"எனது புது பதிவு, நேரம் இருந்தால் படிக்கவும்" இப்பிடி எழுத வேண்டா நண்பா,நான் ப்ளாக் க்கு வருவதே ....டெய்லி உங்க எல்லோர் பதிவு பார்க்க தான்

ஜெய்லானி said...

ஆமா ஜெ...அதென்ன கணக்குல அப்படியே நம்ம விசிய காந்து கணக்கா சொலறே ..ஏதும் உடம்பு சரியிலையா...

Anonymous said...

நாலாம் கிளாஸ் பெயிலு ஆனா ஏன்னா இன்னிக்கு engineer ஆச்சே நீங்க எல்லாம் அந்த எருமையின் ஆசி தானே ???( சும்மா சொன்னே பீல் பண்ணாதிங்க )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//யோவ் எருமைமாடு உனக்கு நீச்சல் கத்து குடுத்ததுக்கு ஃபீஸ் குடுத்தியா அதுக்கு ?ஏமாத்திருப்பியே நீ?//

நம்ம jey நண்பர்களுக்கெல்லாம் பீஸ் தரமாட்டாரு...

//நீச்சல் கத்துக்க ஒரு எருமை , பதிவு கத்துக்க ஒரு எருமையா ??
பாத்தியா , சான்ஸ் கிடைச்சுடன் நக்கல் பன்ற//

மங்கு உங்க நேர்மையும் எனக்கு பிடிச்சிருக்கு...

111 said...

ஜெய்லானி said...
ஆமா ஜெ...அதென்ன கணக்குல அப்படியே நம்ம விசிய காந்து கணக்கா சொலறே ..ஏதும் உடம்பு சரியிலையா...///

எந்த கணக்க பத்தியா சொல்றா??

111 said...

sandhya said...
நாலாம் கிளாஸ் பெயிலு ஆனா ஏன்னா இன்னிக்கு engineer ஆச்சே நீங்க எல்லாம் அந்த எருமையின் ஆசி தானே ???( சும்மா சொன்னே பீல் பண்ணாதிங்க )///


ஹஹஹா, எருமை மாடு மேய்த்த என் அண்ணன், ஐஐடி பிஎச்டி, அதெல்லாம், மலரும் நினைவுகள்.

111 said...

sandhya said...
ஜெய் ...ரொம்ப அருமையானா நினைவுகள் ...எனக்கு உங்க கிட்டே ரொம்ப ரொம்ப பொறாமையா இருக்கு ..இதுவரைக்கும் இந்த மாதிரி வாழக்கையே பத்தி சினிமாவில் தான் பார்த்திரிக்கேன் ..இன்னு அது நீங்க என் கண் முன்னாடி கொண்டுவந்து காமிசிங்க ரொம்ப நன்றி ...இன்னும் இது போல் நிறையை நினைவுகள் எழுத அன்புடன் வேண்டுகிறேன்...///


எருமை மாடு மேய்ச்சதுகெல்லாமா, மேடம், பொறாமைபடுரது..!!!!:)
வருகைக்கு நன்றி,
+1 சேர, சென்னைக்கு முதல் தடவை வந்தது பத்தி எழுதுரேன், சிரிப்பீங்க.:)

111 said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//
அன்பரே, ரமெஷ், நலம், உங்கள் நலமறிய ஆவல்.

கருடன் said...

Excuse மீ... மே ஐ கம் இன்..... அட அட அட என்னமா எழுதி இருக்கீங்க... உங்கள மாதிரி நாலாப்பு பெயிலு அவுற அளவு மாடு மேய்க்க சான்ஸ் கிடைகடியும்... சனி, ஞாயுறு மற்றும் பள்ளி விடுமுறை நாட்கள் மேய்ச்சி இருக்கேன். பல்லு கூச கூச அருநெல்லிக்காய், மதியம் வாய் எரியற மாதிரி மீன்கொழம்பு சாபிட்டு வேப்ப மரத்து நிழல படுத்த.... நீங்க சொன்ன மாதிரி "உசுரு இருக்கும்போதே சொர்க்கத்துல படுத்தா மாறி ஒரு ஃபீலிங் இருக்கும்"

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
Excuse மீ... மே ஐ கம் இன்..... ///

கூச்சப்படாம வரலாம், அதுவும், பாவம், இன்னிக்கு vks காரங்ககிட்ட சண்டை போடு களைச்சி போயி வேற வந்துருகீக. இங்க கொஞ்ச ரெஸ்ட் எடுத்துட்டு தெம்பா போயி, VKS-கூட சண்டை போடுங்க.

இங்க சும்மா அடிச்சு ஆடுங்க.

ILLUMINATI said...

//அறை கிலோ புண்ணாக்கு அதிகமா கொடுத்தாச்சு. //

ஆமா,உமக்கு தனியா சாப்புடுற பழக்கம் கிடையாதுன்னு சொன்னாங்க.அப்புடியா?
இல்லையா,எல்லோரும் சொன்னாங்க.அதான் கேட்டேன்.

ILLUMINATI said...

//நான் எதுவும் ஓசியில வங்கமாட்டேன்...//

ஓசி ல வாங்கக் கூடாது னு உம்ம பொருள அதுக்கு கொடுத்தியாக்கும்.;)

Jey said...

ILLUMINATI said...
//அறை கிலோ புண்ணாக்கு அதிகமா கொடுத்தாச்சு. //

ஆமா,உமக்கு தனியா சாப்புடுற பழக்கம் கிடையாதுன்னு சொன்னாங்க.அப்புடியா?
இல்லையா,எல்லோரும் சொன்னாங்க.அதான் கேட்டேன்//

பப்ளிக்...பப்ளிக்...,
காபி,டீ, இல்லைனா கூலா ஏதாவது, அட இருப்பா சாப்டுட்டு போ ஒய்...

கருடன் said...

// நானும், எங்கப்பகிட்ட மெதுவா, “அப்பா நான் ஸ்கூலுக்கு போகலை , நம்ம மாடுகளை மேய்க்கிறேன்பானு சொன்னேன், அதுக்கு அவரு,//

உனக்கு மாடு மேய்க்க வரல... நீ படிக்கதான் லாயக்கு சொல்லி அனுப்பிட்டார?

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
உனக்கு மாடு மேய்க்க வரல... நீ படிக்கதான் லாயக்கு சொல்லி அனுப்பிட்டார?///

ஹஹஹா, அந்த ஒனாப்பு வத்தியார், எங்கப்பாவ ரொம்ப டார்ச்சர் பன்னிட்டரு போல, அதன், நீ ஸ்கூலுகே போடானு சொல்லிட்டார்.
மத்தபடி, நான் எருமை மாடு மேய்க்கிறதுல கேட்டிக்காரன்பா....:)

ILLUMINATI said...

//காபி,டீ, இல்லைனா கூலா ஏதாவது, அட இருப்பா சாப்டுட்டு போ ஒய்...//

காபி,டீ தான? :)

ILLUMINATI said...

//உனக்கு மாடு மேய்க்க வரல... நீ படிக்கதான் லாயக்கு சொல்லி அனுப்பிட்டார?//

:)

Jey said...

ILLUMINATI said...
//காபி,டீ, இல்லைனா கூலா ஏதாவது, அட இருப்பா சாப்டுட்டு போ ஒய்...//

காபி,டீ தான? :)//

அடட, இப்பதான் தீர்ந்து போச்சு, பருத்துகொட்டை, புண்ணாக்கு, இந்த தவிடு கலக்குன தண்ணீரு, இந்த மாதிரி ஏதும் சாப்டுவீகளா சார்...

கருடன் said...

//அடட, இப்பதான் தீர்ந்து போச்சு, பருத்துகொட்டை, புண்ணாக்கு, இந்த தவிடு கலக்குன தண்ணீரு, இந்த மாதிரி ஏதும் சாப்டுவீகளா சார்... //

Jey சார் விட்டுக்கு போறவங்க அலெர்ட இருங்கப்பா... ஏதோ புதுசா ஒரு நியூ வாட்டர் கொடுக்கறாரு சொல்லி கண்ணா மூடிட்டு கப்புன்னு அடிசிடதிங்க.... அப்புறம் பின்னாடி வலு மொளச்ச சங்கம் பொறுப்பு இல்ல...

ILLUMINATI said...

//இப்பதான் தீர்ந்து போச்சு, பருத்துகொட்டை, புண்ணாக்கு, இந்த தவிடு கலக்குன தண்ணீரு, இந்த மாதிரி ஏதும் சாப்டுவீகளா சார்...//

யோவ்,நீரு பசில இருக்கீர் போல.வேணாம்.நீரே சாப்பிடும்...

Jey said...

ILLUMINATI said...
//இப்பதான் தீர்ந்து போச்சு, பருத்துகொட்டை, புண்ணாக்கு, இந்த தவிடு கலக்குன தண்ணீரு, இந்த மாதிரி ஏதும் சாப்டுவீகளா சார்...//

யோவ்,நீரு பசில இருக்கீர் போல.வேணாம்.நீரே சாப்பிடும்...///

நாங்க, விருந்தோம்பலுக்கு பேர் போனவங்க, விருந்தளிக்குனு எடுத்துவச்சத, தொடக்கூட மாட்டொம், அதனால , நீரு கூச்சப்படாம, சாப்பிடும், அப்புறம் மங்குனி வந்துட்ட, மிச்சம் இருக்காது...

Shri ப்ரியை said...

///அ ஆ-னா 12 எழுத்தோட, இப்ப க் ங்-னு 18 எழுத்தயும் சேத்து மனப்பாடம் பண்ணியாச்சு,////

தமிழிழ இவ்வ்வ்வ்வ்ளோ எழுத்து இருக்கா...!!!!!!
பெரிய ஆள்ப்பா நீங்க.....

///ஏன்னா, அப்பதான் என் வீட்ல் இருந்த ரெண்டு எருமை மாட்டோட எக்ஸ்ட்ராவா ஒரு ஏழெட்டு எருமை மாட்ட கொண்டுவந்து எங்கப்பா கட்டினாரு,///

நிஜமாவே மாட்டப்பத்திதான் சொன்னிங்களா... உங்கள பத்தி சொன்னிங்களோன்னு நினைச்சன்....
சாரிங்க.....:P

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
//அடட, இப்பதான் தீர்ந்து போச்சு, பருத்துகொட்டை, புண்ணாக்கு, இந்த தவிடு கலக்குன தண்ணீரு, இந்த மாதிரி ஏதும் சாப்டுவீகளா சார்... //

Jey சார் விட்டுக்கு போறவங்க அலெர்ட இருங்கப்பா... ஏதோ புதுசா ஒரு நியூ வாட்டர் கொடுக்கறாரு சொல்லி கண்ணா மூடிட்டு கப்புன்னு அடிசிடதிங்க.... அப்புறம் பின்னாடி வலு மொளச்ச சங்கம் பொறுப்பு இல்ல...///

சாருக்கு 2 பிரியாணி பார்சல்....( பீதிய கிளப்பாத ஒய்...)

Jey said...

Shri ப்ரியை said...
((( ///அ ஆ-னா 12 எழுத்தோட, இப்ப க் ங்-னு 18 எழுத்தயும் சேத்து மனப்பாடம் பண்ணியாச்சு,////

தமிழிழ இவ்வ்வ்வ்வ்ளோ எழுத்து இருக்கா...!!!!!!
பெரிய ஆள்ப்பா நீங்க..... )))

உண்மையிலேயே, நான் ரொம்ப படிச்சிருக்கேனா?, அப்ப டியுசன் எடுத்து பொழைச்சிகலாம்னு சொல்லுங்க...

((( ///ஏன்னா, அப்பதான் என் வீட்ல் இருந்த ரெண்டு எருமை மாட்டோட எக்ஸ்ட்ராவா ஒரு ஏழெட்டு எருமை மாட்ட கொண்டுவந்து எங்கப்பா கட்டினாரு,///

நிஜமாவே மாட்டப்பத்திதான் சொன்னிங்களா... உங்கள பத்தி சொன்னிங்களோன்னு நினைச்சன்....
சாரிங்க.....:P )))


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
சாரியெல்லம் வேண்டாம் சும்மா அடிச்சி ஆடுங்க.:)
உங்களின் முதல் வருகைக்கு நன்றி

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

//அடட, இப்பதான் தீர்ந்து போச்சு, பருத்துகொட்டை, புண்ணாக்கு, இந்த தவிடு கலக்குன தண்ணீரு, இந்த மாதிரி ஏதும் சாப்டுவீகளா சார்... //

Jey சார் விட்டுக்கு போறவங்க அலெர்ட இருங்கப்பா... ஏதோ புதுசா ஒரு நியூ வாட்டர் கொடுக்கறாரு சொல்லி கண்ணா மூடிட்டு கப்புன்னு அடிசிடதிங்க.... அப்புறம் பின்னாடி வலு மொளச்ச சங்கம் பொறுப்பு இல்ல...////


வாங்க டெர்ரர் பாண்டி , பேரே டெர்ரரா இருக்கு , புதுசா வீட்டுக்கு வர்ரவுங்களுக்கு நாங்க ஸ்பெசல் விருந்து வைப்போம் கவலைபடாம வாங்க

கருடன் said...

@மங்குனி அமைச்சர்
//வாங்க டெர்ரர் பாண்டி , பேரே டெர்ரரா இருக்கு , புதுசா வீட்டுக்கு வர்ரவுங்களுக்கு நாங்க ஸ்பெசல் விருந்து வைப்போம் கவலைபடாம வாங்க //

அமைச்சரே அமைதி அமைதி.... இங்க நன் ஆடு இல்ல. உங்க கூட சேர்ந்து வெட்ட வந்தவன். அவசரப்பட்டு வெட்டி விடாதிர்கள்.... வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே..... (பேரு மட்டும்தன்பா டெரர்...)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னாப்பா..என்ன விட்டுட்டு எல்லாரும்..பிரியாணி சாப்பிடறமாறி இருக்கு?..

கருடன் said...

//அ ஆ-னு 12 எழுத்த வாத்தியார் சொல்ல சொல்ல ஒருவாட்டி சொல்லிட்டா போதும் //

தலை (அ , ஆ) இரண்டு எழுத்து தன் இருக்கு.. நீங்க 12 சொல்றிங்க....?
(ஹி ஹி ஹி மொக்கை கொஞ்சம் ஓவரா போச்சோ??)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நானும் நெறய விசயங்கள சொல்லாம விட்டுட்டு சுருக்கமா தான் எழுதுரேன், ஆனாலும் பதிவு நீளமாத்தான் வந்துருது. உங்க தலையெழுத்து படிச்சி தொலைங்க.
//

அதுக்குத்தான் பில்கேட்..டெல்கேட்டை..இல்லப்பா..”டெலிட் பட்டனை ” கொடுத்திருக்கார்..( கொடுத்து சிவந்த கரம்(?)...)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நீங்க 12 சொல்றிங்க....?
//

you mean ஒரு டஜன்?..ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பயலுக வருவதற்க்குள், ஓடிப்போயிடனும்..ஹி..ஹி

கருடன் said...

//அதுல 2 மாடு சினை மாடு, கன்னுபோட்டா அதுகூட ஓடிபிடிச்சி வெளையாடலாம்,//

பருங்கபா ஏதோ figure கூட ஓடிபிடிச்சி விள்ளடற மாதிரி சந்தோசம்...

//அத விடுங்க மொத்த வருசத்துல ஒரே ஒரு நாள் ஸ்கூலுக்கு வந்திருந்தாலாவது பாஸாக்கலாம்//

உங்க வாத்தியார் நேர்மை எனக்கு பிடிச்சி இருக்கு....

Jey said...

பட்டாபட்டி.. said...

//என்னாப்பா..என்ன விட்டுட்டு எல்லாரும்..பிரியாணி சாப்பிடறமாறி இருக்கு?..//

ஆளக்கானோம், ஆனியா, மட்டயா..???.

//அதுக்குத்தான் பில்கேட்..டெல்கேட்டை..இல்லப்பா..”டெலிட் பட்டனை ” கொடுத்திருக்கார்..( கொடுத்து சிவந்த கரம்(?)...)//

அத அலுத்துன மொத்தமா கலியாயிராது...?

//you mean ஒரு டஜன்?..ஹி..ஹி//

நான் நாலாப்பு பெயிலுனு, கத்தி கத்தி சொலிட்டேன், அப்பயும், ஏதொ இங்லீசுல திட்டுரானுகளே..

//பயலுக வருவதற்க்குள், ஓடிப்போயிடனும்..ஹி..ஹி//

பயம்ம்..., நம்பிட்டோம் பட்டா.

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
//அதுல 2 மாடு சினை மாடு, கன்னுபோட்டா அதுகூட ஓடிபிடிச்சி வெளையாடலாம்,//

பருங்கபா ஏதோ figure கூட ஓடிபிடிச்சி விள்ளடற மாதிரி சந்தோசம்...|||

ஹி ஹி ஹி

//அத விடுங்க மொத்த வருசத்துல ஒரே ஒரு நாள் ஸ்கூலுக்கு வந்திருந்தாலாவது பாஸாக்கலாம்//

உங்க வாத்தியார் நேர்மை எனக்கு பிடிச்சி இருக்கு....//|||

நான் ஸ்கூலுக்கு வராதத ரொம்பவும் நோட் பன்னிருகாரு , பாண்டி, டைப் பத்து கவுத்துட்டாரு.

ராசராசசோழன் said...

சும்மா சொல்ல கூடாது...பட்டைய...கிளப்புறீங்க...

Jey said...

ராசராசசோழன் said...
சும்மா சொல்ல கூடாது...பட்டைய...கிளப்புறீங்க...//

வாங்க, அடிக்கடி வாங்க.
பின்னூட்டத்திற்கு நன்றி

அருண் பிரசாத் said...

//வாங்க, அடிக்கடி வாங்க.
பின்னூட்டத்திற்கு நன்றி//

எத்தனை அடிக்கு வரனும், எத்தன அடினாலும் நாங்க தர ரெடி, வாங்க ஜெய் ரெடியா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாத்தையும் படிச்சிட்டு பொறுமையா பின்னூட்டம் போடுறேன் ஜெய்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

check your mail.

Jey said...

அருண் பிரசாத் said...
//வாங்க, அடிக்கடி வாங்க.
பின்னூட்டத்திற்கு நன்றி//

எத்தனை அடிக்கு வரனும், எத்தன அடினாலும் நாங்க தர ரெடி, வாங்க ஜெய் ரெடியா///

விகேஎஸ் குருப்பு வழ்க.( அப்பா சமாளிச்சிட்டோம், நம்ம பசங்க வேற கானோம். இப்ப வம்பிழுத்தா சம்மளிக்க முடியாது, சிப்பு வேற கூட சேந்துகிட்டு வருவா..)

Jey said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
எல்லாத்தையும் படிச்சிட்டு பொறுமையா பின்னூட்டம் போடுறேன் ஜெய்!//

வா மக்கா, நீ இல்லாம போரடிக்குது.

பொன் மாலை பொழுது said...

சரிதான். கும்மி கூட்டமே இங்கதான் இருக்கா?/
ஆஹா........... நம்ம பன்னிகுட்டி வந்தாச்சா?

Jey said...

கக்கு - மாணிக்கம் said...
சரிதான். கும்மி கூட்டமே இங்கதான் இருக்கா?/
ஆஹா........... நம்ம பன்னிகுட்டி வந்தாச்சா?//

கும்மி அடிப்பவர்களுக்கு விருது வழங்கிய தானைத்தலைவர் மான்புமிகு திரு கக்கு மானிக்கம் அவர்களை வா அன்னாத்தே என வரவேற்கிறேன்.

( எல்லாரும் நம்ம மாதிரிதான் போல எழுதுனத பத்தி ஏதும் சொல்லாமையே கமென்ஸ் போடுராங்கயா...)

Jey said...

பன்னிகுட்டி , ஊர்ல எல்லோரையும் கேட்டதா சொல்லுயா..., நாளைக்கே ஏதாவது அரசியல் கட்சியில சேந்து உங்க ஊர்ல எம் எல் ஏ வுக்கு நின்னா உதவும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சும்மா சொல்ல கூடாது...பட்டைய...கிளப்புறீங்க...//
@ ராசராசசோழன் வாங்க பதிவு சீரியஸா இருக்குறதால காமெடி பின்னூட்டமா?

//விகேஎஸ் குருப்பு வழ்க.( அப்பா சமாளிச்சிட்டோம், நம்ம பசங்க வேற கானோம். இப்ப வம்பிழுத்தா சம்மளிக்க முடியாது, சிப்பு வேற கூட சேந்துகிட்டு வருவா..)//

அந்த பயம் இருக்கணும்..

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//சும்மா சொல்ல கூடாது...பட்டைய...கிளப்புறீங்க...//
@ ராசராசசோழன் வாங்க பதிவு சீரியஸா இருக்குறதால காமெடி பின்னூட்டமா?

//விகேஎஸ் குருப்பு வழ்க.( அப்பா சமாளிச்சிட்டோம், நம்ம பசங்க வேற கானோம். இப்ப வம்பிழுத்தா சம்மளிக்க முடியாது, சிப்பு வேற கூட சேந்துகிட்டு வருவா..)//

அந்த பயம் இருக்கணும்..//

முத்து, பன்னி, பருப்பு, முக்கியம படாபட்டி, எங்கிருந்தாலும் வரவும்.

சிப்பு இப்ப வாயா பாக்கலாம், வேனும்னா, உங்க VKS குருப்பயும் கூட்டிட்டு வாய்யா, இன்னிக்கு மூனுல ரெண்டு பாத்துரலாம்.

கருடன் said...

// விகேஎஸ் குருப்பு வழ்க.( அப்பா சமாளிச்சிட்டோம், நம்ம பசங்க வேற கானோம். இப்ப வம்பிழுத்தா சம்மளிக்க முடியாது, சிப்பு வேற கூட சேந்துகிட்டு வருவா..) //

ஜெய் அப்போ நீங்க எதிர் கட்சிய?? கிர்ர்ரர்ர்ர்ர்

கருடன் said...

//சிப்பு இப்ப வாயா பாக்கலாம், வேனும்னா, உங்க VKS குருப்பயும் கூட்டிட்டு வாய்யா, இன்னிக்கு மூனுல ரெண்டு பாத்துரலாம். //

VKS குரூப் எல்லாம் வேண்டாம் பாஸ்... மத்தவங்க எல்லாம் நல்லவாக...இந்த இரண்டு புள்ளைங்க (ரமேஷ், அருண்) தன் எல்லாரயும் ஊடு பூந்து கலாய்க்கறது...

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...

ஜெய் அப்போ நீங்க எதிர் கட்சிய?? கிர்ர்ரர்ர்ர்ர்//

ஒத்தையா விட்டுட்டு போய்ட்டீங்க, அவய்ங்க குருப்ப, திரியுரானுக, என்ன பண்ண சொல்றே???. நான் பிரக்கஎடுக்குள்ள எழுதினதயும் படி. எங்குருப்பு ஆளுக லீவுல போயிருக்கனுக, வந்ததும் இவங்கள , பிரியாணியாக்களாம், லெக் பீஸ் வேணும்னா, சீக்கிரமா வா...

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...

//VKS குரூப் எல்லாம் வேண்டாம் பாஸ்... மத்தவங்க எல்லாம் நல்லவாக...இந்த இரண்டு புள்ளைங்க (ரமேஷ், அருண்) தன் எல்லாரயும் ஊடு பூந்து கலாய்க்கறது...///

இவங்க எல்லாம் பூட்டுன வீட்டுக்கு முன்னாடி சவுண்டு விடுறா பார்ட்டிங்க பாண்டி, பயப்படதே. பயந்தா ஓடவிட்டு, அடிச்சி .. அடிச்சி விளையாடுவானுக..

கருடன் said...

//இவங்க எல்லாம் பூட்டுன வீட்டுக்கு முன்னாடி சவுண்டு விடுறா பார்ட்டிங்க பாண்டி, பயப்படதே. பயந்தா ஓடவிட்டு, அடிச்சி .. அடிச்சி விளையாடுவானுக..//

இந்த மாதிரி timingல ரய்மிங்க reply போடவே எல்லாம் தனிய phd படிச்சி இருபிங்க போல... கமெண்ட் போடா நமக்கு இன்னும் பயிற்சி தேவையோ??

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...

இந்த மாதிரி timingல ரய்மிங்க reply போடவே எல்லாம் தனிய phd படிச்சி இருபிங்க போல... கமெண்ட் போடா நமக்கு இன்னும் பயிற்சி தேவையோ??//

எல்லாம் இவய்ங்க கிட்ட கத்துகிட்டதுதான். அதுசரி.. டைமிங், ரைமிங்-னு எதுக மோனைனு கலக்குர , உனக்கு எதுக்குயா ட்ரைனிங், சும்மா பூந்து விளையாடு..

Shri ப்ரியை said...

///உண்மையிலேயே, நான் ரொம்ப படிச்சிருக்கேனா?, அப்ப டியுசன் எடுத்து பொழைச்சிகலாம்னு சொல்லுங்க... ///

டியுசன் வைக்கிறத்தில ஒன்னுமில்லீங்க... ஆனா மங்குனியை தவிர வேற யாரும் வரமாட்டாங்க........

கருடன் said...

மணி 1.30 எல்லா பயபுள்ளையும் தூங்கி இருக்கும். அடிச்சி அட சரியான நேரம்...

//வீடு வீடா வந்து 5 வயசுல பசங்க இருக்காங்களானு செக் பண்ணிட்டு, இருந்தா, வீட்ல சொல்லிட்டு ஸ்கூலுக்கு தூக்கிட்டு போயி அவங்களே அட்மிஸன் போட்ருவாங்க//

அப்போ விட்டுல 5 வயசு பசங்க இல்லன ஸ்கூல் இருந்த இரண்டு பிள்ளைய இலவசமா தருவாங்கள?

கருடன் said...

//இடையில, தோட்டங்கள்ல போட்டிருக்கிற காய்கரிகள களவாண்டு தின்னு வயித்துக்கும் அப்பப்ப ஈஞ்சிக்குவோம்.//

அப்பவே ஆரம்பிச்சாச்சா இந்த வேலைய??

கருடன் said...

//சரி ஸ்கூலுல இருக்கிர பயபுள்ளக கூடவாவது இனிமே வெளையாடுவோம்னு போனா//

நான்கூட படிக்கணும் ஸ்கூல் போய் இருப்பிறு நம்பிபிபிபிபி ஏமாந்துட்டேன்.

கருடன் said...

//என்ன பெயிலாக்குன வாத்தி கிளாஸ்ல உக்காரமட்டேனு அடம்புடிச்சி, பி செக்சன் வாத்தியாரு கிளாஸ்லதான் உக்காந்து படிச்சேன். //

அப்போ பி செச்ஷனும் கெட்டு போச்சி சொல்லுங்க.

கருடன் said...

கமெண்ட் 91

கருடன் said...

இது 92 வது கமெண்ட்

கருடன் said...

இப்போ 93 அடுத்து 94 வது கமெண்ட் வரும்...

கருடன் said...

94 வது வந்தாச்சி....

கருடன் said...

95

கருடன் said...

96

கருடன் said...

97

கருடன் said...

98

கருடன் said...

99

கருடன் said...

ஹி ஹி ஹி 100 கமெண்ட் வாங்கிய ஜெய் வாழ்க....

Gayathri said...

எத்தனை அழகா இருக்கு உங்க மலரும் நினைவுகள்..படிக்க படிக்க பாடியே மனசுக்குள்ளே காட்சிகள் ஒடிச்சு...
எனக்கு பெரிசா தெரியல உங்க பதிவின் நீளம்...இன்னும் கதை கேட்க ஆவலாத்தான் இருக்கு..நாலப்பு வோட நிறுத்த வேண்டாம்..நீங்க சொல்வது சரிதான் இப்போ உலகம் வாழ்வதற்கான வளங்களை இழந்துக் கொண்டே வருகிறது.பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை ல தான் அதனால எவ்ளோ மிஸ் பன்னிருக்கேன்னு இப்போ புரியுது..எப்போதாவது அப்பாவின் சொந்த ஊருக்கு போவதுண்டு..
தயவு செய்து தொடருங்கள்..
காத்துக்கொண்டு இருக்கிறேன்...

அருமையான பதிவு சகோதிரரே..

Jey said...

Shri ப்ரியை said...
///உண்மையிலேயே, நான் ரொம்ப படிச்சிருக்கேனா?, அப்ப டியுசன் எடுத்து பொழைச்சிகலாம்னு சொல்லுங்க... ///

டியுசன் வைக்கிறத்தில ஒன்னுமில்லீங்க... ஆனா மங்குனியை தவிர வேற யாரும் வரமாட்டாங்க........|||

மங்கு.. நோட் பண்னுயா.. நோட் பண்ணுயா.., உனக்கு டியுசன் எடுக்குற அளவுக்கு, நான் படிச்சிருக்கேனு, அம்மனி சர்டிஃபிகேட் குடுத்திருக்கு...

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
மணி 1.30 எல்லா பயபுள்ளையும் தூங்கி இருக்கும். அடிச்சி அட சரியான நேரம்...||
அடப்பாவி, நீயும் .. பூட்டுன வீட்டுக்கு முன்னாடி சலம்புர பயபுள்ளயா, சொல்லவே இல்லை..


//அப்போ விட்டுல 5 வயசு பசங்க இல்லன ஸ்கூல் இருந்த இரண்டு பிள்ளைய இலவசமா தருவாங்கள?//

ஒன்னாப்பு வாத்திகிட்ட சிக்குனே, நீ சட்னிதான், அந்த ஆளே, பசங்க யாரும் சிக்குராங்களானு வெறியோட சுத்திட்டிருக்காரு...

|||இடையில, தோட்டங்கள்ல போட்டிருக்கிற காய்கரிகள களவாண்டு தின்னு வயித்துக்கும் அப்பப்ப ஈஞ்சிக்குவோம்.//

அப்பவே ஆரம்பிச்சாச்சா இந்த வேலைய?? |||

நாம யாரு சின்ன வயசுகேயே வெவரக்காரய்ங்க தெரிஞ்சுக்க...

//நான்கூட படிக்கணும் ஸ்கூல் போய் இருப்பிறு நம்பிபிபிபிபி ஏமாந்துட்டேன்.//

அப்ப நீயெல்லாம் படிக்கத்தான் ஸ்கூலுக்கு போனியா????, தள்ளிபோயா, உங்கூட சேர்ந்த என்னயும் கெடுத்துருவே..

//அப்போ பி செச்ஷனும் கெட்டு போச்சி சொல்லுங்க.//

பி-செக்‌ஷனுக்கு, பொற்காலம் ஸ்டார்ட் அச்சினு மத்தி சொல்லு பாண்டி...

//TERROR-PANDIYAN(VAS) said...
ஹி ஹி ஹி 100 கமெண்ட் வாங்கிய ஜெய் வாழ்க....//

முத்து, எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..., முத்து உனக்கு போட்டியா ட்ரைனிங் போரதுக்கு இங்க ஒருத்தர் கெளப்பிடாரு.. சீகிரம் ஓடி வா..

///ஹி ஹி ஹி 100 கமெண்ட் வாங்கிய ஜெய் வாழ்க....///

வழக்கமா எங்க வீட்ல, 100 போட்டவங்களுக்குதான் விருந்து வைப்போம்... ஹி ஹி.

Jey said...

//Gayathri said...
எத்தனை அழகா இருக்கு உங்க மலரும் நினைவுகள்..படிக்க படிக்க பாடியே மனசுக்குள்ளே காட்சிகள் ஒடிச்சு...
எனக்கு பெரிசா தெரியல உங்க பதிவின் நீளம்...இன்னும் கதை கேட்க ஆவலாத்தான் இருக்கு..நாலப்பு வோட நிறுத்த வேண்டாம்..நீங்க சொல்வது சரிதான் இப்போ உலகம் வாழ்வதற்கான வளங்களை இழந்துக் கொண்டே வருகிறது.பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை ல தான் அதனால எவ்ளோ மிஸ் பன்னிருக்கேன்னு இப்போ புரியுது..எப்போதாவது அப்பாவின் சொந்த ஊருக்கு போவதுண்டு..
தயவு செய்து தொடருங்கள்..
காத்துக்கொண்டு இருக்கிறேன்...

அருமையான பதிவு சகோதிரரே..///

உற்சாகப் படுத்துவதற்கு, ரொம்ப நன்றி சகோதரி..., உங்களுக்காகவாவது எழுதுறேன்.

(ஃபிரண்ஸுனு சொல்லிகிட்டு நாலு பான்னாடைங்க இருக்குது, இந்த மாதிரி கமெண்ஸ் போடுதா..வந்து கும்முரதுலேயே இருக்கானுக... அம்மனிய பாத்து கத்துக்கங்க)

கருடன் said...

@ஜெய்
//வழக்கமா எங்க வீட்ல, 100 போட்டவங்களுக்குதான் விருந்து வைப்போம்... ஹி ஹி//

எது?? பருத்துகொட்டை, புண்ணாக்கு, இந்த தவிடு கலக்குன தண்ணீரு இது எல்லாம் கொடுத்து எருமை மாடு மேல ஏத்தி உங்க ஊற ஒரு ரவுண்டு சுத்தி கட்டுவிங்களக்கும்.....

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ஜெய்
//வழக்கமா எங்க வீட்ல, 100 போட்டவங்களுக்குதான் விருந்து வைப்போம்... ஹி ஹி//

எது?? பருத்துகொட்டை, புண்ணாக்கு, இந்த தவிடு கலக்குன தண்ணீரு இது எல்லாம் கொடுத்து எருமை மாடு மேல ஏத்தி உங்க ஊற ஒரு ரவுண்டு சுத்தி கட்டுவிங்களக்கும்.....|||

ஆகா, இப்படி ஒரு ஐடியா, எனக்கு தோணாம போச்சே...., ஐடியா கொடுத்ததுக்கு நொம்ப டேங்ஸ்பா
( ஐடியா குடுத்ததுகாஅ, உமக்கு நீச்சல் ட்ரைனிங் ஃபிரீ..)

கருடன் said...

@ஜெய்
//உற்சாகப் படுத்துவதற்கு, ரொம்ப நன்றி சகோதரி..., உங்களுக்காகவாவது எழுதுறேன்//

ஆமா ஆமா.... இவ்வளோ கஷ்டப்பட்டு எழுதி ஒரு ஆளுகூட படிக்கலான உங்க நலம் வகுப்பு மாதிரி உங்க போஸ்டும் பெயில் ஆகிடத...

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ஜெய்
//உற்சாகப் படுத்துவதற்கு, ரொம்ப நன்றி சகோதரி..., உங்களுக்காகவாவது எழுதுறேன்//

ஆமா ஆமா.... இவ்வளோ கஷ்டப்பட்டு எழுதி ஒரு ஆளுகூட படிக்கலான உங்க நலம் வகுப்பு மாதிரி உங்க போஸ்டும் பெயில் ஆகிடத...|||

VKS-குருப்புகிட்ட, அடிவாங்கும் போது , உனக்கு சப்போர்ட் பண்ணலாம்னு இருந்தேன், இப்ப நானும்சேர்ந்து கும்முரேன், இருடி..

கருடன் said...

@ஜெய்
//(ஃபிரண்ஸுனு சொல்லிகிட்டு நாலு பான்னாடைங்க இருக்குது, இந்த மாதிரி கமெண்ஸ் போடுதா..வந்து கும்முரதுலேயே இருக்கானுக... அம்மனிய பாத்து கத்துக்கங்க) //

யாரு? யாரு? யாரு அது? எல்லாரும் போஸ்ட் படிச்சி கமெண்ட்ஸ் போடுங்கபா. இல்லன நன் டெரர் ஆகிடுவேன்... (அம்மணி எங்கள பாத்து கத்துகாம இருந்த சரி......)

கருடன் said...

@ஜெய்
//VKS-குருப்புகிட்ட, அடிவாங்கும் போது , உனக்கு சப்போர்ட் பண்ணலாம்னு இருந்தேன், இப்ப நானும்சேர்ந்து கும்முரேன், இருடி.. //

தலை.... இப்படி எல்லாம் அவசர பட கூடாது... என்னோட first கமெண்ட் பாருங்க... நாம எல்லாம் ஒன்ன கவுரவமா மாடு மேச்ச குரூப். அவிங்க (VKS) கிடக்காங்க படிச்சா பசங்க...

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
தலை.... இப்படி எல்லாம் அவசர பட கூடாது... என்னோட first கமெண்ட் பாருங்க... நாம எல்லாம் ஒன்ன கவுரவமா மாடு மேச்ச குரூப். அவிங்க (VKS) கிடக்காங்க படிச்சா பசங்க...//

சரி, விடு, அவங்கள, மூனுல ரெண்டு பாத்துரலாம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

VKS la yaarum illaonu pootna veetla yaaruppa salampal panrathu

கருடன் said...

Gayathri said...
//இன்னும் கதை கேட்க ஆவலாத்தான் இருக்கு..நாலப்பு வோட நிறுத்த வேண்டாம்..//

ஆமா தல ஐந்தாம் வகுப்பு பெயில் ஆனது, ஆறாம் வகுப்பு பெயில் ஆனது இப்படியே நீங்க படிச்சா எட்டாம் வகுப்பு வரை எல்லாம் எழுதுங்க...(நாங்களும் உற்சாக படுத்துவோம் இல்ல...)

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...

ஆமா தல ஐந்தாம் வகுப்பு பெயில் ஆனது, ஆறாம் வகுப்பு பெயில் ஆனது இப்படியே நீங்க படிச்சா எட்டாம் வகுப்பு வரை எல்லாம் எழுதுங்க...(நாங்களும் உற்சாக படுத்துவோம் இல்ல...)///

அவ்வளவு ஆர்வமாவா, காத்திட்டிருகே..!!!, எழுதிடா போச்சு.

(நமக்கும் ரசிகர் கூட்டம் கூடிகிட்டெ போகுதே.....)

Gayathri said...

என்னால இங்கே எதோ கலவரம் வெடிக்காம இருந்தா சரி..
தொடர்வேன் என்று சொன்னதுக்கு நன்றி...

போஸ்ட் மாதிரி கமெண்டும் ஜாலியா போகுதே..ஸ்வரசியமத்தான் இருக்கு..

கருடன் said...

Gayathri Said
// போஸ்ட் மாதிரி கமெண்டும் ஜாலியா போகுதே..ஸ்வரசியமத்தான் இருக்கு//

தல இந்த வாக்கியத்துக்கு அர்த்தம் : அடுத்த பதிவுல நானும் உங்களை கும்ம ஆசை படுகிறேன்.... அப்படியா இருக்குமோ?? இருந்த ஒரு நல்ல ரசிகையும் போச்சா??
(எனக்கு அடி நிச்சயம் மட்டும் தெரியுது...)

Riyas said...

ஆஹா...ரொம்ப சுவாஸ்ரயமா சொன்னிங்க உங்க அந்தக்கால பள்ளி வாழ்க்கை நினைவுகளை... என்னா அட்டகாசம் அப்பப்பா.....


அருமை.. அருமை...

Riyas said...

ஆஹா...ரொம்ப சுவாஸ்ரயமா சொன்னிங்க உங்க அந்தக்கால பள்ளி வாழ்க்கை நினைவுகளை... என்னா அட்டகாசம் அப்பப்பா.....


அருமை.. அருமை...

பொன் மாலை பொழுது said...

// ( எல்லாரும் நம்ம மாதிரிதான் போல //
//எழுதுனத பத்தி ஏதும் சொல்லாமையே கமென்ஸ் போடுராங்கயா...)//


// நல்லா .பிரமாதமா எழுதி இருக்கீங்க //

இப்படி பின்னூட்டம் வேணுமா?
அது நல்லாவா இருக்கு??
கும்மி அடிக்கும் கூட்டமே போதுமே உங்க பதிவு பற்றி சொல்ல!




அடப்பாவிகாலா............... எனக்கு காந்துது ..
அண்ணாத்தே பட்டா. ..மான்குனி....ஜெயிலா.....பன்னி குட்டி (செல்லமா )
இந்த மொக்க பதிவுக்கு 116 கமேன்ட்சா????
இது ரொம்ப அநியாயம்

நா போறேன்.... போயி ஒரு கிங் பிஷேர் உட்டாதான் அடுங்கும்.

Jey said...

Gayathri said...
என்னால இங்கே எதோ கலவரம் வெடிக்காம இருந்தா சரி..
தொடர்வேன் என்று சொன்னதுக்கு நன்றி...

போஸ்ட் மாதிரி கமெண்டும் ஜாலியா போகுதே..ஸ்வரசியமத்தான் இருக்கு..//

எல்லார் கைலயும் இருக்குறது “அட்டைக்கத்தி” அதனால இங்க கலவரம் நடந்தாலும், ரத்தகாயம் ஒன்னும் ஆகாது,முடிஞ்சா நீங்களும் ஒரு அட்டைகத்திய கைல புடிச்சிகிட்டு, களத்தில இறங்குங்க..

Jey said...

Riyas said...
ஆஹா...ரொம்ப சுவாஸ்ரயமா சொன்னிங்க உங்க அந்தக்கால பள்ளி வாழ்க்கை நினைவுகளை... என்னா அட்டகாசம் அப்பப்பா.....


அருமை.. அருமை...///

வாங்க சார், எல்லாம் உங்கமாதிரி சீனியர்ஸ்கிட்ட கத்துகிட்டு ஆரம்பிச்சதுதான்.... வருகைக்கு நன்றி.

Jey said...

கக்கு - மாணிக்கம் said...

// நல்லா .பிரமாதமா எழுதி இருக்கீங்க //

இப்படி பின்னூட்டம் வேணுமா?
அது நல்லாவா இருக்கு??
கும்மி அடிக்கும் கூட்டமே போதுமே உங்க பதிவு பற்றி சொல்ல!||||

இது புதுசா இருக்கே, கும்மி அதகமா இருந்த அந்த பதிவு, நல்ல பதிவா..( சொல்லவே இல்லை,னம்ம வீடல எப்பவும் கூம்மிதான், அப்ப நாம் பிரபல பதிவர்னு சொல்லுங்க!!!!
(யாருப்பா அங்க கும்பலா அடிக்க வரது... சும்மா பேச்சுக்குதாம்பா சொன்னேன், இதுக்கேவா..)

///அடப்பாவிகாலா............... எனக்கு காந்துது ..
அண்ணாத்தே பட்டா. ..மான்குனி....ஜெயிலா.....பன்னி குட்டி (செல்லமா )
இந்த மொக்க பதிவுக்கு 116 கமேன்ட்சா????
இது ரொம்ப அநியாயம்

நா போறேன்.... போயி ஒரு கிங் பிஷேர் உட்டாதான் அடுங்கும்//

ஏம்பா, இப்பதான் எழுந்து நடக்க ஆரம்பிச்ச குழந்தை மேல பொறாமைபடுரீகளே, உங்களுக்கே நல்ல இருக்கா..!!!.

(சரி சரி அப்படியே எனக்கும் ஒரு கிங்பிஷர் வாங்கி அனுப்பி வைங்க..),

Anonymous said...

நல்ல பதிவு.., இனிவரும் தலைமுறைக்கு முன்னோர்களின் வாழ்க்கை முறை ஒரு ஆவணம், இப்போ இருக்கிற பசங்க சொன்னா கேட்கிற அளவுக்கு பொறுமை இல்லை. கொஞ்சம் வளர்ந்த பின் படிச்சாங்கன்னா கண்டிப்பா தங்களுக்கு இப்போ இருக்கிற வசதி வாய்ப்புகளை பார்த்து, இவ்வளவு இருந்தும் ஏன் நாம பயன் படுத்திக்கொள்ள வில்லை-ன்னு நெனச்சி திருந்திடுவாங்க!

சென்னையில் +1 படிச்ச கதையை பதிவின் மூலம் படிக்க ஆவலுடன்,

சாய் கோகுலகிருஷ்ணா

கருடன் said...

கக்கு - மாணிக்கம்
//இந்த மொக்க பதிவுக்கு 116 கமேன்ட்சா???? //

உங்க குரூப் வந்து இருந்த கமெண்ட்ஸ் ஒரு 250 தாண்டி இருக்கும்.

கருடன் said...

சரி தல. நல்ல அருமையான பதிவு. இனிய மலரும் நினைவுகள். அழகாக கட்சிகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி எங்களை மகிழ்விததற்கு நன்றி. இது போல மேல பல நல்ல பதிவுகளை எதிர்பாக்கும் ஒரு ......... சிறிய ரசிகன்.

Jey said...

@@TERROR-PANDIYAN(VAS) said...

சரி தல. நல்ல அருமையான பதிவு. இனிய மலரும் நினைவுகள். அழகாக கட்சிகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி எங்களை மகிழ்விததற்கு நன்றி. இது போல மேல பல நல்ல பதிவுகளை எதிர்பாக்கும் ஒரு ......... சிறிய ரசிகன்.//

மக்கா ஏதும் உள்குத்து இல்லையே?!!!, என்ன் கேக்குரேன்னா, இவ்வளவு நேரம் கும்மியடிச்சிட்டு, திடீர்னு, தலைமேல இம்மாம் பெரிய ஐஸ்கட்டிய வைக்கிறையே அதனால கேட்டேன்:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடுத்த பதிவுல நானும் உங்களை கும்ம ஆசை படுகிறேன்.... அப்படியா இருக்குமோ?? --

Jey முதல்ல டெரர் உங்க ஆளா இல்ல எதிரியானு செக் பண்ணுயா. நீ வெளில போற ஓனான...

geeyar said...

சூப்பரப்பூ.. எங்க வீட்ல மாடு மேய்க்க ஆள் வைச்சிருந்தாங்கப்பா. அதனால எனக்கு அந்த சான்ஸ் கிடைக்கலப்பா. ஆனா நல்லா மேச்சிருக்கீங்க. ஆனா இளநீர் வெட்ட நொங்கு வெட்டனு போயிருக்கேன். நொங்கிலே குளிச்சிருக்கேன்.

Jey said...

geeyar said...
சூப்பரப்பூ.. எங்க வீட்ல மாடு மேய்க்க ஆள் வைச்சிருந்தாங்கப்பா. அதனால எனக்கு அந்த சான்ஸ் கிடைக்கலப்பா. ஆனா நல்லா மேச்சிருக்கீங்க. ஆனா இளநீர் வெட்ட நொங்கு வெட்டனு போயிருக்கேன். நொங்கிலே குளிச்சிருக்கேன்.///

அடடா, நம்ம அறிமுகம் சின்ன வயசுலேயே இருந்திருந்தா, எனக்கு பிடிச்ச நுங்க உங்ககிட்ட வாங்கிட்டு, பதிலுக்கு, மாடு சவாரி செய்ய விட்டுருப்பேனே... நுங்கு போச்சே...

( எங்க சார் 2 வருசமா, இங்க சென்னைல , நான் இருக்குர ஏரியால, நுங்கே கிடைக்குரதில்ல சார்... )

நீங்லலும் உங்க அனுபவத்த எழுதுங்க சார், அப்படியே உங்க பிளாக் அட்ரஸ அனுப்பிருங்க படிக்க வசதியா இருக்கும்:)

Jey said...

Sai Gokula Krishna said...
நல்ல பதிவு.., இனிவரும் தலைமுறைக்கு முன்னோர்களின் வாழ்க்கை முறை ஒரு ஆவணம், இப்போ இருக்கிற பசங்க சொன்னா கேட்கிற அளவுக்கு பொறுமை இல்லை. கொஞ்சம் வளர்ந்த பின் படிச்சாங்கன்னா கண்டிப்பா தங்களுக்கு இப்போ இருக்கிற வசதி வாய்ப்புகளை பார்த்து, இவ்வளவு இருந்தும் ஏன் நாம பயன் படுத்திக்கொள்ள வில்லை-ன்னு நெனச்சி திருந்திடுவாங்க!

சென்னையில் +1 படிச்ச கதையை பதிவின் மூலம் படிக்க ஆவலுடன்,

சாய் கோகுலகிருஷ்ணா///

ஆமா சார், இப்ப இருக்குர தலைமுரை, ரொம்ப சென்சிடிவா இருக்காங்க, நினைச்சது கிடைகலைனா, உடனே துவண்டு போராங்க, எல்லாம் நாம குடுத்துரதுனால, உண்மையான கஷ்டம் எதுன்னே தெரியாம போயிடுது.. ( அதனாலதான், சம்மர் லீவுல ஊர்ல கொண்டுபோய் விடுரதுன்னு முடிவு பன்ணிருக்கேன்.

+1 சேர்ந்த கதை பெரிய கதை சார்... , சென்னைல +1 அட்மிச்சனுக்கு வேட்டி கட்டிட்டு போன ஒன்& ஒன்லி ஆள், இன்னி வரைக்கும் நானாத்தான் இருக்கும்... நேரம் கிடைக்கும்போது எழுதுரேன் சார்.. சிரிப்பீங்க:)

geeyar said...

எங்க வீட்டிலே சின்ன பையன்களுக்கு என்றே தனியே ஒரு மாடு உண்டு. எப்படின்னா அது வருடத்திற்கு ஒரு கன்று போடும். ஆனா பால் கறக்க யாரும் கிட்ட போக முடியாது.முக்கியமா ஆண்கள் அந்த பக்கம் போகவே முடியாது. ஆனா சின்ன பையன்களை ஒன்றும் செய்யாது. அது கூட விளையாடுவோம். பால் கறப்போம். ஏறி சவாரி செய்வோம். எங்களை மட்டும் ஒன்றும் செய்யாது.

பிளாக்...
வீட்டு வேலை நடந்திட்டு இருக்கு சீக்கிரம் கிரகபிரவேசம் வைச்சிடுவோம்.

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அடுத்த பதிவுல நானும் உங்களை கும்ம ஆசை படுகிறேன்.... அப்படியா இருக்குமோ?? --

Jey முதல்ல டெரர் உங்க ஆளா இல்ல எதிரியானு செக் பண்ணுயா. நீ வெளில போற ஓனான...///

எப்படியாவது சிண்டு முடிச்சி விட்ரலாம்னு போராடுரது தெரியுது... அலர்ட்டாதான் இருக்கோம்...

அப்புறம் நாங்க புதுசா ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் சிப்பு..., முத்து, பன்னிகுட்டி, பருப்பு,மங்கு,ஜெய்லானி வந்தவுடனே ( பட்டாபட்டி குமுக-வுல பிஸியாக இருப்பதால் விட்டுட்டோம்)செயற்குழு கூட்டி முடிவெடுக்குரதா இருக்கோம்.

”அடிவாங்குறவங்களை(வெள்ளந்தியா) காப்பாத்துவோர் சங்கம் (AKS). ( தக்காளி இந்த இலுமிய மட்டும் நம்பக்கூடாது, யார் அடிவாங்குராங்களோ , அவங்கமேல கைவச்சிட்டு போய்ட்டே இருப்பான்..)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

AKS kku new water parcel

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
AKS kku new water parcel///

ஏம்பா, அவ்வளவு பயமா?.. இன்னும் செயற்குழு கூட்டமே முடியல.... அதுகுள்ள சதிவேலையா...

பனித்துளி சங்கர் said...

அடேயப்பா !
ஒவ்வொரு ஆப்பா சொல்லி மொத்தத்தில் எங்களுக்கு ஆப்பு வைத்துவிட்டீர்கள் . நல்ல இருக்கு நண்பரே ரசிக்கும் வகையில் எழுத்து நடை . பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

Jey said...

geeyar said...
எங்க வீட்டிலே சின்ன பையன்களுக்கு என்றே தனியே ஒரு மாடு உண்டு. எப்படின்னா அது வருடத்திற்கு ஒரு கன்று போடும். ஆனா பால் கறக்க யாரும் கிட்ட போக முடியாது.முக்கியமா ஆண்கள் அந்த பக்கம் போகவே முடியாது. ஆனா சின்ன பையன்களை ஒன்றும் செய்யாது. அது கூட விளையாடுவோம். பால் கறப்போம். ஏறி சவாரி செய்வோம். எங்களை மட்டும் ஒன்றும் செய்யாது.

பிளாக்...
வீட்டு வேலை நடந்திட்டு இருக்கு சீக்கிரம் கிரகபிரவேசம் வைச்சிடுவோம்.///

ஆமாங்க, ஒரு சில மாடுக சின்னப்பசங்கள முட்டுறது இல்லை.

கிரகபிரவேசம் என்னிக்குனு ஒரு தகவல் குடுங்க, வந்து எழுதுனத படிச்சி மேய்ஞ்சிரலாம்..:)

Jey said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அடேயப்பா !
ஒவ்வொரு ஆப்பா சொல்லி மொத்தத்தில் எங்களுக்கு ஆப்பு வைத்துவிட்டீர்கள் . நல்ல இருக்கு நண்பரே ரசிக்கும் வகையில் எழுத்து நடை . பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்///

வங்க தல. ரொம்ப நன்றி. எந்த திரட்டிய ஓபென் பன்னினாலும் முதல்ல கண்ணுல படுரது உங்க பதிவாத்தான் இருக்கு..., கலக்குரீங்க.
வருகைக்கு நன்றி.

கருடன் said...

@ஜெய்
//மக்கா ஏதும் உள்குத்து இல்லையே?!!!, என்ன் கேக்குரேன்னா, இவ்வளவு நேரம் கும்மியடிச்சிட்டு, திடீர்னு, தலைமேல இம்மாம் பெரிய ஐஸ்கட்டிய வைக்கிறையே அதனால கேட்டேன்:)//

நம்புங்க அப்பு.... எல்லா படத்துலயும் climaxla வில்லன் நல்லவனா மாரி உண்மை சொல்றது இல்லையா? அது மாதிரிதன்.

//எப்படியாவது சிண்டு முடிச்சி விட்ரலாம்னு போராடுரது தெரியுது... அலர்ட்டாதான் இருக்கோம்...//

என்ன்ன்ன்னா தலை!!! நீங்க 125 கமெண்ட்ஸ் வாங்கணும் உண்மையா பாடுபட்ட ஒரு இரசிகன சந்தேக பட்டுடின்களே... ரனகலத்துல வந்து ரன் அவுட் அகரத பத்தி சிந்திக்க முடியுமா?

@ரமேஷ்
//Jey முதல்ல டெரர் உங்க ஆளா இல்ல எதிரியானு செக் பண்ணுயா.//

ரமேஷுஷுஷுஷுஷு..... கிர்ர்ரர்ர்ர்

Jey said...

பாண்டி..., சிப்பு புதுசா ஒரு மொக்க பதிவு போட்ருக்கு அங்க போய் கும்மிட்டிரு, நான் ஆனி பிடுஙிட்டு வரேன்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தல +1 ல்லாம் போயிருக்கியா

Jey said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
தல +1 ல்லாம் போயிருக்கியா///

தல காதக்குடுங்க உங்களுக்கு மட்டும் சொறேன், “ நம்ம படிகாத பயன்னு நாலு பேருக்கு தெரிய கோடாதுல, அதான் +1 அப்படி இப்படினு எழுதி...)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தல, இந்த +1 ன்னா என்னா தல? எங்கூரு டாஸ்மாக்குல கெடைக்க மாட்டேங்கிதே!

Jey said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...
தல, இந்த +1 ன்னா என்னா தல? எங்கூரு டாஸ்மாக்குல கெடைக்க மாட்டேங்கிதே!///

நாட்டுச்சரக்க போய் டாஸ்மாக்ல கேட்டா .. அடிக்காம வுட்டானுகளே சந்தோசப்படு...
(இவங்க கேக்குர கேள்விக்கு, பதில் சொல்ரதுக்குள்ள வாயில நுரைதள்ளுதே.....)

கருடன் said...

//(இவங்க கேக்குர கேள்விக்கு, பதில் சொல்ரதுக்குள்ள வாயில நுரைதள்ளுதே.....)//

தலை வேற பதிவு போடறிங்கள இல்ல நானும் first இருந்து கும்மில கலந்துகவா?? முடிவு உங்க கைல..... count down starts.....

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
//(இவங்க கேக்குர கேள்விக்கு, பதில் சொல்ரதுக்குள்ள வாயில நுரைதள்ளுதே.....)//

தலை வேற பதிவு போடறிங்கள இல்ல நானும் first இருந்து கும்மில கலந்துகவா?? முடிவு உங்க கைல..... count down starts....///

பதிவு போட்டா வந்து கும்முரதுக்கு இப்பயே துண்டு பொட்டிடியா ராசா!!?????.
இரு சாமி 2 மணினேரத்துல போடுரேன். தலைப்பு ”10 ரூபாயில் சிறுனீரகக்கல்லுக்கு தீர்வு” . ஓகேயா.

LinkWithin

Related Posts with Thumbnails