December 11, 2012

முண்டாசுக் கவிஞனின் பிறந்தநாள் இன்று 11-12-2012


நம் அனைவருக்கும் பால்ய வயதில் முதலில் அறிமுகப்படுத்தபடும் கவிஞன் ஒருவன் உண்டென்றால் அது பாரதியாகத்தான் இருக்கும். என் மகளுக்கும் மகனுக்கும் இவனைதான் முதலில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன்.





 










 பாரதி பற்றிய சிறு குறிப்புகள்
பெயர்: சுப்பிரமணிய பாரதி.

இதரப்பெயர்கள்: மகாகவி, பாரதியார், சுப்பையா, சக்தி தாசன்.

பிறப்பு: டிசம்பர் 11, 1882.

இறப்பு: செப்டம்பர் 11 , 1921.

வாழ்ந்த காலம்: 38 ஆண்டுகள், 11 மாதங்கள், 1 நாள்.

பெற்றோர்: சின்னசாமி ஐயர், லக்ஷ்மி அம்மாள்.

மனைவி: செல்லம்மா.

திருமணம் நடந்த ஆண்டு: 1897.

மகள்கள்: சகுந்தலா, தங்கம்மாள்.

வாழ்ந்த இடங்கள்: எட்டையபுரம் (1882 – பிறந்த ஊர்), காசி (1898 முதல் 1902 வரை), மதுரை (1904, சிறிது காலம் – தமிழ் ஆசிரியராக), புதுச்சேரி (1908 முதல் 1918 வரை – முக்கிய மற்றும் பிரபல படைப்புகள் உதிர்த்த இடம்), கடையம் (1918 – முதல் 1920 வரை – மனைவி செல்லம்மாவின் கிராமம்), சென்னை (1921 – மறைந்த இடம்).

பரிணாமங்கள்: கவிஞர், சீர்திருத்தவாதி, பத்திரிகை ஆசிரியர், தமிழ் ஆசிரியர், எழுத்தாளர், விடுதலை வீரர், தேச பத்தர், பெண்ணுரிமைப் போராளி.

அறிந்த மொழிகள்: தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், வங்காளம் மற்றும் ஆங்கிலம்.
---------------------------------------------------------------------------------------------
பள்ளிப்பருவத்தில் மனனம் செய்தவை, பின்னர் அதன் பொருள் அறிந்து வியந்தவை சில.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் 
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம். 
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோ ம் - வெறும் 
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்.
“ 

 “  காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!
 பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
“ 

 என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? 
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? 
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? 
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? 
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே! 
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே! 
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ? 
மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ
? 

” செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் 
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் 
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு 
சக்தி பிறக்குது மூச்சினிலே

” காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா “

’’ சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், 
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் 
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் 
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். ‘’

 படங்கள் உதவி : கூகுள் இமேஜஸ்.


16 comments:

Unknown said...

பாரதியின் சவ ஊர்வலத்தில் அவர் பிணத்தை மொய்த்த ஈக்கள் கூட்டத்தை விட குறைவானவர்களே வந்திருந்தார்கள் என வைரமுத்து ஒரு கவிதையில் கூறியிருப்பார்....! உன் பதிவிலும் அப்படித்தான் போல பங்காளி...!

பட்டிகாட்டான் Jey said...

//// வீடு சுரேஸ்குமார் said...
பாரதியின் சவ ஊர்வலத்தில் அவர் பிணத்தை மொய்த்த ஈக்கள் கூட்டத்தை விட குறைவானவர்களே வந்திருந்தார்கள் என வைரமுத்து ஒரு கவிதையில் கூறியிருப்பார்....! உன் பதிவிலும் அப்படித்தான் போல பங்காளி...!
December 11, 2012 1:48 PM ///

பங்காளி விட்ரா விட்ரா நான் வெட்டி பிளாக்கர்ல மட்டும்தான் இணைச்சிருந்தேன், யார் கண்ணிலும் இந்த பொஅதிவு படாத இருந்திருக்கும், அதும் போக தனிதனியா, பேஸ் பு * கூகுள் பிளஸ்ல வேற ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன் அங்கேயும் பல லைக் பண்ணிருக்காங்க....:-)))))
-----------------------
பாவிப்பய இவன் ஒருத்தனாவது கமெண்ட் போட்டானே :-)))))

dheva said...

பாரதி யாராலும் வாழ்க்கையில் இருந்து மறுக்க முடியாத கவிஞன் பங்காளி. நவீன வியபார ஊடகங்கள் பொருளையே மையப்படுத்தி இயங்கிக் கொண்டு...பாரதிகளை இருட்டடிப்பு செய்வது....

நமது சமூகத்து அடுத்த தலைமுறை பிள்ளைகளிடம் பாரதியைக் கொண்டு சேர்க்காமல் போய்விடுமோ என்ற அச்சமே ஏற்படுகிறது.

இலவசமாக கிடைத்திருக்கும் வலைப்பக்கங்களில் கூட பாரதியைப் பற்றி பேச யாருமே இல்லை என்பதுதான் கவலை.

பாரதியின் கவிதைகளைப் படிப்போம்.....நம் பிள்ளைகளுக்கு பாரதியைச் சரியாய் புரியவைப்போம்...!

நன்றிகள் பங்காளி...!

Kousalya Raj said...

மகாகவியை பற்றிய படங்களும் தகவல்களும் அருமை.

கவிதைகளை படிக்கும் போது அவரது வாழ்கையும் உடன் நினைவுக்கு வருகிறது...

இன்றைய நம் குழந்தைகளுக்கு எந்த அளவிற்கு இவரை தெரியும் என்று தெரியவில்லை, இயன்றவரை தெரியவைப்பது நம் கடமை. நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அறிமுகபடுத்தியது குறித்து மகிழ்கிறேன்.

அழகான நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள் + வாழ்த்துக்கள் !

Unknown said...

பாரதியைப் பற்றி நாடே மறந்துவிட்ட நிலையில், அவர் பற்றிய குறிப்பும் அவரது கவிதைகளையும் நினைவு படுத்திய தங்கள் பதிவு போற்றத் தக்கது

முத்தரசு said...

நன்றி பங்காளி அருமையான ஒரு பதிவை பதிவு செய்தமைக்கு

arasan said...

மறந்து விட்ட புரட்சி படைப்பாளரை நினைவு கூற வைத்தது அண்ணா ..

பட்டிகாட்டான் Jey said...

// இலவசமாக கிடைத்திருக்கும் வலைப்பக்கங்களில் கூட பாரதியைப் பற்றி பேச யாருமே இல்லை என்பதுதான் கவலை. //

அதானே பங்காளி சரி விடுங்க 12.12.12 அலப்பரைல இத மரந்துட்டாங்க போல, அதான் எல்லாருக்கும் சேர்த்து உம்பதிவுல பொங்க வச்சிருக்கியே பங்காளி :-))))

அது 100 பதிவுக்குச் சமம் :-)))

// பாரதியின் கவிதைகளைப் படிப்போம்.....நம் பிள்ளைகளுக்கு பாரதியைச் சரியாய் புரியவைப்போம்...! //

பாரதியின் அறிமுகமில்லாமல் ஒருகுழந்த பள்ளிப்பருவத்தை தாண்டமுடியாது பங்காளி, பள்ளி விழால ஏதாவது உருப்படியா ஒரு பாட்டு பாடனும்னா பாரதியை விட்டா நாதியேது. அது சிபிஎஸ்இ பள்ளியானாலும் தப்ப முடியாது, அந்த ஒரு பலம் பாரதிக்கி இருக்கிறதனாலதான் இன்னும் நம்மகூட வாழ்ந்துகிட்டு இருக்கான் பாரதி.

எம்பொண்ணு இந்த பதிவில போட்டிருக்கிற அத்தனை பாட்டையும் நல்லா பாடும், பையனுக்கும் சொல்லித்தரனும் :-))))

அதே மாதிரி சின்ன வயசுலேயே வள்ளுவர் தாத்தா & அவ்வையயும் அறிமுகப்படுத்திடனும் :-)))

பட்டிகாட்டான் Jey said...

// Kousalya said... //

தேவாவுக்கு போட்ட கமெண்டையே தங்களுக்கு போட்ட கமெண்டாக படிக்கவும் :-)))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மனி :-)))

பட்டிகாட்டான் Jey said...

// புலவர் சா இராமாநுசம் said...
பாரதியைப் பற்றி நாடே மறந்துவிட்ட நிலையில், அவர் பற்றிய குறிப்பும் அவரது கவிதைகளையும் நினைவு படுத்திய தங்கள் பதிவு போற்றத் தக்கது //

எல்லம் உங்கள் மாதிரி தமிழ் வாத்தியார் எனக்கு அமைஞ்சதாலதான் ஐயா :-))

பட்டிகாட்டான் Jey said...

// முத்தரசு said...
நன்றி பங்காளி அருமையான ஒரு பதிவை பதிவு செய்தமைக்கு //

ரைட்டூ. நன்றி பங்காளி :-))

பட்டிகாட்டான் Jey said...

//
அரசன் சே said...
மறந்து விட்ட புரட்சி படைப்பாளரை நினைவு கூற வைத்தது அண்ணா

//

அரசா,
உன்னை மாதிரி கவிதை எழுதத் தெரிஞ்சிருந்தா நாலு வரி கவிதையோட முடிஒஞ்சிருக்கும் இந்த பதிவு. :-)))

இராஜராஜேஸ்வரி said...

பள்ளிப்பருவத்தில் மனனம் செய்தவை, பின்னர் அதன் பொருள் அறிந்து வியந்தவை

பாரதியின் பாடல்கள் பலவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கதரிசனம் பிரமிக்கவைக்கும் ..

பாதியாரின் நினைவுதினப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு பகிர்வு! நேற்றே வர நினைத்தும் மின் வெட்டால் வரமுடியவில்லை! நன்றி!

Robert said...

நாடும்,நாமும் மறந்து விட்டவரை பற்றிய பதிவு. இதனூடாக இருக்கும் வருத்தம் கவனிக்கப் வேண்டிய ஒன்று. ஆறுதலாக இருந்த விஷயம் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லியது. முயற்சிப்போம் நம்மால் முடிந்த வரை அடுத்த தலைமுறைக்கு முண்டாசுக் கவியை எடுத்துச் செல்ல..

Avargal Unmaigal said...

மகாகவியை பற்றிய படங்களும் தகவல்களும் அருமை. மதுரை பள்ளியில் பணிபுரிந்து பெருமை சேர்த்தவன் பாரதி அந்த பாரதியைப்பற்றிய தகவலை இந்த நாளில் எடுத்து சொல்லி பெருமை சேர்த்தவன் மதுரைக்காரர் நீர் என்பதில் மிக பெருமை...பாராட்டுக்கள்

LinkWithin

Related Posts with Thumbnails