முஸ்கி : இது கற்பனைக்கதை அல்ல, உண்மைச் சம்பவம் ருசிக்காக கொஞ்சம் ஊறுகாய் சேர்க்கப்பட்டிருக்கிரது .
அது எப்படி வந்தெதென்று தெரியவில்லை, எங்கிருந்து வந்ததென்றும் தெரியவில்லை, எதற்கு வந்ததென்றும் தெரியவில்லை... ஆனாலும் வந்துவிட்டது. திறந்திருந்த முன்வாசல் வழி வந்ததா அல்லது கூடத்து ஜன்னல் வழி வந்ததா அல்லது பொறத்தாலே வந்ததா தெளிவாக தெரியவில்லை, மாலை மங்கிய நேரம் அதற்கு விடியல் போலும், காலைக்கடன் முடித்து பல் விளக்கிவிட்டு வந்ததா இல்லை தொங்கி முடிந்து அப்படியே
வந்ததா அதுவும் தெரியவில்லை ஆனாலும் வந்துவிட்டது. சர்ர் சர்ர் என்று அதன் வேகம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது, முதலில் அது என்னவென்று புலப்படுவதற்கே சில மணித்துளிகள் ஆகிவிட்டது,
அதன் வேகத்திற்கு ஈடு குடுத்து குறிவைத்து பார்க்கயில்தான் தெரிந்தது அது ஒரு வவ்வால் என்று.
சரி வந்தது வந்துவிட்டது அதற்கு ஏதேனும் உணவு குடுக்கலாமென்றால் ஓரிடத்தில் தொங்காமல் சர்ர் சர்ர்ரென்று கூடத்தில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ம்ஹூம் இது நமக்கு சரிப்பட்டு வராது என்றெண்ணி வாசல் கதவுகள் மற்றும் அனைத்து ஜன்னல் கதவுகளையும் திறந்து வைத்து அது வெளியில் செல்ல காத்திருந்தால்...... அது வெளியில் செல்லும் அறிகுறி ஏதுவும் தென்படவில்லை... அதற்கு என் வீட்டின் குளிரூட்டப்பட்ட பெரிதான கூடம் பிடித்துப் போய் விட்டது போலும். பெரிதான தடைகள் ஏதும் இல்லாததால் அது வெளியிடும் அல்ட்ராசானிக் அலைகள் நிலைத்திருக்கும் சுவர்களில் பட்டு துள்ளியமாக அதற்க்கு திரும்பக் கிடைத்து அது தடையின்றி பறக்க ஏதுவாக
இருக்கிறதுபோலும்.
எனக்குத்தான் எங்கே அது பறக்கும் வேகத்திற்கு எதிர் சுவற்றில் மோதி அடிபட்டுவிடுமோ என்ற அச்சம் , ஆனால் அது அதிவிரைவாக சென்று சுவருக்கு அரைஅடி தூரம் இருக்கும்போது லாவகமாக திரும்பி பறக்கிறது.
முதலில் அதனை வேடிக்கை பார்ப்பதில் இருந்த ஆர்வம் நேரம் செல்லச்செல்ல அது வெளியில் போனால் தேவலை என்ற எண்ணத்தில் கொண்டு போய்விட்டது. ம்ஹூம் அது போவதற்கான அறிகுறியைக் காணோம், அதற்கு பதில் மேலே சிமெண்ட் கூறையை ஒட்டிப் பறந்துகொண்டிருந்த வவ்வால் பக்கி, சற்று உயரம் குறைந்து பறக்க ஆரம்பித்தது....இப்போது வாண்டுகளிடம் சற்று பயம் அப்பா அதை வீட்டிலிருந்து வெளியே துரத்துங்கள் என்று. நானும் ஒட்டடைக்குச்சி வைத்து அதனை துரத்திப்பார்த்தேன்.... தக்காளி அது வெளியிடும் அல்ட்ராசானிக் அலை நகரும் பொருள் மேல் பட்டு திரும்புவதை வைத்து, நான் அடிக்கப்பயன்படுத்தும் ஒட்டடைக் குச்சியின் வேகத்தைச் சரியாகக் கணித்து, என் அடிக்கிச் சிக்காமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தது..... இப்போது வாண்டுகளிடமிருந்து ஒரு வவ்வாலைக்கூட சமாளிக்க முடியவில்லையா என்ற கேளிப்பார்வை, என் ஈகோவைத் தட்டிவிட்டது.....
உக்கார்ந்து...நடந்து....ஏன் மல்லாக்கப்படுத்தும் யோசித்தேன் இந்த வவ்வாலை எப்படி துரத்துவதென்று.....பட்டென்று மூளையின் ஓரத்தில் சிறு ஒளி...... படித்து பல வருடங்கள் ஆனாலும் கல்லூரியில் படித்த இயற்பியல் முற்றிலும் மறந்து விடவில்லை.... ஆம் வவ்வாலின் அல்ட்ராசானிக் அலைகள் திடபொருளின் மீது பட்டு மீண்டும் வவ்வாலுக்கு தங்குதடையின்றி வந்து சேர்வதில் இடையூறு செய்வது என்று தீர்மானித்தேன். அதற்கு ஒரே வழி அல்ட்ராசானிக் அலைகள் பயனிக்கும்போது அதன் பாதையில் முடிந்த அளவு இடையூறு ஏற்படுத்துவது அல்லது வவ்வாலுக்கு திரும்ப கிடைக்கும் சிக்னலில் குழப்பத்தை ஏற்படுத்துவது என்பதுதான்.
இப்போது வீட்டில் இருந்த அனைவரையும் ஓரிடத்தில் உக்காரச் செய்துவிட்டு. ஏசியை அனைத்துவிட்டு (இதை ஏன் அனைத்தேன் எனக்கு நானே கன்பீஸாகிவிட்டேன் போலும்) மின் விசிரியை சுழல விட்டேன்... நான் நினைத்தது வீன் போகவில்லை.... வவ்வாலுக்கு தற்போது சிக்னல் குழப்பம் ... மின்விசிறியின் அதீத வேகத்தாலும், அதன் அருகாமை தன்மையாலும் வவாலுக்கு வந்து சேரும் அல்ட்ராசானிக் அலைகளின் இடைவெளி சீராக இல்லாமல் அது பறப்பதில் சீரற்ற தன்மை நிலவியது... மின்விசிரியின் வேகத்தை சற்றுக் கூட்டியபோது வவ்வாலுக்கு முற்றிலும் குழப்பமாகி முடிவில் மின்விசிரியின் றெக்கையில் அடிபட்டு கீழே விழுந்தது.
வேகமாய் அதை கையில் எடுத்துப்பார்த்தேன், நல்ல வேளை லேசான காயம்தான், ஒரு றெக்கையில் அடி பட்டிருக்கிறது, தலையிலோ, உடம்பிலோ அடிபட்டிருந்தால் பிழைப்பதே கடினமாயிருக்கும். தற்போது உயிருக்கு ஒன்றும் ஆபத்தாகப்படவில்லை. அலைப்பேசியெடுத்து என் கால்நடைமருத்துவ நண்பனை அழைத்து காயத்திற்கு செய்யவேண்டிய வைத்தியம் பற்றிக்கேட்டேன்,
அவன் யார் மேல் கோவத்தில் இருந்தானோ தெரியவில்லை....வள்..வள்..என்று எறிந்து விழுந்தான்....கடைசியில் விடாமல் கேட்டதில் கோவம் வந்து
பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் எதோ கொஞ்சம் வைத்தியம் பார்க்கத்தெரியும், ஆனால் ரெண்டுங் கெட்டானான வவ்வாலுக்கெல்லாம் எனக்கு வைத்தியம் பார்க்கத்தெரியாது போனை வைடா நயே என்று மிகுந்த மரியாதையாக சொன்னதில் அலைப்பேசியை அனைத்துவிட்டேன். பரதேசி அவன் ஒழுங்காக படிக்காமல் இருந்துவிட்டு கோவத்தை என் மேல் காட்டுகிறான், மேலும் அவன் வீட்டம்மா
பூரிக்கட்டையால் அடித்ததற்கு ஏன் என்மேல் எறிந்து விழுவதால் என்ன பயன் என்று இதுநாள் வரயிலும் எனக்குப் புரியவில்லை.
என் கையில் இருக்கும் அடிபட்ட வவ்வாலுக்கு வலி போலும் என் விரலைக் கடித்துப் பார்த்தது... பற்கள் சின்னதாக இருந்தது அவ்வளவாக எனக்கு வலிக்கவில்லை.... அப்போதுதான் என் சிறுவயதில் என் கிராமத்துப் பாட்டியின் பச்சிலை வைத்தியம் ஞாபகம் வந்தது.
நல்ல வேலை என் வீட்டுத்தோட்டத்தில் இரண்டு பச்சிலைச் செடி இருக்கிறது (இல்லையென்றால் பதிவர் மோகன்குமாருக்கு போன் செய்து அவர் வீட்டுத்த் தோட்டத்தில் பச்சிலை அல்லது வேறு ஏதேனும் மூலிகைச் செடி இருக்கிறதா என்று கேட்க, என் மொபைலில் பேலன்ஸ் குறைந்திருக்கும்), இதுநாள்வரை அதை எதற்கும் உபயோகித்ததில்லை. போய் நாலு இலைகளை பறித்து அதை கசக்கிப்பிழிந்து அதன் சாற்றை வவ்வாலின் காயத்தின் மேல் விட்டேன். வவ்வாலுக்கு எரிந்ததா...குளிர்ச்சியாக இருந்ததா தெரியவில்லை கொஞ்சம் துள்ளி, பின் அமைதியானது.
பின் அதனை வீட்டிலிருந்த அழுக்கு கூடயை தலைகீழாக கவிழ்த்து அதன் அடியில் விட்டேன், சில
திராட்சைப் பழங்கள் உணவாக வைத்தேன்..
மறுநாள் காலை வவ்வால் எப்படி இருக்கிறது என்று பார்க்க அந்த கூடையை திறந்தால், பட்டென்று பறந்துவிட்டது, காயம் ஆறிவிட்டது போலும், ஆனால் அதிசமாக அது நேராக வாசல் வழியே பறந்து சென்றதை ஆச்சர்யத்துடன் பார்த்தேன். இனியும் இங்கிருந்தால் பட்டிகாட்டான் பச்சிலைச் சாற்றை வாயிலும் ஊற்றிவிடுவானோ என்று தவறாக நினைத்துவிட்டதுபோலும்.
எப்பா அவ்வளவுதாம்பா... கதை முடிஞ்சிருச்சி.... வவ்வால் பத்தி சில தகவல்கள் தெரியனும்னா தொடர்ந்து படிங்க இல்லைனா நேரா டிஸ்கி வழியா கமெண்ட் பாக்ஸுக்கு ஓடிப்போங்க.....
வவ்வால்
பற்றிய சில தகவல்கள் :
- பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு இவ்வௌவால்தான்.
- அதன் உடலில் சிறிதலவிலான
ரோமங்கள் இருக்கும்
- வவ்வாலுக்கு கைகள் மற்றும்
கால் பாதங்கள் உண்டு.
- ஒரு பழுப்பு நிற வவ்வால்
ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்களை பிடித்து உண்ணுமாம். சென்னையில் நெறைய
வளர்க்க வேண்டும்.
- இரவில் தெரியும்
பலவகையான பூச்சிகளை தின்று பூச்சிகளின் அளவை கட்டுப்படுத்துகிறதாம்.
- பெரும்பாலான செடிகளைத்தாக்கும்
பூச்சிகளை உண்பதால் விவசாயிகளுக்கு மண்புழுவைப்போல வவ்வாலும் நண்பனாம்.
மேலும் அதனால் பூச்சி மருந்துகள் தேவைப்படாமல் உணவுப் பொருளின்
நச்சுத்தன்மையும் குறைகிறதாம்.
- 160 பழுப்பு வவ்வால்கள் ஒன்று சேர்ந்தால் 19 மில்லியன் விவசாயச் செடிகளை அழிக்கும் புழுக்களை தின்றுவிடுமாம்.
பூச்சிக்கொல்லிமருந்து செலவு வெவசாயிக்கு மிச்சம். விவசாய விளைபொருள்கள் விஷத்தன்மையில்லாமல்
கிடைக்கும், மகசூலும் அதிகரிக்கும்.
- மற்ற பறவைகள் போலவே மகரந்த சேர்க்கையில் அதிக உதவி செய்கிறது. மேலும் பழங்களை தின்று அதன் கொட்டைகளை கீழே போட்டு விடுவதால் காடுகளில் மரங்கள் தொடர்ந்து வளர உதவுகிறது. (அசோகர் சாலை ஓரங்களில் மட்டும்தான் நிழல் தரும் மரங்களை நட்டார், ஆனால் வவ்வால் நாடெங்கும் , காடெங்கும் விதைக்கிறது மை லார்ட்)
- மனிதனின் இதயம் சார்ந்த மருத்துவத்திற்காக, வாம்பையர்( Vampire Bats) வவ்வாலின் சலைவாவிலிருந்து மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. (கண்டுபிடித்து முடித்துவிட்டார்களா? பன்னி ஆன்சர் பிளீஸ்)
- மனிதகுலம் மற்றும் பூமியின் சுற்றுச் சூழலுக்கு பெரிதும் உதவியாக இருப்பதால் வவ்வால்களை பாதுகாக்க நாம் முயல்வோமாக.
அல்ட்ராசானிக் அலையனுப்பி அதன் மூலம் இரையை பிடிக்கும் வரைபட விளக்கம்.
படங்கள் : கூகுள் இமேஜஸ். மற்ற தகவல்கள் உதவி இணையம்.
டிஸ்கி : அருமை நண்பர்களே, கும்மி அடிக்கும்போது ஆபாச வார்த்தைகளை தவிர்க்குமாறு வேண்டி விரும்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். மற்றபடி இது ஓபன் கிரவுண்ட் நோ அதர் ரெஸ்ட்ரிக்ஷன் யுவர் ஆனர்..........,
ஆங் சொல்ல மறந்துட்டேன்.... தனிமனிதனின் தனிப்பட்ட வாழ்க்கயை விமர்சித்தல், ஜாதி மத கருத்துக்கள் இவற்றையும் தவிர்க்க வேண்டுகோள்.
உங்கள் புரிதலுக்கு அட்வான்ஸ் நன்றி.
உங்கள் புரிதலுக்கு அட்வான்ஸ் நன்றி.
68 comments:
//பதிவர் மோகன்குமாருக்கு போன் செய்து அவர் வீட்டுத்த் தோட்டத்தில் பச்சிலை அல்லது வேறு ஏதேனும் மூலிகைச் செடி இருக்கிறதா என்று கேட்க, என் மொபைலில் பேலன்ஸ் குறைந்திருக்கும்//
போன் பண்ணா நான் அம்புட்டு நேரமா பேசுறேன் !!
// மோகன் குமார் said...
//பதிவர் மோகன்குமாருக்கு போன் செய்து அவர் வீட்டுத்த் தோட்டத்தில் பச்சிலை அல்லது வேறு ஏதேனும் மூலிகைச் செடி இருக்கிறதா என்று கேட்க, என் மொபைலில் பேலன்ஸ் குறைந்திருக்கும்//
போன் பண்ணா நான் அம்புட்டு நேரமா பேசுறேன் !! //
ஒத்த ரூவாவாச்சும் குர்றைன்சிரும்லேண்ணே. :)
ஃபுலோவுக்காக சேத்தது ஊறுகாய் மாதிரி... :)
இதுவரை வவ்வால் என்றால் ஒரு பதிவர் என்று இன்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். விம் போட்டு விளக்கியதற்கு நன்றி!
அருமையான பதிவு..
தாங்கள் பத்தி பத்தியாக இடை இடையே படங்களையும் சேர்த்து எழுதியிருந்த விதம என்னை மிகவும் கவர்ந்தது. நான் இந்த பதிவை படிக்காததால் என்னால் இந்த பதிவிற்கு எந்த கூற முடியாமல் தவித்து நிற்கிறேன்..
பதிவின் தலைப்பையும் பதிவிலுள்ள படங்களையும் வைத்து ஒப்பிட்டு பார்த்தால் தாங்கள் யாரையோ வம்பிழுக்க தான் இந்த பதிவை போட்டிருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் நினைக்க கூடும். (நெசமா நன் அப்படி நினைக்கவே இல்ல)
தாங்கள் கடைசியாக "டிஸ்கி" என்ற தலைப்பில் பதிந்திருந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.. தாங்கள் இது போன்ற நல்ல கவிதைகளை ஏதாவது வெளிவராத பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்கலாம் என்பது எனது அவிப்பிராயம்.
நன்றி
அருமையான பதிவு..
தாங்கள் பத்தி பத்தியாக இடை இடையே படங்களையும் சேர்த்து எழுதியிருந்த விதம என்னை மிகவும் கவர்ந்தது. நான் இந்த பதிவை படிக்காததால் என்னால் இந்த பதிவிற்கு எந்த கூற முடியாமல் தவித்து நிற்கிறேன்..
பதிவின் தலைப்பையும் பதிவிலுள்ள படங்களையும் வைத்து ஒப்பிட்டு பார்த்தால் தாங்கள் யாரையோ வம்பிழுக்க தான் இந்த பதிவை போட்டிருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் நினைக்க கூடும். (நெசமா நன் அப்படி நினைக்கவே இல்ல)
தாங்கள் கடைசியாக "டிஸ்கி" என்ற தலைப்பில் பதிந்திருந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.. தாங்கள் இது போன்ற நல்ல கவிதைகளை ஏதாவது வெளிவராத பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்கலாம் என்பது எனது அவிப்பிராயம்.
நன்றி
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுவரை வவ்வால் என்றால் ஒரு பதிவர் என்று இன்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். விம் போட்டு விளக்கியதற்கு நன்றி! //
அப்படியா தங்களின் தகவலுக்கு நன்றி.
அப்புறம் நான் விம் போட்டு விளக்கவில்லை பச்சிலை சாற்றால் கழுவி விட்டேன் மை லார்ட்....
விம் போட்டு விளக்கி இருந்தாலும், வவ்வால்கள் வாய்வழியேதான் கக்கா போகும் என்ற அரிய தகவலை இருட்டடிப்பு செய்திருப்பது வருத்தமளிக்கிறது.
பதிவு அருமை, நல்ல அலசல்! இட்டலி-4
// @ வெறும்பய
தாங்கள் கடைசியாக "டிஸ்கி" என்ற தலைப்பில் பதிந்திருந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.. தாங்கள் இது போன்ற நல்ல கவிதைகளை ஏதாவது வெளிவராத பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்கலாம் என்பது எனது அவிப்பிராயம். //
தலைப்ப படிச்சிட்டு நேரா டிஸ்கில போய் உக்காந்திருக்கான் பரதேசி.....
படங்களையாவது உத்துப்பாத்தியா இல்லியாடா?
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
விம் போட்டு விளக்கி இருந்தாலும், வவ்வால்கள் வாய்வழியேதான் கக்கா போகும் என்ற அரிய தகவலை இருட்டடிப்பு செய்திருப்பது வருத்தமளிக்கிறது. //
அதை தங்களைப் போன்ற தகவல் களஞ்சியங்கள் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையில் விட்டதே(விட்டையல்ல)...
ஜெய் வௌவால் பற்றிய அருமையனா செய்தியை அழகாக பகிர்ந்ததற்கு நன்றி.
Kathai..
Ok....
Neethai....?????
Enaga....?????
Ipaa
paappaa
kathai thane
sonneenga....????
Athula
neethi
sollanum....
Thakkaali....
Curent
varattum....
Athu varai
mobile thaan.....
Saavunga.....!!!!!!
ஆஹா ..வவ்வாலை பற்றி அருமையான விழிப்புணர்வு செய்தி
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிவு அருமை, நல்ல அலசல்! இட்டலி-4 //
நன்றி இட்டலி- 4 க்காக.
// நாய் நக்ஸ் said...//
யோவ் நக்ஸ் எதா இருந்தாலும் தமிழ்ல சொல்லுயா.... ஏதோ திட்ரேனு தெரியுது என்ன திட்ர்ரெனுதான் புரியலை.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
// கும்மாச்சி said...
ஜெய் வௌவால் பற்றிய அருமையனா செய்தியை அழகாக பகிர்ந்ததற்கு நன்றி.//
அண்ணாச்சி வாங்க சுற்றுலா முடிஞ்சிடுச்சா?.
வருகைக்கு நன்றி அண்ணே.
// இம்சைஅரசன் பாபு.. said...
ஆஹா ..வவ்வாலை பற்றி அருமையான விழிப்புணர்வு செய்தி //
உங்களின் இந்த ஊக்கப்படுத்தும் பண்பு என்றும் தொடர வேண்டுகிறேன்.
நன்றி உங்கள் கருத்துக்காக.
//////பட்டிகாட்டான் Jey said...
// நாய் நக்ஸ் said...//
யோவ் நக்ஸ் எதா இருந்தாலும் தமிழ்ல சொல்லுயா.... ஏதோ திட்ரேனு தெரியுது என்ன திட்ர்ரெனுதான் புரியலை.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////////
நாய்-நக்ஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போகிறார், எனவே தமிழில் பேசமாட்டார் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
சர்வதேச நாய்நக்ஸ் வாசகர் வட்டம்
// வெறும்பய said...//
வெண்ணை ஒரே கமெண்ட ரெண்டுவாட்டி போட்டா ரெண்டுவாட்டியெல்லாம் பதில் சொல்ல்முடியாது...
[[[ பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பட்டிகாட்டான் Jey said...
// நாய் நக்ஸ் said...//
யோவ் நக்ஸ் எதா இருந்தாலும் தமிழ்ல சொல்லுயா.... ஏதோ திட்ரேனு தெரியுது என்ன திட்ர்ரெனுதான் புரியலை.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////////
நாய்-நக்ஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போகிறார், எனவே தமிழில் பேசமாட்டார் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
சர்வதேச நாய்நக்ஸ் வாசகர் வட்டம் ]]]]]
அவர் மொபைலுக்கு தமிழ் ஃபாண்ட் குடுத்து உதவு மக்கா....
//
Neethai....?????
Enaga....????? //
அப்பாடா பொறுமையா படிச்சா புறியுது!!!
நீதி : வவ்வாலை அடிக்கக் கூடாது வளர்த்துவிடனும்.... ஓகேவா...நக்ஸ் :)
Yowwww...jey..
Naan pottathu
thamil
comment thaan....
Nallavanga....
Punniyam
seithavanga
kannukku thaan
tamil-la
theriyum......
Ippa
ungalukku
eppadi
theriyuthu....?????
// Nallavanga....
Punniyam
seithavanga
kannukku thaan
tamil-la
theriyum...... //
அடப்பாவி இனி நீ போடுர கமெண்ட் எல்லாம் புரியுதுன்னு சொல்லனுமே........
உங்கள் கமெண்ட் எனக்கு தமிழ் எழுத்துக்களால் கோர்க்கப்பட்ட பூ மாலையாகத்தான் தெரிகிறது நக்ஸ் அவர்களே.
மச்சி மேலே உள்ள பதிவ சுக்கமா ரெண்டு வரில சொல்லு பாக்கலாம் ...... முடியல
நானும் இதுவரையில் இணையத்தில் பல கவிதைகளை படித்திருக்கிறேன் ஆனால் "நாய் நக்சின்' கவிதைகளை போன்று இதுவரையில் படித்ததில்லை.. எவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறாய் வரிக்கி வரி என்டர் தட்டி
வாழ்த்துக்கள் கவிப்பெருமான் "நாய் நக்ஸ்" அவர்களே
மசால் தோசை 007
மங்குனி அமைச்சர் said...
மச்சி மேலே உள்ள பதிவ சுக்கமா ரெண்டு வரில சொல்லு பாக்கலாம் ...... முடியல//
மச்சி உனக்கு இன்னுமா புரியல..
புரிஞ்சாலும் அத ஃபேஸ்புக்லதான் சொல்லுவாரு, இங்க சொல்லமாட்டார்........!
சார் சுவாரசியமா எழுதி இருக்கீங்க.., வவ்வால் மீது நீங்கள் காட்டும் உயர்ந்த பண்பு பற்றி நினைக்கும் பொழுது முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, வவ்வாலுக்கு பச்சிலை கொடுத்த பட்டிகாட்டான், என்று வரலாறு கூற வேண்டும் .( அய்யா வரலாற்றுச் சுவடுகள் அவர்களே நோட் தி பாயின்ட்)
கவிப்பெருமான், பின்னூட்ட கவிஞ்சர், பிரபல பதிவர் நாய் நக்ஸ் அவர்கள் சமீபகாலமாக எழுதிவரும் எண்டர் கவிதைகள் விரைவில் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பாடப்புத்தகத்தில் வெளியிடப்படும்.
இப்படிக்கு
சர்வதேச நாய்நக்ஸ் வாசகர் வட்டம்
வவ்வால்... விளக்கமாக வெளங்க வைத்தமைக்கு நன்னி..ஆங்.
// மங்குனி அமைச்சர் said...
மச்சி மேலே உள்ள பதிவ சுக்கமா ரெண்டு வரில சொல்லு பாக்கலாம் ...... முடியல //
ஏன் பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுறதுக்கா?...
காரியத்துல கண்ணாயிருக்கானே பக்கிப்பய....
சிரிப்பு போலீஸ் என்கிற பிளாக்கில் காவியங்கள் எழுதும் சிரிப்பு போலீஸ் ரமேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
[[ வெறும்பய said...
நானும் இதுவரையில் இணையத்தில் பல கவிதைகளை படித்திருக்கிறேன்
வாழ்த்துக்கள் கவிப்பெருமான் "நாய் நக்ஸ்" அவர்களே
மசால் தோசை 007 ]]
நக்ஸ் படித்து பரவசப்பட்டிருப்பார்.
அப்புரம் மசால் தோசை 007 க்கும் நன்றிகள்.
[[ வெறும்பய said...
மங்குனி அமைச்சர் said...
மச்சி மேலே உள்ள பதிவ சுக்கமா ரெண்டு வரில சொல்லு பாக்கலாம் ...... முடியல//
மச்சி உனக்கு இன்னுமா புரியல.. ]]
அவன் ஒருமாசமா ”ஒரே” கெறக்கத்துல திரியுதாம்... எதுவும் புரியாது.
[[ பன்னிக்குட்டி ராம்சாமி said...
புரிஞ்சாலும் அத ஃபேஸ்புக்லதான் சொல்லுவாரு, இங்க சொல்லமாட்டார்........! ]]
அப்படி எறக்கு அருவாள....
மங்கு உசுரோட இருக்கியா?....
இந்த வவ்வால் கடிக்குமா சார்?
[[ சீனு said...
சார் சுவாரசியமா எழுதி இருக்கீங்க.., வவ்வால் மீது நீங்கள் காட்டும் உயர்ந்த பண்பு பற்றி நினைக்கும் பொழுது முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, வவ்வாலுக்கு பச்சிலை கொடுத்த பட்டிகாட்டான், என்று வரலாறு கூற வேண்டும் .( அய்யா வரலாற்றுச் சுவடுகள் அவர்களே நோட் தி பாயின்ட்) ]]
அப்படியே ஹிஸ்ட்ரி சேல்னல்ல இத சொல்லச்சொல்லுங்க மக்காஸ்...
[[ ன்னிக்குட்டி ராம்சாமி said...
கவிப்பெருமான், பின்னூட்ட கவிஞ்சர், பிரபல பதிவர் நாய் நக்ஸ் அவர்கள் சமீபகாலமாக எழுதிவரும் எண்டர் கவிதைகள் விரைவில் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பாடப்புத்தகத்தில் வெளியிடப்படும்.
இப்படிக்கு
சர்வதேச நாய்நக்ஸ் வாசகர் வட்டம் ]]
அந்தாளு அடுத்து சென்னை வந்தா இழுத்துப்பிடிச்சி......... வச்சிருக்கிர போனையெல்லாம் பிடுங்கிட்டு அனுப்பனும். அப்பதாம் சரிப்படும்.
இது கற்பனைக்கதை அல்ல, உண்மைச் சம்பவம் ருசிக்காக கொஞ்சம் ஊறுகாய் சேர்க்கப்பட்டிருக்கிரது .//
நானும் ரொம்ப நேரமாய் ஊறுகாயை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவே இல்லை. நான் எப்படி சரக்கடிப்பது
#மப்புடன் மாலுமி
[[ மனசாட்சி™ said...
வவ்வால்... விளக்கமாக வெளங்க வைத்தமைக்கு நன்னி..ஆங். ]]
அண்ணாச்சி அந்த கருப்புக் கானிய கழிட்டிட்டு தான படிச்சீக.... அப்ப கரெக்ட்டாதான் வெளங்கிருக்கும்.
// சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...
இந்த வவ்வால் கடிக்குமா சார்? //
பல்லுல சார்ப் இல்ல... கடிச்சா கிச்சுகிச்சு தான் வரும்....
சிரிப்பு போலீஸ் என்கிற பிளாக்கில் காவியங்கள் எழுதும் சிரிப்பு போலீஸ் ரமேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
[[ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிரிப்பு போலீஸ் என்கிற பிளாக்கில் காவியங்கள் எழுதும் சிரிப்பு போலீஸ் ரமேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ]]
அடங்கொன்னியா.... உனக்கு பேஸ்புக்ல நெய்வேத்தியம் காட்டிருக்குடா....
உனக்கு பிறந்தநாள் பதிவு போடனும்னு சொன்னா...பன்னி அடிக்க வரான்.... நான் என்ன செய்ய.....
ஓகே. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இதோட இன்னிக்கி 7 வாட்டி சொல்லிருக்கேண்டா டேமேஜரு...
என்னது வவ்வால் கொசுவை எல்லாம் ஒழிக்குதா ......ரைட்டு விளங்கிரிச்சி ..........எவ்ளவு பெரிய உள்குத்து இது ...
[[ சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...
சிரிப்பு போலீஸ் என்கிற பிளாக்கில் காவியங்கள் எழுதும் சிரிப்பு போலீஸ் ரமேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ]]
டூப்ளிகேட் போலீஸ்!!!! டூப்ளிகேட் கமெண்ட் !!!!!!!!
[[[ அஞ்சா சிங்கம் said...
என்னது வவ்வால் கொசுவை எல்லாம் ஒழிக்குதா ......ரைட்டு விளங்கிரிச்சி ..........எவ்ளவு பெரிய உள்குத்து இது .. ]]]
எப்பா நான் யதார்த்தமாதான் எழுதுனேன்....
எல்லாருக்கும் உள்குத்தா தெரியுது.... வெள்ளந்தியா ஒரு பதிவு போட விடமாட்டீங்குராய்ங்களே.... அவ்வ்வ்வ்வ்வ்வ்
[[ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இது கற்பனைக்கதை அல்ல, உண்மைச் சம்பவம் ருசிக்காக கொஞ்சம் ஊறுகாய் சேர்க்கப்பட்டிருக்கிரது .//
நானும் ரொம்ப நேரமாய் ஊறுகாயை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவே இல்லை. நான் எப்படி சரக்கடிப்பது
#மப்புடன் மாலுமி]]
ஊறுகாயத் நக்கி சாப்பிடனும்....
அப்படியே அள்ளி சாப்பிடக்கூடாது...
இப்படிக்கு,
டெர்ரர் பாண்டியன்
உம்ம பதிவப் படிக்கல....
ஆனா, யாரா இருந்தாலும் போட்டுத் தள்ளுறோம்!!!
டீலா?
#கமண்ட் உதவி- பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி அலைஸ் கொசக்கசி பசப்புகழ்!
// வெளங்காதவன்™ said...
உம்ம பதிவப் படிக்கல....
ஆனா, யாரா இருந்தாலும் போட்டுத் தள்ளுறோம்!!!
டீலா?
#கமண்ட் உதவி- பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி அலைஸ் கொசக்கசி பசப்புகழ்! //
நரிப்பய வெளியூர் போய் மாட்டிகிட்டான் கமெண்ட் போடமாட்டானு தகிரியமா இர்ந்தேன்... கமெண்ட் போட ஆள் அனுப்பிருக்கானா....
பங்கு பேன் போட்டு அதை குழப்பி அடிபடவைத்ததுக்கு உன்மொபைல் புளுடூத் ஆன் செய்து...இல்ல இன்பராரெட் ஆன் செய்து வ்வாலே..வ்வாலே வூட்டை புட்டு ஓடிப்பூடு அப்படின்னு மெசேஜ் அனுப்பியிருந்தாலே ஓடிருக்குமே..?
வீனா அடிபட்டு நேகடிச்சிட்டியே...!வவ்வு பாவம் உம்மை சும்மா விடாது..!அவ்வ்வ்
50
அருமை நண்பர்களே, கும்மி அடிக்கும்போது ஆபாச வார்த்தைகளை தவிர்க்குமாறு வேண்டி விரும்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
/////////////////
உம் பேச்சைக் கேட்காம நாய்நக்ஸ் இங்கிலிபிசுல உன்னை வண்டை வண்டையா திட்டியிருக்கிறாரு..வோய்!
வெளங்காதவன்™ said... 51
50
//////////////
நல்லா வெளங்குச்சு...!
[[ வீடு சுரேஸ்குமார் said...
பங்கு பேன் போட்டு அதை குழப்பி அடிபடவைத்ததுக்கு உன்மொபைல் புளுடூத் ஆன் செய்து...இல்ல இன்பராரெட் ஆன் செய்து வ்வாலே..வ்வாலே வூட்டை புட்டு ஓடிப்பூடு அப்படின்னு மெசேஜ் அனுப்பியிருந்தாலே ஓடிருக்குமே..?
வீனா அடிபட்டு நேகடிச்சிட்டியே...!வவ்வு பாவம் உம்மை சும்மா விடாது..!அவ்வ்வ் ]]
அட இந்த அகுடியா தோனாமப் போச்சே...சரி விடு என்ன இருந்தாலும் நான் நாலாப்புல பெயிலானவந்தானே....
அடுத்தவாட்டி இதச் செஞ்சுப்புடலாம்... இதுக்குதான் உன்னை மாரி பங்காளிகளோட பழகனும்னு சொல்ரது
[[ வெளங்காதவன்™ said...
50
September 8, 2012 12:22 PM ]]
டேய்ய்....டேய்ய்....டேய்ய்..டேய்ய்..டேய்ய்.டேய்ய்.டேய்ய்.டேய்ய்டேய்ய்டேய்ய்.
நலாருடா வெளங்காதவனே....,
அப்புறம் நரிகூட ரொம்ப சாகவாசம் வச்சிக்காத அப்புறம் இப்படிதான்....
[[ வீடு சுரேஸ்குமார் said...
அருமை நண்பர்களே, கும்மி அடிக்கும்போது ஆபாச வார்த்தைகளை தவிர்க்குமாறு வேண்டி விரும்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
/////////////////
உம் பேச்சைக் கேட்காம நாய்நக்ஸ் இங்கிலிபிசுல உன்னை வண்டை வண்டையா திட்டியிருக்கிறாரு..வோய்! ]]
நான் அப்பவே நினைச்சேன்.... ந்க்கொய்யா அசிங்கமாவா திட்டிருக்காப்ல?????
நாந்தான் அவர் பன்ற கால் அட்டெண்ட் பன்றேனே அப்புரமுமா திட்றாக...,
பங்காளி தப்பிக்க வழி ஏதும் இருக்கா?...
//பட்டிகாட்டான் Jey said...
// வெளங்காதவன்™ said...
உம்ம பதிவப் படிக்கல....
ஆனா, யாரா இருந்தாலும் போட்டுத் தள்ளுறோம்!!!
டீலா?
#கமண்ட் உதவி- பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி அலைஸ் கொசக்கசி பசப்புகழ்! //
நரிப்பய வெளியூர் போய் மாட்டிகிட்டான் கமெண்ட் போடமாட்டானு தகிரியமா இர்ந்தேன்... கமெண்ட் போட ஆள் அனுப்பிருக்கானா..///
யோவ்... அவன் நம்ம சிஷ்யப் புள்ளைய்யா!
//பட்டிகாட்டான் Jey said... 55
[[ வெளங்காதவன்™ said...
50
September 8, 2012 12:22 PM ]]
டேய்ய்....டேய்ய்....டேய்ய்..டேய்ய்..டேய்ய்.டேய்ய்.டேய்ய்.டேய்ய்டேய்ய்டேய்ய்.
நலாருடா வெளங்காதவனே....,
அப்புறம் நரிகூட ரொம்ப சாகவாசம் வச்சிக்காத அப்புறம் இப்படிதான்....
////
எங்களோட சரித்திரப் புகழ்பெற்ற மீட்டிங்கப் பத்திச் சொன்னானா?
வவ்வால் பற்றி நிறைய தகவல்கள் பங்காளி.... அருமை...!
நால்லாதானே எழுதுறீங்க...அடிக்கடி எழுத என்ன கேடாம்...?
பின் குறிப்பு: ஒரு கமெண்ட் போட திருப்பதில லைன்ல நிக்குற மாதிரி நின்னு வரவேண்டி இருக்கே.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
அதை காயம்படவும் செஞ்சிட்டு மருந்தும் கொடுத்திருக்கீங்க.. நீங்க நல்லவரா கெட்டவரா?
[[[ வெளங்காதவன்™ said...
யோவ்... அவன் நம்ம சிஷ்யப் புள்ளைய்யா! ]]
அவனுக்கு ஊரெல்லாம் குருவா இருக்காய்ங்க. நார்மலா ஒரு குருவுக்கு பல சிஷ்யகோடிங்க இருப்பாங்க....இங்க ஒத்த நரிப்பயலுக்கு பல குரு’கோடிங்க இருப்பாங்கபோலயே...நரி நீ பெரியாம்பளதாண்டா.....
[[ வெளங்காதவன்™ said...
எங்களோட சரித்திரப் புகழ்பெற்ற மீட்டிங்கப் பத்திச் சொன்னானா? ]]
இந்த மாசக்கடைசில சென்னை வர்ரானாம்... அடிச்சிக் கேட்டா அம்புட்டையும் ஒளருவாம்...
dheva said...
// வவ்வால் பற்றி நிறைய தகவல்கள் பங்காளி.... அருமை...! //
வழிதவறி வட்ந்துட்டியாப்பா!!!!!!.
// நால்லாதானே எழுதுறீங்க...அடிக்கடி எழுத என்ன கேடாம்...? //
எல்லாம் நாலு நாளா பயபூள்லக வச்ச தலைப்பும் பதிவையும் படிச்சிட்டு கோவத்துல எழுதுனது... நல்லருக்கா....ஓகே...நம்பிட்டேன் :)
// பின் குறிப்பு: ஒரு கமெண்ட் போட திருப்பதில லைன்ல நிக்குற மாதிரி நின்னு வரவேண்டி இருக்கே.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! //
அப்ப பன்னிகுட்டி பிலாக்ல கமெண்ட் போட்டதே இல்லைனு சொல்லு பங்காளி... அங்க இதவிட கியூ சாஸ்தி....
அடிக்கடி வரனும்... சண்டை போட்டாலும் பாசத்தோட போடலாம்.
// எஸ்.கே said...
அதை காயம்படவும் செஞ்சிட்டு மருந்தும் கொடுத்திருக்கீங்க.. நீங்க நல்லவரா கெட்டவரா? //
யோவ் எஸ்கே. வந்து கமெண்ட் போடுய்யானு சொன்னா... அதவிட்டுட்டு வந்து ஆப்படிக்கிற வேலைய பாக்கிறே???. நீர் ஆனியே புகுங்க வேணாம் ஓடிப்போயிருங்க மக்கா....
நம்புங்கப்பா நான் ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப நல்லவன்.
//கொஞ்சம் நேரம் வவ்வாலை ரசித்தேன்... அப்புறம் அதை வெளியே விரட்ட முடியாமல் தவிச்சேன்... //
ஹ்ம்ம்... இந்த எடத்துல வெளங்குச்சு....
ஒரு சின்ன வவ்வால் இந்த பாடு படுத்திடுச்சா? சுவையான பகிர்வு!
இன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html
சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
present sir
அடிக்கடி தொடர்ந்து எழுதலாமே!
Post a Comment