முஸ்கி : ஒரு வாரத்திற்கு முன்பு பிரேமா மகள் என்ற பதிவர் ” நான் கடவுள்” என்ற தலைப்பில் அவரது பூக்குழி அனுபவங்களை எழுதி இருந்தார், அதை படித்ததிலிருந்து எனக்கும் பழைய நினைவுகள் வந்து இந்த பதிவை எழுதியிருக்கிறேன்.
(பதிவு நீளமாக அமைந்து விட்டது, எடிட் செய்ய முயற்சித்தால், எங்கே கமல்ஹாசன் நடித்த ‘குணா’ படம் மாதிரி ஆகிவிடுமோ என்று பயந்து அப்படியே பதிவேற்றிவிட்டேன்)
கிராமத்தில் உள்ள என் குடும்பத்து உறுப்பினர்களுக்கு கடவுள் நம்பிக்கை, கோவில்களுக்கு செல்லும் பழக்கம் இருந்தாலும், எனக்கு அதில் ஆர்வம் இல்லாமல் இருந்தது, “அது அதுபாட்டுக்கு இருக்கட்டும், நாம நம்ம வேலைகளை மட்டும் பாப்போம்” என்ற எனது நிலையில் அவர்கள் குறுக்கிட்டது இல்லை. நானும் அவர்கள் காலங்காலமா தொடர்ந்து வரும் பழக்கத்தால், கோவில் போவதில், யாருக்கும் இடையூறு இல்லாததால், அவர்களின் செயலை நிறுத்த முயன்றதில்லை.
ஒவ்வொரு வருடமும் கிராமத்தில் 3 நாள் நடக்கும் காளியம்மன் பொங்கல் திருவிழாவை கூட, ஒட்டு மொத்த நண்பர்களையும், உறவினர்களையும் ஓரிடத்தில் காணும் சந்தோசத்திற்காகவும், சிறுவர்/பெரியவர் ஓட்ட பந்தயம், மியூசிக்கல் சேர், உறியடி, கண்ணைக்கட்டி பாணை உடைத்தல், க்ரீஸ் தடவிய கம்பத்தின் உச்சியில் கட்டிவிட்ட ஒருமூடி தேங்காயை(பணமுடிப்பும் உண்டு..அதாங்க ’டெப்பு’) எடுக்க போராடும் மாமன்/மச்சான், பங்காளிகளின் போராட்டங்கள், இரவில் வில்லுப்பாட்டு, பாட்டுக்கச்சேரி, கரகாட்டம், தேவராட்டம் என்று அமர்க்களங்களை பார்ப்பதற்கென்றே ஊரில் ஆஜராய்விடுவேன்.
மேலும் எங்கள் ஊர் பெண்கள், மாவிளக்கு கையில் ஏந்தி ஊர்வலமாக வரும் அழகு இருக்கிறதே.... காண கண்கோடி வேண்டும். ’வருடம் முழுதும் திருவிழா தொடராதா’? என்ற ஏக்கம் மனதில் எழும். பகல் நேரத்தில் முறைப்பெண்கள் ( ஒரே ஊர், ஒரே கம்யூனிட்டி என்பதால், இவர்களுக்கு மாமன்/மச்சன்கள் மற்றும் அண்ணன்/தம்பிகள் உறவு தெரியும்) ஒரு செம்பில் மஞ்சள் தண்ணீருடன் நம் மீது ஊற்ற வரும்போது, உல்லூலாய்க்காக அவர்களுக்கு போக்கு காட்டிவிட்டு, பின் இஷ்டப்பட்டு மாட்டிக்கொண்டு மஞ்சள் தண்ணீரில் நனையும் போது, அவர்கள் முகத்தில் ஏதோ ஜெயித்துவிட்ட சந்தோசத்தை பார்க்க வேண்டுமே. இதை திருவிழா அனுபவமாக ஒரு தனி பதிவாகத்தான் போட வேண்டும். அடிப்படையில் பட்டிகாட்டான் என்பதால் எதை எழுத ஆரம்பித்தாலும் அதை சார்ந்த கிராமத்து நினைவுகள் முதலில் வந்து உட்கார்ந்து விடுகிறது.
சரி தலைப்புக்குள் வருவோம்
நான் என் அண்ணனுடன் அன்று மாலை வழக்கம் போல் விவாதித்து கொண்டிருந்த போது தொலைப்பேசியின் அழைப்பு, (கைப்பேசி அப்போது வரவில்லை, பேஜர் என்ற ஒன்று அறிமுகமான வருடம்) பேசி விட்டு வந்தவரின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ”இரண்டு செட் ட்ரெஸ் எடுத்துட்டு ரெடியாகு. நான் ஃபேஸ் வாஷ் பண்ணிக்கிட்டு வரேன். 8.30 க்கு ஒரு பஸ் இருக்கு. அதுல ஏறினா காலையில (500கிமீ) வீட்ல இருக்கலாம்”- என்றார்.
என்ன ஏது என்று கேட்டபோது, ”தங்கச்சிக்கு (எனக்கு அக்கா) ஃபிட்ஸ்னு (வலிப்பு மாதிரி) போன்ல தகவல் வந்தது. இரண்டு பேரயும் உடனே வரச்சொல்றாங்க”- என்றார்.
காலையில் வீடு போய் சேர்ந்த போது , அக்காவை முனி அடித்திருப்பதாகவும் வாயில் சிறிது விபூதி, மீதி தலையிலென்று தெளித்துவிட்டு, பூசாரி மந்திரித்துகொண்டு இருந்ததை (இத்தனைக்கும் எங்கள் மேல் அக்கறை வைத்துள்ள நபர்) பார்த்து எனக்கும் , அண்ணனுக்கும் சரியான கோபம். அவர்களை திட்டிவிட்டு உடனே மருத்துவமனை அழைத்து சென்றோம், அங்கு டாக்டர் செக் செய்து கொண்டிருக்கும் போதே ஃபிட்ஸ் வந்து விட்டது. கை கால்கள் உதறிக்கொண்டு உடம்பு விறைத்து, நாங்கள் இருவர் மற்றும் டாக்டர், நர்ஸ் என்று பிடிப்பதற்கு சிரமப்பட்டோம். ஓரிரு நிமிடம் கழித்தே நின்றது. அதுவரை சகோதரியை அப்படி பார்த்ததில்லையாதலால், எங்கள் இருவருக்கும் கண்களில் கண்ணீர்.. டாக்டர் என்னவென்றால், ”படிச்சவங்க தைரியமா இருக்கனும்” ( பாசத்துக்கு முன்னாடி, படிச்சவனுக்கும், படிக்காதவனுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை), என்று சொல்லிவிட்டு பல டெஸ்ட் எடுக்க ஆரம்பித்தார். பின், ”எல்லாம் நார்மலாகத்தான் இருக்கு. மதுரையில் எனக்கு தெரிஞ்ச neurologist ஒருத்தர் இருக்கார், எழுதி கொடுக்கிறேன்.. போய் பாருங்க” என்றார். அங்கு சென்றும் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு பார்த்தால், எல்லாம் நார்மல் , அடுத்து, அக்காவை, சென்னை அழைத்து செல்லும் முடிவுடன், சில மாத்திரைகள், டானிக் என்று வாங்கிக்கொண்டு அக்கா வீடு வந்து சேர்ந்தோம்.
பழையபடி பூசாரி வந்தார். ஒரு கையில் காப்பு(ஒரு செம்பு வளையம்) மாட்டிவிட்டு மந்திரித்து சென்றார். வீட்டில், ’எங்கள் மனத்திருப்திக்கு’ என்றார்கள். அப்போது நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. அதன் பிறகு அக்காவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனது மூத்த அக்கா, ”இப்படியே ஃபிட்ஸ் நின்றுவிட்டால், வரும் வருடம் குடும்பத்துடன் பூக்குழி இறங்க வேண்டியிருப்பதாக”, திடீரென்று ஒரு குண்டை தூக்கி போட்டார். எங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையென்றபோது, உங்களுக்கு சகோதரியின் மீது உண்மையான பாசம் இருந்தால் வந்து சேருங்கள், இல்லையென்றால் உங்கள் இஷ்டம் , நாங்கள் மட்டும் பூக்குழி இறங்கிக்கொள்கிறோம்” என்று முடித்துக்கொண்டாள். சரி.. நாங்கள் சென்னை செல்கிறோம், ஏதும் பிரச்சினை என்றால் சென்னையில் பெரிய டாக்டரிடம் வைத்தியம் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினோம், அவர்களுக்கு பூசாரி காப்பு மாட்டிவிட்டதால், முனி பயந்து ஓடிவிட்டதாக நெனைப்பு. எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதோ உடலியல் நோய்/கோளாறு/டிஸ்ஸார்டர் என்று ஏதாவதுதான், காரணமாக இருக்க வேண்டும். நாங்கள் பார்த்த டாக்டர்கள் முறையா டயகனைஸ் பண்ணவில்லை என்றுதான் தோன்றியது.
மாதங்கள ஓடியது... இடையில் வாரம் ஒருமுறை தொலைப்பேசியில் நலம் விசாரிப்புகள்... ஏதுவும் பிரச்சினையில்லை.
மீண்டும் வீட்டிலிருந்து அழைப்பு ”பூக்குழி இறங்க நாள் குறித்துவிட்டதாக”. ஃபிட்ஸ் வந்த அக்கா, தான் நன்றாக இருப்பதாகவும், சிரமப்பட்டு வரவேண்டாம், படிப்பை கவனியுங்கள் என்று சொன்னாள். ஆனால் மூத்த அக்காவிடம் இருந்து கண்டிப்பான அழைப்பு, 1 வாரம் விரதம் இருக்க வேண்டும், குறைந்தது 3 நாள் (தினம் மாலை வேலை உணவு மட்டும், இடையில் தானே போட்ட காபி, பால் சாப்பிட்டுக் கொள்ளலாம்) ஒரு நாள் லீவு போட்டுட்டு கடைசி நாள் இங்கு வந்தால் போதும் என்றார். முடிவில் குடும்பத்தின் சந்தோசத்திற்காக ஒருமனதாக, சென்னையில் விரதமிருப்பதில் சிரமம் இருந்ததால், லீவு போட்டுவிட்டு 5 நாட்கள் முன்னதாகவே ஊர் போய் சேர்ந்தோம் ( நாங்கள் இதனால் இழக்கபோவது 3 நாள் லீவு+பூக்குழி இறங்கும் போது கால் சுட்டால் மேலும் சில நாள் லீவு + மருத்துவச் செலவு, சகோதரியின் மகிழ்சிக்காக இது செய்யலாம் ).
கோவிலில் மூன்று வேளை பூசை, பலரது சாமியாட்டம், இடையில் பேய் பிடித்து விட்டது.. விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையோடு பத்துக்கும் மேற்பட்டோர் வருகை , அவர்களுக்கு பூசாரியின் கையால் சாட்டையடி என்று ஒரு மார்க்கமாகத்தான் போய்கொண்டிருந்தது. பெரும்பாலானவர்கள் எனக்கு சிறு வயது முதல் அறிமுகமானவர்கள், வருடத்திற்கு ஒருமுறை இந்த கூத்து, முடிந்ததும், பூசாரி ஒரு மம்பட்டியை தோளில் போட்டுக்கொண்டு, அவருடைய தோட்டம் பார்த்து போய்விடுவார். எனக்கு தெரிந்து இவருக்கு இதில் கால் காசு வருமானம் இல்லை. சைக்கிள் கூட இல்லாமல் நடந்துதான் செல்கிறார்.
விரதம் என்ற பேரில் ஒரு வேலை சாப்பாடு பற்றாமல், ’வாழைத்தாரை’ வாங்கி, ஒளித்து வைத்து தின்றோம். இடையில் ’பூசைக்கு வரும் தேங்காய்மூடி’ என்று விரதம் இருக்கும் மற்றவர்களைவிட தெம்பாகவே இருந்தோம் (எங்களுக்கு தோட்ட வெளிகளுக்கு செல்லலாம், காலில் செருப்பு போடக்கூடாது, நண்பர்களை பார்க்கப் போனால் அவர்கள் வீட்டு வாசலோட பேசிவிட்டு வந்துவிட வேண்டும், இரவில் வீடு அல்லது கோவிலில் தூங்க வேண்டும், துண்டை மட்டும் விரித்து என்று கண்டிஷன்கள் வேறு...).
.
கடைசி நாள் காலை பூசையை சீக்கிரம் முடித்து, பூக்குழி ( 16 அடி நீளம், 6 அடி அகலம், சுற்றி 1 அடியில் மண்சுவர்) அமைக்கபட்டிருந்த இடத்திற்கு ஊர்வலம். அன்று காலையில் வெட்டிக்கொண்டு வந்த வேம்பு மற்றும் புளிய மரங்களை ( விளக்கம் கேட்டபோது , காய்ந்த மரங்களை எரித்தால் கங்குகள் கம்மியாகி, இறங்கும் போது சாம்பல் தான் இருக்குமாம், பச்சை மரங்கள் போட்டால்தான், கங்குகள் ங்கண ங்கண என்று இருக்கும் என்று சொல்லி பீதியை கிளப்பினார்கள்) பூக்குழியில் அடுக்கி வைத்திருந்தனர், கிராமத்தில் சிலர் இதை கொடையாக தந்து விடுவார்கள்.
சிறு பூசை வைத்து பின் எண்ணை, நெய் போன்றவற்றை ஊற்றி பற்ற வைத்தார்கள், பக்கத்திலேயே மீதமிருந்த மரத்ததுண்டுகளை, உளி வைத்து சம்மட்டியால் அடித்து பிளந்து கொண்டிருந்தார்கள். அதன் பக்கம் சென்றபோது, ”மாப்ள.. நம்ம நாட்டாம தோட்டத்துல ஒருவேப்பமரம் இருக்குது அதையும் வெட்டிக் கொண்டுவந்து போடுங்க சாயந்திரம் வரையிலும் போட்டுகிட்டே இருக்கனும்ல, வேடிக்கை பார்க்க கூட வராத பங்காளிக 2 பேர் பூக்குழி எறங்க வந்திருக்காய்ங்க, சும்மா அரை அடிக்கு கங்குக அனல் பறக்கனும்” என்று உசுப்பேற்றி கொண்டிருந்தான் ஒரு பங்காளி. ஊர்மக்கள் வேறு அவர்கள் பங்கிற்கு, எண்ணை, நெய், ஆமணக்கு (அவர்கள் வீட்டு உபயோகத்திற்கு கூட இவ்வளவு வாங்கி இருப்பார்களா தெரியவில்லை) என்று நாள் முழுதும் தீயை நன்றாகவே வளர்த்துக்கொண்டிருந்தார்கள். அன்று திருட்டுத்தனமாக திங்கும் வாழைப்பழம், தேங்காய் மூடி ஞாபகம் கூட வரவில்லை. கோவிலில் நானும் ,என் அண்ணனும் தனியாக உட்கார்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் என்று பார்த்துக்கொண்டிருந்தோம். இடையில், ”ஏண்டா.. இன்னிக்கு உங்க மூஞ்சி பேயரஞ்சா மாதிரி இருக்கு?”, என்ற மூத்த அக்காவின் கமெண்ட் வேறு.
சரி..வழக்கம் போல் 4 மணிக்கு பசியை போக்க, விரதத்தையாவது விடலாம் என்றெண்ணி சென்றால், இன்று கடைசி நாள் பூக்குழி இறங்கிய பின் இரவு 10 மணிக்குத்தான் விரதம் விடவேண்டும் என்று வெறுப்பேற்றினார்கள்.
’பூக்குழியில் இறங்குரவங்கெல்லாம் வாங்க, ஆட்டுக்கல்லில் போட்டிருக்கும் மஞ்சளை வந்து ஆளுக்கு ஒரு ஆட்டு ஆட்டிட்டு போங்க..’ என்ற அழைப்பின் பேரில், எங்கள் கோபத்தை ஆட்டுரலில் காமித்து அழுத்தமாகவே ஆட்டிட்டு வந்தோம். ”பாசக்கார பயளுக, கோவில் கொளம்னு போகாதவங்க, கூடப்பொறந்ததுக்கு ஒண்னுனதும், கோவிலே கதின்னு கெடக்குறாங்க பாரு” என்று பக்கத்து வீட்டு கெழவி என் மூத்த அக்காவிடம் சொல்வதும், அதற்கு, ”ஆமாமா...எங்களுக்கு ஒண்னுனா உயிரையே கொடுப்பாய்ங்க” என்று எங்கள் உயிரை எடுத்துக்கொண்டிருப்பது தெரியாமல், பெருமை பேசிய அக்காவின் பதிலும் காதில் விழுந்தது.
இவங்க கண்ணில் படாம கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்கலாம் என்று பூக்குழி பக்கமிருந்த மர நிழலில் துண்டை விரித்து படுத்தோம். பூக்குழியில் முக்கால்வாசி எரிந்து, புதிதாக போட்ட மரத்துண்டுகள் தீ ஜூவாலையுடன் எரிந்துகொண்டிருந்தது. அதில் போட்ட ஆமணக்கு விதை, ’பட் பட்’ என்று வெடிக்கும் சத்தம் அடிக்கடி கேட்டது..
”மாப்ளகளா.. உங்கள எங்கனு தேடுறது, வாங்க குளிச்சி மஞ்சத் துணி கட்டி பூக்குழி எறங்க ரெடியாக வேணாமா?” என்று கிட்டத்தட்ட பலியாடுகளைப்போல் இழுத்துச் சென்றார்கள். ஒருவழியாக தலையில் தண்ணி ஊத்தி , நாங்கள் ஆட்டிக்கொடுத்த மஞ்சள் கலக்கிய நீரில், எங்களுக்கென புதுசா வாங்கிய வேஷ்டி துண்டுகளை நனைத்து, வேஷ்டியை தார்பாய்ச்சிபோல் கட்டிவிட்டார்கள், துண்டை இடுப்பில் இறுக்க கட்டிவிட்டார்கள். பூக்குழியில் இறங்கும்போது வேஷ்டி அவிழாமல் இருப்பதற்காகவாம்.
நெற்றியில் நாம்ம், கழுத்தில் பூ மாலை, தலையில் ஒரு கும்பம். என்று ஒரு வழியாக ஏற்றிவைத்தார்கள் (சில்வர் அல்லது பித்தளை குடத்தில் நூல் சுற்றி அதில் தண்ணீருடன் , பன்னீர் , விபூதி,மஞ்சள் தூள் சேர்த்து, வாய்ப்பகுதியில் , மாவிலை சூழ தேங்காய் வைத்து மூடி, ஒருவார பூஜையில் வைத்து சாமியின் சக்தியை அதில் தேக்கி வைத்திருக்கிறார்களாம், பூக்குழி இறங்குபவர்களின் தலையில், சிறிது தெளித்து, பூக்குழிக்குள் அனுப்புவார்கள்) , எனக்கு உனக்கு என்று இந்த கும்பத்தை தூக்க, போட்டிகள் இருக்கும். வராதவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதற்காக, எங்களுக்கு இந்த சலுகை என்று சொன்னார்கள்.
என் அண்ணனை பார்த்தேன், ஆள் அடையாளாமேமாறி, வெளித்தோற்றத்தில் பக்தி பழமாகத் திரிந்தார், சிரிப்பு வந்தது. நாமாவது கம்மியான படிப்புதான் படிச்சிட்டிருக்கோம், தக்காளி IIT-யில், Aerospace இன்ஜினியரிங்கில் PhD, பண்ணிக்கொண்டிருக்கும், எதிர்கால விஞ்ஞானியின் நிலையை பார்க்க பாவமாகவும் இருந்தது. அவரும் என் கோலத்தை பார்த்து சிரிப்பதுபோல்தான் எனக்கு தோன்றியது.
ஒரு சின்ன பூசை முடிந்து கோவிலிலிருந்து பூக்குழி இருக்கும் இடத்துக்கு வரிசையாக ஊர்வலம் ஆரம்பமானது, மொத்தம் 42 பேர், இதில் என் குடும்பத்து உறுப்பினர்கள் 10 பேர் (என் முந்தய பதிவில் என்னை டெண்ட்கொட்டயிக்கு இழுத்து சென்ற, அக்கா பையனும் அடக்கம்- 12 வயதுதான், பூக்குழியில் எனக்கு சீனியர், அல்ரெடி 4 முறை இறங்கியிருக்கிறான்) எங்கள் இருவரைத்தவிர மற்றவர்கள் ம்ஹூம் ம்ஹூம் என்று ஆடிகொண்டே வந்தார்கள், சைடில் கூட நடந்துவரும் பங்காளியிடம் கேட்க, அவர்களுக்கு எல்லாம் அருள் வந்திருக்கு என்று கன்னத்தில் போட்டுக்கொண்டான், எங்களுக்கு ஒரு மண்ணும் இல்லை, அருள் வருவதற்கான அறிகுறி கூட இல்லை.
பூக்குழியில் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மனிவரை எரிக்கபட்டு கங்குகளை சமதளமாக நிறுத்தி வைத்திருந்தார்கள். உள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்துமக்கள் அன்னதானச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, பூக்குழியிலிருந்து பத்தடி தள்ளி சுற்றிலும் உட்கார்ந்திருந்தார்கள்.
எங்களை ஒருமுறை பூக்குழியை சுற்றி அழைத்து வந்து வரிசையில் நிறுத்தினார்கள். கங்குகளின் சூட்டை அதிகமாகவே உணர முடிந்தது, மனதுக்குள் பீதியும் அதிகமாகியது. பூசாரி, அடுத்து எனது இரு அக்கா’ஸ், அக்காபையன் அடுத்து நான், என் பின் அண்ணனும் மற்றவர்கள் என்ற வரிசை. எங்கள் இருவரைத்தவிர மற்றவர்கள் சுயநினைவில் இருப்பதாகத் தெரியவில்லை, என் முன்னால் இருந்த அக்கா பையன் இருகைகளையும் தலைக்குமேல் கோர்த்துக்கொண்டு நெளிந்து கொண்டிருந்தான், அருளாம்!!!.
முதலில் பூசாரி இறங்கி சென்று மறுபக்கத்தில் நின்று கொண்டு, அடுத்தவர்களை அழைத்தார்,(அடுத்து செல்பவர்களுக்கு ஏதும் சிக்கல் என்றால் உள்ளே வந்து தூக்கிச்செல்வதற்கு தயாராக நிற்கிறாராம்) அடுத்து அக்காகள் குலவையிட்டுக்கொண்டே இறங்கி ஓடினார்கள், அக்கா பையன் பீச்மணலில் கால்களால் உழுதுவது மாதிரி, கங்குகளை உழுதுகொண்டு சென்றான், கங்குகள் தெறித்து வெளியில் விழுந்ததை ஒரு கோஷ்டி( இந்த சேவையை செய்வதற்காக, எங்களுடன் விரதம் இருந்தவர்கள்) ஒவ்வொன்றாக உள்ளே எடுத்து போட்டார்கள்.
அடுத்து என் முறை வந்தேவிட்டது. என் அண்ணனை முதலில் இறங்க சொன்னேன், முடியாது என்ற பதில்... முதலில் ஒருகாலை வைத்துப்பார், சுட்டால் பக்கவாட்டில் வெளியே குதித்து விடு, நானும் இப்படியே கழன்றுவிடுகிறேன் என்று ஐடியா கொடுத்து, எலியை வைத்து டெஸ்ட் செய்யும் விஞ்ஞானிகளை போல், என்னை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட முயற்சித்தார்.
நடப்பது நடக்கட்டும் என்று நினைத்துக்கொண்டு வலது காலை பூக்குழிக்குள் எடுத்துவைத்தேன், நொறு நொறு என்று கங்குகள் உடையும் சத்தம், மே மாத வெயிலில் கான்கிரீட் சாலையில் செருப்பில்லாமல் நடந்தால் உணரும் சூட்டின் தன்மை, நாலு எட்டில் மறுபுறம் சென்று விட்டேன், பின்னால் அண்ணனின் சத்தம், என்னாச்சு என்றார், ஒன்னும் ஆகலை வா என்றேன், ’காலைக் காட்டு’ என்றான் நம்பாதவனாய், காலை தூக்கி காட்டியதும், ஒரே ட்ரிப்பில் ஜம்ப் வீரனைப் போல் தாண்டி வந்தார், எங்கள் கூத்தை பார்த்து சுற்றியிருப்பவர்கள் கிண்டலடித்தார்கள், என் மூத்த அக்காவிடமிருந்து , ”ஏணடா... பயந்து மானத்தை வாங்குறீங்க?” என்ற கமெண்ட் வேறு, அடுத்து வரிசையாக எல்லோரும் ஆடிகொண்டே நடந்தார்கள், 2-வது மற்றும் 3-வது சுற்றில் கொஞ்சம் நிதானமாக நடந்தோம்.
கோவில் வந்ததும் பூசாரி, எல்லோரையும் கால்களை காட்டச் சொல்லி வேப்பிலையால் ஏதோசொல்லி மந்திரித்துவிட்டார். கால்களின் பாதத்தில் சூட்டின் உணர்வு ’ங்கண ங்கண’ என்று இருந்தது உற்றுப்பார்த்ததில் 2 இடத்தில் சின்ன வட்ட வடிவில் கொப்புளம் மாதிரி வெள்ளையாக நீர் கோர்த்து இருந்தது, மற்றவர்களிடம் கேட்டேன். அப்படி ஏதும் இல்லையென்றார்கள் என் அண்ணன் உட்பட, பூசாரியை அழைத்து காண்பித்தேன், அவர் அது 2 நாளில் அமுங்கிவிடும் வலிக்காது என்று எனக்காக மறுமுறை மந்திரித்துவிட்டார். விரதத்தை விட்டு, அசதியில் கோவிலிலேயே துண்டு விரித்து தூங்கிவிட்டோம்.
காலையில் எழும்போது அக்கா (பல மாதங்களுக்கு முன் ஃபிட்ஸ் வந்ததே அந்த அக்கா) கையில் காபியோடு, உனக்கு ஏதோ சுட்டிருச்சாமே என்று கால்பாதங்களை தடவிக் கொடுத்தார், உண்மையிலேயே இப்போது சூட்டின் வலி அறவே இல்லை.
மறு நாள் சென்னை பயணம், இப்போதும் கடவுள் கான்செப்டில் நிறைய லாஜிக் உதைத்துக்கொண்டுதான் இருக்கிறது, உலகில் நடக்கும் பெரும்பாலான விசயங்கள், கடவுள் இருந்தால் நடக்குமா? என்றுதான் தோன்றுகிறது. ஆத்திகம், நாத்திகம் பற்றிய என் கருதுக்களை என்ணங்களை பதிவின் நீளம் கருதி பின்னொரு நாளில் பதிவிடுகிறேன்.
முடிந்தளவு, சுவாரஷ்யமாகவும், எழுத்து பிழைகளை சரிபார்த்தும் எழுதியிருக்கிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும்.
இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடவும், முடிந்தால் ஓட்டு போட்டுவிட்டு செல்லவும்.. ( இல்ல..பூக்குளி...ஜாக்கிரதை...ஹா..ஹா)
டிஸ்கி : குறைகளை வலிக்காமல், குட்டிச் சொல்லவும்.
96 comments:
1st
2nd
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
1st//
அட இனிக்கு வட உனக்குதான், என்ஜாய்
Software Engineer said...
2nd ///
உங்களுக்கு 1/2 வடைதான்!!! ஹஹஹா
இன்று முதல் நம்ம Jey "தீப்பொறி திருமுகம்" என்றும் "தீச்சட்டி கோவிந்தன்" என்றும் பூக்குழி பூதப்பாண்டி" என்றும் அன்புடன் அழைக்கப்படுவார்.
யோவ் படங்களே பீதியக் கிளப்புதே நீர் எப்படியா இறங்கினீர்.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இன்று முதல் நம்ம Jey "தீப்பொறி திருமுகம்" என்றும் "தீச்சட்டி கோவிந்தன்" என்றும் பூக்குழி பூதப்பாண்டி" என்றும் அன்புடன் அழைக்கப்படுவார். ///
இன்னும் இன்னும் உங்ககிட்ட நெறய எதிர்பாக்குறேன் ரமேஷ்(அதுக்காக நொம்பவும் கேவலப்படித்திராதயா..)
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் படங்களே பீதியக் கிளப்புதே நீர் எப்படியா இறங்கினீர். ///
நானும் அப்படிதான்யா பயந்தேன், சரினு சொல்லு, அடுத்துவர்ற சித்திரை 1 ம் தேதி( தமிழ் புத்தாண்டு) லிருந்து 1 வாரம் விரதம் இரு, நானே எறக்கி விடுறேன், ஒன்னும் ஆகாது நான் கியாரண்டி.
//நானும் அப்படிதான்யா பயந்தேன், சரினு சொல்லு, அடுத்துவர்ற சித்திரை 1 ம் தேதி( தமிழ் புத்தாண்டு) லிருந்து 1 வாரம் விரதம் இரு, நானே எறக்கி விடுறேன், ஒன்னும் ஆகாது நான் கியாரண்டி.//
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
உண்மையிலேயே இப்போது சூட்டின் வலி அறவே இல்லை.//
அங்கே தெரிகிறது உங்கள் நல்ல உள்ளம். பதிவை பற்றி சொல்கிறேன் , நிறைய விளக்கங்கள், நிறைய சிறு விளக்கங்கள் (டீடைல்). கூடவே பயணம் செய்த மாதிரி இருந்தது. படங்களும் அருமை. இந்த பதிவு நகரத்திலேயே பிறந்து வளர்பவர்களுக்கு இவை பெரும்பாலும் தெரியாது.
நல்ல பதிவு.
Software Engineer said...
உண்மையிலேயே இப்போது சூட்டின் வலி அறவே இல்லை.//
அங்கே தெரிகிறது உங்கள் நல்ல உள்ளம். பதிவை பற்றி சொல்கிறேன் , நிறைய விளக்கங்கள், நிறைய சிறு விளக்கங்கள் (டீடைல்). கூடவே பயணம் செய்த மாதிரி இருந்தது. படங்களும் அருமை. இந்த பதிவு நகரத்திலேயே பிறந்து வளர்பவர்களுக்கு இவை பெரும்பாலும் தெரியாது.
நல்ல பதிவு.//
ஆம்மம், சிட்டியில், பிறந்து வளர்ந்தவங்களுக்கு இது புரிவது கஷ்டம், அவர்களுக்கு சினிமாவில் பார்த்த அளவுக்குதான் தெரியும். இங்கு சென்னையில், ஜூன் மாததில் அமிஞ்சிகரையில், திரெளபதிஅம்மன் கோவிலில் கூட பூக்குழி இறங்குகிறார்களாம், நான் பார்த்தது இல்லை.
ஹாய்... உங்களை மாதிரியேதானுங்க.. நானும் பயத்தோட இறங்கினேன்... அது எனக்கு நானே வெச்சுக்கிட்ட சூனியம்... ஒரு பரிட்சையில் பாஸ் ஆனா... பூக்குழி இறங்கிறேன்னு வேண்டுதல்.. அதை நினைச்சா இப்ப சிரிப்புத்தான் வருது..
பூக்குழி இறங்கிய நியாபகமா இன்னும் காலில் தழும்பு இருக்கு எனக்கு...
பிரேமா மகள் said...
ஹாய்... உங்களை மாதிரியேதானுங்க.. நானும் பயத்தோட இறங்கினேன்... அது எனக்கு நானே வெச்சுக்கிட்ட சூனியம்... ஒரு பரிட்சையில் பாஸ் ஆனா... பூக்குழி இறங்கிறேன்னு வேண்டுதல்.. அதை நினைச்சா இப்ப சிரிப்புத்தான் வருது..
பூக்குழி இறங்கிய நியாபகமா இன்னும் காலில் தழும்பு இருக்கு எனக்கு...//
ஆனா எனக்கு தழும்பு இல்லை.
இதுல ஆச்சர்யம், தெரிச்சி பூக்குழிக்கு வெளியில் சிதறிய கங்கை மிதிச்சா, பொத்தல் ஆகுது, எப்படினு தெரியல, கேட்டா சாமி சக்தினு பதில் வருது.
(பதிவு நீளமாக அமைந்து விட்டது, எடிட் செய்ய முயற்சித்தால், எங்கே கமல்ஹாசன் நடித்த ‘குணா’ படம் மாதிரி ஆகிவிடுமோ என்று பயந்து அப்படியே பதிவேற்றிவிட்டேன்)
.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... நச்!
படங்களும் - விரிவான சம்பவ தொகுப்பும் நல்லா இருக்குதுங்க... இந்த அளவுக்கு detail ஆ நான் படிச்சது இல்லை. நன்றி.
ஏம்பா... இந்த பெட்ரோல், கெரசின் இதெல்லாம் ஊற்றினா, கட்டை நல்லா ஏரியுமாமே..உண்மையா?..
ஹி..ஹி கல்க்கல்...
( என்ன படம் 4 மணி நேரம் ஓடுறமாறி எழுதியிருக்கீங்க..)
//ஏம்பா... இந்த பெட்ரோல், கெரசின் இதெல்லாம் ஊற்றினா, கட்டை நல்லா ஏரியுமாமே..உண்மையா?..//
யோவ் பட்டா எனக்கு களி கொட்டுக்கனும்னு ஆசைபட்ட சரி. அதுக்காக jey-க்கு சங்கு ஊதனும்னு முடிவா?
யோவ் பட்டா எனக்கு களி கொட்டுக்கனும்னு ஆசைபட்ட சரி. அதுக்காக jey-க்கு சங்கு ஊதனும்னு முடிவா?
//
யோவ்..எப்பப்பாரு தப்பாவே நினை..
நான் கேட்டது knowledge purpose-க்குயா...
( பட்டாபட்டி..அப்படியே சமாளி...விடாதே...)
Chitra said...
படங்களும் - விரிவான சம்பவ தொகுப்பும் நல்லா இருக்குதுங்க... இந்த அளவுக்கு detail ஆ நான் படிச்சது இல்லை. நன்றி.//
நன்றி மேடம்.
பட்டாபட்டி.. said...
ஏம்பா... இந்த பெட்ரோல், கெரசின் இதெல்லாம் ஊற்றினா, கட்டை நல்லா ஏரியுமாமே..உண்மையா?..
ஹி..ஹி கல்க்கல்...
( என்ன படம் 4 மணி நேரம் ஓடுறமாறி எழுதியிருக்கீங்க..) ///
பெட்ரொல் ஊத்தி எரிச்சிருந்தா கங்குக இல்லாம, சாம்பல் அதிகமாயிருமாமாம்!!!!!.
ஃபிளான் பண்ணாம, மனசிலெ நினைச்சத எழுதி முடிச்சிட்டு பாத்தா பதிவு நீளமா இருக்கு, எப்படி சுர்ருக்கி எழுதுறதுன்ற குழப்பம், அப்படியே விட்டுட்டேன்.
பிரசன்ட் சார், இரு படிச்சுட்டு வர்றேன் (தக்காளி ஒரு படிச்சு முடிக்க ஒரு வாரம் ஆகும் போலருக்கு ??)
யோவ் , என்னையா அப்படியே படம் பார்க்குற மாதிரி எழுதிருக்க , சூபரப்பு , நானும் நிறைய முறை இந்த திருவிழாக்களில் என் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று கலந்துகொண்டுள்ளேன், மிகவும் அருமையாக இருக்கு , பெரியகுளம் , போடி, விளாம்பட்டி , வீரபாண்டி , சிலமலை ,சில்லமரத்து பட்டி ,என எல்லா ஊரு திருவிழா விற்கும் எனக்கு நிச்சய அழைப்பு வரும் , நானும் தவறாமல் கலந்துகொள்வேன், திருவிழாவில் சைட் அடிக்கிற சொகம் காலேஜுல கூட வராது , அதும் நாம ஸ்பெஷல் கெஸ்டா போவமா (நானும் எல்லா ஊரிலும் கவனித்து விட்டேன் , வேற்று மதம் என்று தெரிந்த உடன் அனைவரும் ஊரு தலைவர் முதற்கொண்டுநம்மள ஸ்பெஷல் ஆக கவனிக்கிறார்கள் ) , தனி லுக்கு கிடைக்கும் , இப்பவும் நேரம் கிடைத்தால் திருவிழாக்களை தவற விடுவதில்லை
நல்ல அனுபவப் பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.
உனக்காவது பரவாஇல்லை தெரிந்து இறங்கினாய்,
என் கதையை கேளு,
எனக்கும் இது போல் தீ மிதி விழாவை பார்க்க ஆவல் வந்து என் நண்பனுடன் அவன் ஊருக்கு சென்றேன்,
அங்கு அவன் அப்பாவும்,அவன் அண்ணனும் தீ மிதிப்பதாக சொன்னான்.
அதை பார்க்க நானும் அவனும் பூக்குழி அருகில் நின்று இருந்தோம்,
விழா தொடங்கியவும்,அவன் அப்பா தான் முதல்,அவரும் வேகமாக வந்து இறங்கும் முன் தடால் என்று என் கையை பிடித்து பூ குழியில் இறங்கிவிட்டார்,
எனக்கு என்ன எது என்று புரிவதற்குள் பூ குழியை அவருடன் சேர்ந்து கடந்து விட்டேன்,
பின்பு ஏன் இந்த கொலைவெறி என்று அவரை பார்த்தால்,அவர் நிதானமாக சிரித்து கொண்டே திரும்பியவர் முகத்தில் ஈ ஆடவில்லை.
பிறகு தான் தெரிந்தது என் நண்பன் என்று நினைத்து என்னை இழுத்து கொண்டு போயி இருக்கார்
ஒ ஜெய் ரொம்ப அருமையா வர்ணனை பண்ணிங்க உங்க ஊரே பத்தியும் பூக்குழியில் இறங்குவதே பத்தியும் .
முறை பொண்ணுங்க மஞ்ச தண்ணி ஊதறது நான் சினிமாவில் பார்த்திருக்கேன் பூக்குழியில் இறங்கறதும் அப்பிடியே ..
" ( பாசத்துக்கு முன்னாடி, படிச்சவனுக்கும், படிக்காதவனுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை),"ரொம்ப சரியா சொன்னிங்க
"அடிப்படையில் பட்டிகாட்டான் என்பதால் எதை எழுத ஆரம்பித்தாலும் அதை சார்ந்த கிராமத்து நினைவுகள் முதலில் வந்து உட்கார்ந்து விடுகிறது. "
ஏன் இப்பிடி சொல்லறிங்க?
படங்கள் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு ..
இந்த பதிவு படிக்கச்சே நானும் உங்க ஊரில் வந்து அந்த திருவிழா நேரில் வந்த பார்த்த மாதிரி ஒரு உணர்வு ...நன்றி ஜெய் இன்னும் இதே போல் நிறையை பதிவுகள் போட வேண்டுமென்று அன்புடன் கேட்டு கொள்கிறேன் ...
எந்த ஊருங்க உங்க ஊரு. முறை பொண்ணுங்க தண்ணி ஊத்துறதுக்காகவே வரணும். ஆனா பூக்குழிலலாம் இறங்க மாட்டேன்.
நல்ல பதிவு
மங்குனி அமைச்சர் said...
யோவ் , என்னையா அப்படியே படம் பார்க்குற மாதிரி எழுதிருக்க , சூபரப்பு , நானும் நிறைய முறை இந்த திருவிழாக்களில் என் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று கலந்துகொண்டுள்ளேன், மிகவும் அருமையாக இருக்கு , பெரியகுளம் , போடி, விளாம்பட்டி , வீரபாண்டி , சிலமலை ,சில்லமரத்து பட்டி ,என எல்லா ஊரு திருவிழா விற்கும் எனக்கு நிச்சய அழைப்பு வரும் , நானும் தவறாமல் கலந்துகொள்வேன், திருவிழாவில் சைட் அடிக்கிற சொகம் காலேஜுல கூட வராது , அதும் நாம ஸ்பெஷல் கெஸ்டா போவமா (நானும் எல்லா ஊரிலும் கவனித்து விட்டேன் , வேற்று மதம் என்று தெரிந்த உடன் அனைவரும் ஊரு தலைவர் முதற்கொண்டுநம்மள ஸ்பெஷல் ஆக கவனிக்கிறார்கள் ) , தனி லுக்கு கிடைக்கும் , இப்பவும் நேரம் கிடைத்தால் திருவிழாக்களை தவற விடுவதில்லை .///
மங்குனி, உன் ஸ்டைலுல, இத ஒரு தனி பதிவா போடுயா, சூப்பரா இருக்கும்.
மங்குனி அமைச்சர் said...
பிரசன்ட் சார், இரு படிச்சுட்டு வர்றேன் (தக்காளி ஒரு படிச்சு முடிக்க ஒரு வாரம் ஆகும் போலருக்கு ??)//
அதனாலதான் மங்கு, வீக் எண்ட்ல எல்லோரும் படிக்கட்டும்னு இப்போ போட்ருக்கேன்.( நம்ம மக்களுக்கு பொறுமை அதிக மங்கு)
முத்து உன்னை நம்ப முடியாதுயா, சும்மா கடை விடாதே.
sandhya said...//
வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி சகோதரி.
உங்கள் எதிபார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.
அருண் பிரசாத் said...
எந்த ஊருங்க உங்க ஊரு. முறை பொண்ணுங்க தண்ணி ஊத்துறதுக்காகவே வரணும். ஆனா பூக்குழிலலாம் இறங்க மாட்டேன்.
நல்ல பதிவு ///
ஹஹஹா, ஊருக்கு வர்ற விருந்தாளிங்க மேல ஊத்தமாடாங்க. அன்னிக்கு முச்சூடும், பழைய சட்டையோடதான் சார் திரிவோம், மஞ்சள் பட்டா கறை சீக்கிரம் போகாது.
கல்யாணம் ஆனதுக்கு பிறகு, நம்மள அவ்வளவா கண்டுக்க மாட்டீங்கறாங்க, ம்ஹூம்!!!!
//ஹஹஹா, ஊருக்கு வர்ற விருந்தாளிங்க மேல ஊத்தமாடாங்க//
ஆஹா, வட போச்சே
அருண் பிரசாத் said...
//ஹஹஹா, ஊருக்கு வர்ற விருந்தாளிங்க மேல ஊத்தமாடாங்க//
ஆஹா, வட போச்சே ///
வட போனா போகட்டும் சார், பூக்குழி இறங்குரவங்களுக்கு, பூசைல வக்கிற தேங்கா முடி இலவசமா கிடைக்கும், வர்றீங்களா சார்:)
//வட போனா போகட்டும் சார், பூக்குழி இறங்குரவங்களுக்கு, பூசைல வக்கிற தேங்கா முடி இலவசமா கிடைக்கும், வர்றீங்களா//
இங்க வேடிக்கை பார்கிறவங்களுக்கு இந்த வாழைபழம், கொழுகட்டைலாம் கொடுத்தா சொலுங்க, வர்றேன்
நன்றி ஜெய் இன்னும் இதே போல் நிறையை பதிவுகள் போட வேண்டுமென்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்
//
ரிப்பீட்டு..ஆனா.. படம் 2 மணி நேரத்துக்கு மேல ஓடக்கூடாது..ரைட்டா?...
மீறினா..பூக்குழில ’ஸ்பெஷல் படையல் படைக்க’, எங்க படை இறங்கும் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்...
/தக்காளி ஒரு படிச்சு முடிக்க ஒரு வாரம் ஆகும் போலருக்கு ??) //
ஆமா நான் நேத்து ஆரமிச்சேன் இன்னும் முடியல...நானும் வீரபாண்டி திருவிழாக்கு வந்திருக்கேன்
//நிதானமாக சிரித்து கொண்டே திரும்பியவர் முகத்தில் ஈ ஆடவில்லை.
பிறகு தான் தெரிந்தது என் நண்பன் என்று நினைத்து என்னை இழுத்து கொண்டு போயி இருக்கார் //
முத்து உங்களை நினச்சா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.....
//கல்யாணம் ஆனதுக்கு பிறகு, நம்மள அவ்வளவா கண்டுக்க மாட்டீங்கறாங்க, ம்ஹூம்!!!! //
அதுக்கு முன்னாடி மட்டும். ஏன்யா வாயில வேற வருது....
பட்டாபட்டி.. said...
நன்றி ஜெய் இன்னும் இதே போல் நிறையை பதிவுகள் போட வேண்டுமென்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்
//
ரிப்பீட்டு..ஆனா.. படம் 2 மணி நேரத்துக்கு மேல ஓடக்கூடாது..ரைட்டா?...
மீறினா..பூக்குழில ’ஸ்பெஷல் படையல் படைக்க’, எங்க படை இறங்கும் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்...///
சரி பட்டா, இன்னும் நாங்க எல் போர்டுதானே, இனிமே படத்த 10 ரீல்லயே முடிச்சிடலாம், முடிஞ்சா குறும்படமே ரிலீஸ் பன்னிடுவோம். சரியா.
//கல்யாணம் ஆனதுக்கு பிறகு, நம்மள அவ்வளவா கண்டுக்க மாட்டீங்கறாங்க, ம்ஹூம்!!!! //
அதுக்கு முன்னாடி மட்டும். ஏன்யா வாயில வேற வருது....///
யோவ் டேமேஜரு, எங்க பெருமையெல்லாம் சொன்னா, உங்களுக்கு வியிறு எரியும், மேலும், எங்களுக்கு தற்பெருமை பேசவேறு தெரியாதுய்யா.
இன்னிக்கு நம்ம பயபுள்ளக யாரும் புதுசரக்க எறக்கிருக்காங்களா??
சந்ரு said...
நல்ல அனுபவப் பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.//
வருகைஇகும், கருத்துக்கும் நன்றி சார்.
//இன்னிக்கு நம்ம பயபுள்ளக யாரும் புதுசரக்க எறக்கிருக்காங்களா?? //
வெள்ளிக்கிழமை கிரதிநாலா எல்லோரும் நியூ வாட்டர் குடிக்க போயிட்டாங்க.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இன்னிக்கு நம்ம பயபுள்ளக யாரும் புதுசரக்க எறக்கிருக்காங்களா?? //
வெள்ளிக்கிழமை கிரதிநாலா எல்லோரும் நியூ வாட்டர் குடிக்க போயிட்டாங்க.//
நியூ வாட்டர் ?.. புதுசா வந்த சரக்கோட பேரா?
//காலையில் எழும்போது அக்கா (பல மாதங்களுக்கு முன் ஃபிட்ஸ் வந்ததே அந்த அக்கா) கையில் காபியோடு, உனக்கு ஏதோ சுட்டிருச்சாமே என்று கால்பாதங்களை தடவிக் கொடுத்தார், உண்மையிலேயே இப்போது சூட்டின் வலி அறவே இல்லை.//
ithuthan sagothara pasam.. idhayathai thottuviteergal. Thanks.
Mythili said...
//காலையில் எழும்போது அக்கா (பல மாதங்களுக்கு முன் ஃபிட்ஸ் வந்ததே அந்த அக்கா) கையில் காபியோடு, உனக்கு ஏதோ சுட்டிருச்சாமே என்று கால்பாதங்களை தடவிக் கொடுத்தார், உண்மையிலேயே இப்போது சூட்டின் வலி அறவே இல்லை.//
ithuthan sagothara pasam.. idhayathai thottuviteergal. Thanks. ///
வருகைக்கு நன்றி சகோதரி.
Jey said...
முத்து உன்னை நம்ப முடியாதுயா, சும்மா கடை விடாதே.
/////////////////////
நான் எவ்வளவு பீல் பண்ணி எழுதுனா கதை உடுரன்னு சொல்லுறியா நீயு ,இரு உன்னை பட்டாகிட்ட சொல்லி ஆரஞ்சு பச்சடி குடுக்க சொல்லுறேன்
Jey said...
கல்யாணம் ஆனதுக்கு பிறகு, நம்மள அவ்வளவா கண்டுக்க மாட்டீங்கறாங்க, ம்ஹூம்!!////
பீலிங்கு இரு உன் ஊட்டுகார அம்மாவிடம் போட்டு கொடுக்கிறேன்
பட்டாபட்டி.. said...
ரிப்பீட்டு..ஆனா.. படம் 2 மணி நேரத்துக்கு மேல ஓடக்கூடாது..ரைட்டா?...
மீறினா..பூக்குழில ’ஸ்பெஷல் படையல் படைக்க’, எங்க படை இறங்கும் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்...////////////////
கூடிய சீக்கிரம் நம்ம ஜெ பூக்குழியில் எப்படி இறங்குவதுன்னு டெமோ காட்டுவார்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//நிதானமாக சிரித்து கொண்டே திரும்பியவர் முகத்தில் ஈ ஆடவில்லை.
பிறகு தான் தெரிந்தது என் நண்பன் என்று நினைத்து என்னை இழுத்து கொண்டு போயி இருக்கார் //
முத்து உங்களை நினச்சா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.....////////
பாஸ் உங்களை இது போல் பூக்குழியில் இறக்கி விட்டால் தெரியும்
50
முத்து எப்படி???? கரக்டா 50 த போடுரயே, கல்;ஆக்காவ விட மனசே இல்லையா???? அங்க அவ்வளவு எஞாய்மெண்டா????????!!!!!!!111
முத்து said...
Jey said...
கல்யாணம் ஆனதுக்கு பிறகு, நம்மள அவ்வளவா கண்டுக்க மாட்டீங்கறாங்க, ம்ஹூம்!!////
பீலிங்கு இரு உன் ஊட்டுகார அம்மாவிடம் போட்டு கொடுக்கிறேன////
ஏன்யா இந்த கொலைவெறி, இப்ப நான் என்ன சொல்லிட்டேன்,ஏதா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம், உனக்கு என்ன வேணும் ரெட் ஒயுன்தானே, ஆர்டர் பன்னிட்டேன், காம்முனு கெட.
த்டுக்கி விழந்துட்டா தெய்வ குத்தம் ஆயிருமா தல!?
வால்பையன் said...
த்டுக்கி விழந்துட்டா தெய்வ குத்தம் ஆயிருமா தல!?///
ஹஹஹா, ஆமா, அதையும் மறுப்பதற்கு இல்லை:)
//நியூ வாட்டர் ?.. புதுசா வந்த சரக்கோட பேரா? ///
பட்டாகிட்ட கேட்டா விளக்கமா ஜோள்ளுவார்.
//கூடிய சீக்கிரம் நம்ம ஜெ பூக்குழியில் எப்படி இறங்குவதுன்னு டெமோ காட்டுவார் ///
நேரடி ஒளிபரப்பா?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//நியூ வாட்டர் ?.. புதுசா வந்த சரக்கோட பேரா? ///
பட்டாகிட்ட கேட்டா விளக்கமா ஜோள்ளுவார்.
//கூடிய சீக்கிரம் நம்ம ஜெ பூக்குழியில் எப்படி இறங்குவதுன்னு டெமோ காட்டுவார் ///
நேரடி ஒளிபரப்பா?///
நேராவே எறக்கிவிடுறேன்னு சொல்லிட்டிருக்கேன், பெறகு எதுக்கு?, நேரடி ஒளிபரப்பு????
patta இந்த நியூ வாட்டர்னா என்னானு சொல்லிதொல சாமீ, புண்ணியமா போகும்.
நல்லா எழுதி இருக்கீங்க. பலருக்கு இந்த மாதிரி கிராமத்து விஷயங்கள் தெரியாமலே தான் இருக்கும்.நீங்க சொல்லி இருக்கும் விதம் நகைச்சுவை கலந்து,ஆழமான விவரிப்போடு இருக்கு.
நானும் இது மாதிரி பல விழாக்களை பார்த்து இருக்கேன்.ஆச்சர்யப்பட்டும் இருக்கேன்.திட்டியும் இருக்கேன். :)
//இதுல ஆச்சர்யம், தெரிச்சி பூக்குழிக்கு வெளியில் சிதறிய கங்கை மிதிச்சா, பொத்தல் ஆகுது, எப்படினு தெரியல, கேட்டா சாமி சக்தினு பதில் வருது.//
பதில் சொன்னவன அடுத்த முறை பூக்குழியில அங்கப் பிரதட்சணம் பண்ண விட்டு அது உண்மை தானானு செக் பண்ணிடலாம். :)
--
ILLUMINATI
http://illuminati8.blogspot.com
ILLUMINATI said...
நல்லா எழுதி இருக்கீங்க. பலருக்கு இந்த மாதிரி கிராமத்து விஷயங்கள் தெரியாமலே தான் இருக்கும்.நீங்க சொல்லி இருக்கும் விதம் நகைச்சுவை கலந்து,ஆழமான விவரிப்போடு இருக்கு.
நானும் இது மாதிரி பல விழாக்களை பார்த்து இருக்கேன்.ஆச்சர்யப்பட்டும் இருக்கேன்.திட்டியும் இருக்கேன். :)
//இதுல ஆச்சர்யம், தெரிச்சி பூக்குழிக்கு வெளியில் சிதறிய கங்கை மிதிச்சா, பொத்தல் ஆகுது, எப்படினு தெரியல, கேட்டா சாமி சக்தினு பதில் வருது.//
பதில் சொன்னவன அடுத்த முறை பூக்குழியில அங்கப் பிரதட்சணம் பண்ண விட்டு அது உண்மை தானானு செக் பண்ணிடலாம். :)
hahahaa
Jey said...
patta இந்த நியூ வாட்டர்னா என்னானு சொல்லிதொல சாமீ, புண்ணியமா போகும்.
//
O..அதுவா..உடலினில் கலந்து ..உயிரிலே மிதந்து....ஆங்...
அது ஒரு சோமபானமையா...
பட்டாபட்டி.. said...
Jey said...
patta இந்த நியூ வாட்டர்னா என்னானு சொல்லிதொல சாமீ, புண்ணியமா போகும்.
//
O..அதுவா..உடலினில் கலந்து ..உயிரிலே மிதந்து....ஆங்...
அது ஒரு சோமபானமையா...///
ஒரு மார்க்கமான பானமாத்தான் இருக்கும் போல.......
வந்துட்டேன், வந்துட்டேன்!
//இரவில் வில்லுப்பாட்டு, பாட்டுக்கச்சேரி, கரகாட்டம், தேவராட்டம் என்று அமர்க்களங்களை பார்ப்பதற்கென்றே ஊரில் ஆஜராய்விடுவேன்.//
அந்த கரகாட்டக்காரி சரோஜா இப்ப எப்பிடியிருக்கா மாப்பு? அதப் பத்தி ஒரு பதிவு போடனும் ஆமா! (இது வேண்டுகோள் இல்ல, கட்டளை...........! கட்டளை.......! கட்டளை...!)
//அடிப்படையில் பட்டிகாட்டான் என்பதால் எதை எழுத ஆரம்பித்தாலும் அதை சார்ந்த கிராமத்து நினைவுகள் முதலில் வந்து உட்கார்ந்து விடுகிறது.//
அதுதான் நம்ம மண்ணோட இயல்பு! மனிதர்கள் எங்கு சென்றாலும் தங்கள் ஊர்களைத் தூக்கிக்கொண்டேதான் திரிகிறார்கள்! இறக்கி வைக்கும் சுமையல்ல அது!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வந்துட்டேன், வந்துட்டேன்!////
எங்கப்பா போன ஆளையே காணோம் ?
வீக்கென்டு இல்லையா, அதான் மட்டையாயிட்டேன் அமைச்சரே!
//அங்கு சென்றும் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு பார்த்தால், எல்லாம் நார்மல் , அடுத்து, அக்காவை, சென்னை அழைத்து செல்லும் முடிவுடன், சில மாத்திரைகள், டானிக் என்று வாங்கிக்கொண்டு அக்கா வீடு வந்து சேர்ந்தோம்.//
என்ன ஜெய், இப்போ எப்பிடி இருக்காங்க? இப்போவாவது சரியான மருந்து சாப்பிடறாங்களா?
//வருடத்திற்கு ஒருமுறை இந்த கூத்து, முடிந்ததும், பூசாரி ஒரு மம்பட்டியை தோளில் போட்டுக்கொண்டு, அவருடைய தோட்டம் பார்த்து போய்விடுவார். எனக்கு தெரிந்து இவருக்கு இதில் கால் காசு வருமானம் இல்லை.//
மத்த சாமியார்களும் இப்படி இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
//வேடிக்கை பார்க்க கூட வராத பங்காளிக 2 பேர் பூக்குழி எறங்க வந்திருக்காய்ங்க, சும்மா அரை அடிக்கு கங்குக அனல் பறக்கனும்” என்று உசுப்பேற்றி கொண்டிருந்தான் ஒரு பங்காளி.//
எக்குத்தப்பாத்தான் சிக்கியிருக்கீக!
//அண்ணனும் தனியாக உட்கார்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் என்று பார்த்துக்கொண்டிருந்தோம். இடையில், ”ஏண்டா.. இன்னிக்கு உங்க மூஞ்சி பேயரஞ்சா மாதிரி இருக்கு?”, என்ற மூத்த அக்காவின் கமெண்ட் வேறு.//
பாத்தீங்களா,மத்த போட்டோக்கள்லாம் போட்டுட்டு, போடவேண்டிய இந்த போட்டோவ மட்டும் கரெக்டா விட்டுட்டீங்களே, அதெப்படி?
என்னா டீடெய்லு!, பக்கதுல உங்கார்ந்து பாத்த மாதிரி ஒரு பீலிங் ஜெய்!!!
//காலையில் எழும்போது அக்கா (பல மாதங்களுக்கு முன் ஃபிட்ஸ் வந்ததே அந்த அக்கா) கையில் காபியோடு, உனக்கு ஏதோ சுட்டிருச்சாமே என்று கால்பாதங்களை தடவிக் கொடுத்தார், உண்மையிலேயே இப்போது சூட்டின் வலி அறவே இல்லை.//
நெகிழ்வு! (யோவ் மொதல்ல ஒரு ஸ்கிரிப்ட ரெடி பண்ணிக்கிட்டு ஷங்கர் சாரப் போயி பாருய்யா!)
சென்டிமென்ட் செம்மல் ஜெய் வாழ்க!
//உலகில் நடக்கும் பெரும்பாலான விசயங்கள், கடவுள் இருந்தால் நடக்குமா? என்றுதான் தோன்றுகிறது.//
உண்மைதான் ஜெய், அது ஒரு முடிவில்லாத விவாதம்!
என்ன ஜெய், இப்போ எப்பிடி இருக்காங்க? இப்போவாவது சரியான மருந்து சாப்பிடறாங்களா?//
அது அப்பயே சரியாயிருச்சி.
//முடிந்தால் ஓட்டு போட்டுவிட்டு செல்லவும்.. ( இல்ல..பூக்குளி...ஜாக்கிரதை...ஹா..ஹா)//
.. வெரி டெலிக்கேட் பொசிசன், ம்ம், உங்களுக்காக டெல்லி புரோக்ராம கேன்சல் பன்ணிட்டு வர்ரேன்! ஸ்டார்ட் மியூசிக்!
பாத்தீங்களா,மத்த போட்டோக்கள்லாம் போட்டுட்டு, போடவேண்டிய இந்த போட்டோவ மட்டும் கரெக்டா விட்டுட்டீங்களே, அதெப்படி? //
இப்படி ப்ப்பிரபல பதிவராவேனு த்ரிஞ்சிருந்தா, போட்டோ’ஸ் பிளான் பன்னி எடுத்திருந்திருப்பேன்.
மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வந்துட்டேன், வந்துட்டேன்!////
எங்கப்பா போன ஆளையே காணோம் ? //
வீக் எண்ட்டுல , தல மட்டாயாயிட்டு, இப்போதான் தெளிஞ்சி வந்துருக்கு:)
/// Jey said...
பாத்தீங்களா,மத்த போட்டோக்கள்லாம் போட்டுட்டு, போடவேண்டிய இந்த போட்டோவ மட்டும் கரெக்டா விட்டுட்டீங்களே, அதெப்படி? //
இப்படி ப்ப்பிரபல பதிவராவேனு த்ரிஞ்சிருந்தா, போட்டோ’ஸ் பிளான் பன்னி எடுத்திருந்திருப்பேன்.///
அப்போ உண்மையிலயே அந்தப் போட்டோ இல்லியா? (நம்பிட்டோம்...!)
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//முடிந்தால் ஓட்டு போட்டுவிட்டு செல்லவும்.. ( இல்ல..பூக்குளி...ஜாக்கிரதை...ஹா..ஹா)//
.. வெரி டெலிக்கேட் பொசிசன், ம்ம், உங்களுக்காக டெல்லி புரோக்ராம கேன்சல் பன்ணிட்டு வர்ரேன்! ஸ்டார்ட் மியூசிக்! ||||
ஹஹஹஹா, கடைசில ஓட்டு போட்டியா? இல்லையா?. பூக்குளினு முடிவு பண்ணியாச்சா?.:)
///Jey said...
முத்து எப்படி???? கரக்டா 50 த போடுரயே, கல்;ஆக்காவ விட மனசே இல்லையா???? அங்க அவ்வளவு எஞாய்மெண்டா????????!!!!!!!111 ///
இப்பிடி ராணுவ ரகசியங்களை வெளியே சொல்லும் ஜெய்க்கு சுறா படத்தைத் தனியே மூனுதடவை பார்க்கும் தண்டனை வழங்கப்படுகிறது (தவறினால், வீராசாமி ஆறுமுறை பார்க்கவேண்டிவரும், ஜாக்கிரதை!)
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இன்னிக்கு நம்ம பயபுள்ளக யாரும் புதுசரக்க எறக்கிருக்காங்களா?? //
வெள்ளிக்கிழமை கிரதிநாலா எல்லோரும் நியூ வாட்டர் குடிக்க போயிட்டாங்க. ///
நமக்குத் தெரியாம அது என்னய்யா புதுச் சரக்கு? சே சே, மாநாட மயிலாட பாத்துப் பாத்து நாட்டு நடப்பு எதுவுமே தெரியாமப்போச்சு!
///வால்பையன் said...
த்டுக்கி விழந்துட்டா தெய்வ குத்தம் ஆயிருமா தல!?///
தெய்வக்குத்தம் ஆனாத்தான் தல தடுக்கி விழுவாங்க!
//பிரேமா மகள் said...
பூக்குழி இறங்கிய நியாபகமா இன்னும் காலில் தழும்பு இருக்கு எனக்கு...//
அதுக்குத்தான் விரதம்லாம் கரைட்டா இருக்கணும்..(ஹி..ஹி...)
சுவாசரியமான அனுபவ இடுகைங்க... நான் இப்பவும் பூக்குழி இறங்கிகிட்டுதான் இருக்கேன்...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்பிடி ராணுவ ரகசியங்களை வெளியே சொல்லும் ஜெய்க்கு சுறா படத்தைத் தனியே மூனுதடவை பார்க்கும் தண்டனை வழங்கப்படுகிறது (தவறினால், வீராசாமி ஆறுமுறை பார்க்கவேண்டிவரும், ஜாக்கிரதை!)//
பன்னி, தெரியாம பன்னிட்டேன், தீர்ப்ப மாத்திச்சொல்லிரு, தூக்கு தண்டனயெல்லாம், இதுக்கு ஓவர்.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இன்னிக்கு நம்ம பயபுள்ளக யாரும் புதுசரக்க எறக்கிருக்காங்களா?? //
வெள்ளிக்கிழமை கிரதிநாலா எல்லோரும் நியூ வாட்டர் குடிக்க போயிட்டாங்க. ///
நமக்குத் தெரியாம அது என்னய்யா புதுச் சரக்கு? சே சே, மாநாட மயிலாட பாத்துப் பாத்து நாட்டு நடப்பு எதுவுமே தெரியாமப்போச்சு!///
பன்னி, பட்டாகிட்டா அது என்னா சரக்குனு கேட்டதுல, அது என்னமோ வில்லங்கமானா சரக்கா தெரியுது, அத இத்தோட விட்ருவோம், நமக்கு வேணாம்.
க.பாலாசி said...
//பிரேமா மகள் said...
பூக்குழி இறங்கிய நியாபகமா இன்னும் காலில் தழும்பு இருக்கு எனக்கு...//
அதுக்குத்தான் விரதம்லாம் கரைட்டா இருக்கணும்..(ஹி..ஹி...)
சுவாசரியமான அனுபவ இடுகைங்க... நான் இப்பவும் பூக்குழி இறங்கிகிட்டுதான் இருக்கேன்...//
வாங்க பாலாசி அண்ணே, நீங்க எந்த ஊர்ல, எந்த கோவில் பூக்குழில எறங்குனீக?., விரத நாள்ல, பசிக்கு ஏதும், திருடி திண்ண அனுபவம் உண்டா?.
அனுபவத்தை அழகாய் தொகுத்துள்ளீர்கள்.
அன்புடன் மலிக்கா said...
அனுபவத்தை அழகாய் தொகுத்துள்ளீர்கள். ///
thanks for your visit, madam.:)
//இப்படி ப்ப்பிரபல பதிவராவேனு த்ரிஞ்சிருந்தா, போட்டோ’ஸ் பிளான் பன்னி எடுத்திருந்திருப்பேன்.//
யோவ் jey உங்களோட எல்லோ போட்டோ-வும் பேயறஞ்ச மாதிரிதான இருக்கும். பின்ன என்ன!!
u need answer for new water?'
http://sirippupolice.blogspot.com/2010/06/blog-post_04.html
read the comment section
பூக்குழி அனுபவத்தை இவ்வளவு விலாவாரியா படிச்சதில்லை..படங்களுடன் பதிவு,நேர்ல பாத்த அனுபவத்தைத் தருகிறது.
நல்ல பதிவுங்க ஜெய்!
very nice blog..................plz visit my blog if time permits.............http://lets-cook-something.blogspot.com/
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இப்படி ப்ப்பிரபல பதிவராவேனு த்ரிஞ்சிருந்தா, போட்டோ’ஸ் பிளான் பன்னி எடுத்திருந்திருப்பேன்.//
யோவ் jey உங்களோட எல்லோ போட்டோ-வும் பேயறஞ்ச மாதிரிதான இருக்கும். பின்ன என்ன!!///
என்னோட பெர்சனாலிடிய பார்த்து, பொறாம படுறது தெரியுது. அது உடம்புக்கு நல்லதில்லை ரமேஷ்:)
Mahi said...
பூக்குழி அனுபவத்தை இவ்வளவு விலாவாரியா படிச்சதில்லை..படங்களுடன் பதிவு,நேர்ல பாத்த அனுபவத்தைத் தருகிறது.
நல்ல பதிவுங்க ஜெய்! //
வருகைக்கு நன்றி Mahai.
callmeasviju said...
very nice blog..................plz visit my blog if time permits.............http://lets-cook-something.blogspot.com/|||
i'll check your blog immediatly:)
We have to keep our villages and formalities in future for our kids.Express same to your kids and ask them to follow for our prayer to our god and others i mean kidai vedu,pookuli if you have time take to them on festival time they will understand than you
Post a Comment