முஸ்கி : நேரா போட்டோவ மட்டும் பாத்துட்டு போகாம , கஷ்டப்பட்டு எழுதுனத படிச்சிருங்க மக்கா.
நம்ம எலோருக்கும் பள்ளியில் படிக்கும்போது ஒரு அனுபவம் கண்டிப்பா இருக்கும்.. “அது வருசா வருசம் வகுப்பு கூட்டாளிகளோட (அதுல பகையாளிகளும்.. உண்டு) ஒன்னா படம் பிடிக்கிறது,”.
அன்னிக்குதான் ஒருங்கா குளிச்சி, தலையில காப்பிடி எண்ணய ஊத்தி படிய தலை வாரி, பவுடரெல்லாம் முகத்துல அப்பிகிட்டு , தொவச்ச சொக்காவ போட்டுகிட்டு , ரொம்ப முக்கியமா , யாருகிட்டயாவது ஒரு கைக்கடிகாரத்த வங்கிகட்டிகிட்டு ( அழுது புரண்டு, கெஞ்சி, கூத்தாடி அழிச்சட்டியம் பண்ணியாவது) சினிமா சூட்டிங்குக்கு போற ஈரோ கணக்கா பள்ளியில ஆஜராய்டுவோம்.(நம்ம அம்மனிக ஒப்பன பன்றத பத்தி, எழுதுனா வழக்கத்த விட பதிவு நீளமா பூடும், சிங்கப்பூர் நாட்டாம, பட்டாபட்டி வந்து “ என்னயா படம் 4 மணி நேரம் ஓடுதுபோலனு நக்கல் பன்னுவாரு, அதனால எதுக்கு ரிஸ்குனு எழுதல.)
படம் பிடிக்குற ஆர்வத்துல அன்னிக்கு, காலையில சீக்கிரமா பள்ளிக்கு வந்துட்டு, ”ஏய் நான் நல்லருக்கேனா?”... மதிரியான கேள்விகள புதுசா கேட்டுகிட்டு அலைவோம், போட்ட சொக்கா.. கசங்கிரும்...., தலைமுடி கலைஞ்சிரும்னு... ஆடாம அசையாம நல்ல புள்ளக மாதிரி அடக்கமா ஒர் இடத்துல செட்டில் ஆயிருவோம்.
ஒருவழியா வகுப்புவாரியா கூப்பிடுறதுல நம்ம முறை வந்தவுடனே அடிச்சி பிடிச்சி முன்னால போய் நின்னா, நீ குள்ளம்.. நீ ஒசரம்னு பிரிச்சி, முன்னாடி இருக்குறவங்க நம்மள மறச்சது போக, நம்ம மூஞ்சி மட்டூம் தெரியிர மாதிரி நிப்பாட்டிருவாங்க. நமக்கு அழுவாச்சியா வரும், கண்ணுல தண்ணி முட்டிட்டு நிக்கும், ஆனாலும் அதயும் மீறி எப்படியாவது நம்மள படம் எடுக்க போறாங்களேனு மனசுக்குள்ள சந்தோசமமும் இருக்கும்.
இப்பதான் இந்த பதிவ நான் எழுதக்காரனமான, ஒரு முக்கியமான ஒருவேலைய எல்லா பசங்களும் பண்ணுவோம் , அது என்னன்னா, வழக்கமா முன்னாடி கைக்கட்டி நிக்கிறா மாறி நிக்காம, கடிகாரம் கட்டியிருக்கிற கையை முன்னாடி நல்லா தெரியுரா மாதிரி நிப்போம்.(அம்மனிக அலம்பல் இன்னும் ஓவராதான் இருக்கும், அவங்க பன்ற …..சரி வேண்டாம் வுட்ருவோம்...)
இடையில, கேமராவுக்கும், தனக்கும் சேத்து கருப்பு துணியால முக்காடு போட்டுகிட்டு, பிசி ஸ்ரீராம் ரேஞ்சுல ஒருத்தர், ஏய் நீ அந்த சைடு தள்ளு, நீ இந்த சைடு தள்ளு, நேர நிள்ளு , தலைய சாய்க்காதேனு படம்பிடிக்குறதுக்குள்ள ஒரு ட்ரில் மாஸ்டர் கணக்கா சீன் வுடுவாரு. அப்பன் ஆத்த சொல்றதயே கேக்காம அல்வா கொடுத்துட்டு இருந்த நாம, நம்மள படம்பிடிக்கிற மவராசன் சொல்றதால, அடுத்த நொடி கோரிக்கய நெறவேத்துவோம்.
இங்க எழுதுனதவிட இன்னும் அதிகமான கூத்துகளோட எங்க பள்ளியில எடுத்த என் வகுப்பு படத்த இங்கே போட்டிருக்கேன் , நல்லாபாருங்க. கடிகாரம் கட்டியிருக்குரவன்னேல்லம் நல்லா கைய தூக்கி முன்னாடி கமிச்சிருக்கானா?.
||| 1988 ம் வருசம் பத்தாப்பு படிக்கும்போது எடுத்த படம். கீழ் வரிசைல வலதுபக்கமிருந்து 5-வதா, நான் நிக்கிறேன். கடன் வாங்கிகட்டுன, கடிகாரமும், பெல்ட் பக்கிள்ஸும் நல்லா தெரியுதுங்களா?.( முன்னாடி நின்ன மவராசி கடிகாரத்த கொஞ்சம் மறச்சிருச்சி..) |||
படம் பிடிச்சி முடிஞ்சவுடனே எனக்கு முன்னாடி இருந்த அம்மணி கூட பெரிய சண்டை, ஏன்னா படம்பிடிக்குரதுக்கு முன்னாடியிருந்தே , என் கைகடிகாரத்த மறக்காம தலைய அந்த பக்கமா சாச்சி நில்லுனு சொல்லிட்டிருந்தேன், ஆனா அந்த மவராசி..., ஓகே ரெடினு சொன்னவுடனே தலைய கடிகாரம் கட்டியிருந்த கை பக்கமா சாய்ச்சிட்டா. அப்புறம் படம் ப்ரிண்ட் வந்து, அதுல என் கைக்கடிகாரம் தெரிஞ்சிதுக்கு அப்புரம்தான், கோவம் கொறைஞ்சிது, அந்த அம்மனி எனக்கு பயந்துகிட்டு 3 நாள் கூலுக்கு வரல.
( அப்பாடி பதிவ சுருக்கமா எழுதிட்டேன்...)
டிஸ்கி : பதிவு பற்றிய கருத்துக்களை அள்ளித்தெளித்துவிட்டு செல்லவும், ஏதும் குட்டனும்னா மட்டும் வலிக்காம குட்டவும். அப்படியே ஒரு ஓட்... போட்ருங்.......
71 comments:
அழகான நகய்ச்சுவயான மலரும் நினைவுகள்
Gayathri said...
அழகான நகய்ச்சுவயான மலரும் நினைவுகள் //
வருகைக்கு நன்றி.
வழக்கமா முதல் பின்னூட்டம் போடுரவங்களுக்கு, வட தருவோம், நீங்க அம்மணின்றதால, ஒரு பூங்குத்து.
WHERE IS MY வடை?...போச்சே...
அட..பத்தாம்பு படிச்ச பயலா நீரு...?
பட்டாபட்டி.. said...
WHERE IS MY வடை?...போச்சே...//
வடைய வித்து, முதல்ல வந்த அம்மணிக்கு பூங்குத்து வாங்கி கொடுத்துட்டேன். இப்புடு வடை லேது.
//அட..பத்தாம்பு படிச்ச பயலா நீரு...?///
ச்சே நானாத்தான் உளறிட்டேனா?
மலரும் நினைவுகள் அருமை
மறக்கவே முடியாத நினைவுகள்'ல ஒண்ணு.. பத்தாம் வகுப்பு... அந்த சந்தோஷம், கொண்டாட்டம், எல்லாம் இன்னமும் பசுமையா இருக்கு. பழைய நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க. நானும் என் பத்தாம் வகுப்பு ஃபோட்டோவை எடுத்து பார்க்க போறேன், விழியில் கசியும் கண்ணீரோடு
கவிதை காதலன் said...
மறக்கவே முடியாத நினைவுகள்'ல ஒண்ணு.. பத்தாம் வகுப்பு... அந்த சந்தோஷம், கொண்டாட்டம், எல்லாம் இன்னமும் பசுமையா இருக்கு. பழைய நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க. நானும் என் பத்தாம் வகுப்பு ஃபோட்டோவை எடுத்து பார்க்க போறேன், விழியில் கசியும் கண்ணீரோடு///
அப்படி வர்ற கண்ணீர் ஆனந்த கன்ணீரா இருக்கட்டும்.
வருகைக்கு நன்றி , தலைவா.
உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
மலரும் நினைவுகள் அருமை ///
நன்றி உலவு.காம்.
சூப்பர் !!
வினையூக்கி said...
சூப்பர் !!///
நன்றி சார்.
அண்ணே நீங்க பத்தாவது பெயில். நான் எட்டாவது பாஸ். ஹிஹி
இதுல உங்க ஆளு யாரு. எந்த எந்த பொண்ணுங்ககிட்ட செருப்படி வான்குநீன்கன்னு ஒரு கோடு போட்டு காட்டி இருந்தா நல்லா இருக்குமே தல..
இந்த கூத்து நாங்க ஆறாம் வகுப்பு படிக்கும் போதே நடந்தது.அந்த அறை ட்ராயர் வயசில், அண்ணன் மார்கள் கையில் ஒரு கடிகாரத்தை கட்டிவிட, அம்மா ஒரு தங்க செயினை கழுத்தில் அதுவும் சட்டைக்கு வெளியே போட்டு விட , படம் எடுத்து வநத பின்னர் பார்த்தல் செயின் தெளிவாக தெரியாமல் போக ஒரே அழுகை.
நினைத்தால் சிரிப்பாய் சிரிக்கிறது.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இதுல உங்க ஆளு யாரு. எந்த எந்த பொண்ணுங்ககிட்ட செருப்படி வான்குநீன்கன்னு ஒரு கோடு போட்டு காட்டி இருந்தா நல்லா இருக்குமே தல..//
பப்ளிக்..பப்ளிக்க்..( எப்படியாவது என்னை கோர்த்துவிட்டு அடிவாங்க வைக்கனும்னு துடியாத்துடிக்கிறது தெரியுது கண்ணு, மஞ்சத்தண்ணி உனக்கு கன்பார்ம்.. அத மாத்த முடியாது..)
கக்கு - மாணிக்கம் said...
இந்த கூத்து நாங்க ஆறாம் வகுப்பு படிக்கும் போதே நடந்தது.அந்த அறை ட்ராயர் வயசில், அண்ணன் மார்கள் கையில் ஒரு கடிகாரத்தை கட்டிவிட, அம்மா ஒரு தங்க செயினை கழுத்தில் அதுவும் சட்டைக்கு வெளியே போட்டு விட , படம் எடுத்து வநத பின்னர் பார்த்தல் செயின் தெளிவாக தெரியாமல் போக ஒரே அழுகை.
நினைத்தால் சிரிப்பாய் சிரிக்கிறது.///
அப்ப நாமெல்லாம், ஒரே இனமா...!!!
வருகைக்கு நன்றி, தலைவா.
இரு படிச்சிட்டு வர்றேன் (எப்ப பதிவு போடுரானுகுன்னே தெரியலையே
)
கீழ் வரிசைல வலதுபக்கமிருந்து 5-வதா, நான் நிக்கிறேன்///
சேம் பிளட் , சேம் வாட்ச் , சேம் என்னை
அந்த இடத்துல ஒரு பொம்பள புல்லை உட்கார்ந்து இருக்கு (குழப்புரானுகளே , ஒன்னும் புரிய மாட்டேங்கிது )
மங்குனி அமைச்சர் said...
கீழ் வரிசைல வலதுபக்கமிருந்து 5-வதா, நான் நிக்கிறேன்///
சேம் பிளட் , சேம் வாட்ச் , சேம் என்னை
அந்த இடத்துல ஒரு பொம்பள புல்லை உட்கார்ந்து இருக்கு (குழப்புரானுகளே , ஒன்னும் புரிய மாட்டேங்கிது )///
தக்காளி, எங்க போனாலும், இந்த பொம்பள பசங்கங்களையே பாரு..
பையனுங்க நிக்கிறவரிசைல, கீழ் வரிசை
உங்க ஸ்கூல் படம் பார்குறப்ப ரொம்ப சந்தோசமா இர்ருக்கு .. நாங்க படிக்கிறப்ப கருப்பு வெள்ளைதான்.. இப்ப பார்த்தா யாரையுமே தெரியல...
Jey said...
மங்குனி அமைச்சர் said...
கீழ் வரிசைல வலதுபக்கமிருந்து 5-வதா, நான் நிக்கிறேன்///
சேம் பிளட் , சேம் வாட்ச் , சேம் என்னை
அந்த இடத்துல ஒரு பொம்பள புல்லை உட்கார்ந்து இருக்கு (குழப்புரானுகளே , ஒன்னும் புரிய மாட்டேங்கிது )///
தக்காளி, எங்க போனாலும், இந்த பொம்பள பசங்கங்களையே பாரு..
பையனுங்க நிக்கிறவரிசைல, கீழ் வரிசை//////
இத மொதல்லே தெளிவா சொல்லிருக்கலாமுள்ள (அவனுக தப்பு செஞ்சிட்டு நம்மள திற்றஅணுக , எல்லாம் கலிகாலம் )
கே.ஆர்.பி.செந்தில் said...
உங்க ஸ்கூல் படம் பார்குறப்ப ரொம்ப சந்தோசமா இர்ருக்கு .. நாங்க படிக்கிறப்ப கருப்பு வெள்ளைதான்.. இப்ப பார்த்தா யாரையுமே தெரியல..//
அப்ப எனக்கு வயசு ரொம்ப கம்மினு சொல்லுங்க!!!:).( ஏன்னா நான் கலர் போட்டோ காலத்து ஆளு.)
ஸ்கூல் லே படிச்ச நாளுகள் எப்போதும் மனதில் வந்து போயி இருக்கற ஒரு நினைவு தான் அது ரொம்ப தமாசா எழுதிடிங்க ..எங்கே என் பூங்கொத்து ? அப்பிடியே காலேஜ் போட்டோ கூட போடலாம் இல்லையா ??
sandhya said...
ஸ்கூல் லே படிச்ச நாளுகள் எப்போதும் மனதில் வந்து போயி இருக்கற ஒரு நினைவு தான் அது ரொம்ப தமாசா எழுதிடிங்க ..எங்கே என் பூங்கொத்து ? அப்பிடியே காலேஜ் போட்டோ கூட போடலாம் இல்லையா ??///
வருகைக்கு நன்றிமேடம். இப்போதானெ பதிவு எழுத தொடங்கிருக்கேன், இன்னும் +2 இருக்கு, அதுகப்புறம்தான் காலேஜ்.
நான் அ ஆ -னா எழுதுன முதல் பதிவையே பொருப்பா வந்து படிச்சி பின்னூட்டம் போட்டவங்க, அதனால, ரூல்ஸ் மீறி , உங்களுக்கு ஒரு பூங்கொத்து.( பட்டாபட்டி , 2-வது கமெண்ட் போட்டுட்டு வட கேட்டான் நான் கொடுக்கலை, சண்டைக்கு வருவானானு தெரியல.)
//அப்பிடியே காலேஜ் போட்டோ கூட போடலாம் இல்லையா ?? //
ஏங்க இந்த கொலைவெறி.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//அப்பிடியே காலேஜ் போட்டோ கூட போடலாம் இல்லையா ?? //
ஏங்க இந்த கொலைவெறி.|||
வுடுப்பா.. வுடுப்பா.., நான் காலெஜெல்லாம் படிச்சிருக்கேனு நம்புராங்க, நானும் +2,காலெஜ்னு படிச்சவன்மாரி பில்டப் குடுத்திருக்கேன், பப்ளிக்ல வந்து சீரியசா லந்து பன்றியே, நீ நல்லவன்னு கொல்லப்பேருகிட்ட சொல்லிருக்கேன்யா, அதுமாதிரி நடந்துகோ.
நான் மட்டும் தான் அப்டீன்னு நெனச்சேன். இங்க வந்து பார்த்தான் தெரியுது எல்லா பிளட்டும் சேம் பிளட்டுதான்னு
வில்சன் said...
நான் மட்டும் தான் அப்டீன்னு நெனச்சேன். இங்க வந்து பார்த்தான் தெரியுது எல்லா பிளட்டும் சேம் பிளட்டுதான்னு///
அடடா, நம்ம சாதி சனம் ரொம்ப இருக்கும்போலயே, சங்கம் ஆரம்பிச்சிரலாமா!!!?
வருகைக்கு நன்றி வில்சன்.
ha ha ha நன்றி
அந்த நாள் ஞாபகத்தை ....நகைச்சுவை யோடு....( கவனிக்க்வும் நகைச்சுவை யோடு நகச் சுவை அல்ல ) .
பகிர்ந்தமைக்கு நன்றி.உங்களை நினைச்சு சிரிச்சேன் கற்பனையில் ( புனைவு இல்லாத கதை )
பழனி படிக்கட்டு மாதிரி எத்தன கட்டிங்க்ஸ்.. ஹீ ஹீ :)
நிலாமதி said...
///அந்த நாள் ஞாபகத்தை ....நகைச்சுவை யோடு....( கவனிக்க்வும் நகைச்சுவை யோடு நகச் சுவை அல்ல ) .////
”நகச் சுவை” என்றால் என்ன???.( நல்லா கவனிங்க நான் கேடது நகைச்சுவை இல்லை “ நகச் சுவை).
உங்க தமிழ் எனக்கு பிடிச்சிருக்கு அம்மனி.
////பகிர்ந்தமைக்கு நன்றி.உங்களை நினைச்சு சிரிச்சேன் கற்பனையில் ( புனைவு இல்லாத கதை ) ////
நிஜத்துலயும் சிரிங்க அம்மனி, ஒன்னும் நெனைக்க மாட்டேன்.
உங்களின் முதல் வருகைக்கு நன்றி.
பிரசன்னா said...
பழனி படிக்கட்டு மாதிரி எத்தன கட்டிங்க்ஸ்.. ஹீ ஹீ :)///
ஒன்பதாப்பு, பாசாகிட்டா பள்ளிய விட்டு துரத்திருவாங்கனு, 3-4 வருசமா 9-ம் வகுப்புலேயே இருந்த பங்காளிக பலப்பேர் அழிச்சாட்டியம் தாங்க முடியாம, அந்த வருசந்தான், பாசாக்கி பத்தாவது அனுப்பிட்டாங்க. கடைசில படிக்கட்டு அதிகமாகி படத்த லாங் சாட்ல எடுத்து.... ஒருபய மூஞ்சியும் தெலிவா திரிய மாட்டீங்குது.
( உங்க பிளாக் படிச்சசேன், உங்க எழுது நடை நல்லா இருக்கு, கல்லூரி அனுபவத்தை எழுதுங்க அத பாத்து காபியடிக்க வசதியா இருக்கும், அப்புறம் இந்த அம்மனிகளோட சைக்காலஜிய பத்தியும் நெரய எழுதுங்க, உங்க பிளாக்ல பின்னூட்டம் போடமுடியல அதான் இங்க..)
யோவ் விளக்கெண்ண....
பொண்ணுக அலங்காரம் பண்ணுறத பத்தி எழுதணும்னா நீ தொடர் பதிவு தான் எழுதணும்...
//இதுல உங்க ஆளு யாரு. எந்த எந்த பொண்ணுங்ககிட்ட செருப்படி வான்குநீன்கன்னு ஒரு கோடு போட்டு காட்டி இருந்தா நல்லா இருக்குமே தல..//
யோவ்,கணக்கு வச்சுக்குற மாதிரியா இருக்கு நம்ம ஜெய்ய பார்த்தா? :)
அந்த மொட்டைக்கு நேர் மேல நிக்கிறது தான் நீங்களா பாஸ். அழகா இருக்கு?? ஹி.. ஹி..
அந்த மொட்டைக்கு நேர் மேல நிக்கிறது தான் நீங்களா பாஸ். அழகா இருக்கு?? ஹி.. ஹி..
இப்ப யோசித்து பார்க்கிறேன், என் பள்ளி படங்கள் எல்லாம் எங்கே இருக்குனே தெரியலை. மிக அருமையான பதிவு.
யோவ் என்னையா சொல்லுற நீ பத்தாப்பு வரை படிச்சு இருக்கியா?
சொல்லவே இல்ல பொய் தானே???
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இதுல உங்க ஆளு யாரு. எந்த எந்த பொண்ணுங்ககிட்ட செருப்படி வான்குநீன்கன்னு ஒரு கோடு போட்டு காட்டி இருந்தா நல்லா இருக்குமே தல..////////
இதை நான் வழி மொழிகிறேன்.ரமேஷ் இப்போ தான் கரெக்ட் ரூட்டில் போகுது விடாதீங்க
கக்கு - மாணிக்கம் said...
இந்த கூத்து நாங்க ஆறாம் வகுப்பு படிக்கும் போதே நடந்தது./////////
அண்ணே என்ன இருந்தாலும் உண்மையாய் பப்ளிக்கில் சொல்லுவதற்கு ஒரு தில் வேண்டும்.எதுக்கா நீங்க ஆறாப்பு தாண்டலைன்னு சொன்னது தான்
மங்குனி அமைச்சர் said...
கீழ் வரிசைல வலதுபக்கமிருந்து 5-வதா, நான் நிக்கிறேன்///
சேம் பிளட் , சேம் வாட்ச் , சேம் என்னை
அந்த இடத்துல ஒரு பொம்பள புல்லை உட்கார்ந்து இருக்கு ////////
குட்,சரியான கேள்வி இப்படி தான் விவரமா கேட்கனும் மங்கு
கே.ஆர்.பி.செந்தில் said...
உங்க ஸ்கூல் படம் பார்குறப்ப ரொம்ப சந்தோசமா இர்ருக்கு .. நாங்க படிக்கிறப்ப கருப்பு வெள்ளைதான்.. இப்ப பார்த்தா யாரையுமே தெரியல...//////////
பாஸ் நீங்க இன்னும் கருப்பு வெள்ளையில் தான் போஸ் குடுக்குறீங்க
Jey said...
கே.ஆர்.பி.செந்தில் said...
உங்க ஸ்கூல் படம் பார்குறப்ப ரொம்ப சந்தோசமா இர்ருக்கு .. நாங்க படிக்கிறப்ப கருப்பு வெள்ளைதான்.. இப்ப பார்த்தா யாரையுமே தெரியல..//
அப்ப எனக்கு வயசு ரொம்ப கம்மினு சொல்லுங்க!!!:)./////////
இப்படி சொன்னா நான் நம்பிடுவனா பேமலி போட்டோ கையில் இருக்கு ஜாக்கிரதை
ILLUMINATI said...
யோவ்,கணக்கு வச்சுக்குற மாதிரியா இருக்கு நம்ம ஜெய்ய பார்த்தா? :)////////
அதானே ஒன்னு கூட தேறி இருக்காது (இப்படி சொன்னால் ஆவது உண்மையை சொல்றான்னு பாப்போம் )
எம் அப்துல் காதர் said...
அந்த மொட்டைக்கு நேர் மேல நிக்கிறது தான் நீங்களா பாஸ். அழகா இருக்கு?? ஹி.. ஹி../////////////
போங்க பாஸ் நீங்க கணக்கில் ரொம்ப வீக்
தறுதலை said...
இப்ப யோசித்து பார்க்கிறேன், என் பள்ளி படங்கள் எல்லாம் எங்கே இருக்குனே தெரியலை. மிக அருமையான பதிவு.//////////
இதுக்கு போயி பீல் பண்ணிக்கிட்டு,இப்போ நினைச்சால் கூட பத்தாப்பு படிக்கலாம் வாங்க நானும் உங்களுடன் வருகிறேன் (போட்டோ எடுகிறதுக்காகவாது நான் படிச்சு ஆவணும்)
ILLUMINATI said...
///யோவ் விளக்கெண்ண....
பொண்ணுக அலங்காரம் பண்ணுறத பத்தி எழுதணும்னா நீ தொடர் பதிவு தான் எழுதணும்...///
அதுதம்பா எழுதல( எஙடோ செமத்திய அடிவங்கிட்டு வந்து இங்க வந்து சலம்பிட்டு போயிருக்கு பீசு..)
///யோவ்,கணக்கு வச்சுக்குற மாதிரியா இருக்கு நம்ம ஜெய்ய பார்த்தா? :)///
ஹி ஹி ஹிஹி :)
எம் அப்துல் காதர் said...
அந்த மொட்டைக்கு நேர் மேல நிக்கிறது தான் நீங்களா பாஸ். அழகா இருக்கு?? ஹி.. ஹி..////
ஜஸ்ட் மிஸ் பன்னிட்டியே ராசா, என்ன விட கனஉல வீக் போல. 6வது ஆள பாத்திருக்கீங்க, 5-வது ஆளா பக்கத்துல சும்மா ஹீரோ கணக்கா நிக்கிரதுதான் நான்:)
முத்து said...
Jey said...
கே.ஆர்.பி.செந்தில் said...
உங்க ஸ்கூல் படம் பார்குறப்ப ரொம்ப சந்தோசமா இர்ருக்கு .. நாங்க படிக்கிறப்ப கருப்பு வெள்ளைதான்.. இப்ப பார்த்தா யாரையுமே தெரியல..//
அப்ப எனக்கு வயசு ரொம்ப கம்மினு சொல்லுங்க!!!:)./////////
இப்படி சொன்னா நான் நம்பிடுவனா பேமலி போட்டோ கையில் இருக்கு ஜாக்கிரதை ////
கொஞ்சம் சீன் போட விட மாட்றானுங்களே, பப்ளிக்கா பிளாக் மெயில் வேற பண்ரானுக.
முத்து said...
50 ///
தக்காளி வந்த வேலைய கச்சிதமா முடிச்சிட்டு ஓடிட்டே, போ உன்னோட ட்ரைனிங்க பத்தி தனி பதிவா போடு.
முத்து said...
யோவ் என்னையா சொல்லுற நீ பத்தாப்பு வரை படிச்சு இருக்கியா?
சொல்லவே இல்ல பொய் தானே??? ///
சும்மா போட்டோ எடுக்குறதுக்காக போனதுயா.., ச்சே பப்ளிக்கா கேட்டு மானத்த வாங்காதையா.
மச்சான் மொதோ வரிசைல மூணாவதா உக்காந்துருகர டிக்கெட்டு சூப்பரு ஓய்...! :)
//Veliyoorkaran said...
மச்சான் மொதோ வரிசைல மூணாவதா உக்காந்துருகர டிக்கெட்டு சூப்பரு ஓய்...! :)//
பப்ளிக்... பப்ளிக்...பப்ளிக்...
(ஏற்கனவே படத்துல இருக்கிறவங்ககிட்ட அனுமதி வாங்காம போட்டுட்டமேனு, லேசா குத்துது, நீ வேற எண்ணைய ஊத்துற)
வெளியூரு, மொத மொத கடைக்கு வந்துருக்கே நாலு நல்ல வார்த்த சொல்லிட்டு போய்யா...( என்ன சொல்ரயோ அத உன் ஆளுக்கு ஃபார்வேடு செய்யப்படும்...:))
@@@Jey said...
வெளியூரு, மொத மொத கடைக்கு வந்துருக்கே நாலு நல்ல வார்த்த சொல்லிட்டு போய்யா...( என்ன சொல்ரயோ அத உன் ஆளுக்கு ஃபார்வேடு செய்யப்படும்...:))
////
வெளியூர்காரன் மாதிரி ஒரு நல்லவன வல்லவன இந்த உலகத்துல பார்க்கவே முடியாது...அவன கட்டிக்க போற பொண்ணு ரொம்ப குடுத்து வெச்சவ...! (தக்காளி இத நீ பார்வேர்ட் பண்ணல, உனக்கு இருக்குடி சங்கு...! ) :)
// Veliyoorkaran said...
@@@Jey said...
வெளியூரு, மொத மொத கடைக்கு வந்துருக்கே நாலு நல்ல வார்த்த சொல்லிட்டு போய்யா...( என்ன சொல்ரயோ அத உன் ஆளுக்கு ஃபார்வேடு செய்யப்படும்...:))
////
வெளியூர்காரன் மாதிரி ஒரு நல்லவன வல்லவன இந்த உலகத்துல பார்க்கவே முடியாது...அவன கட்டிக்க போற பொண்ணு ரொம்ப குடுத்து வெச்சவ...! (தக்காளி இத நீ பார்வேர்ட் பண்ணல, உனக்கு இருக்குடி சங்கு...! ) :)///
என்னைப்பத்தியும் நாலு நல்ல வார்த்தை சொன்னாதான்யா நீ முதல்ல சொன்னத உன் ஆளுக்கு ஃபார்வேடு செய்வேன்...( தக்காளி செம்மொழி மானாட்ல கலிஞ்சரு தனன்னைத்தானே புகழ்ந்து 4 மணி நேரம் பேசுனாலும் பேசுனாரு, ஊரெல்லாம் அதே ஸ்டைலுல கிளம்பிட்டானுக...)
Veliyoorkaran said...
மச்சான் மொதோ வரிசைல மூணாவதா உக்காந்துருகர டிக்கெட்டு சூப்பரு ஓய்...! :)
//
ஆமாமா.. டீ பார்சல்...
ஜே..யாருப்பா அது?..
எங்க மாமனார், எவ்வளவு காரு ..பங்களா வெச்சிருக்காருனு பார்த்துட்டு தந்தி அடி..வாரேன்
பட்டாபட்டி.. said...
Veliyoorkaran said...
மச்சான் மொதோ வரிசைல மூணாவதா உக்காந்துருகர டிக்கெட்டு சூப்பரு ஓய்...! :)
//
ஆமாமா.. டீ பார்சல்...
ஜே..யாருப்பா அது?..
எங்க மாமனார், எவ்வளவு காரு ..பங்களா வெச்சிருக்காருனு பார்த்துட்டு தந்தி அடி..வாரேன்///
கூடப்படிச்ச அம்மனி மக்கா, இப்படியெல்லாம் பேசப்படாது. இப்ப அவங்க பொண்ணு, இன்னும் 2 வருசத்துல, பத்தாப்பு படிக்கப்போகுதுயா.
இன்னிக்கு துக்ளக் தலையங்கம் படிச்சியா?
இலங்கைத்தமிழர் விஷத்துல ஏன்யா இந்த ஆள் இப்படி எழுதுரான்.???, மததது நல்லாத்தான் ஏழுதுர மாரி இருக்கு...
கூடப்படிச்ச அம்மனி மக்கா, இப்படியெல்லாம் பேசப்படாது. இப்ப அவங்க பொண்ணு, இன்னும் 2 வருசத்துல, பத்தாப்பு படிக்கப்போகுதுயா
//
O..சரிங்க அய்யா..
என்னோட பணிவான வணக்கங்கையா...
பட்டாபட்டி.. said...
O..சரிங்க அய்யா..
என்னோட பணிவான வணக்கங்கையா...///
உங்கிட்ட நொம்ப பிடிச்சதெ... இந்த நேர்மைதான்யா?.. ( ஆனாலும் அய்யானு, சொல்லி என் வயச கூட்ட முயற்சிப்பதற்கு என் கடும் கண்டனங்கள்)
அது வாட்ச்சை காமிக்ரதுக்காக இல்ல ஜெய். வாட்ச் கடன் வாங்கியது வயசான கிழடுகளிடம். கையை கீழே போட்டா வேற வாட்ச் வாங்கிதான் கொடுக்கணும். நானெல்லாம் முதல் வகுப்புலேயே வாட்ச் கடன் வாங்கி போஸ் குடுத்த ஆள்.
//geeyar said...
அது வாட்ச்சை காமிக்ரதுக்காக இல்ல ஜெய். வாட்ச் கடன் வாங்கியது வயசான கிழடுகளிடம். கையை கீழே போட்டா வேற வாட்ச் வாங்கிதான் கொடுக்கணும். நானெல்லாம் முதல் வகுப்புலேயே வாட்ச் கடன் வாங்கி போஸ் குடுத்த ஆள். ///
உங்க அலம்பல் ஒன்னாப்புலயே ஆரம்பிச்சிருச்சா...?.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி geeyaar
பசுமை மாறாத நினைவு பதிவு.....வாழ்த்துகள்
rk guru said...
பசுமை மாறாத நினைவு பதிவு.....வாழ்த்துகள்//
நன்றி. உங்க பதிவு படிச்சேன். ரொம்ப நல்லா இருந்தது, ரசிச்சு படிச்சேன், ரொம்ப அறிமுகம் இல்லைனாலும், பரவாயில்லைனு, நெரய பின்னூட்டம் போட்டுட்டேன்:)
போட்டாவைவிட உங்கள் எழுத்துக்கள் உண்மையை வெளிப்படுத்தியுள்ளன. வாழ்த்துக்கள்
மதுரை சரவணன் said...
போட்டாவைவிட உங்கள் எழுத்துக்கள் உண்மையை வெளிப்படுத்தியுள்ளன. வாழ்த்துக்கள்//
வருகைக்கும் கருத்துக்கும் நனறி சார்.
நம்ம சடு ஆளா சார் நீங்க:).
(முன்னயெல்லாம், உங்க ஊரு எதுனுகேட்டா , மதுரப்பக்கம்னு சொல்லுவேன், இப்ப தேனிய , பிரிச்சதுக்கப்புறம், யாரும் கேட்டா, தேனிப்பக்கம்னு சொல்லிட்டிருக்கேன்:))
//அப்புறம் படம் ப்ரிண்ட் வந்து, அதுல என் கைக்கடிகாரம் தெரிஞ்சிதுக்கு அப்புரம்தான், கோவம் கொறைஞ்சிது, அந்த அம்மனி எனக்கு பயந்துகிட்டு 3 நாள் கூலுக்கு வரல. //
ஹா ஹா.. இப்படியாங்க பயமுறுத்தறது..!!
உங்க பள்ளி நினைவு அருமையா இருந்தது.. :D :D
உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))
http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html
Ananthi said...
ஹா ஹா.. இப்படியாங்க பயமுறுத்தறது..!!
உங்க பள்ளி நினைவு அருமையா இருந்தது.. :D :D///
வருகைக்கும், வ்ருதுக்கும் நன்றி:)
எனக்கும்தான் என்னோட ஆறாம் வகுப்பு போட்டோ கிடைச்சுது, அதையும் என்னோட பதிவுல போட்டேன். ஆனா இப்படி கொசுவத்தி சுத்தணும்னு தோனலையே......................(நடிகர் திலகம் ஸ்டைலில் படிக்கவும்)
http://ulagamahauthamar.blogspot.com/2010/07/blog-post_07.html
Post a Comment