July 26, 2010

புளியமரத்தடியில் 1 மணி நேரம் படுத்து எழுந்தால் ரூ 80/- உறுதி.......









இன்று காலையில் பத்திரிக்கையில் ஒரு செய்தி படித்தேன்...

செய்தித் தலைப்பு :வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் சம்பள உயர்வா?.

திட்டத்தின் பெயர் : மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (எம்.என்.ஆர்..ஜி.).

திட்டத்தின் நோக்கம் :  “ கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது “.

        இத்திட்டத்தின் கீழ் , ஒவ்வொரு நிதியாண்டிலும் , கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு 100 நாட்கல் வேலை அளிக்கப்படும்.. ஆறுகள், குளங்கள்,கால்வாய்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் அவர்களுக்கு அளிக்கப்படும்.. 

      இந்த திட்டம் 2005-ல் கொண்டுவரப்பட்டு , 2006-ல், 200 மாவட்டங்களில் 11-ஆயிரம் நிதி ஒதிகீட்டில் ஆரம்பித்து 2010-11-ல் 40-ஆயிரத்து 100 கோடி ரூபாயாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ( நன்றி தினமலர்).

      சரி விசயத்திற்கு வருவோம் :

      திட்டத்தின் நோக்கம் சரியாகத்தான் படுகிறது, ஆனால் அது செயல் படுத்தும் விதம் எப்படி உள்ளது?...

      நேற்று எங்கள் கிராமத்திலிருந்த உறவினர், சென்னையில் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு வந்தவர், வீட்டுக்கு வந்திருந்தார், அவரிடம் வழக்ம்போல், என்ன மாமா, ஆடி பொறந்திருச்சி, நிலமெல்லாம் உழ ஆரம்பிச்சாச்சா?, ஆவணில வெதை வெதைக்க ஆரம்பிக்கனுமில்லனு கேட்டேன், அதுக்கு அடப்போ மாப்ள என்னத்த வெதைச்சி என்னத்தே (சினிமால ஒருத்தர் சொல்வாரே அதே மாதிரி ஸ்டைலில்) விவசாயம் பண்ண, பேசாம, இந்த வருசம் பூரா நிலத்தையும் தருசா போட்ரலாம்னு இருக்கேன் என்று வெறுப்புடன் சொன்னார்

      அவரின் மொத்த புலம்பலையும் எழுதினால் பத்து நாளைக்கு டைப் அடிக்கனும், எனவே இன்று காலை வந்த மேற்கண்ட செய்தியை படித்திவிட்டு அதனால் எவ்வாறு விவசாயம் பாதிக்கப்படுகிறது என்று அவர் சொன்ன தகவல்களில் ஒரு சிலது மட்டுமே இந்த பதிவில்:


  •        இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவரும் வறுமைகோட்டிற்கு கீழேயோ அல்லது வேலையில்லதவர்களோ இல்லை.( காரணம் யார் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற தெளிவா வரையறை அரசினால் சரியாக பிரிக்கப்படாமல் ஓட்டு வாங்கும் எண்ணத்தில் அனைவருக்கும் என்றாகிவிட்டது).
  •      எங்கள் ஊரில் ஒரு அரைமணி நேரம், ரோட்டோர ஓடையில் தூர்வாருகிறேன் என்கிற பேரில் மம்பட்டியால் நாலு இலு இலுத்துவிட்டு, புளிய மரத்தடியில் ஒரு மணி நேரம் தூங்கிவிட்டு வந்தால் 70 ரூபாயிலிருந்து 80 ரூபாய் குடுத்து விடுகிறார்கள். நோகாமல் நுங்கு கிடைப்பதால் , விவசாய வேலைகளுக்கு யாரும் வருவதில்லை
  •      அப்படியே,  யாரும் விவசாய வேலைகளுக்கு வந்தாலும், சும்மா மரத்தடியில் தூங்குவதற்கே 80 ரூபாய் கிடைக்கிறது , விவசாயக் கூலியோடு அந்த 80 ரூபாயும் சேர்த்துக் கொடுத்தால்தான் வருவோம் என்கிறார்கள். ( 80 ரூபாயாக இருந்த தினக் கூலி இந்த திட்டம் வந்த பிறகு 200 -க்கும் மேல்).

  •      ஏற்கனவே குடுக்கும் கூலிக்கே விவசாயம் கட்டுபடியாகவில்லை, இதில் எங்கே கூட்டிக்குடுப்பது....?.( நான் சொல்லும் விவசாயிகள் ஐந்து விரல்களில் மோதிரம் அணிந்து கொண்டிருக்கும் பண்ணையார்கள் அல்ல, மாறாக மண்ணோடு போராடுவதைத்தவிர வேரெதுவும் தெரியாத, வேரெந்த போக்கும் தெரியாத அப்பாவிகள்)


  •      நிலம் வைத்து விவசாயம் செய்துகொண்டிருந்த பலபேர், பயிரிடுவதை விட்டு அவர்களும் புளியமரத்தடியில் தூங்கிவிட்டு 80 ரூபாய் வாங்கி பொளப்பு நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.(எங்க ஊர்ல இருக்குர எல்லாரும் இந்த வறுமை ..!!! கோட்டுக்கு கீழே இருக்குரதாத்தான் இந்த திட்டத்துல சேர்ந்திருக்காங்க..!!!).


  •      சரி கோடையில் விவசாயம் பயிரிடுவது அருந்தலாக இருக்கும் சமயத்தில் மட்டுமாவது இத்திட்டத்தை அமல்படுத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. ( கேட்டால், ஏதோ இதுவரையும், இப்போதும் எந்த விவசாயியும் நிலத்தில் கால்வத்ததே இல்லை, என்பது மாதிரி... அவரவர் நிலத்தில் அவரவர்கள் இறங்கி வேலை செய்யட்டும் என்று நக்கல் வேறு, இப்படி சொல்பவர்கள் அவர்கள் வீட்டு நாய் கக்கா போனாலும் அதை கழுவிவிட , நாலு வேலையாட்களை வைத்திருக்கிறார்கள்)


  •      பருத்தி, மிளகாய், அனைத்து காய்கறிகள், கடலை, கரும்பு என்று பயிரிட்டுவந்தது நின்று போய் கடந்த சில வருடங்களாக மக்காச்சோளம் மட்டுமே பயிரிட்டு வந்தார்கள் ( நாலுதடைவை களையெடுப்பு, மூன்றுதடவை மருந்தடித்து , மழை நாட்கள் போக மீதி நாட்களில் தண்ணீர் பாய்ச்சுவது... என்று வேலையாட்களின் தேவை குறைவு...).


  •     அரசின் இந்த திட்டத்தின் புண்ணியத்தில் இப்போது வேலையாட்கள் சுத்தமாக வருவதில்லை, ஆக பயிரிடும் எண்ணத்தையே கைவிடும் நிலை விவசாயிக்கு. அவர்களும் புளியமரத்தடியில் படுத்து விட்டு 80 ரூபாய் வாங்கி குடித்தனம் நடத்த தயாராகிவிட்டார்கள்...


  •      சரி சும்மா இருக்கும் நிலத்தை என்ன செய்வது?, அதை இப்போது ரியல் எஸ்டேட்டுக்கும், கேரளாவிலிருந்து வரும் பங்காளிகளுக்கு விற்றுக் காசாக்கி கொண்டிருக்கிறார்கள் ( அவர்கள் ஏதோ காத்தாடி வைத்து கரண்ட் எடுக்கப் போகிறார்களாம்)


  •      வாங்கிய நிலத்தில் 300 மீட்டருக்கு ஒரு காத்தாடி என்று நிறுவுகிறார்கள். இதற்கு இடைப்பட்ட நிலத்தில் பயிர்களின் மகசூல், குறைந்து விடுகிறது.. மேலும் காற்றில் உள்ள ஈரப்பததையும் நிலத்தின் ஈரப்பததையும் இது முற்றிலும் காலியாக்கிவிடுகிறது .


  •     ஒருபுறம் அரசின் நடவடிக்கைகள் விவசாயத்தை நசுக்கினால், மறுபுறம் ரியல் எஸ்டேட் மற்றும் இண்டஸ்ட்ரியல் என்ற பேரில் விவசாய நிலங்களையே காலியாக்கும் செயல்பாடுகள் நடக்கிறது.

           பத்தாண்டுகளுக்கு முன் இருந்த விவசாய உற்பத்தி வளர்ச்சி படிப்படியாக குறைந்து இப்போது கிட்டதட்ட 2% வளர்ச்சியில் வந்து நின்று மணியடித்த பிறகும் உறிதியான நடவடிக்கை இல்லை, கேட்டால் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 8 % , 9% என்று மார்தட்டுகிறார்கள்.

      ஊருக்கு சென்றால் பச்சை பாசேல் என்று பார்த்து பரவசப்பட்டது கடந்தகாலமாகி, இப்போது சென்று பார்த்தால் எல்லாம் பொட்டல் காடுளாக பார்க்க சகிக்கவில்லை.

      நாளை என் பிள்ளைகள் வளர்ந்தால் ஊருக்கு கூட்டிக்கொண்டு போய் விவசாயத்தை பற்றி நேரடியாவாவது காட்டலாம் என்றிருந்தேன், அது முடியாமல், டிஸ்கவரி சானலில்தான் காட்டவேண்டும் போல் இருக்கிறது .

நம் நாட்டில் இருக்கும் மக்கள் தொகைக்கு உணவுப்பொருட்கள்
  • இறக்குமதியென்பது சாத்தியப்படுமா?...,
  • நம்மால் அதற்கு செலவிடமுடியுமா?...,
  • அரசும் மக்களும் எப்போது இதைபற்றி கவலைப்படபோகிறார்கள்....?
  • இந்த புளியமரத்தடியில் தூங்கி விட்டு கூலிவாங்கும் கலாச்சாரம் மாறுமா?...
  • விவசாயம் அழிவதனால் உருவாகும் பிரச்சினை, அசாதாரனமான ஒன்று இல்லையா?.


      ஒருவேளை, நாளய தலைமுறை, இப்போதிருக்கும் உணவுப்பொருட்களுக்கு மற்றாக வேறு ஏதேனும் கண்டுபிடித்து திங்கப்போகிறார்கள் என்று அரசும் , நாமும் நினைக்கிரோமா...

ஒன்றும் புரியவில்லை..

      திட்டத்தின் நோக்கத்தை பற்றி சொல்லுபோது நல்லாத்தன் இருந்தது இப்போது அது செயல்படுத்தும் விதம், எதிமறையான விளைவுகளையே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது....

      ஏற்கனவே, வாங்கும் விதையிலிருந்து, உரம், மருந்து என்று விவசாயி வாங்கும் பொருட்களின் விலை அதிகமாகிவிட்டது. இயற்கையை அழிக்க நாம் காட்டும் முனைப்பின் காரணமாக, கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழையின் அளவு குறைந்து, அதனால் நிலத்தடி நீரின் அளவு குறைந்து, விதைத்த பயிரை முழுசா அறுவடை செய்றதே பெரும்பாடா இருக்கு. சரி அறுவடை செய்ஞ்சதுக்கு விலையும் கட்டுபடியாகவில்லை. ( நாம் சென்னையில் கடையில் வாங்கும் விலைக்கும், விவசாயி அறுவடை செய்ததை சந்தையில் விற்கும் விலைக்கும் சம்பந்தமே இல்லை...).


டிஸ்கி 1 : சொல்ல வந்த கருத்தை கோர்வையாக சொல்லியிருகிறேனா என்று தெரியவில்லை. இங்கு நான் சொன்ன கருத்தில் மாற்று உள்ளவர்கள் காரணத்தை சொல்லிவிட்டு கும்மலாம். (  ங்கொய்யாலே கும்முரதுக்கெல்லாம் காரணம் தேவையில்லை என்று சொல்வது காதில் விழுகிறது..)

டிஸ்கி 2 : பிழையில்லாமல் எழுத முயற்சித்திருக்கிறேன்,  பிழைகளை பெருந்தன்மையோடு மன்னித்து விடவும்.


டிஸ்கி 3 : பதிவில் எங்கேனும் தடித்த வார்த்தைகள் இருப்பதாக யாரேனும் கருதினால் சொல்லவும் நீக்கிவிடலாம்.


பதிவு பிடித்திருந்தால் உங்களின் கருத்தையும் , ஓட்டையும்  அளிக்கவும்.  

120 comments:

கருடன் said...

me 1st

கருடன் said...

ha ha ha vada enakkuthan... ippo poi post padikkaren...

Jey said...

சூடா வடை எடுத்து வச்சிருக்கேன், படிச்சிட்டுவந்து கவ்விட்டுப்போ ....:)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரெண்டு நாளாகும் போல....

( பதிவ படிச்சு முடிக்க...!!!! )...


நல்லாயிருங்களே.....

Jey said...

பட்டாபட்டி.. said...
ரெண்டு நாளாகும் போல....

( பதிவ படிச்சு முடிக்க...!!!! )...


நல்லாயிருங்களே.....///

பாவம், உம்ம விதி அப்படி... நானும் பாதிய எடிட் பண்ணிட்டேன் பட்டா, அப்புறமும் இவ்வளவு நீளம்...., அப்படியே ஓடிராதீரும், ஒரே மூச்சுல படிச்சிட்டு கருத்து சொல்லிரும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த மாதிரி உருப்படியான பதிவை போட்டு கும்மவிடாம பண்ணின Jey officer ஒழிக...

அருமையான பதிவு தல. வாழ்த்துக்கள்..(பாராட்டி எழுதுனா கையெல்லாம் நடுங்குதே ஏன்?)

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த மாதிரி உருப்படியான பதிவை போட்டு கும்மவிடாம பண்ணின Jey officer ஒழிக...

அருமையான பதிவு தல. வாழ்த்துக்கள்..(பாராட்டி எழுதுனா கையெல்லாம் நடுங்குதே ஏன்?)///

இதெல்லாம் சும்மாயா, நம்ம கோவத்த எறக்கிவக்கிரதுக்கு ஒரு இடம், அவ்வளவுதான்...:), நமக்கு கும்மியடிச்சதுதான் மிச்சம், அத சரியா பண்ணிருவோம்:)

ரவி said...

நல்ல நடை கூட !!!

ப்ரியமுடன் வசந்த் said...

//நாளை என் பிள்ளைகள் வளர்ந்தால் ஊருக்கு கூட்டிக்கொண்டு போய் விவசாயத்தை பற்றி நேரடியாவாவது காட்டலாம் என்றிருந்தேன், அது முடியாமல், டிஸ்கவரி சானலில்தான் காட்டவேண்டும் போல் இருக்கிறது .//

சத்தியமா நடக்கும்..

ஆமா தல நீங்க நம்ம உண்மைத்தமிழனோட தீவிர வாசகரோ?

ப்ரியமுடன் வசந்த் said...

ங்கொய்யாலே கும்முரதுக்கெல்லாம் காரணம் தேவையில்லை ன்னு ஆரம்பிக்கிறது மட்டும் தடிச்சுருக்கு ராசா...

Jey said...

செந்தழல் ரவி said...
நல்ல நடை கூட !!!//

நன்றி, புதுசா எழுதுர எங்கள உற்சாகப்படுத்துவதற்கு மீண்டும் நன்றி:)

Jey said...

ப்ரியமுடன் வசந்த் said...

///சத்தியமா நடக்கும்..

ஆமா தல நீங்க நம்ம உண்மைத்தமிழனோட தீவிர வாசகரோ?///

அவர் லிங் இருந்தா குடுப்பா, உண்மையிலேயே அவர் எழுத்த படிச்சத ஞாபகம் இல்லை... நல்லா எழுதுவாரா...?.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அவர் லிங் இருந்தா குடுப்பா, உண்மையிலேயே அவர் எழுத்த படிச்சத ஞாபகம் இல்லை... நல்லா எழுதுவாரா...?. //

அவரு ஒரு மார்க் கேள்விக்கு பத்து மார்க் பதில் எழுதுரவருப்பா..

http://truetamilans.blogspot.com/

ப்ரியமுடன் வசந்த் said...

ங்கொய்யால உண்மைத்தமிழன பதிவுலகத்துல தெரியாதுன்னு சொல்றயா இருடி உன்னோட ப்ளாக்க ஹேக் பண்ண சொல்றேன் அம்மாகிட்ட சொல்லி...

படிச்சு பாரு மாமு...

http://truetamilans.blogspot.com/2010/05/28-05-2010.html

Jey said...

ப்ரியமுடன் வசந்த் said...
ங்கொய்யாலே கும்முரதுக்கெல்லாம் காரணம் தேவையில்லை ன்னு ஆரம்பிக்கிறது மட்டும் தடிச்சுருக்கு ராசா...///

நீரும் கும்மி குருப்பா.. சொல்லவே இல்லை....

அப்புறம் உங்கூருலையும் மூவாயிரம் அடிக்கு போரப்போட்டு எங்கூரு நிலத்தடி நீரையும் சேத்து காலி பன்ணிட்டாக... இதெல்லாம் எடுத்து சொல்லுங்கப்பு...

ப்ரியமுடன் வசந்த் said...

//அப்புறம் உங்கூருலையும் மூவாயிரம் அடிக்கு போரப்போட்டு எங்கூரு நிலத்தடி நீரையும் சேத்து காலி பன்ணிட்டாக... இதெல்லாம் எடுத்து சொல்லுங்கப்பு...//

ஆமா நான் சொல்லித்தான் கேக்கப்போறாய்ங்களாக்கும் அவிங்க பத்துவருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சு இப்பொ ரெண்டு குளத்தை காலிபண்ணிட்டாய்ங்க இன்னும் நிறைய கிணறுகளை மூடிட்டாய்ங்க பாரம்பரியமா கரும்பு விவசாயம் பண்ணிட்டு இருந்த நாட்டமக்காரு தோப்ப ரியல் எஸ்டேட் பிஸினெஸ்ல பிளாட் போட்டாய்ங்க அடபோங்கடா இனி மேல விவசாயம் டவுசருதான்...

Jey said...

@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@@ ப்ரியமுடன் வசந்த் said.../

படிச்சேன், நல்லா சுவாரஷ்யமாத்தானே எழுதியிருக்காரு...
ஓ அவர மாதிரியே படம் 18 ரீல் ஓடிருச்சோ....

Jey said...

ப்ரியமுடன் வசந்த் said...
//அப்புறம் உங்கூருலையும் மூவாயிரம் அடிக்கு போரப்போட்டு எங்கூரு நிலத்தடி நீரையும் சேத்து காலி பன்ணிட்டாக... இதெல்லாம் எடுத்து சொல்லுங்கப்பு...//

ஆமா நான் சொல்லித்தான் கேக்கப்போறாய்ங்களாக்கும் அவிங்க பத்துவருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சு இப்பொ ரெண்டு குளத்தை காலிபண்ணிட்டாய்ங்க இன்னும் நிறைய கிணறுகளை மூடிட்டாய்ங்க பாரம்பரியமா கரும்பு விவசாயம் பண்ணிட்டு இருந்த நாட்டமக்காரு தோப்ப ரியல் எஸ்டேட் பிஸினெஸ்ல பிளாட் போட்டாய்ங்க அடபோங்கடா இனி மேல விவசாயம் டவுசருதான்...///

இன்னும் ரெண்டு மூனு வருசம் போனா, கரும்பு போடுரதும் கனவாயிரும் போலயே....,

ப்ரியமுடன் வசந்த் said...

//
இன்னும் ரெண்டு மூனு வருசம் போனா, கரும்பு போடுரதும் கனவாயிரும் போலயே....,//

கனவுலயாச்சும் கரும்பு வருமான்றதுதான் என் கேள்வி?????

தேனி மாவட்டத்திலயே எங்க்கூர் கரும்பு விவசாயத்துக்கு பேர் போனதுன்றது பெரிய வெல்ல விவசாய விற்பனை மண்டி எங்கூர்லதான் இருக்குன்றதும் எல்லாருக்கும் தெரியும்,
முந்தி ஒரு ஒருத்தரும் இத்தனை ஏக்கர்ல கரும்பு விவசாயம் பண்ணிருக்கேன்றத பெருமையா சொல்லுவாய்ங்க எங்கூர்ல இப்போ எம்பொண்ணு அமெரிக்கால கட்டிகொடுத்தேன் எம்பொண்ணு சிங்கப்பூர்ல கட்டிகொடுத்தேன் எம்பொண்ணு சிவில் எஞ்சினியரு,எம்பையன் டாக்டர்,எம்பையன் கல்யாணத்துக்கு 200பவுனு போட்டு காரு வாங்கி கொடுத்தாங்க இப்பிடி சொல்றதுதான் பெருமையா இருக்கு எங்க்கூர்ல இப்போல்லாம் சம்சாரிகன்னு சொல்றதை எல்லாரும் கேவலமா நினைக்கிறாய்ங்க...ஒவ்வொருத்தரும் அவங்க பையன் பொண்ணு படிச்சு வெளிநாட்டுல வேலை பார்க்கணும் இதான் ஆசை அதுமட்டுமில்ல எப்பிடி உங்க்கூர்காரய்ங்க வெளிநாட்டுல அதிகமா இருக்காய்ங்களோ அதேமாதிரிதான் எங்க்கூரும், பாதிபேரு வெளிநாட்டுல பாதிபேரு ஆர்மிலன்னு போய்ட்டாய்ங்க...

Jey said...

ப்ரியமுடன் வசந்த் said...//

இதுதான் இன்னிய யதார்த்த நிலமையா இருக்கு..., எல்லாம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்... வேடிக்கைதான் பாக்கமுடியும் போல இருக்கு.

கருடன் said...

மிக அருமையான பதிவு. இப்படிதான் அரசு நல்ல நோக்கத்துடன் உருவாக்கும் பல நல்ல திட்டங்கள் அரசு அதிகாரிகள் சரிவர மேற்பார்வை இடததால் பயனில்லாமல் போகிறது. எல்லோரும் கதறி அழுவது போல பதிவின் நீளம் சற்று கூடுதல் என்றாலும் உங்கள் சமுக அக்கறை கருதி மன்னிக்கபடுகிறது.

Prasanna said...

என்னது சிரியஸ் தேடி வந்தா சீரியஸ் பதிவா.. ஹ்ம்ம் நல்ல பகிர்வு.

இது ஒரு அருமையான திட்டம், ஆனால் இப்படியும் பாதிப்புகள் வரும் என்பது அதிர்ச்சி..
வட மாநிலஙளில் செய்த வேலைக்கு கூலி கொடுப்பதில்லையாம் இத்திட்டத்தின் கீழ்..

கருடன் said...

நல்ல பதிவ இருக்கே கை வைக்க வேண்டாம் பாத்த..... கொய்யல காலைலே ஒரு குரூப் கும்மி அடிச்சிட்டு போய் இருக்கு.
@ரமேஷ்

//இந்த மாதிரி உருப்படியான பதிவை போட்டு கும்மவிடாம பண்ணின Jey officer ஒழிக...

ஆமா. Jey Officer அராஜகம் ஒழிக. கூபிடுட நாட்டமைய... ஒதுக்கி வைங்கட இவர மொக்கை சங்கத்துல இருந்து...

//அருமையான பதிவு தல. வாழ்த்துக்கள்..(பாராட்டி எழுதுனா கையெல்லாம் நடுங்குதே ஏன்?) //

ஆமா ரமேஷ். நீ சொன்னது கரெக்ட்தான்பா.... போன கமெண்ட் எழுதின அப்போ எனக்கும் கை ரொம்ப நடுங்குசிபா....

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
மிக அருமையான பதிவு. இப்படிதான் அரசு நல்ல நோக்கத்துடன் உருவாக்கும் பல நல்ல திட்டங்கள் அரசு அதிகாரிகள் சரிவர மேற்பார்வை இடததால் பயனில்லாமல் போகிறது. எல்லோரும் கதறி அழுவது போல பதிவின் நீளம் சற்று கூடுதல் என்றாலும் உங்கள் சமுக அக்கறை கருதி மன்னிக்கபடுகிறது.////

நானும் முட்டி மோதி குரச்சி எழுதலாம்னு எடிட் பண்ணி பாத்தேன், நீளமாயிருச்சே.... பட்டாபட்டி ...பயந்து ஓடினவரு ஆலையேக் காணோம்:)

Jey said...

பிரசன்னா said...
என்னது சிரியஸ் தேடி வந்தா சீரியஸ் பதிவா.. ஹ்ம்ம் நல்ல பகிர்வு.///
சண்டே, ரிலாக்ஸ்டா, நாமலும் ஒரு மெகா மொக்கைய போட்டு எல்லாரையும் கொல்ல்லாம்னு பார்த்தா, கண்ணு முழிச்சு பேப்பர் செய்தி பாத்து கடுப்பயிருச்சி...

//இது ஒரு அருமையான திட்டம், ஆனால் இப்படியும் பாதிப்புகள் வரும் என்பது அதிர்ச்சி..
வட மாநிலஙளில் செய்த வேலைக்கு கூலி கொடுப்பதில்லையாம் இத்திட்டத்தின் கீழ்..///

உண்மையா இந்த திட்டம் தேவைப்படுற மக்கள் நெறய பேரு இருக்காங்க, அதுகுண்டான உருப்படியான வேலைகளும் நாட்ல இருக்கு..., ஒருசைடு உண்மையா வேலை வேணும்னு எதிர்பாக்குரவங்கள ஏமாத்துராங்க... மறுபக்கம்.. ஓட்டுக்காக இந்த கூத்து நடக்குது....

வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி பிரசன்னா:)

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
ஆமா. Jey Officer அராஜகம் ஒழிக. கூபிடுட நாட்டமைய... ஒதுக்கி வைங்கட இவர மொக்கை சங்கத்துல இருந்து...///

அவசரப்பட்டு தப்பான முடிவு...அப்புறம் அடிவாங்கும்போது காப்பாத்த ஆள் இல்லையேனு வருத்தப்படுவீங்க...

///ஆமா ரமேஷ். நீ சொன்னது கரெக்ட்தான்பா.... போன கமெண்ட் எழுதின அப்போ எனக்கும் கை ரொம்ப நடுங்குசிபா....///

யோவ் பொய் சீகிரமா டாக்குட்டரை பாருங்கயா..( ங்கொய்யாலே எங்க வந்து ஏத்திவிடப்பாக்கிரே, அசரமாட்டோம்லே)

கருடன் said...

@ஜெய்
//புளியமரத்தடியில் 1 மணி நேரம் படுத்து எழுந்தால் ரூ 80/- உறுதி....... //

கட்டில் இருக்குமா? அந்த புளியமரத்து விலாசம் கிடைக்குமா??

//சரி விசயத்திற்கு வருவோம் ://

அப்போ இன்னும் விஷயத்துக்கு வரலைய?? இப்பவே கன்னகட்டுதே...

அருண் மற்றும் ரமேஷ் எங்கு இருந்தாலும் மேடைக்கு வரவும்....ஆணி அப்புறம் பாக்கலாம்..

கருடன் said...

@ஜெய்
//காரணம் யார் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற தெளிவா வரையறை அரசினால் சரியாக பிரிக்கப்படாமல்//

நீங்க வேனும்ன போய் கரெக்டா பிரிச்சி ஒரு பெரிய கோடா போட்டு வாங்களேன்...

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
கட்டில் இருக்குமா? அந்த புளியமரத்து விலாசம் கிடைக்குமா??//

துண்டு விரிச்சி படுத்தா , பட்டணத்து ஸ்டார் ஹோட்டல் ரூமெல்லாம், பிசாத்து....

///அப்போ இன்னும் விஷயத்துக்கு வரலைய?? இப்பவே கன்னகட்டுதே...///
அடப்பாவிகளா இன்னும் முழுசா படிக்கவே இல்லையா....

கருடன் said...

@ஜெய்
//அவசரப்பட்டு தப்பான முடிவு...அப்புறம் அடிவாங்கும்போது காப்பாத்த ஆள் இல்லையேனு வருத்தப்படுவீங்க... //

நாங்க எல்லாம் தேடி போய் appointment கேட்டு அடி வாங்கறவங்க... யார்கிட்ட...(ஹலோ VKS குரூப் போன வாரம் அடிக்க வரேன் சொல்லி இருந்திங்க.... வரவே இல்ல. )

கருடன் said...

@ஜெய்
//அடப்பாவிகளா இன்னும் முழுசா படிக்கவே இல்லையா....//

படிச்சாச்சி படிச்சாச்சி.... இது கும்மி அடிக்க மறுக்க மறுக்க படிக்கறது....

//அவரவர் நிலத்தில் அவரவர்கள் இறங்கி வேலை செய்யட்டும் என்று நக்கல் வேறு//

ஆமா. நாங்களே விவசாயம் பாத்து நாங்களே பொங்கி திங்கறோம்.... பின்னாடி அரிசி வேணும், காய்கறி வேணும் கேட்டு எவனும் வராதிங்க...

கருடன் said...

@ஜெய்
//இதற்கு இடைப்பட்ட நிலத்தில் பயிர்களின் மகசூல், குறைந்து விடுகிறது.. மேலும் காற்றில் உள்ள ஈரப்பததையும் நிலத்தின் ஈரப்பததையும் இது முற்றிலும் காலியாக்கிவிடுகிறது //

இது உண்மைலே அதிர்ச்சியான தகவல். தகவலுக்கு நன்றி!! (கும்மி இல்ல... நம்புங்கப்பா)

செல்வா said...

உண்மையான கட்டுரை அண்ணா ...
எண்கள் ஊரிலும் இதே நிலைமை தான் .. ஏன் நாங்களும் எங்களது நிலத்தில் வேர்க்கடலைக்கு பதிலாக ஆட்கள் தேவைப்படாத சோளம் போன்ற பயிர்களையே விதைத்துள்ளோம் ..

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...

ஆமா. நாங்களே விவசாயம் பாத்து நாங்களே பொங்கி திங்கறோம்.... பின்னாடி அரிசி வேணும், காய்கறி வேணும் கேட்டு எவனும் வராதிங்க...///

அட இது தோனலையே... எக்ஸ்ட்ரா ஒரு பாரா எழுதுரது போச்சே...

அருண் பிரசாத் said...

யோவ் இப்படி ஆளாளுக்கு சீரியஸ் பதிவு போட்டா யாரைதான் கும்முறது. ஒரு வாரம் ஆச்சி, கும்மி.


என் அப்பா புலம்பியதை நீங்க பதிவா போட்டு இருக்கீங்க. இது செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரிதான் போகும், அரசும் திருந்தாது, மக்களும் திருந்தமாட்டாங்க

(இன்னைக்கு விடுறதா இல்லை எங்கயாவது தேடிபிடிச்சாவது கும்முறேன்)

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ஜெய்
//இதற்கு இடைப்பட்ட நிலத்தில் பயிர்களின் மகசூல், குறைந்து விடுகிறது.. மேலும் காற்றில் உள்ள ஈரப்பததையும் நிலத்தின் ஈரப்பததையும் இது முற்றிலும் காலியாக்கிவிடுகிறது //

இது உண்மைலே அதிர்ச்சியான தகவல். தகவலுக்கு நன்றி!! (கும்மி இல்ல... நம்புங்கப்பா)//

கொஞ்ச நாள்ல நிலத்தடி நீர் இல்லாம, ஆத்துத் தணியும் இல்லாம( அததான் பக்கத்து மானிலத்துகாரங்க தர்றது இல்லையே), குடிக்க சிங்கப்பூர் மாதிரி நியூ வாட்டர் தான் குடிக்கனும்...( நியூவாட்டருக்கு விளக்க தேவையெனில், டேமேஜர் ரமெஷிடமோ, சிஙகைச் சிங்கம் பட்டாபடியிடமோ கேட்டுக்கொள்ளவும்:))

Jey said...

ப.செல்வக்குமார் said...
உண்மையான கட்டுரை அண்ணா ...
எண்கள் ஊரிலும் இதே நிலைமை தான் .. ஏன் நாங்களும் எங்களது நிலத்தில் வேர்க்கடலைக்கு பதிலாக ஆட்கள் தேவைப்படாத சோளம் போன்ற பயிர்களையே விதைத்துள்ளோம் ..///

கடை போடுரது( நிலக்கடலைய சொன்னேன்..) 15 வருசத்துக்கு முன்னயே நின்னு போச்சு..

கருடன் said...

//மறுபுறம் ரியல் எஸ்டேட் மற்றும் இண்டஸ்ட்ரியல் என்ற பேரில் விவசாய நிலங்களையே காலியாக்கும் செயல்பாடுகள் நடக்கிறது.//

இது ஒரு நிதர்சனமான மற்றும் யாரும் மறுக்க முடியாத உண்மை. புற்றுஈசல் போல பெருகி வரும் ரியல் எஸ்டேட் நமது விவசாய நிலங்களை அழித்து, உற்பத்தி குறைந்து, விலை உயர்வு, பற்றக்குறை, அந்நிய தேசத்தில் கையேந்தல், பொருளாதார விழ்ச்சி.... இப்படியே தொடர்கிறது.

Jey said...

அருண் பிரசாத் said...
யோவ் இப்படி ஆளாளுக்கு சீரியஸ் பதிவு போட்டா யாரைதான் கும்முறது. ஒரு வாரம் ஆச்சி, கும்மி.


என் அப்பா புலம்பியதை நீங்க பதிவா போட்டு இருக்கீங்க. இது செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரிதான் போகும், அரசும் திருந்தாது, மக்களும் திருந்தமாட்டாங்க

(இன்னைக்கு விடுறதா இல்லை எங்கயாவது தேடிபிடிச்சாவது கும்முறேன் ///

இன்னிக்கு கும்மி உம்ம வீட்லதான்... மாடினீரு..:)

கருடன் said...

//ங்கொய்யாலே கும்முரதுக்கெல்லாம் காரணம் தேவையில்லை என்று சொல்வது காதில் விழுகிறது..//

உங்க பதிவுல ரொம்ப பிடிச்ச வரிகள்.... கவிதை கவிதை

கருடன் said...

@ஜெய்
//இன்னிக்கு கும்மி உம்ம வீட்லதான்... மாடினீரு..:) //

ஏதோ சிக்குதே... ஒரு வேலை அருண் பதிவு போட்டு இருப்பாரோ... சரி போய்தான் பார்ப்போமே...

Anonymous said...

" நாளை என் பிள்ளைகள் வளர்ந்தால் ஊருக்கு கூட்டிக்கொண்டு போய் விவசாயத்தை பற்றி நேரடியாவாவது காட்டலாம் என்றிருந்தேன், அது முடியாமல், டிஸ்கவரி சானலில்தான் காட்டவேண்டும் போல் இருக்கிறது ."
இது தான் நடக்க போறது ..இந்த மாதிரி விவசாயிகள் புளிய மரத்தில் அடியில் படுத்து தூங்கினா வரும் நாள்களில் அரிசி முதல் எல்லா பொருள்களும் நாமா வெளி நாட்டில் இருந்து இருக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ள படும் ..
விளை நிலம் ரியல் எஸ்டேட் காரர்கள்கு விக்க அரசு தடை கொண்டு வர வேண்டும் இல்லேனா நாளைக்கு விளை நிலம் என்ற ஒன்னு இல்லாமல் போயிடும் ..இது என் கருத்து தான் தப்பா எதா சொல்லி இருந்தா மன்னிக்க வேண்டும்

Jey said...

sandhya said...
" நாளை என் பிள்ளைகள் வளர்ந்தால் ஊருக்கு கூட்டிக்கொண்டு போய் விவசாயத்தை பற்றி நேரடியாவாவது காட்டலாம் என்றிருந்தேன், அது முடியாமல், டிஸ்கவரி சானலில்தான் காட்டவேண்டும் போல் இருக்கிறது ."
இது தான் நடக்க போறது ..இந்த மாதிரி விவசாயிகள் புளிய மரத்தில் அடியில் படுத்து தூங்கினா வரும் நாள்களில் அரிசி முதல் எல்லா பொருள்களும் நாமா வெளி நாட்டில் இருந்து இருக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ள படும் ..
விளை நிலம் ரியல் எஸ்டேட் காரர்கள்கு விக்க அரசு தடை கொண்டு வர வேண்டும் இல்லேனா நாளைக்கு விளை நிலம் என்ற ஒன்னு இல்லாமல் போயிடும் ..இது என் கருத்து தான் தப்பா எதா சொல்லி இருந்தா மன்னிக்க வேண்டும் ///

என்ன மேடம், உண்மைய உரைக்கிற மாதிரி சொல்லியிருக்கீங்க, மன்னிப்பா..., இந்தாங்க டபுள் பூங்கொத்து:)

சசிகுமார் said...

என்னப்பா தலைப்ப பார்த்து ஏமாந்துட்டேனே

கருடன் said...

@sandhya
//விளை நிலம் ரியல் எஸ்டேட் காரர்கள்கு விக்க அரசு தடை கொண்டு வர வேண்டும் இல்லேனா நாளைக்கு விளை நிலம் என்ற ஒன்னு இல்லாமல் போயிடும் ..இது என் கருத்து தான் தப்பா எதா சொல்லி இருந்தா மன்னிக்க வேண்டும் //

உங்கள் யோசனை மிகவும் சரியானது. கேரளத்தில் இது செயல்பாட்டில் உள்ளது. அங்கு விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட்இடம் விற்க முடியாது. நிலத்தின் உரிமையாளர் கூட விவசாய நிலத்தில் வீடு கட்ட முடியாது...

Jey said...

//சசிகுமார் said...
என்னப்பா தலைப்ப பார்த்து ஏமாந்துட்டேனே///

அழிந்து வரும் விவசாயம்னுதான் முதலல தலைப்பு வச்சேன்.. விவசாயம்னு சொன்னா படிப்பாங்கலோனு சந்தேகம் வந்து இப்படி வச்சிட்டேன்:).

Chitra said...

ஏற்கனவே, வாங்கும் விதையிலிருந்து, உரம், மருந்து என்று விவசாயி வாங்கும் பொருட்களின் விலை அதிகமாகிவிட்டது. இயற்கையை அழிக்க நாம் காட்டும் முனைப்பின் காரணமாக, கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழையின் அளவு குறைந்து, அதனால் நிலத்தடி நீரின் அளவு குறைந்து, விதைத்த பயிரை முழுசா அறுவடை செய்றதே பெரும்பாடா இருக்கு. சரி அறுவடை செய்ஞ்சதுக்கு விலையும் கட்டுபடியாகவில்லை. ( நாம் சென்னையில் கடையில் வாங்கும் விலைக்கும், விவசாயி அறுவடை செய்ததை சந்தையில் விற்கும் விலைக்கும் சம்பந்தமே இல்லை...).




..... விவசாயத்தை குறித்து, மக்களிடையே பொறுப்பையும் மாறுதலையும் கொண்டு வரும் ஒரு விழிப்புணர்வு வேண்டும். good post!

Jey said...

Chitra said...

..... விவசாயத்தை குறித்து, மக்களிடையே பொறுப்பையும் மாறுதலையும் கொண்டு வரும் ஒரு விழிப்புணர்வு வேண்டும். good post!//

ஆமா, மேடம். கருத்துக்கு நன்றி. ( உங்க பேட்டி படிச்சேன். கலக்கல்ஸ்:))

NADESAN said...

வாழ்க வளமுடன்

நல்ல பதிவு எங்கள் கிராமத்திலும் இந்த நிலைமைதான்

அன்புடன்
நெல்லை நடேசன்
அமீரகம்

NADESAN said...

வாழ்க வளமுடன்

நல்ல பதிவு எங்கள் கிராமத்திலும் இந்த நிலைமைதான்

அன்புடன்
நெல்லை நடேசன்
அமீரகம்

Jey said...

NADESAN said...
வாழ்க வளமுடன்

நல்ல பதிவு எங்கள் கிராமத்திலும் இந்த நிலைமைதான்

அன்புடன்
நெல்லை நடேசன்
அமீரகம் ////

வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி nadesan :)

கருடன் said...

இங்கு வந்து கருத்து தெரிவிப்பவபர்கள் அனைவருக்கும் ஒரு வெள்ளி குடம் இலவசம். குடம் வேண்டாம் என்றல் பணமாக அனுப்பி வைக்கப்படும். அதனால் தயவு செய்து உங்கள் வீட்டு விலாசம் அல்லது வங்கி கணக்கு இங்கு கொடுத்து செல்லவும்.... (ஜெய் தல நீங்க சொன்ன மாதிரியே கரெக்டா இருக்க?)

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
இங்கு வந்து கருத்து தெரிவிப்பவபர்கள் அனைவருக்கும் ஒரு வெள்ளி குடம் இலவசம். குடம் வேண்டாம் என்றல் பணமாக அனுப்பி வைக்கப்படும். அதனால் தயவு செய்து உங்கள் வீட்டு விலாசம் அல்லது வங்கி கணக்கு இங்கு கொடுத்து செல்லவும்.... (ஜெய் தல நீங்க சொன்ன மாதிரியே கரெக்டா இருக்க?///

டெர்ரர் பாண்டி அவர்கள் தனது சொந்த செலவில் அதை வழங்குவார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...(ங்கொய்யாலே காசு கொடுக்காமயே, இந்த கூவு கூவுதே, காசு கொடுத்தா எல்லாரையும் மிரட்டி கூட்டிட்டு வரவா போலயே...)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஜெ ,
அருமையான பதிவு ...,
//// அவரின் மொத்த புலம்பலையும் எழுதினால் பத்து நாளைக்கு டைப் அடிக்கனும்,////

இந்த பதிவையே எத்தன நாள் டைப் பண்ணியோ ?
/////இன்று காலை வந்த மேற்கண்ட செய்தியை படித்திவிட்டு அதனால் எவ்வாறு விவசாயம் பாதிக்கப்படுகிறது////

இன்று மட்டுமல்ல என்று உலகமயமாக்கலை வந்ததோ ,அன்றே விவசாயத்திற்கு பாதிப்பு ஆரம்பித்தது .( இரண்டு வருடகளுக்கு முன் நாம் கோதுமையை austriyaliyavil இருந்து பல ஆயிரம் டன் இறக்குமதி செய்தோம் )

/////இறக்குமதியென்பது சாத்தியப்படுமா?...,////

முடியாது !!!!!! கம்பு ,கேப்பைய குடிக்க வேண்டியது தான்

/////நம்மால் அதற்கு செலவிடமுடியுமா?...,//////

முடியாது !!!!

////அரசும் மக்களும் எப்போது இதைபற்றி கவலைப்படபோகிறார்கள்....?//////

எல்லாம் முடிந்த பிறகு

///இந்த புளியமரத்தடியில் தூங்கி விட்டு கூலிவாங்கும் கலாச்சாரம் மாறுமா?...////

அது நம் கையில்

////விவசாயம் அழிவதனால் உருவாகும் பிரச்சினை, அசாதாரனமான ஒன்று இல்லையா?.//////

பாதிப்பு அதிகம் இருக்கும் ஆபீசர் ....,

Anonymous said...

ஹாய் ரெண்டு பூங்கொத்தா நன்றி ஜெய்

kk said...

உன்மதானுங்க நானும் விவசாய குடும்பத்துல இருந்து வந்தவன்தான்

என்னபன்னுரது

Unknown said...

எதிர்காலத்தில் விவசாயம், உணவு, தண்ணீர் இம் மூன்றுக்கும் தான் மிகபெரிய தட்டுபாடு இருக்கும்...

Jey said...

பனங்காட்டு நரி said...

நின்னு நிதானமா முழுசா படிச்சிருக்கீங்க போல, உங்கள் கருத்துகளுக்கும், வருகைக்கும் நன்றி.

Jey said...

sandhya said...
ஹாய் ரெண்டு பூங்கொத்தா நன்றி ஜெய்///

என்ஜாய் :)

Jey said...

kk said...
உன்மதானுங்க நானும் விவசாய குடும்பத்துல இருந்து வந்தவன்தான்

என்னபன்னுரது ///

மனசுல இருக்கிற கோவத்த இந்த மாதிரி இறக்கி வச்சிட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்க வேண்டியதுதான்....

Jey said...

கே.ஆர்.பி.செந்தில் said...
எதிர்காலத்தில் விவசாயம், உணவு, தண்ணீர் இம் மூன்றுக்கும் தான் மிகபெரிய தட்டுபாடு இருக்கும்...///

விவசாயம் போச்சுன்னாவே மத்த ரெண்டும் ஆட்டோமேட்டிக்கா கிடைக்காம போயிரும் தோழரே.

tamil blog said...

தொட்டதுக்கெல்லாம் இலவசம் தந்து சனங்களை சோம்பேறியாக்கிவிட்டான் கருணாநிதி. இவனின் ஆட்சி எப்போது ஒழியுமோ,

Jey said...

tamil blog said...
தொட்டதுக்கெல்லாம் இலவசம் தந்து சனங்களை சோம்பேறியாக்கிவிட்டான் கருணாநிதி. இவனின் ஆட்சி எப்போது ஒழியுமோ,///

அரசியல்வாதிகள் நேர்மையானவங்க ஆயிட்டா எல்லாமும் தீர்ந்தது..... எங்க நடக்கப்போகுது..

senthil velayuthan said...

nannum ithai pathi ezhuthanum ennu ninaichan, anna neega ezhuthiteenga,
good jey.

Jey said...

senthil1426 said...
nannum ithai pathi ezhuthanum ennu ninaichan, anna neega ezhuthiteenga,
good jey.//

அட, நான் எழுதலனாலும், இந்த விசயத்த குமுறுரதுக்கு ஆள் இருக்காங்கனு நினைக்கும்போது சந்தோசமா இருக்கு செந்தில்:)

geeyar said...

பச்சை பசேலென்ற வயல்வெளி, பழுத்து குலுங்கும் தக்காளி செடி, கேட்பாரற்று கிடக்கும் மிளகாய் பயிர், களைகளுக்கு நடுவில் களையிளந்து நிற்கும் பல்லாரி பயிர் அப்படியே கொஞ்சம் தொலைவில் ஒரு குளம், குளத்துக்கரையில் படுத்துத் தூங்கும் பாட்டாளிகள். எங்கள் ஊர் எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ என்று ஒரு விடியோ ரெடி பண்ணிக் கொண்டு இருக்கிறேன். அதற்குள் முந்திக் கொண்டீரே.

ஒன்றும் பயப்பட வேண்டாம். கனவுகாண சொன்ன அப்துல் கலாமிடம் கேட்ட பொழுது ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்த வெள்ளாமையை ஒரே செடியில் எடுத்துவிட திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாராம். எங்கள் கலெக்டர் ஜெயராமன் இ.ஆ.ப. அவர்களோ கோயமுத்தூரில் தொழில் வளருது, திருப்பூரில் வளருது, நம்மிடம் ஏராளமான நிலம் இருக்கிறது ஏன் தேவையில்லாமல் வைச்சிருக்கோம்(சீக்கிரம் வித்திடவா?) அப்டினு கேட்கிறார். நான் பள்ளியில் படிக்கும் போது இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால் இன்று வர்த்தக நாடு. ஒரு ஜப்பான் வெளிநாட்டிலிருந்து உணவை இறக்குமதி செய்யலாம். ஆனால் 200 கோடியை டார்க்கெட்டாக கொண்டு இயங்கும் இந்தியா உணவை இறக்குமதி செய்ய வேண்டுமானால் செவ்வாய் கிரகத்தில் தான் அரிசி விளையுதான்னு பார்க்க வேண்டும். திருவள்ளுவர் வாக்கு சீக்கிரமே பலிக்கத்தான் போகுது.

Jey said...

geeyar said...///

போட்டோ’ஸ் + வீடிடோவோட விளக்கமா எழுதுங்க சார், நாம எழுதுனாத்தான் சார் உண்டு...

Jey said...

geeyar said...

////ஒன்றும் பயப்பட வேண்டாம். கனவுகாண சொன்ன அப்துல் கலாமிடம் கேட்ட பொழுது ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்த வெள்ளாமையை ஒரே செடியில் எடுத்துவிட திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாராம்.///

அத சாப்டிட்டு ஒரே மாசத்துல, போயும் சேர்ந்திரலாம்னு சேர்த்து சொன்னாரா சார்?.

geeyar said...

நான் கலாம் சார் மீது நல்ல மரியாதை வைத்திருந்தேன். ஆனால் அவருக்கு கூட விவசாயத்தின் அருமை தெரியலனு நினைக்கும்போது என்னசார் பண்றது. இப்ப பிடி கத்தரிக்காய் பிரச்சனை வந்ததே. அதனால் விவசாயிகளுக்கு பிரச்சனை குறைவுதான். ஆனா அத சாப்டுற இப்போ கணிணி முன் இருந்து டைப் பண்ணிட்டு இருக்கிற ஆபிசர்களுக்குதான் உயிர்போற பிரச்சனை. அதனால தான் பிடியை சரத்பவார் ஆதரித்தார். ஜெய்ராம் ரமேஸ் எதிர்த்தார். ஆனா இது ஏதோ விவசாய பிரச்சனைதானே நமக்கு ஏன் என இருந்தவர்களை என்ன செய்ய?

Unknown said...

//# விவசாயம் அழிவதனால் உருவாகும் பிரச்சினை, அசாதாரனமான ஒன்று இல்லையா?.//

அட அழிஞ்சதுக்கு அப்புறம் யோசிக்க வேண்டிய விஷயம். ஏன் அவசரபடுறீங்க..

Jey said...

geeyar said...
நான் கலாம் சார் மீது நல்ல மரியாதை வைத்திருந்தேன். ஆனால் அவருக்கு கூட விவசாயத்தின் அருமை தெரியலனு நினைக்கும்போது என்னசார் பண்றது. இப்ப பிடி கத்தரிக்காய் பிரச்சனை வந்ததே. அதனால் விவசாயிகளுக்கு பிரச்சனை குறைவுதான். ஆனா அத சாப்டுற இப்போ கணிணி முன் இருந்து டைப் பண்ணிட்டு இருக்கிற ஆபிசர்களுக்குதான் உயிர்போற பிரச்சனை. அதனால தான் பிடியை சரத்பவார் ஆதரித்தார். ஜெய்ராம் ரமேஸ் எதிர்த்தார். ஆனா இது ஏதோ விவசாய பிரச்சனைதானே நமக்கு ஏன் என இருந்தவர்களை என்ன செய்ய?///

உலகத்துல எந்த தொழில் செய்ரவங்களா இருந்தாலும், அவங்க தொழிலுக்கு ஒரு பிரச்சினைனா அவங்க எல்லாரும் ஒன்னுகூடி, ஒன்னா போராடி ஜெயிக்கிறாங்க.. ஆனா விவசாயம் பண்ரவங்களுக்கு சங்கம் இருந்தாலும், ஒட்டுமொத்த விவசாயிங்க ஒன்னு சேர்ந்து போறாடுரது இல்லை... அரசியல் கட்சி ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரிஞ்சிடராங்க... அதனால, உடனடி ஓட்டுப்பிரச்சினை வர்ரது இல்லை. நம்ம அரசியல் கட்சிகளுக்கும், உடனடியா எந்த பிரச்சினைய கையில் எடுத்தா ஒட்டு வாங்கலம்னரதுதான் பிரச்சினை, அதனாலேயே, தொலைநோக்குப் பார்வை காணாம போயிருச்சி. விவசாத்தோட தோல்வியோ அல்லது அழிவோ ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பாதிக்கும், சராசரி மக்களுக்கு அந்த கடைசி நிமிசத்துலதான், பிரச்சினையின் வீரியம் புரியும்...

Jey said...

தஞ்சாவூரான் said...
//# விவசாயம் அழிவதனால் உருவாகும் பிரச்சினை, அசாதாரனமான ஒன்று இல்லையா?.//

அட அழிஞ்சதுக்கு அப்புறம் யோசிக்க வேண்டிய விஷயம். ஏன் அவசரபடுறீங்க...//

ஹஹஹா, காமடியா சொன்னாலும், உங்களோட விரக்தி தெரியுது சார். ஏதோ நம்ம கோவத்த கொட்டுறதுக்கு ஒரு இடம் கிடைச்ச திருப்தி., நம்ம கருதோட நாலு பேர் இருக்காங்கன்ற ஆறுதல்.... மத்தபடி நம்ம எழுதியா சார், நாட்ட நட்டுக்க நிப்பாட்ட போரோம்:)

ராம்ஜி_யாஹூ said...

நல்ல கருத்தை தான் சொல்லி இருக்கிறீர்கள்.

நல்ல நடை தான்.

நம்மை போன்ற இளைஞர்கள் விவசாயத்தை விட்டு விட்டு, பொட்டி தட்டும் வேலை, வெளி நாடு வேலை என்று போய் விட்டதும் விவசாயம் தேங்கி இருக்க ஒரு காரணமே.

Jey said...

ராம்ஜி_யாஹூ said...
நல்ல கருத்தை தான் சொல்லி இருக்கிறீர்கள்.

நல்ல நடை தான்.

நம்மை போன்ற இளைஞர்கள் விவசாயத்தை விட்டு விட்டு, பொட்டி தட்டும் வேலை, வெளி நாடு வேலை என்று போய் விட்டதும் விவசாயம் தேங்கி இருக்க ஒரு காரணமே.//

உண்மையில நான் +2 முடிச்சிட்டு விவசாயம் பாக்குறேனுதான், எங்கப்பாகிட்ட போராடுனேன், ஆனா அவர் பிடிவாதமா, இந்த என்னோட போகட்டும்டா, நீங்க எப்படியாவது படிச்சிட்டு பட்டணத்துல போய் நல்லா இருங்கடானு அனுப்பிச்சிட்டாரு. எங்கப்பா மட்டுமில்லை கிராமத்துல விவசாயம் பண்ர எல்லா அப்பாக்களோட அனுகுமுறையும் இதுவாகத்தான் இருக்கு, அதுக்கு என்ன காரணம் சார்..., இன்னிக்கு என்னோட பால்ய ந்ண்பர்கள் விவசாயம் பண்ணிட்டிருக்காங்க, அவங்களோட பொருளாதார நிலைமை ரொம்ப கேவலமா இருக்கு. அவங்க பசங்கள அதே கவர்மெண்ட் ஸ்கூல்(நான் அரசு பள்ளிகளை கேவலமாக எண்ணி இதை சொல்ல வில்லை, அங்கு ஆசிரியர்களின் தரம் குறந்து விட்டது.., எந்த சின்ன செலவுகளுக்கு கடன் வாங்குற நிலைமை..., விவசாயம் பண்ரவங்களுக்கு ஏன் இந்த நிலைமை....

முதல் முறையா என்னோட பதிவுக்கு கருத்து சொல்லியிருகீங்க. நன்றி சார்.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஜெ ,
உங்களுக்கு ஒன்று தெரியுமா ,உலகமயமாக்கல் கொண்டு வந்து சில வருடங்களியே ,ஒரு சில நெல் விதைகளை அமெரிக்காவில் உள்ள நிறுவங்கள் விற்பனை செய்தன ...,அதன் விளைவு , பெண்கள் சிறு வயதினையே பூபைன்து விட்டார்கள் ....,இதை நான் சிறு பத்திரிகையில் படித்து தெரிந்து கொண்டேன்...,ப்ரெஸ்ட் கான்சர் ,இன்னும் சில தீர்க்க முடியாத வியாதிகளை அது ஏற்படுத்து கொண்டிருக்கின்றன .....அதை வைத்து அவர்கள் (அமெரிக்கா ) ஆராய்ச்சி செய்து கொண்டிருகிறகள் ....

ஜெய்லானி said...

///டிஸ்கி 3 : பதிவில் எங்கேனும் தடித்த வார்த்தைகள் இருப்பதாக யாரேனும் கருதினால் சொல்லவும் நீக்கிவிடலாம்.//


இதுல எழுதி இருக்கிற வார்த்தை எல்லாமே தடித்துதான் இருக்கு....இப்ப என்னா செய்வீங்க ...!! இப்ப என்ன செய்வீங்க..!!

Karthick Chidambaram said...

are u truetamilan ? are his friend ?

ஜெய்லானி said...

//டிஸ்கி 1 : சொல்ல வந்த கருத்தை கோர்வையாக சொல்லியிருகிறேனா என்று தெரியவில்லை.//

எத்தனை தடவையா புளிய மரத்தையே கண்ணு வைப்ப அது ஒன்னுதான் ஊரில இருக்கு இப்ப அதுக்கும் ஆப்பு வரப்போகுது உன்னால

ஜெய்லானி said...

ஜெ.என்ன ஆச்சு வரவர சின்னதா எழுத ஆரம்பிச்சிட்ட.. ஊர்ல மழையோ...!!

ஜெய்லானி said...

நல்ல விசயமாதான் எழுதரே எப்படியும் அடுத்த செம்மொழி மாநாட்டில உனக்கு ஒரு சிட் கண்டிப்பா இருக்கு. அப்படி கிடைக்காட்டி பட்டா பட்டிய பலி குடுத்தாவது உனக்கு ஒரு சீட் வாங்கிடுவோம்...ஹி..ஹி..

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//

அருமையான பதிவு தல. வாழ்த்துக்கள்..(பாராட்டி எழுதுனா கையெல்லாம் நடுங்குதே ஏன்?)//

எனக்கும் அப்படிதான் ராசா..நீ சொல்லிட்ட எனக்கு காலல்லாம் வெடவெடங்குது..

Jey said...

பனங்காட்டு நரி said...
ஜெ ,
உங்களுக்கு ஒன்று தெரியுமா ,உலகமயமாக்கல் கொண்டு வந்து சில வருடங்களியே ,ஒரு சில நெல் விதைகளை அமெரிக்காவில் உள்ள நிறுவங்கள் விற்பனை செய்தன ...,அதன் விளைவு , பெண்கள் சிறு வயதினையே பூபைன்து விட்டார்கள் ....,இதை நான் சிறு பத்திரிகையில் படித்து தெரிந்து கொண்டேன்...,ப்ரெஸ்ட் கான்சர் ,இன்னும் சில தீர்க்க முடியாத வியாதிகளை அது ஏற்படுத்து கொண்டிருக்கின்றன .....அதை வைத்து அவர்கள் (அமெரிக்கா ) ஆராய்ச்சி செய்து கொண்டிருகிறகள் ....//

நானும் இதை படித்திருக்கிறேன். இதற்கு ஆராய்ச்சியே தேவையில்லை, இயற்கையின் இயல்பான ஒன்றை மாற்ற முயற்சித்தால், அதனால் கேடுகள்தான் விளைந்திருக்கிறது....

Jey said...

ஜெய்லானி said...
///டிஸ்கி 3 : பதிவில் எங்கேனும் தடித்த வார்த்தைகள் இருப்பதாக யாரேனும் கருதினால் சொல்லவும் நீக்கிவிடலாம்.//


இதுல எழுதி இருக்கிற வார்த்தை எல்லாமே தடித்துதான் இருக்கு....இப்ப என்னா செய்வீங்க ...!! இப்ப என்ன செய்வீங்க..!!///
வா ராசா, கும்முரதுக்கு வந்திட்டியா!!!, உங்கம்ப்யூட்டர்ல firefox வேலை செய்யாமயே இருந்திருக்கலா....

Jey said...

Karthick Chidambaram said...
are u truetamilan ? are his friend ?///
mr.karthi,already 2 of my blog friends raised similar question. I visited truetamilan's blog, he is seen to be senior writer and i started to write from this june end.
can you please tell me, what exactly influenced to raise this question?. please.

கருடன் said...

@ஜெய்லானி
//எனக்கும் அப்படிதான் ராசா..நீ சொல்லிட்ட எனக்கு காலல்லாம் வெடவெடங்குது.. //

எல்லாருக்கும் இந்த பிரச்சனை இருக்க.... நல்ல பதிவு போடதிங்க சொன்ன கேட்டதன...

Jey said...

ஜெய்லானி said...
எத்தனை தடவையா புளிய மரத்தையே கண்ணு வைப்ப அது ஒன்னுதான் ஊரில இருக்கு இப்ப அதுக்கும் ஆப்பு வரப்போகுது உன்னால///

இதுக்கு முன்னாடி பதிவுல எழுதுனது அரச மரத்தி பத்தியா...

//ஜெ.என்ன ஆச்சு வரவர சின்னதா எழுத ஆரம்பிச்சிட்ட.. ஊர்ல மழையோ...!!///

இன்னும் 2 ரீல் கூட்டிரலாமா?.. இதுக்கே பட்டாபட்டி எஸ் ஆகி ஓடியாச்சு...

///நல்ல விசயமாதான் எழுதரே எப்படியும் அடுத்த செம்மொழி மாநாட்டில உனக்கு ஒரு சிட் கண்டிப்பா இருக்கு. அப்படி கிடைக்காட்டி பட்டா பட்டிய பலி குடுத்தாவது உனக்கு ஒரு சீட் வாங்கிடுவோம்...ஹி..ஹி.///

என்ன ஏத்திவிட்டாலும், நாங்க அலர்ட்டாத்தான் இருப்போம்லேய்...

//எனக்கும் அப்படிதான் ராசா..நீ சொல்லிட்ட எனக்கு காலல்லாம் வெடவெடங்குது..//

ங்கொய்யாலே, உமக்கும் பேஸ்மெண்ட் வீக்கா...:)

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ஜெய்லானி
//எனக்கும் அப்படிதான் ராசா..நீ சொல்லிட்ட எனக்கு காலல்லாம் வெடவெடங்குது.. //

எல்லாருக்கும் இந்த பிரச்சனை இருக்க.... நல்ல பதிவு போடதிங்க சொன்ன கேட்டதன...///

ஒரே இடத்துல இருக்கிறதனாலே கூட்டு சேந்து கலாய்கிரீங்களா, இருங்கடி...( வேர என்ன சொல்லி பயமுருத்துரதுன்னு தெரியலையே...)

கருடன் said...

@ஜெய்
//ஒரே இடத்துல இருக்கிறதனாலே கூட்டு சேந்து கலாய்கிரீங்களா, இருங்கடி...( வேர என்ன சொல்லி பயமுருத்துரதுன்னு தெரியலையே...)//

என்ன வேனும்ன சொல்லி பயமுருத்து தல..... நல்ல பதிவு மட்டும் போட்டுடதிங்க.... அப்பரம் அறிவு வளந்துட நான் என்ன பண்றது... பேச்சி பேசத்தான் இருக்கணும்...

ஜெய்லானி said...

////ஜெ.என்ன ஆச்சு வரவர சின்னதா எழுத ஆரம்பிச்சிட்ட.. ஊர்ல மழையோ...!!///

இன்னும் 2 ரீல் கூட்டிரலாமா?.. இதுக்கே பட்டாபட்டி எஸ் ஆகி ஓடியாச்சு...//

யோவ் விட்டா ஒரு குயர் நோட்டு கேப்ப போலிருக்கு. அடிஷனல் பேப்பரும் பத்தாது போலிருக்கு..

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி.. said...

ரெண்டு நாளாகும் போல....

( பதிவ படிச்சு முடிக்க...!!!! )...//

ஆமா பட்டா நானும் படிக்கிரேன்..படிக்கிரேன் ...முடிய மாட்டேங்கிரது.. இதுல பாதி எடிட்டிங்காம்

பிளாக்கருக்கு புதுசா ஒரு சாஃப்ட்வேர் கண்டு பிடிக்கனும் இத்தனை வரிக்கு மேல போகாம இருக்க....

Jey said...

ஜெய்லானி said...

யோவ் விட்டா ஒரு குயர் நோட்டு கேப்ப போலிருக்கு. அடிஷனல் பேப்பரும் பத்தாது போலிருக்கு..//

நோகாம படிக்கிறதுகே இவ்வளவு சலிச்சிகிறீங்களே, இத டைப் அடிக்கிறதுக்கு என்னா முக்கு முக்கியிருப்போம்... கொஞ்சமாவது ரோசனை பண்ணுங்க ஒய்..

Jey said...

@@ ஜெய்லானி said...//

என்னலே, இன்னிக்கு அதிசயமா, இத்தனை பின்னூட்டம் போடுரீரு..., சாட்டிங் பன்ண நல்ல ஃபிகருங்க கிடைக்கலையா...( உண்மைய!!!! சொல்லிட்டோம், பயபுள்ள கோவப்படுவானோ)

கருடன் said...

இது கள்ள ஆட்டம்... ஜெய் ஒரு கமெண்ட் இரண்டுவட்டி போடறாரு...

கருடன் said...
This comment has been removed by the author.
கருடன் said...

96

கருடன் said...

97

கருடன் said...

98

கருடன் said...

100 yeiiiiiii

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...
100 yeiiiiiii///

பாண்டியின் ட்ரைங் காலம், மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுகிறது..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்லா கோர்வையா எழுதி இருக்கீங்க

Jey said...

அப்பாவி தங்கமணி said...
நல்லா கோர்வையா எழுதி இருக்கீங்க//


முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.( ரங்ஸ் நல்லாருக்காரா, கேட்டதா சொல்லுங்க அம்மனி..)

ஜெய்லானி said...

//என்னலே, இன்னிக்கு அதிசயமா, இத்தனை பின்னூட்டம் போடுரீரு..., சாட்டிங் பன்ண நல்ல ஃபிகருங்க கிடைக்கலையா...( உண்மைய!!!! சொல்லிட்டோம், பயபுள்ள கோவப்படுவானோ)//

இப்பிடி எல்லாம் சொன்னா நா பயந்து ஓடிடுவேனா...வாய்மையே வெல்லும்

Karthick Chidambaram said...

விவசாய குடும்பமா ?

Jey said...

Karthick Chidambaram said...
விவசாய குடும்பமா ?//

ஆமாம்ப்பா, ஒருகாலத்துல இத நெஜ்ச நிமித்தி கெளரவமா சொன்னேன்!!!, இப்ப வெறுத்து போய் சொல்ல வேண்டியதாயிருச்சி, நுலமை அப்படி...

மங்குனி அமைச்சர் said...

யோவ் ,நீ சரிப்பட்டு வரமாட்ட , பேசாம உன் சிஸ்டத்துல அஞ்சு நிமிசத்துக்கு மேல டைப் பண்ணா ஆபாயிடுறது மாதிரி செட் பண்ணிக்க அப்பத்தான் சின்ன பதிவா போடுவ , முடியல .................. (இரு தலைஎழுத்து படிச்சிட்டு வர்றேன் )

மங்குனி அமைச்சர் said...

நல்ல சப்ஜெக்ட் ,

அனேகமா அடுத்த நோபல் பரிசு உனக்குத்தான் (இப்படி சீரியஸ் பதிவு போட்டா அப்புறம் நானும் சீரியஸ் பதிவு போட ஆரம்பிச்சிடுவேன் , ஜாக்கிரத ...)

Jey said...

மங்குனி அமைசர் said...

யோவ் ,நீ சரிப்பட்டு வரமாட்ட , பேசாம உன் சிஸ்டத்துல அஞ்சு நிமிசத்துக்கு மேல டைப் பண்ணா ஆபாயிடுறது மாதிரி செட் பண்ணிக்க அப்பத்தான் சின்ன பதிவா போடுவ , முடியல .................. (இரு தலைஎழுத்து படிச்சிட்டு வர்றேன் )////

கோச்சுகாதயா.. இனிமே சின்னதா போட முயற்சி செய்றேன்... ஒரு ஃபுளோவுல வந்திரிச்சி...ஹி ஹி ஹி


////நல்ல சப்ஜெக்ட் ,

அனேகமா அடுத்த நோபல் பரிசு உனக்குத்தான் (இப்படி சீரியஸ் பதிவு போட்டா அப்புறம் நானும் சீரியஸ் பதிவு போட ஆரம்பிச்சிடுவேன் , ஜாக்கிரத ...)////

வேணாம் மங்கு... அப்புறம் ரசிகர்கல் ஏமாந்துருவாங்க, அதுக்கு காரணமான என்னை வந்து கும்முவாங்க...அப்படியெல்லா சீரியசா ரோசனை பண்ரத விட்ரு...

Jey said...

மன்குனி, நீரு லேட்டா வந்து கமெண்ஸ் போடுரத பாத்தா, அதுக்கு அர்த்தம், நான் புதுசா எழுதியிருக்கேன், வந்து படியானு சொல்ராமாதிரி இருக்கு, வந்து பாக்குறேன்ன்.....:)

ஜெய்லானி said...

//புளியமரத்தடியில் 1 மணி நேரம் படுத்து எழுந்தால் ரூ 80/- உறுதி//

யாரு வீட்டு புளிய மரத்துலன்னு சொன்னா தேவலாம்

ஜெய்லானி said...

//இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!//

அதெல்லாம் ஒன்னியும் வானாம். ஒரு சிக்கன் லெக் பீசும் , ஒரு ஆஃப்ம் போதும் , உடனே அனுப்பு ஐயம் வைட்டிங் ஃபார் யூ..ஒன்லி.....

ஜெய்லானி said...

//நோகாம படிக்கிறதுகே இவ்வளவு சலிச்சிகிறீங்களே, இத டைப் அடிக்கிறதுக்கு என்னா முக்கு முக்கியிருப்போம்... கொஞ்சமாவது ரோசனை பண்ணுங்க ஒய்..//

யோவ் நெஞ்ச தொட்டு சொல்லு நீயா டைப் பண்ணின..ஒரு பன்னும் டீயும் வாங்கி குடுத்து அடிச்சதுதானே..!!

velji said...

குற்றவாளிகளால் ஆளப்படும் நாட்டில் வேறன்ன விளையும்?! அப்புறம், பசிச்சா மண்ணயா திங்க...ன்னு கேக்கவும் முடியாது..அதுவும் லாரி லாரியா கொள்ளை போகுது!

a well analysed article!

Jey said...

ஜெய்லானி said...

யாரு வீட்டு புளிய மரத்துலன்னு சொன்னா தேவலாம்///
ஏம்ப்பா அதுக்கு ஏதாவது சூன்யம் வக்கிர ஐடியா இருக்கா?!!!


ஜெய்லானி said...
//இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!//

அதெல்லாம் ஒன்னியும் வானாம். ஒரு சிக்கன் லெக் பீசும் , ஒரு ஆஃப்ம் போதும் , உடனே அனுப்பு ஐயம் வைட்டிங் ஃபார் யூ..ஒன்லி.....///

எழுதுனத தவிர மத்த எல்லத்தையும் தெளிவா படிச்சி கேள்வி கேக்குரங்கயா..
சரி கொரியர்ல அனுப்பிருக்கேன், வந்து சேந்ததும் தகவலனுப்பு...

ஜெய்லானி said...


யோவ் நெஞ்ச தொட்டு சொல்லு நீயா டைப் பண்ணின..ஒரு பன்னும் டீயும் வாங்கி குடுத்து அடிச்சதுதானே..!!///

பப்ளிக்ல அசிங்கப்படுத்துரதே உனக்கு பொளப்பா போச்சி....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Jey said...

velji said...
குற்றவாளிகளால் ஆளப்படும் நாட்டில் வேறன்ன விளையும்?! அப்புறம், பசிச்சா மண்ணயா திங்க...ன்னு கேக்கவும் முடியாது..அதுவும் லாரி லாரியா கொள்ளை போகுது!

a well analysed article!///

வேலு வாய்யா... வாய்யா... அப்படியே கோவமா ஒரு கவிதை எழுதி அனுப்புயா, நான் எழுதுனதா , இங்க போட்டுகுறேன்... தக்காளி இந்த கவுஜ எழுத என்ன பன்னியும் முடியலை...

( அப்புறம் போன்ல சொன்ன வாக்குறுதிப்படி சீக்கிரமா, திரும்ப எழுத ஆரம்பிச்சிரு...)

geeyar said...

//ஆனா விவசாயம் பண்ரவங்களுக்கு சங்கம் இருந்தாலும், ஒட்டுமொத்த விவசாயிங்க ஒன்னு சேர்ந்து போறாடுரது இல்லை...///

ஒரு விவசாயி நெல் நடவு செய்தால் 90 நாட்கள் தினமும் வயலுக்கு சென்று நீர் பாய்ச்ச, களையெடுக்க, மருந்தடிக்க, ... அறுவடை செய்ய என அவனால் வயலைத் தவிற வேறெதுவும் செய்ய இயலாது. இதில் எப்படிசார் போராடுவது. ஆணி புடுங்குறத நிப்பாட்டிட்டு போராட போயிட்டு மறுநாள் வந்தால் அப்புறம் 3 மாதம் புடுங்க ஆணியே இருக்காது சார்.

ஒரு வழி இருக்கு சார், எப்படி கறிக்கோழி பண்ணை முதலாளிகள் எப்போழுதும் தட்டுபாடு இருக்குமாறு தங்கள் கோழி உற்பத்தியை குறைத்து கொள்கிறார்களோ அதுபோல விவசாயிகளும் முதல் கட்டமாக கடந்த வருடம் உற்பத்தி செய்ததை விட 50 சதம் குறைவாக உற்பத்தி செய்தால், இந்திய உற்பத்தி சரிபாதியாக குறையும். அதனால் கடுமையான தட்டுபாடு நிலவும். வெளிநாட்டில் கையேந்தும் நிலை வரும். அப்பொழுதாவது விவசாயத்தின்/ விவசாயியின் பலம் அரசுக்கு தெரிய வரலாம்.

ஆனால் முன்பொருமுறை கடுமையான தண்ணீர் தட்டுபாட்டினால் விவசாய உற்பத்தி சரிபாதியாக குறைந்த போது 50 மூட்டை நெல் விளைவித்த விவசாயி தன் குடும்பத்திற்கு மட்டுமே போதமான அளவு மட்டுமே 20 மூட்டை நெல் உற்பத்தி செய்த பொழுது, அரசாங்கம் அத்தியாவசிய பொருளை பதுக்கியதாக கூறி அந்த 20 மூட்டை நெல்லையும் பறிமுதல் செய்தது. இதுவும் விவசாயி என்பதால் மட்டுமே அரசாங்கம் பறிமுதல் செய்தது.

Gayathri said...

இப்படியே போனா தின்ன சோறு இருக்காது, கழுதைக்கு போட்டியா காகிதத்ததான் திண்ணனும்...

சந்தியா மாமி கருத்திற்கு என் முழு சப்போர்ட்...

அருமையான பதிவு ஒரு காப்பிய அரசுக்கு அனுப்புங்க புரியட்டும்..

Jey said...

geeyar said...///

உங்களின் கருத்துகளுடன் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு சார்.
”அட்தியாவசிய உணவுப்பொருள் கட்டுப்பாடு சட்டம் “ ,த்தின் நோக்கம், அனைவருக்கும் உணவுப்பொருட்கள் வாங்கும் கிடைக்க வழிசெய்வதற்கே, நோக்கத்தில தவறு இருப்பதாக தெரியசில்லை. ஆனால், நாம் பயன் படுத்தும் அனைத்து விதமானவீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கல்வி, மருத்துவம், வாகனங்கள் என்று எல்லாவற்றின் விலைகளும் 10 மடங்கு 15 மடங்கு என்ற உயர்ந்து விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகிவிட்டது, அதெ சமயத்தில், இவர்கள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்களின் கொள்முதல் விலையில் அதிக மார்ரம் இலாத்ததால், இவர்களின் பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றம் இல்லாமல், கஷ்டப்படுகிறார்கள். வியபாரிகளின் பதுக்களுக்கு சரியான நடவடிக்கை இல்லை, அவர்களுக்கு ஆட்சி/அதிகார வர்க்கத்திலிருந்து மறமுக ஆதரவு இருந்துகொண்டு இருக்கிறது அவர்கள், பணபலத்தில் வலியவர்கள். ஊன்மையான விவசாயிகள் எழ்யோர் இவர்களை கண்டுகொள்வதில் உடனடி ஆதாயம் இல்லையாதலால், கவனிக்கப்படுவதில்லை. இந்தியாவின் மொத்த விவசாயிகளில், 10% பனத்தில் புரளும் பண்ணயார்கள் , ஆனால் பெரும்பாலான, ஊடகங்கள் கூட இவர்களை உதாரணம் காட்டி மற்ற 90% விவசாயிகளை கேவலப்படுத்துகிரார்கல். என்ன செய்ய....

Jey said...

Gayathri said...
இப்படியே போனா தின்ன சோறு இருக்காது, கழுதைக்கு போட்டியா காகிதத்ததான் திண்ணனும்...

சந்தியா மாமி கருத்திற்கு என் முழு சப்போர்ட்...///

உங்களின் கருத்துக்கு நன்றி மேடம்.

//அருமையான பதிவு ஒரு காப்பிய அரசுக்கு அனுப்புங்க புரியட்டும்...///

ஏன் மேடம் இந்த கொலைவெறி, அவங்களுக்கு இது தெரியாதா?!!!, நல்லாவே தெரியும். இப்ப நான் இந்த மாதிரி எழுதி அனுப்பினா , டெம்போ அனுப்பினாலும் அனுப்புவாங்க...:)

geeyar said...

தற்போதைய நெல் கொள்முதல் விலை 70 கிலோவிற்கு 820 ரூ(ஒரு மூடை நெல் விளைவிக்க ஆகும் செலவு தற்போது 450 ரூ. ஒரு மூடை நெல் விளைவிக்க ஆகும் காலம் 3 மாதங்கள். 3 மாதத்தில் ஒரு மூடை நெல் மூலம் கிடைக்கும் வருமானம் - 370). அதே 70 கிலோ நெல்லை அரிசியாக்கும் போது 50 கிலோ அரிசி கிடைக்கும். தவிடு விற்கும் விலையில் நெல்லை அரிசியாக்க செலவு இல்லை. அரிசியின் விலை (50 28 = 1400), இந்த செயல்பாடு முடிய ஆகும் காலம் 3 நாட்களே. 3 நாட்களில் ஒரு மூடை நெல்லில் கிடைக்கும் வருமானம் 580 ரூ. இப்போ சொல்லுங்க யாரோட தரம் உயரும். விவசாயியா? அரிசி ஆலை முதலாளியா? பதுக்கிறது யார்?

Jey said...

geeyar said...
தற்போதைய நெல் கொள்முதல் விலை 70 கிலோவிற்கு 820 ரூ(ஒரு மூடை நெல் விளைவிக்க ஆகும் செலவு தற்போது 450 ரூ. ஒரு மூடை நெல் விளைவிக்க ஆகும் காலம் 3 மாதங்கள். 3 மாதத்தில் ஒரு மூடை நெல் மூலம் கிடைக்கும் வருமானம் - 370). அதே 70 கிலோ நெல்லை அரிசியாக்கும் போது 50 கிலோ அரிசி கிடைக்கும். தவிடு விற்கும் விலையில் நெல்லை அரிசியாக்க செலவு இல்லை. அரிசியின் விலை (50 28 = 1400), இந்த செயல்பாடு முடிய ஆகும் காலம் 3 நாட்களே. 3 நாட்களில் ஒரு மூடை நெல்லில் கிடைக்கும் வருமானம் 580 ரூ. இப்போ சொல்லுங்க யாரோட தரம் உயரும். விவசாயியா? அரிசி ஆலை முதலாளியா? பதுக்கிறது யார்?///

விவசாயி, கணக்கு பாத்தா, தாலி கூட மிஞ்சாதுன்னு பலமொழியே இதவச்சிதான்....

LinkWithin

Related Posts with Thumbnails