மூன்று நாள் விடுமுறயில் சொந்த கிரமத்திற்கு சென்றிருந்தேன். ஊருக்கு செல்லும்போதெல்லாம், பால்ய நண்பர்களுடன் எங்க ஊர் டெண்ட்கொட்டாயில் படம் பார்ர்க்க செலவது வாடிக்கை ( ரிலீசாகி ப்ரிண்ட் எல்லாம் தேய்ந்து போன நிலையில் அதரப்பலசான படங்கள் தான்). இந்த தடைவை ஊருக்கு சென்ற போது மழை ஆரம்பித்திருந்ததால், பெரும்பாலான நண்பர்கள் விதை விதைக்க, களையெடுக்க, தண்ணீர் கட்ட என்று மும்முரமாக இருந்தார்கள், இவர்களை தேடிப் பிடிக்க தோட்டவெளிகளில் திரிய வேண்டியாகிவிட்டது. ஒருவழியாக சிலரை பார்த்துவிட்டு, மதியம் அவர்கள் கொண்டு வந்திருந்த கஞ்சியை(எளிமையான சாப்பாடுதான் ஆனா அந்த ருசிக்கு ஈடு கிடையாது) பகிர்ந்து சாப்ட்டிட்டு வீடு வர இரவாகிவிட்டது. சரி தூங்கலாம் என்றால், எனது அக்கா பையன் , சினிமாவுக்கு போலாம் மாமா என்று அடம்பிடிக்க ஆரம்பித்தான்.
நண்பர்கள் தோட்ட வேலைகளில் பிஸியாகி விட்டதால்( அவர்கள் பெரும்பாலும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் தோட்டத்திற்கு கிளம்பி விடுவார்கள்) இன்று மாறுதலுக்கு அக்கா பையனுடன் செல்ல தீர்மானித்தேன்.
ஒருவழியாக கிளம்பி கொட்டாயிக்கு முன் ரோட்டிலுள்ள கடையில் ( எல்லாம் நம்ம மாமன்,மச்சான், பங்களிகதுதான், ரெண்டு டீக்கடை, ஒரு புரோட்டா ஸ்டால் மட்டும்தான், இப்பத்தான் கவருமெண்டு புண்ணியத்துல டாஸ்மாக் ஒன்னு புதுசா வந்திருக்கு) டீ சொல்லிவிட்டு ( சென்னையில் இருப்பதால் டீ ஒசி, பதிலுக்கு சென்னை வந்தால் 4 நாலாவது வீட்டில் டேரா போடுவார்கள்) உட்கார்ந்தேன். திடீரென்று மாமா முதல் சோ விட்டுட்டாய்ங்க நான் போய் டிக்கெட் எடுக்க கியூவில் நிக்கிறேன் என்று சொல்லி அக்கா பையன் போனான். சிறிது நேரத்தில் ஓடி வந்து மாமா எனக்கு டிக்கெட் கொடுக்க மாட்டேனுட்டு டிக்கெட் கவுண்டரை மூடிட்டாங்க வந்து என்னானு கேளுங்க என்று வந்தான், எனக்கு ஒரே கொழப்பம், தக்காளி நம்மூர் கொட்டாயில நமக்கே டிக்கெட் இல்லையா, வாடா இன்னிக்கு கொடாய பிருச்சுருவோம் என்று சொல்லி ஒரே கலேபரம், ஒருவழியாக, கொட்டாய் ஓனரு பேச்சிவார்த்தக்கு வந்தார், அதெப்படி நீங்க டிக்கெட் கொடுக்க மாட்டேனு சொல்லாம்னு எகிற ஆரம்பித்தேன், அப்பதான் தெரிஞ்சது 2 வது சோ பாக்க நானும், என் அக்கா பயனும் மட்டும் தான் வந்திருக்கிறோம் ( தூரல் விழுந்து கொண்டிருந்தது காரணமா, வெவசாய வேலைகள் அதிகமாகிவிட்டது காரணமா தெரியவில்லை ). உங்க ரெண்டு பேருக்காக எப்படி படத்த ஓட்டுரது என்ற கொட்டாய் ஓனரின் வாதம் ஒரு புரம், படம் பார்க்காமல் வீட்டுக்கு வரமாட்டேன் என்று எனது அக்கா பையனின் மன்றாடல் ஒருபுரம். அதற்குள் ரோட்டுகடை மக்கள் வாடிக்கையாளர்கள் என்று சிறு கூட்டம் சேர்ந்துவிட்டது. பங்காளி சென்னையிலிந்து நம்ம கொட்டயில் படம்பார்க்குறதுக்காகவே வந்துருக்கான்யா ஏமத்திராதயா என்று நமக்கு ரெகமெண்டேசன் வேறு. கொட்டாய் ஓனர் குறந்தது 12 பேர் ( அது என்ன 12 பேர் கணக்கு என்பது இன்ற்வரை எனக்கு தெரியாது) வந்தால்தான் படம் போடுவோம்னு ஒரே பிடிவாதம்.
கடைசியில் நான் 12 டிக்கெட்டுக்கான காசை கொடுப்பது எனவும், கொட்டயில் படத்தை ஓட்டுவது எனவும் ஒரு இன்ஸ்டண்ட் பஞ்சாயத்து தீர்ப்பு கூறப்பட்டது. ( 12 டிக்கிட்டுக்கும் சேர்த்து கொடுத்த பணம், நம்ம சென்னையில் தியேட்டரில் விற்கும் ஒரு டிக்கெட் விலையை விட ரொம்பவும் கம்மி என்பது கூடுதல் தகவல்). சரியென்று ஒருவழியாக படம் ஆரம்பித்தது, உலக அழகிகளில் நம்ம ஐஸூக்கு அடுத்த படியான அழகு இந்த படத்தின் நாயகி என்ற எண்ணம் இருந்ததால் சரி பார்ப்போமே என்று என்னை நானெ சமாதானம் செய்துகொண்டேன். படம் போட்டு 20 நிமிஷம் ஆகியிருக்கும் மெதுவாக தூக்கம் வருது வீட்டுக்கு போலாம் மாமா என்றான் அனது அக்கா பையன். எனக்கு பஞ்சாயத்தெல்லாம் கூட்டி படம் போட சொல்லிவிட்டு இப்படி தூக்கம் வருதுனு சொல்றானே, சின்னப் பய புத்திய காட்டிடானே என்று கோபமாக இருந்தாலும், கொட்டாய் ஓனர், ஆபரேட்டர், வேலை செய்யும் 2 பேர் என்று எல்லொருக்கும் விடுதலை கொடுக்கலாம் என்ற நல்லெண்ணத்தில், படத்தை நிறுத்த சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். இப்பொதும் ஊருக்கு சென்றால் என்ன மாப்ள இன்னிக்கு 2 வது சோ போவோமா என்று என்னை கிண்டலடிக்க காரணமாக இருந்துவிட்டது இந்த நிகழ்வு.
(உங்களுக்கு ஏதும் இந்த மாதிரி அனுபவம் இருக்குங்களா?)
டிஸ்கி : பதிவு ப்டிச்சிருந்தா பின்னூட்டமும் அப்படியே ஓசில ஒரு ஓட்டும் போட்ருங்க நண்பர்களே
டிஸ்கி : பதிவு ப்டிச்சிருந்தா பின்னூட்டமும் அப்படியே ஓசில ஒரு ஓட்டும் போட்ருங்க நண்பர்களே
139 comments:
naanthaan 1st
//naanthaan 1st//
உங்களுக்கு நடக்க இருக்கிற கும்பாபிஷேகத்த நல்லா நடத்திருவோம்.
அது சரி அது என்ன படம்னு சொல்லவே இல்லையே பாஸ்
ரட்சகன்
//அது என்ன 12 பேர் கணக்கு என்பது இன்ற்வரை எனக்கு தெரியாது//
உங்களுக்கெல்லாம் யாருய்யா கணக்கு சொல்லி கொடுத்தது. 12 பேர் கணக்கு என்பது ஒரு டஜன் என்று அன்புடன் அழைக்கப்படும்...
நீங்க பாத்திருக்கீகளா அந்த படத்த?
எதாவது சட்டத்துல சொல்லிருக்காங்க போல.
//ரட்சகன்//
எங்க ஊர்ல DTS தியேட்டர் வந்த பிறகு ரிலீஸ் ஆனா முதல் படம்...
//
உங்களுக்கு நடக்க இருக்கிற கும்பாபிஷேகத்த நல்லா நடத்திருவோம்.//
ரிட்டு தேங்க்ஸ்
பாவம் ரட்சகம் படம் எப்புடின்னு தெரியாம அலப்பற பண்ணியிருக்கீங்க!
எங்க ஊருல டூரிங் டாக்கீஸ் ஒண்ணு இருந்ததா சின்ன வயசு ஞாபகம், ஏனோ தெரியல அப்பவே மூடிட்டாங்க, அதுனால அந்த அனுபவமே இல்லாமப் போச்சு!
//பாவம் ரட்சகம் படம் எப்புடின்னு தெரியாம அலப்பற பண்ணியிருக்கீங்க!//
அந்த அனுபவத்துக்கு அப்றம் இன்னும் அந்த படத்த பாக்கவே இல்லை
//பாவம் ரட்சகம் படம் எப்புடின்னு தெரியாம அலப்பற பண்ணியிருக்கீங்க!//
அந்த அனுபவத்துக்கு அப்றம் இன்னும் அந்த படத்த பாக்கவே இல்லை
ம்.. ரைட்டு..
இங்கெ வந்து கமெண்ட் போடுபவர்கள் ஒட்டு போடமல் சென்றால், அவர்களுக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்பதை திரிவித்துக்கொள்கிறேன்.
VOTE போட்டாச்சு...
அஹமது இர்ஷாத் said...
VOTE போட்டாச்சு...///
ஹி ஹி ரொம்ம்ப்ப நன்ன்ற்றீ
12 டிக்கிட்டுக்கும் சேர்த்து கொடுத்த பணம், நம்ம சென்னையில் தியேட்டரில் விற்கும் ஒரு டிக்கெட் விலையை விட ரொம்பவும் கம்மி என்பது கூடுதல் தகவல்//
சென்னையில் நான் ரு3.75 படம் பார்த்து உள்ளேன் அகஸ்தியா திரையரங்கம்
பதிவுலக சாப்ளின்களின் அதிரடி காமெடிகள்///
இந்த பதிவு ரொம்ப நல்லாயிருக்கு அங்க சொல்ல முடியாமல் போய்விட்டது..அதனால் இங்கே சொல்லிக்கிறேன்... வாழ்த்துக்கள்..
///சௌந்தர் said...
12 டிக்கிட்டுக்கும் சேர்த்து கொடுத்த பணம், நம்ம சென்னையில் தியேட்டரில் விற்கும் ஒரு டிக்கெட் விலையை விட ரொம்பவும் கம்மி என்பது கூடுதல் தகவல்//
சென்னையில் நான் ரு3.75 படம் பார்த்து உள்ளேன் அகஸ்தியா திரையரங்கம்///
சென்னை தேவி தியேட்டர்லேயே 6 ரூபாய்க்கு படம் பாத்திருக்கேன்!
பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களுக்கு பரங்கிமலை ஜோதி மற்றும் கெயிட்டி(தியேட்டர் இப்ப இல்லை) தியேட்டர்கள்ள சீசன் டிக்கெட் உண்டுன்னு கேள்விப்பட்டேன்
சௌந்தர் said...
சென்னையில் நான் ரு3.75 படம் பார்த்து உள்ளேன் அகஸ்தியா திரையரங்கம்//
அண்ணே, இதுமாதிரி தியேட்டர் இருக்குரது தெரியாம , 50 லிருந்து 100 ரூவா கொடுத்து பாத்திடிருக்கேனெ நான்.
அந்த தியேட்டர் எஙக இருக்குனு சொன்னா நல்லாருக்கும்.
ஏன்னா எஙக ஊரு கொட்டாயில பெஞ்சு டிக்கெட்டு ரூ 3.50.
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களுக்கு பரங்கிமலை ஜோதி மற்றும் கெயிட்டி(தியேட்டர் இப்ப இல்லை) தியேட்டர்கள்ள சீசன் டிக்கெட் உண்டுன்னு கேள்விப்பட்டேன்///
என்ன தல, திருச்சி வெங்கடேஸ்வரா தியேட்டரு, சென்னை ஓடியன் மணி எல்லாத்தையும் விட்டுட்டீங்கலே!
//Jey said...
சௌந்தர் said...
சென்னையில் நான் ரு3.75 படம் பார்த்து உள்ளேன் அகஸ்தியா திரையரங்கம்//
அண்ணே, இதுமாதிரி தியேட்டர் இருக்குரது தெரியாம , 50 லிருந்து 100 ரூவா கொடுத்து பாத்திடிருக்கேனெ நான்.
அந்த தியேட்டர் எஙக இருக்குனு சொன்னா நல்லாருக்கும்.//
யோவ் அவரு 1965ல பார்த்திருப்பாரு!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சென்னை தேவி தியேட்டர்லேயே 6 ரூபாய்க்கு படம் பாத்திருக்கேன்!//
அப்ப நாந்தான் இளிச்சாவாயனா, எங்கிட்டதான், ஜாஸ்தி வசூல் பன்னிருக்காய்ங்களா? ஆவ்வ்வ்வ்வ்வ்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன தல, திருச்சி வெங்கடேஸ்வரா தியேட்டரு, சென்னை ஓடியன் மணி எல்லாத்தையும் விட்டுட்டீங்கலே!//
திருச்சி முல்லை... கனி.. !!!???
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களுக்கு பரங்கிமலை ஜோதி மற்றும் கெயிட்டி(தியேட்டர் இப்ப இல்லை) தியேட்டர்கள்ள சீசன் டிக்கெட் உண்டுன்னு கேள்விப்பட்டேன்///
என்ன தல, திருச்சி வெங்கடேஸ்வரா தியேட்டரு, சென்னை ஓடியன் மணி எல்லாத்தையும் விட்டுட்டீங்கலே!////
நீங்க பேசிக்கிரதுலேருந்து, இங்கெல்லாம், சாமி படம் மட்டும்தான் போடுவாங்கன்னு தெரிஞ்சி போச்சி.
///அஹமது இர்ஷாத் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன தல, திருச்சி வெங்கடேஸ்வரா தியேட்டரு, சென்னை ஓடியன் மணி எல்லாத்தையும் விட்டுட்டீங்கலே!//
திருச்சி முல்லை... கனி.. !!!???///
வாடி மாப்ள, சொம்பு ரொம்ப அடிவாங்குன மாதிரி தெரியுதே?
நான் சாத்தூர் தேவி தியேட்டர்ல காலெஜ் படிக்கும் போது ஒரு சாமி படம் பத்திருக்கென், படம் பேரு சொல்ல மாட்டேன்.
வாடி மாப்ள, சொம்பு ரொம்ப அடிவாங்குன மாதிரி தெரியுதே?//
அதிலெல்லாம் கிடையாது.. நாங்க படிச்சது திருச்சி மாப்பு..சகல விஷயங்களும் அத்துப்படி..
//Jey said...
நான் சாத்தூர் தேவி தியேட்டர்ல காலெஜ் படிக்கும் போது ஒரு சாமி படம் பத்திருக்கென், படம் பேரு சொல்ல மாட்டேன்.//
இதுக்கே இம்புட்டு அலப்பற? நாங்கல்லாம் எங்க ஹாஸ்டல்ல நாலு வருசமா வாரா வாரம் டீவி ரும்ல சனிக்கிழம நைட்டு விடிய விடிய கேசட் போட்டு பாத்திருக்கோம், அதுக்கப்புறமும் எம்புட்டோ பாத்தாச்சு...என்னத்தச் சொல்ல?
அஹமது இர்ஷாத் said...
வாடி மாப்ள, சொம்பு ரொம்ப அடிவாங்குன மாதிரி தெரியுதே?//
அதிலெல்லாம் கிடையாது.. நாங்க படிச்சது திருச்சி மாப்பு..சகல விஷயங்களும் அத்துப்படி..///
ஒரு சாமி படமாவது பாக்காம எந்த பயபுள்ளகளும் டிகிரி வாங்கியிருக்க மாட்டானுக போல.
///அஹமது இர்ஷாத் said...
வாடி மாப்ள, சொம்பு ரொம்ப அடிவாங்குன மாதிரி தெரியுதே?//
அதிலெல்லாம் கிடையாது.. நாங்க படிச்சது திருச்சி மாப்பு..சகல விஷயங்களும் அத்துப்படி..///
பக்கத்துல வந்துட்டீங்க, எந்தக் காலேஜு?
பக்கத்துல வந்துட்டீங்க, எந்தக் காலேஜு?//
REC....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்கே இம்புட்டு அலப்பற? நாங்கல்லாம் எங்க ஹாஸ்டல்ல நாலு வருசமா வாரா வாரம் டீவி ரும்ல சனிக்கிழம நைட்டு விடிய விடிய கேசட் போட்டு பாத்திருக்கோம், அதுக்கப்புறமும் எம்புட்டோ பாத்தாச்சு...என்னத்தச் சொல்ல? ///
தக்காளி அனுபவக்காரபயபுள்ளயா இருப்பே போலயே.
///அஹமது இர்ஷாத் said...
வாடி மாப்ள, சொம்பு ரொம்ப அடிவாங்குன மாதிரி தெரியுதே?//
அதிலெல்லாம் கிடையாது.. நாங்க படிச்சது திருச்சி மாப்பு..சகல விஷயங்களும் அத்துப்படி..///
திருச்சியப் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேனே படிச்சிட்டீங்களா?
திருச்சியப் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேனே படிச்சிட்டீங்களா?///
பிட்டு பதிவு தானே...
///அஹமது இர்ஷாத் said...
பக்கத்துல வந்துட்டீங்க, எந்தக் காலேஜு?//
REC....//
ஆஹா REC எல்லாம் மோசமான பயபுள்ளைகளாச்சே, எல்லாம் பழம்தின்னு கொட்ட போட்ட கேசு!
ங்ணா, மன்னிச்சுக்குங்ணா...!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
திருச்சியப் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேனே படிச்சிட்டீங்களா?///
அதபடிச்ச பெரகுதானெ. உன்னை வாத்தியாரா ஏத்துகிட்டது.
///Jey said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
திருச்சியப் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேனே படிச்சிட்டீங்களா?///
அதபடிச்ச பெரகுதானெ. உன்னை வாத்தியாரா ஏத்துகிட்டது.///
அடிங்கொய்யா! (இதுல உள்குத்து எதுவும் இல்லையே!)
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///Jey said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
திருச்சியப் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேனே படிச்சிட்டீங்களா?///
அதபடிச்ச பெரகுதானெ. உன்னை வாத்தியாரா ஏத்துகிட்டது.///
அடிங்கொய்யா! (இதுல உள்குத்து எதுவும் இல்லையே!) |||||
ஆமா உள்குத்து உள்குத்துனு சொல்றாங்களு அப்படினா அன்ன் ராசா?
///Jey said...
///
ஆமா உள்குத்து உள்குத்துனு சொல்றாங்களு அப்படினா அன்ன் ராசா?///
அதை தலைசிறந்த சர்வதேச உள்குத்து நிபுணர் பட்டாபட்டி அவர்களிடம்தான் கேட்கவேண்டும்!
பன்னி,
நம்ம, முத்து, பருப்பு, மங்குனி, பட்டா, ஜெய்லானி, இலுமி எல்லாம் கானோமே, சமுதாய பொருப்போட ஒரு பதிவ போட்ருக்கேன், எங்க போனாங்க?.
எல்லாரும் ஆனி புடிங்கிட்டு வருவானுங்கன்னு நெனக்கிறேன்!
அந்த லிங்க் ல போயிப் பாத்தீங்களா?
அண்ணே, இதுமாதிரி தியேட்டர் இருக்குரது தெரியாம , 50 லிருந்து 100 ரூவா கொடுத்து பாத்திடிருக்கேனெ நான்.
அந்த தியேட்டர் எஙக இருக்குனு சொன்னா நல்லாருக்கும்//
ஆனா இப்போ டிக்கெட் விலை15ரூபாய்
அந்த தியேட்டர் தண்டையார்பேட்டைலே இருக்கு
சௌந்தர் said...
அண்ணே, இதுமாதிரி தியேட்டர் இருக்குரது தெரியாம , 50 லிருந்து 100 ரூவா கொடுத்து பாத்திடிருக்கேனெ நான்.
அந்த தியேட்டர் எஙக இருக்குனு சொன்னா நல்லாருக்கும்//
ஆனா இப்போ டிக்கெட் விலை15ரூபாய்
அந்த தியேட்டர் தண்டையார்பேட்டைலே இருக்கு///
விருகம்பாக்கத்திலிருந்து அங்க போயி பக்கனும்னா, போக்குவரத்து செலவு ரூ 100 ஐ தாண்டிரும் போல இருக்கேயா?.
//நான் சாத்தூர் தேவி தியேட்டர்ல காலெஜ் படிக்கும் போது ஒரு சாமி படம் பத்திருக்கென், படம் பேரு சொல்ல மாட்டேன். //
அங்க இப்பவும் அந்த படம்தான். final year ல எங்க பசங்களுக்கு ப்ராஜெக்ட் வொர்க் எல்லாம் தேவி தியேட்டர்ல தான் பாஸ். என் நபர்கள் சில பேருக்கு சீசன் டிக்கெட் உண்டு(நான் இல்லைங்க)
பன்னிக்குட்டி ராம்சாமி said...
எல்லாரும் ஆனி புடிங்கிட்டு வருவானுங்கன்னு நெனக்கிறேன்!
அந்த லிங்க் ல போயிப் பாத்தீங்களா?///
போய் படிச்சேன், அதுல நீங்க போட்ட பின்னூட்டம் நல்லா இருந்தது.
//அக்கா பையன் , சினிமாவுக்கு போலாம் மாமா என்று அடம்பிடிக்க ஆரம்பித்தான்.//
அப்புடியா மாமா? :P
அப்புறம்,சென்னைல சத்யம்,inox ல கூட பத்து ரூபாய்க்கு டிக்கெட் இருக்கு மக்கா.என்ன கிடைக்குறது தான் கொஞ்சம் சிரமம்.இங்கிலீஷ் படத்துக்கு எல்லாம் ஈஸியா கிடைக்கும். :)
ஆனா கொட்டாயில படம் பார்க்குற அனுபவம் எனக்கு கிடைச்சது இல்ல.என் ஊர்ல எல்லாமே தியேட்டர் தான். :)
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//நான் சாத்தூர் தேவி தியேட்டர்ல காலெஜ் படிக்கும் போது ஒரு சாமி படம் பத்திருக்கென், படம் பேரு சொல்ல மாட்டேன். //
அங்க இப்பவும் அந்த படம்தான். final year ல எங்க பசங்களுக்கு ப்ராஜெக்ட் வொர்க் எல்லாம் தேவி தியேட்டர்ல தான் பாஸ். என் நபர்கள் சில பேருக்கு சீசன் டிக்கெட் உண்டு(நான் இல்லைங்க)///
இதுல கொடுமை என்னானா, நம்ம கண்ணுல பட்ரக்கூடதுன்னு நம்ம லெக்சர் பயபுள்ளக ஒழிஞ்சு ஒழிஞ்சு பாக்குமுங்க.
//ஒருவழியாக சிலரை பார்த்துவிட்டு, மதியம் அவர்கள் கொண்டு வந்திருந்த கஞ்சியை(எளிமையான சாப்பாடுதான் ஆனா அந்த ருசிக்கு ஈடு கிடையாது) பகிர்த்து சாப்ட்டிட்டு வீடு வர இரவாகிவிட்டது. //
யோவ்,நீரு பகிர்ந்து சாப்பிட்டதால தான் ருசி இன்னும் அதிகமா தெரிஞ்சு இருக்கு ஓய்....
ILLUMINATI said...
ஆனா கொட்டாயில படம் பார்க்குற அனுபவம் எனக்கு கிடைச்சது இல்ல.என் ஊர்ல எல்லாமே தியேட்டர் தான். :)///
கொட்டாயெல்லம், பெரும்பாலும், கிராமத்துலதான் இருக்கும், நீங்க சிட்டில பொறந்து வளர்ந்த புல்ல போல.
இல்ல பாஸ்.கோவில்பட்டினு ஒரு சின்ன டவுன். :)
//அப்புறம்,சென்னைல சத்யம்,inox ல கூட பத்து ரூபாய்க்கு டிக்கெட் இருக்கு மக்கா.என்ன கிடைக்குறது தான் கொஞ்சம் சிரமம்.இங்கிலீஷ் படத்துக்கு எல்லாம் ஈஸியா கிடைக்கும். :)//
சென்னைல கொறைஞ்ச ரூவா டிக்கட்ட எடுக்குரதுக்கு நெறய ஸ்டண்டு வேலையெல்லாம் செய்யனும், அதுக்கு நம்ம ஒடம்புல தெம்பு இல்ல மாப்பு.
//இதுல கொடுமை என்னானா, நம்ம கண்ணுல பட்ரக்கூடதுன்னு நம்ம லெக்சர் பயபுள்ளக ஒழிஞ்சு ஒழிஞ்சு பாக்குமுங்க.//
ஆமாங்க. அப்ப இருந்து நம்ம லெக்சர் பயபுள்ளக திருந்தவே இல்லியா. சில நேரம் பக்கத்து பெஞ்சுல உக்காந்திருப்பாங்க.
//இல்ல பாஸ்.கோவில்பட்டினு ஒரு சின்ன டவுன். :)//
ilumi where is this place?
யோவ் நொன்ன,அதே கோவில்பட்டி தான்யா...
ILLUMINATI said...
இல்ல பாஸ்.கோவில்பட்டினு ஒரு சின்ன டவுன். :) ///
நீ கரிசக்காட்டு பயளா?. சொல்லவே இல்லை, அங்க கொல்லப்பேரு எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்கய. நம்ம டேமேஜர்(சிரிப்பு போலீசு) கூட அந்த ஊர்தான்.
//யோவ் நொன்ன,அதே கோவில்பட்டி தான்யா... //
yes i know. its near by thrichy to manapparai
//யோவ் நொன்ன,அதே கோவில்பட்டி தான்யா... //
yes i know. its near by thrichy to manapparai
//சென்னைல கொறைஞ்ச ரூவா டிக்கட்ட எடுக்குரதுக்கு நெறய ஸ்டண்டு வேலையெல்லாம் செய்யனும், அதுக்கு நம்ம ஒடம்புல தெம்பு இல்ல மாப்பு.//
தேவை இல்ல தல.என்ன கொஞ்சம் சீக்கிரம் போகணும்.மத்தியான ஷோ டிக்கெட்க்கு காலைல போகணும். :)
ஆனா பிரச்சனை எல்லாம் வராது.ஐநாக்ஸ் ல எல்லாம் ஆள பார்த்துட்டு தான் உள்ளேயே விடுறான். :)
//yes i know. its near by thrichy to manapparai//
அப்பு,நானு சொல்றது சாத்தூர் பக்கம் இருக்குற கோவில்பட்டி.தூத்துக்குடி மாவட்டம்.
ILLUMINATI said...
//சென்னைல கொறைஞ்ச ரூவா டிக்கட்ட எடுக்குரதுக்கு நெறய ஸ்டண்டு வேலையெல்லாம் செய்யனும், அதுக்கு நம்ம ஒடம்புல தெம்பு இல்ல மாப்பு.//
தேவை இல்ல தல.என்ன கொஞ்சம் சீக்கிரம் போகணும்.மத்தியான ஷோ டிக்கெட்க்கு காலைல போகணும். :)
ஆனா பிரச்சனை எல்லாம் வராது.ஐநாக்ஸ் ல எல்லாம் ஆள பார்த்துட்டு தான் உள்ளேயே விடுறான். :)///
பத்து ரூவா மிச்சம் பன்ன ஒரு நாள் லீவு பொடச் சொல்றே?. ரைட்டு.
அப்பு,நானு சொல்றது சாத்தூர் பக்கம் இருக்குற கோவில்பட்டி.தூத்துக்குடி மாவட்டம். //
o anga onnu irukkaaa?
அடடடா....ரொம்பக் கொழப்பாம, யாரு எந்தக் கோவில்பட்டின்னு தெளிவா சொல்லுங்கப்பா!
விருகம்பாக்கத்திலிருந்து அங்க போயி பக்கனும்னா, போக்குவரத்து செலவு ரூ 100 ஐ தாண்டிரும் போல இருக்கேயா?.//
அதுக்கு நீங்க அங்கயே பாக்கலாம் பாஸ் இங்க AC கிடையாது பாஸ்
//பத்து ரூவா மிச்சம் பன்ன ஒரு நாள் லீவு பொடச் சொல்றே?. ரைட்டு.//
லீவ் அன்னிக்கு போறது? :)
ILLUMINATI said...
//yes i know. its near by thrichy to manapparai//
அப்பு,நானு சொல்றது சாத்தூர் பக்கம் இருக்குற கோவில்பட்டி.தூத்துக்குடி மாவட்டம்.///
உங்க லொள்ள கொஞ்சம் நிருத்துங்கயா. சீரியசா காமடி அடிச்சிகிட்டு. இதுக்குதான், ஒரு ஊரு பசங்க ஒரெ இடத்துல இருக்க கூடாதுங்குறது.
பத்து ரூவாயா முக்கியம், அங்க போடுற மேட்டருதான் முக்கியம்!
//o anga onnu irukkaaa?//
ஆமா.எனக்கு தெரிஞ்சு இதே பேர்ல நாலு,அஞ்சு ஊரு இருக்கு மொத்தம்.திருசெந்தூர் பக்கம் கூட ஒண்ணு இருக்கு.
இலுமி நீங்க கோவில்பட்டில எந்த ஏரியா?
ILLUMINATI said...
//பத்து ரூவா மிச்சம் பன்ன ஒரு நாள் லீவு பொடச் சொல்றே?. ரைட்டு.//
லீவ் அன்னிக்கு போறது? :)///
இப்போ புள்ளகுட்டிகாரனயிட்டேன் இலுமி, லீவுனாள்ல நாள்ல போனா வீட்ல பூரிகட்டயால அடிக்கிராங்க.
உங்களுக்கு ஒரு நாள் இந்த நிலமை வராமையா போகப்போவுது?

எனக்கு ஒரு உண்மதெரிஞ்சாகனும்?. இலுமி, ரமெஷ் 2 பேர்ல யார் யாரை னக்கல் பன்றீங்க. யப்பா தங்க முடியலைடா சாமி.
//லீவுனாள்ல நாள்ல போனா வீட்ல பூரிகட்டயால அடிக்கிராங்க.//
இப்ப தான் மனசுக்கு இதமா இருக்கு. :)
அப்புறம்,ரமேஷ்...
நானு திலகர் நகர்ங்க...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடடடா....ரொம்பக் கொழப்பாம, யாரு எந்தக் கோவில்பட்டின்னு தெளிவா சொல்லுங்கப்பா!///
பன்னிகுட்டி, இவைய்ங்க ரெண்டுபேரும் ஒரே ஊரு, பக்கத்து பக்கத்து தெரு, இங்க வந்து உங்க மண்டய காயவக்கிராய்ங்க.
ILLUMINATI said...
//லீவுனாள்ல நாள்ல போனா வீட்ல பூரிகட்டயால அடிக்கிராங்க.//
இப்ப தான் மனசுக்கு இதமா இருக்கு. :)
அப்புறம்,ரமேஷ்...
நானு திலகர் நகர்ங்க...///
ஒனக்கு ஒரு நாள் இதவிட அதிகமா கிடைக்காமையா போகப்போகுது அன்னிக்கு பாக்கலாம்.
யோவ் இலுமி, வக்கனையா பின்னூட்டம் போடுரையே, ஒரு ஓட்டு போட்டியா?
நானு வக்கீல் தெருவுங்க.
இலுமி i have added you id in my gtalk. accept it.
//எனக்கு ஒரு உண்மதெரிஞ்சாகனும்?. இலுமி, ரமெஷ் 2 பேர்ல யார் யாரை னக்கல் பன்றீங்க. யப்பா தங்க முடியலைடா சாமி.//
ரெண்டு பேருமே தான் மச்சி.. :)
//நானு வக்கீல் தெருவுங்க.//
எந்த வக்கீல் தெரு?திருசெந்தூர் கோவில்பட்டில இருக்குற வக்கீல் தெருவா? :P
aamaa
//aamaa//
அப்ப நெருங்கி வந்துட்டீங்க பாஸ். :P
//ஒனக்கு ஒரு நாள் இதவிட அதிகமா கிடைக்காமையா போகப்போகுது அன்னிக்கு பாக்கலாம்.//
நாங்க அதை முடிஞ்ச அளவுக்கு தள்ளிப் போடா பிளான் வச்சுருக்கோம் அய்யா. :P
புசுக்குனு போய் தலைய நீட்ட நான் என்ன வெளியூர் மாதிரி அப்பாவி ஆடா? :)
இலுமி இன்னும் ஓட்டு போடல?. ஏன்யா இப்படி பப்ளிக்கா கேக்க வைக்கிறே? சே.
யோவ் கடைசில பக்கத்து பக்கத்து வூட்டுகரங்களா இருக்க போரீங்க,
யோவ் என்னய்யா நடக்குது இங்க, தக்காளி ஊர் பிரச்சனை பெரும்பிரச்சனையா இருக்கும் போல?
ரமேஷ் சார், கோவில்பட்டி வீரலட்சுமி உங்க ஊரா...இல்லா இலுமி ஊரா சார்?
கீழ்கட்டளை தனன்லட்சுமியில் இன்னும் அஞ்சு ரூபா டிக்கட், பாக்ஸ் கொஞ்சம் காஸ்ட்லி பத்து ரூபா!
எங்கூர்ல ரெண்டு கொட்டாய் இருக்கு, ஆனா பிட்டு படம் தான் போடுவானுங்க...நல்ல படம் போட்டா மட்டும் தான் நான் போவேன்!
Phantom Mohan said...
எங்கூர்ல ரெண்டு கொட்டாய் இருக்கு, ஆனா பிட்டு படம் தான் போடுவானுங்க...நல்ல படம் போட்டா மட்டும் தான் நான் போவேன் ///
நம்பிட்டோம் தல.
எனக்கும் இது போல நிகழ்ந்ததுங்க...
ஒருநாள் பகல் காட்சிக்கு மிக பெரிய திரையரங்குக்கு போனேன் (சிங்கப்பூர் கோல்டன் சுல்தான்.... படம்.... மாயாண்டி குடும்பத்தார் ) வாசலில் ஒருவர் என்னை வரவேற்று ... படத்துக்கா என்றார்... ஆமாம் என்றேன்.
மாயாண்டி குடும்பத்தார் தானே? என்றார்.
ஆமாம் ஏன் கேட்கிறீர் என்றேன்... இரண்டு பேர் இருந்தாதான் படம் போடுவார்களாம் என்றார்.
எனக்கு வியப்பாக இருந்தது.
அந்த மாபெரும் திரையரங்கில்.... மூன்று பேர் மட்டும் (படம் பேட்ட பின் ஒருவர் வந்தார்) தேம்பி தேம்பி அழுதுவிட்டு வந்தோம்.
பகிர்வுக்கு நன்றிங்க.
சி. கருணாகரசு said...

பகிர்வுக்கு நன்றிங்க ///
மாயாண்டி குடும்பத்தார் பத்துட்டு நானும் அழுதுட்டேங்க, வீலகூட கிண்டல் பன்னாங்க.
வருகைக்கு நன்ரி சார்.
மாயாண்டி குடும்பத்தார் பத்துட்டு நானும் அழுதுட்டேங்க, வீலகூட கிண்டல் பன்னாங்க.
வருகைக்கு நன்ரி சார்.
/////////////////
நல்ல படம், முக்கியமா ஐம்பதாயிரம் மொய் செஞ்சிட்டு திரும்பி பார்க்காம வர்ற சீன்! ஹீரோ வேற யாரையாவது போட்டிருந்தா நல்ல இருந்திருக்கும்.
உங்களுக்கு எந்த ஊருன்னு சொல்லவே இல்ல!
Phantom Mohan said...
உங்களுக்கு எந்த ஊருன்னு சொல்லவே இல்ல!//
சொந்த ஊரு தேனிபக்கம் ஒரு கிராமம். சென்னை வந்து 17 வருசமாயிருச்சி.
மங்குனி அவர் வீட்ல கலக்கலா பதிவு ஒன்னு போட்ருக்காரு பருப்பு படிச்சியா?.
Jey said...
மங்குனி அவர் வீட்ல கலக்கலா பதிவு ஒன்னு போட்ருக்காரு பருப்பு படிச்சியா?.
////////////////
அது போர்வர்ட் மெயில் தமிழாக்கம். இப்போ தான் படிக்கிறேன்.
யூ த 100. கெமிஸ்ட்ரி ட்ரைனிங் அனுப்பிரலாம் :)
அடப்பாவிகளா!!! மீ தி 100 !
தெரியாம பன்ன குத்தத்துக்கு எல்லாம் பாவ மன்னிப்பு உண்டு.
பத்து பேர்க்காக படம் ஓட்டுன கதையெல்லாம் எங்கூர்ல நடந்திருக்கு!
வால்பையன் said...
பத்து பேர்க்காக படம் ஓட்டுன கதையெல்லாம் எங்கூர்ல நடந்திருக்கு!///
உங்க ஊர்லயும் அதே கதைதானா?.
வருகைக்கு நன்றி வால்ஸ்.
interestinga iruku vote potuten..
Gayathri said...
interestinga iruku vote potuten..//
நன்றி மேடம், அடிக்கடி வாங்க.
படம் பேரு ரட்சகன் அப்படின்னு பொய் சொல்லுறியா
பிட்டு படம் பார்த்துட்டு விடுற ரவுசை பாரு
முத்து said...
படம் பேரு ரட்சகன் அப்படின்னு பொய் சொல்லுறியா//
உன்மைதான்யா, நம்புயா.
///பிட்டு படம் பார்த்துட்டு விடுற ரவுசை பாரு//
எங்கூரு கொட்டாயில அந்த மாதிரி படம்லாம் போட மாட்டாங்க.
Jey said...
முத்து said...
படம் பேரு ரட்சகன் அப்படின்னு பொய் சொல்லுறியா//
உன்மைதான்யா, நம்புயா.////////////
நம்பமாட்டேன்,எனக்கு தெரியும் நீ விவகாரமான ஆளுன்னு
எங்கூரு கொட்டாயில அந்த மாதிரி படம்லாம் போட மாட்டாங்க./////////////
அப்படி எந்த ஊரு தமிழ் நாட்டில் இருக்கு யார்கிட்ட பொய் சொல்லற
111 for you. 111 th comment.
கொட்டகையில் மண் குவித்து உக்காந்த அனுபவம் பற்றி எழுதாமைக்கு வருத்தங்கள்.
12 பேர் பார்த்த படத்திற்கு 120 பின்னூட்டம் வர செய்வோம்.
me the 112 th
ராம்ஜி_யாஹூ said...
111 for you. 111 th comment.
கொட்டகையில் மண் குவித்து உக்காந்த அனுபவம் பற்றி எழுதாமைக்கு வருத்தங்கள்.
12 பேர் பார்த்த படத்திற்கு 120 பின்னூட்டம் வர செய்வோம்.//
2 பேர்தான் சார், ஆனா 12 டிக்கெட் எடுத்தாதான், படம் போடுவோம்னு சொல்லிட்டாங்க.
கூட்டம் நெறய இருந்ததானே, அடுத்தவங்க மறைக்கிரதுலேர்ந்து தப்பிக்க மண் குவிக்கிற வேலையெல்லாம்.
ரமேஷ் சார், கோவில்பட்டி வீரலட்சுமி உங்க ஊரா...இல்லா இலுமி ஊரா சார்?
athu vera kovilpatti
வாருங்கள் வந்து பாருங்கள்
நண்பர்களை தேடுங்கள்
http://www.valaiyakam.com/
ha,ha,ha,ha,ha.... படத்தை விட நீங்க படம் பாத்த அனுபவம் நல்லா இருக்குது..... செம காமெடி!
என்னமோ பெரிசா எழுதிப்புட்டு பின்னூட்டமில்லன்னு தவிக்குதுங்க!
நீங்க பாத்தீங்களா இல்லாத கொட்டகையும்,பொறக்காத மருமவனையும் வச்சுப் பிண்ணீட்டிங்க பிண்ணி !
சும்மா சொன்னேன்!
நம்ம மக்களுக்குள்ள மண் வாசம் அதான்யா
"என் இனிய தமிழ் மக்களே!
இந்த கொட்டாயி.. கொட்டாயி..னு சொல்றாங்களே..அப்படீனா இன்னா சார்?
சாரி மக்களே, இன்னிக்கு ஆனி கொஞ்சம் அதிகமாயிருச்சி, அதான், பின்னூட்டங்களுக்கு உடனே பதி போடமுடியல.
kannan said...
வாருங்கள் வந்து பாருங்கள்
நண்பர்களை தேடுங்கள்
http://www.valaiyakam.com////
வந்துட்டிருக்கேன் சார்.
Chitra said...
ha,ha,ha,ha,ha.... படத்தை விட நீங்க படம் பாத்த அனுபவம் நல்லா இருக்குது..... செம காமெடி! ///
நன்றி மேடம்.
Thamizhan said...
என்னமோ பெரிசா எழுதிப்புட்டு பின்னூட்டமில்லன்னு தவிக்குதுங்க!
நீங்க பாத்தீங்களா இல்லாத கொட்டகையும்,பொறக்காத மருமவனையும் வச்சுப் பிண்ணீட்டிங்க பிண்ணி !
சும்மா சொன்னேன்!
நம்ம மக்களுக்குள்ள மண் வாசம் அதான்யா
"என் இனிய தமிழ் மக்களே!///
வருகைக்கு நன்றி சார்.
( கொட்டாயும் ,மருமவனும் உண்மைதான் சார்)
பட்டாபட்டி.. said...
இந்த கொட்டாயி.. கொட்டாயி..னு சொல்றாங்களே..அப்படீனா இன்னா சார்? ///
எங்க ஊருல சினிமா போட்டு காமிக்கிற தியேட்டரை, ”கொட்டாயி”னு சொல்வாங்க தலிவரே.
ஜெய், பட்டா கடைக்கு வந்து சேருங்க!
வந்துட்டேன்.
பட்டாபட்டி.. said...
இந்த கொட்டாயி.. கொட்டாயி..னு சொல்றாங்களே..அப்படீனா இன்னா சார்? /////////////
தூக்கம் வரதுக்கு முன்னாடி வருமே அது தான்
கன்டிப்ப தினமும் வருவேன்..உங்களயும் மற்ற பதிவர்களயும் பாக்க பாக்க தான் நானும் எழுதனும்னு ஆசை வருது.
கலக்கல் தொடற என் வாழ்த்துக்கள்.
// Gayathri said...
கன்டிப்ப தினமும் வருவேன்..உங்களயும் மற்ற பதிவர்களயும் பாக்க பாக்க தான் நானும் எழுதனும்னு ஆசை வருது.
கலக்கல் தொடற என் வாழ்த்துக்கள்.///
யாரு பெத்த புள்ளயோ, ரொம்ப அப்புராணி போல.( நாமே இங்க தடவி தடவி எழுதிட்டிருக்கோம், நம்ம எழுத்த பாத்து இந்த புள்ளைக்கு எழுதுற ஆசை வந்துருக்கே, நாம உண்மையிலேயே ஃபிரபல பதிவர்தானோ.)
Jey said...
// Gayathri said...
கன்டிப்ப தினமும் வருவேன்..உங்களயும் மற்ற பதிவர்களயும் பாக்க பாக்க தான் நானும் எழுதனும்னு ஆசை வருது.
கலக்கல் தொடற என் வாழ்த்துக்கள்.///
யாரு பெத்த புள்ளயோ, ரொம்ப அப்புராணி போல.( நாமே இங்க தடவி தடவி எழுதிட்டிருக்கோம், நம்ம எழுத்த பாத்து இந்த புள்ளைக்கு எழுதுற ஆசை வந்துருக்கே, நாம உண்மையிலேயே ஃபிரபல பதிவர்தானோ.)/////////
ஏதோ போனால் போகட்டுமுன்னு நீ கிறுக்கி வைச்சு இருக்கிறதை பாராட்டினால் லந்தை பாரு
Jey said...
// Gayathri said...
கன்டிப்ப தினமும் வருவேன்..உங்களயும் மற்ற பதிவர்களயும் பாக்க பாக்க தான் நானும் எழுதனும்னு ஆசை வருது.
கலக்கல் தொடற என் வாழ்த்துக்கள்.///
யாரு பெத்த புள்ளயோ, ரொம்ப அப்புராணி போல.( நாமே இங்க தடவி தடவி எழுதிட்டிருக்கோம், நம்ம எழுத்த பாத்து இந்த புள்ளைக்கு எழுதுற ஆசை வந்துருக்கே, நாம உண்மையிலேயே ஃபிரபல பதிவர்தானோ.)
//////////////////////////
ராசா அதுக்கு அர்த்தம், இவனுங்களே எழுதும் பொது நமக்கேன்னன்ன்ர ஒரு நம்பிக்கை! உம்ம எழுத்த பாரட்டுறதா தப்பா நெனைக்க வேண்டாம், இதே என் எழுத்தை பற்றி பேசியிருந்தால் சரி, மற்றவர்களுக்கு உபயோகமான, நம்பிக்கை ஊட்டும், மொழி விளையாடும் பதிவு இங்கு என்னைத் தவிர எவனும் எழுதுவதில்லை என்பது நிதர்சனம், உண்மை, சத்தியம்!
தன்னைப் பத்தி தானே புகழ்ந்து எழுதுபவர்கள் ஜாஸ்தி பட்டா, முத்து, பன்னி, jey , மங்குனி, இலுமி, ரமேஷ்....இன்னும் எண்ணிலடங்கா! நான் மட்டும் தான் ஒழுக்கமா எழுதுபவன்!
அட சத்தியமா நம்புங்க!
இன்னைக்கு ஒரு பதிவு போட்டுருக்கேன் பாருங்க..அட அட அட என் கண்ணே பட்டுரும் போல! அப்படி ஓர் கருத்து செறிந்த, உலக தத்துவங்களை உள்ளடக்கக்கிய ஓர் பதிவு என பதிவுலகமே கொண்டாடுகிறது. இந்த பிரபஞ்சத்தில எவனும் எழுதாத ஒரு பதிவுன்னு BBC சொல்லுது!
தயவுசெஞ்சு படிச்சிராதீங்க...உங்களுக்கு புண்ணியமாப்போகும்.
தும் ததா!
ராஜன் said...
தும் ததா! /////////////
தல ஏதோ சின்ன பிள்ள தெரியாம கிறுக்கி வைச்சு இருக்கு இதுக்கு போயி மந்திரிச்சு விட்டுடாதீங்க
ராஜன் said...
தும் ததா!//
ககைசில. நீங்ககளும் ( எதுக்கும் மரியாதையாவே கூப்பிடுவோம்) நம்ம வீட்டுக்கு விருந்தாளியா வந்துடீகளா?. இத நான் எதிர்பாக்கலே.
உங்க பேரகேட்டாவே எனக்கு நொம்பா பயம். அதனாலெ என் வீட்டுக்கு வரும் போது ஆக்ரோசமா வராதீக தல. நான் நொம்ப சாப்டு , அதனால வருன்போத்யே தலல தண்ணி ஊத்திகினு கூலா வாங்க. அடிக்கனும்னா வலிகாம அடிச்சிட்டு போங்க. ஏன்னா என்னோட அடுத்த பதிவு வு அப்படி!!!. உங்க தல வாலுகிட்ட கிட்டதட்ட ஃபெர்மிஷன் வாங்கிட்டேன்.
//முத்து said...
ராஜன் said...
தும் ததா! /////////////
தல ஏதோ சின்ன பிள்ள தெரியாம கிறுக்கி வைச்சு இருக்கு இதுக்கு போயி மந்திரிச்சு விட்டுடாதீங்க///
நுத்து நீ எனக்கு நண்பனா? எதிரியா?... நேரடியா சொல்லு, எதுக்கு இந்த சின்ன புள்ளய கோத்து விடுர?
ஏம்பா ஜெய் , எந்தூரு கொட்டாய்??? (கரக்ட்டா பெற சொல் ) சூபரா எழுதிருக்க
மங்குனி அமைச்சர் said...
ஏம்பா ஜெய் , எந்தூரு கொட்டாய்??? (கரக்ட்டா பெற சொல் ) சூபரா எழுதிருக்க///
என்ன இருந்தாலும், உங்ககிட்ட இருக்கிற நக்கல்,லொல்லு மாதிரி எழுதமடியுமா மங்கு.
என் கிராமத்துல இருக்கிற கொட்டாயி மங்கு. தேனியிலிருந்து அரண்மனைபுதூர் வழியா 8 கி மீ தூரத்துல இருக்கு.
அன்பின் ஜெய்
அருமை அருமை - கொசுவத்தி அருமை - நாங்களும் டெண்டு கோட்டாயில படம் பாத்துருக்கோம் - ஆகா இப்படிப் பாத்தது இல்ல - சூப்பரப்பு
நல்ல நகைச்சுவை நடை - நல்வாழ்த்துகள் ஜெய்
நட்புடன் சீனா
cheena (சீனா) said...
அன்பின் ஜெய்
அருமை அருமை - கொசுவத்தி அருமை - நாங்களும் டெண்டு கோட்டாயில படம் பாத்துருக்கோம் - ஆகா இப்படிப் பாத்தது இல்ல - சூப்பரப்பு
நல்ல நகைச்சுவை நடை - நல்வாழ்த்துகள் ஜெய்
நட்புடன் சீனா///
நன்றி அண்ணே.
Post a Comment