November 27, 2012

நம் தலைமுறை பற்றி...(70 - 80 க்குள் பிறந்தவர்கள்)



70-களில் பிறந்த தலைமுறைகளுக்கு அதற்கு முந்தைய அல்லது அதற்கு பிந்தைய தலைமுறைகளுக்கு கிட்டாத அல்லது சந்தித்திறாத அல்லது இந்த தலைமுறைக்கே உண்டான சிறப்புகள் பற்றி, நேற்றைய பிளஸ் ஒன்றில் ஜாலியாகா பகிர்ந்து கொண்ட கருத்துகள்/பஞ்ச்-கள், பதிவுலக நண்பர்கள் பார்வைக்காக.


Kesava Bashyam VN

 Yesterday 1:25 PM  -  Extended circles
சில நேர்படியான விஷயங்கள் நம் தலைமுறை பற்றி...(70 லிருந்து 80 குல் பிறந்தவர்கள்)

முதலும் கடைசியும் ..சில விஷயங்களில் இந்த தலைமுறை தான்

நாம் தான் தெருவில் இருந்து விளையாடிய கடைசி தலைமுறை..அதே சமயம் நாம் தான் விடியோ விளையாட்டு, கார்ட்டூன் , ஆகிய பார்த்த முதல் தலைமுறை..

வானொளியில் கேட்ட பாடலை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்ததும், அதே போல் வாக்மென்,சாட் ரூம் சந்தித்ததும் நாம்தான்

ஒரு வி சி ஆரை இயக்க தெரிந்த தலைமுறை

நாம் மால் குடி டேஸ், டாம் அண்ட் ஜெர்ரி, ஹீ மேன், டார்ஜான், பார்த்த தலைமுறை

ஒரிஜினலாக தூர்தர்ஷனில் வந்த இராமாயணம் மஹாபாரதம் கண்ட தலைமுறை

காரில் சீட் பெல்ட் இல்லாது ப்யணித்த தலைமுறை

கை பேசி இல்லாமலும் வாழ்ந்த தலைமுறை

நமக்கு ப்ளே ஸ்டேஷ்ன், 99 சானல்கள், ப்ளாட் ஸ்கீரின்,எம் பி 3 ஐ பாட்,கம்யூட்டர்,இண்டர் நெட் இல்லாமல் போனாலும், நாம் தான் கடைசியாக ஒம் வொர்க், டைரியில் பெற்றோர் கையெழுத்து, நூலகத்தில் நேரம் செலவிட்டது, பள்ளீக்கு கட் அடித்து கிரிக்கெட் ஆடியது..

Hide comments

Muralikannan RYesterday 1:31 PM
+5

டிவி பார்க்கும் போது முன்னர் பெற்றோர்களுக்கும்

தற்போது குழந்தைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து அடங்கிப்போகும் தலைமுறை

Muralikannan RYesterday 1:32 PM
+4

தாவணி அணிந்த பெண்களை சைட் அடித்த தலைமுறை

Kesava Bashyam VNYesterday 1:32 PM

ஆனா எத்தனை தலைமுறை வந்தாலும் ஒரு விஷயம் மட்டும் மாறாது :(

Muralikannan RYesterday 1:33 PM
+4

பெற்றோருக்காக இட்லியும் பிள்ளைகளுக்காக பிட்சாவும் சாப்பிடும் தலைமுறை 

Kesava Bashyam VNYesterday 1:35 PM
வீட்டு வாசல் / மரத்தடி மற்றும் முதலில் சலூன் சென்று முடிவெட்டிய தலைமுறை 

Vasudevan TirumurtiYesterday 1:41 PM
+2

//தாவணி அணிந்த பெண்களை சைட் அடித்த தலைமுறை// அதானே! இப்ப ஒரு பாவடை தாவணியைக்கூட பாக்க முடியலை. எல்லாம் சுடிதார்....

ASK Sen..Yesterday 1:43 PM

முகம் கூட பாராமல் நட்பை வளர்த்தோம்..
பேனா நட்பும் இணைய நட்பும் பெற்ற முதல் தலைமுறை.. 

Vasudevan TirumurtiYesterday 1:46 PM
pen friends பத்தி சின்ன வயசில கேள்விப்பட்டு இருக்கேன். ஆச்சரியமா இருக்கும். இப்ப இணையம் அதை ரொம்பவே சுலபமாகிவிட்டது.

ASK Sen..Yesterday 1:47 PM
+2

ஸ்லேட்டு குச்சி, பென்சில், மைக்ரோ டிப் பென்சில், இங்க் பெனா, பால் பாயிண்ட் பேனா, ஜெல் இங்க் பேனா, பெரிய ஃலாப்பி, சின்ன ஃப்லாப்பி, பென் டிரைவ், எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் என அனைத்தையும் பயன்படுத்திய தலைமுறை.. 

Kesava Bashyam VNYesterday 1:53 PM
+3

முக்கியமா அலை பேசிக்கு முன்னாடி வந்த பேஜர் என்னும் கருவியை உபயோகித்த ஒரே தலைமுறை 

Muralikannan RYesterday 2:02 PM
+4

தந்திக்கு பயந்த கடைசி தலைமுறை

Muralikannan RYesterday 2:04 PM
+3

தீபாவளியை அதிகமுறை அதன் சந்தோஷங்களோடு கொண்டாடிய கடைசி தலைமுறை 

Vasudevan TirumurtiYesterday 2:05 PM
வளமான கற்பனை ஐயா உமக்கு!

ASK Sen..Yesterday 2:10 PM

பங்காளிக்கு அர்த்தம் தெரிந்த கடைசி தலைமுறை..

அப்பனும் அம்மாவும் செத்தா மொட்டையடித்த, பங்காளி செத்தா மீசை மளித்த கடைசி தலைமுறை..

ASK Sen..Yesterday 2:13 PM

இறந்தவரை ஐஸ் பெட்டியில் வைத்து வர வேண்டியவருக்காக காத்திருந்த முதல் & கடைசி தலைமுறை.. 

Kesava Bashyam VNYesterday 2:13 PM

// பங்காளி செத்தா மீசை மளித்த கடைசி தலைமுறை //
சில பிரிவுகளில் அடுத்த தலைமுறைகளிலும் தொடர்கிறது / தொடரும் 

Kesava Bashyam VNYesterday 2:14 PM
+1

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்பதையும் , இன்னைக்கே பால் என்பதையும் பார்த்த தலைமுறை . இதயும் சொல்லுங்க சென் :)

ASK Sen..Yesterday 2:15 PM
தொடர்ந்தால் நல்லது..

நாளை என் பிள்ளைக்கு பங்காளிகள் இருப்பார்களா.. இருந்தாலும் உறவு நீடிக்குமா.. நீடித்தாலும் அந்த பந்தம் இருக்குமா... ஐயமே.. :(

ASK Sen..Yesterday 2:20 PM

அன்று.. ஜாதக தோஷம் கழிக்க கோயில் கோயிலா சுத்தினோம்..
இன்று.. ஜலதோஷத்துக்கே ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா சுத்தறோம்..

ஆண்டவனே வைத்தியரா இருந்ததும்..
மருத்துவரே ஆண்டவரா ஆனதும் நம் தலைமுறைக்கே...

ASK Sen..Yesterday 2:22 PM

தோப்புகளில் ஊஞ்சல் கட்டி விளையாடியதும்.. அதே தோப்பையழித்து தீம் பார்க்கில் ராட்டினம் சுற்றியதும் நம் தலைமுறை மட்டுமே.. 

Vasudevan TirumurtiYesterday 2:33 PM
தோப்புகளில் ஊஞ்சல் கட்டி விளையாடியதும்.. அதே தோப்பையழித்து தீம் பார்க்கில் ராட்டினம் சுற்றியதும் நம் தலைமுறை மட்டுமே..//
:-((((

Pattikaattaan JeyYesterday 2:38 PMEdit
+2

போஸ்ட் ஆபீஸ் ஸ்ட்ரைக்குக்கே, மொத்த தொடர்பும் துண்டிச்சிப்போய் துடிச்சிப்போன ஒரே தலைமுறை!

வடகரை வேலன்Yesterday 3:03 PM
+2

நிலக்கரி,  டீசல், எலக்ட்ரிக் ஆகிய மூன்றிலுல் இயங்கிய/இயங்கும் ரயிலைப் பார்த்த தலைமுறை.

Pattikaattaan JeyYesterday 3:08 PMEdit

2காசு 3காசுலேர்ந்து 25 காசு வரையான நாணயங்களை பயன்படுத்திய ஒரே தலைமுறை.

Kesava Bashyam VNYesterday 3:10 PM
+2

// 2காசு 3காசுலேர்ந்து //
எனக்கு  தெரிஞ்சு  அப்போ அஞ்சு காசு மட்டும் தான் செல்லத்தக்கதாக இருந்தது . மற்றவை எல்லாம் (செல்லத்தக்கதாக ) கிடையாதுன்னு நினைக்கிறேன் . சரியா ??

வடகரை வேலன்Yesterday 3:12 PM
+1

நானெல்லாம் ஒரு பைசா காசு ஆசாமி.

6 பைசாவுக்கு பஸ் டிக்கெட் வாங்கி 7 கிமி பிரயாணம் செய்திருக்கிறேன்.

2 பைசாவுக்கு தேங்காயும், 2 பைசாவுக்குப் பொட்டுக் கடலையும் 1 பைசாவுக்கு பச்சைமிளகாயும் வாங்கினால் 4 நபர்களுக்கு சட்னி அரைத்து விடலாம்.

1 கிலோ ஆட்டுக் கறி 5 ரூபாய்.  :)))))
Collapse this comment

Kesava Bashyam VNYesterday 3:16 PM

நீங்க 70 க்கு அப்பறமா ? இல்ல 70க்கு முன்னாடியா அண்ணாச்சி 

Pattikaattaan JeyYesterday 3:16 PM (edited)Edit
+1

திவா அண்ணேன் நான் ரெண்டாப்பு படிக்கும்போது 2&3 காசு கொண்டுபோனது இன்னும் நினைவிருக்குது. வாங்கும் தின்பண்டத்தின் விலை 5 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தது ஆனால் 5 பைசாவை இந்த 2 நாணயங்களாகக் கொடுத்தோம்.

78 / 79 வருசமாயிருக்கலாம் என்ர நினைவு :-))

வடகரை வேலன்Yesterday 3:17 PM
+1

கே7,

64

Pattikaattaan JeyYesterday 3:18 PMEdit
+வடகரை வேலன் அண்ணேன் அப்ப உங்களுக்கு இந்த 2&3 காசு எந்த வருசம் வரை இருந்ததுன்னு நல்லா ஞாபகம் இருக்கும்.

வடகரை வேலன்Yesterday 3:19 PM

தாமரைப்பூப்போட்ட 20 பைசா பித்தளை நாணயம் இருக்கும் அப்போது. அதைக் கொண்டு போய் லேத்தில் குடுத்து மோதிரம் செஞ்சு போட்டுக்குவோம்.

பித்தளை 20 காசுக்கு 50 பைசா வரை கிடைக்கும், எக்சேஞ்சில்
..  

Vasudevan TirumurtiYesterday 3:24 PM
+2

//நானெல்லாம் ஒரு பைசா காசு ஆசாமி.// நானும்.
நல்ல காலம் தம்பிடி பயன்படுத்தினவங்க யாரும் + ல இல்ல போல.... :-)))

Vasudevan TirumurtiYesterday 3:25 PM
+2

ஜே, அஞ்சு காசு போஸ்ட் கார்டு ஆறு காசு ஆனதுக்கு எங்களுக்கு எல்லாம் அதிர்ச்சி! :-))))

Pattikaattaan JeyYesterday 3:29 PMEdit
+1

ஒத்த காசுக்கெல்லாம் அக்கப்போர் பண்ணிருக்கீங்கன்னு சொல்லுங்க :-))))))))))))

வடகரை வேலன்Yesterday 3:30 PM
+2

ஹலோ எங்க வீட்டுல பாக்கெட் மணியா 10 காசு குடுப்பாங்க. அதுல எனக்கு 5 காசு அடுத்த தம்பிக்கு 3 காசு கடைசி தம்பிக்கு 2 காசு.

இதுக்குக் கணக்குக் கேப்பாங்க எங்கம்மா.  அதுதான் கொடுமை.

ASK Sen..Yesterday 3:31 PM

:))))

Vasudevan TirumurtiYesterday 3:32 PM
பாக்கெட் மணியா????? அப்படி எல்லாம் ஒண்ணுமே கேள்விப்பட்டதில்லை அந்த வயசில..

வடகரை வேலன்Yesterday 3:32 PM
+1

பெற்றோர் எங்களை விட்டுட்டு டவுனுக்கோ, அல்லது சினிமாவுக்கோ போகும்போது குடுக்கும் கையூட்டுங்க அது

Pattikaattaan JeyYesterday 3:33 PMEdit

நான் பத்தாவது படிக்கும்போது நாலணா, எட்டணா அளவுக்கு வந்துடுச்சி. ஆனா உங்க வருசத்து 5 பைசாவுக்கான மிட்டாய்தான் எங்க 25 பைசாவுக்கு குடுத்திருப்பாங்க :-)))

Vasudevan TirumurtiYesterday 3:33 PM
இன்ப்லேஷன் ஜே! 

Vasudevan TirumurtiYesterday 3:34 PM

//குடுக்கும் கையூட்டுங்க அது// அதானே! :-)))

Pattikaattaan JeyYesterday 3:34 PMEdit

ஹஹா ஆமாம் :-)

Pattikaattaan JeyYesterday 3:36 PM (edited)Edit
+1

சினிமா பார்க்க கொட்டாயிக்கி போய், மண்குவிச்சி உக்கார்ந்து படம் பார்த்தது, நம்ம தலைமுறையாத்தான் இருக்கும்.

#3லிருந்து 5 இடைவேளை :-)

Vasudevan TirumurtiYesterday 3:38 PM
+2

மலரும் நினைவுகள் போல இன்டரஸ்டிங் சமாசாரம் வேற ஒண்ணுமில்ல... :-))

Pattikaattaan JeyYesterday 3:38 PMEdit

காளியம்மன் திருவிழாவுக்கு, எல் ஆர் ஈஸ்வரி பாட்டை கொலாய்ல போட்டு பட்டையக் கிளப்பின ஒரே தலைமுறை.

#இப்ப அதுக்கு தடை

Pattikaattaan JeyYesterday 3:41 PMEdit

பள்ளியில் அடுத்த வாரம் எடுக்கப் போர வகுப்பு போட்டோவுக்கு, வாரம் முன்பிருந்தே பவுடர் பூசி ரெடியான ஒரே தலைமுறை.....

Kesava Bashyam VNYesterday 3:41 PM
ரெண்டாப்பு படிக்கும் போதே லவ் லெட்டர் கொடுத்த தலைமுறை :)

Vasudevan TirumurtiYesterday 3:41 PM

ஹாஹாஹா!

வடகரை வேலன்Yesterday 3:42 PM

ஏ பாய்ஸ், ஏ கேர்ல்ஸ்னு சிங்குலரையே ப்ளூரலாக அழைத்த தலைமுறை.

Kesava Bashyam VNYesterday 3:42 PM

அரசு பள்ளிகளில் முதன் முதலில் ஆங்கிலத்தை மூன்றாம் வகுப்பில் படித்த தலைமுறை 

Vasudevan TirumurtiYesterday 3:44 PM
வேலயே பாக்க முடியாது போல இருக்கு. கொஞ்ச நேரம் அப்பீட்! அப்புறம் வந்து பாக்குறேன்.

Vasudevan TirumurtiYesterday 3:44 PM (edited)
+1

கேபி நான் நாலாம் க்ளாஸ்தான் ஸ்கூலுக்கே போனேன்!  அப்பதான் abc யே

Pattikaattaan JeyYesterday 3:51 PMEdit
// Kesava Bashyam VN
3:41 PM

ரெண்டாப்பு படிக்கும் போதே லவ் லெட்டர் கொடுத்த தலைமுறை :)  //

ரெண்டாப்புல அ-னா, ஆ-வண்ணாவே எழுதத்த்ரியாத தலைமுறைல லவ் லெட்டரா......

எப்பா மிச்சப் புளுகு கப்பல்ல வருதா.....:-))))
Collapse this comment

Muralikannan RYesterday 3:52 PM
லாமினேட்டட் போட்டோ ஐடி கார்டை முதன் முறையாக வாங்கிய தலைமுறை

வடகரை வேலன்Yesterday 3:52 PM

//ரெண்டாப்பு படிக்கும் போதே லவ் லெட்டர் கொடுத்த தலைமுறை//

லெட்டரைக் கொண்டு குடுக்கும் போஸ்ட்பாய் வேலையைச் சொல்றாரோ?

Kesava Bashyam VNYesterday 3:54 PM

// எப்பா மிச்சப் புளுகு கப்பல்ல வருதா.....:-)))) //
லவ் பண்ண  ஆரம்பிச்ச என்று படிக்கவும் :)) 

Muralikannan RYesterday 3:58 PM
+2

சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்த கடைசி தலைமுறை

ASK Sen..Yesterday 3:59 PM
+2

கரெண்ட் இல்லாம..
40 வாட்ஸ் பல்பு..
டியூப் லைட்..
எமர்ஜென்ஸி லைட்..
மீண்டும் கரெண்ட் இல்லாம..

இருக்கும்.. ஒரே தலை(யெழுத்து)முறை நாம் மட்டுமே...

Kesava Bashyam VNYesterday 4:00 PM

யாரவது வெளிநாட்டுக்கு போனாலோ / வந்தாலோ உற்றார் உறவினரோடு விமான நிலையத்துக்கு போய் டாட்டா காட்டும் தலைமுறை  

Pattikaattaan JeyYesterday 4:03 PMEdit
+2

+ASK Sen.. ரூட்டை மாத்திடாதீங்க.... ராசி பார்த்தா அப்புறம் அவர் கமெண்ட் போட, நீங்க கமெண்ட் போட...நீங்க போட....அவர்போடனு இந்த ஜாலிப் பிளஸ் ரணகளப் பிளஸா மாறிடும் :-)))))))))))

Pattikaattaan JeyYesterday 4:06 PMEdit
+1

+Kesava Bashyam VN உங்களுக்கு இப்பதான் 20 முடிஞ்சி 21 வயசு ஆகுதா???

ப்லைட்ல உற்றார் உறவினர், வழியனுப்புதல்னு அட்வான்சா பேசுறீங்க.

நாங்க எல்லாம் எட்டாப்பு படிக்கும் போது மருதைக்கி ஸ்கூல் டூர் போனப்ப, ஒரு மணி நேரம் காத்திருந்து ஏர்போர்ட்ல ப்லைட் தரை எறங்குனத கிட்டக்க இருந்து பார்த்த தலைமுறை :-)))

10 ஸ்டெப் பேக். 25 வயசுக்கு கீழே இருக்கிறவங்க இந்தப் பிளஸ்க்கு தடை :-)))
Collapse this comment

Kesava Bashyam VNYesterday 4:07 PM
உறவினர் வெளிநாடு போன போது  குடும்பத்தோட போய்  டாட்டா காமிச்சோம் . அதை தான் நான் சொல்றேன்
am 35+

Pattikaattaan JeyYesterday 4:09 PMEdit
ஸ்கூல் காலேஜ்னு இப்ப இருக்கிற பேண்ட் மேரி இல்லாதபெல்ஸ் போட்ட தலைமுறை.

(நான் என் அண்ணனுத சுருக்கி தச்சி போட்ட அனுபவம்)

Pattikaattaan JeyYesterday 4:10 PMEdit
+2

+Kesava Bashyam VN அண்ணேன் வெல்கம் டு தெ கிளப். யு ஆர் அல்லவ்டு டு கமெண்ட் இன் திஸ் பிளஸ் :-))))

(இந்தப் பிளஸ் ஓனரோட நிலமை இப்படி ஆகிப்போச்சே...:-))) )

ASK Sen..Yesterday 4:11 PM

அண்ணனோட பேண்ட் சட்டை முதல் புத்தகம் வரை பயன்படுத்திய தலைமுறை..

Muralikannan RYesterday 4:12 PM

பிராய்லர் கோழியை முதன் முதல் சுவைத்த தலைமுறை

Pattikaattaan JeyYesterday 4:13 PMEdit

தொழுவத்து மூலையில், கோழி வச்ச முட்டையை திருடிக் குடிச்ச  தலைமுறை.... 

Vasudevan TirumurtiYesterday 4:14 PM

மூத்த அண்ணனுக்கு தெச்சதை மூணாவதா நான் போட்டு இருக்கேன்!

Pattikaattaan JeyYesterday 4:14 PMEdit

கம்பங்கூலும் கருவாட்டுக் குழம்பு குழைச்சி அடிச்ச கடைசி தலைமுறை 

Muralikannan RYesterday 4:14 PM
+2

பத்தாப்பு லீவில் டைப்ரைட்டிங் கிளாஸ் போன கடைசி தலைமுறை

ASK Sen..Yesterday 4:15 PM

நீங்க பேசிகிட்டு இருங்க, நான் போய் கால் வயித்துக்கு கஞ்சி ஓத்திகிட்டு வரேன்..

இப்படிக்கு,
சென் மொபைல்..

Muralikannan RYesterday 4:15 PM

மார்கழி மாதம் காலை 4 மணிக்கு  கோவிலுக்கு உண்ட கட்டி வாங்க நண்பர்களோடு போன தலைமுறை

Kesava Bashyam VNYesterday 4:16 PM

// மார்கழி மாதம் காலை 4 மணிக்கு  கோவிலுக்கு உண்ட கட்டி வாங்க நண்பர்களோடு போன தலைமுறை //
புதிய தலைமுறை பசங்களும் மார்கழி மாதம் காலை 4 மணிக்கு கோவிலுக்கு போறாங்க சார் :)

Pattikaattaan JeyYesterday 4:16 PMEdit

4.15க்கு லஞ்ச்???? என்ன இம்புட்டு லேட் செந்தில் !!!

முதல்ல வயித்துக்கு ஈஞ்சிட்டு வாங்க :-))

Muralikannan RYesterday 4:18 PM

கூட்டுக்குடும்பத்தை பார்த்த கடைசி தலைமுறை

Pattikaattaan JeyYesterday 4:18 PMEdit

சுண்டலுக்காக மார்கழி மாச அதிகலை குளிரிலும் பஜனைக் கோஷ்டியோட சட்டை போடாத, தெரு சுத்தி வந்த தலைமுறை.

#முதல்லேர்ந்து கூட சுத்துனாத்தென் சுண்டல் கிடைக்கும் :-))

Pattikaattaan JeyYesterday 4:19 PMEdit
+1

// கூட்டுக்குடும்பத்தை பார்த்த கடைசி தலைமுறை  //

ச்சே ஜஸ்ட்டு மிஸ்டு, நான் டைப்பும்போதே போட்டுட்டீங்க ள்:-)))))

Muralikannan RYesterday 4:19 PM
+2

நண்பர்களே

மின்சாரம் தடைபட்டு விட்டது. யு பி எஸ் அனத்துகிறது.

அவங்கவங்க வீட்டுக்கு அவரக்காய் சோத்துக்கு

வர்றேன்.

Muralikannan RYesterday 4:20 PM

ஜெய் கலக்குறீங்க

Pattikaattaan JeyYesterday 4:31 PMEdit

முரளி அண்ணேன் இந்தமாதிரி ஃப்லோவுல பட்டையக் கிளப்புறதுல நான் உங்களுக்கு கடேசி சிஸ்யன். போய்ட்டு வாங்க நைட் தொடரலாம். பழசெல்லாம் ஞாபகம் வந்தாச்சி இன்னிக்கி :-))))))))))

Vasudevan TirumurtiYesterday 4:33 PM

ஜே, ப்ரொபைல் படத்துல இருக்கிற 20 வயசு இளைஞர் உங்க மகனா? :-))))

Srinivasa RaghavanYesterday 4:39 PM
+2

இது மாதிரி ப்ளஸ் விட முடிஞ்ச ஒரே தலை முறை...:-))

Vasudevan TirumurtiYesterday 4:42 PM

:-))

Kesava Bashyam VNYesterday 4:48 PM

பெரியவங்க பேச்சை தட்ட முடியாமலும் சின்ன பசங்க பேச்சை புறக்கணிக்க முடியாமலும் பாசத்துக்கு கட்டு பட்ட தலைமுறை 

Kesava Bashyam VNYesterday 4:51 PM

பெண் அடிமைத்தனத்தை ஒழித்து அவர்களுக்கே அடிமையான தலைமுறை :))
இதை யாரவது மறுத்து பேசுங்க . வீட்டுல அவங்களுக்கு நிச்சயமா பூஜை இருக்குது :))

Pattikaattaan JeyYesterday 5:02 PMEdit
+1

// ஜே, ப்ரொபைல் படத்துல இருக்கிற 20 வயசு இளைஞர் உங்க மகனா? :-))))  //

நான் மார்கண்டேயன் மேரி அப்பவும் இப்பவும் அதே இளைமை தேகத்தோட இருக்கேன் :-)))))

Pattikaattaan JeyYesterday 5:03 PMEdit
+1

அந்தப் படம் 2005-ல எடுத்தது :-)))

Pattikaattaan JeyYesterday 5:06 PM (edited)Edit
+1

குழந்தையா  சேட்டை செஞ்சி அடிவாங்குன தலைமுறை,
இப்ப குழந்தக சேட்டை செஞ்சா ரசிக்கிற அதே தலைமுறை .

Pattikaattaan JeyYesterday 5:07 PMEdit

குச்சி ஐசுக்கு போராடுன தலைமுறை,
கோன் ஐஸை அன்போடு வாங்கிதர தலைமுறை

Pattikaattaan JeyYesterday 5:08 PMEdit

ஒரு வயசு கூடனாலும் அண்ணன் , அக்கானு கூப்பிட்ட கடேசி தலைமுறை...

Pattikaattaan JeyYesterday 5:08 PMEdit

பஸ்லயும், சைக்கிள்லேயும் அலுவலகம் போன தலைமுறை

Kesava Bashyam VNYesterday 5:09 PM

// கோன் ஐஸை அன்போடு வாங்கிதர தலைமுறை//
இன்னுமா வாங்கி தரீங்க . என் பையனுக்கு நான் வாங்கி தரவேண்டாம் . போய் அவனா வாங்கிண்டு இன்பர்மேசன் மட்டும் கேட்கும் தலைமுறை 

Pattikaattaan JeyYesterday 5:11 PMEdit

ஹஹஹா. ரைட். அது ஃப்லோவுக்கு நல்லா இருந்துச்சு :-)))

இன்னும் தனியாப்போய் ஐஸ் வாங்குற வயசு வரலைனு நினைக்கேன். என்கிட்டதான் கேக்குறாங்க. 6 & 3 1/2

Kesava Bashyam VNYesterday 5:12 PM

my son 5 1/2:

Kesava Bashyam VNYesterday 5:13 PM

சில சமயத்துல  பையன் அம்மாவோட கூட்டணி வெச்சிண்டு இந்த மாதிரி பண்ணுவான் 

Pattikaattaan JeyYesterday 5:14 PMEdit

பையன்னா அம்மாதான்....:-)))

Kesava Bashyam VNYesterday 5:15 PM

வேலை முடியறவரைக்கும் தான் அப்பா . அப்பறம் அப்பாவுக்கு பை தான் :)

Pattikaattaan JeyYesterday 5:16 PMEdit

மூனாங்கிளாஸ் வரையிலும் ஒத்த சிலேட்டோட போன கடைசி தலைமுறை

Pattikaattaan JeyYesterday 5:17 PMEdit

ஆமா நாம பெரும்பாலும் கறிவேப்பிலை மாதிரிதான். ஆனால் பொண்ணு நம்மகிட்டதான் ஒட்டிக்கும். :-)))

Kesava Bashyam VNYesterday 5:17 PM

பல்பத்தை பார்த்த கடைசி தலைமுறை ( பலகையில் எழுதும் எழுதுகோல் ) . அப்படியே பசிச்ச அதை கடிச்சு  தலைமுறை கூட :)

Kesava Bashyam VNYesterday 5:19 PM
+3

வகுப்பில் ஆசிரியரிடம் அடி வாங்கிய கடைசி தலைமுறை என்று கூட சொல்லலாம் , (இப்போ எல்லாம் குழந்தையை அடிச்சா  எல்லோரும் சண்டைக்கு போயிடறாங்க - என்னையும் சேர்த்துதான் )

Pattikaattaan JeyYesterday 5:20 PMEdit

ஊர்த்திருவிழால வில்லுப்பாட்டும், திரையில ரெண்டு கருப்பு&வெள்ளை படங்களும் பார்த்த கடைசி தலைமுறை.

#இப்ப ரிக்கார்ட் டான்ஸ் லெவலுக்குப் போயிருச்சி

Pattikaattaan JeyYesterday 5:21 PMEdit

வாத்தியாரை காக்கா பிடிக்க டீ வாங்கிதந்த தலைமுறை

Pattikaattaan JeyYesterday 5:23 PMEdit

சித்திரை 1க்கும், களியம்மன் பொங்கலுக்கும் மஞ்சள் தண்ணிர் விரட்டி விரட்டி மாமன் மச்சான்ஸ் மேல ஊத்தின தலைமுறை....

( முறை பெண்களும் அடங்கும்).... இப்ப காணோம்

Pattikaattaan JeyYesterday 5:28 PMEdit
சென்னைக்கி போய்ட்டு ஊர்வந்தவங்க கிட்ட சினிமா நடிகரைப் பாத்தியாணு கேட்ட அப்பாவி தலைமுறை....

ஒரு நடிகரையும் பார்க்கமலே ஆமாமாம், கிட்டக்க பார்த்தேன், ரோட்ல போயிட்டிருந்தாரு, அங்கனயெல்லாம் சாதாரனமா ரோட்ல நடந்து போவாங்கனு அள்ளிவிட்ட அதே தலைமுறை...

Pattikaattaan JeyYesterday 5:29 PM (edited)Edit

பாவைகூத்தும், சைக்கிள் சர்க்கசும் பார்த்த கடைசி தலைமுறை...

Pattikaattaan JeyYesterday 5:31 PMEdit

கில்லி, கோலி,டயர்,பம்பரம்னு பட்டயக் கிளப்பின கடேசித் தலைமுறை.

Pattikaattaan JeyYesterday 5:33 PMEdit
அம்புலிமாமாவும், ராணி காமிக்சும், பாலமித்ராவும் படிச்ச கடேசித் தலைமுறைனும் சொல்லிக்கலாம்.

#எம்பசங்களுக்கு இப்ப சேகரிச்சிகிட்டு இருக்கேன்.

Pattikaattaan JeyYesterday 5:34 PMEdit

அப்பா அம்மாவுக்கும் நண்பர்களுக்கும் கடிதாசி எழுதுன கட்டக்கடேசி தலைமுறை :-)))

Pattikaattaan JeyYesterday 5:38 PMEdit

நம்பர் சுழட்டி போன் பண்ண கடேசித் தலைமுறை.

கருப்பு& வெள்ளை டிவி பார்த்த முதலும் கடைசியுமான தலைமுறை.

Srinivasa RaghavanYesterday 5:44 PM

இலங்கை வானொலி கேட்ட கடைசி தலைமுறை.:-))

Srinivasa RaghavanYesterday 5:44 PM
+2

டிவி சரியா வரவில்லை என்று ஆண்டனாவை திருப்பிய கடைசி தலைமுறை..:-))

ASK Sen..Yesterday 5:50 PM

அடுத்த வீட்டு கேபிளில் ஊக்கு போட்டு படம் பார்த்த தலைமுறை.. 

Devanathan RYesterday 5:54 PM
+2

We belong to that generation using Type writer ( Remington) for English Text summary, saw latter Electronic type writer ( Godrej) and now Computer. we can say many more... Pazhayana Kazhithalum Puthiyana puguthalum.......

ASK Sen..Yesterday 6:44 PM

எங்க ஊருல “நல்லா வாழ்ந்து கெட்ட குடும்பம்”ன்னு சொல்லுவாங்க..

அது போல.. இங்க பேசினதல்லாம் பார்க்கும் போது...

சாதாரணமா இருந்து.. நல்ல நிலைக்கு வந்து.. நிறைய மாற்றங்களை கொண்டுவந்து / பார்த்து / அனுபவித்து.. வாழ்ந்து.. கெடுத்து.. குட்டிச்சுவரான ஒரு தலைமுறை நம் தலைமுறை மட்டுமே.. என தோண்றுகிறது..

:(((
Expand this comment »

Pattikaattaan JeyYesterday 6:47 PMEdit
// எங்க ஊருல “நல்லா வாழ்ந்து கெட்ட குடும்பம்”ன்னு சொல்லுவாங்க..  //

ஒவ்வொரு தலைமுறையிலும் சில குடும்பங்கள் கீழே போவதும், புதிதான பலகுடும்பங்கள் மேழே வருவதும்னு, இது தலைமுரைகள் தாண்டின, ஒரு தொடர் சுழற்ச்சியாத்தான் எனக்கு படுது +ASK Sen.. அண்ணேன்.

ASK Sen..Yesterday 6:50 PM

+Pattikaattaan Jey  அது சும்மா தோணினது சொன்னேன்... :)

ஆனா நம் தலைமுறையில் தான் நிறைய சீர்கேடுகளைச் செய்தோமோன்னு ஒரு சுமால் குற்றவுணர்ச்சி... :(

Pattikaattaan JeyYesterday 6:54 PMEdit
+1

 சுற்றுச்சூழல் தொடர்பான உச்சபட்ச சீர்கேடுகளை இந்த பூமிக்கு தந்த தலைமுறை.

#நன்றி ASK Sen :-)

Pattikaattaan JeyYesterday 6:55 PMEdit
+1

காடுகளை கன்னாபின்னானு அழித்த தறுதலைத் தலைமுறை.

(தறுதலை-க்கி மன்னிச்சூ..)

Pattikaattaan JeyYesterday 6:58 PMEdit
கறிசோறுக்கு நல்லநாள் எதிர்பார்த்து காத்திருந்த தலைமுறை.

Pattikaattaan JeyYesterday 6:59 PMEdit

அடுப்பூதுன அம்மனிகளின் கடைசித் தலைமுறை

Pattikaattaan JeyYesterday 7:00 PM (edited)Edit

வீட்டில் புகை கூண்டு கட்டிய கடைசி தலைமுறை

Pattikaattaan JeyYesterday 7:01 PMEdit
+1

கல்யாணங்காட்சி, நல்லது,பொல்லதுனு எல்லாத்துக்கும் சரக்கு பார்ட்டிய கட்டாயமாக்குன தலைமுறை.




Muralikannan R9:57 AM
வேப்பங்குச்சியில் ஆரம்பிச்சு, சாம்பல், கோபால் பல்பொடி,  கோல்கேட் பவுடர், பேஸ்ட், ஜெல் அப்புறம் மவுத் வாஷ் வரை பரிணாம வளர்ச்சி அடைந்த கடைசி தலைமுறை
Muralikannan R9:58 AM
லைப்பாயில் ஆரம்பித்து ஆக்ஸ் வரை கண்ட கடைசி பரம்பரை
Muralikannan R9:59 AM
ஷாம்பூ என்றாலே சினிமா நடிகைகள் போடுவது என்று நினைத்து பின் 1 ரூ ஷாம்பு பாக்கெட் , ஹேர் கண்டிசனர் என வளர்ந்த தலைமுறை
Muralikannan R10:04 AM
முதன்முறையாக டார்டாய்ஸ் கொளுத்தி, பின் கொசு மேட், லிக்விடேட்டர் என கொசுக்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைத்த கடைசி தலைமுறை


61 comments:

Sivakumar said...

இப்படியும் பதிவு போடலாமா? என்ன ஒரு டெக்குனிக்கு.

Sivakumar said...


திட்டுறதை எல்லாம் திட்டிட்டு கடைசில ஸ்மைலி போடும் தலைமுறை. ' கண்ணுல தண்ணி வர சிரிச்சேன்', அண்ணே :))))))))))))) போன்ற அத்யாவசிய மாமரங்களை வானுயர வளர்த்த தலைமுறை......!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒலகத்துலயே இப்படி ஒரு பதிவ இப்பதான் மொதோ தடவையா பாக்கிறேன்..... நீ நல்லா வருவடா.....!

பட்டிகாட்டான் Jey said...

// ! சிவகுமார் ! said...
இப்படியும் பதிவு போடலாமா? என்ன ஒரு டெக்குனிக்கு. //

பதிவு எப்படியும் போடலாம் மச்சி...

மலரும் நினைவுகளை கிளரும் பிளஸ் :-)))

பட்டிகாட்டான் Jey said...

// ! சிவகுமார் ! said...

திட்டுறதை எல்லாம் திட்டிட்டு கடைசில ஸ்மைலி போடும் தலைமுறை. ' கண்ணுல தண்ணி வர சிரிச்சேன்', அண்ணே :))))))))))))) போன்ற அத்யாவசிய மாமரங்களை வானுயர வளர்த்த தலைமுறை......!! //

மெட்ராசூ, இந்த கமெண்ட் அந்த பிளஸ்ல போட்டுட்டேன்.... இப்படிக்கினு உன்பேர்தான் போட்ருக்கேன். எனக்கு தோணவே இல்லையே.... ஆனாலும் செம கமெண்ட் மச்சி :-))))

பட்டிகாட்டான் Jey said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒலகத்துலயே இப்படி ஒரு பதிவ இப்பதான் மொதோ தடவையா பாக்கிறேன்..... நீ நல்லா வருவடா.....! //

அது வந்து பன்னி, சுமார் 212.645 டிகிரி கோணத்துல தலையை வலது பக்கமா சாய்ச்சி நின்னு யோசிச்சா இந்த மாதிரி ஐடியா எல்லாம் வரும்...

நீயும் ட்ரை பண்ணிப் பாறேன் பன்னி :-)))

Sivakumar said...

பதிவுலகின் நிரந்தர நம்பர் ஒன் ப.ரா.வுக்கே ஐடியாவா? என்றா இந்த ஊரு. என்றா இந்த குளம். நீதி செத்து போச்சுடா பசுபதி!!!

Sivakumar said...

நுண்ணரசியல் கமன்ட் என நம்பும்போது அன்பாகவும், அன்பாக கமன்ட் போட்டுள்ளனர் என்றெண்ணும்போது அரசியலும் கலக்கும் ராஜதந்திரிகள் ப்ளஸ்ஸில் பரவலாக உலவும் தலைமுறை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// பட்டிகாட்டான் Jey said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒலகத்துலயே இப்படி ஒரு பதிவ இப்பதான் மொதோ தடவையா பாக்கிறேன்..... நீ நல்லா வருவடா.....! //

அது வந்து பன்னி, சுமார் 212.645 டிகிரி கோணத்துல தலையை வலது பக்கமா சாய்ச்சி நின்னு யோசிச்சா இந்த மாதிரி ஐடியா எல்லாம் வரும்...

நீயும் ட்ரை பண்ணிப் பாறேன் பன்னி :-)))////////

போட்டோவுல பாத்தா மூக்கு ஒண்ணும் அவ்வளவு பொடப்பா தெரியலையே......?

பட்டிகாட்டான் Jey said...

// ! சிவகுமார் ! said...
பதிவுலகின் நிரந்தர நம்பர் ஒன் ப.ரா.வுக்கே ஐடியாவா? என்றா இந்த ஊரு. என்றா இந்த குளம். நீதி செத்து போச்சுடா பசுபதி!!! //

எலேய் பன்னி, உனக்கும் மெட்ராசுக்கும் என்னாங்கடா டீலிங்கு??!!!

ராஸ்க்கல்ஸ் ஒருத்தருக்கொருத்தர் சப்போர்ட் பண்ணி ஆங்காங்கே போஸ்டர் ஒட்டிகிட்டு திரியுரீங்க... அதுலயும் இந்த மெட்ராசூ பயபுள்ளை நீ குடுத்தக் காசுக்கு மேல கூவுதான்...

இ.பொ.பா.கு.சா. :-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
பதிவுலகின் நிரந்தர நம்பர் ஒன் ப.ரா.வுக்கே ஐடியாவா? என்றா இந்த ஊரு. என்றா இந்த குளம். நீதி செத்து போச்சுடா பசுபதி!!!///////

தென்றா இது...... எலேய் சின்ராசு கட்ரா வண்டிய...... கூட்டுரா பஞ்சாயத்த.......

Sivakumar said...


2012 இல் பட்டிக்காட்டான் என்றொருவர் ப்ளஸ் பஸ்ஸின் ஸ்டியரிங்கை(இலக்கணத்தை) சடாரென திருப்பி ஆத்துக்குள் சொருகுவார் என்று எதிர்பார்க்காத தலைமுறை.

பட்டிகாட்டான் Jey said...

// போட்டோவுல பாத்தா மூக்கு ஒண்ணும் அவ்வளவு பொடப்பா தெரியலையே......? //

எலேய் ஒம்போட்டாவ நீயே எம்லே பாக்கே, அப்படியே பாத்தாலும் அந்த கருப்புக் கண்ணாடியை கழட்டிட்டு பாருலே...:-)))

பட்டிகாட்டான் Jey said...

மெட்ராசூ நீ கலக்குலே, இலஸ்ல கமெண்ட்ஸ் போடாம எல்லாத்தையும் படிச்சிகிட்டு திரியுற பயலாட்டம்ல தெரியுது....

கோல்கேட்டா ஃபாலோஅப் பண்ரே போல :-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////! சிவகுமார் ! said...

2012 இல் பட்டிக்காட்டான் என்றொருவர் ப்ளஸ் பஸ்ஸின் ஸ்டியரிங்கை(இலக்கணத்தை) சடாரென திருப்பி ஆத்துக்குள் சொருகுவார் என்று எதிர்பார்க்காத தலைமுறை.//////

யாரு ஆத்துக்குள்ள?

Sivakumar said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////! சிவகுமார் ! said...
பதிவுலகின் நிரந்தர நம்பர் ஒன் ப.ரா.வுக்கே ஐடியாவா? என்றா இந்த ஊரு. என்றா இந்த குளம். நீதி செத்து போச்சுடா பசுபதி!!!///////

தென்றா இது...... எலேய் சின்ராசு கட்ரா வண்டிய...... கூட்டுரா பஞ்சாயத்த.......//

பான் கி மூன்....மேக்கி நூடுல்ஸ் சாப்புட்டது போதும். ஆலமரத்தடில உக்காந்து குட்டப்பஞ்சாயத்து பண்ற நேரமாச்சுடா. கெளப்புடா அந்த போயிங் 777 ஐ!!

Sivakumar said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////! சிவகுமார் ! said...

2012 இல் பட்டிக்காட்டான் என்றொருவர் ப்ளஸ் பஸ்ஸின் ஸ்டியரிங்கை(இலக்கணத்தை) சடாரென திருப்பி ஆத்துக்குள் சொருகுவார் என்று எதிர்பார்க்காத தலைமுறை.//////

யாரு ஆத்துக்குள்ள?//

தி சோ கால்ட் கூவம்தேன்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிரிச்சி சிரிச்சி வயறு வலிச்சிடுச்சி......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கல் பதிவு நண்பா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நச் பதிவு தல, எப்படி இப்படியெல்லாம்?

பட்டிகாட்டான் Jey said...

// சிவகுமார் ! said...

2012 இல் பட்டிக்காட்டான் என்றொருவர் ப்ளஸ் பஸ்ஸின் ஸ்டியரிங்கை(இலக்கணத்தை) சடாரென திருப்பி ஆத்துக்குள் சொருகுவார் என்று எதிர்பார்க்காத தலைமுறை. //

இவன் கம்பெனி ரகசியத்தி யெல்லாம் அவுத்துவிட்ருவாம்போலயே அவ்வ்வ்வ் :-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவு அருமை... தொடரவும்!

Sivakumar said...

//பட்டிகாட்டான் Jey said...
// போட்டோவுல பாத்தா மூக்கு ஒண்ணும் அவ்வளவு பொடப்பா தெரியலையே......? //

எலேய் ஒம்போட்டாவ நீயே எம்லே பாக்கே, அப்படியே பாத்தாலும் அந்த கருப்புக் கண்ணாடியை கழட்டிட்டு பாருலே...:-)))//

எம்லே பாக்கவா???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் பதிவு தல, எப்படியெல்லாம் யோசிக்கிறீங்கப்பா....

Sivakumar said...

அடடே...அருமையாக இருக்கிறதே. நன்றிகள். வாழ்த்துகள். மீண்டும் நன்றிகள். மறுபடியும் வாழ்த்துகள்.

பட்டிகாட்டான் Jey said...

பன்னிப்பய அக்கோண்ட யாரோ ஹெக் பண்ணிட்டாங்க போல, டெம்ப்லேட் கமெண்ட் வருது.

இல்லைனா இது மாதிரி கமெண்ட்ஸ் போடுற அண்ணேன்ஸை வமொஉக்கு இழுக்குதானா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிரிக்க வைக்கும் பதிவு (த.ம.1, இண்ட்லி 2, உடான்ஸ் 2)

Sivakumar said...


என்ன தவம் செய்தனை யசோதா. இந்த வருஷம் இப்படி ஒரு எழுச்சி பதிவரை காண!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடேடே இது ரொம்ப எளிதா இருக்கே (த.ம.2)

பட்டிகாட்டான் Jey said...

மெட்ராசூ அக்கோண்டையும் யாரோ ”ஹக்” பண்ணிட்டாங்க

பட்டிகாட்டான் Jey said...

இன்னும் இன்னும் ரொம்ப எதிர்பார்க்கப்படுகிறது உங்களிடம்...

கமெண்ட்ஸ் செஞ்சுரி போட்ருங்க மக்காஸ் :-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///! சிவகுமார் ! said...

என்ன தவம் செய்தனை யசோதா. இந்த வருஷம் இப்படி ஒரு எழுச்சி பதிவரை காண!! //////

பதிவர் எழுச்சி, இணைய புர்ச்சி
மக்கள் மகிழ்ச்சி, அல்லக்கை அதிர்ச்சி
நமக்கு தெளிர்ச்சி....

Sivakumar said...

Actually I was stunned to read this article. Its a medical miracle and supreme debacle. It takes lot of intellectual immunity and intellitgent community to create the post like this which requires amazing capability and simplicity.

From the heart and lungs I admire this blog from Mr.Pattikaattan. It can be considered as the 'Post of the century.

Its written with so much of dignity and madras city.

Keep Rocking Sir.

- Barack Obama,
Light House.

பட்டிகாட்டான் Jey said...

// பதிவர் எழுச்சி, இணைய புர்ச்சி
மக்கள் மகிழ்ச்சி, அல்லக்கை அதிர்ச்சி
நமக்கு தெளிர்ச்சி.... //

இதை படித்தவர்களுக்கு ஏற்படும் ”குளிர்ச்சி”.

கர்ர்ர் த்தூ பன்னிப்பலே.

பட்டிகாட்டான் Jey said...

அடடே வாசகர் வட்டம் ஒயிட் பேலஸ் வரை போயிந்தே....

என்னே தவம் செய்தனை..

பதிலை தனி மின்னஞ்சல்-ல ஒபாமா அண்ணேனுக்கு அனுப்பிட்டு அதன் பிரதியை தனிப்பதிவா போட்டுடலாம்.

Sivakumar said...

//பட்டிகாட்டான் Jey said...
// பதிவர் எழுச்சி, இணைய புர்ச்சி
மக்கள் மகிழ்ச்சி, அல்லக்கை அதிர்ச்சி
நமக்கு தெளிர்ச்சி.... //

இதை படித்தவர்களுக்கு ஏற்படும் ”குளிர்ச்சி”.

கர்ர்ர் த்தூ பன்னிப்பலே.//

ஜெய் பதிவால் இதயத்தில் நெகிழ்ச்சி.

இணையமெங்கும் சுழற்சி.

உதய நேரத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி.
உறங்காத கண்ணில் அயற்சி.

கண்ணில் தண்ணி வந்து அடைச்சி.
இதுக்கு மேல கவித வர்ல. அடச்சீ!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல பதிவு, பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். (தமிழ் மணம் -0, இண்ட்லி -0, உடான்ஸ் -0, பதிவ மொதல்ல திரட்டில சப்மிட் பண்ணுடா மூதேவி)

Sivakumar said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல பதிவு, பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். (தமிழ் மணம் -0, இண்ட்லி -0, உடான்ஸ் -0, பதிவ மொதல்ல திரட்டில சப்மிட் பண்ணுடா மூதேவி)//

மூதேவி என்பது பெண்பால். மூதேவன் என்று அழைப்பதே பொருட்பிழையை தவிர்க்கும் வேந்தே!!

நாய் நக்ஸ் said...

என்னாலே நடக்குது இங்க....பாவம் ஜெய்...
ஏன்யா அவர ரோம்ப கஷ்டப்பட்டு ஒரு பதிவை தேத்தி இருக்கார்....
உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா...???
நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா ....
படு பாவிங்க....
போங்கையா...போய் பொழப்ப பாருங்க....
வந்துட்டாங்க...
கருத்து சொல்ல....
செல்லம...
ஜெய் ...நீர் கவலை படாதீரும் நான் இருக்கேன்....
இனி நான் பார்த்துக்குறேன்
இவங்களை....

நீங்க
அப்படிக்கா
ஓரமா
குந்தி
என்ன நடக்குதுன்னு பாரும்....
இன்னிக்கு ஒன்னு நான்....
இல்ல
அவங்க.....

இப்ப வாங்கலேய்....
தில் இருந்தா....

.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சிரிச்சி சிரிச்சி வயறு வலிச்சிடுச்சி......
கலக்கல் பதிவு நண்பா......
நச் பதிவு தல, எப்படி இப்படியெல்லாம்?
பதிவு அருமை... தொடரவும்!
சூப்பர் பதிவு தல, எப்படியெல்லாம் யோசிக்கிறீங்கப்பா....
அடடே...அருமையாக இருக்கிறதே. நன்றிகள். வாழ்த்துகள். மீண்டும் நன்றிகள். மறுபடியும் வாழ்த்துகள்.
சிரிக்க வைக்கும் பதிவு (த.ம.1, இண்ட்லி 2, உடான்ஸ் 2)
என்ன தவம் செய்தனை யசோதா. இந்த வருஷம் இப்படி ஒரு எழுச்சி பதிவரை காண!!
அடேடே இது ரொம்ப எளிதா இருக்கே (த.ம.2)
நல்ல பதிவு, பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். (தமிழ் மணம் -0, இண்ட்லி -0, உடான்ஸ் -0, பதிவ மொதல்ல திரட்டில சப்மிட் பண்ணுடா மூதேவி)////////////




இப்ப என்னா சொல்லுறீங்க....
படுவாக்களா....?????????

Sivakumar said...


பதிவுலக சாம்ராட்கள் சிட்டிக்காட்டான் மற்றும் நக்கீரன் விஸ்வரூபம் எடுத்த நன்னாள் இதுவே.... பிராண நாதா!!

நாய் நக்ஸ் said...

பார்த்தியா ஜெய்....
ஓடிட்டாங்க.....

இப்ப நம்ம சுரேஷ் மாமா வருவாரு....
மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வருவாங்க....

DONT WORRY....BE,,,HAPPY....

நாய் நக்ஸ் said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சிவா....
கமெண்ட்-ஐ முழுசா படிக்காம....என்னாதிது.....
போயா போய் முழுசா படி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாய் நக்ஸ் said...
பார்த்தியா ஜெய்....
ஓடிட்டாங்க.....

இப்ப நம்ம சுரேஷ் மாமா வருவாரு....
மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வருவாங்க....

DONT WORRY....BE,,,HAPPY..../////////

நிறுத்தனும் எல்லாத்தையும் நிறுத்தனும்........ அது உங்க போனாலதான் முடியும்.......

நாய் நக்ஸ் said...

@ பன்னி....
கண்டிப்பா.....
ப்ரீ கால் சிம் கார்டு வாங்கி தர்ரது.....

முதல் போன் குருவாகிய உங்களுக்குத்தான்....குரு வணக்கம்...!!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாய் நக்ஸ் said...
@ பன்னி....
கண்டிப்பா.....
ப்ரீ கால் சிம் கார்டு வாங்கி தர்ரது.....

முதல் போன் குருவாகிய உங்களுக்குத்தான்....குரு வணக்கம்...!!!!!!!!//////

இன்று என் வலையில் கூகிள் அக்கவுண்ட்டை டோட்டலா டெலிட் பண்ணிவிட்டு ஓடுவது எப்படி?

நாய் நக்ஸ் said...

@ பன்னி....
ஜெய் பதிவை பத்தி தங்களின்....
உலக தரமான கருத்து...????

பொன்னேடுகளில் பொரிக்கும் படி சொல்லவும்....

பாவம் ஜெய்....இன்னிக்கு திருப்தியா தூங்கட்டும்....

யாராவது FB-ல இருக்குற ஜெய்-யை இட்டுக்கிட்டு வாங்கப்பா....

Sivakumar said...


//நாய் நக்ஸ் said...
யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சிவா....
கமெண்ட்-ஐ முழுசா படிக்காம....என்னாதிது.....
போயா போய் முழுசா படி....//

ஜெய் பதிவு, உங்க கமன்ட் ரெண்டையும் முழுசா படிக்கறதுக்கு நான் இணையத்துல இருந்து வி.ஆர்.எஸ் வாங்கிட்டே போயிருவேன்.

Sivakumar said...

நாலு மணிநேர கரண்டுக்கே நக்கீரன் சேட்டைய பாரு.

நாய் நக்ஸ் said...

IN OFFICE...BY BLUETOOTH...IN LAPTOP....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நாய் நக்ஸ் said...
IN OFFICE...BY BLUETOOTH...IN LAPTOP....//////

அத புடுங்கி ஒடச்சி கீழ போடுங்க யாராவது......

நாய் நக்ஸ் said...

எத பன்னி.....????

புளு டூத்--ஐ புடிங்கி உடைச்சி போட.....
பல் டாக்குட்டர் வேண்டாமா.....??????????

அப்புறம் கை எல்லாம் ப்ளூ கலர் ஆகிடாது...????????

நாய் நக்ஸ் said...

என்னையா சொன்னீங்க...ஜெய் கிட்ட...
நான் ஒரு கமெண்ட் போட்டதும் ஆள் எஸ்....

நாய் நக்ஸ் said...

ஜெய் பதிவு, உங்க கமன்ட் ரெண்டையும் முழுசா படிக்கறதுக்கு நான் இணையத்துல இருந்து வி.ஆர்.எஸ் வாங்கிட்டே போயிருவேன்.///////////

@ சிவா....அப்ப நான் பதிவுன்னு ஒன்னு போட்டா.....
என்ன பண்ணுவ...?????

Unknown said...

பன்னாடை,நாதாரி,எருமை,கழுதை,பன்னி,குள்ளநரி, காண்டா மிருகம்...பிக்காளி இப்படி பட்ட பதிவை படிக்க வெச்ச நக்கீரா...இதுக்கு நீ என்னை பாலிடால் ஊத்தி கொன்னிருக்கலாம்....மிடியலை..!

Unknown said...

எச்சூச்மீ...பட்டிக்காட்டான்

அந்த காலத்துல கக்கா காட்டுக்குள்ள போனாங்க இன்னிக்கு வீட்டுல மொசைக் போட்டு பாலீஸ் போட்டு பாம்பே,வெஸ்டன் கக்குஸ் கட்டி அத்துல போறாங்க....!

அதனாலதான் உனக்கு மூளை இப்படி வேலை செய்யுது...!

:)

Unknown said...

@நாய் நக்ஸ் said...
ஜெய் பதிவு, உங்க கமன்ட் ரெண்டையும் முழுசா படிக்கறதுக்கு நான் இணையத்துல இருந்து வி.ஆர்.எஸ் வாங்கிட்டே போயிருவேன்.///////////

@ சிவா....அப்ப நான் பதிவுன்னு ஒன்னு போட்டா.....
என்ன பண்ணுவ...?????
///////////////////
வெண்ணை அப்படி கிப்படி போட்டுத் தொலைச்சிறாத உலகம் அழிஞ்சிரும்..!

Unknown said...


Pattikaattaan JeyYesterday 3:29 PMEdit
+1
ஒத்த காசுக்கெல்லாம் அக்கப்போர் பண்ணிருக்கீங்கன்னு சொல்லுங்க :-))))))))))))
/////////////////////
இந்த கமெண்டை ஜாக்கியை விட்டுப் படிக்கச் சொல்லவும்...!

புழல் உனக்கு கன்பார்ம்டியோவ்...!
:)

பட்டிகாட்டான் Jey said...

பதிவைப் போட்டுட்டு கமெண்ட்ஸ் பாக்சை குளோஸ் பண்ணிருக்கனுமோ...

இன்னிக்கி பொழுதை இங்கனையே போக்கிருவானுக போலயே.... :-)))



Anonymous said...

அருமை தொடருங்கள்... நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

// ஆரூர் மூனா செந்தில் said...
அருமை தொடருங்கள்... நன்றி. //

கர்ர்ர் த்தூ பக்கி.....

இப்படி கமெண்ட் போடலைனு, இங்கே யாரும் அழுதாங்களா...

வந்துட்டாம் செமசங்கு டேப்பை ஊஸ் பண்ணி கமெண்ட் போட....

அஜீம்பாஷா said...

ஆரூர் முனா செந்தில்,வீடு சுரேஷ் குமார், வீடு திரும்பல் மோகன் மற்றும் உங்களைப் போல நல்ல சகோதரர்களை தந்த தலைமுறை.

LinkWithin

Related Posts with Thumbnails