November 27, 2012

அந்நியமுதலீடு தேவையே.......





பெரிய கடை = வால் மார்ட்,ரிலையன்ஸ், மால்ஸ் எட்செட்ரா.....

சிறிய கடை= சாலையோற காய்கறி வியாபாரிகள், மளிகை கடைகள் எட்செட்ரா......

1. இப்போது அந்நிய முதலீடு பற்றி பேசப்படுவது இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் இருக்கும், 10 லட்சத்திற்கும் அதிகம் மக்கள் தொகை உள்ள சுமார் 50 நகரங்கள் மட்டுமே.

2. சிறுகடைகள், மற்றும் தற்போது விவசாய உற்பத்தியை ஏலம் எடுக்கும் வியாபாரிகள் பற்றி கவலைப்படும் மக்கள், அவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் பற்றியும் பேசினால் நல்லது.

பெரிய கடைகள் வருவதால் இருக்கும் நன்மைகள்:

இதுவரை விவசாய விளை பொருள்களை, வியா(தி)பாரிகள் தங்களுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அநியாயத்துக்கு விவசாயிகளின் வயிற்றில் கும்மாங்குத்து குத்திவிட்டு குறைந்த விலையில் வாங்கி, ஆள்மாத்தி, கடைமாத்தி என்று.... கடைசியாக கடையில் வாங்கும் நுகர்வோருக்கு பெரும் விலையில் விற்றுக் கொழித்தார்களே அது தடை படும்.

இந்த பெரிய கடைகள், விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்து, விளை பொருள் உற்பத்திக்கி நிதி உதவி & தொழில்நுட்ப உதவி செய்வதுடன், உற்பத்திப் பொருளை அதிக விலைக்கி வாங்க விவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல் கொஞ்சமாவது பால் வார்க்கும்.

பருவநிலைக் கோளாரால்(வறட்சி,வெள்ளம்..etc..) பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் கூட செய்து குடுத்து நஷ்டப்பட்டு தற்கொலை செய்து கொல்வதை தடுக்கலாம்.

இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் விவசாய மக்களும் பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேறி அவர்களின் சந்ததியும், ஏய்த்துப் பிழைக்கும் கூட்டத்தினரின் சந்ததியருக்குச் சமமான கல்வி, மருத்துவம் போன்றவற்றை நல்கிட வாய்ப்பு கிடைக்கும்.

இன்று ஒருவர் மளிகைக் கடை ஆரம்பித்தால் ஐந்து வருடத்தில்...வேண்டாம் பத்து வருடத்திலாவது ஒரு கார், சொந்தமாக சின்ன வீடு, குழந்தைகளுக்கு பணம் கேட்கும் பள்ளியில் சேர்க்கை, ஏதும் பிரச்சினை என்றால் ஒரே நாளில் ஒரு லட்சமாவது திரட்டி மருத்துவச் செலவு செய்யும் நிலை என்று தன் வாழ்வினை மாற்றிக் கொள்ளலாம். 

ஏனென்றால் கடுமையாக உழைக்கிறேன் என்கிற போர்வையில் விவசாயிகள் & நுகர்வோர் இரண்டு பக்கத்திலிருந்து உரிஞ்சும் ரத்தத்தின் மகிமை அப்படி.

இவர்கள் வாழ்வதில் ஆட்சேபனை இல்லை, இவர்கள் வாழ அப்பாவிகூட்டத்தை எத்துனை காலமாக கையறு/காலறு நிலையில் வைத்திருப்பது. இன்று வால் மார்ட்டை எதிர்க்கும் கூட்டம் இந்த கொள்ளைக் கூட்டத்தை எதிர்த்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்தளவு குரல் குடுத்ததா?

ஏற்கனவே நான் பல பதிவுகளில், பிலஸ்களில் பின்னூட்டமாக சொன்ன கருத்துதான்... அதாவது...

இன்று...

மார்கெட்டில் விவசாயிகளிடம் கிலோ ரூ 1 க்கு வாங்கும்  மொத்த யாவாரி, அதை மேலும் சில கை மாறி கோயம்பேடு போன்ற மார்கெட் வந்து அங்கே 8 ரூபாயாகி, நம் வீட்டு பக்கத்து கடையில் ரூ 12 லிருந்து ரூ15 வரை அவரவர்களின் மனசாட்சிப்படி நுகர்வோருக்கு விற்கிறார்கள். இதை ஆதாரத்துடன் மறுப்பவர்கள் மறுக்கலாம்.

(இங்கு சொல்லபட்ட ரூ ,ஒரு கணக்கீடுக்கானது)

பெரிய கடைகள் வந்த பிறகு...

விவசாயி இடமிருந்து ரூ 5 க்கு வாங்கி நேராடியாக அவர்களின் கிட்டங்கியில் வைத்து, அங்கிருந்து அவர்களின் கடைகளுக்கு அனுப்பி அங்கே வரும் நுகர்வோர்களுக்கு ரூ 8க்கு விற்பார்கள்.

இதனால் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ4 அதிக லாபம் கிடைக்கும். 

நுகர்வோர்களுக்கு கிலோவுக்கு ரூ 4 லிருந்து 7 வரை செலவு குறையும்.

இதில், தரம், பொருள் பற்றிய குறிப்புகள், எக்ஸ்பயரி தேதி, ரெஸ்பான்சிபிலிட்டி & அக்கவுண்டபிலிட்டி எல்லாம் சிறு கடைகளை விட பெரிய கடைகளில் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இதனால் இது தொடர்பான சிறு வியாபாரிகள் பாதிபப்டைவார்களே அவர்கள் வாழ்வதற்கு என்ன செய்வார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு...

1. இந்த பெரிய கடைகள், பெரும் எண்ணிக்கையில் அதாவது 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் சுமார் 50 நகரங்களுக்கு மட்டுமே தற்போது அனுமதி. இந்த அளவிற்கான உற்பத்திக்காவது விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு விலை கிடைக்கட்டுமே..... பாவம் அவர்களும் இந்நாட்டின் பிரஜைகள்தானே.... அவர்களுக்கும் கொஞ்சம் கருணை காட்டலாமே.....

2. பெரிய கடைகள் நாளடைவில் எல்லா மார்க்கெட்டையும் கபளீகரம் செய்து விடும் என்று சொல்பவர்களுக்கு...

இது அனுமதிக்கப்படும் நகரஙக்ளில் அதிக அளவில் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படலாம், அப்படி பாதிக்கப்ட்டாலும் கொள்ளை லாபத்தில் கொழிக்கும் கூட்டங்கள் பாதிக்கப்படும், இவர்களுக்கு ஆதரவாக, விவசாயிகளுக்கு எதிராக என் போன்றவர்கள் செம்பு தூக்க தயாரில்லை.


இந்த அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டம் இதற்குமுன் இந்த சிறு குறு வியாபாரக் கூட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதை எதிர்த்ததா????

இது போன்ற விவசாயிகளின் ரத்தம் உறிஞ்சும் பல்லாயிரக் கனக்கானவர்களை  கட்டுப்படுத்துவதை விட  சில பெரிய கடைகளைக் கண்கானித்து சில வரையறைகளை அரசு செயல்படுத்துவது எளிதாக இருக்கும்.

தற்போது சிறு/குறு வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து விசாயிகளுக்கு ஆதரவாக எந்த அரசும் செயல்படமுடியாத சூழல் தான். ஒரே நாளில் எல்லாக்கடைகலையும் அடைத்துப் போராடும் அளவிற்கு மிக கட்டுக்கோப்பாக தனக்குள் அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு ஒரு தனிப்பட்ட நிறுவனம் எப்படி மோனோப்பலியாக வியாபாரத்தை நடத்துமோ அதே அளவிற்கு இவர்கள் நடத்துகிறார்கள். தங்களின் போராட்டத்தால், அரசை இவர்களுக்கு சாதகமாக பணிய வைக்கிறார்கள்.

இவர்களைவிடவா இனி வருபவர்கள் அதிக பாதிப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்திவிட முடியும்.


வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் பொதுச்சேவைக்கி வரவில்லை, நம்மூர் யாவாரிகளைப்போல்  லாபத்தில் கொழுக்கவே வருகின்றது என்று தெரிந்தாலும்,  நாளடைவில் இது பல லட்ச யாவாரிகளுக்கு பாதகமாக இருக்கும் என்ற கருத்து உண்மையே என்று நம்பினாலும், பல கோடி விவசாயிகளுக்கு இது வாழ்வைத்தரும் என்பதால் என்னைப் பொறுத்தவரை தற்போது மத்திய காங்ரஸ் அரசு எடுத்திருக்கும் “அந்நிய முதலீட்டுக்கு ஆதரவான” சட்டத்திற்கு ஆதரவை பதிவு செய்கிறேன்.

காங்ரஸை என் வாழ்நாலில் ஆதரிக்கும் எண்ணம் இல்லாதிருந்தவன். இந்த விசயத்திற்கு மட்டுமே என் ஆதரவு.

இந்த பதிவிற்கு எதிர் கருத்து கொண்டவர்கள் தங்களின் கருத்தை பொத்தாம் பொதுவாக சொல்லாமல் உங்களின் எதிர்ப்பு ஏன் என்று தெளிவாகச் சொன்னால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.



நன்றி.

16 comments:

நாய் நக்ஸ் said...

அடுத்த சிபி போல.........
டொயிங்.......!!!!!!!!!!


சிக்கிரம் அடுத்த போஸ்ட்ஐ போடுறது...

ஐ (வீ)ஆம் வைட்டிங்.....

நாய் நக்ஸ் said...

எங்கேயும் போகலை....
குத்தவச்சி உக்காந்திருக்கோம்....

(எப்பா இன்னும் எவ்வளவு பேஜ் வியுஸ் வேணும்....?????)

பட்டிகாட்டான் Jey said...

நக்ஸ் பரதேசி, இது நாலு பேர் சொறிஞ்ச்இ விட்டதால எழுதிருக்கேன் மச்சி.

வாரக்கணக்குல பதிவு போடாதவன் இன்னிக்கி 2வதா இதை எழுதிருக்கேன்.

ஆமா, பேஜ்வியூஸ்னா இன்னாது மச்சி :-))))))))))))))))0

Unknown said...

இதைப் பற்றி தீர்மாணமாக எதையும் சொல்லமுடியவில்லை...! இது விவசாயிகளுக்கு நன்மை தருமா..?என்பதிலும் சந்தேகம் இருக்கின்றது...!காலம் பதில் சொல்லும்!

Unknown said...

பட்டிகாட்டான் Jey said...
நக்ஸ் பரதேசி, இது நாலு பேர் சொறிஞ்ச்இ விட்டதால எழுதிருக்கேன் மச்சி.

வாரக்கணக்குல பதிவு போடாதவன் இன்னிக்கி 2வதா இதை எழுதிருக்கேன்.

ஆமா, பேஜ்வியூஸ்னா இன்னாது மச்சி :-))))))))))))))))0
/////////////////////
கடல் நண்டை வாய்க்கா மேட்டுல வெச்சு சுட்டு தின்னுன்னு அர்த்தம் பட்டி..பக்கி!

குட்டன்ஜி said...

எல்லோரும் ஊதும் சங்கை ஊதாமல்,துணிந்து உங்கள் கருத்தை,நியாயமான கருத்தை விளக்கியிருக்கிறீர்கள் ஜெய்!

பட்டிகாட்டான் Jey said...

// வீடு சுரேஸ்குமார் said...
இதைப் பற்றி தீர்மாணமாக எதையும் சொல்லமுடியவில்லை...! இது விவசாயிகளுக்கு நன்மை தருமா..?என்பதிலும் சந்தேகம் இருக்கின்றது...!காலம் பதில் சொல்லும்! //

சுரேஷ், எனக்கும் ஒரு ஐயம் இருப்பதை ஒத்துக்கொள்வேன் , ஏனெனில் இந்த தொழில் நடத்துபவர்கள் அதிகளவு லாபத்தை எடுப்பது என்பதையே குறிக்கோளாக இருப்பவர்கள்.

ஆனால், நேரடிக் கொள்முதல் இடைத்தரகர்கள் குறைவு என்பதால்தான் இன்று பல தொழில்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் விவசாய விளைபொருட்களுக்கு மட்டும் இடைத்தரகர்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை, இந்த இடைத்தரகளின் லாபத்திற்காகவே கொள்முதல் விலையில் கைவைத்து விவசாயியின் வயிற்றில் அடிக்கிறார்கள்.

சுரேஷ் நேரம் கிடைக்கும் ஒரு ஒரு ஞாயிற்றுக் கிழமையில் பக்கத்து சந்திக்கி போய் பார்ரேன், அங்கே பத்து பேர் கூட்டா அவங்களுக்குள்ள அதிக பட்ச விலை நிர்ணயம் செய்துகிட்டு ஏலம் எடுப்பதை காணலாம்.

விவசாயிக்கி விலை கம்மியாக் கேக்கிராங்களேனு ஸ்டாக் வைக்க இடமும் இல்லை, கடன் வாங்குனவனுக்கு பதில் சொல்ல தாமசம் இல்லை அதனால வயிரெரிஞ்சிகிட்டே அவங்க கேக்கிர விலைக்கி குடுக்கிற நிலை....

இப்ப மட்டும் என்ன விவசாயியை வாழ வச்சி கிட்டா இருக்காங்க...

அடுத்த வாய்ப்பு எப்படி இருக்கும்னாவது பார்க்கலாமே.

கண்டிப்ப இதைவிட பெரிய இழப்பை விவசாயி சந்திக்கப்போரதில்லை... அது மட்டும் என் சிற்றறிவுக்கு தெளிவாத் தெரியுது சுரேஷ்...

பட்டிகாட்டான் Jey said...

//குட்டன் said...
எல்லோரும் ஊதும் சங்கை ஊதாமல்,துணிந்து உங்கள் கருத்தை,நியாயமான கருத்தை விளக்கியிருக்கிறீர்கள் ஜெய்! //

நன்றி குட்டன்.

இது என் கருத்து இதற்கு சரியான மாற்று விளக்கம் கிடைத்தால் கண்டிப்பாக என் கருத்தை பரிசீலனை செய்வேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விவசாய விளைபொருட்கள், மற்றும் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் கொள்முதலில் ஒரு மோனோபோலி ஏற்பட்டு அநியாயமாக விலைகுறைத்தே கொள்முதல் செய்யப்படுகிறது என்று அறிகிறேன். இதற்கு பின்பும் அரசியல் மாபியாக்கள் இருப்பார்கள். அவர்கள் இல்லாமல் இங்கு எந்த தொழிலும் இல்லை. அப்படி ஒரு சூழலில் பன்னாட்டு நிறுவனங்களின் வருகை நல்ல கொள்முதல் விலை கிடைக்க வழிசெய்தால் நலம். அவர்களும் சேர்ந்து கொண்டால் கேடுதான்.

அதுதவிர இன்னும் வேறு சாதக பாதகங்கள் குறித்து அலசப்பட வேண்டும். பெருமளவில் ஸ்டாக்கை குவித்து வைத்து விற்பதற்கும், சிறுகடையில் வைத்து விற்பதற்கு அடிப்படை வேறுபாடுகள் உண்டு. சிறுகடைகள் ஒருபோதும் இவர்களுடன் போட்டியிட முடியாது. குறைந்த லாபம், அதிக வியாபாரம் என்பதே இந்த பிரம்மாண்ட வணிக நிறுவனங்களின் தாரக மந்திரம். கடையை துவங்கி 2-3 வருடங்களுக்கு லாபமே வரவில்லையென்றாலும் பொறுமையாக தாக்குபிடித்து சாதிப்பார்கள். இதெல்லாம் சிறுவணிகர்களால் சாத்தியமில்லை.

இருப்பினும் ஏற்கனவே நம்மிடம் சில உள்நாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் அன்னிய முதலீடு என்பது எப்படி வித்தியாசப்படுகிறது (வணிக நோக்கில்) என்று புரியவில்லை.
அதே நேரத்தில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை பற்றி எங்குமே நல்லவிதமாக படிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட அனைவருமே அவர்களை வெறுக்கிறார்கள், ஆனால் அவர்களோ வர்த்தகத்தில் லாபத்தை அள்ளி அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அரசு கண்காணிப்புடன் இத்தகைய முதலீடுகளை அனுமதிக்கலாம். (அரசின் கண்காணிப்பு லட்சணத்தை அறிந்திருப்பதால்தான் இத்தனை எதிர்ப்புகளும் கூட...!)

பட்டிகாட்டான் Jey said...

// விவசாய விளைபொருட்கள், மற்றும் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் கொள்முதலில் ஒரு மோனோபோலி ஏற்பட்டு அநியாயமாக விலைகுறைத்தே கொள்முதல் செய்யப்படுகிறது என்று அறிகிறேன். //

இதுதான் இன்றைய நடைமுறை யதார்த்தம் பன்னி. விவசாயிகளின் ரத்தம் குடிப்பதில் முன்னனியில் இருப்பது, தற்போது தங்களுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு விளைபொருட்களின் விலையை தங்களுக்கு அதிக லாபம் கொழிப்பதற்காக குறைத்து நிர்ணயம் செய்யும் இந்த வியாபரிகள் கூட்டம் தான்.


// இதற்கு பின்பும் அரசியல் மாபியாக்கள் இருப்பார்கள். அவர்கள் இல்லாமல் இங்கு எந்த தொழிலும் இல்லை.//

இது எந்தக்காலத்திலும் தொட்டுத் தொடரும் ஊழல் பாரம்பர்யம். இவர்களின் நேர்மையற்ற சுயநலப் போக்குதான் பல சீர்கேடுகளுக்கு வித்து.

// அப்படி ஒரு சூழலில் பன்னாட்டு நிறுவனங்களின் வருகை நல்ல கொள்முதல் விலை கிடைக்க வழிசெய்தால் நலம். அவர்களும் சேர்ந்து கொண்டால் கேடுதான். //

கொள்முதல் விலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகவே படுகிறது.

1. அடுத்தவர்களிடம் கந்து வட்டி,மீட்டர் வட்டி போன்று அநியாய வட்டிக்கு பணம் வாங்காமல், இந்த நிறுவனங்கள் விவசாயத்திற்கான நிதி உதவி வழங்க வாய்ப்பு.
2. விளைபொருட்களின் விலையை வெளிப்படையாக நிர்ணயம் செய்யும் வாய்ப்பு.
3. விவசாயத்திற்கான உபகரணங்களுக்கான முதலீட்டை இந்த நிறுவனங்கள் செய்து, விவசாயத் தொழில்நுட்பம் விவசாயிக்கி கிடைக்க வாய்ப்பு
4. அதிக மழை,வெள்ளம், அதிக வறட்சி போன்ற வற்றால் உற்பத்தி பாதிக்கபட்டு நஷ்டம் வரும் போது, இந்த பயிர்களுக்கான இன்ஸூரன்ஸ் பாதுகாப்பு போன்றவற்றால் விவசாயிக்கி பாதுகாப்பு.
இது மாதிரியான பல விசயங்கள் விவசாயிக்கி சாதகமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது. விவசாயிகளின் ஓட்டு எண்ணிக்கை அதிகளவு இருப்பதால், ஓட்டுவங்கைக்காகவேணூம் பல விசயங்களில் விவசாயத்துக்கு சாதகமாக இந்த அரசியல் வாதிகள் இருக்க வாய்ப்பு உள்ளதுதானே.

.... தொடரும்

பட்டிகாட்டான் Jey said...

// அதுதவிர இன்னும் வேறு சாதக பாதகங்கள் குறித்து அலசப்பட வேண்டும். பெருமளவில் ஸ்டாக்கை குவித்து வைத்து விற்பதற்கும், சிறுகடையில் வைத்து விற்பதற்கு அடிப்படை வேறுபாடுகள் உண்டு. சிறுகடைகள் ஒருபோதும் இவர்களுடன் போட்டியிட முடியாது. குறைந்த லாபம், அதிக வியாபாரம் என்பதே இந்த பிரம்மாண்ட வணிக நிறுவனங்களின் தாரக மந்திரம். கடையை துவங்கி 2-3 வருடங்களுக்கு லாபமே வரவில்லையென்றாலும் பொறுமையாக தாக்குபிடித்து சாதிப்பார்கள். இதெல்லாம் சிறுவணிகர்களால் சாத்தியமில்லை. //

இது மறுப்பதற்கில்லை, கண்டிப்பாக சிறு கடைகளின் வியாபாரம், மற்றும் அவர்களின் லாபம் பெருமளவு குறையும். தற்போது இவர்கள் பல இடைதரகர்கள் கைமாறி வாங்கும் போதே கொஞ்சம் அதிக விலைக்கி வாங்குவதால் விற்கும் விலையில் லாபம் சேர்த்தபின், நுகர்வோர் குடுக்கும் விலை மிக அதிகமாக உள்ளது. தற்போது இந்த பெரிய கடைகள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறு வியாபாரிகள் கூட்டமைப்பு இது வரை ஞாயமாக செயல் பட்டிருந்தால் அல்லது செயல்படும் நம்பிக்கை ஏதேனும் இருந்தால், இவர்களுக்கு ஆதரவாகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் பேசுவதில் ஞாயம் இருக்கிறது, ஆனால், யதார்த்தாம் வேறாக அல்லவா உள்ளது.

இந்த பெரிய கடைகள் அனுமதிக்கப்பட்ட பெரும் நகரங்களில் உள்ள மற்றும் அதன் சௌ-அர்பன் பகுதிகளில் உள்ள சிறு கடைகள் அதிகளவு பாதிக்கப்படும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இதுவரை இவர்கள் கொழித்தது போது, இனியாவது தோட்ட வெளிகளில், வெயில் மழை பாராமல், செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு கொஞ்சம் லாபம் போகட்டுமே. அவர்களின் வாழ்வாதாரமும் மேன்படவேண்டியது அவசியமில்லையா???

யாவாரிகள் இந்த யாவாரம் இல்லையெனில் அடுத்த யாவாரம் பார்ப்பார்கள், அது அவர்கள் ரத்தத்தில் ஊரிய புத்திசாலித்தனம்,. விவசாயம் பன்றவனுக்கு வேறு தொழில் தெரியாது. வாழமுடியலைனா தற்கொலைதான் அவனுக்கான கடைசி வழியா இருக்குது..

// இருப்பினும் ஏற்கனவே நம்மிடம் சில உள்நாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் அன்னிய முதலீடு என்பது எப்படி வித்தியாசப்படுகிறது (வணிக நோக்கில்) என்று புரியவில்லை.
அதே நேரத்தில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை பற்றி எங்குமே நல்லவிதமாக படிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட அனைவருமே அவர்களை வெறுக்கிறார்கள், ஆனால் அவர்களோ வர்த்தகத்தில் லாபத்தை அள்ளி அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அரசு கண்காணிப்புடன் இத்தகைய முதலீடுகளை அனுமதிக்கலாம். (அரசின் கண்காணிப்பு லட்சணத்தை அறிந்திருப்பதால்தான் இத்தனை எதிர்ப்புகளும் கூட...!) //

வால்மார்ட் போகும் இடங்களில் எல்லாம் தன் வியாபாரத்தை விருத்தி செய்ய அந்தந்த பகுதி விவசயிகளிடம் நேரடியாக டீல் செய்து விளை பொருட்களை பெற்று விற்பனை விலையில் கடுமையான போட்டியினைக் குடுக்கிறது. நீ மேலே சொன்ன மாதிரி, சிறு கடைகள் இவர்களுடன் போட்டி போட முடிவதில்லை. எனவே அவர்கள் சார்ந்த கூட்டமைப்பு வால்மார்ட் போன்ற கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

எங்கே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்???. உலகம் முழுவது இந்த மாதிரி பெரிய கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது யார் அவர்களின் பின்புல என்ன? நுகர்வோர்களான பொது மக்களா??, உற்பத்தி செய்யும் விவசாயிகளா???

இன்று அரசியல் கட்சிகள் இதை பெரிது படுத்தக் காரணம் இந்த யாவாரக் கூட்டமைப்பு, ஒற்றுமையுடன், மொத்தமாக தங்களுக்கு எதிராக வாக்களித்துவிடும் என்கிற பயத்தில்தான். ஏனென்றால் எந்தக்கலத்திலும், விவசாயிகளின் வாக்குகள் ஒன்று சேராது என்கிற அலட்சியம்.

சாதி, மத, அரசு ஊழியர்கள் ஓட்டுக்கள் மாதிரி, இந்த லட்சக்கனக்கான சிறு/குறு வியாபாரிகள் கூட்டமைப்பு தங்களுக்கு சாதகமாக இயங்கும் கட்சிகளுக்குதான் ஓட்டு என்று ஓட்டுப் பிரயோகம் செய்து அரசை பணியவைத்துவிடுகிறது. விவசாயிகள் மட்டுமே தங்களுக்குள் சரியான கூட்டமைப்பு இல்லாமல், சாதி, மத, கட்சி ரீதியாக பிளவு பட்டு நிற்கிறார்கள் அதனால் அவர்களுக்காக குரல் குடுக்க சிலர் மட்டுமே வெளியே வருகிறார்கள்.

லாபத்தை அள்ளிக் குவிக்கும் நோக்கம் பன்னாட்டுகம்பெனிகளுக்கும் இருக்கிரது, நமது உள்ளூர் யாவாரிகளுக்கும் இருக்கிறது, என் வரையில் வித்தியாசம் ஏதும் இல்லாததால், அதிக விலை குடுக்கும் பெரிய கடைகளுக்கு என் ஆதரவு.

நாய் நக்ஸ் said...

கம்மேன்டுல எத்தனை பதிவு போவீர்????
சரி இங்கன பொய் பாரும்.....

http://vovalpaarvai.blogspot.in/2012/12/fdi-in-retail-market.html

வவ்வால் said...

பட்டிக்காட்டார்,

நம்ம பதிவை படித்ததற்கு நன்றி!

நான் இப்போது போட்ட பதிவு ஒரு பகுதியே, ஒரு மூட்டை நெல் அர்சியாக மாறும் போது என்ன விலை வரையில், விவசாயம் செய்ய ஆகும் செலவு வரையில் பல பதிவுகள் போட்டு ,வால்மார்ட் இன்ன பிற பேசிய பின்னரே இப்போதைய பதிவு, மொத்தமாக எல்லாம் படித்தால், சுதந்திரம் அடைந்த 66 ஆண்டுகால கட்டத்தில் விவசாயி தவிர எல்லோரும் லாபகரமாக வாழ்வதை உணரலாம்.

உங்கள் பதிவு அதையே சுருக்கமாக சொல்லி இருக்கிறது, முற்றிலும் உண்மையே.


இந்தியாவில் சுமார் 1.2-1.3 கோடி வர்த்தகர்கள் இருக்கிறார்கள்,ஆனால் வர்கள் தான் 70 கோடி விவசாயிகளின் வாழ்வை நிர்ணயிக்கிறார்கள்,120 கோடி மக்களின் வாங்கும் திறனை நிர்ணயிக்கிறார்கள்.

ஆனால் நுகர்வோர், விவசாயி இருவருக்குமே நிகர நட்டம் மட்டுமே என்ற நிலை தான் தொடர்கதை.

ஒரு உள்ளூர் கடையில் அரை கிலோ கொண்டை கடலை வாங்குகிறீர்கள், அதில் பூச்சி இருந்தால் எளிதில் மாற்றிவிட முடியுமா?

போய் கேட்டால் நீங்க எங்க கடையிலா வாங்கினிங்க என்பார்கள் :-))

ஒரு பில் கூட கொடுக்க மாட்டார்கள்.

எனவே தற்போதைய சூழல் மாறனும், உள்நாட்டு யாவாரிகள் தங்களை மாற்றிக்கொள்ளவேயில்லை, எனவே அயல்நாட்டில் இருந்து போட்டி வருது.

போட்டியில் வாழனும் என்றால் , விவசாயி ,நுகர்வோர் இருவருக்கும் சாதகமாக உள்நாட்டு வியாபாரிகள் நடந்துக்கொள்ள வேண்டும்.

இல்லை எனில் அயல்நாட்டுக்காரன் நியாயமாக நடந்துக்கொண்டால் அவனுக்கே வெற்றி.

சும்மா போலியாக சுதேச உணர்வு பேசி நம்ம மக்களையே அழிக்க நினைக்கும், அரசியல் இனி எடுபடாது.

எனது பதிவில் பல பழைய இடுகைகளின் சுட்டி இருக்கிறது படித்தால் ஓவ்வொரு பிரச்சினையும் தனியாக புரியும்.

நன்றி!

Anbazhagan Ramalingam said...

yetho konjam puriyara maari iruku. aanaa puriyala. pepsi coca cola AMWAY mari aagapoguthu

Anbazhagan Ramalingam said...

சுதந்திரதுக்கு முன்பு இந்தியா நல்லா இருந்துச்சுனு இங்கிலிக்ஷ்ககாரன் டயெ குடுத்துடலாமா

பட்டிகாட்டான் Jey said...

// Anbazhagan Ramalingam said...
yetho konjam puriyara maari iruku. aanaa puriyala. pepsi coca cola AMWAY mari aagapoguthu //

//சுதந்திரதுக்கு முன்பு இந்தியா நல்லா இருந்துச்சுனு இங்கிலிக்ஷ்ககாரன் டயெ குடுத்துடலாமா //

தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே :-)))

LinkWithin

Related Posts with Thumbnails