முன் குறிப்பு : சமீபத்தில் இணையத்தில் கருத்து தெரிவிப்பவர்களின் மீதான, சில நிகழ்வுகளுக்குப் பிறகுதான் இந்த தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, அதன் உட்பிரிவு 66A நாம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. அதில் இருக்கும் ஷரத்துகள் அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள உரிமைகளை பறிப்பதாக உள்ளதாக ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளதால், பதிவர் திரு தருமி ஐயாவின் கருத்தில் முழு உடன்பாடு கொண்டு, அந்த சட்டத்தின் 66A பிரிவுக்கான எனது எதிர்ப்பை தெரிவிக்க, நானும் அதை இங்கே பதிவாக இடுகிறேன்.
==================================================================
I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’
”ரவி (சீனிவசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் குடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இந்து தினசரியில் திரு அத்வானி அவர்கள் கூறியுள்ளார்.
(5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece)
இந்துவில் வந்த தலையங்கமும், இக்கருத்தை பற்றியும், பேச்சு சுதந்திரத்தப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.
==========================================================
டிவிட்டர் , முகநூல், கூகுள் பிளஸ் ஓன்ரவற்றில் நிலைச் செய்தியாக பகிர..
“இந்திய அரசே, தனிமனித உரிமைகளையே பறிக்கும் தற்போதைய I-T ACT Section 66A தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்.”

- இவ்வாறு செய்தித் தாள்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருதப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு தற்போது அமலில் உள்ள I-T ACT திருத்தப்படவேண்டும்.
- இதனோடு பிரபலங்கள் குடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை குடுக்கும் காவல் துரையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும். தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்கிறோம்.
- முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.
==========================================================
டிவிட்டர் , முகநூல், கூகுள் பிளஸ் ஓன்ரவற்றில் நிலைச் செய்தியாக பகிர..
“இந்திய அரசே, தனிமனித உரிமைகளையே பறிக்கும் தற்போதைய I-T ACT Section 66A தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்.”
நன்றி.
=========================================================================
வேண்டுகோள் :
கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட அனைத்து இணைய ஊடகவியலாளர்களும் இப்பதிவினை பிரதியெடுத்து வெளியிட்டு ஒத்துழைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். மேலும் பதிவிட்ட பின் இடுகையை தருமி அவர்களின் தளத்தில் இணைக்கவும் நன்றி.
2 comments:
சூப்பர்
// மாற்றுப்பார்வை said...
சூப்பர் //
அண்ணேன் வாங்கண்ணே, உங்க வருகைக்கும், ஆதரவுக்கு ரொம்ப நன்றிண்ணே...:-))
அப்பாடா இந்த பதிவுக்கு ஒரு கமெண்ட் கூட விழாதுன்னு தப்பா நினச்சிட்டேன். ஒரே ஒரு அண்ணேன் தைரியமா கமெண்ட் போட்ருக்கார் :-)))
Post a Comment