கீர்த்திகா ஒரு வாரக் குழந்தயாக இருக்கும் போது எடுத்த படம்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்ததால், அவரின் பிறந்த தினமான நவம்பர் 14 ம் தேதி, நம் நாட்டில் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளும் நேருவின் மீது பற்று வைத்திருந்ததால். குழந்தைகளால் அவர் நேரு மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு 1889ம் ஆண்டு உ.பி.,யிலுள்ள அலகாபாத்தில் பிறந்து, பிறகு இங்கிலாந்தில் உயர் கல்வியை முடித்தவர். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும்( IIT, IIM etc..), எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டிருக்கின்றன.
சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களாகிய நமக்கும் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவும் பண்பு, அன்பு செலுத்துதல், சகிப்புத்தனமை மற்றும் பொறுமை போன்ற நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டியது கடமையாகிறது.
ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தை ஒரு சம்பிரதாய நிகழ்வாகக் கொள்ளாமல், நம் குழந்தைகளின் கடந்த வருட செயல்பாடுகளை கொஞ்சம் அசைபோட்டு, அடுத்த வரும் ஆண்டில் நாம் அவர்களுக்கு எடுத்துரைக்கப்போகும் அல்லது செய்யவேண்டியன போன்றவற்றைப் பற்றி சிறிது சிந்திக்கும் நாளாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
இந்தக் குழந்தைகள் தினத்தின் ஒரு பகுதியாக ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு நம் தகுத்திக்கேற்ற உதவிகளை நம் குழந்தைகளைக் கொண்டே வழங்கச் செய்யலாம். குறைந்த பட்சம், நம் குழந்தைகள் பயன் படுத்திய பழையதுணிகள், வளர்ந்துவிட்டதால் பயன்படுத்த முடியாமல் போகும் துணிகள் கூட இந்த இல்லங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரும் உதவியாக உள்ளதால் நாம் அதை தானம் குடுக்கலாம்.
கல்வி , உழுக்கம் சார்ந்த விசயங்களில் நாம் அவர்களுக்கு துணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்து கொண்டு எதிர்கால துறை சார்ந்த விசயங்களில் அவர்கள் விருப்பத்திற்கு தடைபோடாமல், நம் எண்ணங்களை அவர்களின் மேல் கட்டாயத் திணிப்பாக மாற்றாமல், ஒரு நண்பனின் இடத்தில் இருந்து ஆலோசனை சொல்லும் முகமாக நாம் மாறிக்கொள்வோம்.
கீர்த்திகா
குழந்தகள் இல்லாதவர்கள் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தத்தெடுத்து வளர்க்கலாம்.
குழந்தைகள் வாழும் வீடு, தெய்வங்களும் தேவதைகளும் வாழும் வீடு.
இங்கே பகிரப்பட்ட படங்கள் எங்கள் செல்ல மகள் கீர்த்திகாவின் படங்கள்.
32 comments:
குழந்தைகள் தின வாழ்த்துகள்..மாம்ஸ்....அப்படியே உங்க வாரிசை களம் இறக்கிட்டீங்க...
வாழ்த்துகள் .
// கோவை நேரம் said...
குழந்தைகள் தின வாழ்த்துகள்..மாம்ஸ்....அப்படியே உங்க வாரிசை களம் இறக்கிட்டீங்க... //
அவங்க வளர்ந்து ஒரு நாள் இதை படிச்சி கமெண்ட் போடனும் அதுக்குதான் மச்சி:-))))
// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
வாழ்த்துகள் . //
வக்கீல் அண்ணேன் நன்றி.
நலமாக இருக்கிறீர்களா?!
:-)))
பங்காளி குழந்தை தின வாழ்த்துகள்...!இன்னிக்காவது குழந்தை எதாவது கேள்வி கேட்டா திருதிருன்னு முழிக்காதீர் வோய்!
Cute Baby குழந்தைகள் தின வாழ்த்துக்களை சொல்லிடுங்க அண்ணா
// வீடு சுரேஸ்குமார் said...
பங்காளி குழந்தை தின வாழ்த்துகள்...!இன்னிக்காவது குழந்தை எதாவது கேள்வி கேட்டா திருதிருன்னு முழிக்காதீர் வோய்! //
பதில் சொல்றா மாதிரி கேள்வி கேட்டா டக்கு டக்குனு பதில் சொல்லிடுவேன் பங்காளி....:-)))
குழ்ந்தையை பாத்துக்க சொன்ன நீங்கள் தூங்கி வழிகிறீர்களே....இந்த போட்டோவை உங்க வீட்டுகாரம்மாதான் எடுத்து இருக்க வேண்டும் அன்று நல்லா வாங்கி கட்டிக் கொண்டிர்கல் தானே?
படங்கள் அருமை... குழந்தைக்கு திருஷ்டி சுத்தி போடுங்கள்..
// ஹாரி.R said...
Cute Baby குழந்தைகள் தின வாழ்த்துக்களை சொல்லிடுங்க அண்ணா //
நன்றி ஹாரி.
அப்புறம் சஙத்து வேலையெல்லாம் எப்படி போகுது.
சங்கத்துக் கல்லாப் பெட்டியை வனா.சுனா. கிட்ட குடுங்க நல்லா பாத்துப்பாம்.
# வனா. சுனா. பார்த்து செய் :-)))
// வீட்டுகாரம்மாதான் எடுத்து இருக்க வேண்டும் அன்று நல்லா வாங்கி கட்டிக் கொண்டிர்கல் தானே? //
கரெக்ட் வீட்டம்மனிதான் எடுத்திருக்காங்க.ஆனா திட்டலை. குழந்தையை மட்டும் எடுத்து தூழியில போட்டிருக்காங்க.
அதுக்கப்புறம் தூக்கம் வந்தால் குழந்தையை குடுத்துவிட்டுதான் தூங்குவது.
அன்று மதியசாப்பாட்டுக்காக வீடு வந்து அசதியில் தூங்கியிருக்கிறேன் :-))))
குட்டி ஏஞ்சல் கீர்த்திகா-விற்கு இந்த வளர்ந்த குழந்தை வ.சுவின் இதயம் நிறைந்த இனிய குழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள் :)
// வரலாற்று சுவடுகள் said...
குட்டி ஏஞ்சல் கீர்த்திகா-விற்கு இந்த வளர்ந்த குழந்தை வ.சுவின் இதயம் நிறைந்த இனிய குழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள் :) //
நன்றி வனா.சுனா. :-)))
சந்தடி சாக்குல உன்னை குழந்தனு சொல்லிகிட்டே அத நானும் நோட் பண்ணிட்டேன் :-)))
// Comment deleted
This comment has been removed by the author.
November 14, 2012 6:50 PM //
வனா.சுனா. ஒரே கமெண்ட்டை 2 தடவை போட்டு வெள்ளாண்டயாக்கும். நீ குழந்ததான் ஒத்துக்கிடுதேன் :-)))
ச்சோ! ஸ்வீட்! பகிர்வுக்கு நன்றி!
///என் மகள் ஒரு வாரக் குழந்தயாக இருக்கும் போது எடுத்த படம்///
>என் மகள்<
ஆணாதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது....இக்கருத்துக்கு எதிராக பெண்கள் நல அமைப்பு போராட ஆரம்பித்தால் என்ன தண்டனை கிடைக்குமென்று தெரியுமா தல...சீனு கிட்ட கேளுங்க தெளிவா சொல்லுவாப்புல....போன மாசம் உடம்பெங்கும் கட்டுகளுடன் ஒரு மாசம் பெட் ரெஸ்ட் எடுத்த ரகசியம் என்னென்னு சொல்லுவாப்ள...
// s suresh said...
ச்சோ! ஸ்வீட்! பகிர்வுக்கு நன்றி! //
வருகைக்கு நன்றி சுரேஷ் :-)))
// வரலாற்று சுவடுகள் said...
>என் மகள்<
ஆணாதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது... //
எலேய் வனா. சுனா. நல்லா உத்துப் படிலே.... எங்கேலே அப்படி எழுதி யிருக்கேன்......
வாசன் ஐ கேர் எங்க் அவீட்டு பக்கம் இருக்கு வந்தா கூட்டிடுப் போறேன்....
#எங்கிட்டேயேவா.....:-)))))
// சீனு கிட்ட கேளுங்க தெளிவா சொல்லுவாப்புல....போன மாசம் உடம்பெங்கும் கட்டுகளுடன் ஒரு மாசம் பெட் ரெஸ்ட் எடுத்த ரகசியம் என்னென்னு சொல்லுவாப்ள...//
இது எனக்குத் தெரியாதே... பயபுள்ளைக்கி அடி பலமோ ??!!!.
:-)))
படங்கள் அனைத்தும் அருமை... பாப்பாவுக்கு திருஷ்டி சுத்திப்போடுங்க... நன்றி...
அடிப்பதற்கு கையை ஓங்கும் போதே தரையில் படுத்துவிடும் 23-ம் புலிகேசி மன்னன் வாழ்ந்த தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் அல்லவா தாங்கள்....
உங்களிடம் என் ராச தந்திரம் பலிக்குமா?
>>பயபுள்ளைக்கி அடி பலமோ ??!!!<<
ஒரு வாரம் வச்சி அடிச்சா...அடி பலமா இருக்காதா? :-))
படங்கள் அருமை...
திருஷ்டி சுத்திப் போடுங்க...
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...
/ ஸ்கூல் பையன் said...
படங்கள் அனைத்தும் அருமை... பாப்பாவுக்கு திருஷ்டி சுத்திப்போடுங்க... நன்றி. //
நன்றி ஸ்கூல்பையன். :-)))
// திண்டுக்கல் தனபாலன் said...
படங்கள் அருமை...
திருஷ்டி சுத்திப் போடுங்க...
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்... //
நன்றி தி.த. அண்ணேன்.
வீட்டு உயரதிகாரி அப்பப்ப சுத்திப்போடுவாங்க :-))))
// வரலாற்று சுவடுகள் said...
அடிப்பதற்கு கையை ஓங்கும் போதே தரையில் படுத்துவிடும் 23-ம் புலிகேசி மன்னன் வாழ்ந்த தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் அல்லவா தாங்கள்....
உங்களிடம் என் ராச தந்திரம் பலிக்குமா? //
ஹெஹே யாருகிட்டே...
// ஒரு வாரம் வச்சி அடிச்சா...அடி பலமா இருக்காதா? :-)) //
அம்புட்டு பலமா...சரித்தேன் :-)))
குழந்தையின் படங்கள் அழகு..
உங்கள் குழந்தையை
கைகளில் சுமந்திருக்கும் படங்களில்
உங்கள் கண்களில் இருக்கும்
புன்சிரிப்பு....
ஒரு தந்தையின் அளவற்ற
மகிழ்ச்சியை காட்டுகிறது ...
உங்கள் பெண்ணின் பெயருக்கு
ஏற்றார் போல
புகழுடன்
நீடூழி வாழ இறைவனிடம் என்
பிரார்த்தனைகள்...
// மதுமதி said...
குழந்தையின் படங்கள் அழகு.. //
கவிஞர் அண்ணே நன்னி :-)))
// மதுமதி said...
குழந்தையின் படங்கள் அழகு.. //
கவிஞரே, தங்களின் கவிதைநடை கருத்துக்கும், பிரார்த்தனைகளுக்கும் நனறி. :-)))
நல்ல பகிர்வு...
பாப்பா அழகு... வாழ்க வளமுடன் நலமுடன்...
குழந்தைகளை பற்றி சிந்திக்கத் தூண்டும் பதிவு.
குழந்தை கிருத்திகா கொள்ளை அழகு. வாழ்த்துக்கள்.
Post a Comment