

பெரிய கடை = வால் மார்ட்,ரிலையன்ஸ், மால்ஸ் எட்செட்ரா.....
சிறிய கடை= சாலையோற காய்கறி வியாபாரிகள், மளிகை கடைகள் எட்செட்ரா......
1. இப்போது அந்நிய முதலீடு பற்றி பேசப்படுவது இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் இருக்கும், 10 லட்சத்திற்கும் அதிகம் மக்கள் தொகை உள்ள சுமார் 50 நகரங்கள் மட்டுமே.
2. சிறுகடைகள், மற்றும் தற்போது விவசாய உற்பத்தியை ஏலம் எடுக்கும் வியாபாரிகள் பற்றி கவலைப்படும் மக்கள், அவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் பற்றியும் பேசினால் நல்லது.
பெரிய கடைகள் வருவதால் இருக்கும் நன்மைகள்:
இதுவரை விவசாய விளை பொருள்களை, வியா(தி)பாரிகள் தங்களுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அநியாயத்துக்கு விவசாயிகளின் வயிற்றில் கும்மாங்குத்து குத்திவிட்டு குறைந்த விலையில் வாங்கி, ஆள்மாத்தி, கடைமாத்தி என்று.... கடைசியாக கடையில் வாங்கும் நுகர்வோருக்கு பெரும் விலையில் விற்றுக் கொழித்தார்களே அது தடை படும்.
இந்த பெரிய கடைகள், விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்து, விளை பொருள் உற்பத்திக்கி நிதி உதவி & தொழில்நுட்ப உதவி செய்வதுடன், உற்பத்திப் பொருளை அதிக விலைக்கி வாங்க விவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல் கொஞ்சமாவது பால் வார்க்கும்.
பருவநிலைக் கோளாரால்(வறட்சி,வெள்ளம்..etc..) பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் கூட செய்து குடுத்து நஷ்டப்பட்டு தற்கொலை செய்து கொல்வதை தடுக்கலாம்.
இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் விவசாய மக்களும் பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேறி அவர்களின் சந்ததியும், ஏய்த்துப் பிழைக்கும் கூட்டத்தினரின் சந்ததியருக்குச் சமமான கல்வி, மருத்துவம் போன்றவற்றை நல்கிட வாய்ப்பு கிடைக்கும்.
இன்று ஒருவர் மளிகைக் கடை ஆரம்பித்தால் ஐந்து வருடத்தில்...வேண்டாம் பத்து வருடத்திலாவது ஒரு கார், சொந்தமாக சின்ன வீடு, குழந்தைகளுக்கு பணம் கேட்கும் பள்ளியில் சேர்க்கை, ஏதும் பிரச்சினை என்றால் ஒரே நாளில் ஒரு லட்சமாவது திரட்டி மருத்துவச் செலவு செய்யும் நிலை என்று தன் வாழ்வினை மாற்றிக் கொள்ளலாம்.
ஏனென்றால் கடுமையாக உழைக்கிறேன் என்கிற போர்வையில் விவசாயிகள் & நுகர்வோர் இரண்டு பக்கத்திலிருந்து உரிஞ்சும் ரத்தத்தின் மகிமை அப்படி.
இவர்கள் வாழ்வதில் ஆட்சேபனை இல்லை, இவர்கள் வாழ அப்பாவிகூட்டத்தை எத்துனை காலமாக கையறு/காலறு நிலையில் வைத்திருப்பது. இன்று வால் மார்ட்டை எதிர்க்கும் கூட்டம் இந்த கொள்ளைக் கூட்டத்தை எதிர்த்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்தளவு குரல் குடுத்ததா?
ஏற்கனவே நான் பல பதிவுகளில், பிலஸ்களில் பின்னூட்டமாக சொன்ன கருத்துதான்... அதாவது...


இன்று...
மார்கெட்டில் விவசாயிகளிடம் கிலோ ரூ 1 க்கு வாங்கும் மொத்த யாவாரி, அதை மேலும் சில கை மாறி கோயம்பேடு போன்ற மார்கெட் வந்து அங்கே 8 ரூபாயாகி, நம் வீட்டு பக்கத்து கடையில் ரூ 12 லிருந்து ரூ15 வரை அவரவர்களின் மனசாட்சிப்படி நுகர்வோருக்கு விற்கிறார்கள். இதை ஆதாரத்துடன் மறுப்பவர்கள் மறுக்கலாம்.
(இங்கு சொல்லபட்ட ரூ ,ஒரு கணக்கீடுக்கானது)
பெரிய கடைகள் வந்த பிறகு...
விவசாயி இடமிருந்து ரூ 5 க்கு வாங்கி நேராடியாக அவர்களின் கிட்டங்கியில் வைத்து, அங்கிருந்து அவர்களின் கடைகளுக்கு அனுப்பி அங்கே வரும் நுகர்வோர்களுக்கு ரூ 8க்கு விற்பார்கள்.
இதனால் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ4 அதிக லாபம் கிடைக்கும்.
நுகர்வோர்களுக்கு கிலோவுக்கு ரூ 4 லிருந்து 7 வரை செலவு குறையும்.
இதில், தரம், பொருள் பற்றிய குறிப்புகள், எக்ஸ்பயரி தேதி, ரெஸ்பான்சிபிலிட்டி & அக்கவுண்டபிலிட்டி எல்லாம் சிறு கடைகளை விட பெரிய கடைகளில் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
இதனால் இது தொடர்பான சிறு வியாபாரிகள் பாதிபப்டைவார்களே அவர்கள் வாழ்வதற்கு என்ன செய்வார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு...
1. இந்த பெரிய கடைகள், பெரும் எண்ணிக்கையில் அதாவது 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் சுமார் 50 நகரங்களுக்கு மட்டுமே தற்போது அனுமதி. இந்த அளவிற்கான உற்பத்திக்காவது விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு விலை கிடைக்கட்டுமே..... பாவம் அவர்களும் இந்நாட்டின் பிரஜைகள்தானே.... அவர்களுக்கும் கொஞ்சம் கருணை காட்டலாமே.....
2. பெரிய கடைகள் நாளடைவில் எல்லா மார்க்கெட்டையும் கபளீகரம் செய்து விடும் என்று சொல்பவர்களுக்கு...
இது அனுமதிக்கப்படும் நகரஙக்ளில் அதிக அளவில் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படலாம், அப்படி பாதிக்கப்ட்டாலும் கொள்ளை லாபத்தில் கொழிக்கும் கூட்டங்கள் பாதிக்கப்படும், இவர்களுக்கு ஆதரவாக, விவசாயிகளுக்கு எதிராக என் போன்றவர்கள் செம்பு தூக்க தயாரில்லை.
இந்த அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டம் இதற்குமுன் இந்த சிறு குறு வியாபாரக் கூட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதை எதிர்த்ததா????
இது போன்ற விவசாயிகளின் ரத்தம் உறிஞ்சும் பல்லாயிரக் கனக்கானவர்களை கட்டுப்படுத்துவதை விட சில பெரிய கடைகளைக் கண்கானித்து சில வரையறைகளை அரசு செயல்படுத்துவது எளிதாக இருக்கும்.
தற்போது சிறு/குறு வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து விசாயிகளுக்கு ஆதரவாக எந்த அரசும் செயல்படமுடியாத சூழல் தான். ஒரே நாளில் எல்லாக்கடைகலையும் அடைத்துப் போராடும் அளவிற்கு மிக கட்டுக்கோப்பாக தனக்குள் அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு ஒரு தனிப்பட்ட நிறுவனம் எப்படி மோனோப்பலியாக வியாபாரத்தை நடத்துமோ அதே அளவிற்கு இவர்கள் நடத்துகிறார்கள். தங்களின் போராட்டத்தால், அரசை இவர்களுக்கு சாதகமாக பணிய வைக்கிறார்கள்.
இவர்களைவிடவா இனி வருபவர்கள் அதிக பாதிப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்திவிட முடியும்.
காங்ரஸை என் வாழ்நாலில் ஆதரிக்கும் எண்ணம் இல்லாதிருந்தவன். இந்த விசயத்திற்கு மட்டுமே என் ஆதரவு.
இந்த பதிவிற்கு எதிர் கருத்து கொண்டவர்கள் தங்களின் கருத்தை பொத்தாம் பொதுவாக சொல்லாமல் உங்களின் எதிர்ப்பு ஏன் என்று தெளிவாகச் சொன்னால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
நன்றி.