July 18, 2013

பதிவர் திருவிழா தேதி அறிவிப்பு

பதிவுலக நட்புகளே,

கடந்த வருடம் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா(மாநாடு) சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது தாங்கள் அறிந்ததே. சுமார் 200க்கும் அதிகமான பதிவர்கள் (பெண்களும் கனிசமான எண்ணிக்கையில்) கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் பதிவர் சந்திப்பு திருவிழா சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பதிவர் திருவிழாவிற்கான பணிகள் மெற்கொள்வதற்காக கடந்த ஆண்டை போலவே பல்வேறு பதிவர் குழுக்கள் அமைக்கபட்டு அடுத்தடுத்த ஏற்பாடுகள் செய்ய முனைந்திருக்கிறார்கள். இந்த பதிவர் சந்திப்பு திருவிழா பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் விருப்பமுள்ள பதிவர்கள் இணைந்து கொள்ளலாம்.

இந்த மாநாட்டிற்காக ஆகும் செலவுகளை சமாளிக்க விருப்பமுள்ள பதிவர்களிடம் அன்பளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் அன்பளிப்பு குடுக்க இயலாமல் இருக்கும் பதிவர்கள், தங்களின் வருகையையே அன்பளிப்பாக தருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

கடந்த வருடம் வருகைதந்த பதிவர்கள் அனைவருக்கும் பண உதவி கேட்டு மின்னஞ்சலாகவும் ஏனைய பதிவர்களுக்கு இந்த மாதிரி வெளிப்படையான பதிவுகளின் மூலமும் அன்பளிப்பு கோர உத்தேசிக்கபட்டுள்ளது. அன்பளிப்பு அளிப்பது என்பது கட்டாயம் அல்ல, என்பதனை இங்கே தெரியபடுத்தப்படுகிறது.

விழாவினை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடத்த பதிவர்கள் தங்களது ஆலோசனைகளை ஞாயிற்றுக் கிழமை தோரும் கே,கே.நகரில் உள்ள DISCOVERY BOOK PALACE-ல் மாலை 4 மணிக்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களின் போது தெரியப்படுத்தலாம், விழக்குழுவினர் அனைவரது கருத்துக்களையும் திறந்த மனதோடு கேட்டு, ஒரு நாளில் நடக்கும் நிகழ்ழ்சி நிரலில் சாத்தியப்படும் அனைத்தையும் சேர்க்க முனைவார்கள். யாரேனும் விழாக்குழுவினருடன் இணைந்து பொறுப்புகளை ஏற்று நடத்த முன்வந்தால் அவர்களையும் இனைத்துக்கொண்டு பதிவர் சந்திப்பு விழாவினை நடத்த விழாக்குழுவினர் முன் வந்திருக்கிறார்கள்.

இந்த விழாவிற்காக கதை, கட்டுரை, நகைச்சுவை, கவிதை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் மூன்று இடங்களை பெறும் பதிவர்களுக்கு விழாவின் போது பரிசுகள் வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் இன்னும் ஒரு வாரத்தில் பதிவர்களின் பதிவுகள் மூலம் வெளியிடப்படும்.

இந்த சந்திப்பிற்கு வருகைதர விரும்பும் பதிவர்கள் மற்றும் அன்பளிப்பு அளிக்க விரும்பும் பதிவர்கள் கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு தங்கள் பெயர், வலைதளமுகவரி, எந்த ஊரிலிருந்து/நாட்டிலிருந்து வருகிறீர்கள் போன்ற தகவல்களை குடுக்கவும். இந்த தகவல்கள், உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

செப்டம்பர் 1ம் தேதி (01-09-2013) ஞாயிற்றுக் கிழமை மாநாட்டு தேதியாக முந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் முடிவ் செய்யப் பட்டு, சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்த மான கட்டடம் மாநாட்டுக்காக புக் செய்யபட்டுள்ளது.
மாநாடு நடை பெறப்போகும் கட்டிடத்தின் முகப்புத்தோற்றம். (படத்தில் இருக்கும் அழகான வாலிப பையன் அடியேன் தான்)

கட்டிடத்தின் முன் பகுதியில் போதுமான இடவசதி உள்ளது.

வாயில்பகுதியிலிருந்து எடுத்த படம்.

வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் உள்ளது.


முதலில் கடந்த வருடத்தைப் போல் ஆகஸ்டு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான ஆகஸ்ட் 25 ல் நடத்தலாமா என்று ஆலோசித்து அன்று பல பதிவர்கள் TNPSC தேர்வு எழுத இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அந்த தேதி நிராகரிக்கபட்டது. செப். மாத ஞாயிற்றுக்கிழமைகளில், செப்.8 முகூர்த்த தினமென்பதால் பல பதிவர்கள் அந்த தேதிக்கு ஆட்சேபம் தெரிவிக்க அந்த தேதியும் வேண்டாம் என்று, முடிவில் செப். 1 ல் நடத்தலாம் என்று முடிவெடுக்க பட்டுள்ளது.

பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :

  1. மதுமதி kavimadhumathi@gmail.com
  2. பட்டிகாட்டான் ஜெய் pattikattaan@gmail.com
  3. சிவக்குமார் – madrasminnal@gmail.com
  4. ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com
  5. அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
  6. பாலகணேஷ் bganesh55@gmail.com
  7. சசிகலா - sasikala2010eni@gmail.com

உங்களது பெயர், உங்கள் வலைதளமுகவரி, ஊர்/நாடு, தொலைபேசி எண்(optinal) தெரிவித்தால், உணவு தயார் செய்ய, வெளியூர் எனில் தங்கும் இட வசதி செய்து குடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.

 பின்குறிப்பு : வலையுலக நட்புகள் இந்த தகவலை தங்கள் வலைதளத்தில் பதிவிடுமரு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

39 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அதிரடி ஆரம்பமா பட்டிக்ஸ்.....

sathishsangkavi.blogspot.com said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்...

எனக்கு ஒரு துண்டை போட்டு வை மச்சி...

திண்டுக்கல் தனபாலன் said...

போட்டிகளுடன் திருவிழா ஆரம்பம்... வாழ்த்துக்கள்...

பட்டிகாட்டான் Jey said...

பிரகாஷ் ஆரம்பம் மட்டும் நாங்க, நடத்தி முடிக்கிறது நீங்கதானப்பா...:-))

பட்டிகாட்டான் Jey said...

சங்கவி, நீங்க எல்லம் விஐபிகளாச்சே உங்களுக்கு போகதான் எங்களுக்கு இடம் மச்சி :-))

பட்டிகாட்டான் Jey said...

தனபாலன் அண்ணே முதல் நாளே வந்துடுங்க.... :-))

இம்சைஅரசன் பாபு.. said...

மாடு நடை பெறப்போகும் கட்டிடத்தின் முகத்தோற்றம். (படத்தில் இருக்கும் அழகான வாலிப பையன் அடியேன் தான்)///

என்னது மாடு ... பட்டிக்ஸ் அண்ணே ...:)).... தமிழ் மெல்ல ..மெல்ல ...சாகும் ..உங்க தமிழ் ல தீய வைக்க

சாய்ரோஸ் said...

நல்ல செய்திதான்... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

முத்தரசு said...

வாழ்த்துக்கள்

ரூபக் ராம் said...

மகிழ்ச்சியான செய்தி :)


//என்னது மாடு ... பட்டிக்ஸ் அண்ணே ...:)).... தமிழ் மெல்ல ..மெல்ல ...சாகும் ..உங்க தமிழ் ல தீய வைக்க// ஹா ஹா ...

பட்டிகாட்டான் Jey said...

maadu =maanaadu
mukathotram = munpakuthi thotram

spelling mistake ... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏம்பா பதிவர் விழாக்குழு என்னய்யா பண்ணிட்டு இருக்கீங்க? உடனே நல்லா தமிழ் டைப் பண்ற ஒரு செக்ரெட்டரிய பட்டிஸ்கு ஏற்பாடு பண்ணி கொடுங்கய்யா......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டிகாட்டான் Jey said...
maadu =maanaadu
mukathotram = munpakuthi thotram

spelling mistake ... !//////

இதுமட்டும்தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா பட்டிக்சு?

ஜோதிஜி said...

இந்த முறையும் சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

பட்டிகாட்டான் Jey said...

vitraa sunaa paanaa... ithu oru matteraa :-))))

spelling mistake sari irukkanu paruyanu madarasbavan sivakkumar & arur.moona.senthilukku anuppina... ellam sariya irukkunu sonnanuka...

thitrathuna avingal thittunga :-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
மாடு நடை பெறப்போகும் கட்டிடத்தின் முகத்தோற்றம். (படத்தில் இருக்கும் அழகான வாலிப பையன் அடியேன் தான்)///

என்னது மாடு ... பட்டிக்ஸ் அண்ணே ...:)).... தமிழ் மெல்ல ..மெல்ல ...சாகும் ..உங்க தமிழ் ல தீய வைக்க///////

யோவ் யோவ், அழகான வாலிப பையன்னு அடிக்க வரும்போது நாம அம்புட்டு அழகான்னு அண்ணன் தடுமாறிட்டாருய்யா..... அத போயி பெருசு பண்ணிக்கிட்டு..... விடுங்கய்யா விடுங்க......!

ராஜி said...

நான் கலந்துக்குறேன். பெருசா ப்ளக்ஸ் பேனர், ஆரணிக்கு கார், அடிக்கடி ஆப்பிள், ஆரஞ்ச் ஜூஸ், எப்பவும் விசிறிக்கிட்டே இருக்க ஒரு ஆள் இதெல்லாம் ஏற்பாடு பண்ணவும், இனி எதாவது தேவைன்னா அப்பப்போ சொல்றேன்.

பட்டிகாட்டான் Jey said...

Jothiji annae sept. first chennai vanthudinga :-))

பட்டிகாட்டான் Jey said...

Raji sis... rightttuuuu.... Food sponcer panra amminikki ithukooda seyya maattamaa :-)))

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலை எனது தளத்தில் ப்ளக்ஸ் பேனர் போல் வைத்தாயிற்று...! "நன்றாக இருக்கிறதா ?" என்று பார்த்து விட்டு சொல்லவும்... நன்றி...

தொடர்புக்கு : dindiguldhanabalan@yahoo.com

Yaathoramani.blogspot.com said...

சந்தோஷமான செய்தி
பங்கேற்பதில் மகிழ்வு கொள்கிறேன்

Robert said...

(படத்தில் இருக்கும் அழகான வாலிப பையன் அடியேன் தான்)// எங்க எங்க அந்த அழகான பையன் எங்க???

ராஜி said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏம்பா பதிவர் விழாக்குழு என்னய்யா பண்ணிட்டு இருக்கீங்க? உடனே நல்லா தமிழ் டைப் பண்ற ஒரு செக்ரெட்டரிய பட்டிஸ்கு ஏற்பாடு பண்ணி கொடுங்கய்யா......!
>>
”அழகான”ன்னு ஒரு வார்த்தையை சேர்த்துக்கோங்க ராமசாமி சார். ஜெய் புலம்புறார் பாருங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ராஜி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏம்பா பதிவர் விழாக்குழு என்னய்யா பண்ணிட்டு இருக்கீங்க? உடனே நல்லா தமிழ் டைப் பண்ற ஒரு செக்ரெட்டரிய பட்டிஸ்கு ஏற்பாடு பண்ணி கொடுங்கய்யா......!
>>
”அழகான”ன்னு ஒரு வார்த்தையை சேர்த்துக்கோங்க ராமசாமி சார். ஜெய் புலம்புறார் பாருங்க.///////

அழகானன்னு போட்டுட்டா அப்புறம் பட்டிக்ஸ் பதவிக்கே ஆபத்தாகிடுமே? சும்மா செக்ரெட்டரின்னு போட்டதுக்கே இதுவரை 7 இடத்துல இருந்து என்கொயரீஸ் வந்திருக்காம் (செக்ரெட்டரி வேலைக்கு இல்ல, பட்டிக்ஸ் வேலைக்கு....)

Robert said...

திருவிழா இனிதே சிறக்க வாழ்த்துக்கள்...

கூடல் பாலா said...

விழா சிறக்க வாழ்த்துகள் !

aavee said...

கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்..

காமக்கிழத்தன் said...

மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பு.

பாராட்டுகள்; வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்!

99Likes said...

பதிவர் சந்திப்புக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்.

by: 99likes

MANO நாஞ்சில் மனோ said...

விழா சிறப்பாக நடந்தேற எம் வாழ்த்துக்கள் நண்பர்களே....!

MANO நாஞ்சில் மனோ said...

இம்சைஅரசன் பாபு.. said...
மாடு நடை பெறப்போகும் கட்டிடத்தின் முகத்தோற்றம். (படத்தில் இருக்கும் அழகான வாலிப பையன் அடியேன் தான்)///

என்னது மாடு ... பட்டிக்ஸ் அண்ணே ...:)).... தமிழ் மெல்ல ..மெல்ல ...சாகும் ..உங்க தமிழ் ல தீய வைக்க//

ஏ பன்னிகுட்டி யாரு யாரை கலாயிக்குறாங்க தெரியுதா ஓய் ?

Manimaran said...

மாநாடு சிறக்க வாழ்த்துக்கள்.

பட்டிகாட்டான் Jey said...

@ சாய்ரோஸ் - நன்றி
@முத்தரசு - நன்றி
@ரூபக் ராம்- நன்றி
@திண்டுக்கல் தனபாலன் - நன்றி( லோகோ சூப்பர்னே)
@Ramani S - நன்றி
@Robert- நன்றி
@koodal bala- நன்றி
@கோவை ஆவி- நன்றி
@காமக்கிழத்தன்- நன்றி
@s suresh - நன்றி
@nawsin khan- நன்றி
@MANO நாஞ்சில் மனோ- நன்றி (இம்சையெல்லாம் எழுத்துப்பிழையை சுட்டிகாட்டிட்டானே... :-) )
@Manimaran- நன்றி

//என்னது மாடு ... பட்டிக்ஸ் அண்ணே ?//

இம்சை எங்கேடா மாடு இருக்கு?, நல்லா பாரு மக்கா :-))

Unknown said...

மாநாடு சிறக்க வாழ்த்துக்கள்..!

வெங்கட் நாகராஜ் said...

மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.....

sury siva said...

இதனால் சகல உலக தமிழ் பதிவாளர்களுக்கும் சென்னை வாழ் பதிவாளர்களுக்கும் பெரியோருக்கும் சிறியோருக்கும், சிரிப்போருக்கும் ,அடிப்போருக்கும் சீறுவோர்க்கும் , சிந்திப்போர்க்கும் நிந்திப்போர்க்கும் , எனது வலைக்கு வருவோர்க்கும் வராது என்னை வருவாரா வருவாரா என காலமெல்லாம் காத்திருக்கச் செய்யும் வாராதவர்க்கும் , அன்பாளர்களுக்கும் பண்பாளர்களுக்கும், காய்தல் உவத்தல் இன்றி காலமெல்லாம் தமிழ்ப்பணி செய்வோர் அனைவருக்கும் ,

அறிவிப்பது யாதெனில்,

சுப்பு ரத்தினம் என்கிற சுப்பு தாத்தா ,

பதிவுத் திருவிழாவுக்கு ,

பராக் பராக்.

இப்படிக்கு,
சுப்பு தாத்தா.
நியூ ஜெர்சி. யூ. எஸ். ஏ.
நானும் என் 14 வலைலே செய்தி தருவேன்.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
www.vazhvuneri.blogspot.com
www.movieraghas.blogspot.com
www.Sury-healthiswealth.blogspot.com
www.anewworldeveryday.blogspot.com
www.kandhanaithuthi.blogspot.com

unmaiyanavan said...

நான் வலைப்பூ பதிவிற்கு புதியவன். உங்களுடைய இந்த முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

வணக்கம் நண்பரே,
நானும் வரலாமா? என்பெயரை,வருகையை பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.கடைசி நேரத் தவிர்க்கவியலாத வேலைகள் ஏதும் வராதபட்சத்தில் நான் அவசியம் வருவேன். இணைய உலகில் இன்னும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
-நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை
http://valarumkavithai.blogspot.in/

LinkWithin

Related Posts with Thumbnails