ஒரு கருப்பட்டி இந்தாருக்கு, இன்னொன்னு எங்கே
பள்ளியில் படிக்கும் போது ஆண்டு விழாவுக்கு பட்டிமன்றம் ஏற்பாடு செய்திருந்தாங்க.அப்ப எல்லாம் ஊர் திருவிழாவுக்கு கூட, பட்டிமன்றம், வில்லுப்பாட்டு, கரகாட்டம், தேவராட்டம்...எட்செட்ரா... இப்படிதான் வேடிக்கை நடக்கும். அதனால ஊர்மக்களும் ரசிக்கட்டுமேனு இந்த பட்டிமன்றம்.
தலைப்பு : தற்கால சூழலில் மக்களுக்கு பெரிதும் துணையிருப்பது - ராமனின் நேர்மையா? அல்லது கண்ணனின் ராஜதந்திரமா?
சொல்விழங்கும் பெருமாள்னு ஒரு வாத்தியாரும்,. அவரோட வீட்டம்மனி *சக்தி பெருமாள்னு* ம் எதிர் எதிர் அணிக்கி தலைவர்ஸ், நடுவர் பேர் மறந்து போச்சி....
சரி இந்த பதிவோட தலைப்புக்கு வறேன்...
சொல்விழங்கும் பெருமாள் பேசும்போது..... இடையில் ஒரு கதை சொன்னார், அது தோட்டவெளில ரெண்டுபேர் எருமை மாடு மெய்சிட்டிருந்தப்போ (நான் இல்லை) டவுசர் போட்டவன் கோமணங் கட்டினவன் கிட்ட 10 பைசா குடுத்து கடையில போய் ரெண்டு கருப்பட்டி வாங்கிட்டு வாடா அதை வாயில் போட்டு சுவைச்சிகிட்டே மாடு மேய்க்கலம்னு அனுப்பினாப்ல...
டவுசர்போட்டவர் : வாடா...வாடா... கருப்பட்டியக் குடு...
கோமணம் கட்டியவர் : இந்தாண்ணே....
டவுசர்போட்டவர் : எலேய் ஒன்னுல்ல இருக்குது, இன்னொன்னு எங்கே...
கோமணம் கட்டியவர் : அதான் குடுத்திருக்கேன்லணே.....
டவுசர்போட்டவர் : எலேய் நான் ரெண்டுல்ல வாங்க்யாரச் சொன்னேன் நீ ஒன்னுல்ல குடுக்கே.... இன்னுன்னு எங்கே...
கோமணம் கட்டியவர் : அண்ணே அதாணே இது.....
அப்படியே கரகாட்டக்காரன் படத்துல வந்த!!! ஜோக் அப்படியே பாடிலாங்க்வேஜோட சொன்னப்ப மொத்த கூடமும் ஆரவாரமா கண்ல தண்ணி வர சிரிச்சது...
இனி மெயின் மேட்டர்...... இது நடந்தது கரகாட்டக்காரன் படம் வருவதற்கு ரெண்டரை வருசம் முன்னே.....
காலேஜ் படிக்கும் போது நான் இந்த கருப்பட்டி ஜோக்கை பசங்க கிட்ட சொன்னப்ப போடா வெங்காயம், கரகாட்டக்காரன் படத்துல வந்த ஜோக்கை உல்டா பண்ணிச் சொல்லாத பக்கினு சொல்லிட்டானுக..... மீ ஞே..ஞே..ஙே..ஙே... :-))))))))))
இது மாதிரி நாம நம்ம வாழ்க்கைல நடந்த பல விசயங்களை சினிமால காப்பி பண்ணிட்டு கடேசில நம்மள சினிமா பார்த்து காப்பி பண்ணா மேரி ஹிஸ்ட்ரி ஜ்யாக்ரேஃபிய மாத்திப்புடாங்க நல்லவிய்ங்க.....
உங்களுக்கு தெரிஞ்சி இந்த மேரி சம்பவம் இருக்குதுங்களா!!!

அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!.