முஸ்கி : இது கற்பனைக்கதை அல்ல, உண்மைச் சம்பவம் ருசிக்காக கொஞ்சம் ஊறுகாய் சேர்க்கப்பட்டிருக்கிரது .
அது எப்படி வந்தெதென்று தெரியவில்லை, எங்கிருந்து வந்ததென்றும் தெரியவில்லை, எதற்கு வந்ததென்றும் தெரியவில்லை... ஆனாலும் வந்துவிட்டது. திறந்திருந்த முன்வாசல் வழி வந்ததா அல்லது கூடத்து ஜன்னல் வழி வந்ததா அல்லது பொறத்தாலே வந்ததா தெளிவாக தெரியவில்லை, மாலை மங்கிய நேரம் அதற்கு விடியல் போலும், காலைக்கடன் முடித்து பல் விளக்கிவிட்டு வந்ததா இல்லை தொங்கி முடிந்து அப்படியே
வந்ததா அதுவும் தெரியவில்லை ஆனாலும் வந்துவிட்டது. சர்ர் சர்ர் என்று அதன் வேகம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது, முதலில் அது என்னவென்று புலப்படுவதற்கே சில மணித்துளிகள் ஆகிவிட்டது,
அதன் வேகத்திற்கு ஈடு குடுத்து குறிவைத்து பார்க்கயில்தான் தெரிந்தது அது ஒரு வவ்வால் என்று.
சரி வந்தது வந்துவிட்டது அதற்கு ஏதேனும் உணவு குடுக்கலாமென்றால் ஓரிடத்தில் தொங்காமல் சர்ர் சர்ர்ரென்று கூடத்தில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ம்ஹூம் இது நமக்கு சரிப்பட்டு வராது என்றெண்ணி வாசல் கதவுகள் மற்றும் அனைத்து ஜன்னல் கதவுகளையும் திறந்து வைத்து அது வெளியில் செல்ல காத்திருந்தால்...... அது வெளியில் செல்லும் அறிகுறி ஏதுவும் தென்படவில்லை... அதற்கு என் வீட்டின் குளிரூட்டப்பட்ட பெரிதான கூடம் பிடித்துப் போய் விட்டது போலும். பெரிதான தடைகள் ஏதும் இல்லாததால் அது வெளியிடும் அல்ட்ராசானிக் அலைகள் நிலைத்திருக்கும் சுவர்களில் பட்டு துள்ளியமாக அதற்க்கு திரும்பக் கிடைத்து அது தடையின்றி பறக்க ஏதுவாக
இருக்கிறதுபோலும்.
எனக்குத்தான் எங்கே அது பறக்கும் வேகத்திற்கு எதிர் சுவற்றில் மோதி அடிபட்டுவிடுமோ என்ற அச்சம் , ஆனால் அது அதிவிரைவாக சென்று சுவருக்கு அரைஅடி தூரம் இருக்கும்போது லாவகமாக திரும்பி பறக்கிறது.
முதலில் அதனை வேடிக்கை பார்ப்பதில் இருந்த ஆர்வம் நேரம் செல்லச்செல்ல அது வெளியில் போனால் தேவலை என்ற எண்ணத்தில் கொண்டு போய்விட்டது. ம்ஹூம் அது போவதற்கான அறிகுறியைக் காணோம், அதற்கு பதில் மேலே சிமெண்ட் கூறையை ஒட்டிப் பறந்துகொண்டிருந்த வவ்வால் பக்கி, சற்று உயரம் குறைந்து பறக்க ஆரம்பித்தது....இப்போது வாண்டுகளிடம் சற்று பயம் அப்பா அதை வீட்டிலிருந்து வெளியே துரத்துங்கள் என்று. நானும் ஒட்டடைக்குச்சி வைத்து அதனை துரத்திப்பார்த்தேன்.... தக்காளி அது வெளியிடும் அல்ட்ராசானிக் அலை நகரும் பொருள் மேல் பட்டு திரும்புவதை வைத்து, நான் அடிக்கப்பயன்படுத்தும் ஒட்டடைக் குச்சியின் வேகத்தைச் சரியாகக் கணித்து, என் அடிக்கிச் சிக்காமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தது..... இப்போது வாண்டுகளிடமிருந்து ஒரு வவ்வாலைக்கூட சமாளிக்க முடியவில்லையா என்ற கேளிப்பார்வை, என் ஈகோவைத் தட்டிவிட்டது.....
உக்கார்ந்து...நடந்து....ஏன் மல்லாக்கப்படுத்தும் யோசித்தேன் இந்த வவ்வாலை எப்படி துரத்துவதென்று.....பட்டென்று மூளையின் ஓரத்தில் சிறு ஒளி...... படித்து பல வருடங்கள் ஆனாலும் கல்லூரியில் படித்த இயற்பியல் முற்றிலும் மறந்து விடவில்லை.... ஆம் வவ்வாலின் அல்ட்ராசானிக் அலைகள் திடபொருளின் மீது பட்டு மீண்டும் வவ்வாலுக்கு தங்குதடையின்றி வந்து சேர்வதில் இடையூறு செய்வது என்று தீர்மானித்தேன். அதற்கு ஒரே வழி அல்ட்ராசானிக் அலைகள் பயனிக்கும்போது அதன் பாதையில் முடிந்த அளவு இடையூறு ஏற்படுத்துவது அல்லது வவ்வாலுக்கு திரும்ப கிடைக்கும் சிக்னலில் குழப்பத்தை ஏற்படுத்துவது என்பதுதான்.
இப்போது வீட்டில் இருந்த அனைவரையும் ஓரிடத்தில் உக்காரச் செய்துவிட்டு. ஏசியை அனைத்துவிட்டு (இதை ஏன் அனைத்தேன் எனக்கு நானே கன்பீஸாகிவிட்டேன் போலும்) மின் விசிரியை சுழல விட்டேன்... நான் நினைத்தது வீன் போகவில்லை.... வவ்வாலுக்கு தற்போது சிக்னல் குழப்பம் ... மின்விசிறியின் அதீத வேகத்தாலும், அதன் அருகாமை தன்மையாலும் வவாலுக்கு வந்து சேரும் அல்ட்ராசானிக் அலைகளின் இடைவெளி சீராக இல்லாமல் அது பறப்பதில் சீரற்ற தன்மை நிலவியது... மின்விசிரியின் வேகத்தை சற்றுக் கூட்டியபோது வவ்வாலுக்கு முற்றிலும் குழப்பமாகி முடிவில் மின்விசிரியின் றெக்கையில் அடிபட்டு கீழே விழுந்தது.
வேகமாய் அதை கையில் எடுத்துப்பார்த்தேன், நல்ல வேளை லேசான காயம்தான், ஒரு றெக்கையில் அடி பட்டிருக்கிறது, தலையிலோ, உடம்பிலோ அடிபட்டிருந்தால் பிழைப்பதே கடினமாயிருக்கும். தற்போது உயிருக்கு ஒன்றும் ஆபத்தாகப்படவில்லை. அலைப்பேசியெடுத்து என் கால்நடைமருத்துவ நண்பனை அழைத்து காயத்திற்கு செய்யவேண்டிய வைத்தியம் பற்றிக்கேட்டேன்,
.jpg)
என் கையில் இருக்கும் அடிபட்ட வவ்வாலுக்கு வலி போலும் என் விரலைக் கடித்துப் பார்த்தது... பற்கள் சின்னதாக இருந்தது அவ்வளவாக எனக்கு வலிக்கவில்லை.... அப்போதுதான் என் சிறுவயதில் என் கிராமத்துப் பாட்டியின் பச்சிலை வைத்தியம் ஞாபகம் வந்தது.
நல்ல வேலை என் வீட்டுத்தோட்டத்தில் இரண்டு பச்சிலைச் செடி இருக்கிறது (இல்லையென்றால் பதிவர் மோகன்குமாருக்கு போன் செய்து அவர் வீட்டுத்த் தோட்டத்தில் பச்சிலை அல்லது வேறு ஏதேனும் மூலிகைச் செடி இருக்கிறதா என்று கேட்க, என் மொபைலில் பேலன்ஸ் குறைந்திருக்கும்), இதுநாள்வரை அதை எதற்கும் உபயோகித்ததில்லை. போய் நாலு இலைகளை பறித்து அதை கசக்கிப்பிழிந்து அதன் சாற்றை வவ்வாலின் காயத்தின் மேல் விட்டேன். வவ்வாலுக்கு எரிந்ததா...குளிர்ச்சியாக இருந்ததா தெரியவில்லை கொஞ்சம் துள்ளி, பின் அமைதியானது.
பின் அதனை வீட்டிலிருந்த அழுக்கு கூடயை தலைகீழாக கவிழ்த்து அதன் அடியில் விட்டேன், சில
திராட்சைப் பழங்கள் உணவாக வைத்தேன்..
மறுநாள் காலை வவ்வால் எப்படி இருக்கிறது என்று பார்க்க அந்த கூடையை திறந்தால், பட்டென்று பறந்துவிட்டது, காயம் ஆறிவிட்டது போலும், ஆனால் அதிசமாக அது நேராக வாசல் வழியே பறந்து சென்றதை ஆச்சர்யத்துடன் பார்த்தேன். இனியும் இங்கிருந்தால் பட்டிகாட்டான் பச்சிலைச் சாற்றை வாயிலும் ஊற்றிவிடுவானோ என்று தவறாக நினைத்துவிட்டதுபோலும்.
எப்பா அவ்வளவுதாம்பா... கதை முடிஞ்சிருச்சி.... வவ்வால் பத்தி சில தகவல்கள் தெரியனும்னா தொடர்ந்து படிங்க இல்லைனா நேரா டிஸ்கி வழியா கமெண்ட் பாக்ஸுக்கு ஓடிப்போங்க.....
வவ்வால்
பற்றிய சில தகவல்கள் :
- பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு இவ்வௌவால்தான்.
- அதன் உடலில் சிறிதலவிலான
ரோமங்கள் இருக்கும்
- வவ்வாலுக்கு கைகள் மற்றும்
கால் பாதங்கள் உண்டு.
- ஒரு பழுப்பு நிற வவ்வால்
ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்களை பிடித்து உண்ணுமாம். சென்னையில் நெறைய
வளர்க்க வேண்டும்.
- இரவில் தெரியும்
பலவகையான பூச்சிகளை தின்று பூச்சிகளின் அளவை கட்டுப்படுத்துகிறதாம்.
- பெரும்பாலான செடிகளைத்தாக்கும்
பூச்சிகளை உண்பதால் விவசாயிகளுக்கு மண்புழுவைப்போல வவ்வாலும் நண்பனாம்.
மேலும் அதனால் பூச்சி மருந்துகள் தேவைப்படாமல் உணவுப் பொருளின்
நச்சுத்தன்மையும் குறைகிறதாம்.
- 160 பழுப்பு வவ்வால்கள் ஒன்று சேர்ந்தால் 19 மில்லியன் விவசாயச் செடிகளை அழிக்கும் புழுக்களை தின்றுவிடுமாம்.
பூச்சிக்கொல்லிமருந்து செலவு வெவசாயிக்கு மிச்சம். விவசாய விளைபொருள்கள் விஷத்தன்மையில்லாமல்
கிடைக்கும், மகசூலும் அதிகரிக்கும்.
- மற்ற பறவைகள் போலவே மகரந்த சேர்க்கையில் அதிக உதவி செய்கிறது. மேலும் பழங்களை தின்று அதன் கொட்டைகளை கீழே போட்டு விடுவதால் காடுகளில் மரங்கள் தொடர்ந்து வளர உதவுகிறது. (அசோகர் சாலை ஓரங்களில் மட்டும்தான் நிழல் தரும் மரங்களை நட்டார், ஆனால் வவ்வால் நாடெங்கும் , காடெங்கும் விதைக்கிறது மை லார்ட்)
- மனிதனின் இதயம் சார்ந்த மருத்துவத்திற்காக, வாம்பையர்( Vampire Bats) வவ்வாலின் சலைவாவிலிருந்து மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. (கண்டுபிடித்து முடித்துவிட்டார்களா? பன்னி ஆன்சர் பிளீஸ்)
- மனிதகுலம் மற்றும் பூமியின் சுற்றுச் சூழலுக்கு பெரிதும் உதவியாக இருப்பதால் வவ்வால்களை பாதுகாக்க நாம் முயல்வோமாக.
அல்ட்ராசானிக் அலையனுப்பி அதன் மூலம் இரையை பிடிக்கும் வரைபட விளக்கம்.
படங்கள் : கூகுள் இமேஜஸ். மற்ற தகவல்கள் உதவி இணையம்.
டிஸ்கி : அருமை நண்பர்களே, கும்மி அடிக்கும்போது ஆபாச வார்த்தைகளை தவிர்க்குமாறு வேண்டி விரும்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். மற்றபடி இது ஓபன் கிரவுண்ட் நோ அதர் ரெஸ்ட்ரிக்ஷன் யுவர் ஆனர்..........,
ஆங் சொல்ல மறந்துட்டேன்.... தனிமனிதனின் தனிப்பட்ட வாழ்க்கயை விமர்சித்தல், ஜாதி மத கருத்துக்கள் இவற்றையும் தவிர்க்க வேண்டுகோள்.
உங்கள் புரிதலுக்கு அட்வான்ஸ் நன்றி.
உங்கள் புரிதலுக்கு அட்வான்ஸ் நன்றி.